3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ..........!
ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்
ஆண் : நேற்று பார்த்தேன்
நிலா முகம் தோற்று போனேன்
ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி உன் கண்களோடு
இனி மோதல் தானடி
ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்
ஆண் : காதலே வாழ்க்கையின்
வேதம் என்று ஆனதே கண்களால்
சுவாசிக்க கற்று தந்தது
ஆண் : பூமியே சுழல்வதாய்
பள்ளிக்கூடம் சொன்னது
இன்று தான் என் மனம்
ஏற்றுக்கொண்டது
ஆண் : ஓஹோ காதலி
என் தலையணை நீ என
நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம்
மார்புடன் அணைத்துக்
கொள்வேன்
ஆண் : கோடைக் கால
பூங்காற்றாய் எந்தன்
வாழ்வில் வீசுவாய்
ஆண் : புத்தகம் புரட்டினால்
பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை
ஞாபகம்
ஆண் : கோயிலின் வாசலில்
உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே
பக்தன் ஆகுவேன்
ஆண் : ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை
எடுப்பது போல் சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான்
ரசித்திடுவேன்
ஆண் : உன்னை பார்க்கும்
நாள் எல்லாம் சுவாசக்
காற்று தேவையா.......!
--- என்ன இதுவோ---
3 months 2 weeks ago
இங்கே நண்பர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் . .......! 😂
3 months 2 weeks ago
`ஜினுக்கு சிங்காரி’ ராப் பாடல்தான் சமீபத்திய சோஷியல் மீடியா ட்ரெண்டிங். ‘மருதமோ எந்தன் காவியமோ’ எனத் தமிழ் வார்த்தைகளை எடுத்துக் கோத்து 2கே கிட்ஸ்களில் ஆரம்பித்து 80-ஸ் கிட்ஸ்கள் வரை ஆட்டம்போட வைத்திருக்கிறது அந்தப் பாடல். பாடலைப் பாடிய வாகீசன் ராசையா, திஷோன் விஜயமோகன், அட்விக் உதயகுமார், டி.ஜே.சிவாஜி என்ற ‘ராப் சிலோன்’ டீமைச் சந்தித்தோம்.
``ஆகஸ்ட் முதல் வாரத்துல கொழும்புல நடந்த கான்செர்ட்லதான் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.ஜே.சிவாஜி அண்ணனை சந்திச்சேன். ரொம்ப நட்பா பழகினார். ஒரே ஹோட்டலில்தான் அறை ஒதுக்கியிருந்தாங்க. ரூம்ல உட்கார்ந்து தூக்கம் வராம கேஷுவலா பாடுன பாட்டுதான் ‘ஜினுக்கு சிங்காரி.’ இந்த அளவுக்கு வைரலாகி ட்ரெண்டாகும்னு நினைச்சுக்கூட பார்க்கல. இயக்குநர் அமீர் சார் நேரில் கூப்பிட்டுப் பாட வெச்சுப் பாராட்டினதோடு, அவர் படத்துல இரண்டு பாடல்கள் பாட வாய்ப்பு கொடுக்கிறதாவும் சொல்லியிருக்காரு!" - உற்சாகத் துள்ளலோடு பேசும் வாகீசன் ராசையாவிடம், “தமிழ்மீதும் இசைமீதும் ஆர்வம் வந்தது எப்படி?'' என்று கேட்டோம்.
“பிறந்து வளர்ந்தது எல்லாமே யாழ்ப்பாணம்தான். என்னோட அம்மா துஷ்யந்தினி ஆசிரியர். தமிழ்மீது ரொம்ப ஆர்வம் கொண்டவங்க. நிறைய தமிழ்ப் பாடல்களும் எழுதியிருக்காங்க. எனக்கும், அண்ணன் உமாகரன், அக்கா சாகித்யகருமாரி மூணு பேருக்குமே அம்மா சின்ன வயசிலிருந்தே தமிழை ஊட்டி வளர்த்தாங்கன்னுதான் சொல்லணும். திருக்குறள், 63 நாயன்மார்கள், திருப்புகழ், தேவாரம், மூதுரை, நன்னெறின்னு அம்மாதான் அறிமுகப்படுத்தினாங்க. சங்க இலக்கிய நூல்கள் எல்லாமே எனக்கு அத்துப்படி. அண்ணன் உமாகரனும் புத்தகங்கள் எழுதியிருக்கார். நான் ராப் பாடுவேன்னு கண்டுபிடிச்சதே அண்ணன்தான். ‘நீ கட கடன்னு பேசுறதே ராப் பாடுற மாதிரி இருக்கு’ன்னு சொல்லி, பாட வெச்சதே அவர்தான். அதுக்கப்புறம்தான் ராப் பாடல்கள் பாடுறதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள்னா உயிர். பாடலாசிரியர்களில் எனக்கு இன்ஸ்பிரேஷன்னா கண்ணதாசன் ஐயாதான். அவருடைய வரிகள் எளிமையாவும் மக்களின் வாழ்வியலோடு கலந்தும் இருக்கும்.
நண்பர்கள் அட்விக், திஷோன் மூணு பேருமே யாழ்ப்பாணம்தான். கலைத்துறையில சாதிக்கணும்ங்கிறதுதான் எங்க ஆசை. 2020-ம் ஆண்டு ‘ராப் சிலோன்’னு இசைக்குழுவை உருவாக்கினோம். ஆரம்பத்துல டிக்டாக், இன்ஸ்டா, பேஸ்புக்ல நிறைய பாடல்கள் பாடி வீடியோ போட்டோம். ‘தமிழில் ராப் பாடுறீங்களா... மக்கள்கிட்ட போய்ச் சேராது'ன்னு சொன்னாங்க. ஆனா, பாசிட்டிவ் கமெண்ட்களை மட்டுமே எடுத்துக்கிட்டேன்.
எங்கப்பா அருள்பரன் கடுமையான உழைப்பாளி. ரொம்ப வருசமா டீக்கடையில வேலை பார்க்கிறார். `நீ தொடர்ந்து முயற்சி செய்... படிப்பையும் விட்ராத!'ன்னு ஊக்கப்படுத்தினார். நான் எப்பவும் வகுப்புல முதல் மார்க்தான். எனக்கு வயசு 24. பயோமெடிக்கல் டிகிரி முடிச்சிருக்கேன். அடுத்ததா, மாஸ்டர் டிகிரி முடிச்சுட்டு ரிசர்ச் பண்ணணும்ங்குற ஐடியாவும் இருக்கு. அப்பாவோட கனவை நிறைவேற்றிட்டு எனக்கு விருப்பப்பட்ட இசைத் துறையிலும் சாதிப்பேன். இலங்கையில சமீபத்துல நடந்த சந்தோஷ் நாராயணன், யுவன் கான்செர்ட்ல நாங்க பாடியிருக்கோம். அடுத்ததா, விஜய் ஆண்டனி சாரோட கான்செர்ட்டிலும் பாடப்போறோம்.
நான், அட்விக், திஷோன் மூணு பேரும் தமிழ்நாட்டுல இந்த அளவுக்குப் பேசப்படுறதுக்குக் காரணமே டி.ஜே. சிவாஜி அண்ணாதான். அவர், புதிய பாடல்களுக்கேற்ற பழைய டான்ஸ்களையும் பழைய டான்ஸ்களுக்கேற்ற புதிய பாடல்களையும் மிக்ஸ் பண்ணி நிறைய வீடியோக்கள் போட்டு தமிழ்நாட்டுல ஏற்கெனவே ரொம்ப ஃபேமஸ். இப்போ வைரலான ‘மருதமோ எந்தன் காவியமோ' பாட்டுக்கு மியூசிக் மிக்ஸிங் பண்ணினார். நாங்க நாலு பேருமே சேர்ந்து மிட்நைட் கான்செர்ட் பண்ணலாம்னு திட்டமிட்டிருக்கோம்'' என்றார்.
டி.ஜே சிவாஜி நம்மிடம், “நான் மதுரைக்காரன். சாதாரண மிடிள்கிளாஸ் பையன். எனக்கு சின்ன வயசுலருந்தே பாட்டு கேக்குறது பிடிக்கும். அதனால்தான், பொறியியல் பட்டப்படிப்பு படிச்சு சாப்ட்வேர் துறையில வேலை பார்த்தாலும், வேலையை விட்டுட்டு டி.ஜே ஆகிட்டேன். டி.ஜே-ன்னாலே ஆங்கிலப் பாடல்கள்தான் மிக்ஸிங் பண்ணுவாங்க. ஆனா, தன்னம்பிக்கையோட தமிழ்ப் பாடல்களுக்கு மிக்ஸிங் பண்ணினேன். அதுதான், இந்த அளவுக்கு என்னைத் தூக்கி விட்டிருக்கு. விக்னேஷ் சிவன், ஜிப்ரான் எல்லோருமே என்னோட மிக்ஸிங்கைப் பாராட்டியிருக்காங்க. 15 வருடமா இந்த ஃபீல்டுல இருக்கேன். இப்போ, டி.ஜே வகுப்புகளும் ஆரம்பிச்சு தமிழ் டி.ஜே-க்களை உருவாக்கிட்டு வர்றேன். இவங்க எதேச்சையா சந்திச்சு இப்ப சொந்தத் தம்பிங்க மாதிரி ஆகிட்டாங்க. என்னை சொந்த அண்ணனா நடத்துறாங்க!'' என்கிறார் நெகிழ்வோடு.
வாகீசனுடன் பாடி வைரலான அட்விக், “எனக்கு சினிமால நடிக்கணும்னு ஆர்வம். இப்போ யாழ் சினிமாவான `ராட்சச ராமன்' படத்துல நடிச்சுக்கிட்டிருக்கேன். வாகீசன் மாதிரி ஃப்ரெண்ட் கிடைச்சா வாழ்க்கையில ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம்..!'' என்கிறார் எனர்ஜியோடு.
வாகீசனின் `ராப் சிலோன்' குழுவின் இசையமைப்பாளர் திஷோன், “எங்க மூணு பேருக்கும் ஒரு ஒற்றுமை என்னன்னா மூணு பேரோட அம்மாக்களும் டீச்சர்கள்தான். எங்களுக்குள்ள இருக்குற அலைவரிசை இப்போ குடும்பம் வரை தொடருது. நாங்க, கட்டுப்பாடான கிறிஸ்தவ குடும்பம். படம் பார்க்கக்கூட அனுமதிச்சது கிடையாது. சர்ச்சிலும் பக்கத்து வீட்டு அண்ணாகிட்டயும் கீபோர்டு கத்துக்கிட்டதைப் பார்த்து என்னை வீட்டுல புரிஞ்சுக்கிட்டாங்க. வீட்டுல பெருசா வருமானம் கிடையாது. பார்ட் டைமா ஓட்டல்ல வேலை பார்த்துக்கிட்டுதான் படிச்சேன். லோன் போட்டு நாலு வருசமா கஷ்டப்பட்டு ஒரு சின்ன ஸ்டூடியோ கட்டினேன். அந்தப் பத்துக்குப் பதினஞ்சு ரூம்லதான் எங்க டீமோட பாட்டுகளை கம்போஸ் பண்ணுறோம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மாதிரி மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆகணும்ங்குறதுதான் என்னோட கனவு!'' என்கிறார் நம்பிக்கையோடு.
“தமிழ் இலக்கியம், தமிழ் மரபு, ஈழத்தமிழர்கள் பற்றி என் பாடல்கள் மூலமா தமிழ் மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணும்னு விரும்புறேன். அதனால்தான், பாடுறது மட்டுமல்லாம எழுதவும் செய்றேன். பெரும்பாலும் தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்துறேன். அதுக்கான, அங்கீகாரமாதான் பாராட்டுகள். யுகபாரதி ஐயா நேர்ல கூப்பிட்டு என்னைப் பாராட்டியது ஊக்கமா இருந்துச்சு. உலகம் முழுக்க கான்செர்ட் நடத்தி தமிழைக் கொண்டுபோய்ச் சேர்க்கணும்ங்கிறதுதான் என்னோட கனவு. அதேபோல நான் ராவணனுடைய மிகப்பெரிய பக்தன். முப்பாட்டன் ராவணன் மட்டுமல்லாம ராவணன் தங்கை சூர்ப்பணகை பத்தியும் பாடுறேன். சூர்ப்பணகையோட அழகைக் கம்பர் அப்படி வர்ணிச்சுச் சொல்லியிருக்கார். அதை யாரும் கண்டுக்கல. அதைத்தான் பாட்டா பாடிட்டு இருக்கேன். இனியும் பாடுவேன்!” என்கிறார் வாகீசன் பெருமிதத்தோடு.
https://cinema.vikatan.com/music/rap-ceylon-music-group
3 months 2 weeks ago
எந்த பலனும் கிடைத்துவிட கூடாது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவோம் என்பது தானே தமிழ் பொது வேட்பாளர் நியமித்ததின் நோக்கமே
3 months 2 weeks ago
இந்த காணி , பொலிஸ் அதிகாரம் வேண்டாம் என்று தானே 1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள். அதை விட மிக அதிகம் தேவை என று போய் இன்று 1987 ல் கிடைத்தது கூட கிடைக்க போவதில்லை என்பது தான் நிஜம். காலம் எப்போதும் ஒரே நிலையில் நிற்பதில்லை மாறிக் கொண்டே போகும் . 1929 ல் சிங்கள தலைவர்கள் சமஸ்டியை வலியுறுத்திய போது அன்றைய தமிழர்கள் அதை நிராகரித்தனர். தமிழ் தலைவர்களை சமஸ்டிக்கு இணங்க வைக்க சிங்களத் தலைவர் பண்டாரநாயக்கா அன்று முயன்று தோல்வியடைந்தார். இன்று காலங்கடந்து தமிழர்கள் சமஸ்டியை கேட்கிறார்கள்.
2002 ல் பேச்சுவார்தை தொடங்கிய பின்னர்
நோர்வேயில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டியை ஆராய்வது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமஸ்டியை ஆராய வல்லுனர. குழு நியமிக்கப்பட்ட பின்னர் தமிழர்களால் அது நிராகரிக்கப்பட்டது. இன்று அதை வேண்டிப் போராட்டம்.
இதற்கு தான் கூறுவது காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்று.
இளமை துடிப்பில் தன்னை மன்மதன் என்று கற்பனை செய்து திருமணத்துக்கு ஆயிரம் நிபந்தனைகள் வைத்து வந்த பெண்கள் எல்லோரையும் நிராகரிப்பவர்களுக்கு வயதான பின்னர் அதே எந்தப் பெண்ணும் கிடைப்பது அரிதாக தான் இருக்கும். தமிழரின் அடுத்த சந்ததியாவது அறிவை பயன்படுத்த வேண்டும்.
3 months 2 weeks ago
யாருடைய பிள்ளையோ அனாதையாய் கிடக்கு . ........கரைசேருமா . .........! 😴
3 months 2 weeks ago
இது உண்மையாகத்தான் இருக்கும் போல . ........!
முந்தநாள் ஒரு வாகனம் திருத்துவதற்கு கழட்டி சில உதிரிப் பாகங்களை இன்னொருவர் மூலம் ஓடர் பண்ணினனான் .......இன்று வந்து எனது கணணியைத் திறந்தால் அந்தந்தப் பொருட்கள் வேறு எங்கெங்கு வாங்கலாம் என்று விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கு . .......!
3 months 2 weeks ago
வாஷிங்டன்: நம்முடைய ஸ்மார்ட்போன் நாம் பேசும் உரையாடல்களை கவனிப்பதாக, பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் பணியாற்றும் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ஒரு டிவி வாங்குவதை பற்றியோ அல்லது வாடகை வீடு குறித்தோ நீங்கள் பேசியிருந்தால் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொருட்கள் தொடர்பான விளம்பரங்களே தொடர்ந்து உங்கள் டைம்லைனில் வந்து கொண்டிருக்கும்.
பல ஆண்டுகளாக வெறும் ஊகமாக இருந்த இந்த விவகாரம் தற்போது உண்மையாகியுள்ளது. டிவி மற்றும் ரேடியோ செய்திகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் காக்ஸ் மீடியா குரூப் (Cox Media Group) தனது முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது, ஆக்டிவ் லிஸனிங் டெக்னாலஜி (Active Listening technology) என்ற மென்பொருளின் மூலம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மைக் வழியாக நம்முடைய உரையாடல்களை நமது ஸ்மார்ட்போன் கவனித்து அதற்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக பேஸ்புக், அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
நம்முடைய வாய்ஸ் டேட்டாவை சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை அனுப்பவதில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. 470க்கும் அதிகமான மூலாதாரங்களில் இருந்து ஏஐ மூலம் இயங்கும் இந்த மென்பொருள் குரல் தரவுகளை சேகரிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இது நாம் போனில் பேசுவது மட்டுமின்றி நேரில் பேசுவதையும் கவனிக்கிறது.
இந்த தகவல்களை 404 மீடியா என்ற ஊடகம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், காக்ஸ் மீடியா குரூப் நிறுவனம் குறித்து தனது பாட்காஸ்டில் அம்பலப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதன் ஒட்டுக் கேட்கும் தொழில்நுட்பம் குறித்து வெளிக்கொண்டு வந்துள்ளது.
அமேசான் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்த நிறுவனத்துடன் நேரடி தொடர்பில் இருப்பதால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இரண்டு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொருபுறம் இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் காக்ஸ் மீடியா நிறுவனத்துடன் பணியாற்றும் திட்டமில்லை என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“உங்கள் போன் நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது” - பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒப்புதல் | Company that works with Amazon, Facebook confirms your phone is listening to you - hindutamil.in
3 months 2 weeks ago
நல்ல கேள்வி... ...பதிலும்கூட. தமிழர்கள் பேச்சுவார்த்தைகளை குழப்பினார்கள் என்பவர்கள் இதனை பலதடவைகள் வாசியுங்கள் 🙏🤣🤣
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
நிழலி, தகப்பனின் உத்தியோகத்தை கவனித்தீர்களா. ஆசிரியராம்.
எப்படியிருந்த சமூகம், தலைகீழாக மாறியிருக்கு.
3 months 2 weeks ago
சரி... சரி.., ரென்சன் ஆகாதேங்கோ. 😂
அடுத்தமுறை கவனமாக பார்த்து பதிகின்றேன். 🤣
3 months 2 weeks ago
02 SEP, 2024 | 01:38 PM
டி.பி.எஸ். ஜெயராஜ்
இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் இறந்ததை அடுத்து இப்போது 38 பேர் களத்தில் நிற்கிறார்கள். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பிரபல ஊடக நிறுவனங்களின் உரிமையாளரான திலித் ஜயவீர, பிலாட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மூத்த இடதுசாரி தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய, முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர் நுவான் போபகே மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் ஏனைய குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள்.
முக்கியமான போட்டியாளர்களாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவும், பிரேமதாசவும், திசாநாயக்கவுமே இருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்குகளைப் பெறக்கூடியவர்களாக நாமல் ராஜபக்சவையும், திலித் ஜயவீரவையும் எதிர்பார்க்கலாம்.
ஆனால், சில வேட்பாளர்கள் விசேட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். வேறு சிலர் இரகசிய காரணங்களுக்காக " போலி " வேட்பாளர்களாக நிற்கிறார்கள். சிலர் விளம்பரம் தேடுபவர்கள். ஜனாதிபதி தேர்தலில் எந்த விதத்திலும் தங்களால் வெற்றபெறமுடியாது என்பது பல வேட்பாளர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் பிரத்தியேகமான நோக்கங்களுக்காக அல்லது ஏதோ ஒரு செய்தியைக் கூறுவதற்காக போட்டியிடுகிறார்கள்.
அத்தகையவர்களில் ஒருவரான அரியநேத்திரன் சங்கு சின்னத்தின் கீழ் ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். 69 வயதான முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் நிற்கிறார். சிவில் சமூக அமைப்புக்களையும் சில தமிழ் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அவரை ஆதரிக்கிறது. அரியம் என்று பொதுவாக அழைக்கப்படும் அரியநேத்திரன் தமிழ் ஊடகங்களில் ' தமிழ் பொதுவேட்பாளர் ' என்று வர்ணிக்கப்படுகிறார்.
பெரிய சர்ச்சை
தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருப்பது பெரியதொரு சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இலங்கை தமிழர்கள் நாட்டின் சனத்தொகையில் 11.1 சதவீதத்தினர் மாத்திரமே. தமிழ் வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என்பது வெளிப்படையானது. அதனால் தமிழ் பொதுவேட்பாளர் திட்டம் கேலிக்குரியது என்றும் அநாவசியமானது என்றும் பல தமிழர்கள் அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள். பொதுவேட்பாளர் திட்டத்தின் ஆதரவாளர்கள் தங்களது குறிக்கோள் தேர்தலில் வெற்றிபெறுவது அல்ல என்று கூறி அந்த அபிப்பிராயத்தை மறுதலிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் பொதுவேட்பாளர் தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழ் தேசியப்பிரச்சினையை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கவனத்துக்கு கொண்டுவருவார் என்று இந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக பொருளாதாரப் பிரச்சினைகள், ஊழல் மற்றும் முறைமை மாற்றம் மீதே கவனம் செலுத்தப்படுகிறது என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இலங்கை்தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரத்தியேகமான பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்படுகின்றன, முக்கியத்துவமற்றவையாக நோக்கப்படுகின்றன அல்லது கவனிக்காமல் விடப்படுகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அதனால் தமிழ் மக்களின் மனக்குறைகள் இன்னமும் தீர்த்துவைக்கப்படவில்லை என்பதையும் அபிலாசைகளுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட சகலருக்கும் தமிழ் நினைவுபடுத்துவார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கே தமிழர்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்றும் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனால் இந்த தடவை தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு செய்தியை கூறமுடியும் என்று வாதிடப்படுகிறது. தவிரவும், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவருக்கு வாக்குகளை திரட்டுவது தமிழர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் பெருமளவுக்கு மேம்படுத்த உதவும் என்பதுடன் தமிழர்கள் மேலும பிளவுபட்டுப்போவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதை ஒரு வகையான சர்வஜன வாக்கெடுப்பாக காண்பிக்கமுடியும் என்பது தமிழ் வேட்பாளர் திட்டத்தின் ஆதரவாளர்களில் சிலர் வலியுறுத்துகின்ற இன்னொரு கருத்து. தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகளை சமஷ்டி அடிப்படையிலான இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றுக்கான தமிழ் தேசிய அபிலாசைக்கு ஆதரவானவை என்று வியாக்கியானப்படுத்த முடியும் என்பது ஒரு மிதவாதப் போக்கிலான கருத்தாக இருக்கிறது. அதேவேளை, அவருக்கு கிடைக்கின்ற வாக்குகள் சுயநிர்ணயம், தேசியம், தாயகம் என்ற மூன்று கோட்பாடுகளையும் மீள வலியுறுத்தும் எனபது தீவிரவாத போக்கிலான கருத்தாக இருக்கிறது.
தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக இல்லாதவர்கள் இந்த வாதங்களை மறுதலிக்கிறார்கள். வெற்றிபெறும் வாய்ப்பை அறவே கொண்டிராத ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதை விடவும் வெற்றிபெறும் வாய்ப்பைக் கொண்ட பிரதான ' சிங்கள ' வேட்பாளர்களில் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடியது சாத்தியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனால் தமிழ் பொதுவேட்பாளர் திட்டம் பயனற்ற ஒரு செயற்பாடு என்று அவர்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் 1952 ஆம் ஆண்டில் இருந்தே பாராளுமன்ற தேர்தல்களில் சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு ஏற்பாடு ஒன்றுக்கு ஆதரவாகவே தொடர்ச்சியாக வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்றும் அதனால் மீண்டும் அதை நிரூபிப்பதற்கு 2024 ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தவேண்டியது தேவையில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் கடந்தகாலத் தேர்தல்களில் இருந்து வேறுபட்டது என்றும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். மூன்று பிரதான வேட்பாளர்களும் பெருமளவு அதிகாரப் பகிர்வுக்கு அல்லது மேம்பட்ட அதிகாரப் பரவலாக்கத்துக்கு இணக்கத்தை தெரிவிக்கக்கூடிய தன்மையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படும் வரை காத்திருந்து அவர்களுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து சிந்தித்திருந்தால் அது நல்லதாக இருந்திருக்கும்.
மேலும், தமிழ் பொதுவேட்பாளர் தனது அரசியல் கோரிக்கைகளை நியாயப்படுத்தி வலுவூட்டுவதற்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள வாக்குகளில் குறைந்தபட்சம் ஐம்பது சதவீதமானவற்றை பெறவேண்டும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். தற்போதைய பின்புலத்தில் அது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. அத்துடன் கிழக்கில் தமிழர்கள் தனியான பெரிய சமூகமாக மாத்திரமே இருக்கிறார்கள். முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் சேர்த்தால் தமிழர்கள் சிறுபான்மையினரே. அதனால் வாக்களிப்பு முடிவுகள் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறுபானமையினர் என்பதை வெளிக்காட்டி வடக்கு - கிழக்கு இணைப்புக்கான நியாயத்தை மலினப்படுத்திவிடக் கூடும்.
'தமிழ் பொதுவேட்பாளர் ' என்ற விபரிப்பு செல்லுபடியற்றது என்றும் வாதிடப்படுகிறது. அரசியல் கட்சிகளையும் அமைப்புக்களையும் கொண்ட ஒரு குழு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை பிரேரித்த போதிலும், அதை எதிர்க்கும் வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் குழுக்களும் இருக்கின்றன. சில தமிழ் கட்சிகள் குறிப்பிட்ட ஒரு ' சிங்கள ' வேட்பாளரை ஆதரிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் சுயேச்சை தமிழ் வேட்பாளர் 'தமிழ் பொதுவேட்பாளர்' என்ற பெயருக்கு உரித்துடையவரல்ல என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பின்னணியும் வரலாறும்
தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற இன்றைய பின்புலத்தில் இந்த கட்டுரை அந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்துகிறது இந்த தமிழ் வேட்பாளர் திட்டத்தின் விளைவுகளை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு அதன் வரலாற்றையும் பின்புலத்தையும் ஓரளவுக்கு சுருக்கமாக ஆராய்வது அவசியமானதாகும்.
2009 மே மாதம் தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவத்தோல்வி தெற்காசியாவின் மிகவும் நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவந்தது. அது தமிழ் தேர்தல் அரசியலில் புதிய கட்டம் ஒன்றை திறந்துவிட்டது. 2010 ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டபோது எதிர்க்கட்சிகள் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பொது எதிரணி வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை களமிறக்கின.
அந்த நேரத்தில் இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் சேர்ந்த தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் அணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கியது. அதில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. தமிழ் தேசிய கூட்டயைப்பும் பொன்சேகாவை ஆதரித்தது.
சிவாஜிலிங்கம்
பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரித்ததை ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கடுமையாக எதிர்த்தார். போரின் இறுதிக்கட்டத்தில் தமழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ராஜபக்சவும் பொன்சேகாவும் பொறுப்பு என்பதால் இருவரையுமே எதிர்க்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார்.
பொன்சேகாவை ஆதரிப்பதற்கு பதிலாக தமிழ்க்கட்சிகள் தனியான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று சிவாஜிலிங்கம் யோசனையை முன்வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டம் சிவாஜியின் யோசனையை நிராகரித்தது. அதனால் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் சுபாவத்தைக் கொண்ட அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தன்னை தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்று காட்சிப்படுத்திய அவர் ஒரு சிங்கள வேட்பாளருக்கு பதிலாக தனக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதுவே பொதுத்தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கோட்பாட்டின் தொடக்கமாகும். சிவாஜிலிங்கம் 9662 வாக்குகளை மாத்திரம் பெற்ற பரிதாபத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
2019 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டார். பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது கோட்டாபய செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று சிவாஜிலிங்கம் மீண்டும் யோசனையை முன்வைத்தார். அந்த பொதுவேட்பாளர் திட்டத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் அதை எவரும் கவனத்தில் எடுக்கவில்லை. சளைக்காத சிவாஜிலிங்கம் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்தார். சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட அவர் தமிழ் கட்சிகளினதும் தமிழ் மக்களினதும் ஆதரவை நாடினார். மீண்டும் படுதோல்வி கண்ட அவருக்கு 12, 256 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தினால் இலங்கை தமிழ் மக்கள் கவரப்படவில்லை என்பதை சிவாஜிலிங்கத்தின் இ்ரட்டைத் தோல்வி வெளிக்காட்டியது. அதனால் அந்த கோட்பாடு வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் போடப்படும் என்றே தோன்றியது. ஆனால் ஒரு மூத்த அரசியல் தலைவரின் முயற்சியின் விளைவாக புத்துயிர் பெற்றது.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
சுரேஷ் பிரேமச்சந்திரன் / சுரேஷ் என்று அறியப்படும் கந்தையா பிரேமச்சந்திரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்எல்.எவ்.) செயலாளர் நாயகம் / தலைவர். அவர் முதலில் 1989 தொடக்கம் 1994 வரையும் பிறகு 2001 தொடக்கம் 2005 வரையும் பாராளுமன்ற உறூப்பினராக இருந்தார். பாராளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு தேவையான விருப்பு வாக்குகளைப் பெறத்தவறியதால் சுரேஷ் கடந்த ஒன்பது வருடங்களாக பாராளுமன்றத்துக்கு செல்லமுடியவில்லை. 2001 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாபக கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். 2016 ஆம் ஆண்டில் அதிலிருந்து வெளியேறியது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை மீண்டும் ஒரு பெரியளவில் முன்னெடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரனே. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே அவர் அதைச் செய்யத் தொடங்கினார். சுரேஷ் பெரும் முயற்சி எடுத்தபோதிலும், செல்வாக்குமிக்க ஊடக உரிமையாளர் ஒருவர் சம்பந்தப்படும்வரை அந்த கோட்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைக்கவில்லை. எஸ்.எஸ். குகநாதன் அல்லது குகன் என்று அறியப்படும் சபாபதி சுப்பையா குகநாதன் யாழ்நகரை தளமாகக் கொண்ட டான் ரி.வி. மற்றும் ஈழநாடு பத்திரிகையை நடத்தும் ஏ.எஸ்.கே குழுமத்தின் உரிமையாளராவார்.
பல தசாப்தகாலா அனுபவத்தைக் கொண்ட ஒரு நீண்டகால பத்திரிகையாளரான குகநாதன் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஆதரிக்கத் தொடங்கினார். தமிழ் வேட்பாளர் கோட்பாட்டை மேம்படுத்தும் செய்திகளும் ஆசிரிய தலையங்கங்களும் கிரமமாகவும் திட்டமிட்ட முறையிலும் அவரது பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. இந்த கோட்பாட்டுக்கு ஆதரவாக தொலைக்காட்சியில் பல நேர்காணர்களும் விவாதங்களும் ஔிபரப்பாகின. மேலும் குகநாதன் அந்த திட்டத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதற்காக பல்வேறு தமிழ் நகரங்களில் பல பொதுக் கூட்டங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் நிதியுதவியையும் செய்தார்.
நாளடைவில் பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதும் பல அரசியல் ஆய்வாளர்களும் தங்களது எழுத்துக்கள் மூலமும் தொலைக்காட்சி நேர்காணல்கள் மூலமும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்த திட்டத்தை ஆதரிப்பதாகவும் அதற்காக பணத்தை வழங்குவதாகவும் வதந்திகளும் கிளம்பின. அதற்கு பிறகு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தொடர்ச்சியாக பல கருத்தரங்குகளும் கலந்தாலோசனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. அவற்றில் பல சிவில் சமூக அமைப்புக்கள் பங்குபற்றின.
தமிழ் அரசியல் கட்சிகள்
இன்னொரு மட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும் ஈடுபாடு காட்டத் தொடங்கின. முன்னர் கூறப்பட்டதைப் போன்று தமிழ் பொதுவேட்பாளர் திட்டத் தை மேம்படுத்துவதில் முன்னோடியாகச் செயற்பட்ட அரசியல் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ். தான். பிறகு ஏனைய கட்சிகளும் ஆர்வம் காட்டின. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிலவிய உள்நெருக்கடி ரெலோவும் தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் (புளொட்) தனிவழி செல்வதற்கு வழிவகுத்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் சேர்ந்து இவ்விரு கட்சிகளும் வேறு இரு கட்சிகளும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்தன. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சி தனிமைப்படுத்தப்பட்டது.
தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்துக்கு மேலும் தமிழ் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. மொத்தமாக ஏழு அரசியல் கட்சிகள் அந்த திட்டத்தை ஆதரித்தன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமீழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியவையே அந்த கட்சிகளாகும்.
மறுபுறத்தில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு 81 தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இது 'தமிழ் தேசிய பொதுச்சபை' என்று அழைக்கப்பட்டது. செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு இந்த பொதுச்சபை நிறைவேற்றுக்குழு ஒன்றையும் ஆலோசனைக்குழு ஒன்றையும் அமைத்தது.
பொதுக் கட்டமைப்பு
அதற்கு பிறகு தமிழ் மக்கள் பொதுச்சபையும் முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு அரசியல் கட்சிகளும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு செயல்முறை ஏற்பாட்டுக்கு வந்தன. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு அமைக்கப்பட்டது. அந்த கட்டமைப்புக்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உயர்பீடம் இருக்கிறது. அதில் ஏழு பேர் சிவில் சமூகப் பிரதிநிதிகளாகவும் ஏழு பேர் அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருந்தனர்.
என்.ஸ்ரீகாந்தா, டி. சித்தார்த்தன், எஸ். பிரேமச்சந்திரன், எஸ். அடைக்கலநாதன், சி.வி. விக்னேஸ்வரன், ரி.வேந்தன் மற்றும் பி.ஐங்கரநேசன் ஆகியோரே அந்த அரசியல் தலைவர்களாவர். கே.ரி. கணேசலிங்கம், செல்வின் மரியாம்பிள்ளை, சி. யோதிலிங்கம், ஏ. யதீந்திரா, கே. நிலாந்தன், ரி. வசந்தராஜா மற்றும் ஆர். விக்னேஸ்வரன் ஆகியோரே சிவில் சமூகப் பிரதிநிதிகளாவர். உயர்பீடத்தின் பதினான்கு உறுப்பினர்களில் பத்துப்பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய நான்கு பேரும் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
அரியநேத்திரன் என்ற அரியம்
அதற்கு பிறகு பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் ஒரு நூறு பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டதாக தகவறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இது பிறகு 46 பெயர்களைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறியது. அதற்கு பிறகு இது ஏழு பெயர்களைக் கொண்ட குறுகிய பட்டியலாக சுருங்கியது. இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழ் பொது வேட்பாளராக அரியம் என்ற பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு முன்வருமாறு அணுகப்பட்டவர்களில் பலர் அதற்கு மறுத்த காரணத்தினால் தெரிவுச் செயன்முறை பெரும் சிக்கலானதாக இருந்ததாக தமிழ் சிவில் வட்டாரங்கள் மூலம் அறியவந்தது. வேறு சந்தர்ப்பங்களில் சிலரை பொதுவேட்பாளராக பரிசீலிப்பதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இருந்து அல்லது அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆட்சேபனை வந்தது. தெரிவு செய்யப்படும் வேட்பாளர் அடுத்த இரு வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலிலும் போடடியிடக்கூடாது; அவர் தான் போட்டியிடுகின்ற சின்னத்தை பிறகு பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையும் பெரிய நெருக்குதலை ஏற்படுத்தியது. பெண் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான முயற்சியும் வெற்றிபெறவில்லை.
வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு அரியநேத்திரனுக்கு அனுகூலமாக மூன்று முக்கிய காரணிகள் அமைந்தன. முதலாவது அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பெருமளவில் தமிழர்கள் மத்தியில் ஐக்கியத்தை ஊக்கப்படுவத்துவதற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை விடவும் கிழக்கு மாகாண வேட்பாளர் ஒருவரை களமிறக்கவேண்டியது முக்கியமானதாக இருந்தது. இரண்டாவது தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அரியநேத்திரன் உறுதியளித்திருக்கிறார். இனிமேல் எந்தொரு தேர்தலிலும் தான் வேட்பாளராக நிற்கப்போவதில்லை என்று அவர் கூறினார். மூன்றாவது அவர் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தகுதியைக் கொண்டவராக இருந்தார். தமிழ் அரசியல் கட்சிகள் அவற்றின் சின்னத்தின் கீழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பநற்கு தயங்கியதால் புதியதொரு சின்னத்தின் கீழ் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேவைப்பட்டார்.
தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிடுவது வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் வாக்குகளைக் குறிவைக்கும் சிங்கள வேட்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது சாத்தியம். அவர்களுக்கு செல்லக்கூடிய வாக்குகள் இப்போது அரியநேத்திரனுக்கு போகலாம். ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்புடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். புளொட், ரெலோ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். ரெலோவும், புளொட்டும் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியதற்கான காரணங்கள் இருவருக்கும் விரிவாக கூறப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிளாந்துறையில் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி பிறந்த அரியநேத்திரன் கொக்கட்டிச்சோலையில் அமைந்திருக்கும் மிகவும் பிரபல்யமான ' தான்தோன்றீஸ்வரர் ' சிவன் கோவிலின் மரபுவழியான அறங்காவலர்களாக இருந்துவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அரியம் என்று பிரபல்யமாக அறியப்படும் அவர் ஆற்றல்மிகு எழுத்தாளரும் தமிழ்ப் பேச்சாளருமாவார். பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் விடுதலை புலிகளானால் வெளியிடப்பட்ட ' தமிழ் அலை ' பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். தற்போது கொழும்பில் இருந்து வெளியாகும் ' தமிழன் ' பத்திரிகையில் அரசியல் பத்தியொன்றை அரியம் எழுதிவருகிறார்.
அவர் 2004 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராக பாராளுமன்றப் பிரவேசம் செய்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் 35,337 வாக்குகளைப் பெற்றார். மட்டக்களப்பு உறுப்பினராக 2010 பாராளுமன்ற தேர்தலிலும் தெரிவான அவருக்கு16,504 வாக்குகள் கிடைத்தன. 2015 பாராளுமன்ற தேர்தலில் தெரிவாவதற்கு அவருக்கு போதுமான விருப்பு வாக்குகள் கிடைக்கவில்லை 2020 பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இயங்கிவரும் அரியம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினராக இருந்துவருகிறார்.
தமிழரசு கட்சியின் சர்ச்சை
தமிழ் பொதுவேட்பாளர் தற்போது தனது கட்சிக்குள் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சி.வி.கே. சிவஞானம், எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் போன்றவர்கள் பொதுவேட்பாளர் திட்டத்தை எதிர்க்கின்ற அதேவேளை மாவை சேனாதிராஜா, ஜ. சிறீநேசன், சிவஞானம் சிறீதரன் போன்றோர் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
தமிழரசு கட்சி எந்த வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரதான வேட்பாளர்களுடன் பேச்ச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு சுமந்திரனுக்கு அதிகாரமளித்தது. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரா குமார திசாநாயக்க போன்ற வேட்பாளர்களுடன் ஏன் நாமல் ராஜபக்சவுடனும் கூட அவர் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தார். பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அவர் கட்சிக்கு அறிவித்து வந்தார். பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆழமாக ஆராய்ந்து இறுதி முடிவு ஒன்று எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த ஜனாதிபதி தேர்தலில் 'வெற்றிபெறுபவருடன்' நிற்கவேணடும் என்று தமிழரசு கட்சி உறுதியாக இருந்தது.
கட்சி இறுதித் தீர்மானத்தை எடுத்திராத நிலையில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு அரியநேத்திரன் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தார். இது விடயத்தில் அவரை சிறீதரன் போன்றவர்கள் வெளிப்படையாக ஆதரித்தார்கள். இது தொடர்பாக அரியநேத்திரனிடம் இருந்து தமிழரசு கட்சி ஒரு விளக்கத்தைக் கோரியது. கட்சியின் கொள்கை வகுக்கும் மத்திய செயற்குழு உறுப்புரிமையில் இருந்து அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டார். தமிழ் வேட்பாளர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் உறுப்பினர்கள் ஈடுபடுக்கூடாது என்றும் கட்சி தடை பிறப்பித்தது. ஏற்கெனவே பிளவடைந்திருக்கும் தமிழரசு கட்சி இந்த விவகாரம் தொடர்பில் பாரிய பிளவை நோக்கிச் செல்கின்றது போன்று தெரிகிறது.
இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் கூடிய தமிழரசு கட்டியின் மத்திய செயற்குழு ஏகமனதாக மூன்று தீர்மானங்களை எடுத்ததாக சுமந்திரன் செய்தியாளர்கள் மகாநாட்டில் அறிவித்தார்.
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதில்லை; அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகவேண்டும்; தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தமிழரசு கட்சி ஆதரிக்கும் என்பவையே அந்த தீர்மானங்களாகும்.
சங்குக்கு வாக்குகள்
அதேவேளை, அரியநேத்திரன் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். அவரது பிரசாரப் பயணம் யாழ்ப்பாணக்குடா நாட்டில் பொலிகண்டியில் ஆரம்பித்து அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கில் சகல மாவட்டங்கள் ஊடாகவும் அவர் பயணம் செய்வார். அரியத்தின் பிரசாரத்தின் தொனிப்பொருள் ' நமக்காக நாம் ' என்பதாகும். தான் தமிழ்த் தேசியத்தின் ஒரு சின்னம் மாத்திரமே, ஒரு தலைவர் அல்ல என்று அவர் கூறுகிறார்.
அரியநேத்திரனின் அழைப்புக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறு செவிசாய்ப்பார்கள் என்பது செப்டெம்பர் 21 ஆம் திகதி தெரிந்துவிடும்.
தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களித்தால் தமிழ் அரசியல் செல்நெறியில் ஒரு தீவிரவாத திருப்பத்தை அது ஏற்படுத்திவிடக்கூடும். தமிழர்கள் அவருக்கு குறைந்தளவில் வாக்களித்தால் அது தமிழ்த் தேசியவாதக் கோட்பாட்டினை பலவீனமடையச் செய்துவிடலாம்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் இறுதியில் தோல்வியடையப் போகிறவர்கள் தமிழ் மக்களே என்று தோன்றுகிறது.
https://www.virakesari.lk/article/192632
3 months 2 weeks ago
நானும் அதைத் தான் நினைத்தேன்.
3 months 2 weeks ago
மேலே பதியப்பட்டதை வாசிப்பது இல்லையா ?? நான் ஒரு செய்தியை இரண்டு முறை வாசித்து விட்டேன் 🤣🤣
3 months 2 weeks ago
ஒம் சூப்பரான தெரிவு! 2005 தேர்தல மனசுல வச்சு சொல்லியிருக்காப்பில!
3 months 2 weeks ago
காலையிலேயே இதை பார்த்தனான் சிறி. பார்த்து விட்டு மனசுக்குள் நினைத்தது 'தலைவர் பிஸ்ரல் குறூப்பையாவது இயங்க விட்டுட்டு ஆயுதங்களை மவுனித்து இருக்கலாம்' என.
3 months 2 weeks ago
Published By: VISHNU 02 SEP, 2024 | 03:20 AM
நேர்கண்டவர் – ரொபட் அன்டனி
கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர். சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். ரணில் எமது கொள்கைகளுடன் இணங்கவில்லை தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கத்தை சிறந்த நகர்வாக பார்க்கிறேன். நான் சஜித்தை சந்தித்து பேசவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. பொய் வாக்குறுதிகளை நான் வழங்கமாட்டேன். ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். செனட் சபை குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். வடக்கு இளைஞர் யுவதிகளுடனான எனது உறவு தனித்துவமானது. காணாமல் போனோர் விவகாரத்துக்கு பதில் அளிப்பேன். முஸ்லிம்களின் உடல் தகன விவகாரத்தில் மன்னிப்பு கோருகிறோம். இந்தியா, சீனாவுடன் நட்பு ரீதியான உறவை பேணுவேன். மோடியுடன் எனக்கு சிறந்த உறவுள்ளது. அப்பா என்னை அடித்ததில்லை, ஆனால் தவறு செய்தால் திட்டுவார்
சகல இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர். சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர். ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவற்றை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு
கேள்வி: ஜனாதிபதி தேர்தல் களம் தற்போது எப்படி இருக்கிறது?
பதில்: எமது பிரச்சார செயல்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. நாம் மிக முக்கியமாக கிராமத்துக்குள்ளேயே தேர்தல் பிரச்சாரத்தை மையப்படுத்தி இருக்கிறோம். அனுராதபுரத்தில் பாரிய பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம். அதன் பின்னர் நாம் அதிகளவு கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்கிறோம். எமது பலம் அங்கேதான் இருக்கிறது. இம்முறை தேர்தலில் செலவுகளுக்கான ஒரு வரையறையும் காணப்படுகிறது. அடுத்த வாரத்திலிருந்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம்.
கேள்வி: அரசியல் தேர்தல் களத்தில் எவ்வாறான நிலைமையை உணருகிறீர்கள்?
பதில்: மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர். எமக்கு வாக்களிக்க விரும்புகின்றனர். சிலர் நேரடியாக ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் வேறு வழிகளில் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் மெளனமாக இருக்கின்றனர்.
கேள்வி: மக்கள் உங்களை சந்திக்கும்போது என்ன உங்களிடம் கேட்கின்றனர் ?
பதில்: நாட்டின் இன்றைய பொருளாதார பிரச்சனை மக்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கிறது. வரிசை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது, மின்வெட்டு இல்லை என்று கூறப்பட்ட போதிலும் மக்கள் உள்ளக ரீதியில் நெருக்கடிகளை சந்திக்கின்றனர். பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே வரிசையுகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
மக்களின் நுகர்வு குறைவடைந்து இருக்கிறது. மக்களிடம் பணம் இல்லை. அன்றாடம் தொழில் செய்கின்றவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களே சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி மாத சம்பளம் பெறுகின்றவர்களுக்கு வரியை செலுத்த வேண்டி இருக்கிறது.
எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். கிராமிய வங்கிகளுடாக அவர்களை பலப்படுத்துவது அவசியம். அங்கிருந்து சந்தையை உருவாக்க வேண்டும். அடுத்ததாக முதலீட்டாளர்களை ஊக்குவித்து தொழில்களை உருவாக்குவது அவசியம்.
கேள்வி: இந்த தேர்தலில் பொருளாதாரம் தான் முக்கியமான பேசு பொருளாக இருக்கிறதா ?
பதில்: எந்த தேர்தலிலும் பொருளாதாரம் தான் மிக முக்கியமான பேசு பொருளாக இருக்கும். பொருளாதாரத்தை பலப்படுத்துவது மட்டுமின்றி பொருளாதாரத்தை சுயாதீனமாக்க வேண்டும். இன்னொரு நாட்டிடம் நாம் பொருளாதாரத்திற்கு தங்கி இருந்தால் அங்கு சுயாதீனம் இல்லை. அதற்கு நாம் தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும்.
கேள்வி: உங்கள் பார்வையில் கோட்டா ராஜபக்சவுக்கு என்ன நடந்தது?
பதில்: கோட்டாபய அரசாங்கத்தில் பல நல்ல விடயங்கள் நடைபெற்றன. ஆனால் கோட்டா அரசாங்கம் தவறு இழைத்தது எங்கு என்று பார்க்க வேண்டும். எரிபொருள் வரிசை மற்றும் மின்வெட்டு ஆகிய இரண்டு விடயங்களில் தான் கோட்டா நெருக்கடியை சந்தித்தார். மின்வெட்டுக்கு காரணம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவாமையாகும்.
மேலும் கொரோனா நெருக்கடியும் வந்தது. ஆனால் இந்த இவ்வாறான எந்த பிரச்சனையும் இல்லாத பங்களாதேஷுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதே? எனவே கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர் என்பது நன்றாக தெரிகிறது.
கேள்வி: 38 வயதில் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?
பதில்: அரசியல் பயணம் தொடர்கிறது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் எண்ணி இருக்கவில்லை. பொறுப்பு கிடைக்கும்போது அதனை ஏற்க வேண்டும். அரசியல்வாதிக்கு அந்த பண்பு இருப்பது அவசியம். நான் சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். நெருக்கடி நேரத்தில் களமிறங்க வேண்டும்.
நாடு நன்றாக இருக்கும் போது நான் அரசியல் ரீதியாக நன்றாக பிரபலமடைந்திருக்கும் போது பொறுப்பை ஏற்பதில் பயனில்லை. இவ்வாறான நெருக்கடி நேரத்தில் எம்மை போன்ற இளைஞர்கள் நவீன சிந்தனைகளை கொண்டவர்கள் களத்துக்கு வருவது அவசியம். அந்த வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் மரபுரீதியிலிருந்து வெளியே செல்வேன்.
என்னுடைய நோக்கம் மிகத் தெளிவானது. இந்த நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன். சகல இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர். சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர். ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன்.
கேள்வி: ரணில் விக்ரமசிங்கவை நெருக்கடி நேரத்தில் ஜனாதிபதியாக கொண்டு வந்தீர்கள். இரண்டு வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு நீங்கள் ஆதரவு அளித்திருக்கலாமே?
பதில்: இங்கு நீண்டகால விடயத்தையா அல்லது குறுகிய கால விடயத்தையா பார்க்க வேண்டும் என்பதே கேள்வியாகும். தற்போது எமக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. தற்போது சஜித் அநுர ரணில் ஆகிய மூன்று வேட்பாளர்களின் விஞ்ஞாபனத்தை பார்க்கும்போது அங்கு வளர்ச்சிக்கான இடமில்லை. 2029 ஆம் ஆண்டில் கடன் செலுத்த ஆரம்பிக்கும்போது மீண்டும் பிரச்சனை ஏற்படும். எனவே அவற்றை ஆராய்ந்துவிட்டே போட்டியிட தீர்மானித்தோம்.
கேள்வி: மஹிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் ரணிலை ஆதரிக்கலாம் என்று கூறியபோதும் நாமல் ராஜபக்ஷ அதனை எதிர்த்தபதாக கூறப்படுகிறது. அது உண்மையா?
பதில்: அது ஒரு பொய்யான தகவல். நாங்கள் ஆரம்பத்தில் அனைவரும் ரணிலுக்கு ஆதரவு வழங்கினோம். நிபந்தனையற்ற வகையில் நாம் ஆதரவு வழங்கினோம். அவர் கொண்டு வந்த சில சட்டங்களை எமது கொள்கைகளுக்கு முரணானவை. எமது கொள்கைகளுக்கு இணங்குகின்ற ஒரு வேட்பாளருக்கே ஆதரவு வழங்க வேண்டும். நாம் தற்போதைய ஜனாதிபதிக்கு முதலீடுகளை ஊக்குவிக்குமாறும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறும் கூறினோம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத சட்டங்களை கொண்டு வர வேண்டாம் என்று கூறினோம். ஆனால் அவற்றுக்கு அவர் செவிமடுக்கவில்லை.
கேள்வி: கலாச்சாரத்துக்கு எதிரான வகையில் கொண்டு வந்த சட்டம் என்ன?
பதில்: ஓரின சேர்க்கை சட்டமூலத்தை குறிப்பிடலாம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் கொண்டுவரக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்த தரப்பினர் கலாச்சாரத்தில் இருந்து ஒதுக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்டத்தில் உரிமை கிடைத்தாலும் நாட்டின் கலாச்சாரத்தில் அவர்களுக்கு உரிமை கிடைக்காமல் போய்விடும்.
கேள்வி: நீங்கள் களமிறங்க எடுத்த முடிவுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கின்ற ஆதரவு குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா?
பதில்: இல்லை அப்படி இல்லை. எனது வாக்குகள் ரணிலுக்கு செல்லவில்லை. சென்றால் தானே பிரச்சினை வரும். அதனால் நான் போட்டியிடுவதால் ரணிலுக்கு எந்தபிரச்சினையும் இல்லை.
கேள்வி: தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?
பதில்: ஒரு பக்கத்தில் அதனை நான் சிறந்த ஒரு விடயமாக பார்க்கிறேன். காரணம் இந்த நாட்டில் எவரும் எந்தவொரு இனத்தவரும் ஜனாதிபதியாகலாம் என்ற ஒரு சூழல் உருவாகிறது. அரசியலமைப்பில் உள்ள விடயம் பிரயோகப்படுத்தப்படுகிறது. சிறந்த ஆரம்பமாக இதனை நான் பார்க்கிறேன். எனது கட்சியிலும் தமிழ் தலைவர்கள் உருவாகுவார்கள். எனது கட்சியிலும் தமிழர்கள் தலைமைத்துவ பதவிக்கும் வருவார்கள் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் சஜித்தை சந்தித்து நீங்கள் பேசியதாக கூறப்படுவது?
பதில்: அது ஒரு பொய்யான தகவல். நான் அவரை சந்தித்து பேசவில்லை.
கேள்வி: அப்படியானால் இந்த வதந்தி எங்கிருந்து உருவாகின்றது?
பதில்: ராஜபக்ஷமார் எல்லோருடனும் நல்ல உறவை பேணுகின்றனர். மேலும் தேர்தல் காரணமாக இந்த கதை உருவாகி இருக்கலாம்.
கேள்வி: உங்களை தவிர்த்து பிரதான மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன ?
பதில்: இந்த மூவருக்கும் ஒரே கொள்கையே காணப்படுகிறது. அனுராவின் விஞ்ஞாபகனம் ரணிலின் விஞ்ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது.
கேள்வி: உங்களுடன் இளம் அமைச்சர்கள் அதிகளவு இருந்தார்கள். அவர்களுக்கு உங்கள் அரசாங்கத்தில் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இன்று உங்களுடன் இல்லை. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: இதுதான் அரசியல். சந்தர்ப்பம் கிடைத்ததும் அதனை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அங்கு இருக்கின்றனர் என்பதற்காக அங்கே தான் இருக்கின்றார்களா என்று யாருக்கும் தெரியாது.
கேள்வி: அவர்களுடன் உங்களுக்கு எதிர்கால பயணம் இருக்குமா?
பதில்: கொள்கை பதில் கொள்கை அடிப்படையில் பிரச்சனை இல்லாவிடில் பயணம் இருக்கும்.
கேள்வி: 13-வது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறுகின்றீர்கள். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கவே முடியாது என்று கூறுகின்றீர்கள். ஏனைய வேட்பாளர்கள் அது தொடர்பாக எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் பாராளுமன்றத்தில் ஆராயலாம் என்று கூறுகின்றனர். ஆனால் நீங்கள் ஏன் இவ்வாறு கடினமான ஒரு போக்கை இந்த விடயத்தில் கையாளுகின்றீர்கள்?
பதில்: இந்த நாட்டில் பதவிக்கு வந்த எட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமார்களும் இந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்கவில்லை. இரண்டு ஜனாதிபதிகள் அதனை வழங்குவதாக கூறிறே அதிகாரத்துக்கு வந்தனர். ஆனால் வழங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் அதனை வழங்கவில்லை.
எனவே இதனை அடுத்த வருடத்தில் வழங்க முடியும் என்று தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எவ்வாறு கூற முடியும்? பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு நாட்டில் ஒரு பகுதி மக்கள் எதிரிக்கின்றனர். அதனை வழங்கினால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும் என்ற நிலைமையுள்ளது. இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனர். நான் உண்மையை மட்டுமே கூறுவேன். வழங்க முடியாது என்றால் முடியாது என்பதனை தெளிவாக திட்டவட்டமாக உண்மையை கூறுகிறேன்.
தமிழ் இளைஞர்களும் நான் இவ்வாறு உண்மையை கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்று கூறுகின்ற நான் எனது முதலாவது தேர்தல் அலுவலகத்தை முல்லைத்தீவில் அமைத்தேன்.
கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: அரசியல்வாதிகளுக்கு தான் இந்த அரசியல் பிரச்சனை இருக்கின்றது. மக்களின் பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவதில்லை. பொலிஸ் அதிகாரத்தை வழங்கி விட்டதும் மக்களின் வயிறு நிறைந்து விடுமா?
கேள்வி: அப்படி என்றால் நீங்கள் ஜனாதிபதியானால் மாகாண சபை முறை இருக்காதா?
பதில்: மாகாண சபை முறை இருக்கும். நான் ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் உடனடியாக நடத்துவேன். வரலாற்றில் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்று கூறிய எவரும் உரிய நேரத்தில் தேர்தலை நடத்தவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ச முதல் முதலாக வடக்கில் தேர்தலை நடத்தினார். வடக்கில் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான் தெற்கிலும் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர்.
எனவே நாம் இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே கோணத்தில் ஆராய வேண்டும். இவற்றுக்கு இரண்டு தீர்வுகள் இல்லை. ஒரே தீர்வு தான் இருக்கிறது. தெற்கில் இளைஞர்களுக்கு கிடைக்கின்ற சகல உரிமைகளும் சந்தர்ப்பங்களும் வடக்கில் கிழக்கில் இருக்கின்ற இளைஞர்களுக்கும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன். பொய் வாக்குறுதிகளை வழங்க முடியாது. புதிய தலைவரான என்னிடம் புதிய விடயங்களை மக்கள் எதிர்பார்க்கலாம்.
கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் சமஷடி கோரிக்கையை முன்வைக்கின்றனவே?
பதில்: இது ஒரு அரசியல் தீர்மானமாக இருக்கிறது. அதற்காகத்தான் மைத்திராபாலவை ஆட்சிக்கு கொண்டுவந்தனர். அப்போது கூட இதனை பெற முடியாமல் போய்விட்டது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதெனில் அது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். அது ஜனாதிபதியின் பொறுப்பல்ல. நிறைவேற்று அதிகாரம் முறை மற்றும் தேர்தல் முறையை ஒன்றாகவே மாற்றவேண்டும். ஜனாதிபதி தேர்தல் மேடையில் அது தொடர்பாக வாக்குறுதி வழங்குவதில் அர்த்தமில்லை.
கேள்வி: செனட் சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?
பதில்: இந்த விடயங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தலாம். அதற்கு எமது கதவுகள் திறந்து இருக்கின்றன. அதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ தீர்மானிக்க முடியாது. இதனை ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானிக்க முடியாது.
கேள்வி: வடக்கில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இளைஞர் யுதிகளுடன் உங்களுக்கு கடந்த காலங்களில் சிறந்த தொடர்பு இருந்தது. அந்த தொடர்பு இன்னும் இருக்கிறதா?
பதில்: இன்னும் சிறப்பாக இருக்கின்றது. கடந்த சில வருடங்களில் அங்கு எனது பிரசன்னம் குறைவாக இருந்தது. ஆனால் அவர்களுடனான எனது உறவு சிறப்பாகவே தொடர்கிறத. அவர்களது நிகழ்வுகள் பிறந்த நாள் நிகழ்வுகள் வீட்டு நிகழ்வுகளுக்கு நான் அடிக்கடி சென்று வருவேன். தற்போது தேர்தல் காலத்தில் நிச்சயமாக நான் அங்கு செல்வேன். அங்கு கூட்டங்களை நடத்துவேன். அங்குள்ள இளைஞர்களுடன் எனது உறவு அரசியல் ரீதியானதல்ல. அது தனிப்பட்ட உறவாகவே காணப்படுகிறது. அதிகமானோருக்கு இது தெரியாது.
கேள்வி: 2009 இல் யுத்தம் நிறைவடைந்தது. ஆனால் இன்னும் காணாமல் போனோர் பிரச்சனை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை நீங்கள் எப்படி கையாள்வீர்கள்?
பதில்: காணாமல் போனோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும். தொடர்ந்து காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஒரு பதில் வழங்க வேண்டும். அந்த பதிலை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்துவிடுவேன்.
கேள்வி: கொரோனா காத்தில் முஸ்லிம் மக்களின் சடலங்ளை தகனம் செய்த விடயம் ஒரு மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்தது. அந்த நேரத்தில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
பதில்: அது தனிப்பட்ட ரீதியில் எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ குழு வழங்கிய ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழிநடத்தியது.
கேள்வி: நீங்கள் அப்போதே அவ்வாறு கருதுனீர்களா?
பதில்: எந்த நேரத்தில் அவ்வாறு நான் சிந்திக்கவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் நாட்டு மக்களை பாதுகாப்பதே பிரதான தேவையாக இருந்தது. நிபுணத்துவ ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்பதே சகலரதும் கருத்தாக இருந்தது. ஆனால் சிறிது காலம் செல்லும்போது இந்த நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழி நடத்துகிறது என்பதை புரிந்துகொண்டோம்.
போராட்டக் களத்தில் முஸ்லிம் மக்கள் கோட்டாவுக்கு எதிராக உடல் தகன விவகாரத்தில் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தபோது அருகில் அதற்கு ஆலோசனை வழங்கிய நிபுணத்துவகுழு உறுப்பினர்களும் பதாதைகளை பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இது உபாய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
கேள்வி: இந்த நேர்காணல் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு நீங்கள் இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: இது நாங்கள் தனிப்பட்ட ரீதியாக எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ ஆலோசனை பேரில் செய்யப்பட்ட விடயம். மக்களின் பாதுகாப்புக்காக இது செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவு காரணமாக மக்கள் காயப்பட்டிருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம். உடல் தகன விவகாரம் மற்றும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவுகள் காரணமாக யாராவது காயப்பட்டிருந்தால் கவலை அடைந்திருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம்.
கேள்வி: இந்தியா சீனாவுடனான உங்கள் வெளிவிவகார கொள்கை எப்படி இருக்கும்?
பதில்: நான் இரண்டு நாடுகளுடனும் நட்பு ரீதியான ஒரு கொள்கையை முன்னெடுப்பேன். நட்புரீ மற்றும் அருகாமை நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மற்றும் அணிசேரா கொள்கையை நான் பின்பற்றுவேன். எமது அபிவிருத்திக்கு முதலீடுகளுக்கு மற்றும் சுற்றுலாத்துறைக்கு இந்த இரண்டு நாடுகளும் மிக முக்கியத்துவமானவையாகும். ஆனால் இன்னும் ஒரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு எமது நாட்டை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன்.
கேள்வி: இந்தியா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொள்வதாக கூறப்படுகிறதே?
பதில்: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் நாம் கரிசனை கொள்வோம்.
கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் என்று ரீதியில் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் ?
பதில்: தமிழ் பேசும் மக்களின் கலாசாரங்களை விழுமியங்களை பாரம்பரியங்களை நான் காப்பாற்றுவேன். மதங்களை காப்பாற்றுவேன். யுத்த காலத்திலும் கொரோனா காலத்திலும் கூட நாங்கள் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்தினோம். பொய் வாக்குறுதிகளை வழங்கமாட்டேன்.
பொய் வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் சிக்க வேண்டாம் என்று நான் கூறுகிறேன். 30 - 40 வருடங்கள் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து விட்டீர்கள். எனது தந்தையும் 13 பிளஸ் என்ற விடயத்தை முயற்சி செய்தார். அது நடக்கவில்லை. அவற்றில் பாடங்களைக் கற்றுத்தான் நான் இந்த நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன். வரலாற்று ரீதியான பாடங்கள் நிகழ்வுகளில் இருந்து பாடங்களை கற்று நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன்.
கேள்வி: மஹிந்த ராஜபக்சவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான உறவு எவ்வாறானது?
பதில்: அது மிகவும் நெருக்கமான உறவு. தந்தை என்ற ரீதியில் அவர் என்னை வழி நடத்துகிறார். எனது பிரச்சாரத்தில் முன்னணியில் அவர் தான் இருக்கிறார். தவறு செய்தால் திட்டுவார். ஆனால் ஒருபோதும் என்னை அடித்ததில்லை. ஆலோசனை வழங்குவார். ஆனால் முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறார்.
கேள்வி: நீங்கள் ஜனாதிபதி தேர்தல் தேர்தலில் களமிறங்குவதற்கு தந்தை ஆரம்பத்தில் விரும்பினாரா?
பதில்: கட்சியும் தந்தையும் பசிலும் எடுத்து ஒரு முடிவே இதுவாகும். கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நான் போட்டியிடவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள்.
கேள்வி: நீங்கள் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் உங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்களுடன் மீண்டும் பேசினார்களா ?
பதில்: அவர்கள் இன்னும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். அங்கிருந்தும் சிலர் எனக்கு உதவி செய்கின்றனர். சிலர் வருவார்கள். சிலர் அங்கிருந்து எனக்கு உதவி செய்வார்கள்.
கேள்வி: இந்திய பிரதமர் மோடியுடனான உங்கள் எத்தகையது?
பதில்: அது கொள்கை ரீதியாக ஏற்பட்ட பிணைப்பினால் ஏற்பட்ட உறவு. இந்திய பிரதமர் மோடியும் மதங்களை கலாசாரங்களை மதிப்பவர். அவர் அசைவம் உண்ண மாட்டார். இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை மதிப்பவர். அந்த வழியிலேயே நானும் பயணிக்கிறேன். இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாம் இருவரும் சந்திக்கும் போது பரஸ்பரம் அக்கறை உள்ள விடயங்கள் தொடர்பாக பேசுவோம்.
கேள்வி: இந்திய பிரதமர் மோடி உங்களை சந்திக்கும்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்த்து விடுங்கள், அதனை ஏன் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறாரா?
பதில்: இந்திய பிரதமர் மற்றும் இந்திய அரசாங்கம் ஒருபோதும் ஏனைய நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் தங்களது பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவே கவனம் செலுத்துவார்கள்.
கேள்வி: பிரசார காலத்தில் உங்கள் பிள்ளைகளுடன் இருக்கின்ற சந்தர்ப்பங்களை இழக்கின்றீர்களா?
பதில்: நான் எங்கிருந்தாலும் அவர்களுடன் வீடியோ தொடர்பை ஏற்படுத்தி பேசி விடுவேன். வீட்டில் இருக்கும்போது அவர்களுடன் நெருக்கமாக இருப்பேன்.
https://www.virakesari.lk/article/192602
3 months 2 weeks ago
தனது மகளை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது!
தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான பாடசாலை மாணவியை , ஆசிரியரான அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
https://athavannews.com/2024/1398184
@நிழலி
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN
படக்குறிப்பு, கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் கப்பலும், அதில் இருந்த டயானா சிலையும்.
கட்டுரை தகவல்
எழுதியவர், ரெபேக்கா மோரெல் மற்றும் அலிசன் பிரான்சிஸ்
பதவி, பிபிசி நியூஸ் சயின்ஸ்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
டைட்டானிக் என்றவுடன் நினைவுக்கு வருவது கப்பலின் கூர்மையான முன் பகுதி, அதிலுள்ள உலோக பிடிமானங்களே. அந்த இடத்தில் ஜாக் ? ரோஸ் ஜோடி நிற்பது போன்ற திரைப்படக் காட்சிகள் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அந்த உலோக பிடிமானங்கள் தற்போது உடைந்து கீழே விழுந்துள்ளன.
புதிய ஆய்வுகள், டைட்டானிக் கப்பல் மெல்லமெல்ல சேதமடைந்ததன் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன. அதன் பிடிமானங்களில் பெரும்பாலானவை உடைந்து கடலின் கீழ் தளத்தில் உள்ளன.
பிரபலமான திரைப்படக் காட்சியின் மூலம் ரோஸ் - ஜாக் ஜோடி இந்த பிடிமானங்களை மக்கள் மனதில் இருந்து நீங்காத ஒன்றாக்கி விட்டது. இந்த ஆண்டு கோடைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற ரோபோ ஆய்வுகள், அந்த பிடிமானங்களை கப்பல் இழந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடலடியில் கப்பல் கிடந்ததன் விளைவாக எப்படி அதன் பாகங்கள் சிதைந்து உருமாறி வருகின்றன என்பதை இந்தப் படங்கள் காட்டுகின்றன.
1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அட்லாண்டிக் பெருங்கடலில் கன்னிப் பயணத்தை மேற்கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் ஒரு பெரிய பனிப்பாறையின் மீது மோதியதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர்.
“டைட்டானிக் கப்பலின் முன் பகுதி மிகவும் பிரபலமானது. பாப் கலாசாரத்தில் இந்த தருணங்கள் எல்லாம் இருக்கின்றன- கப்பல் சிதைவு பற்றி யோசிக்கும் போது அது தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது அது அதே நிலையில் இல்லை” என்கிறார், இந்த புதிய தேடல்களை நடத்திய ஆர்.எம்.எஸ் டைட்டானிக் நிறுவனத்தின் இயக்குநர் தோமசினா ரே.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதோ ஒரு சமயத்தில் 4.5 மீட்டர் நீளமான இந்த பிடிமானங்கள் கீழே விழுந்திருக்கலாம் என்று ஆய்வுக்குழு கருதுகிறது.
2022-ம் ஆண்டு ஆழ்கடல் வரைபட நிறுவனமான மெகலன் மற்றும் ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான அட்லாண்டிக் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் போது கிடைத்தப் படங்களில் பிடிமானங்கள் கப்பலில் இருப்பது தெரிந்தது. எனினும் அப்போதே அவை சிதைய தொடங்கியிருந்தன.
“ஒரு கட்டத்தில் கம்பிகள் உதிர தொடங்கி கீழே விழுந்துவிட்டன.” என்கிறார் தோமசினா ரே.
பட மூலாதாரம்,RMS TITANIC INC
படக்குறிப்பு, டைட்டானிக் கப்பலின் முன்பகுதி (2010 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்கள் ஒப்பீடு)
பட மூலாதாரம்,RMS TITANIC INC
படக்குறிப்பு, கப்பலின் முன் பகுதியில் உள்ள பிடிமானங்கள் உடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆய்வில் கிடைத்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்கள்
ஆர்.எ. எஸ் டைட்டானிக் நிறுவனம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆய்வை மேற்கொண்டது.
தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இரண்டு கருவிகள் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்களையும் 24 மணி நேர உயர்தர காட்சிகளையும் எடுத்தன. அவை 800 மீட்டர் இடைவெளியில் கிடக்கும் கப்பலின் முன் பகுதியையும் பின் பகுதியையும் அதை சுற்றியிருக்கும் பொருட்களையும் படம் பிடித்தன.
இந்த காட்சிகளை கவனமாக ஆராய்ந்து வரும் நிறுவனம் , கப்பல் சிதைந்த இடத்தின் துல்லிய தகவல்களை கொண்டு டிஜிட்டல் 3டி ஸ்கேனை உருவாக்கும். வரும் மாதங்களில் மேலும் பல புகைப்படங்கள் வெளிவரும்.
பட மூலாதாரம்,RMS TITANIC INC
படக்குறிப்பு, கடல் தரையில் கப்பலுக்கு அருகில் பிடிமானங்கள் விழுந்து கிடக்கின்றன.
112 ஆண்டுகளாக ஆழ்கடலில் கிடக்கும் வெண்கல சிலை
பட மூலாதாரம்,RMS TITANIC INC
படக்குறிப்பு, கப்பலின் முதல் வகுப்பு ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்த “வெர்சைல்ஸின் டயானா” என்ற வெண்கல சிலை.
இந்த ஆய்வுக் குழு மற்றொரு பொருளையும் கண்டுபிடித்துள்ளது.
1986ம் ஆண்டு “வெர்சைல்ஸின் டயானா” என்ற வெண்கல சிலையை ராபர் பல்லார்ட் புகைப்படம் எடுத்திருந்தார். 1985-ம் ஆண்டில் டைட்டானிக்கின் சிதைவுகளை கண்டுபிடித்திருந்தவர் அவர்.
ஆனால் அந்த சிலை குறிப்பாக எந்த இடத்தில் இருந்தது என்று தெரியாததால், அதன் பிறகு வேறு எவராலும் அந்த சிலையை காண முடியவில்லை. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழிவுகளுக்கு இடையில் முகம் மேலே தெரியும் வகையில் அந்த சிலை இருந்தது.
“வைக்கோல் போரில் குண்டூசியை தேடுவது போல் இருந்தது. மீண்டும் இந்த ஆண்டு அந்த சிலையை கண்டுபிடித்தது மிகவும் முக்கியமானது” என்கிறார் டைட்டானிக் ஆய்வாளர் மற்றும் விட்னஸ் டைட்டானிக் வலையொலியின் தொகுப்பாளர் ஜேம்ஸ் பெனகா.
டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது இந்த சிலை. “முதல் வகுப்பு ஓய்வறை தான் கப்பலில் இருந்த மிகவும் அழகான அறை. அந்த அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது இந்த வெண்கல சிலை” என்கிறார் அவர்.
“டைட்டானிக் இரண்டாக பிளவுப்பட்ட போது, அந்த ஓய்வறையும் பிளவுபட்டது. அப்போது ஏற்பட்ட சேதத்தில் சிதைவுகளின் இருளுக்குள் டயானா சிலை சிக்கிக் கொண்டது” என்றார் அவர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, 1912ம் ஆண்டு பனிப்பாறையின் மீது மோதியதில் டைடானிக் கப்பலில் இருந்த 1500 பேர் உயிரிழந்தனர்.
ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்துக்கு மட்டுமே கப்பலின் பாகங்களை மீட்கும் உரிமையும் அதன் சிதைவுகளை அகற்றும் சட்டப்பூர்வ உரிமையும் உள்ளது. கப்பலின் சிதைவுகளிலிருந்து கடந்த பல ஆண்டுகளில் இந்த நிறுவனம் பல ஆயிரக்கணக்கான பொருட்களை மீட்டுள்ளது. இதில் ஒரு பகுதி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு மேலும் பல பொருட்களை மீட்பதற்கு மீண்டும் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். அப்போது டயானா சிலையை மேலே எடுத்து வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆனால் பலர் கப்பலின் சிதைவுகள் இருக்கும் இடத்தை கல்லறையாக கருதுகின்றனர். அந்த இடத்தை தொடக் கூடாது என்று நினைக்கின்றனர்.
“டயானா சிலையை மீண்டும் கண்டுபிடித்தது, டைட்டானிக் சிதைவிடத்தை தொடக் கூடாது என்று கூறுபவர்களுக்கான சரியான பதிலாகும்” என்கிறார் பென்கா.
“எல்லோராலும் பார்த்து ரசிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டிய ஒரு கலைப் பொருள் டயானா சிலை. அந்த சிலை கடலுக்கு அடியில் கும்மிருட்டில் 112 ஆண்டுகளாக கிடக்கிறது. என்னால் அதை கடலுக்கு அடியில் ஒரு போதும் விட முடியாது” என்றார் .
https://www.bbc.com/tamil/articles/ce387zq8wleo
Checked
Mon, 12/23/2024 - 04:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed