1 month 2 weeks ago
ஒரு வழியாக எல்லா "புரின் புரியன்" மாரையும் வகேஷனில் இருந்து இழுத்துக் கொண்டு வந்தாச்சு😎!
1 month 2 weeks ago
என்று எழுதுகின்ற ஒருவரின் கட்டுரை வேறு எதனை சொல்லும் ? கடும் புலி எதிர்ப்பை தன் அரசியலாக வரித்துக் கொண்ட பெளசர் (எலக்கியவாதி, மு.கா உறுப்பினர், அதற்கும் முன்னால் ஈபிடிபி உறுப்பினர்) சொன்னவற்றை உள்ளடக்கி ஈற்றில் அஷ்ரபின் மரணத்துக்கும் புலிகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றார் இந்த மொஹமட் பாதுஷா.
1 month 2 weeks ago
இவர் (தனி) சொன்னதை எதுக்கும் ஒரு ஸ்கீன் ஷொட் எடுத்து வைப்பம்..
1 month 2 weeks ago
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=24805456195728930 👈 👉யாழில் பாரிய ஒரு விசித்திர விபத்து! CCTV_காணொளி‼️‼️‼️ மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து! யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்....வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நம்ம யாழ்ப்பாணம்
1 month 2 weeks ago
யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்! யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 8 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முச்சக்கர வண்டியொன்று வீதியில் வைத்து திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த துவிச்சக்கர வண்டி மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் நான்கு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsயாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5...யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்https://www.facebook.com/Athavannews/videos/1138292688361845
1 month 3 weeks ago
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு! நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது. ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். அத்துடன், இன்று வரை எங்களுக்காக மரணித்த ஒருவரை கடவுள் என நாடாளுமன்றத்தில் கூறிய ஒரே தமிழ் அரசியல்வாதி நான் மட்டுமே. வடக்கு கிழக்கில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்றுவரை எடுக்கப்படவில்லை. யாரும் அதற்காக கைது செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தீர்கள். வன்முறைகளை நாம் விரும்புவதில்லை. உங்களுடைய கட்சியை சேர்ந்த நால்வர், அரகலய காலத்தில் நாடாளுமன்றத்தை எரிக்குமாறு கூறினார்கள். ஆனால், நீங்கள் இன்று நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட வாகனங்களிலேயே பயணிக்கின்றனர். நாங்கள் கடவுச்சீட்டு அலுவலகம் கேட்கவில்லை, கிரிக்கட் மைதானம் கேட்கவில்லை. மாறாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையே கேட்டோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பில் நான் ஜெனீவா சென்று முறையிடுவேன். அதன் பின்னர் நாட்டிற்கு வந்தவுடன் என்னை கைது செய்வதாயின் கைது செய்யுங்கள். ஆனால், நான் என்றாவது ஒரு நாள் சிங்கள மக்கள் வாழும் ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது உங்கள் கட்சியில் எத்தனை குழந்தைகள் மீதம் இருக்கிறது என்பதை பார்ப்போம்”இவ்வாறு இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446688
1 month 3 weeks ago
ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு. நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன். 😂
1 month 3 weeks ago
10 Sep, 2025 | 09:54 AM இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்தபடி, இலங்கை மின்சார சபை (CEB) 2025 இறுதி காலாண்டுக்காக மின்சார கட்டணத்தில் 6.8% உயர்வு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. வாய்மொழி கருத்துக்களைப் பெற, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைகளை நடத்தும். வாய்மொழி சமர்ப்பிப்புகளுக்கான இந்தப் பொது ஆலோசனை அமர்வுகள் செப்டம்பர் 18, 2025 அன்று ஆரம்பமாகவுள்ளது. 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒக்டோபர் 7, 2025 க்கு முன் பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது: மின்னஞ்சல்: info@pucsl.gov.lk வாட்சப் இலக்கம் : 076 427 1030 பேஸ்புக் : www.facebook.com/pucsl அஞ்சல்: மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் – 2025 குறித்த பொது ஆலோசனை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு 3. https://www.virakesari.lk/article/224692
1 month 3 weeks ago
இதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது.கவலைப் படாதீர்கள்.தேவைப்படும் போது பொதுவான ஒரு இடத்தில் எழுதி விட்டு அங்கு ஒட்டி விடலாம்.
1 month 3 weeks ago
ஐ.நா.வில் எமக்கு அழுத்தமில்லை : மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது - அமைச்சரவை பேச்சாளர் 09 Sep, 2025 | 09:43 PM (எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது கடந்த அரசாங்கங்களுக்கு காணப்பட்ட அழுத்தம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் தேசிய பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்போம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். எனினும் அதற்கான காலம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது. இது குறித்த சட்ட திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கு முன்னர் செப்டெம்பரில் ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமானால் அரசாங்கங்கள் எவ்வாறு அழுத்தத்தில் இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எமது அரசாங்கத்துக்கு அவ்வாறு எந்த அழுத்தமும் இல்லை. கடந்த ஜூனில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை எமக்கு சார்பானதாகவே காணப்படுகிறது. இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. குறுகிய காலத்துக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எமது நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை, நம்பிக்கை பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேசிய பொறிமுறைக்குள் மனித உரிமை மீறல்க்ள குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகின்றோம். இது தொடர்பில் சர்வதேசத்தின் மதிப்பீடுகளையும் அங்கீகரிக்கின்றோம். எனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அநாவசிய தலையீடுகளை செலுத்தி அவற்றை வீணடிக்க விரும்பவில்லை. அதேவேளை சிறிய அடிப்படைவாத, தீவிரவாத குழுக்கள் தலைதூக்குவதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது. பயங்கரவாத தடை சட்டத்தையும் இரத்து செய்து, புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நிகழ்நிலை காப்பு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/224664
1 month 3 weeks ago
அண்ணை, இது தடுப்பூசி அல்ல. நோய் வந்தவர்களுக்கு போட்டால் சுகம் வருதாம்.
1 month 3 weeks ago
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடக மற்றும் மெசேஜிங் தளங்களும் இதில் அடங்கும். சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். நேபாளத்தில் திங்கள்கிழமை நடந்த போராட்டத்தின் காட்சிகள், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை நினைவூட்டின. இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டில் இலங்கையிலும் மக்கள் அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்களை நடத்தினர். BBC/Madhuri Mahato பீர்கஞ்சில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள இளைஞர்கள் போராட்டங்கள் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். தெற்காசியப் புவிசார் அரசியல் நிபுணரும், தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதி, "இந்த தெற்காசியப் பகுதி இளைஞர்கள் நிறைந்த பகுதி, ஆனால் அரசுகளால் இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மூன்று நாடுகளின் போராட்டங்களிலும் இதுதான் பொதுவான ஒற்றுமை" என்கிறார். தனஞ்சய் திரிபாதியின் கூற்றுப்படி, நேபாளத்தில் 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன. "நேபாளத்தில் மற்றொரு நெருக்கடி என்னவென்றால், முடியாட்சி முடிந்த பிறகு எந்த ஒரு அரசாங்கமும் ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இல்லை. இதன் காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது, மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகின்றன. இப்போது, அரசு இளைஞர்களிடையே பிரபலமான செயலிகளையும் தடை செய்துவிட்டது," என்று அவர் கூறுகிறார். நேபாளத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாதது ஒருபுறம் இருக்க, சமீபத்திய தடைகளுக்குப் பிறகு அவர்களால் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளக்கூட முடியவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இளைஞர்களின் பங்கு நேபாளத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது போலீசார் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதேசமயம், இலங்கையின் போராட்டத்தில் பொருளாதாரப் பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தின. டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஆய்வு மற்றும் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகையில், "இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப் பொதுவான காரணம்." அவரது கூற்றுப்படி, "இந்த மூன்று போராட்டங்களிலும் 'இளைஞர்கள்' தான் மிகப் பெரிய காரணி. ஆட்சி மாற்றத்தின் மிகப் பெரிய தாக்கம் இளைஞர்கள் மீதே விழுகிறது. இந்த இளைஞர் பிரிவினர்தான் அரசின் மீது கோபமாக உள்ளனர்." அரசு இளைஞர்களின் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்யாவிட்டால், இந்த போராட்டம் இன்னும் பெரிதாக வளரக்கூடும் என்று ஹர்ஷ் பந்த் நம்புகிறார். இருப்பினும், நேபாளப் போராட்டத்தில் தலைவரோ அல்லது அமைப்போ இல்லை என்றும் அவர் கூறுகிறார். தனஞ்சய் திரிபாதியும் இந்த கருத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிகிறது. "அரசு புரிதலுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் நடந்து கொண்டால், இந்தப் போராட்டத்தை அமைதிப்படுத்த முடியும். இதில் இறந்தவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும். அரசு இளைஞர்களிடம் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும், அது தற்போது காணப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். இதற்கு முன்னதாக, வங்கதேசத்தில் அரசு போராட்டக்காரர்களை கடுமையாகக் கையாள முயற்சித்தது, ஆனால் அது இளைஞர்களின் கோபத்தை இன்னும் அதிகரித்தது. வங்கதேச மாணவர் போராட்டம் Getty Images வங்கதேசத்தில் பிரதமரின் இல்லத்தில் இருந்த போராட்டக்காரர்கள் (கோப்புப் படம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம், வன்முறை மற்றும் நூற்றுக்கணக்கானோர் இறப்பு ஆகியவற்றிற்கு மத்தியில், வங்கதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய இந்த மாணவர் போராட்டம், நாடு தழுவிய போராட்டமாக மாறியது. இறுதியில் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்தது. இதன் மூலம் அவரது 15 ஆண்டுகால தொடர் ஆட்சி மற்றும் ஐந்தாவது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் போராட்டத்திற்குப் பிறகு, ஜூலை 21ஆம் தேதி வங்கதேச உச்ச நீதிமன்றம் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை கிட்டத்தட்ட ரத்து செய்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு வந்தபிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோபம் தீரவில்லை. ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கோரிக்கை மேலும் வலுப்பெற்றது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொடங்கிய போராட்டம், நாட்டின் மூலை முடுக்குகளை அடைந்தது. எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கின. மாணவர் அமைப்புகள் ஆகஸ்ட் 4 முதல் முழு ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்திருந்தன. அரசு இந்தப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்க முயன்றது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ராணுவம் வீதியில் இறங்கியது, ஆனால் மக்கள் பின்வாங்கவில்லை. ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த வன்முறையில் குறைந்தது 94 பேர் கொல்லப்பட்டனர். மாணவர் போராட்டம் தொடங்கியதில் இருந்து உயிரிழப்புகள் எண்ணிக்கை 300ஐத் தாண்டியது. ஆகஸ்ட் 5ஆம் தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த போராட்டம் EPA/CHAMILA KARUNARATHNE 2022ஆம் ஆண்டில் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் இலங்கை போலீஸ் (கோப்புப் படம்). 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் பணவீக்கம் வேகமாக அதிகரித்தது. அந்நிய செலாவணி கையிருப்பு காலியானது. நாட்டில் எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்த மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில், மக்கள் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டை எதிர்கொண்டனர். இந்த நிலைக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவையும் அவரது குடும்பத்தினரையும் பலர் குற்றம் சாட்டினர். அவரது மோசமான கொள்கைகள்தான் அந்நிய செலாவணி கையிருப்பு காலியானதற்குக் காரணம் என்று நம்பப்பட்டது. ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஊழல் மற்றும் பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலா வருவாய் குறைந்தது மற்றும் யுக்ரேன் போரால் எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக அவர்கள் வாதிட்டனர். அப்போது, போராட்டங்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தன. மாலையில் கூட்டம் அதிகரித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முதல் பாதிரியார்கள் மற்றும் புத்த பிக்குகள் வரை அனைவரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். நாடு முழுவதும் "கோட்டா கோ ஹோம்" (கோட்டா வீட்டுக்கு போ) என்ற கோஷம் எதிரொலித்தது. இந்தப் போராட்டங்கள் சிங்களர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று முக்கிய சமூகங்களை ஒன்றிணைத்தன. சில வாரங்களுக்குப் பிறகு, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தபோது, இந்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. சில நாட்களுக்குப் பிறகு, கோட்டாபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இந்த நிகழ்வு "அரகலய" அல்லது மக்கள் போராட்டத்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvr3rl84n1o
1 month 3 weeks ago
09 Sep, 2025 | 09:23 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தாம் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் எலும்புக்கூடுகள், சிறுவர்களின் உடைகள் மற்றும் குழந்தைகளின் பால் போத்தல் உள்ளிட்ட பொருட்களுடன் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியானது யுத்தகாலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படுவதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுயாதீன விசாரணையையும், உண்மையான பொறுப்புக்கூறலையும் கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்துக்கு வட கரோலினா ஒரு வீடாக இருப்பதனையிட்டுப் பெருமிதமடைவதாகவும், இந்த மனிதப்புதைகுழி அகழ்வை அடுத்து அதுபற்றித் தன்னைத் தொடர்புகொண்டு பேசிய தனது தொகுதி மக்களை நினைத்துப்பார்ப்பதாகவும் காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரோஸ் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தான் ஆதரிப்பதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/224676
1 month 3 weeks ago
09 Sep, 2025 | 04:03 PM (எம்.மனோசித்ரா) நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். அரசியலமைப்பு திருத்தத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னர் இதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் மஹிந்த ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டதல்ல. அது ஓய்வு பெற்ற அனைத்து ஜனாதிபதிகளுக்குப் பொதுவானதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைத்த கொள்கை பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அரசியலமைப்பு திருத்தத்தின் போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருக்கின்றனர். எனினும் அரசியலமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகளை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்கு சற்று காலம் எடுத்துக் கொள்வதில் பிரச்சினையில்லை என்று நினைக்கின்றோம். ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட காலம் மாத்திரமே கடந்துள்ளது. அரசாங்கம் பதவியேற்று பத்து மாதங்களே ஆகின்றன. எனினும் நாட்டின் அபிவிருத்திக்கான பல்வேறு அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் முதலில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எமது இலக்காகும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இவற்றுக்கிடையில் ஊழல், மோசடிகளுக்கெதிரான சுற்றி வளைப்புக்களிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. சர்வதேசத்தின் நம்பிக்கையையும் பெற்று வருகின்றோம். இவற்றுக்கு மத்தியில் அரசியலமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகளையும் விரைவில் ஆரம்பிப்போம். அதன் அடிப்படையிலேயே தற்போது முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளால் திறைசேரிக்கு ஏற்படும் சுமை, அதனால் அதிகரிக்கும் மறைமுக வரி என்பவற்றால் தான் மக்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். எனவே தான் அதனை நீக்குவதற்கான சட்ட மூலத்தை சமர்ப்பித்துள்ளோம். இதற்கெதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்ற போதிலும், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாராளுமன்றத்தில் சகல உறுப்பினர்களும் இதற்கு ஆதரவான வாக்களிப்பர் என்று நம்புகின்றோம். ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளுக்காக திறைசேரி பெரும் சுமையை சுமக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் எண்ண வேண்டிய தேவை அவற்றுக்கு இல்லை என்று நினைக்கின்றோம். வாக்களிப்பின் போது இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்கு வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மூலமல்ல. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் சகல முன்னாள் ஜனாதிபதிகளும் அதற்கமைய செயற்படுவர் என எதிர்பார்க்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/224637
1 month 3 weeks ago
'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு ரூ. 1 லட்சம்'; விமான நிலையத்தில் நடிகை நவ்யா நாயருக்கு அபராதம் Navya nair/Facebook நடிகை நவ்யா நாயர் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை கொண்டு சென்றதற்காக கேரள நடிகை நவ்யா நாயருக்கு அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் 1.14 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அபராதத்தைச் செலுத்துவதற்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். விமானத்தில் மல்லிகைப் பூவை அணிந்து செல்வதில் என்ன சிக்கல்? ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது? ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார். முன்னதாக, கொச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மெல்போர்ன் சென்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதில், 'நான் மெல்போர்ன் வருவதற்கு முன்பு என் தந்தை மல்லிகைப் பூவை வாங்கித் தந்தார். அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொடுத்தார்' எனக் கூறியுள்ளார். '15 செ.மீ மல்லிகைப் பூ, 1.14 லட்ச ரூபாய்' Navya nair/Facebook ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார். கொச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் நேரத்தில் மல்லிகைப் பூ வாடிவிடும் என்பதால் ஒன்றை தலையிலும் இரண்டாவது பூவை கைப்பையில் உள்ள கேரி பேக்கிலும் வைக்குமாறு தனது தந்தை கூறியதாக, நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். "15 சென்டிமீட்டர் அளவுள்ள மல்லிகைப் பூவை கைப்பையில் கொண்டு வந்ததற்காக ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், 1980 ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாயின் மதிப்பில் 1.14 லட்ச ரூபாய்) அபராதமாக செலுத்துமாறு கூறினர்" என நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். "நான் அறியாமையில் செய்திருந்தாலும் அதை ஒரு காரணமாக முன்வைக்க முடியாது. பூ கொண்டு வந்தது சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. இதை வேண்டும் என்றே செய்யவில்லை. இதற்கான அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்துமாறு அதிகாரிகள் கூறினர்" எனவும் நவ்யா நாயர் கூறியுள்ளார். விக்டோரியா மாகாணத்தில் நடந்த ஓணம் திருவிழாவில் பேசியபோது இதனைக் குறிப்பிட்ட நவ்யா நாயர், "ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மல்லிகைப் பூவை தலையில் அணிந்திருக்கிறேன்" என நகைச்சுவையாக குறிப்பிட்டார். பூ, பழங்களுக்கு தடை ஏன்? Navya nair/Facebook "15 சென்டிமீட்டர் அளவுள்ள மல்லிகைப் பூவை கைப்பையில் கொண்டு வந்ததற்காக ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், 1980 ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாயின் மதிப்பில் 1.14 லட்ச ரூபாய்) அபராதமாக செலுத்துமாறு கூறினர்" என நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். "ஆஸ்திரேலியாவுக்கென்று தனித்தன்மை வாய்ந்த சூழலியல் உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பூ, பழம், விதைகள் உள்ளே நுழைந்துவிட்டால் தங்கள் நாட்டின் சூழல் மாறிவிடும் எனக் கருதுகின்றனர்" எனக் கூறுகிறார், ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு. இவர் கடந்த 22 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வர்த்தகம் செய்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "விமானம் மூலம் பழங்கள் (Fresh Fruits) மற்றும் காய்கறிகளைக் கொண்டு வர அனுமதியில்லை. பூ கொண்டு வருவதை அனுமதிப்பதில்லை. நெய்யால் தயாரிக்கப்பட்ட பொருள் எதையும் கொண்டு வரக் கூடாது என்பது விதியாக உள்ளது" எனவும் குறிப்பிட்டார். "ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் உணவு வாங்கி சாப்பிட்டாலும் மீதமான உணவை விமானத்தில் கொண்டு வரலாம். ஆனால், குடியுரிமை அதிகாரிகளின் சோதனைக்குச் செல்வதற்கு முன்பாக அதனை குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு. ஆஸ்திரேலிய நாட்டின் சுங்கத்துறை அதிகாரிகளை எல்லைப் படை அதிகாரிகள் (Australian Border Force) எனக் கூறுகின்றனர். இவர்கள், ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணிகளின் உடைமைகைளை ஆய்வு செய்கின்றனர். Jayachandran Thangavelu Handout ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு. ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் சொல்வது என்ன? தங்கள் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு பயணிகள், தண்டனைகளை தவிர்ப்பதற்காக கொண்டு வரக் கூடிய மற்றும் கொண்டு வரக் கூடாத பொருட்கள் குறித்த பட்டியலை (studyaustralia.gov.au) அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, * அனைத்து உணவு, தாவரப் பொருட்கள் மற்றும் விலங்கு பொருட்கள் *துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் * சில வகையான மருந்துகள் * ஆஸ்திரேலிய நாணயத்தின் மதிப்பில் 10 ஆயிரம் டாலர்கள் - இதனை வருகை அட்டையில் (incoming passengers Arrival card) தெரிவிக்க வேண்டும் என அந்நாட்டு அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரி பாதுகாப்பு (bio security) என்ற பெயரில் கொண்டு வரக் கூடாத பொருட்களையும் ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி, * புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் * கோழி இறைச்சி, பன்றி இறைச்சி *முட்டை, பால் பொருட்கள் * தாவரங்கள் அல்லது விதைகள் - 'இவை ஆஸ்திரேலியாவில் பூச்சிகள் மற்றும் நோய்களை அறிமுகப்படுத்தி தனித்துவமான சூழலை அழிக்கக் கூடும்' என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 'நாட்டின் உள்ளே வரும் பயணிகள் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் அறிவிக்க (Declare) வேண்டும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அவ்வாறு அறிவிக்கவில்லையென்றால் 5,500 ஆஸ்திரேலிய டாலர் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்' எனக் கூறியுள்ள அந்நாட்டு அரசு, 'விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் நாட்டில் இருந்து புறப்படும் வரை காவலில் வைக்கப்படலாம்' எனவும் கூறியுள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில், 'தங்களின் உடைமைகள் குறித்து எல்லைப் படை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கலாம்' எனவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. 'பூ கொண்டு வரத் தடை...ஆனால்?' "ஆஸ்திரேலியாவுக்குள் விமானம் மூலம் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் மல்லிகைப் பூ விற்கப்படுகிறது" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு. "ஒரு முழம் மல்லிகைப்பூ 40 டாலர் வரை விற்கப்படுகிறது. அதையும் தமிழர் ஒருவர் தான் இறக்குமதி செய்து விற்று வருகிறார்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "பூக்களை இறக்குமதி செய்யும்போது தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. பூவின் தன்மை, சாகுபடி விவரம், பயன்படுத்தப்பட்ட உரம் என அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழுடன் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது" எனத் தெரிவித்தார். 'மோப்ப நாய்கள் மூலம் சோதனை' 'கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை நாட்டின் உள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்வது சட்டவிரோதம்' என அறிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, 'போதைப் பொருள் அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தன்மையைக் கண்டறிய பயிற்சி பெற்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன' எனக் கூறியுள்ளது. இதைப் பற்றி பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட ஆஸ்திரேலியா வாழ் இந்தியர் ஜெயச்சந்திரன் தங்கவேலு, "சில பொருட்களை அறிவிக்காமல் கொண்டு வரும்போது மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்துவார்கள். இதற்காக பயணிகளை வரிசையாக நிற்க வைப்பது வழக்கம். தற்போது இதை அனைவருக்கும் செய்வதில்லை" எனக் கூறுகிறார். தொடர்ந்து, விமான நிலையத்துக்குள் நுழைந்த பிறகு மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை அவர் பட்டியலிட்டார். சோதனை நடைமுறைகள் என்ன? "ஆஸ்திரேலிய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வரலாம். ஆனால், அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது அவற்றை அறிவிக்க வேண்டும்" எனக் கூறுகிறார். "விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது கிரீன் சேனல், ரெட் சேனல் என இரண்டு நுழைவாயில்கள் இருக்கும். பயணிகள், அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு வருவதைப் பொறுத்து அதிகாரிகள் சேனலை முடிவு செய்கின்றனர்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு. "கிரீன் சேனல் என்றால் எந்தவித சோதனையும் இல்லாமல் வெளியில் சென்றுவிடலாம்" எனக் கூறும் அவர், "ரெட் சேனலாக இருந்தால் கொண்டு சென்றுள்ள அனைத்து பொருட்களையும் சோதனை செய்வார்கள். அதில், திருப்தியடைந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிப்பார்கள்" என்கிறார். தடை செய்யப்பட வேண்டிய பொருளாக இருந்தால் பயணியின் அனுமதியுடன் அதை குப்பைத் தொட்டியில் எறிந்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். "அவ்வாறு எறிவதற்கு பயணி எதிர்ப்பு தெரிவித்தால், அந்தப் பொருளை தனிமைப்படுத்தி (quarantine) செய்து வேறொரு துறைக்கு அனுப்புவார்கள். பிறகு ஒருநாள் அதற்குரிய அதிகாரியை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தருவார்கள்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு. அப்போதும் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அந்தப் பொருள் குப்பைத் தொட்டிக்கு சென்றுவிடும் என்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'மண் ஒட்டியிருந்தால் கூட அபராதம் தான்' Ashok Raja Handout திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான விதிகளைப் பின்பற்றி வருவதாகக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா. உயிரி பாதுகாப்பு என்பதை மிக முக்கியமானதாக ஆஸ்திரேலிய அரசு கருதுவதாகக் கூறும் அவர், "மாறுபட்ட புவியியல் மற்றும் உயிரினங்கள் உள்ளதால் எந்தவித உயிரினங்களோ பொருட்களோ ஊடுருவிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்" என்கிறார். ஆஸ்திரேலியாவில் தனது உறவினர் ஒருவர் கிரிக்கெட் மட்டையை எடுத்துச் சென்றபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் அசோக் ராஜா, "கிரிக்கெட் மட்டையில் மண் ஒட்டிக் கொண்டிருந்ததை காரணமாக கூறினர். எந்த நாட்டின் மண்ணும் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதால் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன" எனவும் தெரிவித்தார். "செருப்பு அணிந்து செல்லும்போது அதில் மண் எதுவும் ஒட்டியிருக்கக் கூடாது. தங்கள் நாட்டு மண்ணை வெளிநாட்டு மண் கெடுத்துவிடக் கூடாது என்பது தான் அடிப்படையான நோக்கம்" என்கிறார், ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு. தற்காத்துக் கொள்வது எப்படி? "ஒரு நாட்டில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பற்றி ஏர்லைன்ஸ் நிர்வாகத்தில் கூற மாட்டார்கள். விமான நிலையத்தில் இறங்கியதும் உறுதிமொழி படிவத்தில் அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் தகவல்களைத் தெரிவித்துவிட்டால் தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார், முன்னாள் விமானி அசோக் ராஜா. "ஒரு பொருளை அறிவிக்காமல் கொண்டு வந்தால் முதல்முறையான தவறாக இருந்தால் மன்னிப்பு அல்லது அபராதம் விதிப்பார்கள்" எனக் கூறும் ஜெயசந்திரன் தங்கவேலு, "இது அந்தந்த அதிகாரிகளைப் பொறுத்தது. சிலர் மன்னிப்பு மட்டும் வழங்குவார்கள். தொடர்ந்து தவறு நடந்தால் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகள் வரை செல்லும்" என்கிறார். " உடைமைகளைக் கொண்டு செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதைக் கொண்டு சென்றாலும் நூறு சதவீதம் அதனை வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் எல்லைப் படை அதிகாரிகள் உதவுவார்கள்" எனக் கூறுகிறார், ஜெயசந்திரன் தங்கவேலு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98el8jj8pro
1 month 3 weeks ago
நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்! நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர் போராட்டங்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு நடவடிக்கையாக, ‘ஜென் Z’ போராட்டம் எனப்படும் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் வீதிகளில் குதித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாகு சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்றினர். முதல் கட்டமாக சுமார் 2,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மற்றொரு பகுதியில் இருந்த 1,500 கைதிகளும் சிறையிலிருந்து வெளியேறினர். பொலிஸார் தங்கள் இடங்களை விட்டு விலகியதால், கைதிகள் எளிதில் வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலவரங்களின் பின்னணியில், முன்னாள் துணைப் பிரதமரும் ராஷ்டிரிய சுவதந்திரக் கட்சி தலைவருமான ரபி லாமிச்சானே விடுவிக்கப்பட்டார். அவர் விடுதலையானதும் மக்களிடம் உரையாற்றி, ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார். இதன் பின்னர், கடும் அழுத்தத்திற்கு இடமான நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி ராஜினாமா செய்தார். மேலும், லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன் மூலம் நேபாள அரசியல் நிலைமை மேலும் அலைக்கழிக்கப்படுகிறது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும். கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் தர வேண்டும். அனைத்து கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க வேண்டும். அரசியல் தலைவர்களுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்க வேண்டும். தப்பியோடிய கைதிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446667
1 month 3 weeks ago
ரீச்சர்.... வீட்டிலை இல்லைப் போலை இருக்கு. 😂
1 month 3 weeks ago
குருவியை விட மீன் பெரிசாக இருக்குது. சாவின் விளிம்பில்... குருவி என்று வர வேண்டும். 🤣
1 month 3 weeks ago
இவருக்கு நாக்குல சனிபகவான் . ....... ஏதோ வீட்டில நேரத்துக்கு ஒரு வாய் கஞ்சி என்டாலும் கிடைக்குது , அதுக்கும் ஆள் உலை வைக்குது . ......! 😃
1 month 3 weeks ago
வெள்ளைகாரர்கள் என்றால் உயர்வு தானே. பூட்ரினும் வெள்ளை நிறம் சிங்களவர்கள் தமிழர் மாதிரி கறுப்பு எல்லோ
Checked
Sat, 11/01/2025 - 11:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed