1 week 6 days ago
ஆழ்ந்த இரங்கல்கள் . ......!
1 week 6 days ago
எத்தனை எத்தனை கனவுகளுடன்… அவரும், அவரின் பெற்றோரும் இருந்திருப்பார்கள். எல்லாம் மீள முடியாத துக்கத்தில் கொண்டு வந்து விட்டது. மனதை மிகவும் பாதித்த இழப்பு. 🥲
1 week 6 days ago
இளம் வயதிலேயே சிறு நீரகப் பிரச்சினை... பாவம். வாழ்வு தொடங்கிய வேளையிலேயே முடிந்து விட்டது.
1 week 6 days ago
புள்ளிகள் ஒவ்வொரு நாளும் போடுவிங்களா அல்லது இறுதி போட்டி முடிந்த பிறக்கு போடுவிங்களா எல்லா கேள்விக்குமான புள்ளிகள் கந்தப்பு அண்ணா🙏👍.....................
1 week 6 days ago
இன்று வந்த இந்த மயக்கம் ......... சசிகுமார் & ஜெயகுமாரி .........! 😍
1 week 6 days ago
வணக்கம் வாத்தியார் . ........! இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா ஆண் : பனியில் நனையும் மார்கழிப் பூவே எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே பெண் : உனக்கென பிறந்தவள் நானா நிலவுக்கு துணை இந்த வானா ஆண் : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால் வந்தாயே உறவாகா இந்நாள் ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும் நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும் ஆண் : உதடுகள் உரசிடத்தானே வலிகளும் குறைந்திடும் மானே பெண் : நான் சூடும் நூலாடை போலே நீ ஆடு பூமேனி மேலே ஆண் : எந்தன் நெஞ்சில் ஹோ ம் ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா ஆண் : இசைக்கும் குயில் நீ தானா வா.....! --- எந்தன் நெஞ்சில் நீங்காத ---
1 week 6 days ago
41வது கேள்விக்கு இல்லை என்றும் பதில் வந்துள்ளதா. வடிவேலு சொல்வது போல் "சாக்காயிட்டன்". 😁
1 week 6 days ago
பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையாக வளர்ந்து, உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று... பெற்றோருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த பரமேஸ்வரன் பாணுசனின் வாழ்க்கை, சுகயீனத்தால் பாதியில் முடித்துக் கொண்டமை பெரும் சோகம். அவரின் ஆத்மா சாந்தியடையவும், பெற்றோர் இந்த இழப்பிலிருந்து விரைவில் மீண்டு வரவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
1 week 6 days ago
உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, கற்சிலைமடுவைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பயனளிக்காமல் நேற்று (29) இரவு உயிரிழந்த சம்பவமானது முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பதும் பலருடனும் மிகவும் பண்பாக பழகும் ஒரு மாணவனான இவனது இழப்பு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmg6874nz00prqplpy9mk2wom
1 week 6 days ago
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார். இன்று (30) பிற்பகல் பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmg6kzasy00rao29nd1r2xywx
1 week 6 days ago
Published By: Digital Desk 3 30 Sep, 2025 | 01:23 PM நீண்டகாலமாக நிலவும் தண்ணீர் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாக இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் பல நாட்களாகத் தொடர்வதால், மடகஸ்கார் ஜனாதிபதி தனது அரசாங்கத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். "அரசாங்க உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யவில்லை என்றால் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என திங்களன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேசிய உரையில் மடகஸ்கார் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா தெரிவித்துள்ளார். "நாங்கள் வாழ விரும்புகிறோம், உயிரிழக்க விரும்பவில்லை" என கோசமிட்டு “ஜென் Z” போராட்டங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், வியாழக்கிழமை முதல் மடகஸ்கார் முழுவதும் உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். அமைதியின்மையை அடக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தியமையினால் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 100 பேர் காயமடைந்துள்ளனர். இது தேவை அற்ற செயல் என ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்டித்துள்ளார். மடகஸ்காரின் வெளிவிவகார அமைச்சு ஐ.நா.வின் புள்ளிவிவரங்களை நிராகரித்துள்ளதோடு, "வதந்திகள் அல்லது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது" என குற்றம் சாட்டியுள்ளது. முதலில் தலைநகர் அன்டனனரிவோவில் போராட்டங்கள் ஆரம்பமாகின. ஆனால் பின்னர் மடகஸ்கார் நாடு முழுவதும் எட்டு நகரங்களுக்கு பரவியுள்ளன. வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அன்டனனரிவோவில் மாலை முதல் விடியற்காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பாதுகாப்புப் படையினரின் வன்முறை அடக்குமுறையால் தான் "அதிர்ச்சியடைந்ததாக" ஐ.நா ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். கைதுகள், தடியடிகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "தேவையற்ற மற்றும் விகிதாசாரமற்ற சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு பாதுகாப்புப் படையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று டர்க் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா.வின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களில் "பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட போராட்டக்காரர்கள் மற்றும் பார்வையாளர்கள், ஆனால் போராட்டக்காரர்களுடன் தொடர்பில்லாத தனிநபர்கள் மற்றும் கும்பல்களால் அடுத்தடுத்த பரவலான வன்முறை மற்றும் கொள்ளையில் கொல்லப்பட்ட மற்றவர்களும் அடங்குவர்". கடந்த வாரம், மடகஸ்கார் ஜனாதிபதி வேலையைச் சரியாகச் செய்யத் தவறியதற்காக மின்சக்தி அமைச்சரை பதவி நீக்கம் செய்ததாக அறிவித்தார், ஆனால் ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தின் ஏனையவர்களும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் திங்கட்கிழமை மீண்டும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர். "மின்வெட்டு மற்றும் குடிநீர் வழங்கல் பிரச்சனைகளால் ஏற்பட்ட கோபம், கவலை மற்றும் சிரமங்களை நான் புரிந்து கொள்கிறேன்," என ரஜோலினா, தேசிய ஊடகமான டெலெவிசியோனா மலாகாசி வாயிலாக தனது உரையில் தெரிவித்தார். அண்ட்ரி ராஜோலினா, "பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புகளை நிறுத்திவிட்டேன்" எனவும், அடுத்த மூன்று நாட்களில் புதிய பிரதமருக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். எனினும், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சர்கள் இடைக்கால அமைச்சர்களாகச் செயல்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இளைஞர்களுடன் கலந்துரையாட விருப்பம் இருப்பதாகவும் ரஜோலினா தெரிவித்துள்ளார். 1960ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, மடகஸ்கார் பல எழுச்சிகளால் அதிர்ச்சி அடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டில் நடந்த பெரும் போராட்டங்கள், முன்னாள் ஜனாதிபதி மார்க் ரவலோமானனாவை பதவி விலகச் செய்தன. அப்பொழுது ரஜோலினா அதிகாரத்தில் வந்தார். 2023இல் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தப் போராட்டங்களே ஜனாதிபதி எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன. https://www.virakesari.lk/article/226477
1 week 6 days ago
முத்து நகர் விவசாயிகள் 14ஆவது நாளாக தொடரும் போராட்டம் 30 Sep, 2025 | 06:03 PM திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தருமாறு கோரி 14ஆவது நாளாகவும் இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சத்யாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “பொய் வேண்டாம்”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “விவசாயிகளை இப்படியா நடத்துவது”, “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு” மற்றும் “அரசே எங்களுக்கு சோறு போடும் நிலத்தை மீட்டுத் தா” போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர். இது தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில், 352 விவசாயிகளின் காணிகளை சூரையாடியுள்ளனர். அவற்றைப் பெற தொடர்ச்சியாக 14 நாட்களை தாண்டியும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இது தொடர்பில் எங்களுக்காக அரச தரப்பில் இருந்தோ அரசியல்வாதிகளோ குரல் கொடுக்க முன்வரவில்லை. பிரதமர் பத்து நாட்களுக்குள் முடிவு தருவதாக கூறியுள்ளார். அந்த நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் என்றார்கள். https://www.virakesari.lk/article/226517
1 week 6 days ago
Live 1st Match (D/N), Guwahati, September 30, 2025, ICC Women's World Cup India Women (47/47 ov) 269/8 Sri Lanka Women (27/47 ov, T:271) 130/5 SL Women need 141 runs from 20 overs. Current RR: 4.81 • Required RR: 7.05 • Last 5 ov (RR): 28/3 (5.60)
1 week 6 days ago
காஸா போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டங்கள் என்ன? பட மூலாதாரம், EPA/Shutterstock 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், ஹமாஸ் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ பதிலை வெளியிடவில்லை. அமெரிக்காவால் வழங்கப்பட்ட இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: 1. அமைதியான, அண்டை பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத, பயங்கரவாதத்திலிருந்து விடுபட்ட பகுதியாக காஸா இருக்கும். 2. அதிகளவிலான துன்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு பயனளிக்கும் வகையில் காஸா மீட்டுருவாக்கம் செய்யப்படும். 3. இரு தரப்பும் இந்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டால், போர் உடனடியாக நிறுத்தப்படும். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு தயாராகும் வகையில் இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படும். இந்த சமயத்தில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல் உள்ளிட்ட அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். மேலும், திட்டமிடப்பட்டபடி படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் வரை போரிடும் பகுதிகளில் துருப்புகள் நகராது. 4. இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பொதுவெளியில் ஒப்புக்கொண்ட 72 மணிநேரத்திற்குள் உயிருடன் உள்ள பணயக்கைதிகள் நாடு திரும்புவர், இறந்த பணயக்கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும். 5. அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர், இஸ்ரேல் தங்களிடம் உள்ள 250 ஆயுள்தண்டனை சிறைவாசிகள், அக்டோபர் 7, 2023க்குப் பிறகு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,700 பேரையும் விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இறந்த இஸ்ரேலிய பணயக்கைதிக்கும், அந்நாடு காஸாவை சேர்ந்த இறந்த 15 பேரின் உடல்களை திரும்பி வழங்கும். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6. அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர், அமைதியுடன் இணைந்து வாழவும் தங்கள் ஆயுதங்களை கைவிடவும் தயாராக உள்ள ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காஸாவை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு, அவர்கள் செல்லும் நாடுகளுக்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தித் தரப்படும். 7. இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே, காஸாக்கு அனைத்து விதமான உதவிகளும் அனுப்பப்படும். இந்தாண்டு ஜனவரி 19ம் தேதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள மனிதநேய உதவிகளான, மறுவாழ்வுக்கான கட்டமைப்புகள் (தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் வசதி), மருத்துவமனைகள் மற்றும் பேக்கரிகளை மீட்டுருவாக்கம் செய்தல் மற்றும் இடிபாடுகளை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களை வழங்குதல் மற்றும் சாலைகளை திறந்துவிடுதல் ஆகியவற்றுக்குக் குறையாமலும், இவற்றை ஒத்த உதவிகளும் வழங்கப்படும். 8. காஸாவில் உதவிகளை வழங்குவது, இருதரப்பின் தலையீடும் இன்றி ஐ.நா மற்றும் அதன் முகமைகளான செம்பிறைச் சங்கம் ஆகியவை மூலமும் இருதரப்புடனும் தொடர்பில் இல்லாத சர்வதேச நிறுவனங்களுடனும் சேர்ந்து வழங்கப்படும். இரு திசைகளிலும் ரஃபா எல்லையை திறந்துவிடுவதற்கு, ஜனவரி 19, 2025 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்படும். 9. காஸா மக்களுக்கு அன்றாட பொதுச் சேவைகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை வழங்கும் பொறுப்பைக் கொண்ட வல்லுநர்கள் அடங்கிய, அரசியல் சார்பற்ற பாலத்தீனக் குழுவால் ஒரு இடைக்கால நிர்வாகத்தின் கீழ் காஸா ஆளப்படும். இக்குழுவில் தகுதியான பாலத்தீனர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். இந்தக் குழுவை ஒரு புதிய சர்வதேச இடைக்கால "அமைதி வாரியம்" (Board of Peace) மேற்பார்வை செய்யும். இந்த அமைதி வாரியத்திற்கு டொனால்ட் டிரம்ப் தலைமை தாங்குவார். இதில் இடம்பெறும் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உட்பட மற்ற உறுப்பினர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள். டிரம்பின் 2020 அமைதித் திட்டம் மற்றும் செளதி-பிரெஞ்சு திட்டம் உட்பட பல்வேறு முன்மொழிவுகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி பாலத்தீன அதிகார சபை தனது சீர்திருத்தத் திட்டத்தை நிறைவேற்றி பாதுகாப்பாகவும் திறம்படவும் காஸாவின் கட்டுப்பாட்டை மீண்டும் எடுத்துக் கொள்ளும் வரை, இந்த வாரியம் காஸாவின் மறுசீரமைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி, நிதி விவகாரங்களைக் கையாளும். காஸா மக்களுக்குச் சேவை செய்யும் மற்றும் முதலீட்டை ஈர்க்க உதவும் நவீன மற்றும் திறமையான நிர்வாகத்தை உருவாக்க இந்த வாரியம் சிறந்த சர்வதேச தரநிலைகளைப் பயன்படுத்தும். 10. காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும், புத்துயிர் ஊட்டவும், டிரம்பின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்படும். மத்திய கிழக்கில் சில செழிப்பான நவீன நகரங்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைப்பதன் மூலம் இந்தத் திட்டம் உருவாக்கப்படும். பல நல்லெண்ணம் கொண்ட சர்வதேசக் குழுக்களால் முதலீட்டு முன்மொழிவுகளும், அற்புதமான மேம்பாட்டு யோசனைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம், Getty Images 11. ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும், இதில் பங்கேற்கும் நாடுகளுடன் வரி மற்றும் அணுகல் விதிகள் குறித்து பேச்சுவார்த்தை செய்து ஒப்புக்கொள்ளப்படும். 12. யாரும் காஸாவைவிட்டு வெளியேற வற்புறுத்தப்பட மாட்டார்கள், அதேசமயம் யாரெல்லாம் காஸாவை விட்டு வெளியேற நினைக்கிறார்களோ அவர்கள் அதை செய்யலாம், மீண்டும் காஸாவுக்கே கூட திரும்பலாம். காஸாவிலேயே மக்கள் இருக்க ஆதரிக்கப்படும். சிறப்பான காஸாவை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். 13. ஹமாஸ் மற்றும் பிற பிரிவினர் காஸாவின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலோ எந்தப் பங்கையும் வகிக்கக் கூடாது என்று ஒப்புக்கொள்கின்றனர். சுரங்கங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி வசதிகள் உட்பட அனைத்து ராணுவ, பயங்கரவாத மற்றும் தாக்குதல் உள்கட்டமைப்பும் அழிக்கப்படும், மீண்டும் கட்டப்படாது. காஸாவில் சுயாதீன கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் ராணுவ நீக்க (Demilitarisation) செயல்முறை இருக்கும். இதில், இணக்கம் காணப்பட்ட வழிமுறையின் மூலம் ஆயுதங்களை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாதவாறு அகற்றுவது மற்றும் சர்வதேச அளவில் நிதியளிக்கப்பட்ட மறுசீரமைப்புத் திட்டம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் சுயாதீனக் கண்காணிப்பாளர்களால் சரிபார்க்கப்படும். புதிய காஸா, வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதிலும், அதன் அண்டை நாடுகளுடன் அமைதியாக சகவாழ்வு வாழ்வதிலும் முழுமையாக உறுதியுடன் இருக்கும். 14. ஹமாஸ் மற்றும் பிற பிரிவினர் தங்கள் வார்த்தைக்கு இணங்குவதையும், புதிய காஸா அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது அதன் மக்களுக்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்த பிராந்தியப் பங்காளிகளால் ஓர் உத்தரவாதம் வழங்கப்படும். 15. காஸாவில் உடனடியாக நிலைநிறுத்தப்பட ஒரு தற்காலிக சர்வதேச ஸ்திரப்படுத்தும் படையை (International Stabilisation Force - ISF) உருவாக்குவதற்கு அரபு மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும். ISF படை, காஸாவில் பாலத்தீனப் போலீஸ் படைகளுக்குப் பயிற்சி அளித்து ஆதரவளிக்கும். மேலும், இந்தத் துறையில் விரிவான அனுபவம் கொண்ட ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்படும். இந்தப் படையே நீண்ட கால உள்நாட்டுப் பாதுகாப்புத் தீர்வாக இருக்கும். ISF படையானது, புதிதாகப் பயிற்சி பெற்ற பாலத்தீனப் போலீஸ் படைகளுடன் இணைந்து எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் இணைந்து செயல்படும். காஸாவில் ஆயுதங்கள் நுழைவதைத் தடுப்பதும், காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும் புத்துயிர் ஊட்டவும் பொருட்களின் விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை எளிதாக்குவதும் மிக முக்கியமானது. 16. இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிக்கவோ அல்லது இணைத்துக் கொள்ளவோ செய்யாது. ISF படை கட்டுப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் போது, இஸ்ரேல் ராணுவம் வெளியேறும். இந்த வெளியேற்றம் இஸ்ரேல் ராணுவம், ISF, உத்தரவாதம் அளிக்கும் நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையே ஒப்புக் கொள்ளப்படும் தரநிலைகள், மைல்கற்கள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். இஸ்ரேல், எகிப்து அல்லது அதன் குடிமக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத ஒரு பாதுகாப்பான காஸாவை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். நடைமுறையில், இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ள காஸா பகுதியை, இடைக்கால நிர்வாகத்துடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தின்படி ISF படையிடம் படிப்படியாக ஒப்படைக்கும், பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் மீண்டும் ஏற்படாதவாறு காஸா முறையாகப் பாதுகாக்கப்படும் வரை ஒரு பாதுகாப்புச் சுற்றளவு இருப்பு மட்டும் தொடரும். 17. இந்த முன்மொழிவை ஹமாஸ் தாமதப்படுத்தினால் அல்லது நிராகரித்தால், மேலே கூறப்பட்டவை, குறிப்பாக அதிகரித்த உதவிகளை வழங்கும் நடைமுறை, இஸ்ரேல் ராணுவத்தால் ISF-இடம் ஒப்படைக்கப்படும் பயங்கரவாதம் இல்லாத பகுதிகளில் தொடரும். 18. அமைதியால் கிடைக்கும் நன்மைகளை வலியுறுத்துவதன் மூலம் பாலத்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனநிலையையும், கருத்துக்களையும் மாற்ற முயற்சிக்கும் 'மதங்களுக்கு இடையேயான உரையாடல் செயல்முறை' (Interfaith dialogue process), சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகிய மதிப்புகளின் அடிப்படையில் நிறுவப்படும். 19. காஸா மீள் உருவாக்கம் தொடர்ந்து, பாலத்தீன அதிகார சபை (PA) சீர்திருத்தம் நம்பிக்கையுடன் செயல்படுத்தப்பட்டால், பாலத்தீன மக்களின் விருப்பமான பாலத்தீன தன்னாட்சி மற்றும் சுதந்திரமான நாடு உருவாவதற்கான நம்பகமான பாதைக்கான சூழல்கள் உருவாக்கப்படும். 20. அமைதியுடனும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்க இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj4y0jjzzj1o
1 week 6 days ago
76வது இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் இராணுவ கொடிகளுக்கு ஆசிர்வாதம் 30 Sep, 2025 | 04:34 PM எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (29) வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் கிரி விகாரை வளாகத்திலும், கதிர்காமம் தேவஸ்தான வளாகத்திலும் விசேட சமய நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், இராணுவத்தினர் இராணுவ கொடிகளை ஏந்தியவாறு, அக்கொடிகளுக்கு ஆசிர்வாதம் வேண்டி, ஊர்வலமாக கதிர்காமம் கிரி விகாரை மற்றும் தேவஸ்தான வளாகத்திற்கு வருகை தந்தனர். இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/226504
1 week 6 days ago
அர்ச்சுனா ராஜபக்ச. 😂 அர்ச்சுனா ராமநாதனை பிணை எடுக்க, நாமல் ராஜபக்சவுடன்... மகிந்த கட்சியின் வக்கீல்கள்தான் சென்றவர்களாம் என்று, மேலுள்ள படத்தைப் போட்டு... அர்ச்சுனா ராஜபக்ச என்று இணையத்தில் கலாய்க்கிறார்கள். 🤣
1 week 6 days ago
2025 Women's World Cup - இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை மகளிர் அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 271 ஓட்டங்களை வெற்றி இலக்காக இந்திய மகளிர் அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி, இந்திய அணி 47 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்திய மகளிர் அணி சார்பில் டீப்தி ஷர்மா 53 ஓட்டங்களையும் மற்றும் அமன்ஜோத் கவுர் 57 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் இனோகா ரணவீர 4 விக்கெட்டுக்களையும் மற்றும் உதேஷிகா பிரபோதினி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். அதன்படி, டக்வோர்த் லூயிஸ் முறைபடி, இலங்கை அணிக்கு 271 என்ற ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmg6o4qq400q9qplpnw7u0sr9
1 week 6 days ago
விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!" கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்ச நட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், 'இரண்டு வாரங்களாகப் பல ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். விஜய் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? உண்மைகள் விரைவில் வெளியே தெரிய வரும்' என அரசின் மீதும் காவல்துறையின் மீதும் விஷயத்தைத் திருப்பிவிடுகிறார். 'தைரியத்தோடு மீண்டும் வருவோம்' என்கிறார். எல்லாம் சரிதான். ஆனால், அத்தனை உயிர்கள் பறிபோனதற்கு எதோ ஒரு விதத்தில் தானும் காரணம் என்கிற தார்மீக பொறுப்பை விஜய் எங்கேயும் ஏற்கவில்லை. தன்னையும் பாதிக்கப்பட்டவனாகவே காட்டிக் கொள்கிறார். உயிர்களைப் பறிகொடுத்து நிற்கும் குடும்பங்களோடு சேர்ந்து பரிதாபம் தேடிக்கொள்ள முயல்கிறார். ஆனால், அந்தப் பரிதாபத்தைப் பெற்றுக்கொள்ள விஜய் தகுதியானவர்தானா? கரூர் சம்பவத்துக்கு தவெக-தான் காரணம், காவல்துறைதான் காரணம் என இரண்டு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எது எப்படியோ இந்தப் பெருந்துயருக்கு தவெக கட்சியும் விஜய்யுமே தார்மீக பொறுப்பைக் கட்டாயம் ஏற்றிருக்க வேண்டும். சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த பிறகும் தன்னை ஒரு நட்சத்திரமாக மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள முயலும் அவரின் பொறுப்பற்றத் தன்மையை இங்கே கேள்வி கேட்டே ஆக வேண்டும். அரசியல் ஒரு அன்றாட செயல்பாடாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அதை இது நாள் வரைக்கும் விஜய் உணரவில்லை. பனையூரில் அவ்வபோது நிர்வாகிகள் கூட்டமென ஒன்றை விஜயை நடத்துவார். பெரிதாக தகவல் வெளியே தெரியாது. நிருபர்கள் மட்டும் பனையூர் அலுவலகத்துக்கு வெளியே நிற்போம். எப்படியோ விஷயத்தைத் தெரிந்துகொண்டு விஜய்யைப் பார்க்க நூறு, இருநூறு தொண்டர்கள் கூடியிருப்பார்கள். பவுன்சர்கள் சூழ விஜய் வருவார். தளபதி... தளபதி... கடவுளே... கடவுளே... எனத் தொண்டர்கள் தொண்டைக் கிழிய கத்துவார்கள். எந்தக் குரலும் விஜய்க்குக் கேட்காது. கார் கண்ணாடியைக் கூட இறக்கமாட்டார். கண்ணாடியில் கருப்பு கவர் வேறு போட்டிருப்பார். உள்ளே இருப்பது விஜய்தானா என்பது கூட தெரியாது. அந்த காரைப் பார்த்து கும்பிட்டுவிட்டு முடிந்தால் அந்த கார் மீது பாய்ந்து தொட்டுப் பார்த்து விட்டு அந்தத் திருப்தியோடு பனையூர் கடல் காற்றைச் சுவாசித்துவிட்டு தொண்டர்கள் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள். நிர்வாகிகள் கூட்டத்துக்குள் செல்லும் விஜய் அங்கே, 'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என அண்ணா கூறியதைப் பின்பற்ற போகிறேன் என வசனம் பேசுவார். மீண்டும் கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு பனையூர் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். கட்சி அலுவலகத்தின் வெளியே நிற்கும் தொண்டனைப் பார்த்து கையசைத்தால் கூட தன்னுடைய நட்சத்திரத்தன்மை மங்கிவிடும் என நினைப்பவர் எப்படி மக்கள் தலைவனாக மாற முடியும்? வினோதமாக சனிக்கிழமைகளில் மட்டுமே அவர் பிரசாரத்தை வகுத்ததும் அந்த நட்சத்திரத்தன்மையைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான். TVK Vijay விஜய் எப்போது வருவார் எப்போது வருவார் என அவரின் பட ரிலீஸைப் போல அவரின் அரசியல் உரைக்கும் மக்கள் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். அந்தக் காத்திருப்பு மீதான எதிர்பார்ப்பை ஏற்றி, ஏற்றி ஒரு நாள் வெளியே வரும் போது கூட்டம் திமிறிக் கொண்டு வரும். தொண்டர்கள் விஜய்யை கடவுளைப் போல பார்ப்பார்கள். அதுதான் விஜய்க்குத் தேவை. கால்ஷீட் ஒதுக்கி மக்களைச் சந்திக்காமல், அரசியலை மதித்து அன்றாடம் மக்களைச் சந்தித்து மக்களோடு நின்றிருந்தால் அவரைப் பார்க்கக் கூடும் கூட்டத்திடம் இத்தனை வெறித்தனம் இருக்காது. நட்சத்திரத்தன்மையை நம்பாமல் கொள்கையை நம்பி மக்களை நம்பி களத்தில் இறங்கும் நம்பிக்கை விஜய்க்கு இல்லை. அதற்காக ஒரு நட்சத்திரத்துக்காக சாமானியன் இரையாவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் போல விஜய் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். கரூர் பெருந்துயர் நிகழ்ந்ததற்கு அவரின் காலதாமதமும் மிக முக்கிய காரணம். விஜய் நாகப்பட்டினத்தில் காலை 8:45 மணிக்கும், கரூரில் மதியம் 12 மணிக்கும் பேசுவார் என தவெக தரப்பில் பத்திரிகைகளுக்கு அதிகாரப்பூர்வமாக செய்தி அனுப்பப்பட்டது. அதையே தங்களின் ட்விட்டர் பக்கங்களிலும் வெளியிட்டனர். ஆனால், விஜய் சென்னையிலிருந்தே 8:45 மணிக்கு மேல்தான் தனி விமானத்தில் திருச்சி கிளம்பினார். நாமக்கலில் விஜய் மைக் பிடிக்கையில் மணி 2:30-யைத் தாண்டிவிட்டது. 12 மணி எனக் கூறிய கரூருக்கு விஜய் 7 மணிக்குதான் வந்து சேர்ந்தார். தவெக 12 மணிக்கு விஜய் வருவார் எனக் கூறியதைக் கேட்டு காலை 9 மணியிலிருந்தே அந்த வேலுசாமிபுரத்தில் கூட்டம் கூட தொடங்கிவிட்டது. கட்டுச்சோறு கட்டிக்கொண்டு விஜய்யைப் பார்க்க வந்த கூட்டங்கள் தண்ணீரின்றி விக்கி மூச்சுத்திணறி இறந்த பரிதவிப்பு கதைகளை களத்தில் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இந்தக் கால தாமதத்துக்கும் மாநில அரசும் காவல்துறையும் மட்டும்தான் பொறுப்பேற்க வேண்டுமா விஜய்? மக்களோடு நெருங்கி வந்து அன்றாடம் மக்கள் பிரச்னையைப் பேசுவதில்லை. பத்திரிகையாளர்களைக் கண்டாலே அலர்ஜி. சரி, உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் நீங்கள் நெருக்கம் காட்டினால் கூட களத்திலுள்ள பல தகவல்கள் தெரியவரும். சுற்றுப்பயணங்களையும் முறையாக ஒருங்கிணைக்க முடியுமே. திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என விஜய் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் எந்த மாவட்டத்திலும் மா.செக்களை அழைத்து அவர் தனியாகப் பேசியதில்லை. மா.செக்களும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விஜய்யை நோக்கி துண்டை வீசிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் கட்சியா? இதுதான் கட்டமைப்பா? 'இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமித்துவிட்டோம். திமுக, அதிமுகவுக்கு இணையான கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது' என மார்தட்டிக் கொள்ள மட்டுமே பயன்படுகிறது. '10-15 வருசத்துக்கு முன்னாடி நாங்க நினைச்சா விஜய்யைச் சந்திக்க முடியும். இப்போலாம் அப்படி இல்ல...' என எத்தனையோ மா.செக்கள் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளின் தொண்டர்களின் எண்ணத்தைக் கூட அறியமுடியாமல் எப்போதுமே ஒரு தனி வட்டத்துக்குள் அரியணையில் ஏறி அமர்ந்துகொள்ளும் ஆள் எப்படி தலைவனாக இருக்க முடியும்? அவரிடம் எப்படி நாம் தார்மீக பொறுப்பை எதிர்பார்க்க முடியும்? நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என எல்லா தரப்பும் எப்போதும் உங்களின் அருளுக்காகக் காத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட தோதுவான நேரத்தில் மட்டும் வெளியில் வந்து மேம்போக்கான ஒரு அரசியலைப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். இந்த வியூகங்களை வகுத்து கொடுக்க, கூடவே வியூக வகுப்பாளர்களும் வேறு!கரூர் பெருந்துயருக்கு இரங்கல் தெரிவிக்கும் அந்த வீடியோவில் கூட, 'சிஎம் சார் உங்களுக்குப் பழி வாங்கணும்னா என்னை என்ன வேணா பண்ணுங்க. நான் ஆபிஸ்லயோ வீட்லயோதான் இருப்பேன்' எனச் சினிமா வசனம் பேசுகிறார். அதிலும் ஒரு பிராண்டிங். திமுக vs தவெக, ஸ்டாலின் vs விஜய் எனக் களத்தைத் திருப்ப இந்த இரங்கல் வீடியோவையும் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படி இரங்கல் வீடியோவிலும் வியூக வகுப்பாளர்களின் சொல்படி தன்னுடைய அரசியலை பொசிஷன் செய்துகொள்வீர்களா விஜய்? தன்னை அத்தனைப் பேரும் வழிபாட்டு மனநிலையோடு பார்க்க வேண்டும். தன்னை தெய்வமாகப் பார்க்கும் மக்களை மூலதனமாகக் கொண்டு தேர்தல் அரசியலில் அறுவடை செய்ய வேண்டும். இப்படிப்பட்டவர் தனக்குப் பின்னால் கூடும் கூட்டத்தை எப்படி அரசியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவார்? கரூர் பெருந்துயரின் பழி மொத்தத்தையும் விஜய் மீது சுமத்த முடியாது. அரசும் காவல்துறையும் இதில் பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால், அதற்காக விஜய் தன்னையும் பாதிக்கப்பட்டவனைப் போல சித்தரிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்சநட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. பகுத்தறியும் சிந்தனையை மலுங்கடித்து ரசிக வெறி ஊட்டப்பட்ட ஒரு பெரும் கும்பலோடு அரசியலிலும் நட்சத்திரமாகவே உச்சத்தில் இருக்க விரும்புகிறார். அரசியல்வாதிகள் தெருவில் நிற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளைத் தன்னுடைய பிரச்னைகளாக தோளில் சுமக்க வேண்டும். கரூர் பெருந்துயர் மூலம் விஜய் அந்தப் படிப்பினையைப் பெற வேண்டும். சினிமா வசனம் மட்டும் பேசாமல் இனியாவது கள அரசியலைப் படிக்க முயலுங்கள் விஜய்! TVK Vijay speech: 'மக்களோடு மக்களா நில்லுங்க விஜய்!' - கரூர் மரணங்களும் சில கேள்விகளும்! | TVK: 'Stand With the People, Vijay!' – Karur Deaths Raise Tough Questions - Vikatan
1 week 6 days ago
1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஓர் இனத்தின் தனித்துவத்தை எடுத்துக் கூறுவதில் கல்விச்சாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் காத்திரமான வகிபங்கை ஆற்றுகின்றன. அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எம் தமிழினத்தின் ஒரு பெரும் கல்விச் சொத்து தமிழ் மாணவர்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று இனத்துவத்தை இழந்து நிற்கிறது. பரவாயில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையால் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுத்தானாக வேண்டும். எனினும் எங்கள் தமிழ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்தவர்கள் நம்மவர்களேயன்றி, சிங்களவர்கள் அல்ல என்ற உண்மை யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலில் எழுதப்பட வேண்டும். இஃது ஒருபுறமிருக்க, இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பகதரு போல பேராசிரியர்கள் குவிந்த வண்ணமுள்ளனர். முன்பெல்லாம் வருடக்கணக்காகிய பேராசிரியர் பதவிகள் இப்போது நாளொறும் அறிவிக்கப்படுகின்றன. பரவாயில்லை. எங்கள் விரிவுரையாளர்களின் கல்வித் தரம் மற்றும் பட்டப்பின் படிப்புகள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலான கற்றல்கள் என்பன வேகமாகும்போது, அவர்கள் பேராசிரியர் பதவிக்குரிய தகைமையைப் பெற்றுக் கொள்கின்றனர். இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டும். அதிலும் மிகக் குறைந்த வயதில் பேராசிரியர் பதவியைப் பெறுவதென்பது எங்களின் கல்வித் தகைமைக்கான சான்றாக அமையும். அதேநேரம் மாணவர்களின் கல்விக்கும் அது ஊக்க சக்தியாக இருக்கும் என்பதால், பேராசிரியர் பதவிகளைப் பெற்ற அத்தனை பேரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம். அதேநேரம் பேராசிரியர்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிரம்பி வழிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தடக்கி விழுந்தாலும் அது ஒரு பேராசிரியர் மீது விழுவதாகவே இருக்கும். நிலைமை இதுவாயின், எங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எங்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பில் - எங்கள் தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியில் - எங்கள் மருத்துவத் துறையில் - ஆய்வுத் துறையில் பின்தங்கி வாழுகின்ற எம் மக்களின் உயர்வில் பேராசிரியர்களின் பங்கும் பணியும் எவ்வாறாக உள்ளன என்ற கேள்வி எழுவதில் நியாயம் இருக்கவே செய்யும். ஆம், நாளுக்கு நாள் பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதாயினும் எம் மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னமும் ஏற்ற முறாமல் இருக்கிறதெனில், பேராசிரியர்களின் பணிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற எல்லைக்குள் இருக்கக்கூடிய விரிவுரை மண்டபங்களுடன் மட்டுப்படுத்தப் பட்டுள்ளனவா? என்ற ஐயம் எழவே செய்யும். எனவே மேன்மைக்குரிய பேராசிரியப் பெருமக்களே! உங்களின் வாண்மை, உங்களின் ஆய்வுப்புலம் எங்கள் மக்களின் வாழ்வை உன்னதமாக்குவதிலும் கணிசமாகப் பயன்படட்டும் என்பதுதான் உங்களை நோக்கிய எங்களின் தாழ்மையான கோரிக்கை. ஆசிரியர் வலம்புரி பத்திரிகை - 29.09.2025 Babu Babugi
1 week 6 days ago
விஜய் மெளனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம், tvk 30 செப்டெம்பர் 2025, 10:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்' என கரூர் நெரிசல் சம்பவம் வீடியோ மூலம் விஜய் பேசியுள்ளார். சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு சார்பில் வீடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசல், மின் தடை குறித்து அரசுத்தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் சமூக ஊடங்களில் வெளியிட்ட வீடியோவில், "என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்." என பேசியுள்ளார். இந்த சுற்றுப்பயணங்களில் எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு மட்டும்தான் தன் மனதில் ஆழமாக இருக்கும் என்றும், அதனால்தான் அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இடங்களை காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் விஜய் கூறியுள்ளார். "ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும். நான் திரும்பி போக வேண்டியிருந்தால் வேறு சில பதற்றங்கள், சூழல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் மீண்டும் அங்கு செல்லவில்லை." என விஜய் கூறியுள்ளார். இறந்தவர்களுக்கு வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜய், என்ன சொன்னாலும் குடும்பத்தினரின் இன்னல்களுக்கு ஈடாகாது என குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளில் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விரைவில் அவர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், Getty Images 'என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்' "எங்களின் வலிகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால், கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் உண்மையை சொல்லும்போது, எனக்கு கடவுளே வந்து உண்மையை கூறியது போல் இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் தெரியவரும்." என விஜய் கூறியுள்ளார். தங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பரப்புரை நடத்தினோமே தவிர வேறு ஏதும் செய்யவில்லை என கூறியுள்ள விஜய், எனினும் தவெகவினர் மீது வழக்குகள் போடப்பட்டிருப்பதாக கூறினார். சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்கள் மீதும் வழக்கு தொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். "முதலமைச்சரே, உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்களை எதுவும் செய்யாதீர்கள். நான் வீட்டில் இருப்பேன், இல்லையெனில் அலுவலகத்தில் இருப்பேன், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாகியிருக்கிறது, இன்னும் தைரியமாக தொடரும்." என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images அரசுத் தரப்பில் கூறுவது என்ன? இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள், படங்களை காட்டி அமுதா ஐஏஎஸ் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். தவெக கேட்ட இடத்திற்கு மாறாக வேலுசாமிபுரத்தில் அனுமதி தரப்பட்டதா? ''கூட்டத்திற்கு 26-ஆம் தேதி அனுமதி கேட்ட கடிதத்தில் வேலுசாமிபுரத்தில் அனுமதி கேட்டிருந்தனர். 25-ஆம் தேதிதான் வேறொரு கட்சி அங்கு கூட்டம் நடத்தியது. அதில், 10,000-15,000 பேர் கலந்துகொண்டிருந்தனர்.'' கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் ஏன் இடம் கொடுக்கப்படவில்லை? ''கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் இருந்தது. மேலும், வடிகால் கால்வாயும் இருந்தது. அதனால் தான் அந்த இடத்தை போலீஸார் தேர்ந்தெடுத்து தரவில்லை. உழவர் சந்தையில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள கூடிய இடம். எனவே தான், இறுதியில் வேலுச்சாமிபுரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.'' பட மூலாதாரம், Getty Images கூட்டத்தை முன்பே கணிக்க முடியவில்லையா? ''தவெகவின் அனுமதி கடிதத்திலேயே 10,000 பேர் கூடுவார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தனர். இதில், 20 பேருக்கு ஒரு போலீஸ் என, 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் வரும்போது அவரின் பின்னாலும் நிறைய கூட்டம் கூடியது. அதனால் பரப்புரை நடைபெறும் இடத்தில் 25,000க்கும் அதிகமானோர் கூடியிருக்கலாம்.'' பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதா? ''தவெக தலைவர் உரையாற்றும்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது உண்மையல்ல என, கரூரில் மின்வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளனர். தடுப்புகள் அமைத்து கட்சியினர் வைத்திருந்த ஜெனரேட்டர் அறைக்குள் தொண்டர்கள் உள்ளே நுழைந்தபோது அப்பகுதியில் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது.'' பட மூலாதாரம், DIPR படக்குறிப்பு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் காவலர்கள் தடியடி நடத்தியதால் தான் இது நடந்ததா? ''பரப்புரை நடைபெறும் இடத்தை நோக்கி வாகனத்தின் பின்னால் வந்தவர்கள் என பலரும் நகர ஆரம்பித்தனர். அதனால், கூட்ட நெரிசல் அதிகமாகவே பரப்புரை வாகனம் இன்னும் முன்னே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அதை கட்சியினர் கேட்கவில்லை.'' பரப்புரை துவங்குவதற்கு முன்பே நெரிசல் தொடங்கிவிட்டதா? ''நண்பகல் 12 மணிக்கு விஜய் வந்திருக்க வேண்டும். காலையிலிருந்தே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. மதியம் 3 மணி முதல் கூட்டம் அதிகமாகிவிட்டது. வாகனம் பரப்புரை இடத்திற்கு நெருங்கவே, அதன் பின்னால் உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள கூட்டத்துடன் கலந்ததால், கூட்ட நெரிசல் அதிகமானது.'' இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு அமுதா ஐஏஎஸ் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் பதிலளித்தனர். என்ன நடந்தது? பட மூலாதாரம், Getty Images கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார். அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. விஜய் பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr4q19zzv0lo
Checked
Mon, 10/13/2025 - 18:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed