புதிய பதிவுகள்2

யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது

3 months 2 weeks ago
தலையங்கத்தால் வாசகர்களைக் கவர முனையும் பதிவுகள் மலிந்துவிட்டன. யானையின் இலத்தியில் கண்டெடுத்த விளாம்பழம்போல் சில பதிவுகள் ஏமாற்றமளிக்கிறது.🤔

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months 2 weeks ago
இந்த‌ வாக‌ன‌த்தை இப்ப‌ டென்மார்க்கில் போட்டி போட்டு வாங்க‌ தொட‌ங்கிட்டின‌ம்....................கால‌ப் போக்கில் பெட்ரோல் டீசல் தேவைப் ப‌டாது ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளுக்கு இந்தியா , பாக்கிஸ்தான் , இன்டொனெசியா , வ‌ங்கிளாதேஸ் போன்ர‌ நாடுக‌ளுக்கு பெட்ரோல் டீசல் அதிக‌ம் தேவைப் ப‌டும்......................இந்த‌ 4 நாடுக‌ளும் அதிக‌ ம‌க்க‌ள் தொகைய‌ கொண்ட‌ நாடுக‌ள்..........................ம‌ற்றும் அபிவிருத்தி அடையாத‌ நாடுக‌ள்......................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months 2 weeks ago
ஈரானில் தற்போது இணைய வசதி முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டது, ATM இல பணம் எடுக்கமுடியாது, காசு மட்டுமே பயன்படுத்த வேண்டியநிலை உள்ளதாக கூறுகிறார்கள், ஈரானிய அரச தொலைக்காட்சியினை தகர்த்தன் மூலம் தகவல் தொடர்புகலை முற்றாக துண்டித்துள்ளது இஸ்ரேல், ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய நடவடிக்கையாக இதனை பார்க்கிறேன். மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நெருக்கடியில் உள்ளதாக கூறுகிறார்கள். ஈராக், லிபியாவில் கூட இதனையே செய்தார்கள், அரச தரப்பிற்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியினை அதிகரிக்கும் முயற்சி இதுவாகும். போர் தொடங்கிய போது ஒரு அலையில் 60 விமானங்களை பயன்படுத்திய இஸ்ரேல் தற்போது ஒரு அலையில் 20 விமானங்களை பயன்படுத்துவதாக கூறுகிறார்கள், அவர்களால் தொடர்ச்சியாக 50 விமானங்களை பாவிக்க முடியாது (60/40)ஆனால் தொடர்ச்சியாக ஈரான் மேல் தொடர் அழுத்தம் செலுத்தவேண்டும் என்பதற்காக ( நீண்ட காலத்திற்கு) இந்த குறைவான விமானங்கள் பாவிக்கின்றது இஸ்ரேல். அதன் உள்ளார்ந்த அர்த்தம் தொடர்ச்சியாக குழப்ப நிலையினை ஈரான் மேல் பிரயோகிக்க இஸ்ரேல் விரும்புகிறது, இஸ்ரேலின் அணுநிலைகள் மீதான தாக்குதல் பெரிய அனர்த்தம் எதனையும் விளைவிக்கவில்லை ஆனால் ஒரு தொடர் தாக்குதலை ஈரான் மேல் நிகழ்த்த இஸ்ரேல் விரும்புவதாக கருதுகிறேன். அனுநிலை மீது தாக்கவேண்டுமாயின் இஸ்ரேல் இவ்வாறான கால அவகாசத்தினை வழங்குமா தொடர்ச்சியாக? ஆட்சி மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைக்கு திசை திருப்பும் உத்தியாக அணுநிலைகள் மீதான தாக்குதல் என வரையறை செய்ய முயல்கிறதாக நான் கருதுகிறேன். சிங்கத்தின் மீளெழுச்சி என்பதே இந்த தாக்குதலுக்கான குறியீட்டு பெயர், சிங்கம் காட்டு ராஜா, மீள மன்னர் பரம்பரையினை ஆட்சிக்கு கொண்டுவருவதெற்கே இந்த பெயராக இருக்குமோ?🤣

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months 2 weeks ago
நான் இந்த‌ திரியில் நேற்று எழுதின‌தை தான் பாரிசால‌ன் த‌ன‌து யூடுப்பிலும் போட்டு இருக்கிறார்......................இதுக்கை நேர‌ம் ஒதுக்கி நாங்க‌ள் எழுதினாலும் எங்க‌ட‌ விவாத‌ம் முக‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ளுட‌ன் முடிந்து விடுகிற‌து......................பாரிசால‌னின் காணொளிய‌ ல‌ச்ச‌ க‌ண‌க்கில் பார்க்கின‌ம்......................ஆம் மீண்டும் சொல்லுகிறேன் ஈரானுக்கு இழைக்க‌ப் ப‌ட்ட‌து அநீதி😉..............................

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

3 months 2 weeks ago
அணையா விளக்கு போராட்டம்- அணிதிரளுமாறு எஸ் ஸ்ரீதரன் அழைப்பு! செம்மணி பகுதியில் (23) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் அணிதிரளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில் முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும்,செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும் நாடக அளிக்கையும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் போராட்டத்தின் இறுதி நாளன்று ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்டர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://akkinikkunchu.com/?p=329904

வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும்

3 months 2 weeks ago
வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் Published By: VISHNU 23 JUN, 2025 | 02:37 AM வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் ஞாயிற்றுக்கிழமை (22) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் அமெரிக்கமிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது வடகிழக்கில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்து உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்ட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது காணாமல்ஆக்கப்பட்டவர்களின் கண்ணீர்கதைகளை சுமந்துவந்த எழுநா அமைப்பினால் தயாரிக்கப்பட்ட நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் மு.முரளிதரன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான எஸ்.நிலாந்தன்,பிரதேசசபை உறுப்பினர்களான வசந்தன்,சுவேந்திரன்,சமூக செயற்பாட்டாளர்கள்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது ஆவன திரைப்படத்தினை பார்வையிட்டதன் பின்னர் கருத்துப்பகிர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/218173

இலங்கையில் இதுவரை 20 மனித புதைகுழிகள் : செம்மணி புதைகுழியின் மர்மம் துலங்குமா?

3 months 2 weeks ago
செம்மணி – மயூரப்பிரியன்! adminJune 22, 2025 செம்மணி என்றால் , கூடவே புதைகுழி என்பதும் நிச்சயமாக ஞாபகம் வரும். அந்தளவுக்கு செம்மணி புதைகுழி இலங்கையை 90களின் பிற்பகுதியில் உலுக்கி இருந்தது. மீண்டும் சுமார் 27 வருடங்களின் பின்னர் செம்மணி பகுதியில் உள்ள சிந்துபாத்தி மயானமும் அதனை சூழவுள்ள பிரதேசமும் மனித புதைகுழியாக யாழ் . நீதவான் நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. செம்மணி. யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் உள்நுழையும் போது, நாவற்குழி பாலத்தை தாண்டியதும் யாழ்ப்பாணத்திற்கு வருவோரை வரவேற்கும் முகமாக யாழ் வளைவு என அழைக்கப்படும் பெரும் வளைவு அமைந்துள்ள பிரதேசமே செம்மணி பிரதேசமாகும். பரந்த வெளி. நீரேந்து பிரதேசமாகவும் , உப்பளமும் , வயல் வெளியையும் தன்னகத்தே கொண்ட மிக அழகிய இயற்கை வனப்பு கொண்ட பிரதேசம். அது 1990களின் பிற்பகுதியில் கொடிய சூனிய பிரதேசமாக மாற்றம் கண்டது. 1995ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பட்டுக்குள் முற்றாக வந்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாரிய இராணுவ முகாம்கள் தோற்றம் பெற்றன. அவ்வாறு தோற்றம் பெற்ற இராணுவ முகாம்களில் செம்மணி இராணுவ முகாமும் ஒன்று, ஆள் ஆரவற்றமற்ற வெளி, வயல் வெளிகளும் , செம்மணி உப்பள வெளிகளும் , நீரேந்து பிரதேசத்திற்கு மத்தியிலையே அந்த முகாம் அமைந்திருந்தது. தென்மராட்சி பகுதிகளில் இருந்து , யாழ்ப்பாண நகர் பகுதிக்கு வருவோரும் , யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து தென்மராட்சி பகுதிகளுக்கு செல்வோரும் இந்த முகாமை தாண்டியே பயணிக்க வேண்டிய கட்டாயம். அந்த முகாமில் சோதனைகள் மிக மோசமாக இருக்கும். உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணித்தல் என்றால் என்ன என்பதனை அக்காலத்தில் அந்த முகாமை தினமும் கடந்து சென்று வந்தவர்களை கேட்டால் சொல்வார்கள். அவ்வாறு அந்த முகாமை கடந்து யாழ் . நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு சென்று வந்த மாணவி கிருசாந்தி குமாரசாமி 1996.09.07 அன்று அந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினரால் மறித்து , இராணுவ முகாமுக்குள் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். கிருஷாந்தி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தை நேரடியாக கண்ணுற்ற சிலர் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். உடனே தாயார் இராசம்மா பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிதம்பரம் கிருபாமூர்த்தியையும் தனியார் வகுப்பு போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்துக்கொண்டு செம்மணி இராணுவ முகாமிற்க்கு சென்று கிருசாந்தியை விசாரித்தார் அவர்கள் மூவரையும் இராணுவ முகாமிற்குள் அழைத்து சென்ற இராணுவத்தினர் , கிருஷாந்தியுடன் தடுத்து வைத்தனர், பின்னர் அன்றைய தினம் இரவு கிருசாந்தியை பொலிசாரும் இராணுவத்தினருமாக வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்கு பேரையும் புதைத்தனர். மாணவி கிருஷாந்தியும் அவரது தாய் , தம்பி மற்றும் அயலவர் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. இதனால் பாராளுமன்றத்தில் பெரும் வாதங்கள் எழுந்தன. சர்வதேச ரீதியிலும் குரல் எழுப்பப்பட்டன. அதனால் அன்றைய சந்திரிக்க அரசாங்கம் மாணவி காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணைகளின் அடிப்படையில் இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் என கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, அரசாங்கம் எதிர்பாராத விதமாய் கிருசாந்தி கொலை வழக்கு செம்மணிப் புதைகுழி வழக்காக மாறியது. கிருஷாந்தி கொலை வழக்கில் 1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தை சேர்ந்த சோமரத்தின ராஜபக்ச என்பவர் கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது. ‘”செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி , தாயார், அயலவர் மட்டுமல்ல இன்னும் 300 தொடக்கம் 400 பேர் வரையில் புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்.” என வாக்கு மூலம் அளித்தார். அத்துடன் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் பட்டியலையும் தரமுடியும் என்றும் கூறினார். அவரது வாக்குமூலம் ஒட்டு மொத்த இலங்கையை உலுக்கியத்துடன் , சர்வதேச நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் இலங்கை மீது திரும்பியது. அதனால் , சந்திரிக்க அரசாங்கம் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து புதைகுழியை அகலும் நடவடிக்கையையும் மேற்கொண்டது. அகழ்வின் போது 13 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து வந்த கால பகுதியில் ஆட்சி மாற்றம் , யுத்தம் என காலங்கள் மாறியதால் , கால ஓட்டத்தில் அதனை மறக்கடிக்கும் விதமான காரியங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக கிடங்குள் வெட்டப்பட்ட வேளை எலும்பு எச்சங்கள் தென்பட்டுள்ளன. மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவருடையதாக இருக்கலாம் எனும் எண்ணத்தில் ஆரம்பத்தில் அதனை எவரும் பொருட்படுத்தாத நிலையில் , மீண்டும் ஒரு கிடங்கில் மேல் பகுதியில் இருந்து எலும்புகள் மீட்கப்பட்டமையால் , ஏற்கனவே செம்மணி புதைகுழிகள் இந்து மயானத்திற்கு அருகிலையே ஏற்கனவே கண்டறியப்பட்டு இருந்தமையால் , இவையும் மனித புதைகுழியாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகராம் பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு விடயத்தினை கொண்டு சென்றதை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணி முறைப்பாட்டின் பிரகராம் பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு விடயத்தினை கொண்டு சென்றதை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. 15ஆம் திகதி ஆரம்பமான அகழ்வு பணிகள் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில் , யாழ்ப்பாணத்தில் மழை பெய்தமையால் , சில நாட்கள் தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , மீண்டும் கடந்த 02ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி வரையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன. அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 07ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சிசு மற்றும் சிறார்களுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இணைந்த நிலையில் கூட எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டமையால் , குறித்த பகுதி பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்பட்டது. மூன்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் ஒரு பகுதியில் இருந்து மீட்கப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய , யாழ் . நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் , குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என விண்ணப்பம் செய்தனர். அதன் வழக்கு விசாரணைகளின் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி ஆழத்தில் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒழுங்கு முறையின்றி குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை போன்ற விடயங்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை அடுத்து அப்பகுதி மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் , மேலும் 45 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதிமன்று அனுமதித்துள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் 45 நாட்களுக்கு தொடர் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதியளவில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த அகழ்வு பணிகள் சர்வதேச கண்காணிப்புடன் நடைபெற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கையை முன் வைத்து போராட்டம் ஒன்றினையும் நடத்தியுள்ளனர். செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரிய வகையில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலை வலுவாக்கப்பட வேண்டும் என்பதுடன் புதைகுழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். அத்துடன் , அவலமாக மரித்த உயிர்களின் ஆத்மாக்கள் அமைதிகொள்ளும் போது தான் நாடுமுன்னோக்கிச் செல்ல முடியும். மாறாக அந்த ஆத்மாக்களின் அவலக்கதைகள் தொடர்ந்தும் மூடிமறைக்கப்பட்டால் அவற்றினால் விளையும் பாதிப்புக்கள் நாட்டை மேலும் மோசமானநிலைக்கு இட்டுச் செல்லும். இதனையுணர்ந்து செம்மணிப் புதைகுழி விவகாரம் கைவிடப்படும் விடயமாகவன்றி உண்மையையும் நீதியையும் நிலைநாட்டக்கூடிய வகையில் முன்கொண்டு செல்லப்படும் விடயமாக மாறவேண்டும் என்பதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த கால அரசாங்கங்கள் போல் புதைகுழி மூடி மறைக்கப்படுமா ? அல்லது புதைகுழிகளின் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டக்கூடிய வகையில் முன்கொண்டு செல்ல தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒத்துழைக்குமா ? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நன்றி மயூரப்பிரியன் https://globaltamilnews.net/2025/217136/

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

3 months 2 weeks ago
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு – எரிபொஷரட்களின் விலை உயர வாய்ப்பு! adminJune 22, 2025 ஈரான் – இஸ்ரேல் நாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெற்றோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி ஹார்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய கடல்வழிப் பாதையாகும். இது உலக எரிசக்தி வர்த்தகத்தில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தக் குறுகிய நீர்வழிப்பாதை சுமார் 21 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இரண்டு 2 மைல் அகல கப்பல் வழித்தடங்களை கொண்டுள்ளது. உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீத போக்குவரத்திற்கு இந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இது உலகளவில் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த பாதையில் நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் சர்வதேச எரிசக்தி சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச எரிசக்தி அமைப்பு கூறியிருக்கிறது. https://globaltamilnews.net/2025/217159/

192 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில்!

3 months 2 weeks ago
192 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில்! தேசிய மக்கள் சக்தி (NPP) இப்போது இலங்கை முழுவதும் 192 உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. இவற்றில், NPP 151 நிர்வாகங்களில் நேரடி பெரும்பான்மையைப் பெற்றது. அதே நேரத்தில் அவர்கள் 41 பிற மன்றங்களில் தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பான்மையைப் பெற்று நிர்வாகங்களை அமைத்தனர். NPP இப்போது கொழும்பு, களுத்துறை, காலி, குருநாகல், புத்தளம் மற்றும் நுவரெலியா உட்பட பல முக்கிய மாநகர சபைகளை ஆளுகிறது. அக்கரபத்தனை, கொட்டகலை மற்றும் நுவரெலியா பிரதேச சபைகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பதவியை வகிக்கிறது. அதே நேரத்தில் துணைத் தலைவர்கள் பதவிகளை NPP பிரதிநிதிகள் பெற்றுள்ளனர். இதற்கிடையில், எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத 95 உள்ளூராட்சி மன்றங்களில் 53 இல் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதாகவும், கட்டுப்பாட்டைத் தீர்மானிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடையே உள் தேர்தல்கள் நடத்தப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அந்த 53 சபைகளில் 22 இல் ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே நிர்வாகங்களை அமைத்துள்ளதாக அவர் கூறினார். வடக்கில் 16 மன்றங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. தற்போது, 53 மன்றங்களில் NPP அல்லாத கட்சிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் நான்கு மன்றங்களின் நிர்வாகங்களை அமைப்பது சர்ச்சைகள் காரணமாக தாமதமாகியுள்ளது. இரகசிய வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட உள் மோதல்கள் காரணமாக சீதாவகபுர நகராட்சி மன்றம், சீதாவகபுர பிரதேச சபை மற்றும் மாவதகம பிரதேச சபை ஆகியவற்றின் அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டன. நிர்வாக சிக்கல்கள் காரணமாக ஆராட்சிகட்டுவ பிரதேச சபையின் தொடக்க அமர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20 ஆம் திகதிக்குள், நாடு முழுவதும் உள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களில் 245 இல் நிர்வாகங்கள் நிறுவப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436665

சிரிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு, 63 பேர் காயம்!

3 months 2 weeks ago
சிரிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு, 63 பேர் காயம்! சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 63 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (22) மாலையில் ட்வீலா பகுதியில் உள்ள எலியாஸ் நபியின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் ஒரு நபர் ஆயுதத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் வெடிகுண்டு உடையை வெடிக்கச் செய்ததாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசு (IS) உடன் தொடர்புடையவர் என்றும் அது கூறியது. அந்தக் குழுவிடமிருந்து உடனடியாக எந்த உரிமைகோரலும் இல்லை. தேவாலயத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பெரிதும் சேதமடைந்த பலிபீடம், உடைந்த கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் பீடங்கள் மற்றும் சுவர்களில் இரத்தம் சிதறிக் கிடப்பதைக் காட்டியது. சிரியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரை ஐஎஸ் அடிக்கடி குறிவைத்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில், டமாஸ்கஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் சயீதா ஜெய்னாப் ஆலயத்திற்கு அருகில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்தக் குழு பொறுப்பேற்றது. இதில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். https://athavannews.com/2025/1436653

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

3 months 2 weeks ago
அமெரிக்க தாக்குதலின் பின் ஈரானின் பதிலுக்காக உலகம் காத்திருக்கிறது! 1979 புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான மிகப்பெரிய மேற்கத்திய இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (22) தாக்கியதை அடுத்து, உலகம் ஈரானின் பதிலடிக்கு தயாராக உள்ளது. ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்திற்கு மேலே உள்ள மலையில் அமெரிக்கா 30,000 பவுண்டுகள் எடையுள்ள பதுங்கு குழி குண்டுகளை வீசிய ஒரு நாளுக்குப் பின்னர் ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ள சபதம் செய்தது. அமெரிக்கத் தலைவர்கள் தெஹ்ரானை பின்வாங்குமாறு வலியுறுத்தினர். அதேநேரம், அமெரிக்க நகரங்களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். ஞாயிற்றுக்கிழமை சமூக தளத்தில் டொனால்ட் ட்ரம்ப் எழுதிய பதிவில், ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்த கருத்தை எழுப்பினார். “‘ஆட்சி மாற்றம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது??? என்று கேள்வி எழுப்பினார். ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த பின்னர், தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு அமைவாக நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஒரு பெரிய விரிவாக்கமாகவும், இஸ்ரேலுடன் மோதலில் முதல் நேரடி அமெரிக்க இராணுவ ஈடுபாடாகவும் வந்தன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்கப் படைகள் ஈரானின் உள்ளே ஆழமாகத் தாக்கியதாகவும், இதனால் அந்நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு “பெரும் சேதம்” ஏற்பட்டதாகவும், இது ஒரு புல்ஸ்ஐ தாக்குதல் என்றும், ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை தாக்குதலில் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகவும் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று மீண்டும் வலியுறுத்தினார். ஈரானின் நிலத்தடி ஃபோர்டோ அணுமின் நிலையத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதலின் விளைவாக ஆழமாகப் புதைக்கப்பட்ட தளமும் அது வைத்திருந்த யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்குகளும் கடுமையாக சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டதாக வணிக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டின. எனினும், அந்த தளத்தின் நிலை உறுதிப்படுத்தப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம், அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பின்னர் தளத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவுகளில் எந்த அதிகரிப்பும் ஏற்படவில்லை என்று கூறியது. நிலத்தடியில் ஏற்பட்ட சேதத்தை இன்னும் மதிப்பிட முடியவில்லை என்று அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி CNN இடம் கூறியுள்ளார். ஃபோர்டோவில் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பெரும்பகுதி தாக்குதலுக்கு முன்னர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக ஈரானிய மூத்த வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் அச்சுறுத்தல் சூழல் சைபர் தாக்குதல்கள் அல்லது இலக்கு வைக்கப்பட்ட வன்முறைக்கான சாத்தியக்கூறுகளைக் காரணம் காட்டி, அமெரிக்காவில் “அச்சுறுத்தல் சூழல் அதிகரித்துள்ளதாக” அந் நாட்டு பாதுகாப்புத் துறை எச்சரித்தது. இதன் விளைவாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் சட்ட அமலாக்க அதிகாரிகள் மத, கலாச்சார மற்றும் இராஜதந்திர தளங்களை மையமாகக் கொண்டு ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர். பதிலடி கொடுக்கும் வரை இராஜதந்திரத்திற்கு திரும்ப முடியாது அமெரிக்க தளங்களை குறிவைப்பதன் மூலமோ அல்லது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை முடக்க முயற்சிப்பதன் மூலமோ அமெரிக்காவிற்கு எதிரான பழிவாங்கும் அச்சுறுத்தல்களை தெஹ்ரான் இதுவரை பின்பற்றவில்லை. எனினும் அது வெகு காலம் நீடிக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்தான்புல்லில் பேசிய ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தனது நாடு சாத்தியமான அனைத்து பதில்களையும் பரிசீலிக்கும் என்று கூறினார். அது பதிலடி கொடுக்கும் வரை இராஜதந்திரத்திற்கு திரும்ப முடியாது என்றும் அவர் கூறினார். ஹார்முஸ் நீரிணை தொடர்பான அச்சுறுத்தல் மேற்கத்திய நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலாக ஈரானின் அச்சுறுத்தலாக பரவலாகக் கருதப்படும் ஒரு படியாக, அதன் நாடாளுமன்றம் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. உலகளாவிய எண்ணெய் கப்பல்களில் கிட்டத்தட்ட கால் பகுதி ஈரான் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த குறுகிய நீர்வழிகள் மூலமாக செல்கின்றன. நீரிணையை மூடுவதன் மூலம் வளைகுடா எண்ணெய் வர்த்தகத்தை மூச்சுத் திணறடிக்க முயற்சிப்பது உலகளாவிய எண்ணெய் விலைகளை முன்னெப்போதும் இல்லாத அளவிக்கு உயர்த்தக் கூடும். இது உலகப் பொருளாதாரத்தை தடம் புரளச் செய்யலாம். மேலும், வளைகுடாவைத் திறந்து வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய ஐந்தாவது கடற்படையுடன் மோதலுக்கு வழிவகுக்கும். எண்ணெய் விலை உயர்வு பிரெண்ட் மசகு எண்ணெய் மற்றும் அமெரிக்க மசகு எண்ணெய் விலைகள் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த மட்டங்களுக்கு உயர்ந்தன. பிரெண்ட் மசகு எண்ணெய் $3.20 அதிகரித்து $80.28 ஆகவும், அமெரிக்க மசகு எண்ணெய் $2.89 ஆகவும் $76.73 ஆகவும் உயர்ந்தன. போர் நிறுத்தத்திற்கான அழைப்பு ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முன்மொழிந்தன. அமெரிக்க தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை கூடியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436650

சிஸ்ட்டர் அன்ரா

3 months 2 weeks ago
ரஞ்சித் பகிர்ந்த சொந்த கதை முன்பு வாசித்துள்ளேன். சில விடயங்கள் கிரகிப்பதற்கு கடினமானவை. இப்படியும் நடக்குமா என எண்ண தோன்றும் அதேசமயம் தந்தையார் என்ன மன/உள பாதிப்பு அடைந்தாரோ எனவும் சிந்தித்தேன். உலகில் எமது பெற்றோரின் அன்புதான் முதன்மையானது. அவர்கள் அரவணைப்பிற்கு பின்னர்தான் மிகுதி எல்லாம் வருகின்றது. ஆனால் முதன்மை நிலை அன்பு/அரவணைப்பு மறுக்கப்படும்போது ஒருவரின் வாழ்க்கையே சூனியமாகிவிடும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது. மிகவும் கடினமான, கரடு முரடான பாதையை கடந்து வந்துள்ளீர்கள். உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பரிசுத்த ஆத்துமன் அமைதியில் இளைப்பாறட்டும்!
Checked
Sat, 10/11/2025 - 20:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed