3 months ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ். 4 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் சுவாசம் புத்துணர்வு இல்லாமல் துர்நாற்றத்துடன் இருப்பதாக கருதி, மற்றவர்களுடன் நெருங்கிச் செல்வதை தவிர்க்கிறீர்களா? கவலை வேண்டாம், இது சாதாரணமான ஒன்றுதான் என்பதுடன் அதற்கு தீர்வுகளும் இருக்கின்றன. பற்களைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிகளிலும், நாக்கின் பின்பகுதியிலும் தங்கிவிடும் பாக்டீரியாக்களுக்கு எதிரான முடிவில்லாத போராட்டம் போன்றது. இந்த பாக்டீரியாக்களை அகற்றாவிட்டால், அவை அங்கு பெருகி, கடுமையான ஈறு நோய்களை ஏற்படுத்தலாம். ஆனால், இதைத் தடுக்க வழிகள் உள்ளன. வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன? உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ், இது ஈறு விலகல் என்றும் அழைக்கப்படுகிறது. "வயது வந்தவர்களில் பாதி பேர் ஏதோ ஒரு வகையில் ஈறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்," என இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் பல் மறுசீரமைப்பு மருத்துவத்தின் இணை பேராசிரியரான மருத்துவர் பிரவீன் ஷர்மா, பிபிசியின் வாட்ஸ் அப் டாக்ஸ்? என்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். "துர்நாற்றத்தை, வாய் குழியிலிருந்து வரும் துர்நாற்றமாக நீங்கள் கருதலாம்," என்று அவர் வாயை குறிப்பிட்டு கூறுகிறார். "இது 90% வாய் துர்நாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம்." மீதமுள்ள 10% வாய் துர்நாற்றத்திற்கு வேறு காரணங்கள் உள்ளன. "கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் இருந்தால், ஒரு குறிப்பிட்ட வகையான மூச்சு இருக்கும்," என்கிறார் டாக்டர் ஷர்மா. "வயிற்றுப் பிரச்னைகள், இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் போன்ற பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு ஒரு வகையான புளிப்பான சுவாசம் இருக்கும். எனவே, உடல் முழுவதும் ஏற்படும் நோய்கள் வாய்க்குழியில் வெளிப்படும். இதைப் பற்றி செய்யக்கூடியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல் துலக்கும் போது வலிக்கும் ஈறுகளை துலக்குவதை இயல்பாகவே தவிர்ப்பது நோயாளிகள் செய்யும் ஒரு காரியம். பிரச்னையின் வேரை அடையுங்கள் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே தேங்கும் பாக்டீரியாவை நீங்கள் சுத்தப்படுத்தாவிட்டால், அது நுண்ணிய புண்களை ஏற்படுத்தி அதற்கு பின் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இது ஜின்ஜைவைடிஸ், ஈறு நோயின் ஆரம்ப நிலை, ஆனால் இது சரிசெய்யக் கூடியது என்பது நற்செய்தி. "ஜின்ஜைவைடிஸ் என்பது ஈறுகளில் ஏற்படும் வீக்கம், உங்கள் ஈறுகள் சிவப்பாக வீங்கி, மற்றும் பல் துலக்கும் போது ரத்தம் வடிவதையும் வைத்து நீங்கள் கவனிக்கலாம்," என்கிறார் மருத்துவர் ஷர்மா. "இது மேலும் மோசமடைந்து பீரியோடோன்டைட்டிஸ் ஆக மாறும்." சிவப்பு, வீக்கம் அல்லது பல் துலக்கும் போது ரத்தம் வடிதல் ஆகியவை ஏற்படுகிறதா என் உங்கள் ஈறுகளைப் பரிசோதியுங்கள், ஆனால் நடவடிக்கை எடுக்க அவகாசம் இருக்கிறது என்பதால் அதிகம் கவலைப்பட வேண்டாம். "பல் துலக்கும் போது வலிக்கும் ஈறுகளை துலக்குவதை இயல்பாகவே தவிர்ப்பது நோயாளிகள் செய்யும் ஒரு காரியம். ஏனெனில் 'ஓ, நான் ஏதோ தவறு செய்கிறேன், அதனால்தான் ரத்தம் வடிகிறது, என அவர்கள் நினைக்கிறார்கள் என்கிறார் மருத்துவர் ஷர்மா. "இது கிட்டத்தட்ட தலைகீழாக உள்ளது - ரத்தம் வரும் ஈறுகளை ஒரு அறிகுறியாகக் கருதி, 'ஓ, நான் முன்பு சரியாக துலக்கவில்லை, இனி கொஞ்சம் நன்றாக துலக்க வேண்டும்,' என்று நினைக்க வேண்டும்." என்றார். படக்குறிப்பு, ஆரோக்கியமான பல்லில் ஈறுநோய் எவ்வாறு வளர்கிறது என்பதைக் காட்டும் கிராபிக்ஸ் கவனம் செலுத்தி பல் துலக்குங்கள் சரியாக பல் துலக்குவதற்கு நீங்கள் நேரம் ஒதுக்கவேண்டும் என்கிறார் மருத்துவர் ஷர்மா. "உங்கள் பற்களை துலக்கும் போதோ அல்லது பற்களை சுத்தப்படுத்தும் போதோ, நீங்கள் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கக் கூடாது," என்கிறார் அவர். நீங்கள் கண்ணாடி முன் நின்று முறையாக கவனம் செலுத்துவது சிறந்தது. வலது கை பழக்கமுள்ள பலர் தங்களை அறியாமலே தங்களது இடதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர், இடது கை பழக்கமுள்ளவர்கள் தங்களது வலதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர். இது குறைவான கவனம் செலுத்தப்படும் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. நீங்கள் எந்த கையை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உணர்ந்து இரண்டு புறமும் கவனமாக ஒரே அளவு பல்துலக்குங்கள். பல் துலக்கும் நுட்பத்தை நன்கு தெரிந்துகொள்ளுங்கள் முதலில் பற்களுக்கிடையில் தூய்மைப்படுத்த தொடங்கலாம் என பரிந்துரைக்கிறார் மருத்துவர் ஷர்மா. "பிளேக் (பற்களில் ஏற்படும் படிவு) அகற்றுவதற்கும், ஈறு ஆரோக்கியத்திற்கும் உதவுவதற்கு, பற்களுக்கு இடையில் தூய்மைப்படுத்தும் பிரஷ்களை (இன்டர்டெண்டல் பிரஷ்) பயன்படுத்துவது சிறந்தது," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு பல்லுக்கும் வெளிப்புறம், கடிக்கும் பகுதி மற்றும் உட்புறம் என மூன்று பரப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்டர்டெண்டல் பிரஷை பயன்படுத்திய பின்னர் உங்கள் வாயில் பிரஷை நகர்த்தும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு பல்லுக்கும் வெளிப்புறம், கடிக்கும் பகுதி மற்றும் உட்புறம் என மூன்று பரப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை அனைத்துமே கவனமாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். பல் துலக்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச நேரம் இரண்டு நிமிடங்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். பலரும் பிரஷை பல்லுக்கு 90 டிகிரி கோணத்தில் பிடித்து முன்னும் பின்னும் அழுத்துவதன் மூலம் பல் துலக்குகிறார்கள், ஆனால் இந்த முறை ஈறு பின்னடைவை உண்டாக்கலாம். பிரஷ்ஷை பல்லுக்கு 45 டிகிரி கோணத்தில் பிடித்து மென்மையாக துலக்குங்கள். கீழ் பற்களின் ஈறு வரிசையை நோக்கி பிரஷின் நார்களை வைத்து மேற்பற்களின் ஈறு வரிசையை நோக்கி துலக்குங்கள். இது ஈறுவரிசையின் அடியில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். சரியான நேரத்தில் பல் துலக்குங்கள் உணவுக்குப் பின் பல் துலக்குவது சரியானது என நம்மில் பலருக்கு கற்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது அப்படியல்ல. "காலை உணவுக்கு முன் பற்களை துலக்குவது சிறந்தது," என்கிறார் மருத்துவர் ஷர்மா. "அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்ட பிறகு பற்களைத் துலக்குவது பற்களின் கனிம பாகமான எனாமல் மற்றும் டெண்டினை மென்மையாக்கும் தன்மை கொண்டது என்பதால் அதை நீங்கள் செய்யக்கூடாது." உணவில் உள்ள அமிலம் உங்கள் பற்களின் மேல் பாதுகாப்பாக உள்ள எனாமல் மற்றும் அதற்கு கீழ் உள்ள டெண்டினை மென்மையடைய வைக்கிறது. எனவே உணவு உட்கொண்ட உடனே பற்களை துலக்குவது உங்களது எனாமலை பாதிப்படைய வைக்கலாம். "நீங்கள் காலை உணவு உட்கொண்ட பிறகு பல் துலக்குவதை விரும்பினால், உங்கள் காலை உணவுக்கும் பல் துலக்குவதற்கும் இடையில் சிறிது நேர இடைவேளை விடவேண்டும்." என்கிறார் மருத்துவர் ஷர்மா. நீங்கள் உங்கள் வாயைக் கொப்பளித்த பின்னர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை இரண்டு நிமிடங்கள் துலக்குவது சிறந்ததென்றாலும், சிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை பல் துலக்குவது போதுமானதாக இருக்கும். நீங்கள் தூங்கும்போது எச்சில் சுரப்பது குறைகிறது, இது இரவு நேரத்தில் பாக்டீரியாக்கள் உங்கள் பற்களை அதிக சேதப்படுத்த அனுமதிக்கிறது. எனவே நீங்கள் உங்கள் பற்களை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் முழுமையாக சுத்தப்படுத்தப் போகிறீர்கள் என்றால் அதற்கு இரவு நேரமே சிறந்தது. அடிக்கடி டீ, காபி குடிப்பது உள்பட இந்த 7 பழக்கங்கள் உங்கள் பற்களை பாதிக்கலாம்? ஈறுகளை பராமரிக்காவிட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும் நோய்கள் கூட ஏற்படலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள் திருப்பத்தூர்: ஒரே கிளினிக்கில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளைத்தொற்றுக்கு பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் தெரியவந்த உண்மை பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள் சரியான உபகரணங்களைத் தேர்வு செய்யுங்கள் நடுத்தர விறைப்புள்ள நார்களைக் கொண்ட பிரஷைப் பயன்படுத்துங்கள். பற்பசைகள் விலை உயர்ந்தவையாக இருக்க வேண்டியதில்லை. "அதில் ஃபுளோரைட் இருக்கும்வரை எனக்கு மகிழ்ச்சியே," என்கிறார் மருத்துவர் ஷர்மா. இந்த கனிமம் பல்லின் எனாமலை வலுப்படுத்தி பல் சொத்தையாவதற்கு கூடுதல் எதிர்ப்பை தருகிறது. பல் சொத்தையாவதை தடுக்கும் வகையில் பல் துலக்கிய பின்னர், பற்பசையையும், ஃபுளோரைடையும் துப்புங்கள், ஆனால் வாய் கொப்பளிக்காதீர்கள். ஈறு நோயின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால், மவுத்வாஷ் உபயோகிப்பதும் பயனுள்ளது, ஏனெனில் இது ப்ளேக் மற்றும் பாக்டீரியா உருவாவதைக் குறைக்க உதவுகிறது. ஆனால், இது பற்பசையில் உள்ள ஃபுளோரைடை நீக்கிவிடக் கூடும் என்பதால் பல் துலக்கிய பிறகு இதைப் பயன்படுத்த வேண்டாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிக அளவிலான சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் பல்சொத்தை ஏற்படுத்தலா. தீவிர ஈறு நோயை கண்டுகொள்ளுங்கள் ஈறு விலகல் (பீரியோடோன்டிடிஸ்) அதிகரித்தால், பற்களுக்கு இடையே இடைவெளிகள் உருவாகத் தொடங்குவதை நீங்கள் பார்க்கலாம், மேலும் பற்களை தாங்கி நிற்கும் எலும்பு அரிக்கப்படும்போது, பற்கள் தளர்ந்து போகலாம். இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால், பற்கள் உதிரும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம். நீங்கள் நீடித்த துர்நாற்றத்தையும் அனுபவிக்க நேரிடலாம். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகவும். இறுதியாக, உங்களது சுவாசத்தைப் புத்துணர்ச்சியுள்ளதாக்க சில குறிப்புகள்: உங்கள் வாய் காய்ந்துபோய் இருந்தால் பாக்டீரியா வளரக்கூடும் என்பதால் நிறைய தண்ணீர் குடியுங்கள். நாக்கு சுத்தப்படுத்தும் கருவியைக் கொண்டு உங்கள் நாக்கை சுத்தப்படுத்துங்கள். இது வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய உணவுத் துகள்கள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களை அகற்றுகிறது. உங்கள் சுவாசம் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கிறது என்பது சரியாக தெரியாவிட்டால் அதை ஒரு நண்பரையோ, குடும்ப உறுப்பினரையோ பரிசோதிக்கவிடுங்கள். ஆனால் யாரிடம் கேட்கப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்! 29 ஏப்ரல் 2025 தேதியிட்ட பிபிசி-யின் What's Up Docs? பாட்காஸ்ட் எபிசோடை தழுவி எழுதப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wp9x58p5yo
3 months ago
யாழ். கடுகதி புகையிரதசேவை கல்கிசையில் இருந்து ஆரம்பமாகாமை குறித்து அமைச்சர் பிமல் வருத்தம் - தயாரெனின் மாத்திரம் பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் 09 JUL, 2025 | 09:26 AM (நா.தனுஜா) யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகாததன் காரணமாகவும், அதுகுறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படாததன் விளைவாகவும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை குறித்து வருத்தமடைவதாகத் தெரிவித்துள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உரிய ஆயத்தங்களின் பின்னர் புகையிரதம் கல்கிசையிலிருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி மக்களுக்கு அறிவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை (இன்டர்சிட்டி) செவ்வாய்க்கிழமை (8) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கல்கிசையிலிருந்து ஆரம்பமாகவிருந்த அதிவேக புகையிரதசேவை முன்னறிவிப்பின்றி அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் வகையில் மீள்திருத்தம் செய்யப்பட்டது. அதன் விளைவாக அசௌகரியத்துக்கு உள்ளான பயணி ஒருவர், அவரது பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார், யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு, அதிகாலை 5.25 மணியளவில் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை வந்தடையும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அது முன்னறிவிப்பு எதுவுமின்றி இரத்துச்செய்யப்பட்டது. வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் காத்திருந்த பயணிகள் வினவியதன் பின்னரே, யாழ் கடுகதி புகையிரதசேவை அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் எனப் பதிலளிக்கப்பட்டது. இதுகுறித்து முன்கூட்டியே ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படாததன் காரணமாக பயணிகள் பலர் அதிகாலையில் மிகச்சொற்ப நேரத்துக்குள் வெள்ளவத்தையில் இருந்து கோட்டை புகையிரத நிலையத்துக்குச் செல்வதற்கு வாகனங்களின்றி மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளாகினர். இச்சம்பவம் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கும், குடும்பமாகப் பயணிப்பதற்கு தயாராக வந்திருந்தவர்களுக்கும் அநாவசியமான மனவழுத்தத்தையும், குழப்பத்தையும் தோற்றுவித்தது. அதுமாத்திரமன்றி கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட கடுகதி புகையிரசேவைக்கான டிக்கெட் கட்டணமாக 3,600 ரூபா அறவிடப்படுகின்ற போதிலும், அப்புகையிரதம் இருக்கைகள் உடைந்த நிலையில் சீராகப் பராமரிக்கப்படாமலேயே இருந்தன. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விசேட கவனம் செலுத்தவேண்டும் எனப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அப்பயணியின் எக்ஸ் தளப்பதிவின்கீழ் பதிவின்கீழ் பதிலளித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 'இதுகுறித்து நான் புகையிரதத்திணைக்களத்திடம் கேட்டறிந்தேன் அவர்களால் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை இன்றைய தினம் கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகவில்லை. எனவே அதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும், புகையிரதம் கல்கிசையில் இருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி பொதுமக்களுக்கு அறிவிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். அதுமாத்திரமன்றி இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக்கோரி அறிவிப்பொன்றை வெளியிடுமாறும் அவர்களிடம் வலியுறுத்தினேன். இவ்விடயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அமைச்சின் சார்பில் வருத்தமடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219533
3 months ago
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும். இதுக்காகவா தொடர்ந்து கதிரைகளை சூடாக்குகிறார்கள்?!
3 months ago
Published By: VISHNU 09 JUL, 2025 | 01:53 AM வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர். அதனை தொடர்ந்து காலை 09 மணிக்கு தேரில் வெளிவீதியுலா வந்து காலை 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடையும். மாலை 04 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும். நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி , காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி , 7.30 மணிக்கு தீர்த்தோற்சவத்திற்கு அம்பாள் புறப்பட்டு செல்வார். அதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள் , பேருந்து சேவைகள் இடம்பெற்று வருவதுடன் , சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படையினர் , சாரணர்கள் , செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/219528
3 months ago
பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான பகுதியென பிரகடனம்! Published By: VISHNU 09 JUL, 2025 | 01:50 AM செம்மணி மனிதப் புதை குழி அகழ்வின் இரணடாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 50 முழுமையாக அகழ் எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (8) செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான பகுதி என தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதுவாவினால் அடையாளமிடப்பட்ட பகுதி அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான இரண்டாவது பிரதேசமாக நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே முதலில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அகழ்வாராய்ச்சி பகுதியானது அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான முதலாவது பகுதியாகவும் அடையாளப்படுத்துப்பட்டுள்ளது. அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதியில் 3 மனித என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டிருக்கிறது. 09ஆம் திகதி புதன்கிழமையிலிருந்து இலக்கமிடல் பணிகள் ஆரம்பமாகும். மனித எலும்புகளுடன் சேர்ந்த துணிகள் மற்றும் சப்பாத்து போன்ற பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டு வைத்திருக்கப்பட்டுள்ளன. அவை இன்னமும் நிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படவில்லை. அது பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் மேலதிக தகவல்கள் நாளையதினம் வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219527
3 months ago
இவர்கள் எல்லோரையும்விட இன்று அதிகமாக அரசியல்வாதிகளாக வருவோருக்கு ஏற்படவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். உதாரணத்திற்கு தற்போதைய உலகநடப்பை ஆராய்ந்தால் அறியலாம்.🫣
3 months ago
நானும் தான் மேசையில் குத்தியே ராஜதந்திரிகளை கிலிகொள்ள வைக்குமளவுக்கு இன்னொமொரு தமிழ் அரசியல்வாதி பிறக்கவில்லை என்பதால்
3 months ago
Published By: VISHNU 09 JUL, 2025 | 01:43 AM யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்கு சென்று அங்கிருந்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/219526
3 months ago
தமிழர்களின் தலைவர்களை அறிந்துள்ளேன். சிலரை நேரிலும் கண்டுள்ளேன், தலைவனையும் நேரில் கண்களால் காணும் பாக்கியத்தையும் பெற்றுள்ளேன். சம்பந்தரை ஊடகங்களில்தான் அறிந்தேன், அந்த அறிவு பச்சைப் பூச்சி மூக்கில்பட்டுத் தெறித்துபோன்ற உணர்வை ஏற்படுத்தியது, அதன் தாக்கம் குறைந்து மறந்துவரும் நேரத்தில் மீண்டும் இந்தப்பதிவு 👇 பூச்சியை மூக்கின் உள்ளேயே நுளைத்துவிட்டது.😩
3 months ago
09 JUL, 2025 | 09:51 AM யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219537
3 months ago
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 10:27 AM 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார். உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விட்டு காட்டுக்குள் சென்று வெவ்வேறு நபர்களுடன் கூடி பழகி நாளை கழித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே, 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவனை அவனின் சம்மதத்துடனும் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோதமானது. பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனையில் உள்ள சொரபொர வெவ எனும் குளம் பகுதியில் சுமார் 15 சிறுவர்கள் சுற்றித்திரிவது பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/219535
3 months ago
3 months ago
3 months ago
3 months ago
வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை! வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அவர், மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்களை (LCs) திறந்துள்ளது. இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நிதியை கையாள்வது இப்போது நிச்சயமற்றதாகவே உள்ளது. மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமிட்டபடி இறக்குமதிக்கு கிடைக்குமா அல்லது புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த விரைவில் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவோம் என்று நம்புகிறோம். நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், சந்தை தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து உள்ளூர் வாகன விலைகள் தவிர்க்க முடியாமல் மீண்டும் உயரும். தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக குறைந்தது 9,000 வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அத்துடன், வாகன அசெம்பிளி ஆலைகளுக்கு வரி சலுகைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் முடிவையும் விமர்சித்த அவர், அது அர்த்தமுள்ள பொருளாதார நன்மைகளை வழங்கத் தவறிவிட்டது என்றும் கூறினார். https://athavannews.com/2025/1438545
3 months ago
பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்! சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுடன் ஒத்துழைப்பதாகவும் பெய்ஜிங் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று (07) கூறினார். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் போது இஸ்லாமாபாத்திற்கு அதன் பங்கு மற்றும் உதவி குறித்த நேரடி கேள்விக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை. ஒரு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய அண்டை நாடுகள், பாரம்பரிய நட்பை கொண்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் அந்த விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரையும் சீனா குறிவைக்கவில்லை என்றார். இந்திய இராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், பல்வேறு ஆயுத அமைப்புகளை சோதிக்க மோதலை பிரதானமாக பயன்படுத்தி சீனா பாகிஸ்தானுக்கு தீவிர இராணுவ ஆதரவை வழங்கியதாக பரிந்துரைத்ததைத் தொடர்ந்து சீனாவின் மேற்படி பதில் வந்தது. https://athavannews.com/2025/1438489
3 months ago
இனி பாதணிகளைக் கழட்டத் தேவையில்லை! அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் சோதனைச் சாவடிகளில் தங்கள் பாதணிகளைக் கழற்ற வேண்டிய அவசியம் இனி ஏற்படாது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem)தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் புதிய கொள்கை அமலுக்கு வருவதாக நோயம் கூறினார். இது வரை காலமும் விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளின் போது பயணிகள் தங்கள் பாதணிகள், இடுப்புப் பட்டி உள்ளிட்ட பொருட்களை கழட்ட வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்நிலையிலேயே பயணிகளின் நலன் கருதி அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விமான நிலையத்தில் தனிநபர்களை தங்கள் காலணிகளுடன் சோதனையிடக்கூடிய நவீனமயப்படுத்தப்பட்ட திரையிடல் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது ‘தான் முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் நோயம் உறுதியளித்தார். https://athavannews.com/2025/1438549
3 months ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months ago
சத்தான பனங்கிழங்கு அல்வா
3 months ago
மருமகன் பாவங்கள் - பரிதாபங்கள்..
Checked
Mon, 10/13/2025 - 21:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed