புதிய பதிவுகள்2

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 6 days ago
போனதடவை இருவரும் கைதான போதும், சவுக்கு கைது நியாயமானது ஆனால் பீலிக்ஸை தேவையில்லாமல் கைது செய்கிறார்களோ என தோன்றியது. இந்த முறை இவர்கள் இருவரின் வீடியோக்களையும் நான் இன்னும் பார்க்கவில்லை. போனமுறை சவுக்கு, பீலிக்ஸ் இருவரையும் கோர்ட் வெளியே விட்டது. இந்த முறையும் வெளிவிடும் என்றே நினைக்கிறேன். அவர்கள் வெளியே வரும் போது அவர்கள் கூறியது வதந்தி அல்ல என்ற தோற்றப்பாடு இயல்பாகவே எழும். இதை திமுக தவறாகவே கையாள்கிறது. அன்பில் ரமேஸ் அழுகையில் ஆரம்பித்து, செய்தியாளர் கைதுவரை, திமுக நாடகம் ஆடுகிறது, எதையோ மறைக்கிறது என்பதே மக்கள் மனதில் பதியல்கூடும். இது உண்மை அல்லாமல் இருக்கலாம், ஆனால் அரசியலில் சிலசமயம் உண்மையை விட, perception நிலைத்து விடுவது உண்டு. உதாரணம் ரஜீவ்காந்தி கொலையும் திமுகவின் 1991 படுதோல்வியும்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 6 days ago
தமிழ்நாடு காவல்துறை டெல்லிவரை போய் கைது செய்தது என்று நினைக்கிறேன்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 6 days ago
நூறு பேர் புகுந்து வெட்டினார்கள் ஆயிரம் பேர் புகுந்து வெட்டினார்கள் என்று ஏகத்திற்கு அடித்துவிட்டால் வெட்டுப்பட்டவர்கள் எங்கே என்று கேட்கமாட்டார்களா. தங்கள் தவறை மறைக்க ஏகப்பட்ட conspiracy theory க்களை உருவாக்கி எந்த கூச்சமும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது அணில் கூட்டம். ஒரு காணொளியில் சவுக்கு 40 பேரும் இறந்தது நன்மைக்கே என்று பேசிவைத்திருக்கிறான். மிக விரைவில் இவனுக்கும் மாமியார் வீடுதான்

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 6 days ago
https://www.facebook.com/share/p/1GxMJAgg8r/?mibextid=wwXIfr• #தமிழ்நாட்டின் இளைய தலைமுறை சினிமா நடிகர்கள் மீதான மோகத்தில், எப்படி தலைகீழாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது என்பற்கான உதாரணம்தான் கரூர் நிகழ்விற்கு பின்னரான நிகழ்வுகள். சரி. திமுக சதி வேலைகள் செய்தது. சரி. உயிரிழப்புகளை திமுகதான் திட்டமிட்டு நடத்தியது. சரி. பெரும் அநீதி சதி திட்டத்தின் ஊடாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. (இது தவெக அதனது பெரும் தவறை மறைப்பதற்காக உருவாக்கும் narrative என்பது எனது பார்வை) • #அப்படியானால் என்ன செய்யவேண்டும்? தவெகவின் தலைவர் தெருவிற்கு இறங்கி நீதி கேட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் தவெக ஆதரவாளர்கள் சொல்லும் சகல காரணங்களையும் விஜய் அவரது சொந்த வாயால் சொல்லிருக்கவேண்டும். சம்பவம் நடந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். இந்த புள்ளியில் இவர் எப்படி கூமுட்டை ஆனார் என்பதை தனியாக விவரிக்கிறேன். மூன்று நாட்களாக வெளியே வரவில்லை. பெரும் அசம்பாவிதம் நடந்த பிறகு தாழ்ப்பாளை போட்டு உள்ளுக்குள் ஒருவர் இருக்கிறார். இதற்கு ரைட் அப்புகள். “தலைவர் சோகத்தில் 3 நாட்களாக தண்ணீர் மட்டுமே குடித்தார்.” “தலைவா எழுந்து வா! “ • #டேய்! தலைவன் என்பவன் தலைமை தாங்குபவன். அவன் களத்தில் இருக்க வேண்டும். தலைவன் என்பவன் முடிவுகளை தொலைநோக்கு பார்வையில் துரிதமாக எடுப்பவன். மன உறுதியில் மற்றவரை விட கல்லாய் இருப்பவன். தமிழ்நாட்டில் உட்டாலக்கடியாய் நடக்கிறது. எட்டு கோடி மக்களை ஆள கெஞ்சி வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறார்கள். இதை சொல்வது யார்? படிக்காத பாமரனோ, கிராமத்தானோ அல்ல. சிலிக்கான் பள்ளத்தாக்கில் வேலை எடுக்கும் திறனுள்ள இளைய தலைமுறை. அந்தளவிற்கு நடிகர்கள் மீதான போதை தலைகீழாய் சிந்திக்கும் திறனை தந்திருக்கிறது. அநீதி தானே. அதை நீதானே தட்டிக்கேட்க வேண்டும். இன்னும் சில நாள் கழித்து அழும் முகத்துடன் பாவமாக உரையாற்றுவார். நெஞ்சை பிழிய வைக்கும் கதையுடன் வீட்டில் தாழ்ப்பாளை போட்டு இருந்ததற்கான காரணத்தை சொல்வார். அப்போதும் இந்த தலைமுறை “தலைவா! உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரலாமா” என இரண்டு ரைட்அப் எழுதும். இதுவரை சொன்னது திமுக சதி வேலை செய்திருந்தால். • #இனிமேல் சொல்வது“விஜய்தான் இதில் பெரும் குற்றவாளி” என்ற எனது பார்வையில். இந்த சனிக்கிழமை கூட்டம் என்பது விஜய் அவரது செல்வாக்கை காட்டுவதற்காக, அணு அணுவாக வடிவமைக்கப்பட்டது. இதில் Health and Safety Regulations என்பதை முற்றிலும் இரண்டாம் பட்சமாகவே அணுகியிருக்கிறார்கள். சில நாடுகளில் Public Order and Safety Protocols என அழைப்பார்கள். இவர்கள் கூட்டத்தை அதிகமாக்கி காட்ட பயன்படுத்திய உத்திகளை நான் விவரிக்க கூட தேவையில்லை. “எப்படி அதிகமாக கூட்டத்தை சேர்ப்பது, எப்படி அதனை அதிக நேரம் தக்கவைத்திருப்பது” என்பதுதான் அவர்களது “பிரதான நோக்கமாக” ஆரம்பத்திலிருந்து இருந்திருக்கிறது. சகல வழிகளிலும் அவர்களது பிரதான நோக்கத்தை அடைய பாடுபட்டிருக்கிறார்கள். கள தகவல்களை எடுத்து பார்த்தாலே தெரியும். திமுக சதி வேலை செய்தது என சொல்பவர்கூட இதனை மறுக்கமுடியாது. விஜய் இந்த “பிரதான நோக்கத்தை” அடைய எல்லாவகையான உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறார். திமுக சதி செய்திருந்தாலும் கூட, தவெக முறையான Public Order and Safety Protocols பின்பற்றியிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது என்பதுதான் இதிலுள்ள bottom line. உண்மையில் மேற்குலகில் ஒருவர் இதே உத்திகளை பயன்படுத்தி, 40 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்திருந்தால் குறைந்தது 20 வருட சிறை தண்டனை கிடைத்திருக்கும். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பிறந்ததால், விஜய் தப்பித்திருக்கிறார். விஜய் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனால் கூட, திமுக சட்டத்தை பாய்ச்சாது. அது திமுகவிற்கு எதிராக திரும்பிவிடும் என்பதை அது அறியும். முழு அனுதாபத்தையும் விஜய் அறுவடை செய்துவிடுவார். க.ஜெயகாந்த்

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 6 days ago
ஓம்… பீலிக்ஸ் கைதாவது இந்த அரசில் இது இரெண்டாம் முறை என நினைக்கிறேன். முதல் முறை சவுக்குடன் கைதானார்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 6 days ago
அதெப்படி செந்தில்பாலாஜி சரியான நேரத்துக்கு வந்தாரு... அதெப்படி விஜயபாஸ்கர் அங்க வந்தாரு, அதெப்படி முதலமைச்சர் இதுக்கு மட்டும் உடனே நேரடியா கிளம்பிட்டாரு, அதெப்படி அன்பில் மகேஷ், MLA ங்க எல்லாம் அங்க வந்தாங்க, இப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்க சரி... அவங்க வந்து தான் ஆகணும் அதுக்கு தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சி இருக்கு, அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகள் அங்க இருந்து தான் ஆகணும் அது அவங்க கடமை, அது தெரியாம background sound போட்டு எடிட்டிங் கட் போட்டு, பேசுற நீ களத்துக்கு வந்தியா... முதலமைச்சர் ஆகணும்ன்னு திரியுற விஜய்கிட்ட போய் சொல்லுங்க அண்ணா இப்படி ஒரு அசம்பாவிதம் ஆகி போச்சு நம்ம கூட்டத்துக்கு வந்து தான் இது எதிர்க்கட்சி சதியா கூட இருக்கலாம் நீங்க இங்கேயே இருங்க திருச்சில தங்குங்க, மக்களை போய் நம்ம நிர்வாகிகளை பாக்க்க் சொல்லுங்க, மாவட்ட செயலாளர்கள் கிட்ட போய் கலநிலவரம் என்னென்ன்னு தெறிஞ்சி கிட்டு நேரடியா போக வேண்டாம் atleast video call மூலமாவது ஆறுதல் சொல்லுங்க, நான் அங்க வந்தா இன்னும் பெரிய நெருக்கடி ஆகும் ஆனா உங்க கூட தான் நான் இருக்கேன், பயப்படாதீங்க எல்லாரும் சேர்த்து இந்த துயரத்தில இருந்து வெளியே வந்துரலாம்ன்னு பேச சொல்லி சொல்லி இருக்கலாம்ல..... Atleast புறமுதுகு காட்டி ஓடி போகும் போதாச்சும் செய்தியாளர்களை பார்த்து ஒரு வருத்தத துயரத்த சொல்ல கூட தயாரா இல்லாத ஒரு தலைவன் 🤦‍♀️🤦‍♀️

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

1 week 6 days ago
தமிழ் நகை கடை வைத்திருக்கும் பெருசாச்சாளிகளின் வண்டியை வளர்க்காமல் பேசாமல் 24 கரட் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது. தமிழ் கடையில் ஒரு நகையை வாங்கி பக்கத்து நகை கடையில் விலைக்கு கொண்டு போனால் 4௦ வீத பெறுமதி குறைத்து கேட்ப்பார்கள் .

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

1 week 6 days ago
இப்போதைய காலத்தில் கலியாணம் கட்டும் மாப்பிள்ளைமார் பாடு திண்டாட்டம் தான் போல. ஐந்து அரை பவுண் தாலி எடுப்பது என்றாலே பதினைஞ்சு இலட்சத்துக்கு மேல் வேண்டும் போல் உள்ளதே.

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 6 days ago
ஆரம்பத்தில் இருந்தே விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை. வெறும் பஞ்ச் டயலாக்கள், வெற்று சுலோகங்கள் என தனது திரைப்பட ஹீரோயிசத்தை மட்டுமே காட்டினார். தனது திரை ரசிகர்களை வைத்து திரைப்பாணியில் தனக்கு விசிலடிக்கும் கூட்டத்தை கட்டியமைக்கவே தனது சக்தி முழுவதையும் செலவிட்டார். அவரது கட்சி மகாநாடுகள், கூட்டங்கள் அவரது திருப்படம் வெளியாகும் வேளை திரையரங்குகள் எப்படி ரசிக பட்டாளங்களின் கும்மாளம் இருக்குமோ அப்படியே இருந்தன. அதன் விளைவே இந்த அனர்ததம். ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் விஜய் மற்றும் கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படிருக்கும். விஜய் இவ்வேளை கைது செய்யப்பட்டிருப்பார். விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அல்லது மென் நடவடிக்கை என்பது இந்திய தேர்தல் அரசியல் பலவீனங்களில் ஒன்று. எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தமது அரசியல் அஜெண்டாவுக்காக இது உபயோகின்றனரேயொழிய, பொறுப்புணர்வு அற்று செயற்பட்டு இத்தனை உயிர் இழப்புக்கு காரணமான விஜய் மீது நேர்மையான கடுமையான சட்ட நடவடிக்கைக்கு தயக்கம் கொள்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தமது குறுகிய அரசியலை ஒதுக்கி விட்டு இணைந்து விஜய் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒன்றில் விஜய பொறுப்பான அரசியல் தலைவராக அரசியல் செய்ய வேண்டும் இல்லையெனில் மார்கெட் இருக்கும் வரை தனது ரசிகர்களை மகிழ்விக்க படங்களில் நடிக்க வேண்டும்.

லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்!

1 week 6 days ago
இந்திய பிரதமர் நரேந்திரமோடி கூட இந்த லண்டன் காந்தி சிலையை சேதப்படுத்துவதில் பின்னணியில் இருக்கலாம் மோடி rss இயக்கத்தின் நீண்ட கால விசுவாசி . நாதுராம் விநாயக் கோட்சே rss இயக்கத்தில் இருந்து கடைசி வரை விலகவேயில்லை ஆதாரம் https://www.bbc.com/tamil/india-60108094

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

1 week 6 days ago
இரண்டு டிரோன் இங்கிலாந்து பக்கமும் பறந்தால் தங்க விலை யும் சேர்ந்தே பறக்கும் . போனமாதம் காஸ்ட்கோ தங்க விலைக்கு இந்தமாத தங்க விலை வித்தியாசம் 11௦௦ பவுன் கூடியுள்ளது . us டொலரில் நம்பிக்கை இன்மை இன்னும் போக போக விலை அதிகரிக்கும் என்கிறார்கள் .

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 6 days ago
தாழ்த்தப்பட்ட சாதி என்று அந்தச் சாதியின் பெண்ணைத் துகிலுரிந்து ரசித்தார்கள். அவர்கள் குடியிருப்புகளைக் கொளுத்தி அட்டகாசம் செய்தார்கள். பாலகர்கள், வயதிபர்கள் என்று பாராமல் இலங்கையில் அரசே இலச்சக்கணக்கில் தமிழரைக் கொலை செய்தது. இதன்போதெல்லாம் ஊடகங்கள், மக்கள் பதிவுகள், கள உறவுகளிடம் இருந்து கூட பெருமளவான ஆட்சேபனைகள் வந்ததில்லை. ஆனால் ஒரு தமிழ் நடிகன், தமிழினம் வெற்றிகொள்ள ஒரு கட்சியைத் தொடங்கியதும் அதற்கு மக்கள் ஆதரவு பெருகுவதையம் பொறுக்கமுடியாத தமிழ்தோல் போர்த்தி தமிழர்களை ஆட்சி செய்யும் வேற்றினத் தலைவர்களின் எடுபிடித் துறைகளின் கூற்றுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அளவற்ற பதிவுகளும், ஊட்டங்களும் இடுவது ஏற்புடையதல்ல. மக்களைப் பாதுகாக்கத் திறன் அற்ற இன்றைய அரசின் ஆட்சியாளர்களே இந்த அவலத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். நன்னெறிகளைப் படித்த தமிழராகிய நாங்களும் போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, ம-பொ-சி மாமியார்கள் என்று இல்லாது வாழ்ந்து வாழ்க்கையை இனிதாக்கி வாழ வேண்டும்.🙏

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

1 week 6 days ago
தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா! ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (30) புதிய சாதனை உச்சத்தை எட்டியது. அமெரிக்க அரசாங்க முடக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் பாதுகாப்பான புகலிட உலோகத்திற்கான தேவையை அதிகரித்தன. அதன்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,865.73 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் தங்க எதிர்காலம் ஒரு அவுன்ஸ் 3.893.72 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. மூன்றாம் காலாண்டில் மஞ்சள் உலோகத்தின் வி‍லை சுமார் 17% சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏனெனில் பல காரணிகள் மஞ்சள் உலோகத்தின் விலை உயர்வுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன. அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்க முடியாது என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், தங்கத்திற்கான தேவை இந்த வாரம் அதிகரித்துள்ளது. செலவு சட்டமூல நிறைவேற்றவும் நூற்றுக்கணக்கான கூட்டாட்சி நிறுவனங்கள் மூடப்படுவதைத் தவிர்க்கவும் செப்டம்பர் 30 (புதன்கிழமை 0400 GMT) நள்ளிரவு வரை காங்கிரஸ் அவகாசம் அளித்துள்ளது. குடியரசுக் கட்சி ஆதரவுடன் கூடிய செலவு சட்டமூலம் அண்மையில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் இப்போது செனட்டில் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. குடியரசுக் கட்சியினர் செனட்டில் 53 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர். ஆனால் செலவு சட்டமூலத்தை அங்கீகரிக்க குறைந்தது 60 வாக்குகள் தேவை. சுகாதாரச் செலவுகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்ட அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரு கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தைகள் சிறிதும் முன்னேற்றமில்லை என்று தெரிகிறது. அரசாங்க முடக்கம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும், இது வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முடக்கம் ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான அரசு வேலைகள் பறிக்கப்படலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்தது – இது தொழிலாளர் சந்தையில் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலை. இலங்கை விலை விபரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 306,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 282,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1449028

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

1 week 6 days ago
இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம். இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமையினால் நிறுவன ஊழல் தொடர்ந்து நிலவுவதாகவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது 2025 முதலீட்டு சூழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் லஞ்சக் கோரிக்கைகள் குறைவடைந்துள்ள போதிலும் சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்படும் துறைகளில் ஊழல் நீடிப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேவையற்ற விதிமுறைகள், சட்ட நிச்சயமின்மை, அதிகாரிகளின் பலவீனங்கள் முதலீட்டாளர்களுக்கு சவாலாக உள்ளதாகவும்; குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் தனியார்துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை விமர்சித்துவருவதுடன் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவுனங்கள் பெரும்பாலும் இல்லை என்பதனையும் தெரிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதங்களை வழங்கியிருந்தாலும், ஆரம்பகாலம் முதல் உள்ள இந்த அரசாங்கத்தின் மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச சித்தாந்தங்கள் காரணமாக பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 400 மில்லியன் டொலர் பெறுமதியிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திலிருந்து இந்திய அதானி கிரீன் எனர்ஜி விலகியதனையும் மேற்கோள்காட்டி குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பலவீனமாக அதிகாரிகள் நிச்சயமற்றதன்மை தேவையற்ற விதிமுறைகள் ஆகியன இலங்கையில் முதலீடு செய்வதற்கான ஏனைய சவால்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கும் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் லஞ்சம் குறைவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449036
Checked
Mon, 10/13/2025 - 18:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed