1 week 2 days ago
எல்லாம் நமது தமிழ் அரசியல்வாதிகளின் நீண்டகால குறிக்கோள் அற்ற சிந்தனைகளாலும், அவர்களின் சுயநல அரசியல் நகர்வுகளாலும், தமது இனத்தின் நலன் கருதி ஒற்றுமையாக தமது குரலை சர்வதேசத்திற்கு ஆணித்தரமாக சொல்ல முன்வராமையாலும் ஏற்பட்ட விபரீதம் இது. இன்னும்… இந்தியா தீர்வு பெற்றுத் தரும் என்று, கிணத்துத் தவளை மாதிரி நம்பிக் கொண்டு இருக்கும் மர மண்டை அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு… தமிழ் இனத்தின் விடிவு என்பது எட்டாக்கனிதான். இத்துப்போன இவர்களை வைத்துக் கொண்டு இனி பிரயோசனம் இல்லை. ஈழத் தமிழ் இனம் மாற்றுவழிகளை யோசிக்க வேண்டும்.
1 week 2 days ago
அம்மன் சல்லிக்கு பயனில்லை. முற்றாக நீர்த்துவிட்டது மே 14, 2009 சிங்கள அரசாங்கத்திற்கு ஐநா பாராட்டு விழா வைத்தது: புலிகளை தூற்றியது. அன்றே நாம் தூக்கியெறியப்பட்டுவிட்டோம்!
1 week 2 days ago
அப்படி என்ன பெரிய தொழில் செய்து… இவ்வளவு பணத்தை, இந்த இருபது வயதில் இன்பநிதி சம்பாதித்தார் என அறிய ஆவலாக உள்ளது. அது தெரிந்தால்… நாமும் இந்தக் குளிருக்குள் வருடக் கணக்கில் நின்று, கஸ்ரப்படுவதிலும் பார்க்க ஊருக்குச் சென்று செட்டில் ஆகி, இன்பநிதியைப் போல்… இன்பமாக வாழலாம். 😁 வீட்டில்… தங்க முட்டை இடும் வாத்து வளர்க்கின்றார்களோ.. தெரியவில்லை. 😂
1 week 2 days ago
நம்மவருக்கு இலங்கையின் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இருந்தால் இரட்டை குடியுரிமை எடுப்பதில் பெரும் சிரமம் இருக்காது என கருதுகின்றேன். அது இல்லாத பட்சத்தில்…. ஒரு லட்சம் (100,000) அமெரிக்க டொலரை கட்டினால்தான் 5 வருட வதிவிட விசா கிடைக்கும். பத்து வருட வதிவிட விசாவிற்கு இரண்டு லட்சம் அமெரிக்க டொலர் கட்ட வேண்டுமாம். குறிப்பிட்ட பணத்திற்கு.. மட்டுப் படுத்தப் பட்ட வருடங்களிலேயே மேற்படி விசா வழங்கப் படுவதால் நம்மவர் ஆர்வம் காட்டுவார்களோ தெரியவில்லை.
1 week 2 days ago
கனடா பென்சனியர் பலர் ...6 மாதம் அங்கும் ..இங்குமாக திரியினம் ...இது பரவாயில்லை அனுரவுக்கு முழு ஆதரவும் கொடுக்கினம்....
1 week 2 days ago
இதை பார்த்துவிட்டு நம்மட ஆட்கள் இரட்டை குடியுரிமை பெறுவதில் ஈடுபாடு காட்டுவார்களோ?
1 week 2 days ago
குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல் அங்கீகாரம் பெற்றதா என சாதாரண மக்கள் அறிந்துகொள்வது எப்படி? பரிசு பொருட்களாக பாலூட்டும் போத்தல்களை குழந்தைகளுக்கு வழங்குகின்றார்கள். பரிசாக கிடைத்த அங்கீகாரம் பெறாத பாலூட்டும் போத்தலை சாதாரண மக்களால் கண்டுபிடிக்க முடியுமா?
1 week 2 days ago
இருவரும் விரும்பி இன்பமாக இருந்திருப்பார்கள் இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
1 week 2 days ago
இனிமேல் பாதாள உலக கோஸ்டியினர் கடத்தல் வேலை செய்ய தேவையில்லை... பகிரங்கமாக வியாபாரம் என்ற வகையில் பணம் சம்பாதிக்கலாம்.. யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்து விடும் என்ற நீண்ட நாள் பயம் இருக்கு சில அதிகாரிகளுக்கு..😀
1 week 2 days ago
பேரதானிய,மொரட்டுவ,கொழும்பு பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுது அடிவாங்கி சிவப்பு சிந்தனையுடன் ஒடிவந்த பலர் இப்ப கூவி கொண்டு திரியினம் ... உவையல் யார் அரியனையில் ஏறினாலும் தொப்பி மாற்றி போடுவினம் ...கேட்டா தீவாராம் தாங்கள் என புலம்பல் வேற...
1 week 2 days ago
நம்ம சிறீதரன் ஜெனிவாவில் முழங்கியதெல்லாம் பொய்யா கோபாலு
1 week 2 days ago
1 week 2 days ago
இவங்களே குண்டு வைப்பாங்களாம், அப்புறம் இவங்க மற்றவர்களை எடுக்கச் சொல்வாங்களாம். நான் முன்னர் சொன்னது போல் நடிகர் விஜய் என்பவர் பிஜேபினால் அனுப்பப்பட்ட பலியாடாகும். விரைவில் அவர் பிஜேபியுடன் சங்கமம் ஆவார். தற்போதைய நிலவரத்தின்படி திமுகவின் 2026 தேர்தல் வெற்றி என்பது வெள்ளியிடை மலையாகும்.
1 week 2 days ago
நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா....? நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில் மூலமாக சென்று அங்கிருந்து வேனில் பிரச்சாரத்திற்கு புறப்படுவார். எப்போதும் தனி விமானத்தில் பயணம் செய்வது என்பது சாதாரண பயணிகள் விமானத்திற்கு டிக்கெட் வாங்குவது போல் எளிமையான விஷயம் இல்லை. ஒரு விஐபி தனி விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் எனில், அவர் 3 நிலைகளை கிளியர் செய்ய வேண்டும். ஒன்று, வான்வெளி பயண விதிகளை பின்பற்ற வேண்டும், இரண்டாவது, பாதுகாப்பு புரோட்டோக்கால்களை பின்பற்ற வேண்டும், மூன்றாவது, ஒன்றிய அரசிடம் clearance வாங்க வேண்டும். இவை மூன்றும் கட்டாயம். இவை தவிர்த்து, தனியார் நிறுவனத்தின் விமானம் கிடைத்த உடன், எந்த நேரத்தில் புறப்படுகிறது? எந்த நேரத்தில் தரையிறங்கிறது? என்கிற flight plan-ஐ தயாரித்து 'Directorate General of Civil Aviation (DGCA)-க்கு கொடுத்து அப்ரூவல் வாங்க வேண்டும். அனுமதி கிடைத்த உடன் ஏர்போர்ட்டில் இந்த தனி விமானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். வேறொரு இடத்தில் இறங்குவதற்கும் முன்கூட்டிய இடம் ஒதுக்க வேண்டும். பின்னர், விமானம் புறப்படுவதற்கு முன் Airport Traffic Control (ATC) அதிகாரி எல்லா பாதுகாப்புகளையும், ஓடுதளங்களையும் சரி பார்த்துவிட்டு பின்னர் தான் அனுமதி கொடுப்பார். இதற்கு பின்னர் தான் அந்த தனி விமானம் take off ஆகும். இப்ப கரூர் சம்பவத்துக்கு வருவோம். சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட நடிகர் விஜய், இந்த அனுமதிகளை எல்லாம் முன்கூட்டியே பெற்றிருப்பார். ஆனால், கரூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு திருச்சிக்கு வந்து அங்கிருந்து சுமார் 11 மணியளவில் புறப்படுவோம். எனவே, அந்த நேரத்திற்கு take off அனுமதியை முன்கூட்டியே வாங்கியிருக்கலாம். (12.45 மணிக்கு வர வேண்டிய இவர்கள் எதற்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும்....? ஏனெனில், பிரச்சாரம் இரவு வரை நீடிக்கும் என முன்கூட்டியே இவர்களுக்கு தெரிந்துள்ளது) இப்படியான ஒரு சூழலில் கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் எல்லா திட்டமும் மாறின. 6 to 7 மணிக்குள் கூட்டத்தை விட்டு அவசரமாக புறப்பட்ட விஜய் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து தனி விமானம் எடுத்துக் கொண்டு உடனே சென்னை வந்து விட்டார். இவருக்கு எப்படி உடனடியாக take off மற்றும் landing ஆகியவற்றிக்கு விரைவாக அனுமதி கிடைத்தது...? கிட்டத்தட்ட 3 - 4 மணி நேரத்திற்கு முன்கூட்டியே திட்டமிடாமல் வந்த விஜய்க்கு ATC அதிகாரி எப்படி உடனடியாக அனுமதி கொடுத்தார்...? ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் தனி விமானங்களில் புறப்பட்டால், இவர்களுக்கு மட்டும் தான் விதிவிலக்குகள் மாற்றி அமைக்கப்பட்டு அவசர அனுமதியை தருவார்கள். ஆனால், அரசியல் அதிகாரம் இல்லாத விஜய்க்கு எப்படி உடனடி அனுமதி கிடைத்தது...? வான்வெளி பயணத்தில் மட்டும் அதிகாரிகள் அவசரப்பட மாட்டார்கள்/சமரசம் செய்ய மாட்டார்கள். மிகவும் கண்டிப்புடன் செயல்படுவார்கள். ஆனால், விஜய் விவகாரத்தில் அப்படி இல்லையே...!!! ஒருவேளை, விஜய் ஒரு நாள் முழுக்க whole day அனுமதி வாங்கியிருக்கலாம்...? சரி தான். இதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், முழு நாள் பயணத்திற்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்தாலும் கூட பயண திட்டத்திற்கு எதிராக ATC அதிகாரி எப்படி அனுமதி வழங்கினார். விஜய் திருச்சி வந்ததும் விமானத்தில் ஏறி 'டிரைவர்....ஓ சாரி...பைலட் வண்டியை எடுப்பா'னு சொன்னவுடனே அவர் பறந்து வந்து விட்டாரா...? விஜய்க்கு எப்படி விதிமுறைகள் relax செய்யப்பட்டது...? உடனடி take off அனுமதி கிடைத்தது...? நேற்றுக் கூட ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் முன் அறிவிப்பின்றி அவசரமாக டில்லி புறப்பட்டது உங்களுக்கு தெரியும். இவர்கள் என்ன அந்த தனி விமானத்தை தேர்தல் வரை மொத்தமாக பேசி வாங்கி விட்டார்களா என்ன? விமானப்போக்குவரத்து துறை ஒன்றிய அரசிடமே உள்ளது. ஒன்றிய பாஜக அரசை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய்க்கு அவர்கள் எப்படி இவ்வளவு சலுகைகளை இறங்கி வந்து செய்கிறார்கள்...? உங்களுக்கு உண்மை விளங்கும் என நம்புகிறேன்!!
1 week 2 days ago
இந்த அரட்டை அப்பை நான் தவிர்கிறேன் இது வாட்சப்பின் மார்கெட்டின் ஒரு பங்கையாவது பிடிக்க இறக்கப்பட்ட இந்தியாவின் அப். முடிந்தளவு made in India வை நான் தவிர்ப்பதுண்டு. இதில் தகவல் பாதுகாப்பு உத்தரவாதம் எப்படி இருக்கும் ? இந்திய தயாரிப்பு தரம் நாம் அறிந்ததே. நாளைக்கே உங்கள் தகவல் முழுவதும் dark web இல் கூவி, கூவி விற்கப்படும். இந்த வேம்பு மாமா ஒரு அக்மார்க சங்கி. தமிழர்கள் நஞ்சை கூட நஞ்சு என தமிழில் பெயர் வைத்தால் முண்டியட்டித்து வாங்கி குடிக்கும் கூட்டம் என்பதை அறிந்தோ என்னமோ அரட்டை என்ற பெயரோடு வருகின்றனர். தூக்கி எறிவோம் அரட்டையை.
1 week 2 days ago
இலங்கை மகளிர் இலங்கை மைதானனங்களில் இந்தியாவையே வென்று இருக்கினம் , அவுஸ்ரேலியாவை வெல்லா விடினும் அவுஸ்ரேலியாவுக்கு சிறு நெறுக்கடி கொடுப்பினம் இன்று நடக்க போகும் விளையாட்டை பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன்🙏🥰👍................................
1 week 2 days ago
நீங்கள் வெள்ளை பெயின்ற் வாளியும் கையுமாய் திரிஞ்சாலும் அப்பப்ப பல்டி அடிக்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...பிடிச்ச பிடியை விடாதேங்கோ 😂 பெயின்ற் வாளிய சொன்னனான்..😎
1 week 2 days ago
உந்த சின்ன வயசிலையே ஆள் பெரிய கில்லாடி போல கிடக்கு... படமெல்லாம் வாங்கி விக்க வெளிக்கிட்டாச்சு.... அடுத்தது நடிப்பு துறையிலையும் இறங்கிடுவார்....😂
1 week 2 days ago
ஆனால் அந்த மண் குதிரைக்கு பயந்து நீங்கள் பந்தயத்துக்கு வரவில்லை என்பது எனக்கும் தெரியும் என நான் சொல்ல மாட்டேன்🤣. பிகு பந்தையம் சீமான் 15% க்கு மேல் எடுக்க மாட்டார் என்பது என நினைக்கிறேன் (எத்தனை சதவீதம் என்பது மறந்து போய்விட்டது, ஆனால் இரெட்டை இலக்கம்). அதில் இப்போதும் மாற்றம் இல்லை. ஆனால் பந்தயத்தில் கலந்து கொள்ளும் கால எல்லை முடிந்து விட்டது. நானா…. வாத்தியார் அண்ணாவா… 🤣🤣🤣 ரோமபுரி கிளேடியேட்டர்ஸ் போல, யாழ்கள கிளேடியேட்டர்ஸ் இருவரில் யார் சிங்கத்து இரையாக போகிறார் என்பதே இப்போ கேள்வி🤣.
1 week 2 days ago
இது என்ன ஆவாகுழு மாதிரி இருக்கிறது.
Checked
Mon, 10/13/2025 - 06:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed