3 months ago
'அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகள்': பிரிக்ஸ் நாடுகளை எச்சரித்த டிரம்ப் - இந்தியா சிந்திக்க வேண்டியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் நாடுகள் 'அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளில்' இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுரை தகவல் முகமது ஷாஹித் பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. ஆனால் அது இப்போது அதிகம் விவாதிக்கப்படுவதற்குக் காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். உலகின் வேகமாக வளர்ந்து வரும் 10 பொருளாதார சக்திகளின் அமைப்பான பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று. ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் எதிர்வினை வந்தது. 'பிரிக்ஸ்'-இன் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் இணைந்து செயல்படும் நாடுகளுக்கு அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு 'மினி வர்த்தக ஒப்பந்தம்' (Mini Trade deal) சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் அமெரிக்க அதிபர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார். ஜூலை 7, திங்கள்கிழமை (அமெரிக்க நேரப்படி) பல நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார். பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலின் அர்த்தம் என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது. அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தமும் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், பிரிக்ஸ் அமைப்பின் ஒரு நிறுவன உறுப்பினராக, இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில், 'பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாடும் கூடுதலாக 10 சதவிகித வரியை எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கொள்கையில் எந்த விலக்கும் இருக்காது' என்று பதிவிட்டுள்ளார். பிரிக்ஸ் ரியோ பிரகடனத்திற்குப் பிறகு டிரம்ப் இதைப் பதிவிட்டதாக நம்பப்படுகிறது. பிரிக்ஸ் 17வது உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'பன்முகத்தன்மை மற்றும் நிலையான நிர்வாகத்திற்கான உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' என்பதாகும். ரியோ பிரகடனம் 'உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'சர்வதேச ஸ்திரத்தன்மை' பற்றிப் பேசுகிறது. இதனுடன், ஒருதலைப்பட்ச வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகள் போன்ற பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. பிரகடனத்தின் இந்த விஷயத்தை குறிப்பிட்டே, டொனால்ட் டிரம்ப் வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தினார் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், பிரகடனத்தில் அமெரிக்காவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 'வர்த்தகத்தின் போக்கைச் சிதைத்து, உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிமுறைகளை மீறும் ஒருதலைப்பட்ச வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக' ரியோ பிரகடனம் கூறுகிறது. இது தவிர, ஒருதலைபட்சமான பொருளாதாரத் தடைகள் மற்றும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என பிரகடனம் கூறுகிறது. இந்தப் பிரகடனம், உலக வர்த்தக அமைப்பினுடைய விதிகளின்படி வர்த்தகத்தை ஆதரிக்கிறது மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்பைப் பற்றி வலியுறுத்துகிறது. டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலின் அர்த்தம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 'பிரிக்ஸ்' நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தது ஏன் என்ற முக்கியமான கேள்விக்கு வருவோம். இந்தக் கேள்விக்கு, டெல்லியை சேர்ந்த வர்த்தக ஆராய்ச்சிக் குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்-இன் (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா, "அமெரிக்காவிற்கு எதிராக எல்லாவற்றிலும் ஒரு சதி இருப்பதாக டிரம்ப் கருதுகிறார், மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்று கூறுகிறார். "அனைத்து நாடுகளும் தனது 'காலனிகள்' என்று டிரம்ப் நினைக்கிறார். அவர் தனது கொள்கைகளை ஒருதலைப்பட்சமாக செயல்படுத்த விரும்புகிறார்" என்கிறார் அவர். இதற்கிடையில், சர்வதேச விவகாரங்களில் நிபுணரான மஞ்சரி சிங், டிரம்பின் அச்சுறுத்தல் குறித்து பேசுகையில், "அமெரிக்கா உறுப்பினராக இல்லாத எந்தவொரு அமைப்பும், எஸ்சிஓ (SCO) அல்லது பிரிக்ஸ் போன்றவை, அமெரிக்க விரோத அமைப்புகள் என்றே டிரம்ப் கருதுகிறார்" என்று கூறினார். பிரிக்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினர் நாடுகளில் இந்தியாவும், உலகின் மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்றான ரஷ்யா மற்றும் சீனாவும் அடங்கும். ரஷ்யாவும் சீனாவும் தங்கள் நாணயங்களில் பரஸ்பர வர்த்தகம் செய்து வருகின்றன. 2022ஆம் ஆண்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கு என ஒரு புதிய சர்வதேச ரிசர்வ் நாணயத்தை ரஷ்யா முன்மொழிந்தது. "டாலருக்கு இணையான வங்கி முறையைப் பற்றி பிரிக்ஸ் எப்போதும் பேசி வருகிறது. இந்தக் காரணத்திற்காக, டிரம்ப் பிரிக்ஸ் அமைப்பை அமெரிக்க விரோதியாகக் கருதுகிறார். இருப்பினும், இன்றுவரை இந்த வங்கி முறை குறித்து ஒருமித்த கருத்து இல்லை. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள். அவை வர்த்தகத்தைச் சார்ந்து உள்ளன, மேலும் வங்கி முறை பற்றிப் பேசுவது அவர்களுக்கு மிகவும் முக்கியம்" என்று மஞ்சரி சிங் கூறுகிறார். 'டாலருக்கு எதிரான ஒரு நாணய அமைப்பு' - இதுவே சர்ச்சைக்கு காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் அமைப்பு 2015ஆம் ஆண்டு புதிய மேம்பாட்டு வங்கியை நிறுவியது, சமீபத்திய உச்சிமாநாடு இந்த வங்கியின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடியது. டாலருக்கு பதிலாக வேறு ஏதேனும் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் யோசனைதான் டிரம்ப் எதிர்ப்பின் அடிப்படை என அஜய் ஸ்ரீவஸ்தவா கருதுகிறார். "பிரிக்ஸ் அமைப்புக்கு புவியியல் ரீதியாக எந்த தனித்துவமும் இல்லை. ஏனெனில் அது வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட நாடுகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்புக்கு அரசியல் சக்தி இல்லை, ஆனால் சீனா போன்ற ஒரு சக்திவாய்ந்த நாடும் அதில் இருப்பது, அதற்கு ஒரு தனி மதிப்பை அளிக்கிறது." "பிரிக்ஸ் சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் டிரம்ப் அதை அச்சுறுத்துகிறார், எனவே இதற்குக் காரணம் ரிசர்வ் நாணயத்தின் பிரச்னை. எந்த நாடும் அதன் நாணயத்தில் வணிகம் செய்வது பற்றிப் பேசும்போது, அமெரிக்கா இப்படித்தான் பேசுகிறது" என்று அவர் கூறுகிறார். அமெரிக்கா 2012ஆம் ஆண்டில், "பன்னாட்டு வங்கிகளுக்கு இடையிலான நிதிசார்ந்த தகவல் தொடர்புக்கான சங்கத்தில் இருந்து (SWIFT) இரானையும், 2022இல் ரஷ்யாவையும் விலக்கியது. இதன் பொருள், இந்த நாடுகள் இனி அதிகாரபூர்வ டாலர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. "உலகம் முழுவதும் டாலர் பரிமாற்ற ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது" என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "ரஷ்யா அல்லது இரானுடனான பகையால், அவர்கள் டாலரை பயன்படுத்த முடியாதபடி அமெரிக்கா ஒரு வழியை உருவாக்குகிறது. சீனா அல்லது ரஷ்யா தங்கள் நாணயத்தில் வர்த்தகம் செய்தால், அதற்கு டாலரை ஒரு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்திய தான் காரணமாக இருக்கும்" என்று கூறினார். ஒரு பொதுவான நாணயத்தை உருவாக்க முடியுமா? பிரிக்ஸ் அமைப்புக்கு என ஒரு பொதுவான நாணயம் இருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு பதிலாக ஐரோப்பா யூரோ நாணயத்தை உருவாக்கியது, ஆனால் அதற்கும் பல சிக்கல்கள் உள்ளன என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "பிரிக்ஸ் அமைப்பில் ஒரு பொதுவான நாணயம் உருவாக்கப்பட்டால், அதை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டியிருக்கும். இந்த அமைப்பு சீனாவை மையமாகக் கொண்டது, எனவே பல நாடுகள் பொதுவான நாணயத்தில் ஆர்வம் காட்டுவது அரிது" என்கிறார். மறுபுறம், "பொது நாணயம் அல்லது பிரிக்ஸ் நாணயத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது எளிதல்ல. ஏனெனில் அதில் பல சிக்கல்கள் உள்ளன, மேலும் அது டாலரை நேரடியாக எதிர்க்கிறது. ஒரு பொதுவான நாணயத்தில் பல பிரச்னைகள் உள்ளன. ஏனெனில் உங்களிடம் அது பெரிய அளவில் இருந்தால், நீங்கள் வர்த்தகம் செய்யும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்" என்று மஞ்சரி சிங் கூறுகிறார். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீனாவின் அதிபர்கள் கலந்து கொள்ளவில்லை. இதன் பின்னர், சீனாவும் ரஷ்யாவும் எஸ்சிஓ போன்ற அமைப்புகளில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டது. பிரிக்ஸ் இப்போது பலவீனமடைந்து வருகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் என்பது உலகின் வேகமாக வளர்ந்து வரும் 10 பொருளாதார நாடுகளின் அமைப்பாகும். பிரிக்ஸ் அமைப்பு பலவீனமடைந்து வருகிறதா என்ற கேள்விக்கு, பதிலளித்த அஜய் ஸ்ரீவஸ்தவா, "பிரிக்ஸ் ஒருபோதும் வலுவாக இருந்ததில்லை என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அதில் உறுப்பினராகவுள்ள அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தைக் கொண்டிருக்கவில்லை. புவியியல் ரீதியாககூட அவற்றுக்கு இடையே எந்த ஒற்றுமையும் இல்லை. சில ஆய்வாளர்கள் வழங்கிய யோசனையின் அடிப்படையில், இந்த அமைப்பு உருவானது" என்கிறார். "இருப்பினும், பிரிக்ஸ் நாடுகள் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது. ஏனென்றால் இன்று அவை பிரிக்ஸ் தொடர்பாகக் கொடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு பயந்தால், நாளை டிரம்ப் வேறு ஏதாவது ஒன்றைப் பற்றி மிரட்டலாம். அமெரிக்கா அதை எப்படிக் கையாளுகிறதோ, அதே வழியில் இந்த நாடுகளும் கையாள வேண்டும், ஏனெனில் அமெரிக்கா ஒன்றும் அதன் மீது குண்டுகளை வீசப் போவதில்லை. இரு நாடுகளும் சமமான லாபம் மற்றும் நஷ்டக் கொள்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். அதே நேரத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் இணை பேராசிரியரான அபராஜிதா காஷ்ய பிரிக்ஸ் பலவீனமடைகிறது என்ற கருத்தை மறுக்கிறார். "பிரிக்ஸ் பிளஸ், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக செல்வாக்கு மிக்க நாடுகளை உள்ளடக்கி இருப்பதால் பிரிக்ஸ் பலவீனமடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு" என்கிறார். இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங் மற்றும் புதின் கலந்து கொள்ளாதது குறித்துப் பேசிய அபராஜிதா, "இதுவொரு பெரிய பிரச்னை அல்ல. ஏனெனில் ஜின்பிங் தற்போது சீனாவின் உள்நாட்டுப் பொருளாதார சவால்களைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறார், அதே நேரத்தில் ரஷ்ய அதிபர் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனது வருகைகளை மட்டுப்படுத்தியுள்ளார்" என்கிறார். மறுபுறம், "சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் பல நாடுகள் சமீபத்தில் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்ததால், பிரிக்ஸ் அமைப்பை பலவீனமாகவோ அல்லது இந்தியா அதை ஆதரிப்பதாகவோ கருதக்கூடாது" என்று மஞ்சரி சிங் கூறுகிறார். "இந்த முறை நிகழ்ச்சி நிரல் நல்லாட்சி, செயற்கை நுண்ணறிவு போன்ற பிரச்னைகள் குறித்து இருந்தது. இதன் காரணமாகவே இந்த உச்சி மாநாடு பற்றி அதிக விவாதங்கள் எழவில்லை" என்கிறார். இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு 'மினி வர்த்தக ஒப்பந்தம்' கையெழுத்தாகியுள்ளதாக பல செய்திகள் கூறுகின்றன. டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபரான பிறகு, உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரிகளை விதிப்பதாக அறிவித்திருந்தார். இந்திய பொருட்களுக்கு 26 சதவிகித வரியை விதிப்பதாக அவர் அறிவித்திருந்தார். இருப்பினும், ஜூலை 9 வரை இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆனால் அனைத்து நாடுகளுக்கும் 10 சதவிகித வரி விகிதம் என்ற கொள்கை தொடர்ந்தது. ஜூலை 9 என்கிற வரம்பு விரைவில் காலாவதியாகப் போகிறது. அதற்கு முன் அமெரிக்கா பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும். திங்கள் கிழமை முதல் அனைத்து நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை அறிவிப்பதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் அறிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா இடையே ஒரு மினி வர்த்தக ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரிக்ஸ் நாடுகள் மீது வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு, அது இந்தியாவையும் பாதிக்குமா? இந்தக் கேள்விக்கு, இந்தியா உள்படப் பல பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "இந்தியா தற்போது 10 சதவிகித வரியை ஏற்றுக்கொண்டுள்ளது, ஆனால் அடுத்து விதிக்கப்படுவதாகக் கூறப்படும் 26 சதவிகித வரி குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. விவசாயம் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க இந்தியா தயாராக இல்லை" என்கிறார். "அமெரிக்கா இன்று என்ன நினைக்கிறதோ அது ஒருபோதும் இறுதி ஒப்பந்தமாக இருக்காது. ஏனென்றால் அது இன்று ஒரு விஷயத்தைக் சொல்கிறது, நாளை அது வேறொன்றைச் சொல்லும். உதாரணமாக, வியட்நாமுடனான அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கடந்த 20-25 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வந்தது, ஆனால் அது உடனடியாக முடிவுக்கு வந்தது" எனக் கூறுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா. "டிரம்ப், பிரிக்ஸ் அமைப்பு காரணமாக இந்தியா மீது வரிகளை விதித்தால், அதன் ஐடி, மருந்துத் துறை அல்லது ஜவுளி போன்ற தொழில்கள் பெரும் இழப்பைச் சந்திக்கும்" என்று அபராஜிதா காஷ்யப் கூறுகிறார். அமெரிக்காவின் அழுத்தம் பிரிக்ஸ் மற்றும் குளோபல் சௌத் போன்ற மன்றங்களில் மீண்டும் தீவிரமாக முதலீடு செய்ய இந்தியாவை தூண்டக்கூடும் என்று அவர் கூறுகிறார். "ஆனால், சீனா ஆதிக்கம் செலுத்தும் மன்றங்களை அதிகமாக சார்ந்திருக்கக் கூடாது என்ற சவாலையும் இந்தியா எதிர்கொள்ளும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgrx1lkdny5o
3 months ago
ஈழத்தின் வடு: செம்மணி மனிதப் புதைகுழி, 56 மனித எச்சங்கள் இதுவரை கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகள், ஒவ்வொரு நாளும் புதிய சோகங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன. இன்று (😎" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t83/1/16/1f60e.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> 13வது நாளாக தொடரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில், இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 50 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள் முன்னிலையில் இன்றும் அகழ்வு பணிகள் நடைபெற்றன. அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் இரண்டாவது இடத்தில் மூன்று புதிய மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மூன்று எலும்புக்கூடுகளும் நாளை மீட்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார். முதலாம் இலக்கமிடப்பட்டுள்ள அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தில், மனித உடைகள் மற்றும் சப்பாத்துகள் போன்ற தடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை இதுவரை அகழ்ந்தெடுக்கப்படவில்லை. இந்த தடயங்கள், புதைகுழியில் உள்ளவர்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிக்கொண்டுவர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் முறைப்பாடு செய்த கிருபாகரன், சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஊடகங்களிடம் பேசினார். தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். ஒருபுறம் அன்புக்குரியவர்களை இழந்தோரின் துயரம், மறுபுறம் உண்மையை வெளிக்கொணர முயற்சிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் என செம்மணி விவகாரம் இலங்கையின் நீதித்துறைக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கடந்த கால இருண்ட அத்தியாயங்களின் ஒரு சாட்சியாக எழுந்து நிற்கிறது. ஒவ்வொரு எலும்புக்கூடும் ஒரு கதையைச் சொல்லும் என நம்பப்படும் நிலையில், இந்தக் குழிக்குள் புதைந்துள்ள மர்மங்கள், நீதிக்கான தேடலை தீவிரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
3 months ago
08 JUL, 2025 | 03:19 PM சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை யாசகம் மற்றும் கடினமான தொழில்களில் ஈடுபடுத்துதல், துன்புறுத்துதல், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை பாதுகாப்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும். எனவே, சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/219488
3 months ago
Published By: DIGITAL DESK 2 08 JUL, 2025 | 02:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ், குகன் முருகானந்தன், உட்பட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேர வேளையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்த ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக, தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தை அடுத்து ஏழு குற்றச் செயல்கள் தொடர்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை ஜனாதிபதி அறிவித்தார் என்பதை அறிவீர்களா?. 2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இரண்டு அரசியல் செயற்பாட்டாளர்களின் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் இன்றளவிலான முன்னேற்றம் யாது? என்றும், இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல் நிலை முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற ஆயினும் இற்றைவரையில் தீர்க்கப்படாத ஏதேனுமொரு காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணைகள் இன்றளவில் நிறைவடைந்துள்ளதா? என்றும் மற்றும் மேற்படி காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் தாமதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலையீடுகள் காரணமாக அமைந்துள்ளனவா? என்றும் கேட்டார். இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, 2011 டிசம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற லலித் குமார்,குகன் முருகானந்தம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் 2011 டிசம்பர் 11ஆம் திகதி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் 17 சந்தர்ப்பங்களில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். எனினும் இறுதியாக 2014 ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிறுத்துவதற்கு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் இல்லாமையினால் பதில் பொலிஸ்மா அதிபரால் 2025 ஜூன் 3ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இது தொடர்பான தேவையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி குற்றவியல் விசாரணை மற்றும் நிதி விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து இந்த விசாரணைகள் தொடர்பில் சகல ஆவணங்களையும் முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த திணைக்களத்தால் மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவினால் தற்போது விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற நான்கு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினாலும், 6 சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது டன் இந்த காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார். https://www.virakesari.lk/article/219476
3 months ago
கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் வியென் முல்டர் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார். மிகவும் அரிய உலக சாதனையொன்றை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை முல்டர் நிராகரித்துள்ளார். கிரிக்கெட் உலகம் போற்றும் ஜாம்பவான்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பிரயன் லாரா நிலைநாட்டியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரயன் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முல்டர் ஆட்டமிழக்காது 367 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டார். இந்தப் போட்டியில் முல்டர் தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முல்டர் சாதனை முயற்சியை தவிர்த்தார் பிரயன் லாரா ஓர் ஜாம்பவான் எனவும் அவரது சாதனையை தாம் முறியடிப்பது பொருத்தமற்றது எனவும் லாராவின் சாதனை அப்படியே நீடிக்க வேண்டும் அதுவே முறை எனவும் முல்டர் தெரிவித்துள்ளார். அணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தாம் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் இந்தப் போட்டியில் முல்டர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்க அணியின் சார்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களை முல்டர் பெற்றுக்கொண்டுள்ளார். தனது நாட்டு வீரர் அல்லாத ஓர் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்கக் கூடாது அவரது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென முல்டர் சாதனை முயற்சியை கைவிட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. https://tamilwin.com/article/mulder-lara-keeping-that-record-1751937909
3 months ago
தமிழ் மக்கள் சுமக்கும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது! -கனடா பிரதமர் மார்க் கார்னி ”இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது” என கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா வாழ் தமிழர்களுக்கும் , கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கும் (Gary Anandasangaree) எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கனடாவில் வாழும் தமிழர்கள் எங்கள் நாட்டிற்கு அளித்து வரும் பங்களிப்பிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அவர்கள் தமது சொந்த நாட்டில் எதிர்நோக்கிய இன அழிப்பு சம்பவங்களால் அனுபவித்து வரும் வலியினை என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது. உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறித்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட நடைபெறும் சுயாதீனமான சர்வதேச நடவடிக்கைகளை கனடா அரசு தொடர்ந்து ஆதரித்து வருகின்றது. அந்தவகையில் அமைச்சர் ஆனந்தசங்கரி வழங்கும் பங்களிப்புகளை எங்கள் அரசு மிகவும் மதிக்கிறது. அமைச்சரவையில் அவர் வகிக்கும் பதவிக்கு எனது முழுமையான நம்பிக்கையும் உள்ளது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமைச்சராக பதவி வகிக்கின்ற அவரை பாராட்டுவதிலும் நான் பெருமை கொள்கிறேன். எங்கள் நாட்டில் வசிக்கும் எந்தவொரு நபரும் இனவெறுப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்படக் கூடாது. சமீப காலமாக அதிகரித்து வரும் இத்தகைய வெறுப்புணர்வுகளுக்கு எதிராக, கனடா அரசு ‘வெறுப்பை எதிர்க்கும் தேசியத் திட்டம்’ (Canada’s Action Plan on Combatting Hate) உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தி, பல்வேறு இலக்குகளை நோக்கி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எங்கள் மக்கள் கொண்டாடும் பல்வகைமையே கனடாவின் உண்மையான வலிமை. இவ்வாறான ஒற்றுமையைப் பராமரித்து, மேலும் ஒருமித்த கனடாவை உருவாக்க எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உங்கள் கடிதத்திற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டு, எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438518
3 months ago
அனுர அரசு, மெல்ல தனது சுயரூபத்தை காட்ட வெளிக்கிடுகின்றது.
3 months ago
ஆமா... ஆமா... அமெரிக்க சுமந்திரன்தான் ட்றம்பு. 😂 சுத்துமாத்திலை...இரண்டும் ஒன்றை ஒன்று வெண்டதுகள். 🤣
3 months ago
நம்ம சும்மர் மாதிரி என்கிறியள்...🤣
3 months ago
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வில் 04 எலும்புக்கூடுகள் அடையாளம்! யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்று 13வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 4 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 13வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இன்றைய தினமும் 4 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்ததோடு இதுவரை முழூமையாக 50 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1438530
3 months ago
Published By: VISHNU 08 JUL, 2025 | 09:30 PM செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அச்சுறுத்தல், குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திரு.கிருபாகரன் தெரிவித்துள்ளார். 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மர்ம வாகனம் செம்மணியை நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை. அந்த மர்ம வாகனமானது எனது வீட்டு அருகாமையிலும் வந்திருந்தது. வழக்காளியான என்னை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும். வழக்கு தொடர்பாக 1995 - 2000 வரையான காலப்பகுதியில் இங்கே கடுமையான செய்தி தணிக்கைகள் இருந்த நிலையில் நீதிமன்ற செயற்பாடுகளும் பொலிஸ் செயல்பாடுகளும் இல்லாது நிர்வாக ரீதியான செயல்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் வசம் இருந்ததால் மக்கள் தாமாக முன்வந்து எந்த சாட்சியங்களையும் பதியவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் நான் இந்த விடயத்தை இன்று கையில் எடுத்ததால் அரியாலை பகுதியில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள் தமது சாட்சியங்களை எனக்கு தந்து கொண்டிருக்கின்ற நிலையிலே இந்த சாட்சியங்களை அச்சுறுத்துகின்ற அல்லது இந்த சாட்சியங்கள் சாட்சி கூற வருவதை தடுப்பதாக இந்த செயல்பாடு காணப்படுகிறது. அதாவது 1998ஆம் ஆண்டு முதலாவது குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச வழங்கிய புதைகுழிகள் தொடர்பான அறிக்கையிலே, பதினைந்தாவது புதைக்குழியாக குறிப்பிடப்பட்ட ஏ-9 வீதி, பொன்னம்பலம் சந்திக்கு அருகாமையில் இருக்கின்ற இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கின்ற கிணற்றிலிருந்து அகழ்வு இடம் பெற்றது. அதற்குப் பின்னால் இப்போதும் இராணுவ முகாம் இருக்கின்றது. அந்த இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிக்குள் தான் அந்த மர்ம வாகனம் சென்றது. இதனை நான் அவதானித்தேன். நான் வசிக்கின்ற வீட்டுக்கான வீதியானது எனது வீட்டுடனேயே முடிவடைகின்றது. ஆகையால் வேறொரு வாகனம் அந்த ஒழுங்கைக்கு வருவதற்கான அவசியம் இல்லை. இரண்டு வாகனங்கள் இவ்வாறு வந்திருந்தது. இதனை நேரில் கண்ட ஒருவர் எனக்கு தெரிவித்திருக்கின்றார். ஆகவே எவ்வாறான அச்சுறுத்தல்கள், எவ்வாறான செயற்பாடுகள் நடந்தாலும் இந்த வழக்கில் நான் உறுதியாக இருக்கின்றேன். மக்களும் உறுதியாக தமது சாட்சியங்களை தருகின்றார்கள். இதன்மூலம் பல உண்மைகள் வெளிவருகின்றன. அதனை நாங்கள் நீதிமன்ற செயற்பாட்டுக்கு சமர்ப்பித்து தொடர்ந்து தமிழ் மக்களுக்கான நீதிக்கான அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/219522
3 months ago
எலான் மாஸ்க் நம்பக்கூடிய ஒருவரா? நேரத்திற்கு நேரம் ஒவ்வொரு போக்கில் செல்கின்றார்.
3 months ago
சாதரண மக்களின் வாழ்க்கையை விட நடிகர் நடிகைகளின் வாழ்க்கை மிகவும் துன்பமானது . எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் ஏமாந்து போவார்கள். சொத்து ஏமாற்றி பறிக்கப்படும் நடிகர்கள் குடி போதையில் தள்ளாடுவார்கள் வேறு கெடடவை எல்லாம் தொற்றிக் கொள்ளும். இறுதிக் காலம் மிக கஷ்ட்டப்பட்டு போவார்கள். எல்லாருக்கும் ஒரு சீசனுக்கு தான் வருமானம். புத்தியாக முதலிட தப்பிக்க கொள்ள லாம் காலத்தால் அழியாத இன்னிசைப்பாடலகளில். இதுவும் ஒன்று ! என்ன வரிகள், என்ன குரல் இனிமை. இப்படிப்பட்ட பாடல்களை கேட்டு விட்டு , இன்று எதையோ இழந்து நிற்பது போல் உணர்வு.
3 months ago
இதிலென்ன மர்மம் இருக்கிறது???
3 months ago
ஓபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் டிரம்ப் ஐயாவுக்கு ஏன் கொடுக்கமுடியாது? ஓபாமா சமாதானத்திற்காக எதனை சாதித்தார்? இப்போது அவரது துணைவியாரே அவரை வறுத்து எடுக்கின்றார்.
3 months ago
அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வார்கள். ரஷ்யாவில் பொதுவாக மாடியிலிருந்து தவறுதலாக யன்னலூடாக விழுந்து செத்துப் போவார்கள். இப்போது ரஷ்யர்களும் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள்..................
3 months ago
"பனையின் கீழ் இருந்து பால் குடித்தது போல் " கண்ணதாசன் போன்றவர்கள் எந்தப் பெண்களையும் நல்ல மனத்துடன் பாராட்டினாலும் கூட அது சரியாக சமூகத்தில் எடுபடாது கவிஞரே ..........! 😂
3 months ago
பணமும் பதவியும் பத்தும் செய்யும் பாதாளம் வரையும் பாயும் . ........ ! 😁
3 months ago
உதென்ன செத்தகிளிக்குப் புதுசே!
3 months ago
சண்டித்தனம் பண்ணி….. சமாதானத்துக்கான நோபல் பரிசு எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா வந்து நிற்குது. 😂 🤣
Checked
Mon, 10/13/2025 - 21:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed