புதிய பதிவுகள்2

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months ago
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன் பெண் : நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் ஆண் : நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிறேன் பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் ஆண் : ஹோ கடிவாளம் இல்லாத காற்றாக நான் மாற வேண்டாமா வேண்டாமா பெண் : கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேண்டாமா வேண்டாமா ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம் கை ரேகை தேயட்டும் முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும் பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன ஆண் : நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன ஆண் : சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும் தருவாயா தருவாயா பெண் : கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள் வருவாயா வருவாயா ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன் பெண் : மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன் பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன் ஆண் : இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன் .......... ! --- தவமின்றி கிடைத்த வரமே ---

பாகிஸ்தானில் பெருநகர வீதியில் திடீரென புகுந்த சிங்கம் தாக்கி தாய், 3 குழந்தைகள் காயம்

3 months ago
இதில் என்ன அதிசயம் .......... இங்கும் வீடு , பணம் , நகை , கார் எல்லாம் குடுத்து சிங்கங்களை கட்டி வைத்திருப்பது உங்களின் கவனத்துக்கு வரவில்லைப் போலும் ....... ! 😂

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

3 months ago
இங்க கனபேர் கூட்டமாச்சேர்ந்து திமுகாவிற்கு நல்லா முட்டுக்குடுக்கினம் பாருங்கோ சாமியார்!! ஈவேராவின் பக்தர்கள்!!

அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!

3 months ago
இவர் தனது புதிய கட்சிக்கு பெயர் வைத்த போது புரட்சிகர - விடுதலை என்ற சொற்களையும் சேர்த்து இருக்கலாம் கவர்ச்சியா இருந்திருக்கும்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

3 months ago
தொழிலாளர் கட்சியும் பழமைவாத கட்சியும் வெறும் டுபுக்கு நாம் தமிழர் கட்சியை பிரிதானியா மக்கள் உறுதியாக தேடுவார்கள் - 💪 🔥 NTK political force of மேற்குலகம் 💪 🔥

பாகிஸ்தானில் பெருநகர வீதியில் திடீரென புகுந்த சிங்கம் தாக்கி தாய், 3 குழந்தைகள் காயம்

3 months ago
50,000 ரூபாய் கட்டினால், வீட்டில் சிங்கம் போன்ற காட்டு விலங்குகளை வளர்க்க அனுமதி கிடைக்குமாம். என்ன நாடு, என்ன சட்டம். பைத்தியக்காரத்தனமான செயல்.

செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு

3 months ago
சத்தியராஜ் திமுகாவின் ஊதுகுழல்! ஒரு பச்சோந்தி! அஜித்குமாரின் மரணத்திற்கு வாயே திறக்கவில்லை!!

காசா மக்களை பலவந்தமாக முகாமொன்றிற்குள் இடமாற்றுவதற்கு இஸ்ரேல் திட்டம் - மனித குலத்திற்கு எதிரான குற்றம் என கடும் கண்டனங்கள்

3 months ago
Published By: RAJEEBAN 08 JUL, 2025 | 11:11 AM guardian காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் ரஃபாவின் இடிபாடுகளில் உள்ள ஒரு முகாமில் தள்ளுவதற்கான திட்டங்களை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் வகுத்துள்ளார். இந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதற்கான திட்டம் என சட்டநிபுணர்களும் கல்விமான்களும் வர்ணித்துள்ளனர். ரஃபா நகரின் இடிபாடுகளில் ஒரு முகாமை நிறுவுவதற்குத் தயாராகுமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறியதாக இஸ்ரேலின் ஹரெட்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் "மனிதாபிமான நகரம்" என்று வர்ணித்துள்ளார் பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு "பாதுகாப்பு சோதனை"க்கு உட்படுத்தப்படுவார்கள் உள்ளே நுழைந்தவுடன் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேலிய பத்திரிகையாளர்களுக்கான ஒரு மாநாட்டில்இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறினார். இஸ்ரேலிய படைகள் தளத்தின் சுற்றளவைக் கட்டுப்படுத்தி ஆரம்பத்தில் 600000 பாலஸ்தீனியர்களை அந்தப் பகுதிக்குள் "நகர்த்தும்" - பெரும்பாலும் அல்-மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள். இறுதியில் காசாவின் முழு மக்களும் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் மேலும் இஸ்ரேல் "குடியேற்றத் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அது நடக்கும்" என்று என ஹரெட்ஸ் செய்தித்தாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறி அந்தப் பகுதியை "சுத்தப்படுத்த" வேண்டும் என்று பரிந்துரைத்ததிலிருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கட்டாய நாடுகடத்தலை உற்சாகமாக ஊக்குவித்து வருகின்றனர் பெரும்பாலும் இது ஒரு அமெரிக்க திட்டமாக முன்வைக்கின்றனர். காட்ஸின் திட்டம் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இஸ்ரேலின் முன்னணி மனித உரிமை வழக்கறிஞர்களில் ஒருவரான மைக்கேல் ஸ்ஃபார்ட்தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்கான ஒரு செயல்பாட்டுத் திட்டத்தை வகுத்தார்." என்று ஸ்ஃபார்ட் தெரிவித்துள்ளார்.. "இது காசா பகுதிக்கு வெளியே நாடுகடத்தப்படுவதற்கான தயாரிப்பில் தெற்கு முனைக்கு மக்கள்தொகை பரிமாற்றத்தைப் பற்றியதுஎன்று ஸ்ஃபார்ட் தெரிவித்துள்ளார் ஒருவரை அவர்களின் தாயகத்திலிருந்து விரட்டுவது ஒரு போர்க்குற்றமாகும் ஒரு போரின் பின்னணியில். அவர் திட்டமிட்டது போல அது மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டால் அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக மாறும்" என்று ஸ்ஃபார்ட் மேலும் தெரிவித்துள்ளார்." https://www.virakesari.lk/article/219461

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்

3 months ago
இலங்கை தமிழர்களுக்கு ரூ.39 கோடியில் 729 வீடுகள்: தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் 08 JUL, 2025 | 10:19 AM சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமானஇமேம்படுத்தப்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்படும். இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாகஇ 26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் பழுதடைந்த 7469 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 2781 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகஇ பொது மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு திருப்பூர் - திருமூர்த்தி நகர் சேலம் தம்மம்பட்டி தருமபுரி - நாகாவதி அணை கேசர்குளி அணை விருதுநகர் - கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். https://www.virakesari.lk/article/219454

இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன்- கனடா பிரதமர்

3 months ago
Published By: RAJEEBAN 08 JUL, 2025 | 07:54 AM இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துகொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219444

பாகிஸ்தானில் பெருநகர வீதியில் திடீரென புகுந்த சிங்கம் தாக்கி தாய், 3 குழந்தைகள் காயம்

3 months ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி செய்திகள் 7 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில், ஒரு சிங்கம் கான்கிரீட் சுவரைத் தாண்டி ஒரு பெண்ணைத் துரத்தியதையும், அங்கிருந்தவர்கள் பயந்து, பாதுகாப்புக்காக ஓடியதையும் சிசிடிவி காட்சிகள் காட்டின. அந்த சிங்கம் தாக்கியதில், அந்தப் பெண்ணுக்கும், ஐந்து மற்றும் ஏழு வயதுடைய அவரது குழந்தைகளுக்கும், கைகளிலும் முகங்களிலும் காயம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் நன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, உரிமம் இல்லாமல் ஒரு காட்டு விலங்கை வைத்திருந்ததாகவும், அது தப்பிச் செல்ல வழிவகுத்ததாகவும், சிங்கத்தின் உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது அந்த சிங்கம் பிடிக்கப்பட்டு ஒரு வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் காட்டு விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. அங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள், பூமாக்கள் மற்றும் ஜாகுவார்களை பதிவு செய்து, ஒரு விலங்குக்கு 50,000 ரூபாய் (176டாலர்; 129யூரோ) என்ற கட்டணத்தை செலுத்திய பிறகு, அவற்றை வைத்திருப்பது சட்டப்பூர்வமாக கருதப்படுகிறது. ஆனால், அத்தகைய விலங்குகளை நகரத்தின் எல்லைக்கு வெளியே தான் வைத்திருக்க வேண்டும். பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள லாகூர், பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம். புதன்கிழமையன்று தனது குடும்பத்தின் மீது சிங்கம் நகத்தால் தாக்கியபோது, அதன் உரிமையாளர்கள் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அதைக் கட்டுப்படுத்த அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் சிங்கத்தால் தாக்கப்பட்ட குழந்தைகளின் தந்தை கூறினார். பிறகு அந்தப் பெண் எழுந்து, அங்கு இருந்தவர்களிடம் உதவி கேட்க ஓடுவதை வீடியோ காட்டுகிறது. அவர்களில் சிலர் பீதியில் ஓடுவதையும் காண முடிந்தது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, பஞ்சாபில் அதிகாரிகள் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வைத்திருப்பதைத் தடுக்க, கடுமையான நடவடிக்கையைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஐந்து பேரைக் கைது செய்து, 13 சிங்கங்களை மீட்டுள்ளனர். முன்னதாக, ஜனவரி மாதம், பாகிஸ்தானிய யூடியூப் பிரபலம் ஒருவர், சட்டவிரோதமாக சிங்கக் குட்டியை வைத்திருந்ததற்கான தண்டனையாக, விலங்குகளின் நலனைக் குறிக்கும் வீடியோக்களை உருவாக்க அவருக்கு உத்தரவிடப்பட்டது. யூடியூபில் 5.6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட ரஜப் பட்டுக்கு, திருமணப் பரிசாக அந்தக் குட்டி வழங்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g267p2n8xo

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் நம்பகத்தன்மை சீர்குலையும்; அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்துக்கு கஜேந்திரகுமார் எச்சரிக்கை

3 months ago
Published By: VISHNU 08 JUL, 2025 | 01:41 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்தை உண்மையாக்கும் வகையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செயற்படுவாராயின், அது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றுமுழுதாக சீர்குலைக்கும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புக்கள் ஊடாக பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும் எனவும் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அண்மைய இலங்கை விஜயமும், அவரது அவதானிப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை விஜயம் அரசாங்கத்துக்கு சாதகமாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் என்ற பதவியையும், அக்கட்டமைப்பையும் கேள்விக்குரியதாக மாற்றியிருப்பதாக சுட்டிக்காட்டினார். 'எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 60 ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்பதாக நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாரகள் இணைந்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பிவைத்திருந்தனர். அதற்கு முன்பதாக வருகைதரும் பட்சத்தில் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்படவிருக்கும் அறிக்கையின் காத்திரத்ன்மையை வலுவிழக்கச்செய்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 'இருப்பினும் அக்கரிசனைகளுக்கு மத்தியில், அவற்றை மீறியே உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நாட்டுக்கு வருகைதந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு உயர்ஸ்தானிகர் செயற்படாவிடின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீதான நம்பகத்தன்மை முற்றுமுழுதாக இழக்கப்படும்' எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219438

மாற்றான் தாய் மனநிலையுடன் தமிழர்களை கையாள்கிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்; அரசின் படுகொலைகளை அரசே விசாரிப்பது ஏற்புடையதல்ல - தமிழரசுக்கட்சி

3 months ago
Published By: VISHNU 07 JUL, 2025 | 09:42 PM (நா.தனுஜா) உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புக்கள் ஊடாக பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும் எனவும் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அண்மைய இலங்கை விஜயமும், அவரது அவதானிப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து கருத்துரைத்த சிறிதரன், இலங்கை இராணுவத்தினரை சர்வதேச அரங்கில் நிறுத்தமாட்டோம் எனவும், உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்கிறார் என விசனம் வெளியிட்டார். அதேவேளை நாட்டின் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், சர்வதேசத்தின் மத்தியில் நாட்டைக் காப்பாற்றுவதற்காகவும் விஜித்த ஹேரத் அவ்வாறு பேசுவதாகக் குறிப்பிட்ட சிறிதரன், இருப்பினும் மீறல்களாலும் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்கள் அவரது கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டினார். அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் உள்ளகப்பொறிமுறை ஊடாக எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரமுடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர்தான் தமது தேவை என்னவென்பதைக் கூறவேண்டும் எனக் குறிப்பிட்ட சிறிதரன், இலங்கை அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமே விசாரணைகளை முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219435

காரைநகர் பிரதேச சபையின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்கிய இந்திய தூதரகம்!

3 months ago
08 JUL, 2025 | 08:54 AM யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் காரைநகர் பிரதேச சபையினருக்குமிடையே நேற்று திங்கட்கிழமை (07) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கி காரைநகருக்கு வழங்குதல், பொன்னாலை பாலத்திற்கு 3மைல் நீளத்திற்கு 80 லட்ச ரூபா செலவில் சோலர் லைட் பொருத்துதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 175 மில்லியன் செலவில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கல் போன்ற கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/219447

நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்

3 months ago
முன்னாள் ருமேனிய பிரதமர் தெரிவித்த கருத்து ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியா இணைந்ததால் ஏற்பட்ட வருமானம் பற்றி குறிப்பிட்டிருந்தார். 18 ஆண்டுகால ருமேனிய ஐரோப்பிய ஒன்றிய இணைவில் 33 பில்லியன் யுரோவினை ஐரோப்பிய ஒன்றியத்திற்காக செலவிட்டுள்ளது, ஆனால் 101 பில்லியன் பெறுமதியான முதலீடுகளை பெற்றுள்ளது அதில் 3 குறிப்பிட்ட துறைகளில் கணிசமான அளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு இருந்துள்ளது. 1.நெடுஞ்சாலை 2.நீர் முகாமைத்துவம் 3.100000 நிறுவனங்களுக்கான முதலீடுகள் 68 பில்லியன் வருமானமாக கிடைத்துள்ளதாக கூறுகிறார். இது எவ்வகையான பொருளாதார மாற்றத்தினை ருமேனியாவிற்கு ஏற்படுத்தியது? சோவியத் ஒன்றிய உடைவின் பின்னர் அந்த பொருளாதார கொள்கையிலிருந்து விடுபட்டு இரஸ்சியா, ருமேனியா, போலந்து போன்ற நாடுகள் தாராளவாத பொருளாதார நிலைக்கு மாறியது (இரஸ்சியா முக்கிய வளங்களை தொடர்ந்து அரச கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த்தது). 1991, 1992 மிக பெரிய பொருளாதார வீழ்ச்சியினை இந்த நாடுகள் சந்தித்தன அதற்கு காரணம் மிக வேகமாக மத்திய திட்டமிடல் பொருளாதார முறைமையில் இருந்து தடாலடியாக சந்தை பொருளாதாரத்திற்கு மாறியமை, இந்த இரண்டு வருட காலத்தில் 20% பொருளாதார சுருக்கத்தினை ருமேனியா சந்தித்தது. அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனையும் வரை கிட்டத்தட்ட 45% பொருளாதார வளர்ச்சி கண்டது (13 ஆண்டில்) ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தபின் 2007 - 2022 வரை 48% பொருளாதார வளர்ச்சியினை (15 ஆண்டுகளில் பெற்றுள்ளது). அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியினை பொறுத்தவரை பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என கூறலாம். ஆனால் அடிப்படையில் ருமேனிய மக்களின் பொருளாதார நிலை என்னவாகியிருந்தது இந்த இரு வேறுபட்ட காலத்தில்? குறிப்பாக ருமேனிய விவசாயிகள் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகள் விவசாயம் பண்ணை தொழில் இருந்து விரட்டி அடித்து அந்த இடத்திற்கு வெளிநாட்டு பெருநிறுவனங்கள் வந்தன. ஒரு நாட்டின் தேசிய சொத்துக்களின் மீதான ஆதிக்கம் பிறநாட்டு நிறுவனங்களுக்கே இருந்த்து, நிறுவனங்கள் ஒரு அமைப்பாக செயற்பட்டு எவ்வாறு ஒரு ஏகபோக சந்தையினை உருவாக்குகிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் அவுஸ்ரேலியாவில் அதிகளவில் சூரிய மின் சக்தி பெருமளவில் பாவிக்கப்படுகிறது. இந்த போக்கு ஒரு புதிய பரிணாமத்திற்கு செல்ல தொடங்கியுள்ளது மக்கள் சூரிய மின் சக்தியுடன் மின் சேமிப்பு கலனையும் பாவிப்பதால் மின்சாரம் வழங்கும் நிறுவனங்களின் வியாபாரத்தில் ஏற்படப்போகும் சரிவினை தவிர்ப்பதற்காக ஒரு புதிய நடை முறையினை அறிமுகப்படுத்தவுள்ளார்கள் அதனை சூரிய வரி என கூறுகிறார்கள், சூரிய மின், மின் சேம்ப்பு கலத்தில் சேமிக்கப்பட்ட எஞ்சியவை மின் கம்பிகளினூடாக மின்சார வழங்குனருக்கு செல்லும் அதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளார்கள். இரஸ்சியா தனது வளங்களை தொடர்ந்து தன்னகத்தே அரச உடமையாக வைத்திருப்பதுதான் தற்போது நிலவும் பிரச்சினைக்கு அச்சாணி. ஒரு காலத்தில் உலகமயமாக்கப்பட்ட சந்தை பொருளாதாரத்தினை முதன்மை படுத்தின நாடுகள் சுயசார்பு பொருளாதாரம், வழங்கல் பாதை பாதுகாபு மற்றும் உள்நாட்டு வர்த்தக நலன் போன்றவைகளை முதன்மை படுத்துவதற்கான காரணம். இன்றைய யதார்த்தம் பலதுருவ (Block countries) உலக ஒழுங்கே.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months ago
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்.com
Checked
Mon, 10/13/2025 - 18:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed