3 months ago
தமிழ் மக்களின் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, சம்பந்தனின் இறுதிக்காலத்தில் தேர்தலுக்கான கட்சியாகச் சுருங்கிவிட்டது வேதனை. தற்போது எவருடன் சேர்ந்தாவது ஆட்சியமைத்தால் சரியென்கிற நிலைக்கு இக்கட்சியினர் இறங்கியிருப்பது சம்பந்தரின் காலத்தின்பின்னர் இக்கட்சி மேலும் மேலும் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்பதையே காட்டுகிறது.
3 months ago
சம்பந்தர் அவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய தமிழரசுக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களின் காலத்திலேயே அவர்களுடன் சேர்ந்து பயணித்தவர். இந்தியாவுடனான அக்கட்சியின் செல்வாக்கிற்கு ஒருகாலத்தில் தாமும் காரணமாக இருந்தவர். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழினச் சுத்திகரிப்பின்போது மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். ஆனால், அவரது வீரியமும், தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஓர்மமும் 2009 இற்குப் பின்னர் இல்லாது போயிற்று. வெற்று வாக்குறுதிகள், பசப்பலான நம்பிக்கைகள் என்பவற்றை அவ்வப்போது மக்களுக்குக் கொடுப்பது, தென்னிலங்கைக் கட்சிகளுடன் சமரசமான போக்கு, தென்னிலங்கைக் கட்சிகளுக்கான விட்டுக் கொடுப்புக்கள், போர்க்குற்றவாளிக்கான ஆதரவு, தமிழ் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்யாது இந்திய இலங்கை அரசுகளிடம் இரைஞ்சியபடி அரசியல் செய்தமை என்று அவர் தனது இறுதிக் காலங்களில் செய்தவை அவரைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது. எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்காக அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்தவர் என்றும் நினைக்கவில்லை.
3 months ago
2023 இல் ருமேனியா 5 பில்லியன் பெறுமதியான காய்கறிகளை ஐரோபிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது,நெடுஞ்சாலைகளின் நோக்க்கம் அடிப்படையில் வர்த்தகநலனடிபடையானது, மற்றும் நிறுவனங்களின் முதலீடு இவை போன்றகாரணிகளில் ஆர்வம் காட்டும் நிலை பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகள் கணக்கிலெடுக்கப்படும் அதே நேரம் சிறிய விவசாயிகள் அவர்கள் தொழிலில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். ருமேனியாவின் தாராளமய பொருளாதார கொள்கை காலத்தினை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன், இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனைந்த பின்னரான காலகட்டத்தில் உள்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் எனவே குறிப்பிட்டுள்ளேன், அடிப்படையில் நாட்டின் வளஙகல் பிறநாட்டு பெரும் நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்பதை குறிப்பிட்டு தற்போதய உலகில் எதற்காக போர் நிகழ்கிறது என்பதனை சூசகமாக குறிப்பிடவே அந்த உதாரணம். இரண்டாம் உலக யுத்ததின் பின்னரான இந்த சிக்கல் நிலைக்கு மேற்குதான் காரணம் (மேற்கின் ஆட்சியினை தமது தேவைக்கு ப்யன்படுத்தும் பெரும் நிதிநிறுவனங்கள்) இடம், காரணிகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் அடிப்படை பிரச்சினை அதிகாரங்களில் உள்ளவர்களின் தவறான முடிவு.
3 months ago
யாழில் கரையோரக் காவலில் புலிவீரர் 1987/10<
3 months ago
மிகவும் நடுநிலையாக எழுதும் நீங்களே இப்படி எழுதலாமா? இஸ்ரேல் பலஸ்த்தீனர்கள் மீது நடத்துவது அப்பட்டமான இனவழிப்பு என்பதை இங்கே மறுத்தவர்கள் யார்? பலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் போரில் அதனை ஆதரித்தவர்கள் யார்? ஆனால், ஈரானுடனான இஸ்ரேலின் போரில் இஸ்ரேலினை நான் உட்பட இன்னும் சிலர் இங்கே ஆதரித்தது உண்மைதான். ஏனென்றால், மத அடிப்படைவாதிகளின் கைகளில் நாசகார ஆயுதங்கள் போய்விடக்கூடாதென்பதற்காக. மதத்திற்காக எந்தளவு தூரத்திற்கும் ஈவு இரக்கமின்றி இவர்கள் செயற்படுவார்கள் என்பதற்கான சான்றுகளை உலக வரலாற்றில் இருந்து நாம் பார்த்தே வருகிறோம், அதனால்த்தான் அந்த நிலைப்பாட்டினை எடுக்கவேண்டி இருந்தது. ஆனால் நீங்கள் இவை இரண்டையும் ஒன்றாக முடிச்சுப்போட்டு விட்டிருக்கிறீர்களே? அது ஏன்? உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைத்து இருந்தேன், ஆனால் உங்களின் அண்மைய கருத்துக்கள் மேற்கிற்கு எதிராக இருக்கின்றன. அப்படியானால் நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஏனென்றால், ஈரானுடனான போரில் இஸ்ரேலை சிலர் ஆதரித்தமைக்காக அவர்களை பலஸ்த்தீனப் படுகொலையினை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் கருதும்போது, நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பைச் சரியென்று நினைப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
3 months ago
அவர்கள் CAA சட்டத்தை கொண்டு வரவில்லை. அப்போ வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் ஒரே விதி. இப்போ அப்படி அல்லவே?
3 months ago
திருஞானசம்பந்தர் கி பி 6ம் நூற்றாண்டு.
3 months ago
25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு தம்பதியினரில்... மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார். கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று. எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும் மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள். பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான். இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள் ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள். எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு 35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள். 35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள். ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்! காரணம்... எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார். இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான். படித்ததில் பகிர்ந்தது
3 months ago
யார் இந்த சம்பந்தன்?கிமு 3 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த திருஞானசம்பந்தன் தமிழுக்கு ஆற்றியதொண்டுக்காக அந்த சம்பந்தரை யாரும் மறக்கவில்லை.ஆனால் இவரைக்கட்சிக்கார்களே மறந்து விட்டார்கள். இதுதான் துரோகத்தின் பரிசு
3 months ago
3 months ago
ஏன் இதற்கு முதல் காங்கிரசும் முண்டு கொடுத்த திமுக வும் தானே ஆட்சியில் இருந்தார்கள்.
3 months ago
இந்தப் பதில் உங்கள் ஒற்றைப் பரிமாணப் பார்வையாகத் தான் தெரிகிறது. 33 பில்லியன் ரூமேனியா செலவழித்து ஒன்றியத்தில் இணைந்தால் உடனே 100 பில்லியன் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் கிடைத்து விடும் என்று ரூமேனியார்களே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், தங்கள் வாழ்க்கைத் தரம் ஐரோப்பிய தரத்திற்கு உயரும் என்று நம்பியதால் இணைவை ஆதரித்திருப்பார்கள். முதலில், அந்த 33 பில்லியன்களை ரூமேனிய செலவழிக்கக் காரணம், ரூமேனியாவில் (அருகில் இருக்கும் பல்கேரியாவிலும் கூட) இருக்கும் ஊழல், சட்ட ஆட்சி சீர்குலைவு என்பன தான் காரணமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மன்னர்கள் ஆட்சியில் இருந்த ரூமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய தேசங்கள், சோவியத் ரஷ்யாவினால் பலவந்தமாக இணைக்கப் பட்ட பின்னர் அங்கே செல்வம் கொழிக்கவில்லை. மாறாக தனியார் உடைமைகள் பறிக்கப் பட்டு, மக்களும் ஊக்கம், உழைப்புக் குறைந்து பொருளாதாரம் தேங்கிய நிலை தான் உருவானது. அந்தப் பின்னணியில் தான் ரூமேனியர்களும், பல்கேரியர்களும் ஊழல், இலவசங்களை எதிர்பார்க்கும் மனப் பாங்கு என்பவற்றைப் பெற்றுக் கொண்டார்கள். சீரழித்ததே ரஷ்யாவின் முன்னோடி தேசமான சோவியத் ஒன்றியமாக இருக்கும் போது, மேற்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சொல்வதற்கு காரணங்கள் இல்லை!
3 months ago
மிகவும் அரிதாக, எமக்கு ஆதரவாக எழும் ஒரு குரலை - அதுவும் இந்தியாவில் இருந்து எழும் குரலை, அவரின் முன்னாள் தடுமாற்றங்களை வைத்து நாமே வாயடைக்கிறோம் 🤦♂️. அதுவும் ஆதரவு எங்கே இருந்து வந்தாலும் அதை வரவேற்று, ஒருங்கிணைக்க வேண்டிய செம்மணி போன்ற ஒரு விடயத்தில். இதற்கு ஒரே காரணம் சத்யராஜ் மகள் இப்போ திமுக என்பதும், அவரின் தற்போதைய திமுக ஆதரவு நிலைப்பாடும் மட்டுமே. இங்கே பலருக்கு ஈழத்தமிழரின் உரிமையை வெல்வதை விட, திமுகவை, அது சார்பானவர்களை எதிர்த்து அதன் மூலம் இறந்து போன கருணாநிதியை வன்மம் தீர்ப்பது மட்டுமே பிரதானமானது. முன்பே சொல்லி உள்ளேன் - சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம், ஈழ தமிழர் கூர்ப்ப்பில் பிந்தங்கிய இனம். அந்த கருதுகோளுக்கு இது இன்னொரு உதாரணம்.
3 months ago
சேர்ந்து சிரிப்போம்
3 months ago
வசி தானும் நல்லவன், நியாயவான் என காட்ட வேண்டாமா🤣. அப்படியாயின் இப்படி இல்லாத வில்லன்களை கற்பனையில் உருவாக்கி கம்பு சுத்தித்தான் ஆகவேண்டும். #அற-காட்டாப்பு
3 months ago
சீனாவில் ஒரு பிரபலர் பொதுவெளியில் இருந்து குறிப்பிட்ட காலம் மாயமானார் எனில், ஆட்டம் ஓவர் என்பதே பொதுவான வரலாறு. ஜக் மா முதல் முன்னைநாள் பிரதமர் என பலரின் வரலாறு இதுவே. ஆனால் ஷி முன்னோர்களை விட அதிகாரத்தை தன் வசம் குவித்து வைத்துள்ளார். அவ்வளவு இலகுவில் விலக்க முடியாது. பார்ப்போம்.
3 months ago
இப்படி தடுப்பது மத்திய பாஜக அரசு. அதனோடு கூட்டணியில் இருக்கும் எடப்பாடி, அவரோடு சித்தப்பா முறை கொண்டாடும் சீமானை நோக்கி எழுப்ப பட வேண்டிய கேள்வி இது.
3 months ago
இதை விட லாராவுக்கு செருப்பை சாணியில் முக்கி ரெண்டு அறை விட்டு இருக்கலாம்…
3 months ago
செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள் - பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில்! Published By: VISHNU 08 JUL, 2025 | 06:34 PM யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இரண்டாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை (8) முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் 56 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 50 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியிலும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளானது சிக்கலான நிலையில் காணப்படுகிறது. மேலும் முறைப்பாட்டாளரான குறித்த மயானத்தின் நிர்வாகத்தில் உள்ள திரு.கிருபாகரன், சட்டத்தரணி க.சுகாஷ், சட்டத்தரணி ரணித்தா ஆகியோர் இன்றையதினம் புதைகுழியை பார்வையிட்டனர். குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு நீதி வேண்டி பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219509
3 months ago
"இரு குழந்தைகளையும் இழந்து விட்டேன்" - கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தந்தை வேதனை படக்குறிப்பு, ரயில் மோதியதில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. 8 ஜூலை 2025, 05:38 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த வேனை சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு ரயில் இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் பலியாகியுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக, விதிகளை மீறியதாக கேட் கீப்பரை ரயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளது. விபத்து நடந்தது எப்படி? ரயில்வே கூறுவது என்ன? என்ன நடந்தது? கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியில் இன்று (ஜூலை 8, 2025) காலை 7.40 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அந்த தண்டவாளத்தில் வந்த விழுப்புரம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. பள்ளி மாணவர்கள் எடுத்துச் சென்ற புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன. பள்ளி வேன் மீது மோதிய ரயில், அந்த வேனை 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. அதில் பயணித்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கவனக் குறைவாக இருந்த கேட் கீப்பர், ரயில்வே கேட்டை மூடாமல் விட்டதே விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படக்குறிப்பு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எஸ்.பி நேரில் ஆய்வு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விபத்து நடந்த பகுதி 'ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல' என்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று காலை சுமார் 7.40 மணியளவில், விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செம்மாங்குப்பம் பகுதியைக் கடக்கும்போது, ஒரு பள்ளி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல. பள்ளி வாகனத்தில், ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் இருந்துள்ளனர். சம்பவ இடத்தில் ஒரு மாணவர் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளும், ஓட்டுநரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் மருத்துவமனையில் ஒரு மாணவி உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார். அவர் அளித்த தகவலின்படி, நிவாஸ் (வயது 12) என்ற மாணவரும், சாருமதி (வயது 16) என்ற மாணவியும் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இரு குழந்தைகளையும் இழந்த பெற்றோர் கூறுவது என்ன? கடலூர் ரயில் விபத்தில் தமது இரு பிள்ளைகள் உயிரிழப்பிற்கு ரயில்வே நிர்வாகமே காரணம் என்று உயிரிழந்த சாருமதி, செழியனின் தந்தை செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். இந்த விபத்தில், சின்னகாட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி - கலைச்செல்வி தம்பதியின் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மகள் சாருமதி (16), பதினொன்றாம் வகுப்பு பயிலும் மகன் செழியன்(15) மற்றும் மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து நடந்தபோது, திராவிடமணி - கலைச்செல்வி தம்பதியின் மகள் சாருமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களது மகன் செழியன் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தனது பிள்ளைகளின் உயிரிழப்புக்கு ரயில்வே நிர்வாகமே முழு காரணம் என்றும், கேட் கீப்பரின் அஜாக்கிரதையால்தான் விபத்து நடந்ததாகவும், இந்த விபத்திற்குக் காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனது இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த திராவிட மணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். திராவிட மணியின் உறவினரான ஆறுமுகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயில்வே துறையின் அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பு ரயில்வே நிர்வாகம்தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளை இழந்துள்ளார்கள். நினைக்கும்போது மனம் கனக்கிறது. இனி வரும் காலங்களில் இப்படியொன்று நடக்கக்கூடாது. அதற்காகவேனும் அரசு நேர்மையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்," என்று கூறினார். தெற்கு ரயில்வே கூறியது என்ன? இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக்கு சீக்கிரமாகச் செல்ல வேண்டும் என்று வேன் ஓட்டுநர் வற்புறுத்தியதால், கேட் கீப்பர் கேட்டைத் திறந்தார். ரயில்வே ரயில் இயக்கங்களின் பாதுகாப்பு விதிகளின்படி அவர் கேட்டை திறந்திருக்கக் கூடாது. கேட் கீப்பர் பாதுகாப்பு விதிகளை மீறியதால், அவர் இப்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது. ரயில்வே மருத்துவர்கள் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி கூறியது என்ன? படக்குறிப்பு, இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் நொறுங்கியது. ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், "ரயில் மோதி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதற்கு ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே காரணம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "பள்ளி வாகன ஓட்டுநர் வற்புறுத்தியதால்தான் கேட்டை ரயில்வே கேட் கீப்பர் திறந்துள்ளார்" என்ற தகவலையும் ரயில்வே துறை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவர் மற்றும் பள்ளி வேன் ஓட்டுநரின் வாக்குமூலங்களில், "ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது," என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்தத் துயர்மிகு வேளையில், அந்தக் குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் விரைவில் நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "இந்த நாட்டில் 68,584 கி.மீ தூரமுள்ள ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டி விட்டோம். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை," எனக் குற்றம் சாட்டியுள்ளார். முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. படக்குறிப்பு, விபத்து நடந்த பகுதி முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு இந்த விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார். "இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg691rp05eo
Checked
Mon, 10/13/2025 - 21:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed