2 months 3 weeks ago
இந்தியர்கள் அதிகம் செலவு செய்யாவிட்டாலும் சுற்றுலா செய்வதில் விருப்பம் உடையவர்கள். ஆனால்…. பாகிஸ்தான்காரர் சுத்துமாத்து வியாபார புத்தி உடையவர்கள். என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
2 months 3 weeks ago
சின்ன வீடு இருந்தால் அதையும் பெரிதாக்கி …
2 months 3 weeks ago
உங்கள் அனுபவம் எனக்கில்லை என்றாலும் அம்மாள் வருத்தம் மனிதர்களுக்குத்தான் வரும் என்பதை அறிந்துள்ளேன்.
2 months 3 weeks ago
தமிழ்நாட்டு பொலிசாரிடம் ரெயினிங் எடுத்திருப்பார்கள்.
2 months 3 weeks ago
கள்ளு அப்பம் புளிக்க வைக்கவும் பாவிக்கிறவை.அதோட கள்ளு உடம்புக்கு குளிர்ச்சி தரும் எண்டும் சொல்லுறவை.கள்ளு கெமிக்கல் சேர்க்காத இயற்கை தந்த மது பானம். அதை அளவோடு பருகினால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம்...ஆனந்தம்.😍
2 months 3 weeks ago
நான் உந்த குகைக்குள் பல தடவைகள் படுத்து எழும்பி வந்திருக்கிறன்.அரணா கொடி தொடக்கம் காப்புக்கயிறு வரைக்கும் உருவி எடுத்துப்போட்டுத்தான் அந்த அறைப்பக்கமே விடுவார்கள். அது மட்டுமல்லாமல் உடம்புக்குள் ஏதாவது உலோகங்கள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கின்றதா என கேட்டு உறுதி செய்த பின்னரே அறையினுள் செல்ல அனுமதிப்பார்கள். கட்டுப்பல்லுக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும். உடம்புக்குள் அதாவது கால்பகுதி,மண்டைப்பகுதியில் உலோகங்கள் பொருத்தப்பட்டிருந்தால் விமான நிலையங்களிலும் ஒரு சில பிரச்சனை இருக்கும் என கேள்விப்பட்ட ஞாபகம்.
2 months 3 weeks ago
போன வாரமளவில் ஒரு முகநூல் பதிவர் "பூதக் கண்ணாடியோடு" நினைவு தினம் தேடி அலைந்தார் என்று எழுதியிருந்தாரே? அவர் இன்னும் இருக்காரா சார்? 😂
2 months 3 weeks ago
கள் உட்பட எதையும் அருந்தாமல் விட்டாலும் ஒரு வாரத்தில் அது மாறி விடும் என்பது தான் உண்மை!
2 months 3 weeks ago
செச்சே, சின்னப் பிள்ளையள் வாற இடத்தில..இப்படி😊!
2 months 3 weeks ago
இந்தியா,பாக்கிஸ்தானியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்....
2 months 3 weeks ago
பொக்கிழிப்பான், சின்னமுத்து போன்ற வருத்தங்களை அம்மாள் வருத்தம் என்று சொல்வார்கள். அதற்கு மருத்துவரிடம் போவதில்லை, சீவல் தொழிலாளியிடம் சொல்லிப் பனம் கள்ளு வாங்கித் தருவார்கள். வீட்டுக்குப் பயந்து அருந்த முடியாதிருந்த கள் அருந்தும் ஆசையும் நிறைவேறும். அருந்தியபின் வந்த வருத்தமும் மாறிவிடும்.🤩
2 months 3 weeks ago
தமிழ்நாட்டின்... திருநெல்வேலி அல்வா, கீழக்கரை அல்வா, இருட்டுக்கடை அல்வா எல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஸ்ரீலங்கா தொதல், மஸ்கற்ருடன் போட்டி போட முடியாது. உலகப்புகழ் பெற்றது என்றால் ஸ்ரீலங்கா தொதல்தான். 😋
2 months 3 weeks ago
எம்மீதான இனவழிப்பிற்கெதிராகச் சர்வதேசத்தில் எந்த நாடும் செயற்படுவதை எப்படி இந்தியா தடுத்து நிறுத்தியதோ அதனையே இன்று பலஸ்த்தீனர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பினை பிரான்ஸ் அல்லது அதே நிலைப்பாட்டினையுடைய பிற நாடுகள் நிறுத்த முயன்றாலும் அமெரிக்கா முன்னின்று அவற்றையெல்லாம் தடுத்து வருகிறது. முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட நேரடியான தாக்குதல்கள் மூலமான படுகொலைகள், பட்டிணியினூடான படுகொலைகள் போன்று பலஸ்த்தீனத்தில் திட்டமிட்டே இஸ்ரேல் அழிக்கிறது. 2009 சிங்கள இனவாதத்தினைக் கையிலெடுத்து, தனது சந்ததியின் அரசியல் இருப்பிற்காக தமிழினவழிப்பினை மேற்கொண்ட மகிந்தவைப்போல, தனது அரசியல் ஆதாயத்திற்காக கடும்போக்கு யூதர்களைக் கூடவைத்துக்கொண்டு நெத்தன்யாகு பலஸ்த்தீன இனவழிப்பை நடத்தி வருகிறான். இன்று நடக்கும் இனவழிப்பினைத் தடுப்பதற்கு பிரான்ஸ் மட்டுமன்றி ஏனைய நாடுகளும் பலஸ்த்தீன தேசத்தை அங்கீகரிக்க முன்வர வேண்டும். இஸ்ரேலின் போரிற்கான அமெரிக்க ஆதரவினைத் தளர்த்த இன்னும் பல நாடுகள் பிரான்ஸைப் பிந்தொடர வேண்டும்.
2 months 3 weeks ago
தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவதில் உள்ள பிரச்சினை அண்மையில் இந்தக் காணொளியைப் பார்க்க முடிந்தது. மனதிற்கு வலியைத் தந்த காணொளிகளில் ஒன்று. புலம்பெயர் தேசங்களில் தப்பி வாழும் முன்னாள் புலிகள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை தாயகத்தில் உள்ள ஒருவர் முன்வைத்திருக்கிறார். இவர் கூறும் பல விடயங்களில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. இவ்விடயங்களில் மிகவும் நெருடலானதும், சர்ச்சைக்குள்ளாகியதுமான ஒரு விடயம் தான் இறுதிநேரத்தில் உயிர் காக்க ஓடிக்கொண்டிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகக்ப் பாவித்தார்கள் என்பதுடன், அவர்களைச் சுட்டுக் கொன்று தம்மைக் காத்துக்கொண்டார்கள் என்பதும். இறுதிப்போரின் இறுதி நாட்களில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது பின்னாலிருந்து புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் என்பதை நான் யாழில் எழுதும் ஜஸ்ட்டின் மற்றும் எனக்குத் தெரிந்த, இன்னமும் தாயகத்துடன் தொடர்பில் இருக்கின்ற இன்னும் சிலரூடாகவும் அறிந்துகொண்டேன். ஏற்றுக்கொள்ள மிகவும் கடிணமானதாக இருந்தபோதிலும், அப்படியிருக்காது என்று விவாதித்தபோதிலும் மனதில் ஒரு மூலையில் இப்படி நடந்திருக்கலாம் என்றே தெரிந்தது. கூடவே மிகுந்த வேதனையினையும் அது ஏற்படுத்தியிருந்தது, தற்போதும் அப்படித்தான். இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முற்பட்ட மக்களை தடுப்பதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என்பதை தவறென்று ஏற்றுக்கொண்டு, ஓரளவிற்கு அதனை புரிந்துகொள்ள முடிந்தபோதிலும், இக்காணொளியில் இவர் கூறும் தாம் தப்புவதற்காக சுட்டுக் கொன்றார்கள் என்பதையோ, ஆயிரக்கணக்கில் கொன்றார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. மக்களை சகட்டுமேனிக்குச் சுட்டுக் கொல்லவேண்டிய தேவை ஏன் புலிகளுக்கு வந்தது என்பதையோ அல்லது மக்களைக் கொல்வதனூடாக தம்மை அவர்கள் எப்படிக் காப்பாற்றிக்கொண்டார்கள் என்பதையோ இவர் விளக்கவில்லை. அல்லது அவர் அதனை தனது கருத்திற்கு ஆதாரமாக போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்வதாகக் கூட இருக்கலாம். தாயகத்தில் இருந்துகொண்டு தலைவரை மரியாதையாகக் குறிப்பிடும் இவர், இலங்கை இராணுவத்தின் பொன்சேக்கா, கமால் குணரட்ன மற்றும் சவேந்திர சில்வா ஆகியோரின் கூற்றுக்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் அவர்களுக்கான மரியாதையினை வழங்க முனைவதையும் அவரது பாதுகாப்புக் கருதியே செய்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இவர் கூறும் பல விடயங்கள் உண்மையிலேயே சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகளில் பணச் சேகரிப்பிற்காக நடத்தப்படும் உணவு விற்பனை நிலையங்கள், இறுவட்டு விற்பனைகள், வெளியீட்டு விற்பனைகள். இறந்தவர்களை வைத்துப் பணம் சம்பாதிக்கும் கூட்டம் என்று அவர் கூறுவதில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. அவ்வாறே, தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியின் தளபதிகள், புலனாய்வு தளபதிகள், ஏனைய படைத் தளபதிகள் ஆகியோர் தலைவரைச் சாகக் கொடுத்துவிட்டு தாம் மட்டும் எப்படித் தப்பிக்கொண்டார்கள் என்று அவர் கேட்கும்போது அதேகேள்விகள் என்மனதிலும் எழுகிறது. மெய்ப்பாதுகாவலனைக் கொன்றுவிட்டே தலைவரை நெருங்கமுடியும் என்கிற நிலையில் தலைவர் மட்டும் கொல்லப்பட மெய்ப்பாதுகாவலர்கள் தப்பியது எங்கணம் என்கிற கேள்வியும் எழுகிறது. அத்துடன், தலைவரின் மரணம் இடம்பெற்று 16 வருடங்கள் வரை இதனை வெளிப்படையாக அவர்கள் ஏன் கூறவில்லை என்கிற கேள்விகளுக்கும் இற்றைவரை பதில் இல்லை. மேலோட்டமாகப் பார்த்தால் தலைவரையும் மாவீரர்களையும் உண்மையாகவே நேசிக்கும் ஒருவரின் மனக்குமுறல் என்று தெரிந்தாலும், இவரது பின்னணி பற்றியோ அல்லது இவரது உண்மையான நோக்கம் பற்றியோ எதுவும் தெரியாத நிலையில் இக்காணொளியினை உங்களின் பார்வைக்கு இணைத்துவிடுகிறேன். இக்காணொளி இன்னொரு சர்ச்சையினை இங்கு ஏற்படுத்தாது என்கிற எண்ணத்தில் முடிக்கிறேன். Eelam Tamils are outraged by the heroism of their leader, confirming his heroic death!
2 months 3 weeks ago
நன்றி சின்மயி....😛
2 months 3 weeks ago
கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாடசாலைகளை மூடுவதற்கு முற்பட வேண்டாம் - பிரேம்நாத் சி தொலவத்த 25 JUL, 2025 | 06:08 PM (எம்.மனோசித்ரா) கல்வி மறுசீரமைப்பிற்கு 20 எதிர்ப்பினை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று எமது ஆட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. எது எவ்வாறிருப்பினும் கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 10 மாதங்களில் எவ்வாறு கல்வி மறுசீரமைப்பினை முன்னெடுப்பார்கள்? 20 ஆண்டுகளாக கல்வி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பினை வெளியிட்ட இவர்கள், எமது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே தற்போது நடைமுறைப்படுத்துகின்றனர். எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போனமையில் சுனில் ஹந்துன்னெத்தி போன்றோர் பிரதான காரணமானவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது இவர்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைகழக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அவற்றுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் கடந்த காலங்களில் நாட்டுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியவர்களாவர். ஆனால் இன்று அவர்கள் எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர். சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம். பாடசாலைகளை மூடுவது தொடர்பிலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எமது ஆட்சி காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை. எனவே இந்த அரசாங்கமும் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம். கல்வி மறுசீரமைப்பு எனக் கூறிக் கொண்டு பாடசாலை கட்டமைப்பில் கைவைக்க வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை தெரிவு பாடத்தொகுதிக்குள் உள்ளடக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம். முதலில் அரசாங்கம் ஆளுந்தரப்பினருக்கு இது தொடர்பான உண்மைகளைக் கூற வேண்டும். அதன் பின்னர் எம்முடன் கலந்தாலோசிக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/220942
2 months 3 weeks ago
நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்குப் பொருத்தமானவராக இரா. சம்பந்தன் இருந்தார் - பிமல் ரத்நாயக்க 25 JUL, 2025 | 05:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்) காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கும் பொருத்தமானவராக இருந்தார். அந்த அதிஷ்டம் நாட்டுக்கு கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க,லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத சிறந்தவொரு அரசியல்வாதியாக இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் மறைவு தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு எமது கவலைகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடன் நான் 2001 முதல் 2010 வரையிலும் 2015 முதல் 2020 வரையிலும் எதிர்க்கட்சியில் இருந்துள்ளேன். அதன்போது எமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்த பாராளுமன்றத்தில் வேறு அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்ட ஒருவராக இருந்தார். அவரின் அரசியல் கொள்கைகளில் நூறுவீதம் இணங்காதவர்களாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கும் தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் எமக்கும் இடையிலான வயது வேறுபாடுகள் இருந்தாலும் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராக அவரை பார்த்தோம். அவருடன் 2010 - 2019 வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான குழுவில் நெருக்கமாக பழகக் கிடைத்தது. சகல கூட்டங்களிலும் கலந்துகொண்டார். அவர் திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து பல்வேறு அனுபவங்களை கொண்டவர். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அரசியலமைப்பை தயாரித்தாலும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கின்றோம். அவர் உரையாற்றும் போது மனசாட்சிக்கு இணங்கிய பலமான உரையாக இருக்கும். அவ்வாறானவர்கள் இன்னும் இருப்பார்களாக இருந்தால் பாராளுமன்றத்தின் தரம் இன்னும் மேலுயரும். அவர் இந்த நாட்டின் பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவிக்கும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த நாட்டுக்கு அந்த அதிஷ்டம் கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் அவரின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கௌரவமளிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220936
2 months 3 weeks ago
இங்கிலாந்து, ஜேர்மனி, ஒல்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, இத்தாலி, சுவிஸ், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற தமிழ் மக்கள் அதிகம் வசிக்கின்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செய்திருப்பது பணத்தையும், நேரத்தையும் சேமிக்கக் கூடியதாக இருக்கும். இந்த இலவச விசா வழங்கும் திட்டம் ஒரு மாதத்திற்கு மட்டுமா, அல்லது அதற்கு மேலுமா என்ற தகவல் கிடைத்தால் அறியத்தரவும். இனி என்ன ... அடுத்த ஹொலிடேக்கு, பெட்டியை கட்ட வேண்டியதுதான். 😂 தகவலுக்கு நன்றி ஏராளன்.
2 months 3 weeks ago
இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவரே மறைந்த இரா.சம்பந்தன் - சஜித் பிரேமதாச 25 JUL, 2025 | 05:43 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவரே மறைந்த இரா.சம்பந்தன். எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராக மறைந்த இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் செயற்பாடுகள் அனைவருக்கும் முன்மாதிரியானவையே. எப்போதும் அவர் மக்கள் தொடர்பிலேயே சிந்தித்து நடந்துகொண்டார். அவர் ஒரு மனிதாபிமானத்திற்கு சிறந்ததொரு ஆலோசகரும் கூட. பல சந்தர்ப்பங்களில் சமுக, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துள்ளார். அரசியலில் சிறந்தவொரு தலைவராக செயற்பட்டார். எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதியாக, நாட்டின் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த, தான் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் சிவில், கலாசாரம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்காக பங்களிப்பு வழங்கிய அவரின் மறைவுக்காக அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/220940
2 months 3 weeks ago
இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு! 25 JUL, 2025 | 05:51 PM நெடுந்தீவு கடற்பரப்பில் ஜூலை 13ம் திகதி கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜூலை 13ம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 7 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர். இலங்கை வேலைவாய்ப்பு பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரனைகளின் பின்னர் 7 தமிழகம் ராமேஸ்வரம் மீனவர்களையும் கடந்த 13ஆம் திகதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த மீனவர்களை ஜூலை 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், குறித்த மீனவர் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220941
Checked
Thu, 10/16/2025 - 21:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed