ஊர்ப்புதினம்

கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு!

3 months 1 week ago

உயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சதொச ஊடாக 14,000 கரம் போர்ட்களையும் 11 ஆயிரம் டாம் போர்ட்களையும் கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.  

இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு! | Virakesari.lk

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

3 months 1 week ago

09 JUN, 2025 | 11:44 AM

image

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.எஸ்.கே பண்டார அம்பாறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/216991

”யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும்”- எம்.ஏ.சுமந்திரன்

3 months 1 week ago

”யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும்”- எம்.ஏ.சுமந்திரன்

யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் (8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை.

சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம். 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும்தான்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன். மக்கள் தவறாக முடிவெடுப்பதில்லை. என்பிபி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு. அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம்.

ஒரு குறிப்பிட்ட சபையில், தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை. இதனை நாங்கள் 2018ஆம் ஆண்டிலேயே சொல்லி இருக்கிறோம்.

சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன. நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம்தள்ளவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம்.

எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை. மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தை கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு, அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால், 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை.

தமிழ் மக்களை, தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம் எனத் தெரிவித்தார்.

https://www.samakalam.com/யாழில்-17-சபைகளிலும்-இலங்க/

சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு!

3 months 1 week ago

சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு!

adminJune 9, 2025

Police-militry.jpeg?fit=1170%2C658&ssl=1

இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை காவற்துறை சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

https://globaltamilnews.net/2025/216546/

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

3 months 1 week ago

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

adminJune 8, 2025

3-3.jpg

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் போது, பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரர்,  யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான   க.இளங்குமரன்,  ஜெ.ரஜீவன்,  ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

https://globaltamilnews.net/2025/216534/

கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள்; பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க

3 months 1 week ago

08 JUN, 2025 | 12:27 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற தொழிற்றுறை நிபுணர்களுடான கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. முறையற்ற வகையில் ஒரு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அதனூடாக அரச நிதி மோசடி செய்யும் அல்லது வீண்விரயம் செய்யும் சூழலே காணப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழலுடன் தொடர்புடைய கைதுகள் அனைத்தும் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிரதிபலனாகும். இக்காலப்பகுதியில் புதிதாக வழக்குகள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. 2023 ஆம் 09 இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒருசில அரச நிறுவனங்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் விருப்பம் கொள்வதில்லை. சுங்கத் திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம், மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகிய அரச நிறுவங்களின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு கிளைகளை திறக்க தயார், ஆனால் அதன்பின்னர் அங்கு ஒருசிலர் பணியில் ஈடுபடமாட்டார்கள்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம். ஊழல் மோசடிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடுகள் கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/216921

அர்ச்சுனா எம்.பி குறித்து அரசின் நடவடிக்கைகள் அதிருப்திக்குரியவை சரத் வீரசேகர தெரிவிப்பு

3 months 1 week ago

08 JUN, 2025 | 12:25 PM

image

(இராஜதுரை ஹஷான்)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு தொடர்ச்சியாக குறிப்பிடுவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்திக்குரியன. முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்களால் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றுக்கு தடையாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட 300 கொள்கலன்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இது அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது.

அர்ச்சுனாவின் கருத்துக்களை அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது. ஆனால் இது இனங்களுக்கிடையில் சந்தேகத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும். 300 கொள்கலன்களில் பிரபாகரின் ஆயுதங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தமிழ் டயஸ்போராக்களிடமிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது. அர்ச்சுனா குறிப்பிட்டுள்ள விடயங்கள் முன்னாள் போராளிகளுக்கும் உத்வேகமளிக்கும் வகையில் அமையும். நகத்தால் கிள்ளியெறிய வேண்டியதை கோடரியால் வெட்டி வீழ்த்தும் நிலையை அரசாங்கம் உருவாக்க கூடாது.

அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்கள் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்புக்கு தடையாக அமையலாம். விடுதலை புலிகள் அமைப்பினை இவர் தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவும், பிரபல்யத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்வது தெளிவாக விளங்குகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/216916

ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

08 JUN, 2025 | 10:11 AM

image

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்  மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில் மாணவன் வீடு சென்று கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் மாணவனை தண்டித்துள்ளார். 

அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

தண்டனை வழங்கிய குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டவர் என அறியவருகிறது.

குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர்  மாணவனைப் பேசியதாகவும் பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து  அருந்தியதாக அறிந்ததாக தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/216898

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

3 months 1 week ago

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

June 8, 2025 10:13 am

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கங்களின் போது சபாநாயகராகவும், சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு நடத்தும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 மே ஒன்பதாம் திகதி நடந்த கலவரத்தில் திஸ்ஸமஹாராம, மாகம பகுதியில் உள்ள தனது சொத்து சேதமடைந்ததாகக் கூறி அரசாங்கத்திடம் இருந்து 15.2 மில்லியன் ரூபா இழப்பீடு பெற்ற விவகாரத்தில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைகளில் அந்த சொத்து அவருக்கு சொந்தமானது இல்லை எனவும், அங்கு வசிப்பிட கட்டமைப்பு எதுவும் இல்லை எனவும், வெறுமனே ஒரு நெல் சேமிப்பு களஞ்சியம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

சொத்து தனது கட்டுப்பாட்டில் உள்ளதாக ராஜபக்ஸ சத்தியப்பிரமாணம் செய்து அளித்திருந்த போதிலும், மேற்கொண்ட விசாரணைகளில் அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

2023 ஜூலை மாதம் வெளியான மதிப்பீட்டு அறிக்கையில், அந்த இடத்தில் 14.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு இருந்ததாகவும், நெல் களஞ்சியத்துக்கு 222,600 ரூபா சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பொது நிர்வாக அமைச்சு, தங்கள் அதிகார வரம்பில் இந்த இழப்பீடு வழங்கப்பட முடியாது என தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது. இருப்பினும், முழு தொகையும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், குறித்த மோசடி குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சமல் ராஜபக்ச விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த நிதியை செலுத்துவது தொடர்பான சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரச அதிகாரிகள் மீது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://oruvan.com/chamal-rajapaksa-may-be-arrested-at-any-time-state-media-reports/

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

3 months 1 week ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

08 Jun, 2025 | 10:13 AM

image

(நா.தனுஜா)

வட, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ்த்தேசிய கட்சிகளின் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு  வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அவற்றின் நிலைவரம் என்பன தொடர்பில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர், தாம் அம்மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அவ்வாறான திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் இருப்பின், அதனைத் தம்மிடம்

வழங்குமாறும், அதுபற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் பின்னரான தமிழ்த்தேசிய கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய உயர்ஸ்தானிகருக்குப் பதிலளித்த சுமந்திரன், ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றத்திலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத் தாம் முன்வைத்ததாகவும், இருப்பினும் அதற்கு முரணாக இரு கட்சிகள் கூட்டணி அமைத்து தம்வசமே அதிக ஆசனங்கள் இருப்பதுபோல் காண்பித்துக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒரே கொள்கையையே கொண்டிருப்பதாகவும், அணுகுமுறைகளே மாறுபட்டவையாகக் காணப்படுவதாகவும் தெரிவித்த சுமந்திரன், இருப்பினும் அதனை கஜேந்திரகுமார் மறுப்பதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.

அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில் 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் தயாரித்த அரசியலமைப்பு வரைபு சிறந்த பல கூறுகளைக் கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எடுத்துரைத்த சுமந்திரன், அதிலுள்ள குறைபாடுகள் பற்றி சகலரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதனை முற்றாக நிராகரிக்கவேண்டும் என கஜேந்திரகுமார் கூறிவருவது ஏற்புடையதன்று என்றும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/216895

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

3 months 1 week ago

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. 

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன் இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன. 

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அனுசரணையாளர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இவ்வைத்தியசாலை, இன்று வரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப்போராடும் வாழ்வதார சிகிச்சையைக் வழங்கி வருகிறது. 

ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர் மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சக போக்குகள் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

தற்போது, பல ஆண்டுகளாக புற்றுநோயாளர்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்திக்கு எதிராக நடக்கும் அவதூறு பரப்பல், சமூக மேடைகளிலான வசைபாடுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை எமது சங்கம் கடுமையாகக் கண்டிக்கின்றது. 

அவரை மனதளவில் பாதித்து, சேவையில் இருந்து பின்வாங்க வைக்கவே இது மேற்கொள்ளப்படுவதாக எமது சங்கம் தெளிவாக அறிந்து வருகின்றது. 

இச்சவாலுக்கு உரிய சூழ்நிலை ஒரு சில தனிநபர்களின் துயரம் மட்டுமல்ல அதுவே நோயாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் சமூக மருத்துவப் பின்னடைவுகளுக்கு இடமளிக்கும் நிலை ஆகும். 

இந்நிலையில், வைத்திய நிபுணர்களுக்கு எதிரான இத்தகைய களங்கப்படுத்தல் ஆனது, ஏழை நோயாளர்களின் உரிமைகளை நேரடியாக தாக்குகின்றது. 

அத்துடன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் சேவைகள் குறைக்கப்பட்டு, அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் சட்டவிரோத ஒழுங்குகள் செயல்படுவதாகவும், அவை உறுதியான தண்டனைவிதிகள் இன்றி தொடர்வதாகவும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன் , உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. 

எனவே, புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது. 

மேலும் அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நிர்வாக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அவசியமானால் தீவிரப்படுத்தப்படும். 

நமது நோக்கம் உன்னத நோக்கம் கொண்ட தனி நபர்களை காப்பது மட்டுமல்ல நோயாளியின் உரிமைகள், வாழ்க்கை தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmbn64q8c01joqpbs833pk06z

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை

3 months 1 week ago

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை; உண்மை எதுவென தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் நிசாம் காரியப்பர்

07 JUN, 2025 | 10:28 PM

image

நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஊடகங்களில் பரவிய செய்தி, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப" இந்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை திணைக்களத்தினதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் மக்களில் குழப்பத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்குகின்றன. மன்னிப்பின் சட்டப்பூர்வ நிலை பற்றி தெளிவாக தகவல் இல்லாத சூழ்நிலையில், மக்கள் யாரை நம்புவது?

சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. குற்றங்களை விட, அவற்றை மறைத்தல் மிகப்பெரிய சமூகத் தீமையாகும்.

எனவே, இந்த விடுதலைக்கான முழுமையான ஆதாரங்களும், தீர்மானங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/216886

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக தேக்கு மர குற்றிகளை ஏற்றி சென்ற லொறியின் சாரதி கைது

3 months 1 week ago

07 JUN, 2025 | 05:43 PM

image

சாவகச்சேரியில் கருங்கற்களுக்குள் தேக்கு மர குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மர குற்றிகளை கொண்டு சென்ற போது சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தேக்கு மர குற்றிகள் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/216878

இந்திய நிறுவனங்களின் ஏற்பாட்டில் பொருளாதாரக் கலந்துரையாடல்

3 months 1 week ago

07 JUN, 2025 | 10:32 PM

image

(எம்.மனோசித்ரா)

'கடன் மற்றும் மூலதனம் குறித்த உரையாடல் : மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (06) கொழும்பிலுள்ள ரத்னதீபா ஹோட்டலில் விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா, பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம், இந்திய அரசாங்கம், என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றம், கேர்எட்ஜ் குளோபல் ஆகியவை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தோ - இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை, டி.டபிள்யு க்ரோப் (பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார்.

மேலும் இந்திய மற்றும் இலங்கை வங்கிகள், பல்வேறு வர்த்தக சபைகளின் உறுப்பினர்கள், ஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்புரையாற்றியதோடு, குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் நிர்வாக பணிப்பாளர் பிரதீப் ராமகிருஷ்ணன், கேர்எட்ஜ் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி பராக் கஸ்தூர் மற்றும் என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடரமணி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கிப்ட் சிட்டி சுற்றுச்சூழல் அமைப்பு, கடன் மதிப்பீட்டு வழிமுறைகள் மற்றும் அதன் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்திய சமீபத்திய ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதன் போது கிப்ட் சிட்டி மூலம் சர்வதேச மூலதன சந்தைகளை அணுக விரும்பும் நிறுவனங்களுக்கான பட்டியலிடல் தேவைகள் பற்றிய கண்ணோட்டத்தையும் தேசிய பங்குச் சந்தை வழங்கியது.

மேலும் நிதி மற்றும் முதலீடு தொடர்பான களங்களில் கூட்டு முயற்சிகளை மேலும் முன்னேற்றுவதற்கு இந்த நிகழ்வு ஒரு ஊக்கியாக அமைந்தது.

https://www.virakesari.lk/article/216876

பிரதமர் ஹரிணியின் கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்!

3 months 1 week ago

பிரதமர் ஹரிணியின் கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்!

இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய 1,000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என கூறியது தவறானது என முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய 1,000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என கூறியது தவறானது என முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

  

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தவறான கருத்துகளை கூறிவருகிறார், இது மிகவும் முக்கியமான ஒரு விடயம் மாகாண சபைக்கு உரித்தான விடயம்.ஹரிணி அமரசூரிய கூறிய கருத்தை பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்தார்.

https://seithy.com/breifNews.php?newsID=334316&category=TamilNews&language=tamil

யாழ்ப்பாணத்தில் 10, வன்னியில் 4 சபைகளில் ஆட்சியமைக்க சைக்கிள்- சங்கு கூட்டணி திட்டம்!

3 months 1 week ago


யாழ்ப்பாணத்தில் 10, வன்னியில் 4 சபைகளில் ஆட்சியமைக்க சைக்கிள்- சங்கு கூட்டணி திட்டம்!

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

  

தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவர்கள் இதனை மறுத்திருந்தனர்.

அதனையடுத்து இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (5) கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கூட்டணியாக இணைந்து வட, கிழக்கு மாகாணங்களில் எத்தனை உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்க்கிறீர்கள் என வினவியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களில் 10 சபைகளில் தம்மால் ஆட்சியமைக்கமுடியும் எனவும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அநேகமாக 4 சபைகளில் ஆட்சியமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் சபைகளில் அவர்கள் ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆகவே இவ்விடயத்தில் தமிழரசுக்கட்சி சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.


https://seithy.com/breifNews.php?newsID=334322&category=TamilNews&language=tamil

கைதிகள் விடுதலையில் சர்ச்சை : ஜனாதிபதி செயலகம் அறிக்கை

3 months 1 week ago
கைதிகள் விடுதலையில் சர்ச்சை : ஜனாதிபதி செயலகம் அறிக்கை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தியுள்ளது. 

அரசியலமைப்பின் பிரிவு 34 (1) இன் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். 

இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படும். அதன்படி, ஜனாதிபதியின் ஒப்புதலுடன், அந்தக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. 

இருப்பினும், மேற்கூறிய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் 2025-05-06 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட பொது மன்னிப்புக்கு தகுதியான கைதிகளின் பட்டியலில் 388 பெயர்கள் காணப்பட்டன. 

மேலும் அநுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட குறித்த நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதி பொது மன்னிப்புக்காக அங்கீகரித்த 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. 

இந்த சம்பவம் குறித்து விசேட விசாரணையை முன்னெடுக்கக் கோரி, ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று (06) "ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படாத கைதியின் விடுதலை தொடர்பாக" என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/175-358756

எதிர்கால தொழில்வாய்ப்புகளில் பங்கெடுக்கும் வகையில் எம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் - வடக்கு ஆளுநர் வேதநாயகன்

3 months 1 week ago

07 JUN, 2025 | 02:05 PM

image

எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார்.

'பி.எல்.சி. கம்பஸின்' (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் சனிக்கிழமை (07) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார்.

ஆளுநர் தனது உரையில்,

நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று அப்படியல்ல.

இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதன் ஊடாக உயர்கல்வி கற்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் அன்று வேறு தெரிவு என்பது குறைவாக இருந்தது.

ஆனால் இன்று பல தெரிவுகள் - வாய்ப்புக்கள் உங்கள் முன்னால் இருக்கின்றன. இன்று வேலை வாய்ப்பு என்பது சவலானதாக உள்ளது.

அரசாங்க வேலை வாய்ப்பாக இருக்கலாம், தனியார்துறை வேலை வாய்ப்பாக இருக்கலாம் எதுவென்றாலும் அவை சவாலானதாகவே இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி முதலிடுவதற்கு வருகின்றார்கள்.

வெகு விரைவில் இங்கு தொழிற்சாலைகள் உருவாகும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் உங்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/216859

யாழ். - சங்கானைப் பிள்ளையார் கோவில் வீதியில் விபத்து ; ஒருவர் பலி

3 months 1 week ago

07 JUN, 2025 | 10:07 AM

image

யாழ்ப்பாணம், சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில்  பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வெள்ளிக்கிழமை (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாதகல் மேற்க்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடையவர் ஆவார்.  

மேற்படி குடும்பஸ்தர் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு சங்கானையில்  இருந்து சித்தங்கேணி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார். 

இதன்போது,  சங்கானை பிள்ளையார் கோவில் வளைவு பகுதியில் மேற்படி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றை மத்திய கோட்டை தாண்டி முந்தி செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையில்  வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி இருவரும் மயக்கம் அடைந்தனர்.

உடனடியாக சங்கானை வைத்தியசாலையை கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இருவரும் மாற்றப்பட்ட நிலையில் மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றவர்  மயக்கம் அடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன்  சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.  

https://www.virakesari.lk/article/216835

மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு

3 months 1 week ago

மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு

June 7, 2025 10:26 am

மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த மாவை.சோ.சேனாதிராஜாவைப் படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சோ.சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் கிராம அலுவலர் சிவராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தமிழினப் படுகொலைகளைப் புரிந்த இலங்கை அரசின் பங்காளியான டக்ளஸ் தேவானந்தாவும், அவரது ஆயுதக்குழுவும் 2001.11.28 ஆம் திகதி நாரந்தனை – தம்பாட்டிப்பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், ஏரம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகிய இருவர் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டதுடன் 28 பேர் படுகாயமடைந்ததையும், மாவை.சோ.சேனாதிராஜா கொட்டன் பொல்லுககளாலும், துப்பாக்கிகளாலும், வாள்களாலும் சுட்டும், வெட்டியும், அடித்தும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு நினைவிழக்குமளவு காயமுற்றிருந்த கறைபடிந்த சம்பவத்தையும் மீள நினைவூட்டி, அவரது நினைவுகளைப் பதிவு செய்கின்றேன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தில் பிறந்து, யாழ்.வீமன்காமம் வித்தியாலயத்திலும், யாழ்.நடேஸ்வராக் கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக இளங்கலைமாணி பட்டப்படிப்பையும் மேற்கொண்ட மாவை.சோ.சேனாதிராஜா, ஈழத்தமிழினத்தின் மீதான அடக்குமுறைகளின் எதிர்க்குரல்களுள் ஒருவராக பதின்மங்களிலேயே தன்னையும் இணைத்துக் கொண்டவர்.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கை என்ற அரசியல் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் தனது 19வது வயதிலேயே இணைந்துகொண்ட மாவை அண்ணரின் அரசியல் பிரவேசத்துக்கான காலவெளி அப்போதுதான் மெல்லக் கருக்கொள்ளத் தொடங்கியது.

இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளை உச்சம் பெறச் செய்த தனிச்சிங்களச் சட்டம் 1956 இல் அறிமுகம் செய்யப்பட்டு கிடப்பிலிருந்த நிலையில், 1961 ஆம் ஆண்டு அதனை வடக்கு, கிழக்கிலும் நடைமுறைப்படுத்த முனைந்தமைக்கு எதிராக, 1961 ஜனவரி 21 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 7 ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, 1961 பெப்ரவரி 20 இல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் மாவை சேனாதிராஜாவின் போராட்ட வாழ்வு ஆரம்பித்தது எனலாம்.

பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராக, ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகக் காலப்பெறுமதி மிக்க அரசியல் பணியாற்றிய இவர், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, மகசின், வெலிக்கடை உள்ளிட்ட எட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழரசின் மூத்த தலைவரும் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மறைவின் பின்னர், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி, ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தின் உள்ளும், வெளியும் ஒலிக்கத் தொடங்கினார்.

ஈழ விடுதலைப் போராட்ட எழுச்சியின் போதும், அதன் வீழ்ச்சியின் பின்னான தமிழ்த் தேசிய அரசியல் தளத்திலும் மாவை சேனாதிராஜாவின் பணிகளின் கனதி மிகப்பெரியது.

ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட ஓர் இனத்தின் அரசியல் குரலாக இருந்து, பன்னாட்டு அரசியல் ஒழுங்கிலும், ஜெனிவா அரங்கிலும் தன்னாட்சி உரிமை கோரும் ஈழத்தமிழரின் அரசியல் பயணத்துக்கு அங்கீகாரம் தேடும் வரலாற்றுப் பணியையே அவர் தன் வாழ்வாக்கிக் கொண்டவர்.

மென்வலுப் போக்கில் நம்பிக்கை கொண்ட செயற்பாட்டு அரசியல்வாதியாக இருந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கத்தின் ஒரு தசாப்பத கால தலைவராக, கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த அவர்தான், இன்று தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் இருக்கும் என் போன்ற பலருக்கும் அரசியல் வழிகாட்டி.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அரசியல் தளம்பல் மிகுந்திருந்த 2014 செப் டெம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டது முதல், தன் அந்திமத்தின் போதான இறுதிக் கணம் வரை எமது கட்சியின் தலைவராக, தெளிவார்ந்த அரசியல் செயற்பாடுகளே அவரது தெரிவுகளாயிருந்தன.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடக்கம் இன்றைய நாள் வரையும் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் தீர்க்கம்மிகு அரசியல் தீர்வை, எமக்குக் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களில் எல்லாம் எமது இனம் ஒருமித்து வெளிப்படுத்தியே வந்திருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பிற்பாடு, பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கு அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யக் கூடிய அர்த்தமுள்ள அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் உலகத்தின் எதிர்பார்ப்பை அங்கீகரித்து, இலங்கை அரசின் போருக்குப் பிந்திய நிலைப்பாட்டாலும், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையினாலும் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிட்ட போதும் அமரர். மாவை.சோ.சேனாதிராஜா எல்லா வகை சமாதான முன் முயற்சிகளுக்காகவும் மிகக் கடுமையாக உழைத்திருந்தார்.

போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருந்த தமிழரசு என்ற அரசியல் ஆலமரம், கிளிநொச்சி மண்ணிலும் விழுதெறிந்து வளர்ந்ததில் மாவை அண்ணனின் பங்கே விரவியிருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் இருப்பையும் இனத்துவ உரித்தையும் அவாவி நிற்கும் ஓர் அரசியல் கட்சியின் பயணம் தடம் மாறாததாக இருக்க வேண்டுமெனில், அது முழுக்க முழுக்க மக்கள் மயப்பட்டதாக, மக்களின் மன உணர்வுகளுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதை தனது அரசியல் அனுபவத்தால் உற்றுணர்ந்த மாவை அண்ணன், ஈழத்தமிழ் சமூகத்தின் இருபெரும் சக்திகளாகிய இளைஞர்களையும், மகளிரையும் சமதளத்தில் இணைத்துப் பயணிக்கும் எல்லா வகைப் பிரயத்தனங்களிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய முதிர்ச்சி மிக்க அவரது செற்பாடுகளின் பயன் விளைவினால்தான், தமிழ்த் தேசியம் அதன் கொள்கை இறுக்கமும், கொதிநிலையும் தாழாது அடுத்த சந்ததியிடத்தே இன்று கையளிக்கப்பட்டிருக்கின்றது.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், நீடித்த செழுமைமிகு இருப்புக்காகவும், தொலைநோக்கான வழிகாட்டலை வழங்குகின்ற பொறுப்பை ஏற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், மக்களையும் கொள்கைப் பற்றுறுதியோடு தீர்க்கமான வழிமுறைகளில் முன்னேற்றிச் சென்ற ஒரு பெருந்தலைவராகவே அவரது மறைவின் பின்னும் மாவை அண்ணருக்கான அடையாளம் மக்கள் மனங்களில் நிலைபெற்றிருக்கிறது.

நாங்கள் ஒரு சுதந்திர அரசியல் இயக்கமாக – மக்கள் திரட்சி நிறைந்த தேசமாக எம்மை உருவாக்கிக் கொள்ளாதவரை, பலவீனமான அரசியல் கோரிக்கையாளர்களாகவே இருக்க வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தவராக, தமிழரசுக் கட்சியை மக்கள் பேரியக்கமாக வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற நேர்த்திமிகு சிந்தனையில் பின்வாங்காத பெருந்தலைவராக இருந்த, எனது அரசியல் வழிகாட்டியும், எமது கட்சியின் மறைந்த பெருந்தலைவருமாகிய அண்ணன் மாவை.சோ.சேனாதிராஜாவின் தடங்களை இறுகப்பற்றியபடி, சரிந்துபோயிருக்கக் கூடிய தமிழரசின் செயலூக்கத்தினை மீள நிலைநிறுத்துவதற்காக தமிழ்த்தேசிய ஆர்வலர்களோடும், தொண்டர்களோடும் இணைந்து ஒழுகி எமது அரசியல் இயக்கத்தை நிலைநிறுத்துவதன் வழி, ஈழத்தமிழினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தை இதயசுத்தியோடு முன்கொண்டுசெல்ல உழைப்பதுவே அன்னாருக்கான உயரிய அஞ்சலி என்பதை உணர்ந்த ஒருவனாக, அத்தகையதோர் மன உறுதியோடு அவரது மறைவுக்கான எனது அஞ்சலிகளையும், அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.” – என்றார்.

https://oruvan.com/douglas-is-the-one-who-tried-to-assassinate-mavai-sridharan-mp-statement/

Checked
Thu, 09/18/2025 - 10:54
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr