3 months 2 weeks ago
நன்றி ஐயா உங்களின் நேர்மையான பகிர்வுக்கு . ........!
மாறி செல்வராஜ் அவர்கள் "சம்படி ஆட்டம் " என்னும் தலைப்பில் தன் சுயசரிதமாக தொடர் ஒன்று எழுதிக் கொண்டு வருகிறார் . ........நான் அதை தொடற்சியாக வாசித்துக் கொண்டு வருகின்றேன் . ........ஆயினும் அத் தொடரில் உள்ள பல சுவையான சம்பவங்கள் படத்தில் இல்லை....ஒருவேளை திரைக்கதையின் சுருக்கத்திற்காக அவைகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம் .......சோ . தர்மனின் "வாழையடி"யை நான் வாசிக்கவில்லை .........முடிந்தால் "சம்படி ஆட்டம்" படித்துப் பாருங்கள் . ........ நன்றாக இருக்கும் .......!
3 months 2 weeks ago
முன்பு ஒரு கல்லைவைத்து இதுதான் தமிழரசுக் கட்சி என்றால் ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் வாக்குகளை அதற்குப் போடுவார்கள். இன்று பெரும் மலையைவைத்து இதுதான் தமிழரசுக் கட்சி என்றாலும் அதனை உரசிச் சுரண்டிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்மக்கள் வளர்ந்துவிட்டதாக யாழ்களமும் தெரியத் தருகிறது.🧐
3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ...........!
ஆண் : கனவென்னும் ஆலைக்குள்
அகப்பட்ட கரும்பே…….
நினைவென்னும் சோலைக்குள்
பூத்திட்ட அரும்பே…
ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட
உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஓ நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு
சொல்லுதடி வைர சிலையே…..
ஆண் : பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள
தாளம் போடுதடி அம்மம்மா
பெண் : பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்
வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே
ஆண் : பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையில
நித்தம் வேகிறது உன் நினைப்பு
பெண் : வார்த்தை தென்றல் நீ வீசும் போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது..........!
--- எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ---
3 months 3 weeks ago
கண்ணெல்லாம் உன் வண்ணம் , நெஞ்செல்லாம் உன் எண்ணம் .........! 😍
3 months 3 weeks ago
இந்த வாரம் இரண்டு வகையான சந்தைகளில் (நாணய சந்தை, பொருள் சந்தை - commodity) இல் மட்டும் ஈடுபட உள்ளேன், US S&P 500 தற்போது பக்கவாட்டாக நகர்கிறது இதனை Choppy market action என கூறுவார்கள், இந்த வகை சந்தைகளில் வர்த்தகம் ஈடுபடுவது இலாபகரம்ற்றது அத்துடன் இது ஒரு Accumulation or Distribution பண்பை கொண்டுள்ளது இதில் range break trade சாதகமான விளைவை ஏற்படுத்தும்.
AUDJPY & GOLD chart pattern breaks out trade இல் ஈடுபடுவதுதான் நோக்கம், பொதுவாக திங்கள் கிழமை ஆசிய சந்தை நிகழ்வு குறித்த வார த்திற்கான சந்தை போக்கினை தீர்மானிக்கும் என்பார்கள் அதனடிப்படையில் எனது வர்த்தகத்தினை மேற்கொள்வது வழமை, எனது முறைமையான வர்த்தக முறையினை (எனது சொந்த முறைமை அல்ல) பின்னர் விள்க்குகிறேன், அது தொடர்பான தொழினுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கோரினால் அதனை பதிவிட முயற்சிக்கிறேன், ஆனால் வர்த்தகத்தில் வெற்றி தோல்வி எனபதனை நிகழ்தகவினடிப்படையில் அணுக வேண்டும் என்பார்கள். அனைத்து முறைமையும் அனைவருக்கும் பொருந்துவதில்லை, இந்த உத்தியினை பயன்படுத்துவதற்கு முன்னர் இதனை back test and forward test செய்து அதன் தரவினை பயன்படுத்தி risk ruin simulator இன் அடிப்படையில் உங்கள் risk இனை தீர்மானிக்கவும் (இந்த கணிப்பில் உங்களது கணக்கு பேணப்படுவதனை உறுதி செய்த பின்) இந்த கணிப்பி இணையத்தளத்தில் பல பக்கங்களில் உள்ளது கூகிளில் தேடலாம்.
பொதுவாக எனது முறைமையினை கூறாமைக்கு காரனம் சுயநலம் அல்ல, இதில் உள்ள risk இனை உணராமல் மற்றவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதற்கு நான் காரணம் எனும் எண்ணத்தில்தான், ஆனால் இதனை முயற்சிப்பவர்கள் அது அவர்களது தனிப்பட்ட முடிவு மற்றும் அதனால் ஏற்படும் இலாப நட்டங்களுக்கு நானோ அல்லது யாழ் இணயமோ பொறுப்பல்ல.
3 months 3 weeks ago
வாழையடி வாழை
- சுப.சோமசுந்தரம்
தமிழ் நிலத்தின் சிறந்த எழுத்தாளராக, திரைப்பட இயக்குனராக பரிமளித்திருக்கும் திரு. மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் தொடர்பாக சிறிது எழுத வந்தேன். நல்ல படங்களைப் பற்றித் தெரிய வரும்போது OTT தளத்தில் வரும் வரை பொறுப்பதில்லை; திரையரங்கிலேயே பார்த்து விட வேண்டும் எனும் முனைப்பு உள்ளவன்தான் நானும். இருப்பினும் படம் வந்து ஐந்தாறு நாட்கள் கழித்து மிதமான கூட்டத்தில் பார்ப்பதிலேயே அலாதி இன்பம் காண்பவன் நான். காரணங்கள் சில உண்டு. ஒரு நல்ல திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் (ஒவ்வொரு frame ஐயும் என்று சொல்வார்களே, அது அதேதான் !) சலனமில்லாமல் ரசித்துப் பார்க்க முடிகிறது. ஒரு சிறுபிள்ளைத்தனமான காரணம் கூட உண்டு. திரையரங்கின் கேன்டீனில், "வள்ளிசா சீனி இல்லாத டீயா ? அரைச் சீனி போட்டுத் தரட்டுமாய்யா ?" என்று வாஞ்சையுடன் தாயினும் சாலப் பரிந்த பரிவு கூட்டத்தில் கிடைப்பதில்லை. கூட்டம் அதிகம் உள்ள எந்த சமூகத்திலும் மானுட மதிப்பீடு குறைவு என்று எங்கோ வாசித்த நினைவு. நிற்க.
'வாழை' திரைப்படம் குறித்த விமர்சனம் செய்ய வரவில்லை. நான் நிதானமாக ஒரு வாரம் கழித்துப் பார்த்ததால், படம் ஏற்கனவே ஊடகங்களில் திரைத்துறையின் துறை போகியவர்களால் ஆய்ந்து அலசிப் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது; மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எனவே அது பற்றிப் புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின் என்னதான் எழுத நினைத்தேன் ? நான் 'வாழை' பார்க்கும் முன்பே எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் ஏதோ சொல்லப் போக, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட சிறிய சலசலப்பின் பின்னணியில் ஏதோ எழுத நினைத்தேன். அவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே தாம் எழுதிய 'வாழையடி' என்ற சிறுகதையைக் குறிப்பிட்டு அந்த 'வாழையடி'தான் இந்த 'வாழை' என்ற தொனியில் பேசி இருந்தார். எதையும் சாதியக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கும் ஆதிக்க சக்திகள், "கிடைத்ததடா வாய்ப்பு - மாரி செல்வராஜை அடிக்க !" என்ற அளவில் ஆரவாரம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். மறுநாளே மாரி செல்வராஜ், "வாழைக்காய் சுமக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை. அனைவரும் வாசிக்கவும். எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" என்று சுருக்கமாக, தெளிவாக, தமக்கே உரிய சான்றாண்மையுடன் தமது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார். 'வாழையடி' கதையின் இணைப்பையும் தந்திருந்தார். நான் படம் பார்ப்பதற்கு முன் 'வாழையடி' கதையை வாசித்து விட்டேன். படம் பார்க்கும்போது அக்கதையைப் படத்துடன் மனதளவில் ஒப்பிடத் தவறவில்லை.
திருவைகுண்டம் பகுதியில் வாழை விவசாயத்தைக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்ய விழைவோர் யாரும் அந்தக் கங்காணிகளைக் குறிக்காமல், அக்காலத்தில் வாழைத்தார் ஒன்றுக்குச் சுமை கூலி ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாயாக ஏற்ற தொழிலாளர்கள் வைத்த கோரிக்கையைக் குறிக்காமல், தொழிலாளர் ஆடையில் வாழைக் கறையைக் குறிக்காமல், வரப்பில் குத்தும் முள்ளைக் குறிக்காமல், கால் தடுமாறி நீரில் விழுவதைக் குறிக்காமல் எழுத முடியாது. இப்படி எல்லோருக்கும் தோன்றும் துணுக்குகளை ஒரு சிறுகதையாய்ப் பதிவு செய்துவிட்டு, தொழிலாளர்களின் வாழ்வை ஓவியமாய்த் தீட்டிய ஒரு திரைக்காவியத்தை மலினப்படுத்துவதைப் போல அல்லது குறைத்து மதிப்பிடுவதைப் போல சோ.தர்மன் அதன் கதைக்குச் சொந்தம் கொண்டாடியது சரிதானா ? அந்தக் கதைதான் இந்தக் கதை என்று உணர்வதற்கு ஒரு ஞானக்கண் வேண்டுமோ ! "எனக்குத் தெரிந்தவரை வாழைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலில் பதிவு செய்தவன் நான்தான்" என்று சொல்வது வரை சோ. தர்மனுக்கு அவரது உரிமையின் எல்லை.
ஜெர்மனியில் நாஜிக்கள் நிகழ்த்திய யூத இன அழிப்பு (The Holocaust) பற்றிய பல கதைகளும் புதினங்களும் எழுதப்பட்டன; எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களும் வெளிவந்தன. அவையனைத்திலும் வதை முகாம்கள் (concentration camps), யூதர்களும் அரசியல் எதிரிகளும் முதலில் தங்க வைக்கப்பட்ட 'கெட்டோக்கள்' (ghettos), கொலைவாயு அறைகள் (gas chambers), கொலை செய்யப்பட்ட சிறுவர், சிறுமியர், முதியோர் என அனைத்து விஷயங்களும் உண்டு. இவற்றுள் எல்லி வீஸல் (Elie Wiesel) எனும் எழுத்தாளர் தாம் நேச நாடுகள் படையால் புச்சென்வால்ட் (Buchenwald) வதை முகாமிலிருந்து விடுவிக்கப்படும் வரை உள்ள தமது சோக அனுபவங்களைப் பகிர்ந்த 'Night' எனும் புதினம் இலக்கிய உலகில் பரவலாகப் பேசப்படுவது. அவர் ஒரு எழுத்தாளர், பேராசிரியர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். தமது சமூகச் செயல்பாடுகளால் 1986 இல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். அவரது புதினம் 'Night' இல் ஹிட்லரின் யூத இன அழிப்பு பற்றிய முந்தைய புதினங்களில் உள்ளவைதாம் இருக்கின்றன என்று யாரேனும் குற்றம் சாட்டினால், இலக்கிய உலகம் அதனை எப்படிப் பார்க்கும் ? இது பற்றிய ஏனைய பெரும்பாலான படைப்புகள் வதை முகாம்களில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்களைக் கேட்டு எழுதப்பட்டவை; எல்லி வீஸலைப் பொறுத்தவரை அவரே ஒரு எழுத்தாளர், அறிஞர் என்பதால் அவர்தம் சொந்த அனுபவத்தைப் பதிவு செய்தது ஏனைய படைப்புகளில் இருந்து சிறந்து விளங்குதல் இயற்கையே ! அது போலவே கரிசல் காட்டில் இருந்து மருத நிலத்திற்குக் குறுகிய காலத்திற்கு வந்த சோ. தர்மன் வாழை விவசாயிகளின் துயரங்களைப் பதிவு செய்ததை விட வாழையில் வாழ்ந்த மாரி செல்வராஜின் பதிவு நிவந்து நிற்பது இயற்கையே - அது எழுத்து ஊடகம், இது காட்சி ஊடகம் என்று இருந்தாலும் கூட ! மேலும் முன்னரே குறிப்பிட்டது போல் சோ. தர்மன் ஒரு சிறுகதையாக எழுதியவை, எல்லோருக்கும் தெரியும் துணுக்குச் செய்திகள். மாரி செல்வராஜ் பதிவு செய்தவை அவர் வாழ்ந்து காட்டியவை. இவற்றிற்கு அப்பாற்பட்டு, எழுத்து ஊடகத்தில் கூட சோ. தர்மனை விட மாரி செல்வராஜ் ஒரு படி உயர்ந்து நிற்கிறார் என்பது இருவரது எழுத்துக்களையும் வாசித்த என் கருத்து. சோ. தர்மன் எண்ணிக்கையில் அதிகப் படைப்புகளைத் தந்திருக்கிறார், சாகித்ய அகாடமி விருதாளர் என்பதெல்லாம் ஒரு புறம். இத்தகைய ஒப்பீடு பொதுவாகத் தேவையில்லைதான். சோ.தர்மன் நம்மை சந்திக்கு இழுத்தால் வேறு என்ன செய்வது ?
"படம் பார்த்தீர்களே, எப்படி இருக்கிறது ?" என்று நிருபர் கேட்டதற்கு, பெரும் பாராட்டைப் பெற்ற படத்தின் தரத்தைப் பற்றி எதுவும் பேசாமல், "நான் அச்சு ஊடகத்தில் பதிவு செய்தேன்; அவர் (மாரி செல்வராஜ்) காட்சி ஊடகமாக மாற்றி இருக்கிறார்; அவ்வளவுதான். வேறெதுவும் இல்லை" என்று சாதாரணமாக சோ. தர்மன் சொல்லிச் செல்வது முதிர்ச்சியின்மையா அல்லது அடாவடித்தனமா என்பது நமக்குப் புரியவில்லை. 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' எனும் அடிப்படைப் பண்பே சோ. தர்மனுக்குத் தெரியாதோ என்று எண்ண வைக்கிறார். "கதைக்காக மாரி செல்வராஜ் என்னிடம் உரிமை கோரவும் இல்லை; அதை நான் பெரிதாக்கவும் இல்லை" என்று சோ. தர்மன் சொல்வது வேடிக்கை. "அது நம்ம கதைதான் என்று சொல்ல முடியாது" என்றும் பேட்டியின் ஊடாகச் சொல்லிக் கொள்கிறார் சோ. தர்மன். அவ்வாறெனில் மாரி செல்வராஜ் அவரிடம் ஏன் உரிமை கோர வேண்டும் ? ஒரு இலக்கியவாதி இவ்வளவு குழப்பவாதியாகவா இருப்பது ? ஊடகங்களில் இவ்வளவு சொல்லிவிட்டு, "அதை நான் பெரிதாக்கவில்லை" என்ற பம்மாத்துப் பெருந்தன்மை எதற்கு ? வாசகர்களில் சிலர் அல்லது பலர் அரைகுறை வாசிப்பு அல்லது மேம்போக்கான வாசிப்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அப்படியானவர்கள், "உங்கள் கதைதான் வந்திருக்கிறது" என்று உளறினால் அந்த உளறல்களையெல்லாம் பொதுவெளிக்குக் கொண்டு வருவது சான்றாண்மைக்கு அழகா ?
சமூகத்தில் சில சாதி வெறியர்கள் மாரி செல்வராஜ் மீது கொண்ட வன்மத்தால் சமூக வலைத்தளங்களில் ஓரிரு நாட்கள் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆடினார்களே தவிர, அறிவுலகம் சோ. தர்மனின் வெற்றுரையைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளியது அவ்வுலகின் சான்றாண்மைக்கான சான்று. பின் ஏன் இது பற்றி நான் இத்துணை எழுத வேண்டும் ? ஒருவர் தாம் கற்றுணர்ந்தார் என்ற போர்வையில் இளையோரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதைக் கண்டுகொள்ளாமல் விடுவதையும் தாண்டி, கண்டனக் குரலைப் பதிவு செய்வது ஓரளவு கற்றலும் கற்ற வழி நிற்றலும் உடையோர் தம் கடமை.
மகாபாரதக் கதையில் கர்ணன் தோற்று தருமன் வென்றிருக்கலாம். 'வாழையடி'யை வாசித்து 'வாழை'யைப் பார்த்தால் தெரியும் - அந்த 'தர்மன்' தோற்று இந்த 'கர்ணன்' வெல்வது.
https://www.facebook.com/share/p/2shRFgGaBPcoGhvN/?mibextid=oFDknk
3 months 3 weeks ago
இலங்கையை 2ஆவது டெஸ்டில் 190 ஓட்டங்களால் வெற்றி கொண்ட இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றியது
Published By: VISHNU 01 SEP, 2024 | 10:36 PM
(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) நிறைவு பெற்ற 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் 190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது.
ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் குவித்த சதங்கள், கஸ் அட்கின்சனின் அற்புதமான சகலதுறை ஆட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
மிகவும் கடினமான 483 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதலாவது டெஸ்டில் போன்றே இந்த டெஸ்டிலும் நான்கு நாட்களுக்குள் இலங்கை தோல்வி அடைந்தது.
போட்டியின் 4ஆம் நாள் காலை வெற்றிக்கு மேலும் 430 ஓட்டங்கள் தெவைப்பட்ட நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களிலிருந்து இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 41 பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி திமுத் கருணாரட்னவுடன் 4ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மொத்த எண்ணிக்கை 115 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன கவனக் குறைவான அடி தெரிவினால் ஆட்டம் இழந்தார்.
அவர் 129 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து மத்திய வரிசையில் ஏஞ்சலோ மெத்யூஸ் (36), தினேஷ் சந்திமால் (58), தனஞ்சய டி சில்வா (50), மிலன் ரத்நாயக்க (43) ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடியபோதிலும் அவர்களால் இலங்கையின் தோல்வியைத் தடுக்க முடியாமல் போனது.
எண்ணிக்கை சுருக்கம்
இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 427 (ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118, பென் டக்கட் 40, அசித்த பெர்னாண்டோ 102 - 5 விக்.,)
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (கமிந்து மெண்டிஸ் 74, தினேஷ் சந்திமால் 23, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெத்யூ பொட்ஸ் 19 - 2 விக்., கிறிஸ் வோக்ஸ் 21 - 2 விக்.)
இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 251 (ஜோ ரூட் 103, ஹெரி புறூக் 37, ஜெமி ஸ்மித் 26, பென் டக்கட் 24, அசித்த பெர்னாண்டோ 52 - 3 விக்., லஹிரு குமார 53 - 3 விக்., மிலன் ரத்நாயக்க 38 - 2 விக்.)
இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 292 (தினேஷ் சந்திமால் 58, திமுத் கருணாரட்ன 55, தனஞ்சய டி சில்வா 50, மிலன் ரத்நாயக்க 43, ஏஞ்சலோ மெத்யூஸ் 36, கஸ் அட்கின்சன் 62 - 5 விக்., கிறிஸ் வோக்ஸ் 46 - 2 விக்., ஒல்லி ஸ்டோன் 56 - 2 விக்.)
ஆட்டநாயகன்: கஸ் அட்கின்சன்
https://www.virakesari.lk/article/192595
3 months 3 weeks ago
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; போலியோ முகாமிற்கு முன்னால் 49 பேர் பலி
காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். கிட்டதட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரினால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்களால் காசா முழுவதும் உருக்குலைந்துள்ளது. போரால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, நோய் தொற்று அபாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்காக, உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது.
அதற்காக இன்றுமுதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன. சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்தும் வழங்கினர்.
தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சொட்டு மருந்து முகாம்களுக்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். இச்சூழலில் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில், அகதிகள் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஒன்றான நசீரத் பகுதியில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.
https://thinakkural.lk/article/308836
3 months 3 weeks ago
அனுரகுமார வெற்றிபெற்றால் வேறு கட்சியில் இருந்தே பிரதமர் நியமிக்க வேண்டி வரும்; ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ
Published By: VISHNU 02 SEP, 2024 | 02:43 AM
(எம்.ஆர்.எம்.வசீம்)
அனுரகுமார வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தை கலைத்து காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்கள் இல்லை. அதனால் ஜே.வி.பி. அரசாங்கம் அமைப்பது சாத்தியமில்லை. அதேநேரம் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டுவந்தால், அது தொடர்பான விசாரணை முடிவடையும் வரைக்கும் பராாளுமன்றத்தை கலைக்கவும் முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றால் அவர் எவ்வாறு தற்காலிக அரசாங்கம் அமைப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாராவது ஒரு வேட்பாளர் எதி்ர்வரும் 21ஆம் திகதி வெற்றிபெற்றால், அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைக்கிறது. அவ்வாறு அவர் பாராளுமன்றத்தை கலைத்தால் தற்காலிக அமைச்சரவை ஒன்றை அவர் அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த வருடம் செப்டம்பர் முதலாம் திகதிவரை பாராளுமன்றத்துக்கான காலம் இருப்பதால், அதுவரைக்கும் பாராளுமன்றத்தை அவ்வாறே கொண்டுசெல்லவும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு முடியும்.
அதேநேரம் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் அதிகமானவர்களின் விருப்பத்துக்குரியவர் என ஜனாதிபதி நினைக்கும் ஒருவரை பிரதமராக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஏனெனில் அடுத்த பாராளுமன்றம் வரைக்கும் நாட்டில் அமைச்சரை ஒன்று இருக்கவேண்டும்.
குறைந்தது 20 அமைச்சர்களாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை கொண்டு செல்ல முடியும். அனுரகுமார வெற்றிபெற்றால், அவர்களுக்கு பாராளுமன்றத்தில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. அதனால் வேறு கட்சிகளில் இருந்தாவது பிரதமர் ஒருவரை ஜனாதிபதிக்கு நியமிக்க வேண்டி ஏற்படுகிறது.
மேலும் இந்த தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ள நிலையில். ஏதாவது ஒரு காரணத்துக்காக அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து, அவரை பதவி நீக்கவும் முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகருக்கு குற்றப்பிரேணை கையளிக்கப்பட்டு, அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், அதன் பின்னர் குற்றப்பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு கிடைக்கும் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்றார்.
https://www.virakesari.lk/article/192600
3 months 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், ஒனூர் எரெம்
பதவி, பிபிசி உலக சேவை
5 மணி நேரங்களுக்கு முன்னர்
உங்களது குடல் ஆரோக்கியம், உங்களது கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநோய் வரை அனைத்துடனும் சம்பந்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நமது உடல்நலத்தில் குடலின் பங்கு என்ன என்பது பற்றிய நமது அறிவு விரிவடைந்து வருவதால், குடல் ஆரோக்கியத்தின் மீது நமது கவனமும் அதிகரித்து வருகிறது.
2021-இல் உலகளாவிய புரோபயாடிக்ஸ் சந்தை ஆண்டுக்கு 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இது 2030-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 7%-க்கும் அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான போலரிஸ்-இன் தரவுகள் கூறுகின்றன.
ஆனால், குடல் ஆரோக்கியம் ஏன் முக்கியமானது? குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, மூளையில் காணப்படும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளை குடலும் உற்பத்தி செய்கிறது
ஆரோக்கியமான குடல் என்றால் என்ன?
குடலின் கட்டமைப்பு சிக்கலானது. அதனால், மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை அடையாளம் காண்பதைப் போல, ஆரோக்கியமான குடலை அடையாளம் காண்பது எளிதானது அல்ல. மேலும், குடல் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கு எந்த ஒரு தனிப்பட்டக் கருவியும் இல்லை.
நமது குடல் நுண்ணுயிரிகளால் நிறைந்துள்ளது. அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானது என்றால், அவற்றை ஒன்றாக இணைக்க முடிந்தால், அவற்றின் எடை 1.8 கிலோவுக்கு மேல் இருக்கும்.
ஒவ்வொரு கிராம் குடலிலும் 100 பில்லியன் (10,000 கோடி) பாக்டீரியாக்கள் உள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் குடலுக்கும் மூளைக்கும் இடையிலான உறவை ஆராய்ச்சி செய்யும் டாக்டர் கேடரினா ஜான்சன் கூறுகையில், ஆரோக்கியமான குடல் பலதரப்பட்ட நுண்ணுயிரிகள் வளர்வதை ஊக்குவிக்கிறது.
நுண்ணுயிர் அறிவியல் ஒப்பீட்டளவில் ஒரு இளம் துறை, என்கிறார் கேடரினா ஜான்சன். அதாவது ஆரோக்கியமான குடல் எப்படி இருக்கும் என்று நமக்கு விரிவாகத் தெரியாது.
"நமது நுண்ணுயிரிகள் மிகவும் தனிப்பட்டவை, பலதரப்பட்டவை. ஆயிரக்கணக்கான வெவ்வேறு நுண்ணுயிரி இனங்கள் (இந்த இனங்களுக்குள் வெவ்வேறு திரிபுகள்) உள்ளன. அவற்றில் பலவற்றின் செயல்பாடு எங்களுக்குத் தெரியாது," என்கிறார் அவர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, குடல் ‘இரண்டாவது மூளை’ என்று அழைக்கப்படுகிறது
ஆரோக்கியமான குடல் ஏன் முக்கியம்?
குடல் ‘நமது உடலின் அனைத்து உறுப்புகளையும்’ பாதிக்கலாம், என்கிறார் டாக்டர் ஜான்சன்.
மூளைக்கும் குடலுக்கும் இடையே ‘குடல்-மூளை அச்சு’ (gut–brain axis) எனப்படும் வலுவான தொடர்பு அமைப்பு உள்ளது.
ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு இன்றியமையாதவை. குடல் நுண்ணுயிரிகள் இல்லாத நிலையில் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக நடக்கவில்லை என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
குடல் ‘இரண்டாவது மூளை’ என்று அழைக்கப்படுகிறது.
நியூரான்கள் நமது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படும் செல்கள் ஆகும். அவை நம் உடல் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அதற்குச் சொல்கின்றன.
மூளையில் காணப்படும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளை குடலும் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் நமது மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் குடலும் ஒரு பங்கு வகிக்கிறது.
நமக்கு நன்கு தெரிந்த குடலின் செயல்பாடு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதாகும்.
"நீர் மற்றும் தாதுக்களை நாம் மலம் வழியே இழக்க முடியாது," என்று இந்தியாவின் இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன் கிருஷ்ணா விளக்குகிறார்.
இங்கிலாந்தில் உள்ள ‘கட் ஹெல்த் டாக்டர்’ என்றும் அழைக்கப்படும் டாக்டர் மேகன் ராஸ்ஸி, குடல் நுண்ணுயிரிகளில் ஏற்படும் சமநிலைக் குலைவுகள் 70-க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாட்பட்ட நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன, என்கிறார். இவற்றில் இதயம் மற்றும் சுவாச நோய்கள் முதல் முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரை அடங்கும்.
நமது நோயெதிர்ப்பு உயிரணுக்களில் சுமார் 70% நமது குடலில் வாழ்கின்றன. இது நோயெதிர்ப்பு அமைப்புடன் ஒரு ‘தொடர்ச்சியான செய்திப் பரிமாற்றத்தில்’ இருக்கிறது என்று டாக்டர் ராஸ்ஸி கூறுகிறார்.
அதனால்தான், “சிறந்த குடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் அதிக மீள்திறன் கொண்ட நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது?
2018-ஆம் ஆண்டில் ‘அமெரிக்க குடல் திட்டத்தின்’ (American Gut Project) ஆராய்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 30 வெவ்வேறு தாவரங்களைச் சாப்பிட வல்லுநர்கள் பரிந்துரைக்கத் துவங்கினர்.
பழங்கள், மற்றும் காய்கறிகள் மட்டுமல்ல, விதைகள், மசாலா, மற்றும் கொட்டைகள் போன்றவையும் அடங்கும்.
சமையல் குறிப்புகளில் சிறிய மாற்றங்களைச் செய்து, பல்பொருள் அங்காடியில் பலவகையான பழங்களைத் தேடுவது போன்ற எளிய முறைகளை டாக்டர் ராஸ்ஸி பரிந்துரைக்கிறார்.
நார்ச்சத்து நிறைந்த உணவு, வயிறு நிறைந்தது போன்ற உணர்வை வழங்குகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, என பிரிட்டனின் தேசியச் சுகாதார சேவை தெரிவிக்கிறது.
இந்த அமைப்பு பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து சாப்பிட பரிந்துரைக்கிறது.
நார்ச்சத்துடன் கூடிய மாவு, அல்லது தானிய ரொட்டிகளை உட்கொள்வது, பழுப்பு அரிசி, அல்லது முழு கோதுமை ஆகியவற்றை உட்கொள்வது உங்கள் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கலாம்.
நார்ச்சத்துக்கான பிற உணவுகளில், உருளைக்கிழங்குகள் தோலுடன் (வேகவைத்த உருளைக்கிழங்கு) மற்றும் பீன்ஸ், பருப்பு அல்லது கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள், ஆகியவற்றை குழம்பு, கூட்டு, மற்றும் சாலட்களில் சேர்க்கலாம்.
ப்ரீபயாடிக் உணவுகள் (சில வகையான நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்) குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, நார்ச்சத்துடன் கூடிய மாவு, அல்லது தானிய ரொட்டிகளை உட்கொள்வது, பழுப்பு அரிசி, அல்லது முழு கோதுமை ஆகியவற்றை நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கலாம்
வாழைப்பழம், வெங்காயம், பூண்டு, முட்டைக்கோஸ், ஓட்ஸ், அஸ்பாரகஸ், சிட்ரஸ் பழங்கள் ஆகியவை நார்ச்சத்துக்கான மேலும் சில எடுத்துக்காட்டுகள்.
பாகிஸ்தானில் உள்ள இரைப்பைக் குடலியல் நிபுணரான டாக்டர் ஹனிஷா கெமானி, நமது இருபதுகளில் ‘சமச்சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறையை’ நிறுவுவது ‘நீண்ட கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானது’ என்கிறார்.
"இந்த முக்கியமான காலகட்டத்தில் செய்யப்படும் உணவுத் தேர்வுகள் நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைத் தீர்மானிக்கும். இது மன மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், பிற்கால தசாப்தங்களில் ஒட்டுமொத்த உடல் நலனை வடிவமைக்கும்," என்று அவர் கூறுகிறார்.
இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில் குறைந்தது 12 மணிநேர இடைவெளி விடுவது குடல் நுண்ணுயிரிகளுக்கு நன்மை பயக்கும், என லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தனது ‘ஸ்பூன்-ஃபெட்: உணவைப் பற்றி நமக்குக் கூறப்பட்ட அனைத்தும் தவறு’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து சாப்பிட வேண்டும்
குடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் எவை?
அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது, மற்றும் புகையிலை பயன்பாடு உங்கள் குடலுக்கு நல்லதல்ல என்று டாக்டர் கிருஷ்ணா விளக்குகிறார்.
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவில் 'நல்ல' பாக்டீரியாவை அடக்கும், அல்லது 'கெட்ட' பாக்டீரியாவை அதிகரிக்கும் பொருட்கள் உள்ளன.
உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், சுகாதாரமற்ற தெருவோர உணவுகளைத் தவிர்க்கவும், ஆபத்தான வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைத் தவிர்க்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி உண்ண வேண்டும் என டாக்டர் கிருஷ்ணா மேலும் கூறுகிறார்.
மன அழுத்தம் நம் குடலையும் பாதிக்கிறது. இது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் குடல் புண்களை அதிகரிக்கலாம்.
டாக்டர் ஜான்சன் கூறுகையில், அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை குறைந்துவிடும் என்கிறார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடலுக்கு நல்லதல்ல
புரோபயோட்டிக் உணவுகள் பலனளிக்குமா?
ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் போது புரோபயோட்டிக்குகள் வேலை செய்யும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டாக்டர் மேகன் ராஸ்ஸி, "சரியான நிலையில், சரியான கால அளவுக்கு, நீங்கள் சரியான புரொபயோட்டிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்கிறார்.
"இன்று நீங்கள் பல்பொருள் அங்காடிகளில் பார்க்கும் ஒரு புரோபயாடிக் தயாரிப்பு, குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. விளம்பரங்கள் சொல்வதுபோல அவற்றை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை," என்கிறார் அவர்.
''சில நாடுகளில், நிறுவனங்கள் குடல் சுகாதார சோதனைகளை வழங்குகின்றன, அங்கு நீங்கள் ஆய்வகத்தில் ஆய்வுக்காக உங்கள் மலத்தைக் கொடுப்பீர்கள்.''
''இந்த நிறுவனங்கள் சொல்வதைப்போன்ற பலன்களை இந்தப் பரிசோதனைகள் வழங்குவதில்லை, ஆனால் உங்கள் குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை பற்றிய புரிதலை இவை வழங்க முடியும்'' என்று டாக்டர் ராஸ்ஸி கூறுகிறார்.
பிரிட்டிஷ் மருத்துவரும் டிவி தொகுப்பாளருமான டாக்டர் சாண்ட் (Xand) இவை முற்றிலும் பலனளிக்குமா என்பது சந்தேகம்தான் என்று ஒப்புக்கொள்கிறார்.
"அவர்கள் உங்களுக்குப் பொதுவான ஆலோசனையை வழங்குவார்கள். ஆனால், அது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல," என்று அவர் கூறுகிறார். "உங்கள் பணத்தைச் சேமிக்கவும், உங்களுக்குக் குடல் பிரச்னைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசவும், என்று நான் கூறுவேன்," என்கிறார் அவர்.
https://www.bbc.com/tamil/articles/c75nkpzxr1qo
3 months 3 weeks ago
மற்றவருக்கு விழுந்த விருப்பு வாக்குகளை சிங்கள ஆமியின் உதவியுடன் தனக்கு மாற்றித்தான் இந்த சுத்துமாத்து திருட்டு தனமாக வெல்ல வைக்கப்பட்டார் , இந்த லச்சனத்தில் இவரின் கதையை கேட்டு மக்கள் வாக்கு போடுவார்கள் ....அப்ப சஜித்க்கு இப்பவே அல்வாதான் ....ரணிலின் தந்திரம் வேலை செய்கின்றது .
சிங்கள மக்களின் வாக்கினை கவரும் ரணிலின் காய் நகர்த்தல் ......
3 months 3 weeks ago
02 SEP, 2024 | 11:37 AM
ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதை ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் ஜகத் டயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினரை இலங்கை அரசாங்கம் தண்டிக்கவேண்டும் என அழுத்தம் கொடுக்கும் மனித உரிமை பேரவையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பது குறித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவேண்டு;ம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவின் சமீபத்தைய அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள ஜகத்டயஸ் இந்த கடும் சவாலை எதிர்கொள்வதில் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி வேட்பாளர்களிற்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்தியுள்ளார்.
யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தான் குற்றம்சாட்டியவர்களை விசாரணைகளிற்கு உட்படுத்தி தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டதாக குற்றம்சாட்டும் ஜெனீவா வெளிப்புற உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்துதல், நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பொருளாதார தடைகள் பயணத்தடைகளை விதித்தல்,சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பிற நடவடிக்கைகள் போன்ற தந்திரோபாயங்களை சர்வதேச சமூகம் பின்பற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது என ஜகத்டயஸ் தெரிவித்துள்ளார்..
https://www.virakesari.lk/article/192619
3 months 3 weeks ago
மற்றவருக்கு விழுந்த விருப்பு வாக்குகளை சிங்கள ஆமியின் உதவியுடன் தனக்கு மாற்றித்தான் இந்த சுத்துமாத்து திருட்டு தனமாக வெல்ல வைக்கப்பட்டார் , இந்த லச்சனத்தில் இவரின் கதையை கேட்டு மக்கள் வாக்கு போடுவார்கள் ....அப்ப சஜித்க்கு இப்பவே அல்வாதான் ....ரணிலின் தந்திரம் வேலை செய்கின்றது .
சிங்கள மக்களின் வாக்கினை கவரும் ரணிலின் காய் நகர்த்தல் ......
Checked
Mon, 12/23/2024 - 07:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed