2 months 3 weeks ago
யாரையும் திருத்துவதற்கு நாம் படைக்கப்படவில்லை பிறர் திருந்தும் படி நம் வாழ்க்கையை வாழ்ந்து காட்டினால் போதும்...
2 months 3 weeks ago
கிணற்றிலிருந்து தாய் – இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு adminJuly 24, 2025 முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள கிணற்றிலிருந்தே சடலமாக இன்று வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர் தாய் உசாகரன் மாலினி( வயது 38) மகள்களான உசாகரன் மிக்சா ( வயது 11) உசாகரன் சதுசா (வயது 04) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கிணற்றின் அருகில் இன்று அதிகாலை கைப்பை ஒன்றும் ஏனைய பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊா் மக்கள் அந்த விடயம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அங்கு சென்ற கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினர் கிணற்றில் சடலங்கள் இருப்பதை பாா்வையிட்டதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார் இவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டார்களா அல்லது கொல்லப்பட்டனரா என்பது தொடர்பில் மாங்குளம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் https://globaltamilnews.net/2025/218314/
2 months 3 weeks ago
1500 மணித்தியாலங்கள் Type-specific training. அதாவது B737 என்றால் அந்த வகை விமானத்திலேயே 1500 மணித்தியாலங்கள் பயிற்சி பெற வேண்டும்.
2 months 3 weeks ago
ATPL = Airline Transport Pilot Licence என்பதுதான் சரி என்று எண்ணுகிறேன். (Airline transport என்பது Air Transport இல் ஒரு பகுதியை மட்டும் குறிப்பது) ஆம் குறைந்தது 1500 மணித்தியாலங்கள்.
2 months 3 weeks ago
பெண்களை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் காரணம் என்னவாக இருக்கலாம் என ஆய்வு செய்ய வேண்டும். பெண் குரங்குகளால் பாதிக்கப்பட்ட ஆண் குரங்குகளாக இருக்குமோ ?
2 months 3 weeks ago
திருநெல்வேலி சந்தையில் காத்தோட்டிக்காய் கிலோ 7000-8000 ரூபா. ஒரு காய் 400-500 ரூபா. நிறைய சனங்கள் ஒரு காத்தோட்டிக்காய் வாங்க அந்தரிக்கிறார்கள். அதிலே ஒரு யாவாரி மற்ற யாவாரிக்கு காயை வெட்டி பாதியாய் வில் என்று அறிவுறுத்திக்கொட்டிருந்தார். உண்மையிலே காத்தோட்டிக்காய் வீடுக்களில் வளர்ப்பதில்லை. எங்காவது பற்றைகள் ஆட்களில்லா வளவுகளில் கொல்லைகளில் வளரும். கிராமங்களில் யாரும் காசு கொடுத்து வாங்குவதில்லை. ஒரு காலத்தில் இலவசமாக கிடைத்த சந்தைகளில் அஞ்சு பத்து ரூபாக்கு விற்ற காத்தோட்டிக்காய் பெரும்பாலான மரக்கறிகளின் ஒரு கிலோ விலையை விட ஒரு காயின் விலை கூடவாக இருப்பது ஆச்சரியம் தான். இந்த காயை மரத்தில் பிடுங்கி சந்தை யாவாரிகளிடம் கொடுக்கும் தொழிலாளிக்கு யாவாரிகள் எவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிறார்கள். இந்த காய்களில் ஒரு கிலோவுக்கு எத்தனை மடங்கு லாபத்துக்கு விற்கிறார்கள். இது தவிச்ச முயல் அடிக்கிர வேலையா இல்லையா? ஆடி அமாவாசைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் பொரிச்சு சாப்பிடுற காத்தோட்டிக்காயை நடுத்தர சனங்கள் வாங்கேலாத விலைக்கு விக்கிற சந்தை யாவாரிட மண்டைக்குள்ள காசு மாத்திரம் தான் தெரியும். -copy (ஆடி அமாவாசை விரத்துக்கு பொரியலுக்கு பயன்படும் கைச்சல் மிகுந்த காயே காத்தோட்டிக்காய்) நம்ம யாழ்ப்பாணம்
2 months 3 weeks ago
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்க உத்தரவு! 021 மே மாதம் கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலின் உரிமையாளருக்கான இழப்பீடு உத்தரவினை உயர் நீதிமன்றம் இன்று (24) பிறப்பித்தது. அதன்படி, குறித்த கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் வந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் 2021 மே 20 அன்று தீப்பிடித்து, சில நாட்களின் பின்னர் கடலில் மூழ்கியது. இதனால் இலங்கையின் மேற்குக் கடற்கரையில் பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் நச்சு இரசாயனங்கள் சிதறின. இந்தப் பேரழிவு கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீன்பிடி சமூகங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தியது. இதில் துப்புரவு நடவடிக்கைகள் மற்றும் இடைக்கால நிவாரண முயற்சிகள் அடங்கும். https://athavannews.com/2025/1440451
2 months 3 weeks ago
பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர். கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, நேற்று (23) பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள் இந்த சீர்திருத்தம் குறித்த விளக்கங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர். பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், பல்வேறு முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தினார்: * கற்றல் மற்றும் மதிப்பீட்டில் மாற்றம்: “ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றுக்கொள்ளவும், மதிப்பீடு செய்யப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன,” என்று பிரதமர் விளக்கமளித்தார். * க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும். * அமுலாக்கத்தின் தொடக்க நிலை: 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே புதிய கல்வித் திட்டம் கற்பிக்கப்படும். இந்த சீர்திருத்தத்தைக் கண்காணிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், சீர்திருத்தம் இறுதியானது என்று கூற முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த சீர்திருத்தம் குறித்த கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். * வகுப்பறை மாணவர் எண்ணிக்கை: ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 – 30 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் உள்ளன. கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரின் உத்தரவின்படி அதிக மாணவர்களை வகுப்பறைகளுக்குள் உள்வாங்கும் முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். * ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். * முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள்: முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார். ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம் இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1440490
2 months 3 weeks ago
செம்மணி மனித புதைகுழி: 9 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 3 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 19ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 28 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராசா வின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இன்று செம்மணி புதை குழியில் இருந்து மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 03 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றையதினம் வரையில் 85 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1440526
2 months 3 weeks ago
சமூகம் ,பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டே புதிய கல்விச் சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது! -ஜனாதிபதி தெரிவிப்பு. சமூகம் மற்றும் பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டே நாட்டில் புதிய கல்விச் சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எமது நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்களில் மாணவர்கள் மிக முக்கியமானவர்கள். எனவே தான் கல்வி முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியமாகின்றது. இப்புதிய சீர்திருத்தத்தில் பாடவிதானங்களில் மாத்திரம் கவனம் செலுத்தப்படவில்லை. எமது சமூகம் பொருளாதார இவை இரண்டையும் கவனத்திற்கொண்டே இக் கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பார்த்தோமேயானால் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம். சிறந்த பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சிறந்த மாணவச் சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் வறுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் கல்வி கற்பது அவசியமாகின்றது. நாட்டில் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் பலர் , பாடசாலை கல்வி பயிலும் வயதுடையவர்களாகவே காணப்படுகின்றனர். இவை அனைத்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமாயின் சிறந்த கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி அநுர குமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440480
2 months 3 weeks ago
குறைந்த விலையில் மின்சாரக் கார் உற்பத்தி! - டெஸ்லா அறிவிப்பு. உலகப் புகழ் பெற்ற மின்சாரக் கார் நிறுவனமான டெஸ்லா, விரைவில் குறைந்த விலையில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய மின்சார வாகன சந்தையில் அதிகரிக்கும் போட்டியினால், டெஸ்லா விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், நிறுவனர் எலான் மஸ்க் என்பவரின் அரசியல் கருத்துக்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாகவும், நிறுவனத்தின் மொத்த வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில், டெஸ்லாவின் வருவாய் 22.5 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துவிட்டது என்பது இதற்கான முக்கிய சான்றாகும். இதற்கு பதிலாக, டெஸ்லா நிறுவனம் தனது நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், குறைந்த விலையில் மின்சார கார்களை விற்பனை செய்து வியாபாரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. எலான் மஸ்க் மற்றும் அவரது டெஸ்லா குழுவின் எதிர்காலப் படிகள், மின்சார வாகனங்கள் சந்தையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440502
2 months 3 weeks ago
துருக்கியில் காட்டுத் தீ! 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. துருக்கியின் மத்திய பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் “தீ அணைக்கும் பணியின் போது திடீரென காற்றின் திசை மாற்றமடைந்தது. இதனால் மொத்தம் 24 வீரர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் 10 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார். தற்போது மத்திய மற்றும் மேற்கு துருக்கியின் ஐந்து பகுதிகளில் காட்டுத் தீ தீவிரமாகப் பரவி வருகின்றது. அவற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் வனத்துறையும், தீயணைப்புத் துறையும் முழு அளவில் ஈடுபட்டுள்ளன. அரசாங்கம், மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்த்தும் வருகின்றனர். துருக்கியில் இவ்வாறான காட்டுத் தீயால் ஏற்பட்ட பெரிய உயிரிழப்பு இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டுகளிலும் வறட்சியான காலநிலை, கடும் காற்று, மற்றும் காடுகளில் கருகி விழும் விறகு போன்ற காரணங்களால் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440511
2 months 3 weeks ago
உயிரிழந்த தாயின் எச்சங்களைத் தவறாக அனுப்பியதாக ஏயார் இந்தியா மீது மகன் குற்றச்சாட்டு! எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தனது தாயின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, லண்டனில் வசிக்கும் மகன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த நபரின் பெற்றோர் இருவரும் கடந்த அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களது உடலங்கங்கள் என்றும் கூறப்பட்ட எச்சங்கள் அவருக்கு அனுப்பப்பட்டன. ‘எனினும் அதில் தனது தாயின் எச்சங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் காணப்பட்டதாக ‘ அவர்களது மகன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஒருவரின் உடல் எச்சங்களில், பலரின் எச்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டிருந்தது. எனினும், விமான விபத்தில் உயிரிழந்த அனைவரது எச்சங்களும் மிகவும் தொழில்முறை மற்றும் கண்ணியத்துடன் கையாளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440497
2 months 3 weeks ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Usha Ravikumar ·tneodoSprsl479305tg2740g a1g752tfui80i5uut784atcl85i21um1h2g · ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், "ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார். "இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. " "உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார் "எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்".......!
2 months 3 weeks ago
அது என்ன கருவாடு அண்ணை?! கேள்விப்படவில்லை!
2 months 3 weeks ago
தாய்லாந்து கம்போடிய படையினர் எல்லையில் மோதல் - விமான தாக்குதல்கள் 24 JUL, 2025 | 12:03 PM தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பில் மோதல் வெடித்துள்ளது. தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்,பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள தாய்லாந்து அதிகாரிகள் எல்லையில் உள்ள 86 கிராமங்களில் வசிக்கும் 40,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இரண்டு தென்கிழக்காசிய நாடுகளிற்கும் இடையில் முறுகல்நிலை தீவிரமடைந்து வந்த நிலையிலேயே நேற்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எல்லையின் ஆறு பகுதிகளில் தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன. இருதரப்பும் பரஸ்பரம் மற்றைய தரப்பே மோதலை ஆரம்பித்தாக குற்றம்சாட்டியுள்ளன. தாய்லாந்தின் தலைநகரிலிருந்து 250 மைல் தொலைவில் உள்ள புராதான நகரமான பிரசாத் டா மோன் தொம் என்ற இடத்தில் மோதல்கள் முதலில் ஆரம்பித்துள்ளன. இதேவேளை கம்போடிய இராணுவத்தின் மீது தாய்லாந்து எவ் 16 தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/220795
2 months 3 weeks ago
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நல்லூர் கிட்டு பூங்காவில் போராட்டம் 24 JUL, 2025 | 05:41 PM நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் "விடுதலை" எனும் தொனிப்பொருளிலான போராட்டம் இன்று வியாழக்கிழமை (24) நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது. இதில் சிறைவாழ்க்கை கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள "விடுதலை விருட்சத்துக்கான " விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது. இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய "துருவேறும் கைவிலங்கு" நூல் அறிமுகமும் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவும் தயாரித்து வழங்கப்பட்டது. இன்றைய தினம் ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நாளையும் தொடரவுள்ளது. https://www.virakesari.lk/article/220848
2 months 3 weeks ago
இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும் அதனால் எனது மகனை விடுதலை செய்யுங்கள் - ஆனந்த சுதாகரனின் தாயார் 24 JUL, 2025 | 07:19 PM இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும், அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும் என அவரின் தாயார் உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறைக் கூடங்களை காட்சிப்படுத்தப்பட்டு சிறையிலுள்ளவர்களின் உறவுகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவர் மேலும் தெரிவித்ததாவது, நான் கடைசியாக ஜூலை மாதம் 17ம் திகதி அவரை போய்பார்த்துவிட்டு வந்தனான், அவருக்கு வழக்கு நடந்துகொண்டிருக்கு, வழக்கில் என்ன முடிவு வரும் என்று தெரியாது. அவருக்கு ஒரு நல்ல முடிவு வரும் என சொல்லியிருக்கினம், ஆனால் எனது மகன் இல்லாமல் கஷ்டம், நான்தான் இந்த பிள்ளைகளை படிப்பித்து வளர்த்துக்கொண்டிருக்கின்றன், இனி எனக்கு வயசும் போயிட்டுது. கண்ணும் விளக்கமில்லை, நெடுக வருத்தம். ஆனமுறையிலை, இவர்களிற்கு எந்தவொரு உதவியும் வேண்டாம், அப்பாவின் ஆதரவுதான்வேண்டும். எனக்கு இருப்பது ஒரேயொரு மகன்தான், அவரை விட்டால் வேறு பிள்ளைகளும் இல்லை, அதனால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும் என கோரித்தான் நான் இங்கே வந்திருக்கின்றேன். இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும், அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும். ஆனந்த சுதாகரன் தற்போது உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரை கொண்டுபோய் போகம்பரை சிறைச்சாலையில் வைத்திருக்கினம், 15 வருடங்களாக மகசின் சிறைச்சாலையில் இருந்தவர். தற்போது போகம்பரை சிறைச்சாலையில் உரிய வசதிகள் இல்லை, கடும் மன அழுத்தத்தில் சிக்குண்டவர் போல காணப்படுகின்றார், பார்ப்பதற்கு மிகவும் கவலையாக உள்ளது. கடந்த 19 ம் திகதி அவரை பார்த்துவிட்டு வந்தேன், அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் தெரிவித்தார். அது எனக்கு பெரும் மனகுழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. யாரை கேட்பது என தெரியவில்லை. மனித உரிமை குழுவிடம் தெரிவித்தேன். அவர்கள் தற்போதுதானே வழக்கு முடிந்தது அடிக்கடி போய்வராதீர்கள் உங்களிற்கு தூரம் என்றார்கள். தூரம் என்பதற்காக என்னால் விட்டுவிட்டு இருக்க முடியாது, மனக்குழப்பமாக உள்ளது பிள்ளைகள் இருவரும் அம்மாவும் அப்பாவும் இல்லாத நிலையில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் தாய்பாசமோ தந்தை பாசமோ இல்லாமல் இருக்கின்றார்கள், அன்பாய் அரவணைக்க யாரும் இல்லை. https://www.virakesari.lk/article/220866
2 months 3 weeks ago
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி : இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு Published By: VISHNU 24 JUL, 2025 | 07:21 PM செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி வழக்கின் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (24) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதவா குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தடயவியல் பொலிஸார், குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினர், தொல்லியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சஜிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அகழ்வு பணிகள் தொடர்பாக வியாழக்கிழமை (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே ஆழ்ந்தெடுக்கப்பட்ட 67 மனித எலும்பு கூடுகளுடன் புதன்கிழமை (23) பிற்பகலில் இருந்து இன்று வரை 9 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நாளில் புதிதாக மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 88 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நாளை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20வது நாளாக அகழ்வு பணிகள் தொடரும். சிறு போத்தலொன்றும் இரும்புகள் என்று நம்பப்படுகின்ற பல கட்டிகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/220867
2 months 3 weeks ago
24 JUL, 2025 | 08:45 PM அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஆனந்தசுதாகரனின் மகள் தெரிவித்துள்ளதாவது, நான் எட்டுமாசம் வயிற்றில் இருக்கும்போதே அப்பாவை கொண்டுபோய்விட்டார்கள். நாங்களும் எவ்வளவோ அரசாங்கத்தை போய் கேட்டுக்கொண்டிருந்தோம் அப்பாவை விடச்சொல்லி, யாருமே முன்வரவில்லை. இந்த அரசாங்கமாவது முன்வந்து எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் விழுந்தெல்லாம் கேட்டோம், அப்பாவை விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம் விடவில்லை. ஆனந்தசுதாகரனின் மகன் தெரிவித்துள்ளதாவது, எனது அப்பா பிடிபட்டு 14 வருடங்களாகின்றது, நிறைய அரசியல்வாதிகளை சந்தித்து அப்பாவின் விடுதலை தொடர்பாக கதைத்தோம். இதுவரை எந்த முடிவும் இல்லை. இந்த அரசாங்கமாவது எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/220871
Checked
Thu, 10/16/2025 - 12:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed