Aggregator

அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

3 months 2 weeks ago
கட்சி ஆரம்பித்தமையால் இனி படங்களில் நடிப்பதை நிறுத்தினால் அது முழு தமிழ் சமுதாயத்துக்கும் செய்யும் மிகப் பெரிய நன்மையாக இருக்கும்.

லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!

3 months 2 weeks ago
பாஜாக பி டீம் யாரென்பதை காலம் நிரூபிக்கும்.. திமுகா எத்தனைகாலம் ஏமாத்த முடியும்..

துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்த கண்டி மருத்துவர்கள்

3 months 2 weeks ago
Freelancer / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 05:35 - 0 - 37 கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் பெண்ணொருவரின் துண்டாக்கப்பட்ட வலது கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். தென்னை அறுக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, திடீரென இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்ததால், வலது கையின் முழங்கைக்கு மேல் உள்ள பகுதி, இயந்திரத்தில் சிக்கி, தோளில் இருந்து, நான்கு அங்குலம் தள்ளி வெட்டுப்பட்டுள்ளது. அனுராதபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.. டாக்டர் அமில சசங்க ரத்னாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் டாக்டர் உதய கிரிடேன, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சமிலா ஜயரத்ன, டாக்டர் சதீர பிரேமரத்ன, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், சிரேஷ்ட பதிவாளர் உதர ரத்நாயக்க, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் உடுவெல, டாக்டர் கசுன் மற்றும் சேனக ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஷ்யாமா நாணயக்கார, சிதாரா சுரவீர, சந்திமா சேனவிரத்ன, திலினி அபேவர்தன, எரண்டி மதுஷானி மற்றும் சசானி கோஸ்டா உள்ளிட்ட தாதியர் குழுவும் இந்த அறுவை சிகிச்சைக்கு உதவினர்.. R Tamilmirror Online || துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்த கண்டி மருத்துவர்கள்

துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்த கண்டி மருத்துவர்கள்

3 months 2 weeks ago

Freelancer   / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 05:35 - 0      - 37

email sharing button
facebook sharing button
reddit sharing button
linkedin sharing button

கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் பெண்ணொருவரின் துண்டாக்கப்பட்ட வலது கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

தென்னை அறுக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, திடீரென இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்ததால், வலது கையின் முழங்கைக்கு மேல் உள்ள பகுதி, இயந்திரத்தில் சிக்கி, தோளில் இருந்து, நான்கு அங்குலம் தள்ளி வெட்டுப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது..

டாக்டர் அமில சசங்க ரத்னாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் டாக்டர் உதய கிரிடேன, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சமிலா ஜயரத்ன, டாக்டர் சதீர பிரேமரத்ன, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், சிரேஷ்ட பதிவாளர் உதர ரத்நாயக்க, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் உடுவெல, டாக்டர் கசுன் மற்றும் சேனக ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஷ்யாமா நாணயக்கார, சிதாரா சுரவீர, சந்திமா சேனவிரத்ன, திலினி அபேவர்தன, எரண்டி மதுஷானி மற்றும் சசானி கோஸ்டா உள்ளிட்ட தாதியர் குழுவும் இந்த அறுவை சிகிச்சைக்கு உதவினர்.. R

image_315e0be0f9.jpgimage_9aa027503a.jpgimage_1e93ef81fd.jpgimage_9a83ade7ec.jpg

17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல்

3 months 2 weeks ago
Published By: NANTHINI 02 FEB, 2024 | 04:21 PM கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் 2023 மே மாதம் வரையிலான 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு சம்பவங்கள் தொடர்பான பின்னணியை கண்டறியும் நோக்கில் துறை சார்ந்தும் நிறுவன மட்டத்திலும் மிகக் கவனமாக ஆராயப்பட்டே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையூடாக வெளிப்படுகிறது. அத்தோடு, தாய் - சேய் இறப்புக்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இரகசிய விசாரணை முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் பிரசவ கால உயிரிழப்பு வீதத்தை குறைப்பதற்காக நாடெங்கும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பிரசவ கால மற்றும் பிரசவத்துக்குப் பின்னரான மரணங்கள் தொடர்பில் கண்காணிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல் | Virakesari.lk

17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல்

3 months 2 weeks ago

Published By: NANTHINI

02 FEB, 2024 | 04:21 PM
image
 

 

கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் 2023 மே  மாதம் வரையிலான 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு சம்பவங்கள் தொடர்பான பின்னணியை கண்டறியும் நோக்கில் துறை சார்ந்தும் நிறுவன மட்டத்திலும் மிகக் கவனமாக ஆராயப்பட்டே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையூடாக வெளிப்படுகிறது. 

அத்தோடு, தாய் - சேய் இறப்புக்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இரகசிய விசாரணை முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறும் பிரசவ கால உயிரிழப்பு வீதத்தை குறைப்பதற்காக நாடெங்கும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பிரசவ கால மற்றும் பிரசவத்துக்குப் பின்னரான மரணங்கள் தொடர்பில் கண்காணிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல் | Virakesari.lk

இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம்,  அரசியலில் அறிமுகமாகிறது.

3 months 2 weeks ago

இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம், 
அரசியலில் அறிமுகமாகிறது.

கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த தமிழ்நாட்டின் ("தமிழகம்" நன்றி பிஜோபி யின் தமிழ்நாட்டு ஏஜண்டு ஆளுனர் ரவி) முண்ணணித் திரைப்பட நடிகர் விஜை அவர்களை இந்திய நடுவண் அரசின் அமுலாக்கல்துறை (அதாவது வருமானங்கள் தொடர்பான கண்காணிப்புத்துறை) அதிகாரிகள் வரவழைத்து விசாரணைக்குப் பின்பு  அனுப்பிவிட்டார்கள் என்பது நினைவிருக்கும்.

அந்த விசாரணையில் கணக்குக்காட்டாத வருமானம், அவ்வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடுகள் தொடர்பாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தங்களுக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்திசெய்த பின்னரே அனுப்பியிருந்தார்கள்.

அந்த விசாரணையில் சில பல உண்மைகளைத் தெரிந்துகொண்ட அமுலாக்கல்துறை எதிர்காலத்தில் தேவைப்படுவதற்காக அவற்றை ஆவணப்படுத்தியும் வைத்திருப்பார்கள் என்பது புலனாய்வுபற்றிய அரிவரிப்பாடம் மட்டும் தெரிந்தவர்களுக்கே  சாதாரணமாக மனதில்படும்.

ஆனால் "விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளோ" எங்கள் தளபதி கறைபடாத கைகளையுடையவர் ஆகவே அவரை எந்தக்கொம்பனாலும் அசைக்கமுடியாது என ஊளையிட்டார்கள்.

இன்னுமொருபுறத்தில் விஜைக்கு இப்படியான விசாரணையும் தேவைப்பட்டது தவிர ஆளும் ப ஜ க அரசுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமிர்த்ஸா அவர்களுக்கும் தேவைப்பட்டது.
காரணம் தங்கள் சொல்லுக்கு ஆடக்கூடிய ஒரு கைப்பாவை முகவும் செல்வாக்கனவராக இருக்கவேண்டும் அவர் மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் உணரப்படவேண்டும் இந்த மிஸ்டர் கிளீன் எனும் பிம்பத்தை நாம் தான் அவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என ப ஜ க மிகவும் துல்லியமாகத் திட்டம் போட்டது. அதன்மூலம் விஜையது விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளுக்கு அண்மையானவர்களது ஆதரவும் கூடும் எனும் கணக்கிடல்மூலம் தனது அரசியல் சதுரங்கத்தை தமிழ்நாட்டில் ஆரம்பிக்க உருட்டும் பகடக்காயாக விஜை உருவாக்கப்பட்டார்.

இந்திய உபகண்டத்தில் பல்வேறு மாநினங்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தில் மிகவும் முன்னிலையில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும் அபரிமிதமான முதலீடுகளும் கல்வி முதலீடுகளும் தொழில்நுட்ப அறிவாற்றலும் செறிந்துகாணப்படுவதும் தவிர சகிப்புத்தன்மை ஒருங்கிணைவு ஆகியவற்றில் ஓரளவு முன்னேற்றமுடையதும் முக்கியமாக ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கும் உள்ளகக் கட்டமைப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நிர்வகிப்பதும் ப ஜ வுக்கும் அவர்களை முண்டுகொடுக்கும் வடநாட்டு மார்வாடிகளுக்கு எரிச்சலூட்டும் விடையம் தவிர எப்போது இந்தக் கனிந்தபழம் தங்கள் கைகளுக்கு வந்துசேரும் எனும் கனவில் வாழும் அவர்களது காதுகளுக்குத் தேன்வார்க்கச் சிறுகச் சிறுகத் திட்டமிட்டு நடாத்தப்படும் அரசியல் சதுரங்கத்தின் ஓரங்கம்தான் விஜை அவர்களது அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு.

இப்பெயர் ஒன்றும் விஜையது மூளையிலிருந்து உதித்ததல்ல இதை ப ஜ க ஏஜண்டு ஆளுனர் ரவியின் வாயிலிருந்து உதித்த "தமிழகம்" எனும் வார்த்தை எச்சத்தில்தான் இப்பெயர் கருவுற்றது. தனது கணக்குக்காட்டாத பணவருவாயின் தகிடுதித்தங்களை இன்றுவரைக்கும் மறைத்த நடுவண் அரசின் எஜமானர்களுக்குத் தனது விசுவாசத்தின் ஒரு பகுதியாவது காட்ட தனது கட்சியின் பெயரின் ஒருபகுதியிலாவது அவர்களது எச்சிலை இட்டு நிரப்புவது ஒன்றும் ஆச்சரியமில்லையே!

"தமிழக வெற்றிக் கழகம்" அறிவிப்பு வந்தாச்சு.

இந்த அறிவிப்பு எப்போ வந்திருக்கு! அப்போ இப்போ என்றிருந்த நடிகர் விஜயகாந் அவர்கள் காலமாகிக் கடைசிநாள் காரியம் முடிந்த கையுடன் வந்திருக்கு. மண்ணுக்குள் புதைத்த வரது உடலை கரையான் மற்றும் இன்னபிற நுண்கிருமிகள் உள்நுளைந்து டீகொம்போஸ் பண்ண ஆரம்பித்தனவோ இல்லையோ அதற்கும் இந்தாபிடி ஒரு விருது எனக்கொடுத்து அவர்களது கட்சியின் தொண்டர்களைக் குசியாக்கி " ஆமா இவைங்களை என்னமோண்ணு அநியாயத்துக்கும் நினைச்சோமே, ஆனா இவைங்க அநியாயத்துக்கும் நியாயமானவங்களா இருக்காங்களே" என தொண்டர்கள் மூக்கில விரலை வைக்க, இதுதாண்டா தருணம் என ஆரம்பிங்கடா கச்சேரியை என விஜையை உசுப்பிவிட்டாச்சு.

அந்தக்கையோடு நாம் தமிழர் கட்சியை உண்டு இல்லை என ஆக்குறம் அவர்களுக்கு இருக்கும் ஆதரவுத்தளத்தை அசைத்து இந்தப்பக்கம் திருப்புறம் எனச்சொல்லி அமூலாக்கல்துறை நாம்தமிழர்களது இரண்டாம் நிலைத்தலைவர்களது வீடுகளுக்கு சோதனைசெய்ய உள்நுழைந்துள்ளது.

இதில் என்ன வேடிக்கை என்றால் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களில் கணிசமானவர்கள் சீமானது நாம்தமிழர் ஆட்சியில் ஈழம் வெல்லலாம் எனக் கனவுப்பால்குடித்து மேற்படி இரண்டாம் நிலைத்தலைவர்களுடன் தாம் வாழும் நாடுகளிலிருந்து தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆபத்து அவசரத்துக்கு காசு உதவி மற்றும் காதுகுத்து, குலசாமிக்கு மொட்டையடிப்பு ஆகியவற்றுக்கு  "சப்றைஸ்" பரிசுப்பொட்டலங்கள் பணமுடிச்சுகள் அனுப்பி தாங்களும் குதூகலமாகி அவர்களையும் குதூகலப்படுத்து கடைசியில கூமுட்டையாகிவிடும் கோஸ்டிகளால் இப்போ இந்த இரண்டாம் கட்ட தலைகளுக்கு ஆபத்து வந்துவிட்டது.

திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் போதை கடத்தல் கும்பல்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் தமிழர்கள் என கலந்துகட்டி ஒரு பட்டியலே இருக்கு, இக்கும்பலில் முன்னாள் போராளிக்குழுக்கலிள் இருந்தவர்களும் உள்ளார்கள் ஏன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அக்கும்பலில் உள்ள அனைவரும் (யார் சிங்களவர் இஸ்லாமியர் புலிகள்தவிர்ந்த தமிழர்கள்) விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய சிறப்பி முகாமுக்குள்(?) இருந்து போதைப்பொருள் கடத்துகிறார்கள் அதன்மூலம் ஆயுதங்கள் கடத்தத் திட்டமிடுகிறார்கள் கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள் அவர்களை மத்திய புலனாய்வுக்குழு விசாரணை வளையத்துக்குள் கைது செய்துள்ளது (?) எனப் பத்திரிகைகளில் கண்டமேனிக்கு வதந்திபரப்பும் இந்தப் புலனாய்வுப்புலிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம்தமிழர்களது ரசிகப்பெருமக்களைப் புலிகளது ஏஜண்டு எனப் பெயர் சூட்டினால் நம்ம சனம் நம்பும்தானே (அத்துதானே நம்பாம")

அப்போ தமிழ்நாட்டின் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விஜையை வைத்து இன்னுமொரு அங்குலம் நெருங்கியாச்சு. அப்போ விஜையது அரசியல் எதிர்காலம்?

அவர்தானே நாடாளுமன்றத் தேர்தல் எனது குறி இல்லை 2026 சட்டசபைத் தேர்தலில் நான் குதிக்கப்போகிறென் எனச்சொல்லிப்போட்டார்.

மார்வாடிகளது கைகளுக்கு பொருளாதாரம் போகவேண்டுமெனில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் அப்போ யார் ப ஜ கவின் கைத்தடியோ அவர்தார் முதல்வர். சிலவேளை ட்ரில்லியன் டாலர் கைக்கு எட்டும்போது அண்ணாமலைக்கு வசசுபோய் நடைபயணம்போகமுடியாத அளவுக்கு உடல் நிலை சீரற்றதாக இருக்கலாம் இருக்கவே இருக்கிறது இன்னுமொரு  மலை.

நாடாளுமன்றத் தேர்தலில் விஜையது ஆசீர்வாதத்தில் பி ஜெ பி கணிசமான வாக்குகளை அள்ளினால். வரப்போகும் சட்டசபைத்தேர்தலில் விஜை கட்சியின் இரண்டாம் நிலைத் தலைகளது வீடுகளுக்குள் அமூலாக்கத் துறையை அனுப்பினால் அலுவர் முடிந்துவிடும். 

விஜையது பணத்தில் ஒரு சினிமா ரசிகன் எப்படி அரசியல் கட்சியின் தொண்டனாக மாறி மக்கள் முன்பு வாக்குகள் சேர்க்கவேண்டும் எனும் பயிற்சியை முடித்துப் பட்டம்பெற்ற இரண்டாம் நிலைத்தலைவர்கள் பி ஜே பியினுடன் இணைந்தால் சட்டமன்றத்தேர்தலில் விஜை பி ஜே பி சொன்னதைச் செய்யத்தான் வேண்டும்.

அமூலாக்கல்துறை இருக்கும்மட்டும் எங்களுக்குத் திருவிழா. 

விஜை அரசியலில் வெல்வாரா? இல்லை மூழ்குவாரா?

இதைப்பற்றி யோசிக்கும்போது திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது நினைவிருக்கு,

அவரது (நடிகர் சத்தியராஜ்) வீட்டுக்கும் அமூலாக்கல்துறைச் ச்சோதனையை நடத்திவிட்டால் போச்சு என.

கதையோட கதையாக இந்திய உழவுத்துறையது கைகளுக்குள் புலம்பெயர் தேசமொன்றில் வாழும் ஒரு பெண்ணும் நாம் தமிழர் கட்சியுடன் கருத்துவேறுபாடுகொண்டுள்ளதால் அகப்பட்டுள்ளார். 

கொஞ்சம் பொறுங்கோ யாரோ கதவைத்தட்டினம் அமூலாக்கல்துறையாக இருக்கப்போகிறது.

இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம்,  அரசியலில் அறிமுகமாகிறது.

3 months 2 weeks ago
இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம், அரசியலில் அறிமுகமாகிறது. கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த தமிழ்நாட்டின் ("தமிழகம்" நன்றி பிஜோபி யின் தமிழ்நாட்டு ஏஜண்டு ஆளுனர் ரவி) முண்ணணித் திரைப்பட நடிகர் விஜை அவர்களை இந்திய நடுவண் அரசின் அமுலாக்கல்துறை (அதாவது வருமானங்கள் தொடர்பான கண்காணிப்புத்துறை) அதிகாரிகள் வரவழைத்து விசாரணைக்குப் பின்பு அனுப்பிவிட்டார்கள் என்பது நினைவிருக்கும். அந்த விசாரணையில் கணக்குக்காட்டாத வருமானம், அவ்வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடுகள் தொடர்பாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தங்களுக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்திசெய்த பின்னரே அனுப்பியிருந்தார்கள். அந்த விசாரணையில் சில பல உண்மைகளைத் தெரிந்துகொண்ட அமுலாக்கல்துறை எதிர்காலத்தில் தேவைப்படுவதற்காக அவற்றை ஆவணப்படுத்தியும் வைத்திருப்பார்கள் என்பது புலனாய்வுபற்றிய அரிவரிப்பாடம் மட்டும் தெரிந்தவர்களுக்கே சாதாரணமாக மனதில்படும். ஆனால் "விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளோ" எங்கள் தளபதி கறைபடாத கைகளையுடையவர் ஆகவே அவரை எந்தக்கொம்பனாலும் அசைக்கமுடியாது என ஊளையிட்டார்கள். இன்னுமொருபுறத்தில் விஜைக்கு இப்படியான விசாரணையும் தேவைப்பட்டது தவிர ஆளும் ப ஜ க அரசுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமிர்த்ஸா அவர்களுக்கும் தேவைப்பட்டது. காரணம் தங்கள் சொல்லுக்கு ஆடக்கூடிய ஒரு கைப்பாவை முகவும் செல்வாக்கனவராக இருக்கவேண்டும் அவர் மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் உணரப்படவேண்டும் இந்த மிஸ்டர் கிளீன் எனும் பிம்பத்தை நாம் தான் அவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என ப ஜ க மிகவும் துல்லியமாகத் திட்டம் போட்டது. அதன்மூலம் விஜையது விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளுக்கு அண்மையானவர்களது ஆதரவும் கூடும் எனும் கணக்கிடல்மூலம் தனது அரசியல் சதுரங்கத்தை தமிழ்நாட்டில் ஆரம்பிக்க உருட்டும் பகடக்காயாக விஜை உருவாக்கப்பட்டார். இந்திய உபகண்டத்தில் பல்வேறு மாநினங்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தில் மிகவும் முன்னிலையில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும் அபரிமிதமான முதலீடுகளும் கல்வி முதலீடுகளும் தொழில்நுட்ப அறிவாற்றலும் செறிந்துகாணப்படுவதும் தவிர சகிப்புத்தன்மை ஒருங்கிணைவு ஆகியவற்றில் ஓரளவு முன்னேற்றமுடையதும் முக்கியமாக ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கும் உள்ளகக் கட்டமைப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நிர்வகிப்பதும் ப ஜ வுக்கும் அவர்களை முண்டுகொடுக்கும் வடநாட்டு மார்வாடிகளுக்கு எரிச்சலூட்டும் விடையம் தவிர எப்போது இந்தக் கனிந்தபழம் தங்கள் கைகளுக்கு வந்துசேரும் எனும் கனவில் வாழும் அவர்களது காதுகளுக்குத் தேன்வார்க்கச் சிறுகச் சிறுகத் திட்டமிட்டு நடாத்தப்படும் அரசியல் சதுரங்கத்தின் ஓரங்கம்தான் விஜை அவர்களது அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு. இப்பெயர் ஒன்றும் விஜையது மூளையிலிருந்து உதித்ததல்ல இதை ப ஜ க ஏஜண்டு ஆளுனர் ரவியின் வாயிலிருந்து உதித்த "தமிழகம்" எனும் வார்த்தை எச்சத்தில்தான் இப்பெயர் கருவுற்றது. தனது கணக்குக்காட்டாத பணவருவாயின் தகிடுதித்தங்களை இன்றுவரைக்கும் மறைத்த நடுவண் அரசின் எஜமானர்களுக்குத் தனது விசுவாசத்தின் ஒரு பகுதியாவது காட்ட தனது கட்சியின் பெயரின் ஒருபகுதியிலாவது அவர்களது எச்சிலை இட்டு நிரப்புவது ஒன்றும் ஆச்சரியமில்லையே! "தமிழக வெற்றிக் கழகம்" அறிவிப்பு வந்தாச்சு. இந்த அறிவிப்பு எப்போ வந்திருக்கு! அப்போ இப்போ என்றிருந்த நடிகர் விஜயகாந் அவர்கள் காலமாகிக் கடைசிநாள் காரியம் முடிந்த கையுடன் வந்திருக்கு. மண்ணுக்குள் புதைத்த வரது உடலை கரையான் மற்றும் இன்னபிற நுண்கிருமிகள் உள்நுளைந்து டீகொம்போஸ் பண்ண ஆரம்பித்தனவோ இல்லையோ அதற்கும் இந்தாபிடி ஒரு விருது எனக்கொடுத்து அவர்களது கட்சியின் தொண்டர்களைக் குசியாக்கி " ஆமா இவைங்களை என்னமோண்ணு அநியாயத்துக்கும் நினைச்சோமே, ஆனா இவைங்க அநியாயத்துக்கும் நியாயமானவங்களா இருக்காங்களே" என தொண்டர்கள் மூக்கில விரலை வைக்க, இதுதாண்டா தருணம் என ஆரம்பிங்கடா கச்சேரியை என விஜையை உசுப்பிவிட்டாச்சு. அந்தக்கையோடு நாம் தமிழர் கட்சியை உண்டு இல்லை என ஆக்குறம் அவர்களுக்கு இருக்கும் ஆதரவுத்தளத்தை அசைத்து இந்தப்பக்கம் திருப்புறம் எனச்சொல்லி அமூலாக்கல்துறை நாம்தமிழர்களது இரண்டாம் நிலைத்தலைவர்களது வீடுகளுக்கு சோதனைசெய்ய உள்நுழைந்துள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களில் கணிசமானவர்கள் சீமானது நாம்தமிழர் ஆட்சியில் ஈழம் வெல்லலாம் எனக் கனவுப்பால்குடித்து மேற்படி இரண்டாம் நிலைத்தலைவர்களுடன் தாம் வாழும் நாடுகளிலிருந்து தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆபத்து அவசரத்துக்கு காசு உதவி மற்றும் காதுகுத்து, குலசாமிக்கு மொட்டையடிப்பு ஆகியவற்றுக்கு "சப்றைஸ்" பரிசுப்பொட்டலங்கள் பணமுடிச்சுகள் அனுப்பி தாங்களும் குதூகலமாகி அவர்களையும் குதூகலப்படுத்து கடைசியில கூமுட்டையாகிவிடும் கோஸ்டிகளால் இப்போ இந்த இரண்டாம் கட்ட தலைகளுக்கு ஆபத்து வந்துவிட்டது. திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் போதை கடத்தல் கும்பல்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் தமிழர்கள் என கலந்துகட்டி ஒரு பட்டியலே இருக்கு, இக்கும்பலில் முன்னாள் போராளிக்குழுக்கலிள் இருந்தவர்களும் உள்ளார்கள் ஏன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அக்கும்பலில் உள்ள அனைவரும் (யார் சிங்களவர் இஸ்லாமியர் புலிகள்தவிர்ந்த தமிழர்கள்) விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய சிறப்பி முகாமுக்குள்(?) இருந்து போதைப்பொருள் கடத்துகிறார்கள் அதன்மூலம் ஆயுதங்கள் கடத்தத் திட்டமிடுகிறார்கள் கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள் அவர்களை மத்திய புலனாய்வுக்குழு விசாரணை வளையத்துக்குள் கைது செய்துள்ளது (?) எனப் பத்திரிகைகளில் கண்டமேனிக்கு வதந்திபரப்பும் இந்தப் புலனாய்வுப்புலிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம்தமிழர்களது ரசிகப்பெருமக்களைப் புலிகளது ஏஜண்டு எனப் பெயர் சூட்டினால் நம்ம சனம் நம்பும்தானே (அத்துதானே நம்பாம") அப்போ தமிழ்நாட்டின் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விஜையை வைத்து இன்னுமொரு அங்குலம் நெருங்கியாச்சு. அப்போ விஜையது அரசியல் எதிர்காலம்? அவர்தானே நாடாளுமன்றத் தேர்தல் எனது குறி இல்லை 2026 சட்டசபைத் தேர்தலில் நான் குதிக்கப்போகிறென் எனச்சொல்லிப்போட்டார். மார்வாடிகளது கைகளுக்கு பொருளாதாரம் போகவேண்டுமெனில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் அப்போ யார் ப ஜ கவின் கைத்தடியோ அவர்தார் முதல்வர். சிலவேளை ட்ரில்லியன் டாலர் கைக்கு எட்டும்போது அண்ணாமலைக்கு வசசுபோய் நடைபயணம்போகமுடியாத அளவுக்கு உடல் நிலை சீரற்றதாக இருக்கலாம் இருக்கவே இருக்கிறது இன்னுமொரு மலை. நாடாளுமன்றத் தேர்தலில் விஜையது ஆசீர்வாதத்தில் பி ஜெ பி கணிசமான வாக்குகளை அள்ளினால். வரப்போகும் சட்டசபைத்தேர்தலில் விஜை கட்சியின் இரண்டாம் நிலைத் தலைகளது வீடுகளுக்குள் அமூலாக்கத் துறையை அனுப்பினால் அலுவர் முடிந்துவிடும். விஜையது பணத்தில் ஒரு சினிமா ரசிகன் எப்படி அரசியல் கட்சியின் தொண்டனாக மாறி மக்கள் முன்பு வாக்குகள் சேர்க்கவேண்டும் எனும் பயிற்சியை முடித்துப் பட்டம்பெற்ற இரண்டாம் நிலைத்தலைவர்கள் பி ஜே பியினுடன் இணைந்தால் சட்டமன்றத்தேர்தலில் விஜை பி ஜே பி சொன்னதைச் செய்யத்தான் வேண்டும். அமூலாக்கல்துறை இருக்கும்மட்டும் எங்களுக்குத் திருவிழா. விஜை அரசியலில் வெல்வாரா? இல்லை மூழ்குவாரா? இதைப்பற்றி யோசிக்கும்போது திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது நினைவிருக்கு, அவரது (நடிகர் சத்தியராஜ்) வீட்டுக்கும் அமூலாக்கல்துறைச் ச்சோதனையை நடத்திவிட்டால் போச்சு என. கதையோட கதையாக இந்திய உழவுத்துறையது கைகளுக்குள் புலம்பெயர் தேசமொன்றில் வாழும் ஒரு பெண்ணும் நாம் தமிழர் கட்சியுடன் கருத்துவேறுபாடுகொண்டுள்ளதால் அகப்பட்டுள்ளார். கொஞ்சம் பொறுங்கோ யாரோ கதவைத்தட்டினம் அமூலாக்கல்துறையாக இருக்கப்போகிறது.

அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

3 months 2 weeks ago
விஜய்க்கு நாமல் வாழ்த்து புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், ‘தமிழக வெற்றி கழகம்’ என அதனை பதிவு செய்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதனை கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளார். இதனை நடிகர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/290370

கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய

3 months 2 weeks ago
02 FEB, 2024 | 07:53 PM முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை. இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார். இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர். இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175418

கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய

3 months 2 weeks ago
02 FEB, 2024 | 07:53 PM
image

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1)  குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார்.

இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175418

யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம் விபரம் - https://www.dai

3 months 2 weeks ago
யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம் விபரம் - https://www.dailyceylon.lk/79553 Daily Ceylon channel on WhatsApp: https://rb.gy/0b3k5 #SriLanka #lka #dailyceylon #dailyceylonnews #news #NewsUpdate #NewsAlert #SriLanka #hotnews #LatestNews Daily Ceylon · யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம்