புதிய பதிவுகள்2

தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?

3 months 2 weeks ago
தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா? September 3, 2024 — கருணாகரன் — பல அணிகளாகச் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தத்ததளிக்கும் மக்களையும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தையும் பலப்படுத்துவதற்கே தமிழ்ப்பொது வேட்பாளர் என்று சொல்லப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்புமாகும். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அதற்கான பரப்புரைகளும் அங்கங்கே நடக்கின்றன. பொதுவேட்பாளருக்காக இன்னும் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. என்றாலும் பரப்புரைகள் தொடர்கின்றன. பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் கலந்து கொண்டாலும் பரப்புரைகளில் ஆழமான, புதிய சேதிகள் எதையும் பொதுக்கட்டமைப்போ, பொதுவேட்பாளரோ சொல்லவில்லை. நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் கூடப் பேசப்படவில்லை. ஆனால், சொல்லப்பட்டதற்கு மாறாகத் தமிழ்ப்பொது வேட்பாளர், தமிழ்ச்சமூகத்தை ஆழமாகவே பிளவு படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழ்ச்சமூகத்தை மட்டுமல்ல, தமிழ்க்கட்சிகளையும்தான். (பொதுவேட்பாளரை நிறுத்தினால் இதெல்லாம் நடக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது). பல இழுபறிகள், தடுமாற்றங்களுக்குப் பிறகு, பொது வேட்பாளரைக் கட்சி ரீதியாக ரெலோ ஆதரிக்கிறது. ஆனால், கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் பகிரங்கமாகவே அதை எதிர்க்கிறார். வினோநோகராதலிங்கத்தோடு ஒரு அணியும் இதை எதிர்க்கிறது. ஆக, ரெலோவுக்குள் இரண்டு நிலைப்பாடுகள். இதைப்பற்றிக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போது சொன்னார், “ரெலோ ஒரு ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையில், எவரும் எந்த முடிவையும் எடுக்கலாம். ஆகவே தன்னுடைய நிலைப்பாட்டைச் சொல்வதற்கு வினோவுக்கு உரித்துண்டு” என. இது அவருடைய தலைமைத்துவத் தோல்வியின் வெளிப்பாடாகும். மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த கட்சிகளில் ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கைக் கொண்டிருக்கும் ரெலோவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நிலை உருவாகியுள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அதாவது, தன்னுடைய கட்சியையே பொதுவேட்பாளருக்கான முழுமையான ஆதரவு நிலைப்பாட்டுடன் நிறுத்த முடியவில்லை – செல்வம் அடைக்கலநாதனால். இந்தச் சீரில் எப்படிப்பொது வேட்பாளருக்கான ஆதரவை வெளியே மக்களிடத்திலும் பிற அரசியற் சக்திகளிடத்திலும் ஒன்று திரட்டுவது? அதற்கான தகுதியையை இழந்து நிற்கிறது ரெலோ. ஆனால், இதை ஒத்த நிலைமைகள் வேறு கட்சிகளுக்குள் நடந்தால், அதைப் பெரும் பிளவாகக் காட்டுவதற்குப் பலர் உள்ளனர். குறிப்பாக இந்த மாதிரிப் பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குள் நடக்கிறது என்றால், அதை மேடை போட்டுச் சொல்வதற்கும் அதற்கு எண்ணெய் ஊற்றி தீயைப் பற்ற வைப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள். என்பதால்தான், தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீறி அந்தக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை எடுத்த பொதுவேட்பாளருக்கான ஆதரவைப் பாராட்டிக் கொண்டாடுவதற்காக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அங்கே ஓடோடிச் சென்றார். தன்னுடைய கட்சியின் உறுப்பினர். அதுவும் பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவர் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாமல், மறுதலித்து வெளியே நிற்கிறார். அதைப் பேசித்தீர்த்து ஒரு ஒழுங்குக்கொண்டு வராமல், அடுத்த வீட்டுப் பிரச்சினையைப் பார்க்கப்போயிருக்கிறார் செல்வம். இதைத்தான் சந்தி சிரிக்கும் சங்கதி என்பது. கடைசியில் செல்வத்தினால் (தலைவரினால்) வினோநோகராதலிங்கத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் முடிவை முழுமையாகக் கொண்டாடவும் முடியவில்லை. காரணம், தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டக்கிளைகள் தன்னிச்சையாக எடுத்த – கட்சியின் தீர்மானத்துக்கு மாறான முடிவுகள் செல்லுபடியற்றனவாகி விட்டன. இப்பொழுது தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், அதே பகிரங்கத் தன்மையோடு பொதுவேட்பாளரை மறுதலித்துள்ளது. போதாக்குறைக்கு பொதுவேட்பாளராக நிற்கும் அரியநேத்திரன் அதிலிருந்து விலக வேண்டும். அல்லது கட்சிக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று காலக் கெடுவையும் விதித்துள்ளது. இதை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சஜித் பிரேமதாசாவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வில் உரையாற்றும்போது மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனால் ஓடோடிச் சென்று வாழ்த்துச் சொன்ன செல்வம், மூக்குடைபட்டுப் போயிருக்கிறார். இதுதான் பொது வேட்பாளரை ஆதரித்து நிற்கும் தலைமைத்துவங்களின் நிலையாக உள்ளது. ஆனால் தமிழரசுக் கட்சியையும் பொது வேட்பாளர் விடயம் இரண்டாகப் பிளந்துள்ளது. ஏற்கனவே அந்தக் கட்சி உள்முரண்பாடுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக நீதிமன்றப்படியேறி வழக்காடிக் கொண்டிருக்கிறது. அதை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் இப்போதுள்ளது. பொதுவேட்பாளரை அந்தக் கட்சியைச் சேர்ந்த சிறிதரனின் அணியினர் ஆதரிக்கின்றனர். அவருக்கு வெளியே உள்ளவர்கள் அதை எதிர்க்கின்றனர். இது கட்சியை மேலும் ஆழமாகப் பிளவு படுத்துகிறது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தப் பிளவுகள் மேலும் வலுப்பெறும் என்றே தெரிகிறது. ரெலோ, தமிழரசுக் கட்சிக்குள் மட்டுமல்ல, புளொட்டுக்குள்ளும் மோதல்கள் உருவாகக் கூடிய சூழலே உள்ளது. பொதுவேட்பாளர் தொடர்பாக புளொட்டுக்குள் ஏற்கனவே இருவேறு நிலைப்பாடுகளுண்டு. புளொட்டின் தலைவர் சித்தார்த்தனுக்கு இதில் உடன்பாடில்லை. இதை அவர் பல தடவை நேர்ப்பேச்சுகளில் சொல்லியிருக்கிறார். கட்சியின் அடுத்த நிலையில் உள்ள சிலரின் விருப்பத்துக்கு இடமளிக்கும் வகையிலும், தாம் இணைந்து நிற்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகவுமே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளது என. எனவே ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சிகளுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவெடுக்கக் கூடிய சூழலே காணப்படுகிறது. இதற்கொரு சிறிய எடுத்துக் காட்டு, பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகும். ஆனால், பொது வேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழரசுக் கட்சி உள்ளது. வேட்பாளராகப் போட்டியிடும் அரியநேத்திரனிடம் அது விளக்கம் கோரியிருப்பதுடன், போட்டியிலிருந்து விலகுமாறும் அது பணித்துள்ளது. ஆக பொதுவேட்பாளரை நிராகரிக்கின்ற கட்சியிலிருந்து கொண்டே, அதனுடைய மத்திய குழு உறுப்பினராக இருந்து கொண்டே, கட்சியின் நிலைப்பாட்டுக்கும் விதிமுறைகளுக்கும் மாறான முறையில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் அரியநேத்திரன் என்றால், அவருடைய கண்ணியம், ஒழுங்கு, மதிப்புப் பற்றியெல்லாம் என்னவென்று சொல்வது? குறைந்த பட்சம் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவர் விலகிக் கொண்டு தமிழ்ப்பொது வேட்பாளராக நின்றிருக்க வேண்டும். அல்லது இப்பொழுது விலக வேண்டும். மட்டுமல்ல, “மட்டக்களப்பு ரகசியங்கள்” என்ற அநாமதேய முகப்புத்தகத்தை இயக்கியோரில் ஒருவராகவும் அரியநேத்திரன் இருந்துள்ளார். அதற்குள்ளிருந்து கொண்டே தமக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களை அந்த அநாமதேய முகப்புத்தகத்தில் அவர் வசைகளைப் பாடிப் பழிதீர்த்திருக்கிறார். பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியபோதுதான் இந்த விடயங்கள் எல்லாம் வெளியே தெரியவந்தன. பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியதை விரும்பாத “மட்டக்களப்பு ரகசியங்களின்” ஏனைய பங்காளர்கள் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளனர். இதை மறுத்துரைக்க முடியாத நிலையில் உள்ளார் திரு. அரியநேத்திரன். அரியநேத்திரனின் வயது, தகுதி, பொறுப்பு என எதற்கும் தகுதியில்லாத வேலை அதுவாகும். அப்படியான ஒருவரை தமிழரசுக் கட்சி மத்திய குழுவில் வைத்திருந்ததற்காக வெட்கப்பட வேண்டும். அதையும் விட அவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கிய பொதுக்கட்டமைப்பினரும் அதற்குள்ளிருக்கும் மூத்த கட்சிகளும் கூடத் தலைகுனிய வேண்டும். மொத்தத்தில் சிறுபிள்ளை விளையாட்டாகத் தொடங்கிய தமிழ்ப்பொது வேட்பாளர், பெருந்தீமைகளை உருவாக்கப்போகிறது. 1980 களில் விடுதலை இயக்கங்கள், மக்களுடைய நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக பொறுப்பற்ற தனமாகச் செயற்பட்டன. இதைக்குறித்து அப்போது எழுத்தாளர் செங்கை ஆழியான், “இந்த நாடு உருப்படாது” என்றொரு நாவலையும் “சிறுபிள்ளை வேணாண்மை”, “குளவிக்கூட்டைக் கலைக்காதீர்கள்” என இரண்டு சிறுகதைகளையும் எழுதினார். அந்தக் கதைகள் மிகச்சரியான கணிப்பீட்டையும் மிகக் கூடிய உண்மையையும் எடுத்துரைத்திருந்தன. ஆனால், அதை அன்று பலரும் ஏற்கவில்லை. எள்ளி நகைத்தனர். இறுதியில் செங்கை ஆழியான் சொன்னதே நடந்தது. அதையொத்த காட்சிகளே இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் வரலாறு நகரவில்லை. தேங்கிக் கிடக்கிறது. https://arangamnews.com/?p=11189

ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.

3 months 2 weeks ago
நடை பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலின் வாக்குச் சீட்டு இதுதான். அரசாங்க ஊழியர் ஒருவர் தான் வாக்களித்ததை போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறார். வாக்களித்ததை வெளியிடுவது சட்டப்படி பிழை என்றாலும், தமிழ் பொது வேட்பாளர் தோல்வி அடையகூடாது, அவர் வெற்றி பெறுவது தமிழ் இனத்தின் வெற்றி என்கிறதன் அடிப்படையில் தான் வாக்களித்ததை எனக்கு அனுப்பி இருக்கிறார். சங்கின் வெற்றி என்பது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சுழன்று கொண்டிருக்கறது . வாக்களிக்கும் இறுதி நிமிடத்தில் நம் மக்கள் நமக்காகவே வாக்களிப்பார். Malaravan Uthayaseelan

ஜேர்மனியில் இஸ்ரேலின் துணைதூதரகத்திற்கு வெளியே சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

3 months 2 weeks ago
இன்று (05.09.2024) காலை முதல் முனிச் (Munich) நகரத்தில் ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கை ஒன்று நடந்து வருகிறது என யேர்மனி தென் மேற்கு ஊடகம் அறிவித்திருக்கிறது. இன்று காலை 9 மணிக்குப் பிறகு, இஸ்ரேலிய துணைத் தூதரகத்திற்கு முன்பாகவும் நாசி ஆவண மையத்திற்கு அருகிலும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. முனிச்சில் உள்ள நாசி ஆவண மையம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூதரகங்கள் இருக்கும் இடம் அதி உயர் பாதுகாப்பு வலயமாகும். இந்தப் பகுதியிலேயே ஆயுததாரி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.பாதுகாப்பு நிறைந்த இடமானாதால் அங்கிருந்த பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், துப்பாக்கிதாரி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதம் ஏந்திய நபரின் அடையாளம் இன்னும் வெளிவரவில்லை. பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவங்களை யாராவது புகைப்படங்கள், அல்லது ஒலி,ஒளி பதிவுகள் எடுத்திருந்தால் அவற்றை புலனாய்வாய்துறையின் இணையத்தளத்தினூடாக அறியத்தரலாம் என புலானாய்வுத்துறை கேட்டிருக்கிறது. செப்டம்பர் 5, 1972 இல், முனிச்சில், பாலஸ்தீனிய தீவிரவாதிகள் ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபெற வந்திருந்த இரண்டு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை சுட்டுக் கொன்றதுடன் ஒன்பது இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பணயக் கைதிகளாகவும் பிடித்து வைத்திருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் பணயக்கைதிகளும், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஐந்து கொலையாளிகளும் இறந்திருந்தார்கள். அவர்களுக்கான நினைவேந்தல் இருந்ததால் இஸ்ரேலிய தூதகரம் இன்று காலையில் திறக்கப்படவில்லை. அதனால் ஒரு அனர்த்தம் தவிர்க்கப் பட்டிருக்கிறது. https://x.com/RonenSteinke/status/1831597456032739359? https://www.n-tv.de/politik/Muenchen-Polizei-schiesst-bewaffnete-Person-nieder-article25206386.html

தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ

3 months 2 weeks ago
முழு நாடும் தமது என நினைப்பவர்களிடம் எமக்கு தீர்வு இருக்குமா?! ஆயுதப்போராட்டம் பேரழிவில் முடிந்தாலும் நில ஆக்கிரமிப்பை 30 ஆண்டுகள் தடுத்திருந்தது என்பதையும் மறக்கக்கூடாது.

வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து வன்முறை குழு அட்டகாசம்; பாலூட்டிக் கொண்டிருந்த தாய் உட்பட ஐவர் மீது தாக்குதல்

3 months 2 weeks ago
பெண்களையும் சிறுவர்களையும் தாக்கிய வன்முறை கும்பல்; வட்டுக்கோட்டை பொலிஸார் அதிரடி நடவடிக்கை! Published By: DIGITAL DESK 3 05 SEP, 2024 | 01:50 PM வன்முறை கும்பல் ஒன்று நேற்று புதன்கிழமை (04) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண்கள் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். அந்தவகையில் விரைந்து செயற்பட்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டினை பார்வையிட்டனர். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் ஏனைய ஐவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/192919

இந்தியாவின் "தரங் சக்தி" பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்கேற்பு

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 7 05 SEP, 2024 | 12:53 PM இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் இந்திய விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட "தரங் சக்தி" வான் போர் பயிற்சியில் இணைந்தது. மேலும் இந்த பயிற்சியில் 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 விமானங்கள் பங்கேற்றன. "தரங் சக்தி "விமானப் போர் பயிற்சியின் முதல் கட்டம் 2024 ஆகஸ்ட் 06 முதல் 14 ம் திகதி வரை இந்தியாவின் தமிழ்நாடு, சூலூர் விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன். இரண்டாவது மற்றும் இறுதி கட்ட பயிற்சிகள் 14 செப்டம்பர் 2024 அன்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நடைபெறவுள்ளது. இந்த விமான போர் பயிற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்களிப்பை வழங்கியுள்ளது. பூகோள பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்தியாவினால் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய சர்வதேச விமானப் பயிற்சியான "தரங் சக்தி" பயிற்சியில் இலங்கை விமானப்படை பங்குபற்றுவதன் மூலம் இலங்கை விமானப்படைக்கு சர்வதேச இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அமைகின்றது . மேலும், இலங்கை விமானப்படையின் விமானிகள், விமானப் பணியாளர்களுக்கு இதனூடாக புதிய அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது. https://www.virakesari.lk/article/192902

நேர்மை - பொறுப்புக்கூறல் - அமைப்பு முறை மாற்றம் கோரிய மக்கள் போராட்டத்தினை மறக்கவேண்டாம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வேண்டுகோள்

3 months 2 weeks ago
நேர்மை - பொறுப்புக்கூறல் - அமைப்பு முறை மாற்றத்தை கோரி இரண்டு வருடங்களிற்கு முன்னர் வெடித்த பாரிய மக்கள் போராட்டத்தினை மறக்கவேண்டாம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வேண்டுகோள் Published By: RAJEEBAN 05 SEP, 2024 | 10:30 AM 2024 ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கரிசனை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அவர் பல வேட்பாளர்கள் தனது ஆதரவை கோரியுள்ள போதிலும் நடுநிலைமை வகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை ஆதரிக்கப்போவதுமில்லை என அவர் தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டின் எதிர்காலம் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறான சவால்களையும் நிச்சயமற்றதன்மையையும் எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும்போது நாட்டின் நிலைமை குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் தனிநபர்கள் குறித்து சிந்திக்ககூடாது, ஒவ்வொரு வேட்பாளரும் முன்வைத்துள்ள திட்டங்கள் குறித்து சிந்திக்கவேண்டும், அவர்கள் தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் இருக்ககூடியவர்கள் யார் என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்றதிகார முறை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் கல்வி விவசாயம் (குறிப்பாக சிறு விவசாயிகள்)சிறிய நடுத்தர தொழில்துறையினர், தோட்டதொழில்துறை, சுற்றுலாத்துறை, சர்வதேச வர்த்தகம் போன்ற துறைகளிற்கான கொள்கைகளிற்கும் முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடமிருந்து நேர்மை, பொறுப்புக்கூறல், அமைப்பு முறை மாற்றத்தை கோரி இரண்டு வருடங்களிற்கு முன்னர் முழு நாட்டிலும் வெடித்த பாரிய மக்கள் போராட்டத்தினை - இயக்கத்தினை நாங்கள் மறக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192887

தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ

3 months 2 weeks ago
மிஸ்ரர் ஐலான்ட், இது எல்லாம் எப்பநடந்தது.நேரே பக்கத்திலைநின்றது போல் கதை விடுகிறீர்கள். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உங்களிட்டை என்ன தீர்வு கிடக்கோ சட்டுப்புட்டென்று அமுல் படுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே. என்ன சுணக்கம். சும்மா காமடி பண்ணிக்கொண்டு (சிங்களவரிட்டை எந்தத் தீர்வும் எந்தக்காலத்திலையும் இருக்கவில்லை என்பது தான் உண்மை. சும்மா தமிழர்கள் சந்தர்ப்பத்தைப் பாவிக்கவில்லை என்பதெல்லாம் சாட்டு மட்டும் தான்)

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் அதிகரிப்பு - டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல்

3 months 2 weeks ago
05 SEP, 2024 | 10:05 AM தேர்தல் பிரச்சார காலத்தில் பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் கடும் கரிசனை வெளியிட்டுள்ளது. பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் ஸ்ரீலங்காவின் நிறைவேற்று பணிப்பாளர் நதிசானி பெரேரா தெரிவித்துள்ளார். 300 முறைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர், அரசியல் நோக்கங்களிற்காக பொதுச்சொத்துக்களை பயன்படுத்துபவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவது குறித்து மக்கள் ஆர்வமாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192886

25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.

3 months 2 weeks ago
என்ன செய்வது நாட்டில் மக்கள் உழைக்காமல் விரைவில் பணம் தேடவேண்டும் என்னும் பேராசையில் அலைகின்றார்கள் ........ அவர்களின் இலக்கு வெளிநாட்டினர் ....... இவர்களில் பலர் பணத்தை வைத்துக் கொண்டு சுகம் தேடி அலைப்பவர்களாக இருக்கின்றார்கள் . ........இதுதான் துரதிஷ்டம்......! 😢

மாதகல் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 05 SEP, 2024 | 12:53 PM மாதகலில் இருந்து நேற்று புதன்கிழமை (05) அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போனார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று கரையொதுங்கியது. மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/192911

ஜேர்மனியில் இஸ்ரேலின் துணைதூதரகத்திற்கு வெளியே சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

3 months 2 weeks ago
05 SEP, 2024 | 02:47 PM ஜேர்மனியின் மியுனிச் நகரில் உள்ள இஸ்ரேலிய துணை தூதரகத்திற்கு அருகில் சந்தேகநபர் ஒருவர் மீது ஜேர்மனி பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இஸ்ரேலின் துணைதூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் ஆகியன அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் காயமடைந்துள்ளார் வேறு சந்தேகநபர்கள் இருப்பதாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிபோன்ற ஒன்றுடன் காணப்பட்ட நபர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/192925

25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.

3 months 2 weeks ago
சுவிஸ்கார அண்ணை, காட்டின கத்தியையும் அவர்கள் பார்த்து விட்டு, 47 இலட்சத்தையும் கறந்து போட்டு விட்டு விட்டார்கள். நாடு ரொம்ப மோசமப்பா... 😂 🤣

25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.

3 months 2 weeks ago
சுவிசில், சுவிஸ் ஆர்மி கத்தி (swiss army knife) பிர‌பலம் என்று கேள்விப்ப்ட்டுள்ளேன். அதை கையில் வைத்து காட்டி, சுழற்றி படம் பிடித்தாரோ தெரியாது.

"அமைதியின் கதவு திறக்கட்டும்"

3 months 2 weeks ago
அத்தியடியில் பூத்து யாழ்களத்தில் நறுமணம் வீசும் கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களே! ஆரோக்கியத்திற்கு. ஓய்வும் அவசியம். எடுங்கள் வேண்டியமட்டும்.🙌
Checked
Mon, 12/23/2024 - 07:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed