புதிய பதிவுகள்2

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

1 month 3 weeks ago
பூட்ரின் உக்ரைன் மீது ஆக்கிரப்பு போரை நடத்தி வருவதால் மிகப் பெரிய செலவு இருக்கின்ற படியால் இந்த அற்புதமான புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை இலவசமாக உலக மக்களுக்கு அவரால் வழங்க முடியவில்லை அதன் காரணமாக ரஷ்ய மக்களுக்கும் இந்தியா ஆபிரிக்க நாடுகளுக்கு மட்டும் இலவசமாக வழங்குவார் என்றும் தெரிய வருகின்றது. எனக்கும் இந்த தடுப்பூசி எடுக்க மிகவும் ஆசை என்ன செய்வது😭

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

1 month 3 weeks ago
வெளிநாடுகளில வெள்ளைகளை முடிச்சதை பற்றி வாய் தொறங்க துர சிறி அண்ணை இந்த கலியாணம் கட்டுன தமிழ் ஆம்பிளைகளை சிங்களப்பிள்ளைகள் திரும்ப கல்யாணம் கட்டுமா கேட்டுச்சொல்லுங்க wea are waiting 😎😎😎😎

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 month 3 weeks ago
Wonders of Earthscape · Suivre ortdsopSenhm5834i1l74567672h0ggihi5586t7m0cf16a1 f02hlt3cu28 · In March 2022, the Felicity Ace caught fire and sank near the Azores, sending thousands of high-end cars to the ocean floor. Among its cargo were some of the world’s most coveted brands Porsche, Audi, Bentley, and Lamborghini a fortune in luxury swallowed by the sea. The wreck has since become one of the Atlantic’s most haunting modern shipwrecks, capturing imaginations with its mix of wealth, tragedy, and mystery. What lies inside the sunken holds now gleaming symbols of status or corroding relics of desire? But the story carries a darker side too: concerns about leaking fuel, batteries, and materials that could harm fragile marine ecosystems. The Felicity Ace stands as a reminder that even the pinnacle of luxury is no match for the power of the ocean and that human ambition always carries risks when set against the deep........!

உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும்

1 month 3 weeks ago
அப்பிடியே…. பக்கிங்ஹாம் அரண்மனையிலும் சொரியாரின் சாரி… பெரியாரின் போட்டோவை மாட்டி விட்டிருக்கலாம். 😂

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் !

1 month 3 weeks ago
இந்திய ஜனாதிபதியே ஒரு வேலைக்கு ஆகாத பல்லு புடுங்கின பாம்பு. அதுக்கு ஒரு துணை ஜனாதிபதி இப்ப முக்கியம் தேவைதான். 😂

உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும்

1 month 3 weeks ago
குறட்பா: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். விளக்கம்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்பது சமமானது அல்லது ஒன்றே. சிறப்பொவ்வா: சிறப்புத்தன்மையில் வேறுபாடு இருக்கும். செய்தொழில் வேற்றுமை யான்: செய்யும் தொழில்களில் உள்ள வேறுபாடுகளால் மட்டுமே இது அமையும். சுருக்கமாக, நாம் பிறந்ததில் அனைவரும் சமம் என்ற கருத்தை இந்த குறள் வலியுறுத்துகிறது. ஆனால், நாம் செய்யும் செயல்கள், நமது திறமைகள், நாம் செய்யும் தொழில் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளால் தான் சமூகத்தில் ஒருவரின் சிறப்புத்தன்மையும், மதிப்பும் அமைகின்றன. இது, சமூக வேறுபாடுகள் பிறப்பால் அல்லாமல் செயல்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது செப்.12-ல் உச்சநீதிமன்றம் விசாரணை

1 month 3 weeks ago
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது செப்.12-ல் உச்சநீதிமன்றம் விசாரணை 10 Sep 2025, 10:46 AM நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் (செப்டம்பர் 12) விசாரணை நடைபெற உள்ளது. தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார் சீமான் என்பது 2011-ல் போலீசில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார். இதனடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை பிப்ரவரி 21-ந் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான், மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சீமான் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அப்போது நடிகை விஜயலட்சுமியுடன் சமாதானமாக போவதாக சீமான் தரப்பில் கூறப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனிடையே சீமானுடன் சமாதானமாக போக தயாராக இல்லை என உச்சநீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 12-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. https://minnambalam.com/actress-vijayalakshmi-case-supreme-court-to-hear-seemans-appeal-on-sept-12/

வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். - ஆளுநர் நா.வேதநாயகன்

1 month 3 weeks ago
வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். - ஆளுநர் நா.வேதநாயகன் புதன், 10 செப்டம்பர் 2025 05:52 AM வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெய்குமார் தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். மிக நீண்ட நெடிய போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற நோக்கு நிலையிலேயே அணுகவேண்டும். இந்த மாகாணத்தின் குழந்தைகள் போரால் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் வருமானமீட்டுபவர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணிகளையும் கருதிலெடுத்தே எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாம் வடிவமைக்கவேண்டியிருக்கின்றது. கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் அரசாங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. ஆனால் பிள்ளைகள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு குடும்பச் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது. மீள்குடியமர்ந்த குடும்பங்கள் இன்னமும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பவில்லை. அதேபோல பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட எதிர்கொண்டு இருக்கின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லுமா என்பது கேள்விக்குறியே? அதேநேரம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்கள் இருக்கின்றன. அங்கு பிள்ளைகளும் குறைவு. அதனால் அங்குள்ள பாடசாலைகள் - ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படுகின்றன. அந்தப் பிள்ளைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையும் குறைவு. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அந்தப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. இதை மாற்றியமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். அவர்கள் பேரன் அல்லது பேர்த்தியின் அரவணைப்பில்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவேதான் வடக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களிலிருந்து தனித்துவமான கோணத்தில் நோக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். எமது மாகாணத்தின் இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கும் நாம் வித்தியாசமான அணுகுமுறையையே பின்பற்றவேண்டியிருக்கும். எனவே அதற்கு இந்தக் கருத்தரங்கு உதவியாக இருக்கும் என நம்புகின்றேன், என ஆளுநர்மேலும் தெரிவித்தார். நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். https://jaffnazone.com/news/50492

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

1 month 3 weeks ago
எல்ல பேருந்து விபத்து – காரணம் வெளியானது September 10, 2025 11:16 am எல்ல – வெல்லவாய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு, பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சுமார் ஆயிரம் அடி பள்ளத்தில் வீழந்து பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்நிலையில், விபத்து தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களித்தின் ஆணையரின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயரமான பகுதியில் இருந்து கீழ் நோக்கி பயணிக்கும் போது பயன்படுத்த வேண்டிய கியருக்கு பதிலாக, நான்காவது கியரில் பேருந்து பயணித்துள்ளமை விசாரணைகள் தெரியவந்துள்ளது. மேலும், விபத்து நடந்த நேரத்தில் பேருந்தின் பின்புற வலது சக்கர அமைப்பில் பிரேக்குகள் முழுமையாக செயற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. https://oruvan.com/ella-bus-accident-cause-revealed/

UNHRC-யில் இலங்கைக்கு 43 நாடுகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின

1 month 3 weeks ago
UNHRC-யில் இலங்கைக்கு 43 நாடுகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல் நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, கோட் டி ஐவோயர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, , கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, எரித்திரியா, ஈரான், நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுலா, மாலத்தீவுகள், கியூபா, தெற்கு சூடான், சூடான், ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் புருண்டி ஆகிய நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய நாடுகளில் அடங்கும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டையும், உயர் ஸ்தானிகரின் வருகையையும், நாட்டின் மேம்பட்ட ஒத்துழைப்பின் அடையாளமாக வரவேற்றதாகவும், நாட்டில் நடந்து வரும் சட்டமன்ற சீர்திருத்தங்கள் உட்பட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மற்றும் உறுதியான முன்னேற்றத்தை அங்கீகரித்ததாகவும், HRC மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையை அதன் தேசிய உரிமைச் செயல்முறைகளில் ஆதரிக்க ஊக்குவித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளக் கட்டுப்பாடுகள் காரணமாக கவுன்சிலில் உள்ள முக்கிய ஆணைகள் நிறைவேற்றப்படாமல் போகும் அபாயத்தில் இருக்கும்போது, இலங்கைக்கு வெளிப்புற பொறிமுறைக்கு வளங்களை ஒதுக்குவதை அந்த நாடுகள் கேள்வி எழுப்பின, மேலும் வெளிப்புறமாக விதிக்கப்பட்ட இணையான செயல்முறைகள் துருவமுனைப்புக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்பதை வலியுறுத்தின. இலக்கு வைக்கப்பட்ட நாடுகளில் நாடு சார்ந்த வழிமுறைகளைத் திணிப்பது மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய தன்மை, பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகிய ஸ்தாபகக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும், நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட மனித உரிமைகளை இரட்டைத் தரநிலைகள், அரசியல்மயமாக்குதல் மற்றும் கருவியாக்குதல் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். மனித உரிமைகளை மேம்படுத்துவதில் உற்பத்தி முடிவுகளை அடைய கவுன்சிலுக்குள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர் என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=340288

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் !

1 month 3 weeks ago
இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் ! 09 Sep, 2025 | 10:53 PM இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தோல்வியடைந்தார். இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகின. இதில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகள் 752. சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 452. சுதர்சன் ரெட்டி பெற்ற வாக்குகள் 300. 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, செப்டம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மையான ஆதரவு இருந்ததால் சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தேர்தல் வெற்றி மூலம் அவர் இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் யார்? சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி திருப்பூரில் பிறந்தார். வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்தில், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கைப்பந்து, ஓட்டப்பந்தயம் என சகல விளையாட்டுகளிலும் சிறந்தவராக விளங்கினார். 16 வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்த இவர் 1974 ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க. மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அதன் பிறகு, 2004, 2014 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அதே தொகுதியில் தோல்வியை தழுவினார். எம்.பி.யாக இருந்த காலத்தில், புடவைத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (பி.எஸ்.யு.) மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2004-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபைக்கான நாடாளுமன்ற குழுவிலும், தாய்வானுக்கான முதல் நாடாளுமன்றக் குழுவிலும் அவர் இடம் பெற்றார். அதே ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் நாடு முழுவதும் நதிகளை இணைப்பது, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது, தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரத யாத்திரை நடத்தினார். 2007-ம் ஆண்டு வரை 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு 93 நாட்கள் அவர் ரத யாத்திரை சென்றுள்ளார். 2016-ம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணன் கொச்சியில் உள்ள கயிறு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அவர் 4 ஆண்டுகள் இருந்தார். அப்போது, இந்தியாவில் இருந்து கயிறு ஏற்றுமதி இந்திய ரூபா மதிப்பில்.2,532 கோடி என்ற அளவுக்கு உயர்ந்தது. 2020-2022-ம் ஆண்டு காலத்தில் கேரளாவின் பா.ஜ.க. அகில இந்திய பொறுப்பாளராக பதவி வகித்தார். 2024-ம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி மராட்டிய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு ஜார்கண்ட் மாநில ஆளுநராக 1½ ஆண்டுகள் பதவி வகித்தார். ஜார்கண்டில் அவர் பணியாற்றிய காலத்தில், தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆகிய கூடுதல் பொறுப்புகளையும் கவனித்தார். புதிய துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, பெல்ஜியம், போலந்து, துருக்கி, சீனா, தாய்வான், தாய்லாந்து, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான சி.பி.ராதாகிருஷ்ணன், சிறுவயதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். இவரது தாய் ஜானகி, சி.பி.ராதாகிருஷ்ணன் பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து தெரிவிக்கும்போது, "எனது மகன் பிறந்தபோது, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து பெயரிட்டேன். அந்த தருணம் நனவாகியுள்ளது" என்றார். https://www.virakesari.lk/article/224684

பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

1 month 3 weeks ago
பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம் 10 Sep, 2025 | 09:52 AM பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது நெருங்கிய கூட்டாளி செபாஸ்டியன் லெகோர்னுவை (39) புதிய பிரதமராக நியமித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையை கவனித்த லெகோர்னு, மக்ரோனின் ஏழாவது பிரதமர் ஆவார். அவருக்கு அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்த வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பய்ரூ முன்வைத்த 44 பில்லியன் யூரோ செலவு குறைப்புத் திட்டம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 364–194 வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இராஜினாமா செய்தார். லெகோர்னுவின் நியமனத்தை மத்தியவரிசைக் கட்சிகள் வரவேற்றுள்ளன. ஆனால் இடதுசாரி மற்றும் வலதுசாரிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஜான்-லூக் மெலன்சன் (இடதுசாரி) மாற்றமே இல்லை என விமர்சித்தார். மரீன் லெ பென் (வலதுசாரி) “மக்ரோனின் இறுதி முயற்சி” எனக் கூறினார். பிரான்ஸ் தற்போது மூன்று முக்கிய அரசியல் பிளாக்குகளால் (இடது, வலது, மையம்) பிளவுபட்டுள்ளது. புதிய பிரதமரின் முதன்மைப் பணி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 114% ஆக உயர்ந்துள்ள 3.3 டிரில்லியன் யூரோ கடனை கட்டுப்படுத்துவதாகும். இதற்கிடையில், “பிளோக்கோன் டூட்” (எல்லாவற்றையும் முடக்கு) என்ற பொதுமக்கள் இயக்கம் புதன்கிழமை பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 80,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், வெள்ளிக்கிழமை ஃபிட்ச் நிறுவனம் பிரான்ஸ் கடன் மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய உள்ளது. அது குறைக்கப்பட்டால் நாட்டின் கடன் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. https://www.virakesari.lk/article/224690

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

1 month 3 weeks ago
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு! 10 Sep, 2025 | 09:58 AM யாழ்ப்பாணம், நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது. நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண்நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டத்தினை நல்லூர் பிரதேச சபை முன்னெடுக்கின்றது. எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 14 நாம் திகதி வரை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் பெண் நாய்களுக் கான இலவச கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. பெண் நாய்களுக்கான குறித்த இலவச கருத்தடை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்குரிய கருத்தடை சிகிச்சையினை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வீதிகளில் காணப்படும் கட்டாக்காலி பெண்நாய்களினை சமூகநலன் நோக்கில் பிடித்து நல்லூர் பிரதேச சபையின் கருத்தடை சிகிச்சை முகாமில் ஒப்படைப்பவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 வீதம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது. நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்யை முகாம் நடைபெறும் இடங்கள் 10.09.2025 புதன்கிழமை காலை 8.30 முதல் 1.30 மணிவரை திருநெல்வேலி கம்பன் சனசமூக நிலையம் மாலை 1.30 முதல் 4.15 வரை திருநெல்வேலி பாரதி சனசமூக நிலையம் 11.09.2025 வியாழன் காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைச்சுடர் சனசமூக நிலையம், திருநெல்வேலி மேற்கு மாலை 1.30 முதல் 4.15 வரை கொக்குவில் பழைய உப அலுவலகம் 12.09.2025 வெள்ளிக்கிழமை காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைமகள் சனசமூக நிலையம், நல்லூர் வடக்கு மாலை 1.30 முதல் 4.15 வரை பொதுநோக்கு மண்டபம், கல்வியன்காடு 11.09.2025 சனி காலை 8.30 முதல் 1.00 மணிவரை உதயஒளி சனசமூக நிலையம், அரியாலை கிழக்கு https://www.virakesari.lk/article/224693

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினர் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

1 month 3 weeks ago
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினர் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 10 Sep, 2025 | 11:16 AM 1990 காலப்பகுதிகளில் மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை சிறுவர்கள் பெண்கள் பாரபட்சமின்றி விசாரணை என்ற பெயரில் அழைத்து சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், குறித்த பிரதேசத்தில் அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம் அமைந்த பகுதி அகழ்வு செய்யப்பட்டு இச்சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தலை மேற்கொண்டு உரியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரி சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் செவ்வாய்க்கிழமை (09) கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சந்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 35 வருடங்கள் கடந்த நிலையில் இது தொடர்பிலான நீதியான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், யாழ். செம்மணி போன்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றுள்ளமையும் அது தொடர்பான எச்சங்கள் மீட்கப்படுகின்ற விடயங்களையும் கருத்திற் கொண்டு குறித்த முறைப்பாடு இக்குழுவினரால் முன்னெடுக்கப்படுகின்றது. கோரி சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல்,மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான தயாள கௌரி,ரகுநாதன் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் லவகுகராசா ஆகியோர் சட்டத்தரணிகளான கமல்ராஜ்,தவராஜா ஆகியோருடன் இன்றைய தினம் காலை கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டார். இதற்கு முன்பாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கு நடவடிக்கையெடுத்தபோது தலைமையக பொலிஸாரினால் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரை சந்திக்குமாறு அறிவுறுத்தல்க்ள வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை சந்திததன் பின்னர் குழுவினரால் படுகொலை நடைபெற்ற பிரதேசத்திற்குரிய பொலிஸ் நிலையமாகவுள்ள கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்தப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும். தமக்கான நீதி இந்த நாட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லையெனவும் தமக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி வழங்கவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். எவ்வாறாயினும் இராணுவமுகாம் இருந்த பகுதி அகழ்வு செய்யப்படவேண்டும் என்பதற்காக இந்த முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், இன்று பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், பனிச்சையடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களில் இலங்கை இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்டு 35 வது ஆண்டு நிறைவு. இன்று நாங்கள் இந்த படுகொலைக்கான நீதியை மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டு இன்று சத்துருக்கொண்டான் ராணுவ முகாம் அமைந்த இடத்தை அகழ்வு பணி மேற்கொள்ள வேண்டும் என்று இன்று நாங்கள் மட்டக்களப்பு கொக்குவில் போலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டை செய்துள்ளோம். இந்த முறைப்பாட்டை கொக்குவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே இதற்கான நீதி அரசாங்கத்தின் உள்ளக விசாரணையில் நிதிவித நம்பிக்கையும் இல்லை எனவே இந்த விசாரணை ஒரு சர்வதேச பொறிமுறைக்கு சென்று விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதனை எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் இன்று இந்த நீதிக்காக நாங்கள் முறைப்பாட்டை செய்திருக்கின்றோம். இதற்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். https://www.virakesari.lk/article/224700

வேலணையில் வாள்வெட்டு ; 10 நாள்களின் பின் பிரதான சந்தேக நபர் கைது!

1 month 3 weeks ago
வேலணையில் வாள்வெட்டு ; 10 நாள்களின் பின் பிரதான சந்தேக நபர் கைது! 10 Sep, 2025 | 11:03 AM அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், பிரதான சந்தேக நபரை 10 நாள்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (09) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் 31 ஆம் திகதியன்று வேலணை அராலி சந்திக்கு அண்மையில் காரில் சென்ற ஒருவரை பட்டா ரக வாகனத்தில் சென்ற குழு ஒன்று வழிமறித்து வாளால் வெட்டி கடுங்காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுச் தப்பிச் சென்றிருந்தது. கடும் காயமுற்ற நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாள் வெட்டுடன் தொடருடைய குழுவை பொலிஸார் தேடி தீவிர விசாரணை நடவடிக்கை ஆரம்பித்தனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேநேரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களும் விரைவில் கைதுசெய்யப்படுவர் என தெரிவித்த ஊர்காவற்றுறை பொலிஸார் கைதான பிரதான சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/224701

வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை - இலங்கை தமிழரசு கட்சி

1 month 3 weeks ago
வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை செய்திகள் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 08 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதில் எமது ஆழ்ந்த ஏமாற்றத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்றபோது பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும், ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு முழு ஆண்டு ஆன பின்னும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் எனக் கூறினாலும், எளிதில் செய்யக்கூடியவை கூட முயற்சிகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இன்னும் நீக்கப்படவில்லை. PTAக்கு மாற்றாக எந்த புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்த போதிலும், தற்போது அமைச்சர் புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியது. PTA சட்ட நீக்கம் செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை (moratorium) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டம் (Online Safety Act) சட்ட நீக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் கூறியுள்ளதும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு (Sri Lanka Accountability Project) எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் மிகவும் கண்டனத்துக்குரியது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் ஆன போதும் , எந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 240 எலும்புக்கூடுகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள. இவை சட்டத்துக்கு புறம்பான கொலைகளாக இருப்பினும் இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை. இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கிறது. அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அழைத்துள்ளது. மாறாக, இலங்கை அரசாங்கம் தன் எழுத்திலான பதிலில், எல்லை நிர்ணயிப்பு செயல்முறை முடிந்த பிறகு மட்டுமே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலை எடுத்துள்ளது. இது பல ஆண்டுகள் தேர்தலை தள்ளிவைக்கும் எண்ணப்பாட்டை காட்டுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மீறி, அவர்களின் வாக்குரிமையை தொடர்ந்து உதாசீனப்படுதலை காட்டி நிற்கிறது. எமது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் முன்வைத்த தனி நபர் சட்டமூலத்தினை அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கி, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். https://adaderanatamil.lk/news/cmfditfvp00c8o29nu5z6jjya
Checked
Sat, 11/01/2025 - 11:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed