புதிய பதிவுகள்2

தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல! - சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

1 week 6 days ago
தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல! - சுரேஷ் க.பிரேமச்சந்திரன் மன்னார் தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும், உளவியல் அறிஞர்களும், கருத்து தெரிவிக்கின்ற நிலையில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் எத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளும் மக்களின் வளமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் மாற்று வலுசக்தியை வலுப்படுத்துமுகமாக காற்றாலை மின்கோபுரங்கள் சூரிய சக்தி மின் ஆலைகள் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக மன்னார் தீவுப்பிரதேசத்தில் அப்பிரதேசம் சுற்றிவர கடலைக் கொண்டிருப்பதன் காரணமாக பாரிய காற்றாலைகளை அமைக்க அரசாங்கம் தனியார் துறைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது. மன்னார் மக்கள் இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். ஒன்று கனியவளமிக்க மண் கொள்ளையிடப்படுகின்றது. மக்கள் செரிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. மன்னார் தீவில் ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் அதனுடைய இரைச்சல் ஒலி என்பது மக்களையும், மாணவர்களையும் வெகுவாக பாதித்து வருவதாக மக்கள் ஏற்கனவே முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். மேலதிகமாக இன்னும்பல காற்றாலைகளை அமைக்க நிறுவனங்கள் முயற்சிப்பதானது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மேல் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மாற்றுவலுசக்திகள் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காற்றாலை மின் உற்பத்தியும் மின்உற்பத்திக்கான மாற்றுவழி என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மக்கள் செரிவாக வாழும் பிரதேசங்களில் மிக அதிகப்படியான காற்றாலைகளை நிறுவுவதானது மக்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. என்பதும் உண்மையானது. இவை ஒருபுறமிருக்கரூபவ் ஒவ்வொரு காற்றாலை மின்கோபுரத்தை நிறுவும்பொழுதும் எழுபதடிக்குமேல் நிலம் தோண்டப்படுகின்றது. இதன் காரணமாக கடல்நீர் ஊருக்குள் வரக்கூடிய வாய்ப்பும் மழைநீர் மண்ணுக்குள் சேகரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிலத்தடிநீர் மாசுபடுவதென்பதும் கடல்நீர் உட்புகுவதும் வெறுமனே மன்னார் தீவை மட்டும் பாதிக்கின்ற விடயமல்ல. அது மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நிலத்தடிநீரை பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் மக்களுக்கு உள்ளது. இதற்கெதிராகத்தான் மன்னார் தீவுப்பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்தும் போராடி வருகின்றனர். தேர்தலின் போது இவை அனைத்தும் நிறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தாலும் இந்த வேலைத்திட்டத்தைத் தொடரும்படி ஜனாதிபதி இப்பொழுது உத்தரவிட்டிருக்கின்றார். தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வியல் உரிமைகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் அவை பாதித்துவிடக்கூடாது. இந்த விடயத்தில் அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஏற்கனவே முப்பது காற்றாலைகளை நிறுவும்பொழுது மக்கள் அதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அதனால் இன்று ஏற்படுத்தப்படும் இரைச்சலினால் நிகழும் ஒலி மாசுபாடானது மக்களுக்கு பெரும்பிரச்சினையாக இருக்கின்றது என உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே மேற்கொண்டு காற்றாலை மின்கோபுரங்களை அமைக்க வேண்டாம் என்பதுதான் மன்னார் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இதனை அரசு கவனத்துடன் பரிசீலப்பதை விடுத்து இதற்கெதிராகப் போராடுபவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் சிறையிலடைப்பதும் ஜனநாயக விரோதமானதும் சர்வாதிகார அணுகுமுறையுமாகும். அரசாங்கம் இவற்றைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் மன்னார் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்து ஏனைய காற்றாலை மின்கோபுர அமைப்புகளை வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதே சிறந்ததெனக் கருதுகிறோம். அத்தகைய முடிவெடுப்பதானது மன்னார் மக்கள் அமைதியாகவும் தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து வாழவும் வழிவகுக்கும் எனக் கருதுகின்றோம் என தெரிவித்தார். https://www.samakalam.com/தமிழ்-மக்கள்-அபிவிருத்தி/

காசா போர் நிறுத்தம் – ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் – ஹமாஸ் இணங்குமா?

1 week 6 days ago
காசா போர் நிறுத்தம் – ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் – ஹமாஸ் இணங்குமா? adminSeptember 30, 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிகிறது. ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக கூறப்படும் பலரது எச்சங்களையும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுமானால், இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது. போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஹமாஸூக்கு வெள்ளை மாளிகையின் 20-அம்ச திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீன அரசுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Global Tamil Newsகாசா போர் நிறுத்தம் - ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் -...அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.…

கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!

1 week 6 days ago
கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்! adminSeptember 30, 2025 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோப்பாய் நன்னீர் திட்டம் , விவசாய நிலங்களுக்கு அருகாமையில் , உள்ள வெற்றுக்காணிக்குக்குள் வைத்தியசாலைக்கு சொந்தமான வாகனத்தில் , வைத்தியசாலையின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். அதனை அவதானித்த ஊரவர்கள் , கழிவுகளை கொட்டுவது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் போது தாம் நீதிமன்ற அனுமதி பெற்றே நாம் இவ்விடத்தில் கழிவுகளை கொட்டுவதாக கூறியுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதி மக்கள் அது தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபைக்கும் அறிவித்துள்ளனர். அதற்கு கழிவுகளை கொட்டியவர்கள் அதற்கு தீ வைத்து விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்து , சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். https://globaltamilnews.net/2025/220960/

ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு; மாதாந்தம் 3 கோடி ரூபாய் மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு - உதய கம்மன்பில

1 week 6 days ago
29 Sep, 2025 | 02:39 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்கள் மாதாந்தம் சுமார் 3 கோடி ரூபாவை மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு வழங்கி மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில் ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (29) முறைப்பாடளித்ததன் பின்னர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு பின்வருமாறு குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான தேவானந்த சுரவீர 'நாங்கள் அனைவரும் எமது மாதாந்த சம்பளத்தை மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு முழுமையாக வழங்குகிறோம். கட்சி கொடுக்கும் நிதியில் இருந்து தான் வாழ்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தனது மாத சம்பளத்தை தனது விருப்பத்துக்கேற்ப செலவு செய்ய முடியாது.செலவு செய்யும் முறைமை தொடர்பில் நிச்சயிக்கப்பட்ட விடயதானங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாதாந்த கொடுப்பனவு, வருகைக்கான கொடுப்பனவு மற்றும் குழுக்களில் பங்குப்பற்றுவதற்கான கொடுப்பனவு என்ற மூன்று கொடுப்பனவுகளை மாத்திரம் தனது விருப்பத்துக்கேற்ப பயன்படுத்த முடியும். விருந்துபசார கொடுப்பனவு, தொலைபேசி மற்றும் வாகனத்துக்கான கட்டண கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு,எரிபொருள் கொடுப்பனவு ஆகிய கொடுப்பனவுகளை கட்சியின் நிதியத்துக்கு வழங்கி அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும். தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் 3 கோடி ரூபாய் மக்கள் நிதியை முறைகேடாக தமது கட்சியின் நிதியத்துக்கு வழங்கியுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தில் எவருக்கும் சிறப்பு சலுரக வழங்கப்படாது என்பதை அரசாங்கம் தாரக மந்திரமாக குறிப்பிடுகிறது. 159 பேருக்கு எதிராக சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை எதிர்பார்த்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/226404

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 6 days ago
https://www.facebook.com/share/p/1FbGnQj4xg/?mibextid=wwXIfrகரூர் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நெரிசல் படுகொலைகள் வெளிப்படுத்திய தமிழக அரசு மருத்துவத் துறையின் அவலட்சணம் தமிழ்நாடு மருத்துவத் துறையின் அவலட்சணத்தை மனம் நொந்து எழுதியிருக்கும் இலங்கை மருத்துவர். ***** கரூர் கூட்டநெரிசல் இறப்பும் மருத்துவராகச் சில ஏமாற்றங்களும் இலங்கை மருத்துவர் என்னும் வகையில் காணொளிக் காட்சிகள் வாயிலாக நடந்த சம்பவங்களைப் பார்த்தபோது, தமிழ்நாட்டு அரச மருத்துவமனைகளின் தராதரம் குறித்து ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. 1) அம்புலன்ஸ்களின் உள்ளே காணொளிகள் எடுப்பது நோயாளியின் உரிமை மீறலாகும். இலங்கையில் இதுவரை காலமும் அம்புலன்ஸ்சுக்குள் இருந்து அம்புலன்ஸ் ஊழியர்களே காணொளி எடுத்து வெளியிட்ட வரலாறு இல்லை. அப்படி நடந்தால், உடனடியாக அந்த உரிமமே இரத்துசெய்யும் பொறிமுறை இலங்கையில் உண்டு. ஆனால்,நோயாளிகளின் உரிமை குறித்து நோயாளிகளுக்குச் சேவை செய்யும் பொறிமுறையில் உள்ளவர்களுக்கே எந்தவிதமான அடிப்ப்டைப் பயிற்சியும் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகின்றது. 2) இலங்கையில் அம்புலன்ஸ்களில் எந்தவிதமாக கட்சிக்கொடிகளோ, கட்சி பனர்களோ, கட்சி போஸ்டர்களோ ஒட்ட முடியாது. எந்தவிதமாக விளம்பரமும் செய்யமுடியாது. ஆனால், தமிழ்நாட்டில் அம்புலன்ஸ்கள் கட்சிக்கொடிகளுடனும் போஸ்டர்களுடனும் பனர்களுடனும் காவற்றுறைக்கு முன்னாலே நிற்க முடிகின்றது. மருத்துவப்பணியில் உலகமகா கேடு இதுவாகவேயிருக்கும். 3) ஒரு மனித உடல் எந்தவித மூச்சும் பேச்சும் அசைவும் இல்லாமல் இருந்தாலும், ஒரு மருத்துவர் அந்த உடலைப் பரிசோதனை செய்து, அந்த உடலில் உயிர் இல்லை என்பதனை உறுதிசெய்யும் வரை, அந்த மனித உடல் இறந்த உடலாகக் கொள்ளப்படமுடியாது. அங்ஙனம் கொள்ளப்படுவதும் சட்டவிரோதம். எனவே, அப்படிப்பட்ட உடலை, உயிருள்ள உடலாகவே கொள்ளப்படும். எனவே, அதனை UNRESPONSIVE STATE என்பர். உடலுக்கு முதலுதவிகள் செய்யவேண்டியது துறைசார் ஊழியர்களின் கடமையாகும். இங்கு துறைசார் ஊழியர்கள் என்போர் காவலர்,இராணுவத்தார்,தீயணைப்புப் படையினர் என்று அரச பாதுகாப்புத் துறையினரும் மருத்துவ சிற்றூழியர் முதலாயின ஊழியர் அனைவரும் அடக்கம். அதுவும், அம்புலன்ஸ்சில் வரும் உதவியாளருக்கு இப்பயிற்சி இருத்தல் அவசியம்.குறைந்தபட்சம் ஒரு FACEMASK மூலம் ஒக்சிஜன் கொடுப்பதேனும் அவசியம். 4) அம்புலன்ஸ் என்பது வெறுமனே நோயாளியைக் காவிக்கொண்டோடும் ஊர்தியல்ல! அதில் குறைந்தபட்சம் ஒரு ஒக்சிஜன் சிலிண்டர் ஏனும் இருத்தல் வேண்டும்.ஆனால், இந்தச் சம்பவத்தில், ஒரு குழந்தை அம்புலன்ஸ்சுக்குள் அம்புலன்ஸ் கட்டிலில் கிடத்திவிடப்பட்டுள்ளது. முன்னுக்கு ஓட்டுநருக்கு அருகில் ஒரு காவற்றுறை அதிகாரி உள்ளார். ஒரு அம்புலன்ஸ்சு ஊழியர் குழந்தையின் அருகில் இருந்து ''குழந்தை குழந்தை'' என்று கத்திக்கொண்டு இருக்கின்றார். யாரோவொருவர் காணொளி எடுக்கின்றார். யாரும் அந்தக் குழந்தைக்கு CPR/ சிபிஆர் (CARDIOPULMONARY RESUSCITATION) எனப்படும் நெஞ்சினை அழுத்தும் செயல்முறையினையோ, அல்லது குறைந்தபட்சம் ஒரு ஒக்சிஜனையோ கொடுக்கவில்லை. இதயமே செயலிழந்திருந்தாலும், நெஞ்சு அழுத்தும் செயன்முறையையும் ஒக்சிஜனையும் கொடுத்துக் கொண்டிருந்தால் மருத்துவர்களால் அக்குழந்தையைக் காப்பாற்றக் கூடியதாகவிருக்கும். ஆனால், இங்கு அம்புலன்ஸ் உதவியாளருக்கே இதுபற்றிய அறிவு இல்லை. காவற்றுறை அதிகாரிக்கு இல்லை. இலங்கையில் காவற்றுறை அதிகாரிகள் இராணுவத்தார் தீயணைப்புப் படையினர் என்று பாதுபாப்பு உத்தியோகத்தர்களுக்கு இவை பற்றிய பயிற்சிகளை இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் கொடுத்துக் கொண்டிருப்பதுடன், பாடசாலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் செயற்றிட்டத்தையும் இப்போது இலங்கை அரசாங்கம் சுகாதாரத் திணைக்களத்தினூடாக முன்னெடுத்து வருகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தக் கரூர் அனர்த்தத்தில் வெளிப்படையாகத் தெரிவது, தமிழ்நாட்டு அரச மருத்துவத்துறை இலங்கை அரசாங்க மருத்துவத்துறையோடு ஒப்பிட்டால் ''வெறும் கோது'' என்பதேயாகும்! 5) மருத்துவமனையில் வைத்து ஒரு காவற்றுறை அதிகாரி(பெண்மணி) பிள்ளையொன்றுக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுப்பதும் கைகளைப் பிடித்துத் தேய்ப்பதுமாகவே இருந்தார். இதனைப் பலரும் பகிர்ந்து பாராட்டினர். ஆனால், ஒரு மருத்துவராக இக்காட்சியைக் கண்டதும் கவலையே ஏற்பட்டது.தமிழ்நாட்டுச் சினிமாத்துறை போதித்த அவசர சிகிச்சை இதுவேயாகும். தமிழ்நாட்டு அரசும் தமிழ்சினிமாத்துறையைக் கொண்டாடுவதும் அச்சினிமாக்களில் காட்டுவதே முதலுதவிப் பயிற்சி என்றும் பேக்காட்டும் அரசாகும். நெஞ்சினை அழுத்தும் சிபிஆர்/CPR செயன்முறை இல்லாது வெறுமனே நுரையீலுரக்குக் (Lungs) காற்றுக்கொடுப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதோடு, பிரயோசனமேயில்லாத இச்செயன்முறையால் குறித்த காவற்றுறை அதிகாரிக்கே தேவையில்லாத வாய்மூலம் பரவும் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறான செயல் மருத்துவ விரோதமாகும்.முறையான ஒக்சிஜன் கொடுக்கும் வசதி ஏற்படுத்தும் வரை நெஞ்சினை அழுத்தும் சிபிஆர் செயன்முறையைச் செய்துகொண்டிருந்தாலே போதும் என்பதுதான் மருத்துவ சட்டவிதி. மருத்துவ விஞ்ஞானரீதியான் ஆய்வுகளாலும் ஏற்படுத்தப்பட்ட முடிவும் அதுவேயாகும். எனவே, குறித்த அனர்த்தத்தில் UNRESPONSIVE STATE (பேச்சு மூச்சு இல்லாத நிலைக்கு)ப் போனவர்களில் பலர் ஒழுங்கான அனர்த்த முகாமைத்துவ மருத்துவப் பயிற்சி அரச மருத்துவத்துறையில் இல்லாமையினால் இறந்திருக்கக்கூடிய வாய்ப்பும் காணொளிகளால் உறுதியாகின்றது. அரச மருத்துவத்துறையின் தராதரமும் இறப்புவீதத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது என்பதனை காணொளிகளின் ஊடாகவே ஊகிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் அரச இயந்திரம் உருப்படியான அனர்த்த முகாமைத்துவப் பயிற்சிகளைக் காவற்றுறை அதிகாரிகளுக்கும் அம்புலன்ஸ் உதவியாளர்களுக்கும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் கொடுக்கவில்லை என்பது காணொளிகள் தெளிவாகவே தெரிகின்றது. 6) காணொளிகளின்படி, அம்புலன்ஸ்சில் இருந்து கொண்டுவரும் உடல்களை அப்படியே கொண்டுவந்து மருத்துவமனைக் கட்டில்களில் கிடத்துகின்றனர். எந்தவொரு கட்டிலிலும் மொனிட்டர்கள்(MONITORS) இல்லை. உடலில் உள்ள ஒக்கிஜனின் அளவு ( Oxygen saturation), இதயத்துடிப்பு (Heart rate and rhythm ) ,நாடித்துடிப்பு (Pulse rate) என்பவற்றை ஒருசில வயர்களை உடலில் வெறுமனே இணைப்பதனாலேயே ஒருசில கணப்பொழுதில் அறியக்கூடிய டிவி போன்ற கருவியாகும். பொதுவாக அவசரசிகிச்சைப் பிரிவில் 10 கட்டில்களே இருந்தால் 10 மொனிட்டர்கள் இருக்கும். திடிரென ஏற்படும் பெரும் அனர்த்தங்களின்போது, மருத்துவமனையிலுள்ள ஏனைய விடுதிகளில்(wardக்களில்) பயன்பாட்டில் இல்லாத அல்லது அத்தியாவசியத்தேவையில்லாத மொனிட்டர்களை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இடமாற்றஞ் செய்துகொள்வர். இதுவெல்லாம் அனர்த்த முகாமைத்துவ (DISASTER MANAGEMENT) பயிற்சிகளினூடாகவும் மருத்துவமனைகளுக்குரிய உள்ளக சுற்றறிக்கைகள் (GUIDELINES) ஊடாகவும் ஊழியர் யாவருக்கும் காலத்திற்குக் காலம் மருத்துவ நிர்வாகம் புரிதலை ஏற்படுத்தி வைத்திருக்கும். ஆனால், அரச மருத்துவமனைகளில் கொண்டுவந்து கையளிக்கும்போது கட்டில்களில் வெறுமனே கிடத்துகின்றார்களேயொழிய, மருத்துவர் உடனடியாக வந்து பரிசோதனை செய்வதாகவோ- மொனிட்டர்கள் இருப்பதாகவோ- CPR/ சிபிஆர் (cardiorespiratory resuscitation) என்னும் நெஞ்சழுத்தும் செயன்முறையை தாதியரும் மருத்துவர்களும் செய்வதாகவோ காணமுடியவில்லை. 7) இலங்கையில் கொழும்பில் தேவாலய தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது, தேசிய மருத்துவமனைக்கு எந்தவொரு அரச மருத்துவரும் வந்து அவசர சிகிச்சைக்கு உதவலாம் என்று குறுஞ்செய்தி மருத்துவச் சங்கங்களினூடாகக் கொழும்பு வலயத்தினுள் உடனடியாகப் பரப்பப்பட்டது. உடனே, வெறும் அரை மணித்தியாலத்தில் தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும் அவசர சிகிச்சைப் பிரிவும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையிலும் மிதம்மிஞ்சி மருத்துவர் கூடி நிற்கும் இடமாக மாறியது. வரும் நோயாளிகளை (Triage method) தரம்பிரிக்கும் வேலையையே மருத்துவர்களில் ஒருகுழு நின்று செய்து கொண்டிருந்தது. உடல்கள் ஒக்சிஜனோடும் சிபிஆர் செய்தவாறுமே கொண்டுவந்து கையளித்தனர்.குறைந்தபட்சம் ஒக்சிஜனோடேனும் கொண்டுவருவதனை உறுதிசெய்திருந்தனர். இராணுவமும் காவற்றுறையும் இதில் தங்கள் அனர்த்த முகாமைத்துவப் புலமையை நன்கு வெளிப்படுத்தியிருந்தனர். மொனிட்டர் தட்டுப்பாடு, மருத்துவர் தட்டுப்பாடு, தாதியர் தட்டுப்பாடு என்று எதுவும் தென்படவில்லை.இலங்கை அவசர அனர்த்த முகாமைத்துவத்தில் ஆளணிப் பயிற்சியில் வெற்றிபெற்றிருந்தது.பொருளாதாரத்தில் நலிந்த நாடாயினும் இனவாதங்களால் சீரழிந்த நாடாயினும் இலங்கையில் அரச கல்வித்துறையும் அரச மருத்துவத்துறையும் தமிழ்நாட்டைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது என்பதனை இரண்டையும் அனுபவித்தவர்களுக்கு நன்றே விளங்கும். தமிழ்நாட்டில் ஏழைகளுக்குரியதாகவே அரச மருத்துவத்துறையும் கல்வித்துறையும் உள்ளது. இலங்கையில் பணக்காரர்களும் நாடும் இடமாகவே இலங்கை அரச மருத்துவத்துறையும் கல்வித்துறையும் உள்ளது.இலங்கையின் மருத்துவத்துறையில் குறைகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால், அடிப்படை மருத்துவ சேவை பல்லாயிரம் மடங்கு பாராட்டுக்குரியதாகவுள்ளது. திராவிட ஆட்சி என்றும் திராவிட மாடல் என்றும் தமிழ்நாட்டாரினைக் கிணற்றுத்தவளைபோல் ஆக்கி,கேவலமான இழிநிலையில் இருக்கும் அரச மருத்துவத்துறையையே அங்குள்ள ஏழைகள் ‘’இதுவேனும் கிடைந்துள்ளது'' என்று ஏற்றுக்கொள்ளும் அடிமை மனப்பான்மைக்குள் தள்ளி, ஏமாற்றுவைத்திருப்பதும் கண்கூடு. தமிழ்நாட்டை ஊழல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றித் தமிழரின் கைகளில் கொடுத்தால் மட்டுமே, தமிழ்நாடு கொஞ்சமாயினும் வளர்ச்சி அடையும். தமிழ்நாட்டை பீகாருடன் ஒப்பிடாமல், பக்கத்தில் உள்ள இலங்கையோடு ஒப்பிட்டால், திராவிட மாடல் ஆட்சியின் கேடு விளங்கும்! இங்ஙனம், இலங்கை அரச மருத்துவன்

தாலிபான்கள் இணையத்தை துண்டித்ததால் ஆப்கானிஸ்தானில் தொலைத்தொடர்பு முடக்கம்

1 week 6 days ago
Published By: Digital Desk 3 30 Sep, 2025 | 11:08 AM ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கம், ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் (fibre-optic internet connections) துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்கள் கழித்து, நாடளவிய ரீதியில் தொலைத்தொடர்புகளை முடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் தற்போது "முழுமையான இணைய முடக்கத்தை" சந்தித்து வருவதாக, இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது. தலைநகர் காபூலில் உள்ள அலுவலகங்களுடனான தொடர்பை சர்வதேச செய்தி நிறுவனங்கள் துண்டித்துள்ளதாகக் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் கையடக்க தொலைபேசிக்கான இணைய வசதி மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முடக்கத்திற்கான உத்தியோகபூர்வ காரணத்தை தலிபான்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் விளக்கத்தின்படி தாலிபான்கள் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தொலைத்தொடர்பு முடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை நீடிக்கும் என தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனியார் ஆப்கானிய செய்தி சேனலான டோலோ நியூஸ், அதன் தொலைக்காட்சி மற்றும் வானொலி நெட்வொர்க்குகளில் இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதுப்பிப்புகளுக்கு அதன் சமூக ஊடக பக்கங்களைப் பின்தொடருமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது. காபூல் விமான நிலையத்திலிருந்து விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 இன் படி, செவ்வாய்க்கிழமை காபூல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட அல்லது வந்தடைய திட்டமிடப்பட்ட குறைந்தது எட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. காபூலில் உள்ள பலர் ஃபைபர்-ஆப்டிக் இணையம் வேலை நாளின் முடிவில், உள்ளூர் நேரப்படி மாலை 17:00 மணியளவில் முடங்கியதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, வங்கி சேவைகள் மற்றும் பிற வணிகங்கள் மீண்டும் தொடங்கவிருக்கும் செவ்வாய்க்கிழமை காலை வரை பலர் தாக்கத்தை கவனிக்க மாட்டார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. https://www.virakesari.lk/article/226469

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 6 days ago
போட்டி நேரம் முடிவடைந்து விட்டது. வினா 1 இல் கேட்கப்பட்ட விருப்பமான அணியாக இந்தியாவை ஆறு போட்டியாளர்களும், அவுஸ்திரேலியா, இலங்கையை தலா மூவரும் தென்னாப்பிரிக்கா அணியினை இருவரும், இங்கிலாந்து அணியை ஒருவரும் தெரிவு செய்துள்ளார்கள். 1) ஏராளன் - 1 புள்ளி 2) ஆல்வாயன் - 1 புள்ளி 3) வாத்தியார் - 1 புள்ளி 4) வசி - 1 புள்ளி 5) சுவி - 1 புள்ளி 6) கிருபன் - 1 புள்ளி 7) புலவர் - 1 புள்ளி 8) செம்பாட்டான் - 1 புள்ளி 9) வாதவூரான் - 1 புள்ளி 10) கறுப்பி - 1 புள்ளி 11)அகஸ்தியன் - 1 புள்ளி 12)நியூபேலன்ஸ் - 1 புள்ளி 13)ரசோதரன் - 1 புள்ளி 14)ஈழப்பிரியன் - 1 புள்ளி 15)வீரப்பையன் - 1 புள்ளி

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 6 days ago
செம்பாட்டான் சார் சமரி அத்தபத்துவை வைத்து யோசித்திருப்பார் On 27/9/2025 at 18:10, செம்பாட்டான் said: 41வது கேள்வி. 400 என்று கேக்க நினைத்தீர்களோ. 200 ஓட்டங்கள் எல்லாம் மிக இலகுவாக அடிக்கினம். சமீபத்தில அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 400 ஓட்டங்களை துரத்தி அடிக்கப் பார்த்தவை. அவுஸ் 412 - இந்தியா 369

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 6 days ago
ஆண்கள் துடுப்பாட்ட போட்டிகள் போல , மகளிர் துடுபாட்ட போட்டிகளை பலர் பார்ப்பது இல்லை என்பதினால் சில இலகுவான கேள்விகளை கேட்டு இருந்தேன்( வினா இலக்கங்கள் 1, 41.42) . போட்டியாளர்களின் பெயர்களை வைத்தும் கேள்விகள் கேட்கவில்லை. அதிக ஒட்டங்கள், விக்கெட்டுக்கள் பெறுபவர்களின் நாடுகள் பற்றிய கேள்விகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் விடை வரும்படியும் கேட்டிருந்தேன்.

தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல – ஐக்கிய மக்கள் சக்தி

1 week 6 days ago
HSBC தனது சில்லறை வங்கி செயல்பாடுகளை இலங்கையில் நிறுத்தி, அந்த வணிகத்தை Nations Trust Bank-க்கு விற்பனை செய்ய உள்ளது. இந்த விற்பனை HSBC-யின் உலகளாவிய உள்நோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது முக்கியமல்லாத சந்தைகளிலிருந்து வெளியேறி, போட்டி நன்மை உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. விற்பனை விவரங்கள்: விற்பனை செய்யும் வங்கி: HSBC வாங்கும் வங்கி: Nations Trust Bank வணிகம்: சில்லறை வங்கி செயல்பாடுகள் காரணம்: HSBC தனது உலகளாவிய உள்நோக்கத்தை மீளாய்வு செய்து, முக்கிய சந்தைகளில் தனது செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறது. காலக்கெடு: இந்த ஒப்பந்தம் 2026-இன் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒழுங்குமுறை அங்கீகாரங்களுக்கு உட்பட்டது. இந்த நடவடிக்கை HSBC தனது இலங்கையில் உள்ள முழு வணிகத்தை மூடுவதில்லை. மாறாக, அதன் சில்லறை வங்கி பிரிவின் உரிமம் ஒரு உள்ளூர் வங்கியான Nations Trust Bank-க்கு மாற்றப்படுகிறது.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 6 days ago
அடங்க மறு அத்து மீறு திமிறி அடி என்ற சீட்டாஸ் பார்முலாவை காவல்துறைக்கு எதிராக பாவிக்குமாறு அணிலின் கட்சி பிரமுகர்கள் வெளிப்படையாக அறிவித்தார்கள். ஆளுங்கட்சி காவல்துறையை தமது ஏவல் துறையாக பாவிக்கிறது என்று அறிக்கை விட்டார்கள். இன்று வெளியாகியுள்ள இந்த FIR காப்பிக்கு அணில்களின் பதில் என்ன

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 6 days ago
வாத்தியார் அவர் வெளியேறியது சரி. ஆனால் இன்னமும் வெளியே வராமல் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 6 days ago
இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈழப்பிரியன் 15)வீரப்பையன்

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 6 days ago
🤣 விஜய் கூட்டத்தில் உயிர் இழப்புகள் ஏதும்ஏற்படாமல் கரூர் அமைதியாக இருந்தால் கூட விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருக்க மாட்டர் உடனடியாக வெளியேறி இருப்பார் பின்பு அடுத்த சனி கிழமைதான் மக்களுடன் மக்களாக நிற்பது.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 6 days ago
நேற்று ஒரு ஈழத்து பெரியவர் கரூர் அநியாய உயிர் பலி பற்றி பேசிய போது சொன்னார் அங்கே எல்லா தலைவர்களும் சரியான கள்ளர்கள். அவசியம் அங்கே ஒரு புரச்சி வர வேண்டும் என்றார். அதற்க்கு அநுரகுமார திசாநாயக்க போன்ற ஒரு நல்ல தலைவன் அங்கே இல்லை என்றார் 🙄 இலங்கையில் உள்ள சிங்கலவர்கள் கூட இவர் மாதிரி அநுரகுமார திசாநாயக்கவிடம் இவ்வளவு திருப்தியாக இருக்க மாட்டார்கள்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks ago
அரசியல் ஆதாய நோக்கங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, சம்பவ இடத்தில் ஒரு கட்சி சாராத சாதாரண மனிதர் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள். எந்த தள்ளுமுள்ளும் வரமுன்பே 4 பெரிய அம்புலன்சை அந்த வழியே அனுப்பி உள்ளனர்.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 weeks ago
எதோ மனிதன் பிறந்து விடடான் அவன் ஏனோ மரம்போல் வளர்ந்து விடடான் நாயாய் மனிதன் பிறந்திருந்தால்நன்றி என்னும்குணம் நிறைந்திருக்கும் நரியை உருவெடுத்தாலும் தந்திரமாவது தந்திரமாவது இருந்திருக்கும். காக்கை குலமாய் அமைந்திருந்தாலே ஒற்றுமையாவது நிலைத்திருக்கும்
Checked
Mon, 10/13/2025 - 21:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed