ஊர்ப்புதினம்

இலவசக் கல்வியின் பாரம்பரியத்திற்கு முன்மொழியப்பட்ட தேசிய கல்விக் கொள்கை பாரிய அச்சுறுத்தல் - யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

1 week 2 days ago

Published By: VISHNU  09 APR, 2024 | 02:49 AM

image

தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பானது (NEPF) இலங்கையின் நீண்டகால இலவசக் கல்வியின் பாரம்பரியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (8) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) என்ற வகையில், இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை (NEPF 2023-2033) நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், இது நமது நாட்டின் நீண்டகால இலவசக் கல்வி பாரம்பரியத்திற்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது.

கல்வியில் அரசின் பொறுப்பைத் திரும்பப் பெறுதல், அரச கல்விக்கான ஒதுக்கீடுகளைக் கைவிடுதல், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை (UGC) ஒழித்தல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி NEPF திட்டம் கல்வி முறையை முழுவதுமாக லாபம் ஈட்டும் வணிகமாக மாற்றுகிறது.

இந்த சீர்திருத்தங்கள் கல்வியின் தரம் மற்றும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நலனை விட லாபத்தை முதன்மைப்படுத்துகின்றன. பல்கலைக்கழக மட்டத்தில் கட்டண விதிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், உயர்கல்விக்கான அரச நிதியை திரும்பப் பெறுவதன் மூலமும், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையின் சமூக கட்டமைப்பில் மையமாக இருந்த கல்விக்கான சம அணுகல் கொள்கையை NEPF குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

மேலும், NEPF இன் பொருளாதாரம் சார்ந்த பாடங்கள் மற்றும் டிஜிட்டல் மீது கவனம் செலுத்துகிறது, கல்வியறிவு விமர்சன சிந்தனை மற்றும் குடியுரிமை போன்ற கல்வியின் பரந்த இலக்குகளைப் புறக்கணிக்கிறது. மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்துகிறது. இந்த குறுகிய அணுகுமுறை தற்போதுள்ள வர்க்கப்பிளவுகளை ஆழப்படுத்தவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்த கூடிய வகையிலும் அச்சுறுத்துகிறது.

முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது, கல்விக்கான நியாயமான அணுகல் மற்றும் கல்வியின் தரத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் பேணுதல் ஆகியவற்றிற்கான பொறுப்பை வழங்குவதற்கான பல்வேறு உடன்படிக்கைகளுக்கு இலங்கையின் சர்வதேச கடமைகளை மீறுகிறது. மாறாக, முன்மொழியப்பட்ட கொள்கையானது இலவச கல்வியின் முற்றுப்புள்ளியாக செயற்படும். மக்களின் செலுத்தும் திறனை பொருட்படுத்தாமல் குடிமக்கள் என்ற வகையில் பெறுவதற்கான உரிமையை பறிக்கிறது. NEPF நிர்வாகம், நிதி, தர உத்தரவாதம் ஆகியவற்றில் அரசின் பங்கை கடுமையாக மாற்றுகிறது.

இந்த சவால்களுக்கு விடையிருக்கும் வகையில் FUTA, NEPF க்கான எதிர்ப்பைத் திரட்டி, இலங்கையில் இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பிற பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும். அரசாங்கம் தனது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களைத் திரும்பப் பெறவும், சந்தை சக்திகளை விட மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

FUTA, சமூகத்தின் அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட பிரிவுகளுடன் சேர்ந்து, தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கும். இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தொடர்ந்து வாதிடுகையில், இந்த முக்கியமான போராட்டத்தில் எங்களுடன் சேருமாறு அனைத்து குடிமக்களையும் அழைக்கிறோம்.

அனைத்து இலங்கையர்களும் அவர்களின் பின்னணி மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளைக் கடந்து, எல்லோரும் சேர்ந்து கல்வி அடிப்படை உரிமையாக இருப்பதை உறுதி செய்யலாம். இறுதியாக, கல்வி போன்ற இன்றியமையாத விடையங்களின் கொள்கை வகுப்பதை ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக மாறவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று FUTA கடுமையாகக் கோருகிறது என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/180772

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களையும் மூட நடவடிக்கை - பிரசன்ன ரணதுங்க

1 week 2 days ago
08 APR, 2024 | 05:49 PM
image

புலிகளின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்குத் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10. இதில் 9 குடும்பங்களுக்குக் காணிகள் விடுவிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு குடும்பத்திற்கு மாத்திரமே தமது பூர்வீக காணிகளை வழங்குமாறு பலமாகக் கோரி வருகின்றனர்.

fhfjdf.gif

அவர்களுடன் கலந்து பேசி இணக்கப்பாட்டுக்கு வருமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருக்குப்  பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கையளிக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (7) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் செலவநகர் நீர் சுத்திகரிப்பு நிலையம், உருதிபுரம் கிழக்கு நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா மாவட்டத்தில் கங்கன்குளம் நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா தெற்கில் அவரந்தலாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை   அமைச்சர் மக்களின் பாவனைக்குத் திறந்து  வைத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற  யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள் குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீள்குடியேற்றப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன.

567ufh.gif

தற்போது 1502 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

212 குடும்பங்களுக்குக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும். காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடம் கண்ணிவெடிகளை அகற்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 2550 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

dhfh.gif

வீடமைப்பு அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபாவும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவும், கண்ணிவெடி அகற்றலுக்கு 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மீள் குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான  நீர், மின்சாரம், மலசலக்கூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் வழங்கப்படும்.

இதேவேளை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக 50 நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு மையங்களை நிறுவும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 50 புதிய நனோ நீர் திட்டங்களை இந்த வருட இறுதிக்குள் நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன்படி, தேவையான ஏற்பாடுகளைச்  செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/180729

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடித் தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது!

1 week 2 days ago
dakles-750x375.jpg டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடித் தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது!

”கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடித் தனமான அரசியல், தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது”  என முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பொன்னாவெளி கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை முறியடிக்க வேறு பிரதேசங்களில் இருந்து 6பேரூந்துகளில் மக்கள் அழைத்துவரப்பட்டனர். எனினும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து குறித்த மக்கள்  போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விதமாக நடைபெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜீவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முதலில் நாம் பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ் மக்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் . பொன்னாவெளி கிராம மக்களின் போராட்டத்தை முறியடிக்கும் விதமாக குறித்த மக்களுக்கு ஆளுக்கு தலா ஆயிரம் ரூபாய்  தருவதாகவும் கடலட்டை பண்னைக்கான அனுமதிபத்திரம் தருவதாகவும் கூறியே  அழைத்து வரப்பட்டனர்.

எனினும் அங்கு வந்த மக்கள், பொன்னாவெளி கிராமத்தில் இடம்பெறும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொன்னாவெளி மக்களுக்காக தமது நேர்மையான செயற்பாட்டை செய்திருந்தனர். அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

டக்ளஸ் தேவானந்தாவின் செயல் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினையே பாதிக்கும். வடக்கில் கடல் தொழில் அமைச்சரால் வாக்கு எண்ணிக்கை வீழ்ச்சியடையும். மேலும் இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலா என்றும் எண்ணத்தோன்றுகிறது” இவ்வாறு ஜீவன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1377105

வடக்கில் ஒரு வருடத்தில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 7

08 APR, 2024 | 01:50 PM
image

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 

யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13 பேரும், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 2 பேரும், மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 6 பேரும், வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 5 பேரும், முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 8  பேரும் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 16 பேருமாக வடக்கில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

"நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 - 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/180705

உணவு ஒவ்வாமையால் 100 பேர் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி!

1 week 2 days ago
08 APR, 2024 | 01:33 PM
image
 

ஸ்ரீபாத நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய வருடாந்த திருவிழாவின் போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களில் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 100 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5635.gif

நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறுவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆண்கள் பலர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (7) வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட பின் இவர்கள் அனைவரும் மயக்க நிலைக்குள்ளானதாகவும் இதனையடுத்து இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

65785.gif

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் 40 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த மஸ்கெலியா பிரதேச வைத்திய நிர்வாகம் இவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/180690

முல்லையில் மாணவ சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம்

1 week 2 days ago
முல்லையில் மாணவ சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம்
97074997.jpg

செல்வன்

தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோனால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தின் கீழ் நந்திக்கடல் பகுதியில் உருவாக்கப்பட்ட இராணுவப் படையணி பயிற்சிப் பாடசாலையானது தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சிப் பாடசாலையாக அமைப்பதற்காக இராணுவத்தினரால் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதற்கிணங்க, இப்பயிற்சிப் பாடசாலையை தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சிப் பாடசாலையாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் இன்று திறந்து வைத்தார்.

ஏற்கனவே பல்வேறு இடங்களில் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கல்விப் பணிமனை அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த பல பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (க)

 

https://newuthayan.com/article/முல்லையில்_மாணவ_சிப்பாய்கள்_படையணி_பயிற்சி_முகாம்

ஊர்காவற்றுறை தாக்குதல் - உண்மையில் நடந்தது என்ன

1 week 2 days ago
ஊர்காவற்றுறை தாக்குதல் - உண்மையில் நடந்தது என்ன
2070485480.jpg

இனியபாரதி

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உள்ள தமது வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர்கள் மீது ஊரிலுள்ள சிலர் மதுபோதையில் தாக்குதல் நடத்தி, அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி பொலிஸாரிடம் பிடித்துக்கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, தாக்குதலாளிகளுக்கு ஆதரவாகப் பொலிஸாரும் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனைப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இளைஞனை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு கடந்த 04 ஆம் திகதி அழைத்துள்ளார். 

அதனையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன், தனது நண்பர்களான மேலும் மூவருடன் முச்சக்கரவண்டியில் ஊர்காவற்றுறைக்குச் சென்றுள்ளனர்.

தம்மை விருந்துக்கு அழைத்த இளைஞனின் வீட்டுக்கு முன்னால் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு, நால்வரும் வீட்டினுள் சென்று அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த வேளை, ஊரைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் அங்கு வந்து வெளியூரைச் சேர்ந்தவர்கள், யாரின் அனுமதி பெற்று ஊருக்குள் வந்தார்கள் என முரண்பட்டு, அவர்களின் முச்சக்கரவண்டி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். 

அவ்வேளை, இளைஞனை விருந்துக்கு அழைத்த இளைஞன் தாக்குதலாளிகளைத் தடுக்க முற்பட்ட வேளை இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு, யாழிலிருந்து சென்ற இளைஞர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு, அவர்களைப் பிடித்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம், தம்மைத் தாக்க யாழிலிருந்து வந்ததாகக் கூறி பிடித்துக்கொடுத்துள்ளனர்.

பொலிஸார் அவர்களைக் கைது செய்த வேளை யாழிலிருந்து சென்ற இளைஞர்கள் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து இருந்தமையால், அவர்களைச் சட்ட மருத்து அதிகாரி முன்பாக முன்னிலைப்படுத்தி சிகிச்சை வழங்கியதுடன், மருத்துவ அறிக்கையையும் பெற்றிருந்தனர். 

பின்னர் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழைச் சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் 04 ஆம் திகதி பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

அவ்வேளை, ஊரில் தமது வீட்டினை தாக்கி, தமது வீட்டுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் முச்சக்கரவண்டியை சேதமாக்கியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர். 

குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஊரைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த நபர்கள் தங்களின் வீட்டிற்குள் புகுந்து தம்மைத் தாக்க வந்ததாக பரஸ்பர முறைப்பாடு வழங்கியுள்ளார். 

முதல் முறைப்பாட்டுக்கு விசாரணைகளை முன்னெடுக்காத பொலிஸார், இரண்டாவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து, முதல் நாள் பொலிஸ் பிணையில் விடுவித்த இளைஞர்களை பொலிஸ் நிலையம் அழைத்து மீளக் கைது செய்து நேற்றைய தினம் 06 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். 

இதன்போது, கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்ததையடுத்து மன்று அவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளது. 

அதேவேளை, முதலாவது முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

மண்டைதீவு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்று தமக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஆதரவு உள்ளதாக பெயர் குறிப்பிட்டு கூறிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைகளை எதிர்கொண்டு வரும்,  பொலிஸ் உத்தியோகத்தரே ஊர்காவற்றுறை சம்பவத்திலும் விசாரணை அதிகாரிகளில் ஒருவராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (க)

https://newuthayan.com/article/ஊர்காவற்றுறையில்_உண்மையில்_நடந்தது_என்ன

 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றது ஜ. த. தே. கூட்டணி

1 week 2 days ago
தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றது ஜ. த. தே. கூட்டணி
1369304201.jpg

புதியவன்

அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் பேசுவதற்கான பொறுப்பை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஏற்றுள்ளது. 

அத்துடன், இந்த மாதத்துக்குள் இதுதொடர்பான பேச்சுக்களை ஆரம்பிக்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். 

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய
தீர்மானங்கள் குறித்து அறிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று வவுனியா - கோவில் புளியங்குளத்தில் தனியார் விடுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீரமானங்கள் வருமாறு:

அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வது. 

என்றும் இதற்காக தமிழ்த் தேசிய சிந்தனை கொண்ட ஏனைய கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேசி அவர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்து இந்த விடயத்தை தொடர்ந்து முன்னகர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சிக்கு மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்து கட்சியை வலுப்படுத்துவது என்றும் இதில், பெண்களின் வகிபாகத்தையும் உறுதிப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. (க)
 

https://newuthayan.com/article/தமிழ்த்_தேசிய_கட்சிகளை_ஓரணியாக்கும்_பொறுப்பை_ஏற்றது_ஜ._த._தே._கூட்டணி

 

பூநகரியில் 10 கிலோ வெடி மருந்துடன் ஒருவர் கைது

1 week 3 days ago

Published By: DIGITAL DESK 7

08 APR, 2024 | 09:34 AM
image
 

கிளிநொச்சி - பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான வெடிமருந்தை, மோட்டர் சைக்கிளில் கடத்தி செல்வதாக பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மடக்கி பிடித்து கைதுசெய்தனர்.

குறித்த நபரிடம் இருந்து 10 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்தை பொலிஸார் மீட்டனர்.

அதனை அடுத்து குறித்த நபரை கைதுசெய்து பூநகரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/180661

வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது

1 week 3 days ago

Published By: VISHNU   08 APR, 2024 | 01:39 AM

image

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை குறித்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள  பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை முடிந்து வீட்டிற்குச் சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாகத் தெரிவித்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனைத் தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்குக் கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஆசிரியை 'உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் பொலிஸாரிடமும் முறைப்பாடு அழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகச் சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் பொலிஸாருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன.

இந்நிலையில் வவுனியா  ஈச்சங்குளம் பொலிஸார் இன்று காலை குறித்த ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/180657

கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு

1 week 3 days ago

Published By: VISHNU   07 APR, 2024 | 10:33 PM

image

கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்குமான எல்லைப்பகுதியில்  உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தமது விவசாயத்தை அழித்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறை வைத்து காலபோகம் சிறுபோகம் செய்து வரும் விவசாயிகளின் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

30அடி ஆழத்திலிருந்த ஆற்றுப்பகுதி தற்பொழுது 50அடிக்கும் மேலாக மணல் அகழ்வால் பாதிப்படைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள வயல் நிலங்கள் இடிந்து விழுவதாகவும் தமது விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பல தடைவைகள் புதுக்குடியிருப்பு பொலிசாரிடமும் தர்மபுர பொலிசாரிடமும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும தமக்கான வாழ்வாதார நிலங்களை பாதுகாத்து தருமாறு கேட்டு நிற்கின்றனர்.

https://www.virakesari.lk/article/180651

படைப்பாக்கமும் பயங்கரவாதமா

1 week 3 days ago

அதிகாரத்தின் குரூரப்பார்வை இப்போது தமிழ்ப்பாடசாலைகளின் பக்கம் திரும்பியிருக்கிறது. எங்கெல்லாம் உரிமைக்கும், உணர்வுக்குமான குரல்கள் எழத்தொடங்குகின்றனவோ அங்கெல்லாம் நுழைந்து, அந்தக் குரல்களை நசுக்குவதையே ஆட்சியாளர்கள் தமது முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள். இல்லா விட்டால் அந்தக்குரல்களின் பரவுகை பேரெழுச்சியை உண்டாக்கி, தம் இருப்புக்கே உலை வைத்துவிடு மென்பதே ஆட்சியில் உள்ளவர்களின் அச்சமாக இருக் கின்றது. சர்வதேசச் சதியுடன், பெரும் மனிதப்பேர வலத்தை நிகழ்த்தி, குருதிச்சகதிக்கு நடுவே தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் சிங்கள பௌத்த பேரினவாதம் அடங்கிவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் அடிபட்ட புலியாக, தமிழர்கள் திரண்டெழுந்து, பழிக்குப் பழி வாங்கக்கூடும் என்ற சந்தேகத்தோடுதான் இன்றுவரை தமிழ் மக்களை இலங்கை அரசும், படைத்தரப்பும் நோக்குகின்றன.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்போல, சிங்கள-பௌத்த பேரினவாதிகளின் கண் களுக்கு தமிழர்களின் சாதாரண நகர்வுகள்கூட, புலிகளை மீளுருவாக்கும் முயற்சியாகவே புலப்படுகின்றன. அத்தோடு போர் பற்றிய நினைவுகளை அழித்து, கேளிக்கை யான பாதைக்குள் இளைய சமுதாயத்தை மடைமாற்று வதனூடாக, தமிழர்களின் உரிமைப்போரை மலடாக்கி விடலாம் என்றும் எண்ணுகின்றனர். அதனாலேயே இறுதிப்போர் முடிந்த கையோடு, புலிகள் தொடர்பான அத்தனை நினைவிடங்களையும் படையினர் அத்திபாரத் தோடு பிடுங்கியெறிந்தனர். மாவீரர் துயிலுமில்லங்கள் இடித்தழிக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் இனப்படு கொலை, மாவீரர்நாள் என்பவற்றை தங்கள் மன அவசங் களைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கருவியாக தமிழர்கள் நினைவேந்த முற்பட்டபோது அவற்றுக்கு ஆயுதமுனை யில் தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி நினைவேந்தி யவர்கள் கைது செய்யப்பட்டனர், வழக்குப் போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். தமிழர்களின் உரிமைக்குரல் ஒலிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்ற இடங்கள் படைப்புலனாய்வாளர்களின் கழுகுப் பார் வைக்குள் 24மணித்தியாலங்களும் கொண்டுவரப்பட்டன. அதேசமயத்தில், தமிழர் தாயகத்தில் எப்போதுமில் லாதவகையில் போதைப் பொருள் பாவனை வியாபிக்கத் தொடங்கியது. விநோதமான பெயர்களில் வாள்வெட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. சில வருடங்களுக்கு முன்னர் வரை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்ற தமிழ் இளையோர், தறிகெட்டு ஓடும் மந்தைக் கூட்டமாக மாற்றப்படத் தொடங்கினர்.

ஆனால் என்னதான் பேரினவாதிகளும், படைத் தரப்பும் பகீரதப் பிரயத்தனம் செய்து உரிமைக்கான தகிப்பை இல்லாமல் செய்ய முயன்றாலும், தமிழர்களின் மரபணுவில் அது இரண்டறக் கலந்துவிட்டதால், ஏதோ வொரு வகையில் பீறிட்டுக் கிளம்பவே செய்தது. இம்முறை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் டாங்கி, வெடுக்குநாறிமலை ஆக்கிரமிப்பு, துயிலுமில்லம், கார்த்தி கைப்பூ என்று எங்கள் நிலத்தின் நினைவுகளை மாணவர்கள் ஆக்கவடிவில் வெளிக்கொணர்ந்திருந்தனர். போருக்குள் பிறந்த ஒரு சந்ததி, தான் கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றுணர்ந்து கற்றவற்றை ஓர்ஆக்கவடிவில் வெளிப்படுத்தியதில் தவறொன்றுமில்லையே. ஆனால் பாடசாலைகளில் உயிர்கொல்லும் போதைப் பொருள் கள் விற்பதைக் கண்டும்காணாமல் ஊக்குவித்த அரசாங் கத்துக்கு இந்தப் படைப்புகள் கண்ணைக் குத்தியிருக் கின்றன. பாடசாலை முதல் வீடுவரை விசாரணைகள் நீள்கின்றன. 'குய்யோ முறையோ' என்று சிங்கள -பௌத்த பேரினவாத அமைப்புகள், மாணவர்களின் இந்தப் படைப்பாக்கங்களை பயங்கரவாத முத்திரை குத்தி கடிதங்களை எழுதித் தள்ளுகின்றன. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, ஒன்றுமேயில்லாத இதுபோன்ற மாணவர் படைப்புகளை பிரச்சினையாக்க நினைப்பது அபத்தமே. ஆனால் அதைப் பேரினவாதிகளோ, இலங்கை அரசோ, அரச படைகளோ புரிந்து கொள்ளவே போவதில்லை. அப்படிப் புரிந்துகொள்ளாத வரையில் இந்த நாடு உருப்படவும் போவதில்லை.

(03.04.2024-உதயன் பத்திரிகை).

https://newuthayan.com/article/படைப்பாக்கமும்_பயங்கரவாதமா

சஜித் என்னும் வேடதாரி

1 week 3 days ago

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறி வருகின்றார். மக்களின் வாக்குகளைக் கவருவதற்கான அரசியல் பரப்புரைகளை அவரும் தொடக்கியிருக்கின்றார். இதன் ஒரு கட்டமாக, அரச தலைவர் தேர்தலை இலக்குவைத்து வீசப்பட்ட ஈஸ்டர் விவகாரத்தில் தானும் தன் பங்குங்குக்கு கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

'புதிய அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாதங்களுக்குள் 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், 7 முதல் 9 தேசிய மற்றும் சர்வதேச அங்கத்தவர்களைக் கொண்ட, ஓர் ஆணைக்குழு நியமிக்கப்படும். இதன்மூலம் கடந்தகால மற்றும் தற்போதைய காலகட்டத்தின் முழுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். எந்த வொரு நிறுவனத்திலும் எந்தவொரு நபரிடமும் எவ்வித தடையுமின்றி வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும். ஆணைக்குழுவை நிறுவிய 6 வாரங்களுக்குள் அதனுடன் இணைந்து பணியாற்ற ஸ்கொட்லண்யார்ட், எவ்.பி.ஐ. வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புச் சேவைகள், தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு தரப் புகளைக் கொண்ட நிரந்தர விசாரணை அலுவலகம் நிறுவப்படும். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளுக்குட்பட்டு இலங்கையின் சட்டங்களின் கீழ் குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பிப்பது அல்லது தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டமா அதி பருக்குக் கட்டாயமாக்கப்படும். 1948ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 7 (2) அல்லது பிரிவு 24 திருத்தப்படும். மேற்கண்ட குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது தீர்ப்பு வழங்க நிரந்தர உயர்நீதிமன்றம் நிறுவப்படவேண்டும். இதற்காக 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை கட்டமைப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமா அதிபரைச் சாராத அரச தரப்பு சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்ட வரைவு கொண்டு வரப்படும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கடந்த 2ஆம் திகதி உரையாற்றியிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளான நீதியைப் பெற்றுக்கொடுத்தலுக்கு அவர் தனது செயலுரு எப்படி இருக்கப்போகின்றது என்பதைச் சொல்லியிருக்கின்றார். ஆட்சியைப் பிடித்து அதை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இவரது இந்தக் கூற்றை நம்பமுடியும். ஏனெனில் இலங்கையின் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்காக உறுதியளித்த எந்தவொரு விடயத்தையும் செய்ததேயில்லை. ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது நல்லது. அதற்காக அரச தலைவர் தேர்தலுக்கு முன்னரே தனது வரைப்படத்தை சஜித் வெளிப்படுத்தியமையும் சிறப்பானது.

ஆனால், ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்குச் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இறுதிப்போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் தங்களுக்கான நீதியை எதிர்பார்த்துக் காத்திருக் கின்றார்கள். அவர்கள் தங்களுக்கான நீதி, சர்வதேச விசார ணையூடாகவே நிலைநிறுத்தப்படும் என்று நம்பு கின்றார்கள். ஆனால், 2019ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளை அதிகளவில் சுருட்டிய சஜித் பிரேமதாஸ அந்த மக்களின் நீதிக்கான கோரிக்கை தொடர்பில் வாயே திறக்கவில்லை.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விவகாரம் என்பது தெற்கின் அரசியலுடன் தொடர்புடையதாக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதியை நிலைநாட்டுவதன் ஊடாக தெற்கின் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் வாய் திறந்தால் தெற்கின் வாக்குப்பலத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதால், சஜித்தும் அமைதிகாக்கின்றார். இப்படியானவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரும் தமிழ்த் தலைவர்களை, தமிழ்மக்கள் தங்கள் தலைவர் களாகத் தொடர்வதற்கு இனியும் அனுமதிக்கப் போகின்றார்களா...?

(06.04.2024-உதயன் பத்திரிகை).

 

https://newuthayan.com/article/சஜித்_என்னும்_வேடதாரி

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை - ஜனாதிபதி தெரிவிப்பு

1 week 3 days ago

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை எனவும், அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையை பிரகடனப்படுத்தி 2020ஆம் ஆண்டு சிறிகொத்தவைக் கைப்பற்றுவதற்கு தயாரான ஜக்கிய மக்கள் சக்தி, இன்று மொட்டுக் கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு அடிபணிந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2022 ஜூலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன், நாட்டின் கட்சி அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தான் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''பொருளாதார நெருக்கடி காரணமாக ஜூலை 2022 இல் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், நாட்டின் கட்சி முறைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. இன்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. இந்த நிலையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

கடந்த இரண்டு வருடங்களாக எமது பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்களை சிலர் தமது பாராளுமன்ற பதவிக் காலத்தில் மேற்கொள்ளவில்லை. நாட்டில் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்து, அதுவரை இருந்த கொடுப்பனவை மூன்று மடங்காக உயர்த்த பாடுபட்டோம். மேலும், 20 இலட்சம் பேருக்கு  நிரந்தர காணி உறுதிப்பத்திரம்  வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இவை நாட்டின் பொருளாதாரம் ஒழுங்காக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்காத வேலைத்திட்டங்கள்  என்றே கூற வேண்டும்.

இந்த வேலைத் திட்டங்களை தொடர பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இதில் அடங்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர். இந்த கட்சிகள் அனைத்தும்  ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும்.

பொதுஜன பெரமுனவில்  இருந்தாலும் சரி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் சரி, வேறு கட்சியாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

கடந்த காலத்தில்  அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டன. மொட்டுக் கட்சியில் இருந்து சிலர் எதிர்க்கட்சிக்கு சென்றனர். இப்போது அந்தக் குழு ஐக்கிய மக்கள் சக்தியை வழிநடத்துகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தாங்கள்   சிறிகொத்தாவைக் கைப்பற்ற வேண்டும் என்று 2020 இல் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் குழு தற்போது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்தவன் நான். ஜே.ஆர் ஜயவர்தன, ஆர், பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, இவர்கள் அனைவருடனும் நாங்கள் பணியாற்றினோம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று தங்களை அழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த உரிமையும் இல்லை. இன்று எமக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாட்டு  நலனுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று அரசியல் போக்கு மாறிவிட்டது.

நீங்கள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். 20 இலட்சம் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களில் 10 இலட்சம் இதுவரை தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அந்தப் பத்திரங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியும். எனவே இந்த கண்டி மாவட்டத்தில் உள்ள நீங்கள் அனைவரும் நல்ல ஒருங்கிணைப்புடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) கலந்துகொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கிராமங்களை ஒன்றிணைத்து முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் அங்கத்துவத்துடன் ஆலோசனை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தார்.

இதன்படி கிராமங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நேரடியாக அறிவிக்கும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் “அஸ்வெசும” வேலைத்திட்டம் மற்றும் “உறுமய” காணி உறுதி வேலைத்திட்டத்தில் நேரடியாக பங்குபற்றுமாறு முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி, தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்க வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னோடிகளாக உள்ளூராட்சி பிரதேசங்களில் உள்ள இளைஞர்களை முன்னோக்கி கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

https://www.virakesari.lk/article/180655

இன்று திருகோணமலை நீதிமன்றில் திரு.சுமந்திரன் தமிழரசுக்கட்சி வழக்கில் ஆட்சேபணை….தொடரும் நாடகம்…

1 week 3 days ago
இன்று திருகோணமலை நீதிமன்றில் திரு.சுமந்திரன் தமிழரசுக்கட்சி வழக்கில் ஆட்சேபணை….தொடரும் நாடகம்…

 

 

விடுமுறை தொடர்பில் அரச பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

1 week 3 days ago

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில், அனர்த்தம் மற்றும் அவசர அத்தியாவசியப் பணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை இவ் விடுமுறைக் காலத்தில் இடையூறு இன்றி பராமரிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/298383

ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!

1 week 3 days ago

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்இறுதி மங்கள சடங்கான மரக்கன்றுகள் நடும் தினம் ஏப்ரல் 18 ஆம் திகதியாகும். இதனை சுதேச மருத்துவ அமைச்சு ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்..

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஏப்ரல் 4 ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது…

” சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி மங்கள சடங்குகளான மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 18 அன்று ஆகும் . சுதேச மருத்துவ அமைச்சு அந்த நாளை ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளது. அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் முருங்கை செடியை நாட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம் , இது மிகவும் சத்தானது மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/298385

எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவோம் - மஹிந்த ராஜபக்ஷ

1 week 3 days ago

Published By: DIGITAL DESK 7    07 APR, 2024 | 06:31 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பின் சார்பில் சிறந்த வேட்பாளரை களமிறக்குவோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலமுள்ளது என முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி – உங்களின் தாய் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்த கட்சியின் இருந்து ஆரம்பமானது. ஆகவே கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

கேள்வி - உங்களின் பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே... அது உங்களுக்கு சவாலாக அமையாதா?

பதில் - சவால் ஏதுமில்லை. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே.

கேள்வி – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாரே?

பதில் - அது அவரது நிலைப்பாடு. நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம்.

கேள்வி – பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப் போகின்றீர்களா?

பதில் - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது.

கேள்வி – புத்தாண்டு தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா?

பதில் - அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மகிழ்வுடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

https://www.virakesari.lk/article/180641

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் எதிவரும் 10 ஆம் திகதி சம்பளம்!

1 week 3 days ago
24-66124c3872f18-600x375.jpeg அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் எதிவரும் 10 ஆம் திகதி சம்பளம்!

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரவிக்கப்படுகின்றது.

இதில், 2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில், அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடக்கப்பட்டள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதாவது, அரச ஊழியர்கள் தற்போது பெறும் சம்பளத்துக்கு அதிகமாக 10,000 ரூபாய் கொடுப்பனவும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியமும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1376934

நாட்டில் எரிபொருள் பாவனை 50% குறைந்துவிட்டது - பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

1 week 3 days ago

Published By: NANTHINI

07 APR, 2024 | 12:59 PM
image

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதமளவு குறைந்துவிட்டதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

எரிபொருள் பாவனை குறைய நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலையே காரணம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகிறார். 

எவ்வாறாயினும், தற்போது அனைத்து வகையான எரிபொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் அவர்  சுட்டிக்காட்டுகிறார்.

https://www.virakesari.lk/article/180628

Checked
Thu, 04/18/2024 - 05:31
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr