புதிய பதிவுகள்2

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 5 days ago
மிகவும் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இந்த இழப்பிலும் சகலரும் அரசியல் அனுகூலங்களை கணக்குப் போடுகின்றார்களோ தவிர, இழந்து நிற்கும் குடும்பங்களுக்காக ஒரு தார்மீக ஆதரவைக் கூட காட்ட முன்வருகின்றார்கள் இல்லை. இங்கு யாழ் களத்தில் கூட ஒவ்வொரு பக்கங்களிலும் இருந்து வரும் இணைப்புகளும் தங்களின் பக்கத்தை இந்தப் பாதகத்தில் இருந்து தப்பிக்க வைக்கும் ஒரு தலைப்பட்ச நியாயங்களும் மற்றும் இதில் ஆதாயம் தேடும் ஒரு போக்குமே அன்றி, ஒரு நடுநிலையான பார்வையினூடு நிகழ்வுகளை ஆராய்வதாக இல்லை. இத்தனைக்கும் இங்கு சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்களும் இணையத்திலேயே இருக்கின்றது. இந்தப் பாதகத்தை திட்டமிட்டவர்கள், அப்படி யாராவது இருந்தால், மேல் வரும் அதே அருவருப்பும் கோபமுமே, ஓடி ஒழிந்த விஜய் மீதும், அவரது இரண்டாம் கட்ட தலைவர்களின் மீதும் வருகின்றது. 'த்தூ..............' என்று விஜய்காந்த் ஒரு தடவை பேசியதும் இந்த நேரத்தில் தவிர்க்க முடியாமல் நினைவில் வருகின்றது.

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 5 days ago
விஜய் கைது என்பது தமிழ் நாட்டையே பிரளயமாக்கும் என்பது ஆழும் தரப்பினருக்குத் தெரியும் அதே வேளை இந்த அனர்த்தத்தில் ஆழும் தரப்பினரின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் விஜய் குற்றவாளி என்றால் காவல் துறைக்குப் பொறுப்பான ஸ்டாலினும் குற்றவாளி தான் சிறிய கைதுகளுடன்.... விசாரணைக்கு குழுக்களின் அறிக்கைகளைத் தயாரிப்பதில் இழுத்தடிப்புச் செய்து...... இந்தப் பிரச்சனையை மழுங்கடித்து விடுவார்கள்.இரு தரப்பினரும்

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 5 days ago
வீடியோ ரிலீஸ் செய்த விஜய்க்கு திமுகவின் 9 கேள்விகள் 30 Sep 2025, 8:24 PM கரூர் துயர சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் நடிகர் விஜய்-க்கு திமுக 9 கேள்விகளை முன்வைத்து விளக்கம் கேட்டுள்ளது. விஜய் பிரசாரம் செய்த கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கரூர் துயரம் தொடர்பாக அரசு தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, அதில் தமிழக அரசை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. திமுகவின் @DMKNRIWing எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டுள்ளதாவது: தான் நடத்திய ஒரு கூட்டத்தில் மாபெரும் துயரம் ஒன்று நடைபெறும்போது, அதற்கான பொறுப்பை முதலில் தான் ஏற்றுக்கொள்வதுதான் தலைமைக்கான பண்பு. அந்தப் பண்பு உங்களிடம் துளியும் இல்லை என்பது, முழுக்க முழுக்க அரசாங்கத்தைக் குற்றம்சாட்டி நீங்கள் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெளிவாகிறது. சரி, நீங்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போங்கள். “நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் சொல்லும் உங்களுக்கு சில கேள்விகள்: நாமக்கல் மாவட்டத்தில் காலை 8.45 மணிக்கு பரப்புரை செய்வதாக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, சென்னையிலிருந்தே காலை 8:30 மணிக்கு கிளம்பியது ஏன்? மதியம் 12.30 மணிக்கு வரவேண்டிய கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்தது ஏன்? உங்களைப் பார்ப்பதற்காக காலை முதல் காத்திருந்த உங்கள் ரசிகர்களுக்கு தண்ணீர், உணவு என்று எதையும் கொடுக்காமல் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது ஏன்? கூட்டம் அளவு கடந்து செல்வதால், பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி காவல்துறை அறிவுறுத்தியபோது, அதை மதிக்காதது ஏன்? காவல்துறையிடம் நீங்கள் கேட்ட மூன்று இடங்களுமே குறுகலானவை என்று தெரிந்தும், காவல்துறை சரியான இடத்தை வழங்கவில்லை என்று பொய் கூறுவது ஏன்? நீங்கள் பரப்புரை செய்த பகுதியில் அரசாங்கம் மின் துண்டிப்பு செய்யவில்லை என்றும், ஜெனரேட்டர் இருக்கும் பகுதியின் மேல் உங்கள் ரசிகர்கள் சென்று விழுந்ததால், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் ஜெனரேட்டரை அணைத்தார் என்பது வீடியோ ஆதாரமாகவே உள்ள சூழ்நிலையில், அரசாங்கம் மின் துண்டிப்பு செய்தது என்று பொய் பரப்பியது ஏன்? உங்களால் கரூர் செல்ல முடியாததற்கு காரணம் சொல்லும் நீங்கள், மூன்று நாட்களுக்குப் பிறகும் உங்கள் கட்சியினரைக் கூட அனுப்பி உதவிகள் செய்யச் சொல்லாதது ஏன்? கரூரில் மட்டும் ஏன் இந்த சம்பவம் நடைபெற்றது என்று விஷமத்தனமாக கேட்கும் நீங்கள், மற்ற ஊர்களிலும் இவ்வாறு நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களா? கரூரில் உங்களைப் பார்க்க வந்து இறந்த பலர் உங்கள் ரசிகர்களோ தொண்டர்களோ அல்ல என்று உங்கள் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியது ஏன்? இதுதான் நீங்கள் இறந்த உங்களுடைய ரசிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையா? மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், “எந்த ஒரு தலைவரும் தன்னைப் பார்க்க வந்தவர்கள் இறக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்” என்றார். ஆனால் நீங்களோ, எந்த ஒரு பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமல், பிரச்சனையை அரசின் பக்கம் திசைதிருப்பி விடும் வகையிலும், உங்களுடைய ரசிகர்களைத் தூண்டிவிடும் வகையிலும் சினிமா பாணியில் வீடியோவில் பேசியிருக்கிறீர்கள். ஒரு தலைவருக்கும் நடிகருக்கும் உள்ள வேறுபாடு இதுதான். தொடர்ந்து நடியுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/karur-tragedy-dmk-poses-9-questions-to-vijay-after-his-video-release/#google_vignette

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 5 days ago
அரசியலில் இன்னும் பக்குவம் அடையவில்லை என்பதையும் அவருடன் சேர்ந்திருக்கும் யாருமே சரியான ஒரு அரசியல் பாதையை விஜய்க்கு வகுத்துக் கொடுக்க முடியாதவர்களுமாக இருப்பதையும் இந்த ஒளிந்து இருக்கும் நிலை காட்டுகின்றது ஆனாலும் அரசியலுக்கு வந்துவிட்டால் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு முன்னேறலாம் என்பது விஜயிக்குத் தெரியாமலா இருக்கும் விஜய் என்ற ஒரு மக்கள் ரசிக்கும் நபரை அரசியலில் யாருமே எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் அப்படியான நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்து நேரடியாகவே ஆழும் தரப்பினரை குறி வைத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா ? அல்லது அந்த விஜயின் கட்சியையே கருவிலே அழிக்க நினைப்பார்களோ? ஆகவே தான் விஜயின் குஞ்சுகளுக்கு கொஞ்சம் புத்தி இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 5 days ago
இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இந்த 3 நிமிட விளக்கத்திற்கு 3 நாட்கள் ஏன்?

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 week 5 days ago
ஒரு கட்சியைப் பதிவு செய்யும் பொது தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கேட்டுத்தான் பதிவு செய்திருக்கும். இப்ப அது அல்ல பிரச்னை வரப்போகும் ஆபத்தை முன் கூட்டியே காவல்துறை அவதானிக்கவில்லையா ? அல்லது நடக்கட்டும் பின்னர் மெதுவாக நாங்கள் உள்ளே செல்வோம் என்ற முன்னேற்பாட்டுடன் இருந்தார்களா ? அரசியலுக்காக மக்களை பலிக்கடாவாக்க நினைக்கும் கட்சிகளுக்கு காவல்துறை துணை போகின்றதா ? விரைவில் தெரிய வரும் விஜய் காவல்துறைக்குத் தெரியாமல் கரூரில் இருக்க முடியாது காவல்துறை அனுமதி கிடைத்து அவர் அங்கு தொடர்ந்தும் இருந்திருந்தால் இந்த அவலத்தைக் காரணம் காட்டியே அலுவலை முடித்திருப்பார்கள் தி மு க என்ன சும்மா ஒரு கட்சியா எம் ஜி ஆரை,ஜெயலலிதாவை எதிர்த்து நின்றும் இன்னும் அழியாத ஒரு கட்சி

‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்

1 week 5 days ago
விகடனின் இந்த கட்டுரையை முன்பு வாசித்தேன். ஐபில் வெற்றிவிழாவின் போது இடம்பெற்ற சனநெரிசல் சாவும் நினைவுகூறத்தக்கது. இந்தியா போன்ற சனத்தொகை நிறைந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்குரிய சாத்தியங்கள் அதிகம். விஜய் அவர்கட்கு தனது பகுதியால் மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை இல்லை என்பது ஒருபுறம் போக அல்லது அவரது வழக்கறிஞர்கள் அறிவுரையாகவும் அமையலாம்; இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மக்களை சென்றடைய இப்போது நவீன தொழில்நுட்ப உலகில் வேறு பல அம்சங்கள், வழிமுறைகள் உள்ளன. நேரடி ஒன்றுகூடல்களுக்கு பதிலாக இதர மாறீடுகள் பயன்படுத்தப்படுவது அவசியம்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 5 days ago
விஜய் விடியோ வெளியிட்டார். ஆனால் தனது தவறினாலும் தனது கட்சி ஏற்பாட்டாளர்கள் தவறினாலும், இவ்வளவு மக்கள் இறந்ததற்கு வருத்தம் மன்னிப்பை கோரினாரா?

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 5 days ago
அருணா கமிசன் விசாரணை, பொலிஸ் குற்றவியல் விசாரணை நடக்கும் போது அமுதா ஐ ஏ எஸ் சுக்கு இப்படி ஒரு கூட்டம் போடும் அவசியம் என்ன? வழக்கை குழப்பும் முயற்சி என எடப்பாடி ஒரு பிடி பிடித்துள்ளார்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 5 days ago
மேலும் நானும் மனுசந்தானே என்னால் இந்த துயரத்தை தாங்க முடியவில்லை சம்பவ இடத்துக்கு அருகில் தங்க விரும்பினேன், ஆனால் மேலும் அசம்பாவிதம் வரும் என சொல்லி என்னை அகற்றினர். என்றும் கூறினார்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 5 days ago
வாய்ப்பை பயன் படுத்தி மாறி, மாறி பிரச்சார வீடியோவை இணைக்கும் எவரும், விஜை வெளியிட்ட வீடியோவை இணைக்கவில்லை என நினைக்கிறேன்😂. விஜையா முக்கியம் நமக்கு, நம்ம பொழப்புத்தான் முக்கியம் என எண்ணுகிறார்களோ என்னமோ😂. கரூரில் மட்டுமே ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும் மக்கள் பார்த்துகிட்டுதான் இருக்காக விரைவில் உண்மை வெளிவரும் சி எம் சார், பழிவாங்குவாயின் என்ன பழிவாங்குங்கள், நிர்வாகிகளை விட்டு விடுங்கள் அரசியல் பயணம் தொடரும் ஆதரவாக கதைத்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி இவை விஜை சொன்னது

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 5 days ago
கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் அவசரமாக அனுமதி Velmurugan PPublished: Tuesday, September 30, 2025, 21:08 [IST] சென்னை: தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து வதந்தி பரப்பியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள் . அந்த வகையில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு உடல் பரிசோதனை செய்ய சென்ற போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Also Read இதற்கிடையில், கரூர் நெரிசல் தொடர்பாகப் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும்,செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்றும் சோஷியல் மீடியாவில் தவெகவினர் குற்றம்சாட்டி தகவல்களை பரப்பி வந்தார்கள் இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டு எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளைப் பதிவு செய்த 3 பேரை நேற்று போலீசார் கைது செய்திருந்தனர். அதில் இரண்டு பேர் தவெகச் சேர்ந்தவர்கள் ஆவார். ஒருவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை தனியார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு முன்பு மருத்துவமனைக்கு உடற் பரிசோதனைக்கு சென்றபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. Recommended For You இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரைக் காண அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பெலிக்ஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாரடைப்பால் பெலிக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/youtuber-felix-gerald-suffers-sudden-heart-attack-urgently-admitted-to-government-hospital-739681.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards பிகு போன கருத்தில் இவரையும், சவுக்கையும் ஊடகவியளாலர் என எழுதினேன். யூடியூபர்ஸ் என்பதே சரியான பதம்.
Checked
Mon, 10/13/2025 - 18:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed