ஊர்ப்புதினம்

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறி

2 weeks ago

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறி colombo-wellawatte.jpg

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 26 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 924 வேட்பாளர்கள் போட்டி யிட்ட நிலையில் பொதுஜன பெரமுன 12 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.

இதில் பொதுஜன பெரமுன ,தேசிய மக்கள் சக்தியில் எந்தவொரு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் மரிக்கார்,முஜிபுர் ரஹ்மான் ,மனோ கணேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் அலை அடிப்பதனாலும் கொழும்பு மாவட்ட ஆசனங்கள் 1 ஆல் குறைக்கப்பட்டதாலும் கடந்த முறை 19 ஆசனங்களுக்கு 924 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இம்முறை 18 ஆசனங்களுக்கு 966 வேட்பாளர்கள் போட்டியிடுவதனாலும் வாக்குகள் பிரிந்து செல்ல தமிழ் பிரதிநிதித்துவமே பறிபோகக்கூடிய நிலைமை ஏற்படுள்ளதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற ஆசனங்களில் 1 குறைக்கப்பட்டுள்ள நிலையில் 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 19 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதுமட்டுமன்றி கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் இதுவரையான அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொண்டுள்ள நிலையில் இம்முறை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவையும் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளதுடன் மக்கள் செல்வாக்குள்ளவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதனால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு இதுவரை கிடைத்து வந்த தமிழர் பிரதிநிதித்துவம் இம்முறை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அரிது எனவும் இந்த அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

https://akkinikkunchu.com/?p=298513

 

 

தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை - கே.வி.தவராசா

2 weeks ago

தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை - கே.வி.தவராசா
1952307781.jpg

தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை என ஐனாதிபதி சட்டத்தரணியும் சுயேட்சைக்குழு 14 இன் வேட்பாளருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 

“ 2009 வரை தமிழரசுக்கட்சி தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையிலே இருந்தது.

அதன் பின்னரே இந்த மாற்றங்கள் வெளிவரத் தொடங்கின.

கட்சிக்குள் எப்போதும், தன்னிச்சையாகவே முடிவெடுப்பார்கள், இதற்கு மாவை சேனாதிராஜாவின் பலவீனமும் ஒரு காரணம் எனலாம். நாடாளுமன்றத்திலுள்ள பதவிக்காக நான் போட்டியிடவில்லை, தமிழ் தேசியத்தை பாதுகாப்பதே எங்களது நோக்கம்.

அரசியல்வாதிகளால் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சரியானவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

தமிழரசுக்கட்சியிலியிருந்து விலகியதே அங்கு நடப்பதை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான்.” என்றார்.
 

 

https://newuthayan.com/article/தமிழ்_மக்கள்_வீட்டு_சின்னத்திற்கு_வாக்களிப்பார்களாக_இருந்தால்_அதை_விட_வரலாற்று_தவறு_ஒன்றுமில்லை

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள வடக்கு மாகாண விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள்

2 weeks ago

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செங்காரபிள்ளை அறிவழகன்,

இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தெற்காசியவில் வளமான நாடாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து 5 குடும்பங்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் ஆட்சிக்கு வருவதற்கு இனவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை தொலைந்து விட்டு தமிழர்களாக, சிங்களவர்களாக, முஸ்லிங்களாக பிரிந்து நிற்கின்றோம்.

இனவாதத்தை கையில் எடுக்காத ஒரு கட்சி தான் இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சரியான முறையில் அணுகி வருகிறார்கள் என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/311914

மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்

2 weeks ago

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது. நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் – நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் – எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள்.

தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம்.

இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றேன். இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன்.” – என்றார்.

https://thinakkural.lk/article/311909

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் தொடர்பில் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு

2 weeks ago

வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் குறித்த ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை 2024 நவம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி அழைப்பு மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/311917

இலக்கத் தகடு இல்லாத மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு !

2 weeks ago
image

நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். 

நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொகுசு வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/198246

தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன்

2 weeks 1 day ago

தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் %E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%

தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.

அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார். அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை.

தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 வீதமான வாக்குகளால்தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம்.

அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம். பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும்.

 

https://akkinikkunchu.com/?p=298489

சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்

2 weeks 1 day ago

சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன் 1731074699-sri-daran-2-780x470.jpg

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.

தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதீயில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன் தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள் வழக்குக்போட்டு செயற்படாது தடுத்தனர். மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர்.

நாங்கள் செல்லும் இடங்களிலும் சொல்கின்றனர். எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது. மக்களுக்கு சொல்லி வருகின்றேன் நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார் அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள்.

அதை எல்லாம் செய்ய முடியாதவர் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார் தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார். அதனை ஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார்.

அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடித தலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர் எப்படி வரும் இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள். பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை நம்புங்கள் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார்.

 

https://akkinikkunchu.com/?p=298483

மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம்; சிறீதரன் பொலிஸில் முறைப்பாடு %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக, போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் பிரசாரம் செய்த ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்றையதினம் (08) குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்ததன் பின்னர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும், பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தை தயாரித்து முகநூலில் விசமப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்கைய வதந்திகளை பரப்பும் நபரொருவர் மீது இன்றைய தினம் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தொடர்ச்சியான முறைமைகளுக்குட்பட்டு அந்த நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்பதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் அந்தக் கடிதத்திலேயே உள்ளன. அறிவிலித்தனமாக செயற்பட்டுவரும் இவர்களை எமது மக்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்.

என்னை விசுவாசிக்கும் எனது மக்களுக்கு நான் மீளவும் ஒன்றை வலியுறுத்திக் கூறுகிறேன். இதுவரை காலமும் நான் மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை பெறவோ, அத்தகைய அனுமதி ஒன்றுக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கவோ இல்லை.

அவ்வாறு நான் வழங்கியிருப்பதாக யாராவது கருதினால் ஜனாதிபதி செயலகத்திலோ, மதுவரி திணைக்களத்திலோ உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளிப்படுத்துங்கள். அதைவிடுத்து பிற்போக்குத்தனமான அற்ப அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உங்களை நீங்களே தரம்தாழ்த்திக் கொள்ளாதீர்கள்“ என தெரிவித்தார்.

 

https://akkinikkunchu.com/?p=298446

பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம்

2 weeks 1 day ago

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்திடம் இருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவு வலுவாக உள்ளது. மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை பெற முடிந்துள்ளது.

எங்களிடம் குறுகிய கால கொடுப்பனவுகள் மட்டுமல்ல, நாங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தில், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஓய்வூதியம் பெறுபவர்களைப் பாதுகாப்பதற்கும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்கும் தற்போது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும்.

உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கு நமது செலவினங்களில் பெரும் சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கைச் செலவு கட்டுப்படும். அதற்கேற்பவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும்.

புத்தாண்டில் பாடசாலை தொடங்கும் போது, பாடசாலை மாணவர்களுக்கு, குறிப்பாக அப்பியாச புத்தகங்களுக்கு நிவாரணம் தருவோம் என நம்புகிறோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்…” என்றார்.

https://thinakkural.lk/article/311899

மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டம் - கைவிடப்படுகின்றது

2 weeks 1 day ago
image

மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை இந்திய இலங்கை கூட்டு முயற்சியிடம் ஒப்படைக்கும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தினை  இலங்கை அரசாங்கம் கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டதடைகளை மீறி இந்திய ரஸ்ய கூட்டு முயற்சிக்கு அனுமதிவழங்க இலங்கை அதிகாரிகள் தயாராகயில்லை என்பதால்  இந்ததிட்டம் கைவிடப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னைய அரசாங்கம் மத்தல விமானநிலையத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவின் சௌர்யா ஏரோநோட்டிக்ஸ் மற்றும் ரஸ்யாவின் எயர்போர்ட் ஒவ் ரீஜன்சிடம் கையளிக்க தீர்மானித்தது.

இதற்கு அனுமதி வழங்குவதற்காக உடன்படிக்கையின் நகல் வடிவத்தினை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியிருந்தனர்.

எனினும் இலங்கையில் விமானநிலைய போக்குவரத்து அதிகாரசபைக்கு மாத்திரமே விமானநிலையங்களை முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கம் மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்க தயாரில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் குறிப்பிட்ட நிறுவனம் இந்த திட்டத்தினை முன்னெடுக்க விரும்பவில்லை. இது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் நீண்டகாலமாக தொடர்புகொள்ளவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/198175

தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம்

2 weeks 1 day ago

நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க  வேட்பாளர்களை எச்சரித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல்  நாட்டில் அமைதி காலம் பிரகடனப்படுத்தப்படும். தேர்தல் சட்டங்களில் அமைதி காலம் தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.

அமைதி காலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் உங்களால் நடத்த முடியாது. வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கவும் முடியாது.

பொதுத் தேர்தல் தொடர்பில்  பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் இயலுமையும் இல்லை. அமைதி காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில் உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம்.

எனவே அமைதிகாலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று சமூக ஊடக பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அமைதி காலத்தில் ஏதேனும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக அந்த பதிவுகளை நீக்குமாறு சம்மந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/311894

தேசிய பிரச்சினைகளின் தீர்வுக்கு, அரசாங்கத்துக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கூட்டுச் செயற்பாடு அவசியம்

2 weeks 1 day ago

கலாநிதி ஜெகான் பெரேரா

நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில்  திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது.

பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது.

ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை  ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய  விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக்  கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை.

அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  ஊழலை ஒழிக்க  வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது.

முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர்.  ஆனால், அவர் முன்னர் ஒருபோதும்  கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு  முன்னரான  உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும்  அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம்.

ஆனால்,  தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட  முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில்  இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன்  ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம்.

பிரதான பிரச்சினை

அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு  மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன.

கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை  இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம்.

ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள்  சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை,  புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை  மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு  --  செலவு திட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை.

அத்துடன்,  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும். 

நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு,  இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும்.

சாத்தியமான பங்காளிகள்

அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம்.  அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில்  47 சதவீதமான வாக்குகளைக்  கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன.

நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது.  அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள்.

ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம்  தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள்.

அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே  இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு  நல்ல வாய்ப்பாக அமையும்.

அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன்  கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை  இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம்.

 

https://www.virakesari.lk/article/198148

சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்

2 weeks 1 day ago

சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர்
Vhg நவம்பர் 07, 2024
1000371836.jpg

 

சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன்.

மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது.

சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் இந்த மண்ணின் மரபுகளை மாற்ற முற்படுபவர்.

ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். மத மாற்ற செல்லும் போது சிவசேனையினர் கற்கள் வீசுகின்றனர், தடிகளால் அடிக்கின்றனர் என கூறப்பட்ட விடயம் மெதடிஸ் திருச்சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் உள்ளடக்கி ஏழாண்டுகளுக்கு முன்பே புத்தகங்கள். அடித்து பெரும்பாலான மக்களிடம் கையளித்துள்ளேன்.

இதுவரையில் சுமந்திரன் என் மீது வழக்கு தொடரவில்லை. முடிந்தால் வழக்கு தொடரட்டும் என மேலும் தெரிவித்தார்.
 

https://www.battinatham.com/2024/11/blog-post_28.html

நிதிமுகாமைத்துவம் குறித்து தெரியாவிட்டால் பாட்டனாரிடம் கேளுங்கள் - அரசாங்கத்திற்கு ரணில் அறிவுரை

2 weeks 1 day ago
image

அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் "பாட்டனாரிடம்" ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இரண்டு கட்டமாக அதிகரிக்கவேண்டும் என்ற உதய செனிவிரட்ணகுழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு இது தெரிந்திருக்கவேண்டும் தெரியாவிட்டதால் பாட்டனாரிடம் கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் மூன்றாவது தொகுதி கடன் இந்த வருட இறுதியில் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து  கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் மாத்திரமே இது சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/198157

அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு

2 weeks 1 day ago

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம்.

சட்ட இடையூறுகள்

இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு | Action To Bring Arjuna Mahendran To The Country

நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 

எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து.

அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு | Action To Bring Arjuna Mahendran To The Country

அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும்.

இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette

3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து!

2 weeks 1 day ago
3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து!

இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார்.

எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது.

நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2024/1407734

நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகளை உருவாகும் கல்வித்திட்டமே தேவை ; பிரதமர் ஹரினி

2 weeks 1 day ago
image

பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.   

கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,   

கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.  

எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.  

உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள். 

இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.  

அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும். 

மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர். 

 இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.    

https://www.virakesari.lk/article/198152

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுனருடன் கலந்துரையாடல்

2 weeks 1 day ago

image

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள  ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  

IMG-20241107-WA0054.jpg

திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொலிஸ், கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம், துறைமுக அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இதில் கலந்துகொண்டனர்.

IMG-20241107-WA0049.jpg

இங்கு திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆளுநரிடமும் உரிய அதிகாரிகளிடமும் மீனவர் பிரதிநிதிகள் ஒவ்வொன்றாக முன்வைத்தனர்.  மீன்பிடி தொழிலில் இடைத்தரகர்கள் கட்டாயமாக மீன் வாங்குவது, பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை ஏலம் விடுவதில் உள்ள சிக்கல்கள், குளறுபடிகள், மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் மிரட்டல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை கொல்வது போன்ற பிரச்சினைகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகள் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

IMG-20241107-WA0053.jpg

கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் அதற்கு போதியளவு பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியும் எனவும் திருகோணமலை பொலிஸ் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமிக்க பிரேமசிறி தெரிவித்தார். 

மேலும், தடைசெய்யப்பட்ட வலை கருவிகள் மூலம் மீன்களை கொல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடலோர காவல்படை மற்றும் கடற்படையினருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். 

எந்தவொரு அரசியல் மற்றும் வெளியாட்களின் செல்வாக்கிற்கும் அஞ்சாமல் கடமைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் உரையாற்றிய ஆளுநர், எவ்வித அரசியல் செல்வாக்கும் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் நலனுக்காக பணியாற்றுமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். 

மீனவர் சங்கப் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய ஆளுநர், சிலமீனவர்கள் செய்யும் தவறுகளினால் ஒட்டுமொத்த மீனவ சமூகமும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டத்தின்படி மீனவர்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/198143

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

2 weeks 1 day ago

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், பிரசார செயலாளர் நடராஜர் காண்டீபன், சிரேஸ்ட சட்டத்தரணி கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ், சிரேஸ்ட சட்டத்தரணி மற்றும் கட்சியின் வேட்பாளர்களான திருமதி வாசுகி சுதாகர், திருமதி க.ஞானகுணேஸ்வரி, திருமதி ஜீன்சியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

1-2-724x1024.jpg
2-2-724x1024.jpg
3-1-724x1024.jpg
4-1-724x1024.jpg
5-724x1024.jpg
6-724x1024.jpg
7-724x1024.jpg
8-724x1024.jpg
9-724x1024.jpg
10-724x1024.jpg
11-724x1024.jpg
12-724x1024.jpg
13-1-724x1024.jpg
14-724x1024.jpg
15-724x1024.jpg
16-724x1024.jpg
17-724x1024.jpg
18-724x1024.jpg
19-724x1024.jpg
20-724x1024.jpg
21-724x1024.jpg
22-724x1024.jpg
23-724x1024.jpg
24-724x1024.jpg
25-724x1024.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

TNPF Manifesto-2024 Parliamentary Election

https://thinakkural.lk/article/311858

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 06 கோடா பரல்கள் மீட்பு

2 weeks 1 day ago

image

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை பகல் (07) முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கிராமத்தின் பொதுமக்கள்  கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட  நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில்  அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/198146

Checked
Sat, 11/23/2024 - 18:13
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr