புதிய பதிவுகள்2

திருகோணமலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம் ; குற்றவாளிக்கு 32 வருட சிறை!

1 week 2 days ago
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினை நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வியாழக்கிழமை (2) அளித்தார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன. இதனடிப்படையில் அவ்வழக்கின் சந்தேக நபரான சேருநுவர - தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளும் வழக்கு விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டது. இவ்வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணியாக தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகியிருந்தார். இதேவேளை அந்த வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் மொத்தமாக 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்தவேண்டும், இல்லையேல் மேலும் இரு வருட சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் இத்தண்டனை ஏக காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார். திருகோணமலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம் ; குற்றவாளிக்கு 32 வருட சிறை! | Virakesari.lk

பிளாஸ்டிக், குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு

1 week 2 days ago
(எம்.மனோசித்ரா) இலங்கையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் (polymer-based) அடிப்படையிலான குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் அனைத்தும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தர நிர்ணயச் சான்றிதழை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், தேவையான எஸ்.எல்.எஸ். தரநிலைகளை பூர்த்தி செய்து, உத்தியோகபூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காண்பிக்காத பட்சத்தில், அத்தகைய போத்தல்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடிநீர் திரவங்களை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் போத்தல்களுக்கான இலங்கை தர நிர்ணய விவரக்குறிப்பு SLS 1616 மற்றும் பொலிமர் பொருட்களால் செய்யப்பட்ட பாலூட்டும் போத்தல்களுக்கான இலங்கை தர நிர்ணய விவரக்குறிப்பு SLS 1306 என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இந்த பணிப்பு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் முன்கூட்டிய ஆய்வையும் அங்கீகாரத்தையும் கோருகிறது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் இல. 9/2003 மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கவும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும் இலக்காகக் கொண்டுள்ளது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக், குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு | Virakesari.lk

புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகம் ; கடற்படை வீரருக்கு விளக்கமறியல்

1 week 2 days ago
( எம்.நியூட்டன்) புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு பணியாற்றிய கடற்படையைச் சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த மாதம் 25ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்நிலையில் இருவரையும் கைது செய்த புங்குடுதீவு கடற்படையின் உயர் அதிகாரிகள் கடற்படையின் வட பகுதி கட்டளை பணியகத்தின் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு விசாரணைகள் நடைபெற்றதோடு அங்கு காணப்படும் கடற்படையின் வைத்தியசாலையில் கடற்படை யுவதிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் இருவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டனர். மருத்துவ அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகம் நடைபெற்றமைக்கு உரிய சான்றுகள் காணப்பட்டதால் கடற்படை வீரரையும் கடற்படை யுவதியையும் விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் காங்கேசன்துறை பொலிஸார் ஒப்படைத்தனர். ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடற்படை வீரரை முற்படுத்திய வேளை, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகம் ; கடற்படை வீரருக்கு விளக்கமறியல் | Virakesari.lk

புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் - அமைச்சர் சந்திரசேகரர்

1 week 2 days ago
03 Oct, 2025 | 05:25 PM புதிய ஒரு சட்டம் அமலுக்கு வரும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் "செப்டம்பர் மாதம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித கேரத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஒக்டோபர் மாதம் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தங்களது அரசின் நிலைப்பாடு என்ன” என கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என நாங்கள் எமது கொள்கை பிரகடனத்தில் கூறி இருந்தோம். அதை நீக்கப்பட வேண்டிய ஒரு சட்டம். இந்த சட்டத்தினால் அனைவரையும் விட எமது கட்சி கடமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சட்டமூலத்தை மாற்ற வேண்டும் என்பதில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இன்று நாட்டில் தலை விரித்து ஆடுகின்ற இந்த போதை பிசாசு குறித்தும், போதைப்பொருள் வியாபாரிகள் குறித்தும் மக்களுக்கு நன்றாக தெரியும். அந்தப் போதைப் பொருளுக்கு பின்னால் இன்னொரு போதைப்பொருள் உலகம், பாதாள உலகம், பாதாள அரசியல் மறைந்திருக்கிறது. இவ்வாறான அரசியலை ஒடுக்குவதற்கு இவ்வாறான சட்டங்கள் தேவை. அதனால் புதிய சட்டம் ஒன்று வரும் வரைக்கும் ஒரு விடயத்தை நாங்கள் மீண்டும் சொல்லுகின்றோம், இந்தப் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி எந்த ஒரு அப்பாவி குடிமகன் மீதும் நாங்கள் கை வைக்கப் போவதில்லை. நாட்டு மக்களது சொத்துக்களை சூறையாடியவர்களுக்கு எதிராகவே இந்த சட்டம் பாய்கின்றதே தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது. சுமந்திரனே, கடந்த காலத்தில் ரணிலுக்கு பின்னால் ஓடுனீர்கள், அவர்களுக்காக வழக்காடினீர்கள் ஆனால் அந்த காலத்தில் இந்த சட்டத்தை நீக்குவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. நாங்கள் வந்து ஒரு வருடத்தில் நாட்டினை கட்டி எழுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்றார். புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் - அமைச்சர் சந்திரசேகரர் | Virakesari.lk

கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

1 week 2 days ago
(இராஜதுரை ஹஷான்) உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு பேர வாவியை பயன்படுத்தி நீர் விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டம் கொழும்பு சினமன் லேக் ஹோட்டல் முனையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று வருகைத் தந்த சிறிய ரக நீர் விமானத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்த, ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர ஆகியோர் வரவேற்றனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,கொழும்பு துறைமுக நகரத்தை அண்மித்த வகையில் உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதில் பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் கடந்த காலங்களில் காணப்பட்டன. சுமார் 12 ஆண்டுகால முயற்சியின் பயனாக பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கண்காணிப்புடன் இந்த உள்ளக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர,கொழும்பு பேர வாவியை அண்மித்து உள்ளக விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும். இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும்.சினமன் எயார் விமானம் பிரதானமாக கொழும்புக்கு வெளியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்கிறது. இருப்பினும் தற்போது கொழும்பு பேரா வாவியை அண்மித்து விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும்.இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும். கொழும்பு நகரில் பிரதான சுற்றுலா ஹோட்டல்கள் அமையப்பெற்றுள்ளது.இந்த புதிய திட்டத்தின் ஊடாக சுற்றுலாத்துறை மேம்படும். உள்ளக விமான சேவைக்கும் புதிய அனுபவமாக அமையும்.ஆகவே இந்த புதிய சேவையானால் நாட்டின் சுற்றுலாத்துறை கைத்தொழில் அபிவிருத்தியடையும் என்றார். இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் துய்யகொந்த, இந்த திட்டத்துக்குரிய பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து இந்த உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனுமதியளித்துள்ளோம். இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்கு பாதுகாப்பு சட்டங்களுக்கமைய அனுமதி வழங்குவோம் என்றார். கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம் | Virakesari.lk

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 2 days ago
அரசியல் எதிரியை விட கொள்கை எதிரி மேல் என்று நினைக்கும் வாய்ப்பு உள்ளது. சீமான் அனைத்து இழப்புகளையும்(சுப முத்துக்குமார்,கலயாணசுந்தரம் ,ராஜீவ் காந்தி ,காளியம்மாள்) தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.அதுதான் ஒரு உறுதியான தலைமைக்கு இருக்க வேண்டும்.

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

1 week 2 days ago
இந்த செய்தியின் மூலம் எது கொழும்பான்? செய்திகள் இணைக்கும் போது அது பிரதி பண்ணப்பட்ட செய்தி தளத்தின் அதற்குரிய பக்கத்தின் இணைப்பை (Link) வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 week 2 days ago
வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு 🟢 அரட்டை (Arattai) மெசஞ்சர் அப்டேட் 🟢 இது எங்கள் நிதானமான பொறியியல் முயற்சியின் இன்னொரு சிறந்த உதாரணம். நாங்கள் நேரம் எடுத்துக்கொண்டது காரணம்: • குறைந்த விலை போன்களில் கூட செயல்பட வேண்டும் • குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் (8 kbps வரை சோதித்து வருகிறோம்) நன்றாக இயங்க வேண்டும் • மிகச்சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும் • அதே நேரத்தில் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் ✅ ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து அப்டேட் செய்கிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் (features) இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும். அதோடு, அதிகமான பயனர்களை தாங்கும் சர்வர் அடிப்படை (infrastructure) வளர்ச்சியில் முதலீடு செய்து வருகிறோம். நான் தினசரி நேரடியாக எங்கள் எஞ்சினீயர்களுடன் இதைப் பற்றி கலந்துரையாடி வருகிறேன். 📢 இது முடிந்தவுடன், ஒரு பெரிய மார்க்கெட்டிங் பிரச்சாரம் (big marketing campaign) நடத்த இருக்கிறோம். அது உங்களுக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை. 🌍 எங்கள் அரட்டை மெசஞ்சர் உலகின் சிறந்த மெசேஜிங் அனுபவத்தை (best messaging experience) வழங்கும் என்ற எங்கள் உறுதி தொடர்கிறது. 👉 மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்! --Sridhar Vembu CEO ZOHO Download link:- https://chat.arattai.in/app/download

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 2 days ago
போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் பின‌லுக்கு வ‌ந்த‌ தென் ஆபிரிக்கா மக‌ளிர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் முத‌ல் விளையாட்டில் ப‌டு சுத‌ப்ப‌ல்...............................

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

1 week 2 days ago
இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு சரியான ட்றீட்மண்ட் தரப்படல் வேண்டும். இதற்கான நல்ல மருந்துகளை இஸ்ரேலிடமிருந்து இலங்கை வாங்கிக்கொள்ளவேண்டும்!

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 2 days ago
புஸ்ஸி (நல்லா வச்சான்யா பேரு😂) ஆனந்தை கைது செய்ய கூடுமாம். விஜை அரசியல் சரியான வழியில் செல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் 🤣. ஆனால் ஒன்று நீங்கள் சொல்வது போல் ரசிகர் ஏறிய மரம் முறிந்து விழுந்தோ, ரசிகர்கள் கலவரம் செய்தோ தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக எப் ஐ ஆர் கூட சொல்லவில்லை. காரணம் கட்டுக்கடங்காத கூட்டம். அதை வேண்டும் என்றோ அல்லது அசட்டையாகவோ பொலிஸ் கட்டுப்படுத்த தவறியது. இது சதிக்கோட்பாடு அல்ல. பிளேட்டால் கீறினார்கள் இதர கதைகள்தான் ஆதாரம் இல்லாதவை. ஆனால் ஒரு பெரும் கூட்டத்தில் ஒரு நூறு பேர் இறங்கி தள்ளுமுள்ளு பட்டாலே, கூட்டம் கல்லைகலைய போதுமானதாக இருக்கும் என்பதும் உண்மையே. திமுகவின் மாபியாதனமும் தெரியும் என்பதால் இதில் நிச்சயம் ஒரு open mind அணுகுமுறை தேவை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 2 days ago
தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் வ‌ந்த‌ கையோட‌ மைதான‌த்தை விட்டு போகின‌ம்.............பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் அடிச்ச‌ ஸ்கோர‌ தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அடிப்பின‌மோ தெரியாது😁...................................

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 2 days ago
மரத்தின் உச்சாணிக்கொம்பில் ஏறிக்குந்தியிருந்துகொண்டு இந்த உலகமே எனக்கு கீழே என்று ரீல்ஸ் போடும் காக்கா கூட்டத்திற்கு காவல் துறையால் பாதுகாப்புக்கொடுத்திருக்க முடியாது. இந்திய விமானப்படை வேண்டுமென்றால் முயற்சிசெய்து பார்த்திருக்கலாம். அணில்குஞ்சுகளின் ஒவ்வொரு சதிக்கோட்பாட்டிற்குமான counter காணொளிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் எப்படியான ஒரு சமூக குப்பைகள் என்பதும் இப்படியான கும்பலிடம் ஒரு ஆட்சியதிகாரம் சென்றால் அதன் நிலை எப்படியிருக்குமென்பதும் நடுநிலையான மக்களுக்கு விளங்க ஆரம்பித்திருக்கிறது. மிகவிரைவில் இவர்கள் காணாமல் போவதுடன் இவர்களது தலைவர் பெரிய அணில் இப்போது head down coalition எவருடனாவது போனாலொழிய இனி அவருக்கு அரசியலெதிர்காலம் இல்லை. இந்த கும்பல் மிகவிரைவில் சினிமாவில் தனது அடுத்த நாயகனை தேடிப்போய்விடும். உண்மையில் பாவம் பெரிய அணில் சினிமாவும் அரசியலும் இரண்டு எதிரெதிர் தளங்கள் என்பதை புரியாமல் காலை விட்டுவிட்டார். சினிமாவில் மக்களை அதிகமாக சந்திக்காமல் கற்பனையான கதாபாத்திரங்கள் மூலம் மாஸ் காட்டி மக்கள்மனதில் இடம் பிடிக்கும் கனவுத்தொழிற்சாலை அது. அங்கே மக்களை நேரே சந்திக்காமல் திரைப்படம் மூலம் சந்திக்க சந்திக்க கிரேஸ் ஏறும். அரசியல் அப்படியே நேரெதிர் தன்மை கொண்டது இங்கே மக்களை நேரடியாக சந்த்தித்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் அதே நேரம் நடிகனாக உருவாக்கிய வேற்றுப்பிம்பம் மக்களை சந்திக்க சந்திக்க கலைய ஆரம்பிக்கும் பாவம் விஜய் 4 வது சந்திப்பிலேயே காலி. இனி என்ன பாஜகவை கூப்பிட்டு சம பந்தியில் உட்காரவைக்க வேண்டியதுதான்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 2 days ago
ந‌ன்றி செம்பாட்ட‌ன் அண்ண‌🙏👍............... யாழில் இருக்கும் பெரிசுங்க‌ கூட‌ விளையாட்டு திரியில் ஜாலியா ப‌ம்ப‌ல் அடிக்க‌ எனக்கு மிக‌வும் பிடிக்கும்................அந்த‌க் கால‌த்தில் இருந்து ம‌க‌ளிர் கிரிக்கேட்டை பார்த்து வ‌ருகிறேன்................உட‌ல் நிலை ச‌ரி இல்லாட்டியும் இப்ப‌டியா திரிக்குள் வ‌ந்து சிரித்து எழுதுவ‌தால் என‌க்கு யோச‌னை மிக‌ மிக‌ குறைவு🙏...................... ந‌ன்றி அண்ணா🙏👍......................

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

1 week 2 days ago
மட்டக்களப்பு முஸ்லீம் பகுதியில் உள்ள பிரதே செயலகம் ஒன்றில் உள்ள தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வாணி விழா நிகழ்வு செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் புரையோடிப் போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் இன்னும் களையப்படவில்லை. இலங்கையில் எத்தனை அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அரச திணைக்களங்களை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் நீங்கியதாக தெரியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்களங்களில் இன்னும் இஸ்லாமிய மத அடைப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியே உள்ளது. அங்குள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களால் நாடு முழுவதும் நடைபெறும் வாணி விழா நிகழ்வைக் கூட செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.ஏறாவூர் நகர பிரதேச செயலகம், காத்தான்குடி நகர பிரதேச செயலகம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களின் தலைவர்கள் இன்றுவரை இஸ்லாமிய மத அடைப்படைவாதிகளுக்கு பயந்தே நிர்வாகம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்ததற்காக அது இஸ்லாமிய சரியா சட்டத்திற்கு எதிரானது என கூறி இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று அப்போதிருந்த பிரதேச செயலாளரை கடுமையாக அச்சுறுத்தியதோடு பிரதேச செயலக பகுதியில் குண்டுத் தாக்குதலையும் நடாத்தியிருந்தனர்.அன்றில் இருந்து இன்று வரை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சியிலாவது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்யலாம் என்ற எதிர்பார்ப்போடுபிரதேச செயலாளரிடம் அனுமதி கோரிய தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வழமை போல் இம்முறையும் அனுமதி கிடைக்கவில்லை. அரச திணைக்களங்கள் என்பது அரசின் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப செயற்படும் திணைக்களங்களாகும். இவ்வாறு இருக்கையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் போன்று இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு பயந்து இன்றும் முஸ்லீம் பகுதிகளில் உள்ள பல திணைகள தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர். அதற்கான ஒரு சிறந்த உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம். அனுர அரசு என்னதான் இலங்கையில் உள்ள அரச திணைக்களங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக கூறினாலும் கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்கள தலைவர்களுக்கு இன்றுவரை சில மதவாத அடைப்படைவாத குழுக்களின் அச்சுறுத்தலை மீறி செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது என்பதே உண்மை கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு! - ஜே.வி.பி நியூஸ்

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 week 2 days ago
என்னது? வருகிறார்களா? வந்து ஆராய்ந்து, பேட்டியும் கொடுத்து விட்டு போய் இரெண்டு நாள் ஆகிறது. வாட் ப்ரோ…இட்ஸ் வெரி ராங் ப்ரோ… உங்களின் கருத்தில் இருந்த பொருளுக்கான பதிலை ரசோ அண்ணா தந்துள்ளார். நாலு பேர் சீரியசாக பேசி கொண்டிருக்கும் நடுவீட்டில் யாராவது அதை தூக்கி கொண்டு வந்து போடுவார்களா, இல்லைத்தானே😂
Checked
Mon, 10/13/2025 - 06:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed