3 months 2 weeks ago
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் : செம்மணியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் Published By: DIGITAL DESK 2 23 JUN, 2025 | 04:58 PM தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். செம்மணியில் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உணர்வுபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளோம். தமிழ்மக்களின் வாழ்வில் நிண்டகால ஏற்படுத்தப்பட்ட பல அழிவுகளுக்கு நிநீகோரி இப்போராட்டம் நடாத்தப்படுகிறது. இது மக்களின் மனங்களில் அழியாத தாகமாக இருக்கிறது. இதுவரை காலமும் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதனை உலக மக்கள் அனைவரும் சேர்ந்து செயற்படுத்த முன்வர வேண்டும். உலக நாடுகள் எல்லாம் எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை அறிந்திருந்தாலும் அதைப்பற்றி எந்தவிதமான நீதியும் கிடைக்காமல் மக்கள் நிண்டகாலமாக அணையாத தாகத்தோடு அலைந்து கொட்டிருக்கிறார்கள். ஆகவே இவற்றுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு இந்த அணையா தீபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . குறிப்பாக நாங்கள் நிக்கின்ற செம்மணி பிரதேசத்திலே மனித புதை குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பல அப்பாவி மக்களது மனித எலும்புக்கூடுகள், எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் இந்த சூழலில் இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானதாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுகின்ற இந்த வேளையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தேடுகின்ற, கேள்விகேட்கின்ற இந்த நாட்களில் மனித புதை குழிகள் பயங்கரமான ஒரு பதிவுகளை, கதைகளை எங்களுக்கு செல்லிக் கொண்டிருக்கின்றன. ஆகவே இவற்றை நாங்கள் உதாசினம் செய்து கொண்டிருக்காது இந்த அரசாங்கமும் உலக நாடுகளும் இந்த சந்தர்பத்தில் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான நீதியை வழங்க வேண்டும். இனிமேலும் தாமதிக்க கூடாது, நீதியை பெறுவதற்கு தடையாக இருக்கின்ற எல்லாவிதமான தடைகளையும் நீக்கி நியாயமான முறையில் நீதிகிடைக்க வேண்டி இப்போராடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் உணர்வோடு பங்குபற்றி இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/218238
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
வெற்றி பெற்ற நந்தன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்👍...................என்னோட சேர்ந்து குப்பை கொட்டின செம்பாட்டனுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏🥰😁......................
3 months 2 weeks ago
அவர்களை கண்டு நேட்டோ நாடுகள் கலக்கத்தில் இருக்கினம் ஹா ஹா....................அடிபனிய போவது அவர்கள் கிடையாது , எவன் ஆரம்பிச்சானோ அவனே பேச்சு வார்த்தைக்கு அழைப்பான்..............................
3 months 2 weeks ago
முதல் மைச் சம நிலையில் முடிய வாய்பில்லை...............இந்தியா வீரர்கள் எல்லாரும் இன்றையான் நாள் விளையாட்டில் அவுட் ஆகி விடுவினம் , இங்லாந் இரண்டாவது இனிங்சில் சிலது வெல்லக் கூடும் தோல்வியும் அடையலாம் , இந்தியா வீரர்களின் பந்து வீச்சை பொருத்து ஜந்தாம் நாள் பிச் மாறுபடும் , அது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாய் அமையும்..................................
3 months 2 weeks ago
நண்பா எனக்கு ஒரு டவுட் இஸ்லாந்திடம் பல வாட்டி கேட்டு விட்டேன் யாழில் இதுக்கு முதல் என்ன பெயரில் எழுதினவர் என்று , இந்த பாவி மனுஷன் உண்மையை சொல்லுகிறார் இல்லை , புலிகள் பலமாய் இருந்த போது புலி வேசம் இப்போது நரி வேசம் இதை என்னால் உனர முடியுது எப்பவும் பயணிக்கும் பாதை நேர்மையா இருக்கனும் , அது இப்படியானவர்களிடம் இல்லையென வெளிப்படையாய் தெரியுது......................................
3 months 2 weeks ago
செத்த கிளிகள் பிரமிப்பை ஏற்படுத்கின்றன... 🤣
3 months 2 weeks ago
ஓம் அண்ண பல பூதங்கள் சேர்ந்து ஒருதனுக்கு அடிப்பது வீரமா அல்லது தனிய மோதி வெல்பவன் வீரனா உக்கிரேன் ரஸ்சியாவின் போரின் போது , ரஸ்சியா தான் பேரை முதல் தொடங்கினது , பிழை எல்லாம் ரஸ்சியா மீது , என யாழில் நீங்கள் தொட்டு பலர் உக்கிரேனுக்கு ஜிங்சாங் போட்டிங்கள் , இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் செலன்ஸ்கி அவமான பட்டதை உலக மக்கள் எளிதில் மறக்க மாட்டினம் 😁😛 ஈரான் மீது யார் முதல் போர் தொடுத்தது , உக்கிரேனுக்கு வந்தால் ரத்தம் ஈரானுக்கு வந்தால் தக்காளி சட்னியா....................போங்கோ நீங்களும் உங்கட நடு நிலையும்😁😛...............................
3 months 2 weeks ago
இந்த செய்திய நேற்று நான் தான் யாழில் முதல் இணைத்தேன் , வடகொரியா பற்றிய செய்தி பல தளங்களில் வந்த பின்பு அதையும் இணைத்தேன் , இணையவன் வந்து குறுக்கிட அவருக்கு பதில் அளித்து இருந்தேன் அதை உடன நீக்கி விட்டு தனது பதிவை அப்படியே விட்டு இருக்கிறார்....................இப்படியான ஒருபக்க சார்வாய் நிர்வாகம் நடந்து கொள்வதால் தான் யாழில் பலரும் பெரிதாக எழுதுவதில்லை...................... எனக்கும் இதுக்கை எழுத ஆர்வம் இல்லை , ஈரானுக்கு அநீதி இழைக்கப் படுது என தெரிந்த படியால் தான் முகம் தெரிந்த உறவுகளுடன் விவாதிச்சேன் மற்றம் படி இதுக்கை விவாதிக்க ஒன்னும் இல்லை............... X தளம் , யூடுப் முக நூல் , ரிக்ரோக் , இங்கு தான் உடனுக்கு உடன் செய்திகள் விவாதங்கள் மின்னல் வேகத்தில் நடக்கும்...............செய்திகளுக்கு முதல் இடம் X தளம் அங்கு தான் உடனுக்கு உடன் எல்லாம் வரும்.....................
3 months 2 weeks ago
srael-Iran| Destroy FighterJets| Attack| நிலைகுலைந்த Airports| சேதமான போர்விமானங்கள்|Sathiyamtv
3 months 2 weeks ago
தலைவரின் தகுதியைப்பற்றி கதைப்பதற்கு சிங்களத்தின் எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் நானாக்களுக்கு எந்தவித அருகதையும் இல்லை!
3 months 2 weeks ago
# செத்த கிளி
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
நானும் பார்த்த்தேன், பிரமிக்கின்றது அவரது நடவடிக்கைகள், என்னென்ன திட்டங்கள் நாட்டு மக்களுக்கு, wow நல்ல திறமையான ஆட்சியாளர், உலக வங்கி & மேற்கிடம் மண்டியிடாமல் பல நல்ல திட்டங்களை முன்னேடுத்து மக்கள் வாழ்வாதாராங்களை மேம்படுத்துகின்றார்
3 months 2 weeks ago
இவரின் வரலாறை முதல் படியுங்கோ படித்த பின் தெரியும் புட்டின் ஏன் இவரை அழைத்து வாழ்த்தினார் என.............................
3 months 2 weeks ago
அவங்கள் பந்தை கையில் வைத்து இருக்கும் போது பார்க்க சின்னதாக தெரிந்தது........................எனக்கு பேஸ்போல் விளையாட்டில் பெரிய ஆர்வம் இல்லை அமெரிக்காவில் அதிக மக்கள் இந்த விளையாட்டை அதிகம் விரும்பி பார்க்கினம் அமெரிக்கா விளையாட்டில் 140 போட்டிக்கு மேல் விளையாடும் விளையாட்டு என்றால் அது இந்த பேஸ்போல் தான்.................... மற்ற விளையாட்டுக்கள் 82 தரம் விளையாடனும் NBA , NHL , இப்படியான விளையாட்டுக்கள்................................
3 months 2 weeks ago
இது என்ன ? தமிழ்படம் தக்ஸ் லைவ் படத்தில் வருகின்ற ஒரு காட்சியோ
3 months 2 weeks ago
எல்லா இனத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கத் தான் செய்யினம் பிரிடிஷ் காரன் செய்யாத கொடுமைகளை ஊத்த வேலைகளை ஈரான் நாட்டவர்கள் செய்து இருக்கினமா ...................... நான் டென்மார்க்கில் அதிகம் பழகினது முஸ்லிம் நண்பர்களுடன் , அவங்கள் எப்ப பார்த்தாலும் சிரிக்க வைப்பாங்கள் , நான் பல வாட்டி யோசித்து இருக்கிறேன் எப்படி இவங்களால் இப்படி எல்லாம் சிரிக்க வைக்க முடியுது என சில தலைக் கனம் பிடித்தவர்களும் இருக்கினம் , நாங்கள் சிறுவயதில் இருந்து பாடசாலையில் படித்த காலம் தொட்டு இப்ப வரை நல்ல பழக்கம்.................அவங்களுக்கு முன்னாள் என்னில் யாராவது கை வைக்கனும் மூஞ்சைய உடைத்து விடுவாங்கள்..................... முன்னாள் ஈரான் நாட்டில் இராணுவத்தில் இருந்த நபர் பின்னைய காலங்களில் சீனா பெண்ண திருமணம் செய்து டென்மார்க்கில் வேலை கிடைச்சு அப்படியே இங்கையே இருக்க தொடங்கிட்டார்......................அறிவில் சிறந்த மனிதர் அவர் , ஒரு கெட்ட பழக்கமும் இல்லை , தொழில்நுட்பம் பெரிசா வளரதா 2000ம் ஆண்டில் அவர் பலதை இணையத்தில் கண்டு பிடித்தவர் , அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்🙏👍........................ இது தான் உலகம் ஒவ்வொரு மதத்திலும் இனத்திலும் நல்லவர்களும் இருக்கினம் கெட்டவர்களும் இருக்கினம் நல்லவர்களை நட்பில் வைத்து இருப்பது தான் எனது பழக்கம்👍....................................
3 months 2 weeks ago
இஸ்ரேல் தனிக்கை செய்யுது தங்கட நாட்டில் ஈரான் ஏவும் மிசேல்களை படம் பிடிக்க கூடாது , சேதாரங்களை வெளி நாட்டு ஊடகங்கள் படம் பிடிக்க முடியாது......................இந்த காணொளியில் கூட இரண்டு மிசேல்கள் கீழ விழுந்தது தெரியுது ஆனால் அதை காட்ட வில்லை................நேற்று காலை இஸ்ரேல் தலை நகரத்தில் ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலுக்கு பலத்த சேதம்......................................
Checked
Sat, 10/11/2025 - 20:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed