புதிய பதிவுகள்2

போப் பிரான்சிஸ் காலமானார்!

3 months 2 weeks ago
Pope Francis Died: வாடிகன் அறிவிப்பு; உலக அளவில் போப்பாண்டவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன? போப் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்படும் சில மணி நேரங்களுக்கு முன்புவரை சந்திப்பு நடத்தினார். சர்வதேச அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன? #PopeFrancis #Catholic #Vatican இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பாக்கு நீரிணை ஒற்றைக் காலுடன் நீந்திக்கடந்து சாதனை படைத்த இந்தியப் பெண்

3 months 2 weeks ago
பாக் ஜலசந்தியை ஒற்றை காலுடன் நீந்திக் கடந்து சாதித்த மாற்றுத்திறனாளியான நீச்சல் வீராங்கனை! Published By: DIGITAL DESK 2 19 APR, 2025 | 05:38 PM இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 11 மணி 05 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பாக் ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும். இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக் ஜலசந்தியை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ் கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மரத்தன் முறையில் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் குழு இந்திய-இலங்கை இரு நாட்டு அரசிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அனுமதி கிடைத்த நிலையில், வெள்ளிக்கிழமை (18) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி சென்றனர். இந்த குழுவில் 8 பேர் ரிலே முறையில் நீந்தினர். இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5.50க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 2.20 மணி அளவில் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.இவர்கள் ரிலே முறையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 8 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர். மேலும் இருவர் தனியாக (SOLO) நீந்தி கடந்தனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷ்ருதி நக்காது என்ற நீச்சல் வீராங்கனை, வலது காலில் பிறவி குறைபாடு காரணமாக மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காலை கொண்டு நடக்கும் மாற்றுத்திறனாளி. இதற்கு முன்னதாக பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று பதக்கங்களை பெற்றுள்ள சஷ்ருதி நக்காது இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 5.50 மணி அளவில் தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கி மாலை 4.55 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தார். இந்த சாதனைக்காக 11 மணி 05 நிமிடங்கள் சஷ்ருதி நக்காது எடுத்துக் கொண்டார். அரிச்சல்முனை வந்தடைந்த சஷ்ருதி நக்காதவை அவரது தாய் கண்ணீர் மல்ல முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், மரைன் போலீசார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதே போல மற்றொருவரான மாற்றுத்திறனாளி பல்கா கணேஷ் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்தார். மாற்றுத்திறனாளியான பாரா நீச்சல் வீராங்கனை தலைமன்னாரில் இருந்து சனிக்கிழமை (19) அதிகாலை கடலில் குதித்து நீந்த தொடங்கிய போது ஜெல்லி மீன் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக தொடர்ந்து நீந்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் கடும் சிரமத்தை எதிர் கொண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்து சஷ்ருதி நக்காது சாதனை படைத்துள்ளார். ஒற்றைக் காலுடன் கடலில் நீந்திக் கடப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். முன்னதாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த நிலையில் தற்போது ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி முதல் முறையாக தலைமன்னார் தனுஷ்கோடி பாக்நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளதாக இந்திய நீச்சல் கழகத்தின் பார்வையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212393

போப் பிரான்சிஸ் காலமானார்!

3 months 2 weeks ago
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்தார்! 21 APR, 2025 | 02:46 PM பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவரது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/212532

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்

3 months 2 weeks ago
21 APR, 2025 | 05:35 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் தங்களது ஆளடையாளத்தை உறுதி செய்துக்கொள்வதற்கு பின்வரும் அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும். 1. தேசிய அடையாள அட்டை 2. செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் 3. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு 4. தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் அடையாள அட்டை 5. ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தகவல்கள் உறுதிசெய்யும் கடிதம் https://www.virakesari.lk/article/212570

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சென்றவருடம் கேகேஆர் இருந்தபோது ரஸலுக்கு சில ஓவர்கள் வழங்கியிருந்தார். ஆனால் ராகனா எதிரணி நன்றாக விளையாடும் போது ஏதாவது விக்கெட் எடுக்க வேண்டும் போது ஒரு ஓவர் மட்டும் வழங்கி பார்க்கிறார் போல இருக்கிறது. இன்று வழங்கிய ஒரே ஒரு ஓவரில் முதலாவது விக்கெட்டான சாயி சுதர்சனின் விக்கெட்டை ரஸல் எடுத்தார்.

மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர்!

3 months 2 weeks ago
மைத்திரிபால சிறிசேனவிடம் 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு 21 APR, 2025 | 05:02 PM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை ஆஜராகியிருந்தார். இதன்போது, மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். https://www.virakesari.lk/article/212566

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அட. 200ஐ தாண்டவில்லை. போன போக்கில, இலகுவாகத் தாண்டுவினம் போல் இருந்தது. இதுவே KKRக்கு வெற்றிதான். அவர்களின் துடுப்பர்கள் என்ன செய்யப் போகினம்.

பிள்ளையான் ‍- பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி

3 months 2 weeks ago
மாமனிதர் தாரக்கி சிவராமைக் கொன்றது இனியபாரதியே - கீர்த்தி ரட்நாயக்க‌ தாரக்கி சிவராம் கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த விடுதியில் தனது இரு நண்பர்களுடன் இணைந்து உணவருந்திவிட்டு வீடு திரும்பும் வேளையில் அவரைக் கருணா குழுவினரும் இராணுவப் புலநாய்வுத்துறையும் கடத்திச்சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்து, பின்னர் பாராளுமன்றக் கட்டடத் தொகுதி அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் சதுப்பு நிலப்பகுதியில் எறிந்துவிட்டுச் சென்றார்கள் என்று டி.பி.எஸ் ஜெயராஜ் உட்பட இன்னும் சில செய்தியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். தாரக்கியை கருணாவே தனிப்பட்ட ரீதியில் சுட்டுக் கொன்றான் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனாக் கீர்த்தி ரட்நாயக்கவின் செவ்வியில் பிள்ளையானின் அடியாட்களில் ஒருவனான இனியபாரதியே தாரக்கி சிவராமைக் கொன்றான் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் சிவராமைக் கொன்றது கருணா குழுவினர்தான் என்பது உண்மை, ஆனால் இக்கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவன் யாரென்பதில் இதுவரை தெளிவில்லை.

போப் பிரான்சிஸ் காலமானார்!

3 months 2 weeks ago
காணொளி: 👉 https://www.facebook.com/reel/1325997961813563 👈 நேற்றைய தினம் வத்திக்கானின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவில், ஆயிரக்கணக்கானோர் முன்னால் தோன்றிய போப் பிரான்சிஸ் பக்தர்களுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துக்களை கூறினார்.

அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' உலகையே மாற்றிய கதை

3 months 2 weeks ago
ஐன்ஸ்ரினின் சிந்தனைச் சோதனைகளைப் பற்றி அறியும் போது வியப்பே மிஞ்சுகிறது. இன்றைய கால விஞ்ஞானத்தில், ஒரு அறையில் அமர்ந்து பேப்பரும் பென்சிலுமாக யோசிக்கும் சிந்தனை முறைமை மிகவும் அருகியிருக்கிறது. காலக் கட்டுப்பாடுகள், பிரசுரிக்க வேண்டுமென்பதற்காக அரைகுறையாக செய்யப் பட்ட பரிசோதனைகளின் முடிவுகள், பதவியுயர்வுக்காக திரிக்கப் பட்ட ஆய்வுகளைப் பிரசுரித்தல் என விஞ்ஞான முறைமையும் பெரும்பாலும் மாறி விட்டது. மிக அடிப்படையான விடயங்களை விஞ்ஞானிகள் கண்டறியும் போது, அந்த அறிவை உடனடியாக வருமானம் தரும் ஒரு பொருளாக மாற்றிக் கொள்ள முடியாவிட்டால், அந்த அறிவிற்கு அரச மானியமும் கிடைக்காத நிலை இருக்கிறது. National Science Foundation -NSF என்ற அடிப்படை விஞ்ஞானத்தை ஆதரிக்கும் நிறுவனத்திற்கான நிதியை, விஞ்ஞானம் புரியாத ஈலோன் மஸ்க்கின் வாலுகள் அண்மையில் நிறுத்தியது இந்த "இலாபம் தரும் விஞ்ஞானம்" என்ற கோசத்தினால் தான்!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அங்கால வாசிங்கடன் சுந்தரும் இருக்கிறார். அதோட, அவையின் நடுவாந்திர துடுப்பர்களுக்கு பெரிதாக சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. முதல் மூவரில் ஒருவர் எப்போதும் சிறப்பாக செயல்படுகின்றார். முதல் மூன்று விக்கட்டும் 10 பந்துப் பரிமாற்றங்களுக்குள் வீழ்ந்தால், அவர்களின் நிலை தடுமாறக்கூடும். வாசிங்டனின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

வடமராட்சி தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி அடித்துக் கொலை

3 months 2 weeks ago
ருத்தித்துறை, தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்றைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது-69) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலையில் பலமுறை தாக்கப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுநிலை ஆசிரியையான சகோதரியுடன் குணதேவி ஒரே வீட்டில் வசிந்து வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றுக் காலை 7 மணியளவில் சகோதரி அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக குணதேவி தேவாலயத்துக்குச் செல்லவில்லை. தேவாலயத்தில் இருந்து சகோதரி காலை 9 மணியளவில் வீடு திரும்பியபோது குணதேவி வீட்டின் சமையலறையில் இரத்தவெள்ளத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார். சம்பவம் அறிந்து அயலவர்கள் கூடியநிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் குணதேவியை சமையலறையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். அம்புலன்ஸுக்கு அறிவித்திருந்தநிலையில், அம்புலன்ஸில் வந்த உத்தியோகத்தர் குணதேவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த வீட்டில் முன்னர் ஆள்கள் இல்லாதபோது கைத்தொலைபேசி ஒன்று திருடப்பட்டிருந்தது என்பதும், இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபர் ஒருவரை இனங்கண்டனர். அந்த நபர் தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முதலில் மறுத்தாலும் பின்னர் மூதாட்டியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் எவரும் இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் திருடுவதற்காக சந்தேகநபர் சுவர் ஏறிக்குதித்துச் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக சமையலறையில் மூதாட்டியைக் கண்டதும், அங்கிருந்த ரீப்பை கட்டை ஒன்றால் மூதாட்டியைத் தாக்கி விட்டுச் தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அதனால் புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர் என்றும், இவர் மீது ஏற்பகவே பல்வேறு திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி அடித்துக் கொலை
Checked
Fri, 08/08/2025 - 12:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed