ஊர்ப்புதினம்

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

2 days 21 hours ago

New-Project-207.jpg?resize=750%2C375&ssl

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாயவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்காவின் சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

இந்தோனேசியாவில் அண்மையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும்.

முன்னதாக, நுவரெலியா, மித்தேனியா, நெட்டோல்பிட்டிய மற்றும் கந்தான ஆகிய இடங்களில் இதுபோன்ற ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1447215

திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

3 days 3 hours ago

திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

15 Sep, 2025 | 12:08 PM

image

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” என அழைக்கப்படும் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின.

01__1_.jpg

இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

திலீபன் முன்வைத்த கோரிக்கைகளான

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக்கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.

2ffe2514-a1b1-45b0-b305-5fd94a196db3.jpe

39d96db4-bb34-4d4e-85fe-97c54087a5f9.jpe

e3e77fec-e9a3-486f-9070-9ad545af6da6.jpe

01__4_.jpg

https://www.virakesari.lk/article/225126

அதிகாரத்திலிருந்த குழுக்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை சரியான திசைக்கு கொண்டுசெல்ல அரசினால் முடிந்திருக்கிறது - பிரதமர்

3 days 3 hours ago

15 Sep, 2025 | 11:03 AM

image

கடந்த ஆட்சியின்போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அதனை இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டுவர முடிந்தது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற  மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. 

9d6c20d5-1856-4fd4-bf9b-e8524c255224.jpg

3dc1cc93-eaef-4144-9f92-e5a4f07815cc.jpg

3c6f0f10-2c67-4970-8c96-08113d672afd.jpg

592afc4e-5feb-43f9-9aec-d648369f622a.jpg

f00cca15-e286-4e0a-800d-99fc842257b0.jpg

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டதற்கான உண்மையான நோக்கம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும், தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசதிகளை வழங்க ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. 

மருத்துவ உதவிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அது அறிவு நிறைந்த ஒரு நல்ல எதிர்கால மனித வளத்தை உருவாக்க பங்களிக்கும். 

ஒரே கட்டமைப்பின் கீழ் இருக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, பல்வேறு துறைகளைப் பார்க்கும் மற்றும் திறந்த மனதைக் கொண்ட மனித வளத்தை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இது மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும். 

வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களது சலுகைகள் மற்றும் நலன்களை அதிகரித்துக்கொள்ளவே இந்த நிதியம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.

ஆயினும் இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறி, ஜனாதிபதி நிதியத்தின் உண்மையான நோக்கத்திற்காக அதை 100% பயன்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

இந்த நிதியம் இப்போது மக்களுக்கு நெருக்கமாகி, மக்கள் தங்கள் பிரதேசத்திலேயே அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

மாறிவரும் உலகில் வித்தியாசமான விதத்தில் சிந்திக்கக்கூடிய, ஒரு விடயத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்க்கக்கூடிய, உலகத்தை மாற்றக்கூடிய மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கே நாம் முயற்சிக்கிறோம் என்றார். 

9c355fb1-2ab3-4edd-8aac-5ffeea6274c4.jpg

இவ்விழாவில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன,

மனித வளங்களை வளர்ப்பதை போல்  உலகில் வெற்றி பெறக்கூடிய வேறு எதுவும் இல்லை. நாட்டின் இளைஞர்களுக்கு அவற்றை முறையாகவும் திறம்படவும் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. 

ஜனாதிபதி நிதியம் இன்று அந்தப் பணிக்கு பங்களிக்கிறது. மனித வளங்களை வளர்ப்பதன் மூலம் நாடு வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். 

427c95ff-109d-47c9-bf77-4a0387b29908.jpg

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவும் விழாவில் உரையாற்றினார்.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, மத்திய மாகாண பிரதம செயலாளர் எம்.ஏ. பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பாக மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் துறைசார் அலுவலர்களுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு சனிக்கிழமை (13) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஜனாதிபதி நிதியத்தை கையாளும் துறைசார் அலுவலர்களுக்கு இந்த நிகழ்வில் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் முறைகளை அறிமுகப்படுத்தவும் மற்றும் விரைவான சேவைகளை வழங்கத் தேவையான அறிவு மற்றும் பயிற்சி வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

d81139e9-cf26-4ec5-986c-8773e51fb5d8.jpg

9d4382ea-57ff-4278-8b81-db4545be330d.jpg

b61306eb-ddc7-43af-b75d-2086f9133a73.jpg

95974e94-03e6-4dab-9720-51a8575aa18f.jpg

54d2bf13-dacb-40a3-aa55-771bda9e74ab.jpg

61d19633-59cf-4cac-8afa-c41bf5e8cdda.jpg

91be20f4-d36a-43e7-8cca-052d5c79a27a.jpg

https://www.virakesari.lk/article/225113

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்!

3 days 4 hours ago

IMG_9256.jpeg?resize=750%2C375&ssl=1

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்!

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கையெழுத்து போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

IMG_9254.jpeg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2025/1447169

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்!

3 days 4 hours ago

Capture-6.jpg?resize=347%2C235&ssl=1

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுதொடர்பாக இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது

இதேவேளை உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜிதஹேரத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்துகொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா பயணம் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சு அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது

அனைத்து இலங்கையர்களின் பொருளாதார, சமூக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா விஜயத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அவற்றை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நேரம் மற்றும் அவகாசம் தேவை என்பதை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயரர்ஸ்தானிகர், வோல்கர் டர்க் உடனான சந்திப்பின் போது அமைச்சர் குறித்த விடயங்களை வலியுறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

இதேவேளை மனித உரிமைகள் பேரவையின் தலைவரான, சுவிட்சர்லாந்தின் ஜூர்க் லோபரையும் அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் உயர் மட்ட அரசியல் ஈடுபாட்டின் அவர் வரவேற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை இலங்கைக்கு ஆதரவாகப் உரையாற்றியிருந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத், நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1447155

யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது!

3 days 4 hours ago

New-Project-201.jpg?resize=750%2C375&ssl

யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது!

ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார்.

மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த ஜோடி தந்தங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களுடன் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1447160

மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்; நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை

3 days 16 hours ago

Published By: Digital Desk 3

14 Sep, 2025 | 05:11 PM

image

மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில்  நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார். 

மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நிதி நிறுவன முகாமையாளரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளர் எதிராக பொலிஸார் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த முகாமையாளருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம்  குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும்  நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்.

https://www.virakesari.lk/article/225077

கார் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்

3 days 18 hours ago

Published By: Vishnu

14 Sep, 2025 | 07:12 PM

image

இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இன்று (14) இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்துள்ளார்.

அம்பாறை பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் மட்டக்களப்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது பயண வாகனம் களுவாஞ்சிகுடி பகுதியில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

https://www.virakesari.lk/article/225082

யாழில் மீண்டும் சீனோர் நிறுவனம்

3 days 18 hours ago

14 Sep, 2025 | 11:27 AM

image

சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள  தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளும் முகமாக இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தியாக்கப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனம் கடல்தொழில் சார் பொருட்களை உற்பத்தி மற்றும் பரும்படியாக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலை அதிக கேள்வியுள்ள ஏனைய பைபர் மூலப்பொருள்சார் பொருட்களையும் தயாரிக்கத் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தின் கடற்றொழில் சார் உபகரணத் தேவைகளைத் தன்நிறைவோடு வழங்கும் நிலையமாக இது அமையும். இதன்வழி சுமார் 100 - 150 திறன் வேலைவாய்ப்புகள் உருவாகச் சாத்தியமுள்ளது.

தற்போதைய நிலையில், சாதாரண கட்டுமரம் அளவிலான தோணி முதல் 30 அடி நீளமான படகுகள் வரை, 1 - 2 மீற்றர் வரையான விட்டம் கொண்ட மீன் வளர்ப்புத் தொட்டிகள், மீன் விற்கும் வண்டிகளில் பொருத்துவதற்கான குளிரூட்டக்கூடிய பெட்டி என்பன இங்கு தயாரிக்க ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி மாலை குறித்த தொழிற்சாலையானது, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

3__7_.jpg

3__2_.jpg

https://www.virakesari.lk/article/225040

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

3 days 19 hours ago

14 Sep, 2025 | 05:03 PM

image

மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட வடிகால்களினை தூர்வாருவதற்கு இடையூறாக வடிகால்களுக்குமேல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் வீதிகளில் போக்குவரத்து மற்றும் வெள்ள நீராட்டத்திற்கு இடையூறாக காணப்படுகின்ற நிலக்கற்கள், கட்டுமாணங்கள், பூச்செடிகள் என்பவற்றையும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் பதினான்கு நாட்களுக்குள் அகற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலுக்கு ஏற்ப மேற்படி இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை குடியிருப்பாளர்கள் அகற்றப்படாவிடின் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து எவ்வித முன்அறிவித்தலுமின்றி நல்லூர் பிரதேச சபை அவற்றினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கன் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/225070

யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய இடத்தில் திறந்து வைப்பு!

3 days 23 hours ago

14 Sep, 2025 | 12:24 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5  மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.

மேலும் சில கட்டட  தொகுதிகள் அமைக்கப்பட்டு  விடுதிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

2__11_.jpg

2__10_.jpg

2__9_.jpg

2__8_.jpg

2__8_.jpg

2__7_.jpg

2__5_.jpg

2__3_.jpg

https://www.virakesari.lk/article/225045

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!

4 days 1 hour ago

New-Project-189.jpg?resize=750%2C375&ssl

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!

மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர் இது தெரியவந்தது.

அதன்படி, மித்தேனியாவிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக NDDCB இன் அறிக்கை வெளிப்படுத்தியது.

செப்டம்பர் 5 ஆம் திகதி, மித்தேனியாவின் தலாவாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தொகுதி இரசாயனப் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இலங்கையில் ‘ஐஸ்’ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த இரசாயனங்கள், மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய நடவடிக்கையின் போது புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட மொத்த இரசாயனங்களின் அளவு சுமார் 50,000 கிலோ கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசாரணையில், பியால் மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் இருவரும் இரசாயனங்களை மறைப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் பல கும்பல் உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்ட பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியவந்தது.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘பேக்கோ சமன்’ என்று அழைக்கப்படும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘கெஹல்பத்தர பத்மே’ ‘ஐஸ்’ உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரான ‘கெஹெல்பத்தர பத்மே’ சிஐடி காவலில் இருக்கும் போது நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் வெளிப்பட்டது.

மேலும் விசாரணையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, சந்தேக நபர் இந்த நடவடிக்கையில் ரூ. 4 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், அதை மேற்கொள்வதற்காக நுவரெலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான சுமார் 2,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் வெளிப்படுத்தியிருந்தார்.

https://athavannews.com/2025/1447100

210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

4 days 1 hour ago

New-Project-192.jpg?resize=750%2C375&ssl

210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும்.

விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நபர் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்திருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை காவலில் எடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1447114

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல்

4 days 2 hours ago

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல்

14 September 2025

1757831450_5684745_hirunews.jpg

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பின் 3வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும், நீண்டகால தாமதம் ஜனநாயக செயல்முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையைப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ரோஹண ஹெட்டியாராச்சி எச்சரித்துள்ளார்.

https://hirunews.lk/tm/420066/provincial-council-elections-should-be-held-immediately-pefral-organization-insists

இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம் 2 வாரங்களுக்குள் ஜெனிவாவில்

4 days 2 hours ago

இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம் 2 வாரங்களுக்குள் ஜெனிவாவில்

14 September 2025

1757814287_8312867_hirunews.jpg

இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானத்துக்கு, இலங்கை தொடர்பான முக்கியகுழு உறுப்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவை வழங்கவுள்ளன. 

இதன்படி இலங்கைக்கான பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசமும் நீடிக்கப்படவுள்ளது. 

இந்தத் திட்டம், இலங்கையில் மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான, சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகள் உட்பட, தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், சான்று சேகரிக்கும் பொறிமுறையாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்த புதிய தீர்மானம், இலங்கை அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்கிறது. 

நாட்டில் பல தசாப்தங்களாக நிலவும் பிளவுபடுத்தும் இனவெறி அரசியல் மற்றும் இன மோதல்களின் விளைவாக ஏற்பட்ட தீங்குகள் மற்றும் துன்பங்களை ஒப்புக்கொள்வதையும் இந்த தீர்மானம் ஏற்கிறது. 

அதே நேரத்தில, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியதன் அவசரத் தேவையையும், அது வலியுறுத்துகிறது. 

இலங்கையில் பல புதைகுழி தளங்களை அடையாளம் காண்பது குறித்தும், போதுமான வளங்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. 

அதேநேரம் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் சுயாதீனமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் இந்தத் தீர்மானம் கோருகிறது. 

சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப அகழ்வுகளை நடத்துவதற்கு போதுமான நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களை உறுதி செய்வதற்கு சர்வதேச ஆதரவை முன்கூட்டியே பெறவும் இது வழிவகுக்கிறது. 

அத்துடன், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து, வழக்குத் தொடரும்போது திறன்களை வலுப்படுத்த சர்வதேச உதவியை நாடவும் இந்த தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. 

ஒரு சுயாதீனமான பொது வழக்கு தொடுநர் அமைப்பை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, இந்த தீர்மானம் பாராட்டி ஒப்புக்கொள்கிறது, அதே நேரத்தில் இது முற்றிலும் சுயாதீனமாகவும், பயனுள்ளதாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது, அத்துடன், ஏற்கனவே பல தசாப்தங்களில் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில், ஒரு சுயாதீனமான சிறப்பு ஆலோசகரைக் கொண்ட ஒரு நீதித்துறை பொறிமுறையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க, இலங்கை அரசாங்கத்தை இந்த தீர்மானம் ஊக்குவிப்பதாகவும் ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

https://hirunews.lk/tm/420040/key-draft-resolution-on-sri-lanka-to-be-tabled-in-geneva-within-2-weeks

தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு- இரா. சாணக்கியன்

4 days 2 hours ago

தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு- இரா. சாணக்கியன்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்துக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு வாக்களிக்க வேண்டியதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தீர்மானித்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இத்தகைய தீர்மானங்கள் கட்சி மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சாணக்கியன், ஜனாதிபதியுடனான சமீபத்திய சந்திப்பில் மாகாண சபை தேர்தல், வடகிழக்கு அபிவிருத்தி நிதியம், மற்றும் மாவட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் இது உத்தியோகபூர்வ சந்திப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக எல்லை நிர்ணயம் மற்றும் விகிதாசார முறை குறித்து அரசாங்கத்தில் குழப்பம் இருப்பதாகவும், ஜனாதிபதி இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி நிதியம் உருவாக்குவது குறித்து முன்னர் பேசப்பட்ட போதிலும் முன்னேற்றம் இல்லை எனவும், மாவட்டத்தில் நிலவும் நிர்வாக மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்தை மக்கள் நலன் சார்ந்ததாக கருதி ஆதரிக்க வேண்டும் என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சாணக்கியன், இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு இதற்கு வாக்களிக்காதது தவறான முடிவு எனவும், இதற்காக மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

எதிர்காலத்தில் இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சட்டமூலங்களுக்கு கட்சி ஆதரவு வழங்க வேண்டும் எனவும், ஊழல் ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் விடயங்களில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். 

https://adaderanatamil.lk/news/cmfj2e8q200exo29nq9uhwif4

விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!

4 days 12 hours ago

விசேட சத்திர சிகிச்சை நிபுணர்

வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!

கல்முனை மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை

நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர்

T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இயற்கை எய்தினார் .

திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் அனைவருடனும் அன்பாக பழகும் சுபாவம் உடையவராக காணப்பட்டார். மட்டக்களப்பு மக்களினதும் போதனா வைத்தியசாலை சமுகத்தினதும் நன்மதிப்பை பெற்ற ஒருவராக திகழ்ந்த இவரது இழப்பு அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது

தனது வைத்தியத் திறமையினால் நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

அன்னாரின் இழப்புக்கு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.


பேருந்துகளை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிருபம் ரத்து

4 days 17 hours ago

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிருபம் ரத்து

பேருந்துகளை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் அந்த சுற்றுநிருபம் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் மேலதிக பாகங்களை நிறுவுவது தொடர்பான பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmfi1h7g400diqplppvu5a3f9

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

4 days 18 hours ago

Published By: Digital Desk 1

13 Sep, 2025 | 12:38 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, தேசிய வரி வருமான திணைக்களம், மதுவரி திணைக்களம், சுங்க திணைக்களம் உள்ளிட்டவை தமக்கான இலக்கிற்கு அப்பால் இலாபமீட்டியுள்ளன. மறுபுறம் அநாவசிய செலவுகளை குறைத்திருக்கின்றோம். இவற்றின் ஊடாக வரவு – செலவு திட்டத்தின் இடைவெளியை படிப்படியாக சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றோம்.

உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியைக் காண்பிக்க தவறியுள்ள போதிலும், இலங்கை அதனை செய்து காண்பித்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளில் வங்குரோத்தடைந்திருந்த நாடு இன்று இந்நிலைமையை அடைந்துள்ளது. வரிவருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமையவே, கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் இதற்கு வாக்களித்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. மாறாக இந்த விடயத்தை மறைப்பதற்காக மறுநாள் சபையில் வேறொரு விடயத்துக்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அதேபோன்று வெகுவிரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும். அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது என  சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/224980

யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!

4 days 22 hours ago

13 Sep, 2025 | 03:10 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள், இடமாற்றல் என வெளியேறியமையால், வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 

இதனால், நோயாளர்கள், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர், எம்.ஆர்.ஐ உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

அவற்றை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எடுப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுவதால், அதற்குள் நோயின் தீவிரம் அதிகரிப்பதாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலையில் அவற்றை எடுப்பதற்காக பெருமளவு பணம் செலவு செய்கின்றனர். 

இதனால் யாழ் . போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்திய பற்றாக்குறையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/225001

Checked
Thu, 09/18/2025 - 07:53
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr