ஊர்ப்புதினம்

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!

3 months 1 week ago

போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோர், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை இன்னும் நீக்கப்படவில்லை என கூறினார்.

இது தொடர்பில் பரிசீலித்த நீதவான், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்! | Virakesari.lk

இலங்கையில் பதிவு செய்யப்படாத இஸ்ரேலிய சமய கலாசார நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை - சுனில் செனவி

3 months 1 week ago

05 Jun, 2025 | 01:48 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கையில்  இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்களென நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு  நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பதிவு கம்பனிகள் சட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஏனைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போமென புத்தசாசன, சமய மற்றும் கலாாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்,பி. கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி.  தனது கேள்வியில், இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்கள் இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ளனவா? அவை தாபிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை? அவற்றுக்கு சட்ட ரீதியாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேட்டிருந்தார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்கள் என பொத்துவில், எல்ல, வெலிகம மற்றும் திபிரிகஸ்யாய ஆகிய பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தாபிக்கப்பட்டுள்ள சமய மற்றும் கலாசார நிலையங்களில் பொத்துவில் மற்றும்  திபிரிகஸ்யாய ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. மற்ற இரண்டு நிலையங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பொத்துவில் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையத்தை பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணம் தெரியாது. 

கிராம சேவகர் அந்த பகுதியில் துறை பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், அதுதொடர்பில் தகவல் பெற்றுக்காெள்ள அங்கு யாரும் இருக்கவில்லை என்பதால் பொது மக்களிடமிருந்து தகவல் பெற்றுக்கொண்டிருக்கிறார். அதன்போது அவர்கள், இது தனியார் காணி என்றும். அதனால் அதனை பதிவு செய்யாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இஸ்ரேல் இனத்தவர்கள் சுற்றுலா பயணிகளாக இந்த பிரதேசத்துக்கு வந்தால். இந்த மத நிலையத்தில் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தற்போது அவர்கள் இலங்கையில் இருந்து சென்றுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்ததாக கிராம சேவகரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் திம்பிரிகஸ்யாய பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டடம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் மத நிலையமாகவோ நிறுவனமாகவோ பதிவு செய்யப்பட்டதில்லை. பூஜை வழிபாட்டுக்காக என தெரிவித்து இஸ்ரேல் இனத்தவர்கள்  4பேர் அங்கு தங்கி இருந்துடன் வெளிபிரதேசங்களில் இஸ்ரேல் இனத்தவர்கள் மத வழிபாட்டுக்காக சம்பந்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள வெளிகம மற்றும் எல்ல நிறுவனங்கள், நிறுவனங்கள் பதிவு செய்யும் பதிவாளர் காரியாலயத்திலே 2024- 4-22ஆம் திகதி பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றார்.

இதன்போது மேலதிக கேள்வி ஒன்றை எழுப்பி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிடுகையில், கொழும்பு பிரதேசத்தில் தற்போது இரண்டு இடங்களில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அதில் ஒன்று கொழும்பு, 7 ரெட் சினமனுக்கு முன்னால் இருக்கும் ரபாப் ஹவுஸ். தெஹிவளை அல்விஸ் பிளேஸிலும் ஒரு நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு நிலையங்களும் சட்ட பூர்வமானதல்ல என்றும் பதிவு செய்யப்படவி்ல்லை என்றும் பிரதமர் கடந்த டிசம்பர் மாதம் இந்த சபையில் தெரிவித்திருந்தார்.ஆனால் அந்த  இரண்டு நிலையங்களும்  அரசாங்கத்தின் பொலிஸ் மற்றும் விசேட அதிரடைப்படை பாதுகாப்புடனே செயற்பட்டு வருகின்றன. சட்ட ரீதியற்ற இந்த மத நிலையங்கள் தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என கேட்கிறேன் என்றார்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இலங்கையில் நான்கு மதங்கள் இருக்கின்றன. அவற்றுக்கென திணைக்களங்கள் இருக்கின்றன. அவை பதிவு செய்யப்படுவதற்கான முறையொன்று இருக்கிறது.ஆனால் இஸ்ரேலுக்கு சொந்தமான இந்த கட்டடங்கள் கம்பனி சட்டத்தின் கீழே பதிலாகி இருக்கின்றன.

அவ்வாறு பதிவு செய்யப்படும்போது  ஹோட்டல் அல்லது  சிற்றுண்டிச்சாலை வியாபார நிலையம்  போன்ற வடிவமே இருக்கும். ஆனால் அங்கு வேறு விடயங்கள் இடம்பெறுவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

இவற்றின் தகவல்களை சேகரிப்பதும் கடினமான விடயமாகும்.  அது தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். அதேநேரம்  இந்த நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவே எனக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கொழும்பு 7இல் உள்ள நிலையத்துக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அகற்றப்பட்டுள்ள போதும் பொலிஸ் பாதுகாப்பு தற்போதும் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான  மத்திய நிலையங்கள் ஊடாக இஸ்ரேல் எமது நாட்டுக்குள் மறைமுகமாக நுழைந்திருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. 

நாடுகளுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்ற, மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற, காசாவில் இன அழிப்பை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் தொடர்பில் அரசாங்கம் ஏன் இலகுவான முறையில் நடவடிக்கை எடுக்கிறது? அத்துடன் இந்த சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு என்னும் எவ்வளவு காலம் தேவைப்படுகிறது என கேட்கிறேன்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், யூதர்கள் எமது  நாட்டுக்கு மத நடவடிக்கைகளுக்குதான் வருகிறார்கள் என எங்களுக்கு உறுதியாக தெரிவிக்க முடியாது. அவர்கள் சுற்றுலா பயணிகளாகவும் நாட்டுக்குள் வருகிறார்கள். எனவே இந்த சட்ட விரோத கட்டிடங்கள் தொடர்பில் இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். என்றாலும் சுற்றுலா பயணிகளாக அவர்கள் நாட்டுக்குள் வரும்போது, சுற்றுலா பயணிகளாக அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகளை நாங்கள் செய்துகொடுக்க வேண்டி ஏற்படுகிறது என்றார்.

 

இலங்கையில் பதிவு செய்யப்படாத இஸ்ரேலிய சமய கலாசார நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை - சுனில் செனவி | Virakesari.lk

ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து !

3 months 1 week ago

05 Jun, 2025 | 03:31 PM

image

பாணந்துறையிலிருந்து மருதானைக்கு இன்று வியாழக்கிழமை (5) காலை, புறப்பட்ட ரயில் எண் 328, தானியங்கி ஒளி சமிக்ஞை 171 ஐ நெருங்கியபோது, ரயில் செல்வதற்கான பச்சை சமிக்ஞை காட்டப்பட்ட போதும்  எதிரில் அதே தண்டவாளத்தில் ரயில் (S-11 சிவப்பு ரயில்)  ஒன்று  நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் சாரதியில் சாதுரியத்தால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பான சமிக்ஞைகளை பொருத்துமாறு கோரி ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே தொழிற்சங்க செயலாளர் தெரிவித்தார்.

பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான சமிக்ஞை கோளாறு குறித்த தகவல் கிடைத்துள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிக்கலை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் மார்க்கங்களில் கரையோர மார்க்கமும் ஒன்றாக இருப்பதால் குறிப்பாக இந்த சம்பவத்தையடுத்து பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். 

ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து ! | Virakesari.lk

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago

05 Jun, 2025 | 04:40 PM

image

(எம்.நியூட்டன்)

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது.

 உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார்.

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி | Virakesari.lk

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு

3 months 1 week ago

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக   மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வியாழக்கிழமை (05)  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும்,

2017 செப்டம்பர் 22 ஆந் திகதியிலிருந்து தொடங்குகின்றதும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றிஇ அத்தகைய செயல் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவுக்குஇ இச்சட்டம் வலுவுக்குவருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய  இலங்கைத்   தமிழரசுக் கட்சியின்   பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் நேற்றையதினம் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு | Virakesari.lk

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்

3 months 1 week ago

image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து  பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம்,  வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்  | Virakesari.lk

குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு

3 months 1 week ago

குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு

குச்சவெளி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீன்பிடிக் கப்பலை சோதனையிடச் சென்ற கடற்படைக் கப்பலைத் தாக்க பல படகுகளைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரும், தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கடற்படை வீரர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் படகுகளைக் கைப்பற்ற கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திருகோணமலை குச்சவெளி கடல் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கடற்படைக் கப்பலால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த நேரத்தில், ஐந்து மீனவர்கள் சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி ஒரு டிங்கி படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், கடற்படையினர் அவர்களைக் கைது செய்து கரைப் பகுதிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.

இருப்பினும், குறித்த சந்தர்ப்பத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் கடற்படைக் கப்பலைத் துரத்திச் சென்று மோதியதாகவும், இதனால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தப்பிச் சென்றதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படைக் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், எந்தவித இடையூறும் இல்லாமல் சட்டப்பூர்வமாக தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்குமாறு அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு படகை கடத்திச் செல்ல முயன்ற போது, நிலைமையைக் கட்டுப்படுத்த கடற்படை அதிகாரிகள் வானத்தை நோக்கிச் சுட்டனர்.

கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு, கடற்படை வீரர்களுடன் சண்டடையிட்டு தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர்.

அங்கு, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ஒருவர் கடற்படை வீரரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, அது வெடித்து, சம்பந்தப்பட்ட நபரைக் காயப்படுத்தியது.

சம்பவத்திற்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட குழு தப்பிச் சென்றது, கடற்படைக் குழு அவர்கள் கைது செய்த சந்தேகநபர்களுடன் கரைக்கு வந்தது.

காயமடைந்த 24 வயது மீனவர் சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உட்பட 5 மீனவர்களும் குச்சவெளி – ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கப்பல் மீதான தாக்குதலில் காயமடைந்த இரண்டு கடற்படை வீரர்கள் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

எனினும், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை குச்சவெளி பகுதியில் போராட்டமொன்று இடம்பெற்றது.

இந்த சம்பவம் குறித்து கடற்படை முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான மற்றும் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் விளைவாக, இந்த ஆண்டு இதுவரை 117 மீன்பிடி படகுகளும் 315 நபர்களும் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (03) இரவு முன்னெடுத்த இவ்வாறான நடவடிக்கைகளில் 11 சட்டவிரோத படகுகளுடன் 48 நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.samakalam.com/குச்சவெளி-சம்பவம்-தொடர்ப/

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் விசாரணைக்கு இறங்கி வந்த அரசாங்கம்!

3 months 1 week ago

நாடு அபிவிருத்தியை அடைவதற்கு பொருளாதார வெற்றிகள் மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் மற்றும் அரசியல் கலாசாரமும் மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு

பொய்களை பரப்புவோருக்கு இனி மன்னிப்பில்லை; அவர்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தகவல்

யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான விசாரணைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டு

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

3 months 1 week ago

2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது கடந்த 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.


இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இன்று காலை  இடம்பெற்றது.


இதன்பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம் பிரிக்கபட்டு தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ். பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

69901846.jpg

1758200847.jpg

285708919.jpg

1365021766.jpg

308801799.jpg


உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!

3 months 1 week ago

வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்;

2025ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைத்தேர்தல், அதற்கு முன்னரான இரண்டு தேர்தல்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின்  வெளிப்பாடாக  அமைந்ததுடன், மக்கள் தமது மேலான ஆணையை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வழங்கியிருந்தனர்.

மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் மக்களுக்கான சேவையினை செய்வதற்குப் பதிலாக வாக்குகளை பெற்றுக்கொண்ட கட்சிகள் தனிப்பட்ட அரசியல் பகையை மட்டும் பிரதானப்படுத்தி செயற்படுவது  தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம்.

குறிப்பாக அண்மையில் புதிதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இதுவரை பேசி வந்த கொள்கைக்கு முற்றிலும் மாறான ஒன்று என்பதுடன்,  கஜேந்திரகுமார் தரப்புக்கு இருக்கும் சுமந்திரன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடிகிறது.

தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை, இவ்வாறான தனிப்பட்ட எதிர்ப்பு அரசியலாக வெளிப்படுத்துவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது?

எனவே, தமிழ் மக்களை மையப்படுத்திய அரசியல் சேவையில் ஓர் அணியாக ஈடுபடுவதே மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் எதிர்பார்க்கும் ஒன்றாக காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!

குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம்

3 months 1 week ago

04 Jun, 2025 | 01:07 PM

image

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04)  பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்   ஒன்றை முன்னெடுத்தனர்.

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் "மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

IMG-20250604-WA0066.jpg

IMG-20250604-WA0063__1_.png

IMG-20250604-WA0059.jpg


குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம் | Virakesari.lk

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

3 months 1 week ago

04 Jun, 2025 | 01:37 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே இன்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார். 

புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என இன்றைய வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தான் கட்சி உறுப்பினர் எனவும் இந்த வழக்கிலே தன்னை இடைபுகு மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படியாகவும் ஒரு விண்ணப்பம் செய்திருக்கின்றார். இந்த வழக்கானது சென்ற வருடம் பெப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டு யாராவது வழக்கிலே அக்கறை உள்ளவர்கள் வழக்கிலே இணைந்து கொள்வதானால் 2024 பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னதாக மன்றுக்கு வர வேண்டும் என்று பத்திரிகைகளிலே அறிவித்தலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து தன்னை இடைபுகுமனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் விண்ணப்பித்திருக்கின்ற காரணத்தினாலே நாங்கள் பலர் அதற்கு எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம். எனினும் சில எதிராளிகளின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் எந்த எதிர்ப்பும் இல்லை அவர் சேர்த்துக் கொள்ளப்படலாம் என கூறியிருந்தார்கள். குறிப்பாக சிறிதரன், குகதாசன் மற்றும் யோகேஸ்வரன் சார்பிலே ஆஜரான சட்டத்தரணிகள் இந்த சந்தர்ப்பத்திலேயும் அவரை சேர்த்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறியிருதார்கள்.

சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தன்னுடைய மனுவிலே இந்த வழக்கானது இழுபட்டுக் கொண்டு செல்கின்ற காரணத்தினாலே காலம் போய்க் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேதான் தன்னை இணைத்துக் கொள்ளும்படியாக தன்னுடைய மனுவின் 9ஆம் 10ஆம் பந்திகளிலே சொல்லியிருக்கின்றார்.

 ஆகவே அதை மேற்கோள்காட்டி நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். அவரை சேர்த்துக் கொள்வதா?, இல்லையா? என்ற விசாரணையே ஒரு வருடம் இழுபடும் இது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஒரு முயற்சி. எனவே அந்த இடைபுகுநரை மனுவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற எங்களுடைய ஆட்சேபனைக்காக வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தவணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சி.வி.கே.சிவஞானமும் தன்னுடைய பதிலியை அணைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு | Virakesari.lk

வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன்

3 months 1 week ago

image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்குரிய வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை. இரத்துச் செய்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், ஒத்திவைக்கப்பட்ட சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இல்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

வட மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் எனக் கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்திருப்பதன் காரணமாக கடந்த மாதம் 30ஆம் திகதி வட, கிழக்கில் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த பாரிய சட்டமறுப்புப் போராட்டம் மற்றும் ஹர்த்தாலை ஒத்திவைப்பதாகவும், இரத்து செய்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின், அப்போராட்டம் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் எனவும் சுமந்திரன் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி  புதன்கிழமை (4) கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், 'காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக கடந்த மாதம் 27ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தது. 

நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன்னைய நாள் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வாரம் கடந்தும், இன்று வரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர எமக்கு வேறு தெரிவுகள் இருக்காது' எனத் தெரிவித்துள்ளார். 

வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன் | Virakesari.lk

முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார அமைச்சு கூறுவதென்ன?

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

04 JUN, 2025 | 05:09 PM

image

அலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.

எனவே, மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வெளியிடப்பட்ட 2025.06.02 திகதியிட்ட கடிதம், மேல் மாகாண சபையின் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அலுவலக வளாகங்களிலும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் பணிபுரியும் போது முகக்கவசம் அணியுமாறு அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் தொடர்பாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேற்கு மாகாண தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சம்பந்தப்பட்ட கடிதத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்யுமாறும், அலுவலகங்களில் முகமூடிகளை அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு, சுவாச நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறையின் கீழ் கொவிட்-19 பிற தொற்று நோய்களின் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, மழைக்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்கள் அதிகரிப்பதால், கொவிட்-19 அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுவாக, சுவாச நோய்களை தடுப்பதும் ஒரு பொதுவான வழிமுறையின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த நேரத்தில் கொவிட்-19 தடுப்பு ஒரு ஆபத்தாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றும், மேலும், நிறுவனங்களுக்கு இதுபோன்ற பரிந்துரைகளை வழங்குவது தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்றும், எனவே சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அத்தகைய ஆலோசனையை வழங்குவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், யாராவது தானாக முன்வந்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்காக மருத்துவ ஆலோசனையின் பேரில் முகக்கவசம் அணிந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருமல், சளி (காய்ச்சல்) போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிவது முக்கியம் என்றும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதற்கும், மற்றையவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்கும் செயலாளரின் கடிதம் மேலும் கூறுகிறது.

https://www.virakesari.lk/article/216593

ஆசியாவில் எயிட்ஸ் பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கை - சுகாதார பிரதி அமைச்சர்

3 months 1 week ago

04 JUN, 2025 | 03:50 PM

image

ஆசியாவில் எச்.ஐ.வி பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும்  நாடாக இலங்கையைக் கருதலாம் எனவும் குறிப்பாக நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது எச்.ஐ.வி.யுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது இது மிகக் குறைவாக இருப்பது பாராட்டத்தக்கது என்றும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஆதரவை தாண்டி அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவு நாட்டின் சுகாதார அமைப்பை சிறந்த முறையில் பராமரிக்க உதவியுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும் மிக முக்கியமான காரணிகளாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார். 

பாலியல் உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த நிகழ்வு சமீபத்தில் கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது. 

தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்த சுகாதார அமைச்சகம் தீவிரமாக பங்களித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம், இந்த நாட்டில் வாழும் முழு மக்களுக்கும் ஒரு சிறந்த நாட்டை - ஒரு அழகான வாழ்க்கையையும், ஆரோக்கியமான தேசத்தையும் உருவாக்குவதற்கு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்த ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் குழு, நாட்டிற்கு ஐந்து நாள் ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது, மேலும் அந்தக் குழு மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் ஆய்வுகளை நடத்தியது.

அங்கு, பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் போக்குகள் குறித்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுடனும், சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தக் குழுவில் டென்மார்க், யுனைடெட் கிங்டம், பின்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பிரதிநிதிகள் உள்ளனர். 

இந்த நிகழ்வில் இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் தலைவர் அருணி மார்சலின், நிர்வாக இயக்குநர் டாக்டர் ருச்சிதா பெரேரா, சங்கத்தின் மூத்த அதிகாரிகள் குழு மற்றும் சுகாதாரத் துறையின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-06-04_at_3.11.42_PM.

WhatsApp_Image_2025-06-04_at_3.11.43_PM.

WhatsApp_Image_2025-06-04_at_3.11.44_PM.

https://www.virakesari.lk/article/216569

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் 86 மாணவர்கள் அனுமதி! அதிகரிக்கும் எண்ணிக்கை

3 months 1 week ago

புதிய இணைப்பு

மட்டக்களப்பு நகரில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போதுவரை  86 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பிலுள்ள புனிதமைக்கல் கனிஷ்ட பாடசாலையை சேர்ந்த மாணவர்களும், கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த , கல்லடி வினாயகர் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு 

மட்டக்களப்பு நகரில் மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் 44 மாணவர்கள்வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் இடைவேளையின்போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

அவ்வாறு மாணவர்கள் வாக்கி உட்கொண்ட உணவு ஒவ்வாமையினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் 86 மாணவர்கள் அனுமதி! அதிகரிக்கும் எண்ணிக்கை | Food Allergy 44 Hospitalized In Batticaloa Schools

அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு, வாந்தி, தலைசுற்று, ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினர் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக நோய்காவு வண்டிகளில் துரிதமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை

இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் 86 மாணவர்கள் அனுமதி! அதிகரிக்கும் எண்ணிக்கை | Food Allergy 44 Hospitalized In Batticaloa Schools

குறித்த பாடசாலைகளில் இயங்கிவரும் சிற்றுண்டிச் சாலைகளுக்கு ஒரு இடத்திலிருந்தே உணவுகள் விநியோகித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் குறித்த பாடசாலைகளில் பிட்டு வாங்கி அருந்தியுள்ளதாகவும் அந்த உணவு ஒவ்வாமை நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்

GalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/food-allergy-44-hospitalized-in-batticaloa-schools-1749023774

இலங்கைக்கு 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களை வழங்கவுள்ள அவுஸ்திரேலியா

3 months 2 weeks ago

04 JUN, 2025 | 09:59 AM

image

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளதுடன் 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பானது, பல்வேறு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பிராந்திய கடல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ‘Disi Rela’ கூட்டு கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் அடுத்த கட்ட அறிமுகத்தின் மூலம் ஒரு வலுவான புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது.

கடந்த வருடத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, எமது திறன்களில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளது. ‘Disi Rela’ திட்டத்தின் கீழ் எதிர்கால முயற்சிகளின் ஒரு அங்கமாக, 12 மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் கடல் கண்காணிப்பு உபகரணங்களை வழங்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இது இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் பிரதேசங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.

‘Disi Rela’ என்பது ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும். இது சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் உளவுத்தகவல்களை பகிர்ந்தறிதல், மேம்பட்ட உபகரணங்களின் விநியோகம், சமூக விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி போன்ற கடல்சார் குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடல்சார் பாதுகாப்பை இணைந்து மேற்கொள்கின்றன.  

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகக் காணப்படும் சமூக ஈடுபாட்டை வலியுறுத்தி கருத்துத் தெரிவித்த இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க, 

“ ‘Disi Rela’ என்பது வெறுமனே தொழில்நுட்பம் அல்லது ரோந்து நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாகும். இது இரு நாடுகளுக்கிடையேயும், சமூகங்களுடனும் ஏற்படும் ஒத்துழைப்பின் வலிமையை பிரதிபலிக்கிறது. எமது கடல்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு இலங்கையருக்கும் பங்கு உள்ளது.” என்றார்.

இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டி கருத்து வெளியிட்ட, Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy), “ ‘Disi Rela’ திட்டத்தின் இந்த புதிய கட்டமானது, கடல்சார் பாதுகாப்பு எனும் பொதுவான பொறுப்பை எவ்வளவு தீவிரமாக இருநாடுகளும் எடுத்துக் கொள்கின்றன என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந்த புதிய வசதிகள் எமது அடைவுகளை விரிவுபடுத்துவதோடு, இதன் மூலம் எமது பிராந்தியத்தை பாதுகாப்பதிலான அர்ப்பணிப்பைநாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.” என்றார்.

பொதுமக்கள் கடல்சார்ந்த சந்தேகமான நடவடிக்கைகள் பற்றி தெரிந்தால், 24/7 மணி நேரமும் செயற்படும் 106 எனும் பிரத்தியேக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இந்த கூட்டு முயற்சியானது அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோடு, சர்வதேச ரீதியிலான கடல்சார் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் நிலையான கடல்சார் பிராந்தியத்தை உருவாக்க உதவுகின்றது.

Image_02__7_.JPG

https://www.virakesari.lk/article/216525

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்

3 months 2 weeks ago

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்

June 4, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக அவர் இலங்கைக்கு வருகைதர அனுமதிக்கவேண்டாம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முடிவுக்கு வரவிருக்கும் பின்னணியில், தற்போது நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகளை முறியடிப்பதற்கான கருவியாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகையை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு தாம் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் உள்ளக நீதிப்பொறிமுறையில் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாகவும், சர்வதேச பொறிமுறையின் ஊடாக மாத்திரமே தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பூரண ஒத்துழைப்பு அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையைக் காலநீடிப்புச் செய்வதற்கும், இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர்.

www.ilakku.org
No image previewஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூட...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும்

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு

3 months 2 weeks ago

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. 

அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது. 

அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும், மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும். 

அந்த நோக்கத்தை அடைய, எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmbhhmqbn01dgqpbssj45hw4v

23 பாடசாலைகளையே தேசிய பாடசாலைகளாக கடந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது - கல்வி அமைச்சர் ஹரிணி

3 months 2 weeks ago

03 JUN, 2025 | 05:00 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கடந்த அரசாங்கத்தினால் ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் 23 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறன. ஏனைய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு அதுதொடர்பில் மீளாாய்வு செய்தே நடவடிக்கை எடுக்க வேண்டி இருகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை  (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரோஹித்த எம்.பி தனது  கேள்வியின்போது, 

கடந்த அரசாங்க காலத்தில் மாகாணசபைக்கு கீழ் இருந்த ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றி, அந்த பாடசாலைகளின் பெயர் பலகையையும் தேசிய பாடசாலையாக மாற்றியமைத்து, அந்த பாடசாலைகளில் இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவித்து, அதுதொடர்பான நிகழ்வும் நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்த பாடசாலைகளில், அதாவது, வலயத்துக்கு ஒரு தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கிறது.

அதனால் தேசிய பாடசாலைகளாக தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகள் தற்போதும் தேசியப்பாடசாலைகளாக செயற்படுத்தப்படுகிறதா? அல்லது அந்த பாடசாலைகளை மீண்டும் மாகாணசபைக்கு கீழ் கொண்டுவரப்படுமா என கேட்கிறேன். 

ஏனெனில் குறித்த ஆயிரம் பாடசாாலை திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கும் பாடசாலை அதிபர்களுக்கு அண்மையில் அரசாங்கத்தினால் சுற்றுநிருபம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

அதில் குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலையாக எழுத்து மூலமான நடவடிக்கைகளில் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அதற்கு பொறுப்பு கூறவேண்டி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில்  உங்களின் கருத்து என்ன?

பிரதமர் தொடர்ந்து  பதிலளிக்கையில், கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீண்டும்  மாகாணசபைக்கு கீழ் கொண்டுவரும் எண்ணம் இல்லை. 

என்றாலும் தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பெயர்  பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருந்ததே தவிர தேசிய பாடசாலையாக முன்னேற்ற எந்த  வேலைத்திட்டமும் இருந்ததில்லை. 

அந்த பாடசாலைகளை தெரிவு செய்து தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது.

தற்போது  தேசிய பாடசாலைகளாக 23 பாடசாலைகளே பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த 23 பாடசாலைகளை மாத்திரமே தேசிய பாடசாலைகளாக நாங்கள் ஏற்றுக்காெள்கிறோம். 

பெயரளவில் தேசிய பாடசாலையாக கொண்டுசெல்ல நாங்கள் தயாரில்லை. அந்த பாடசாலைகளை மாகாணசபையால் நல்லமுறையில் நிர்வகித்து வருவதாக இருந்தால், அதனை அவர்கள் முன்னெடுத்துச்செல்வதில் பிரச்சினை இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/216468

Checked
Thu, 09/18/2025 - 10:54
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr