அரசியல் அலசல்

எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்!

1 month 4 weeks ago

எதிர்க்கட்சிகளின் பலவீனமும்

அரசாங்கத்தின் அணுகுமுறையும்!

*தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேசும் திட்டம் வகுக்கப்படுகிறதா?

*எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும்

*ரணில் – மகிந்த ஊழல் - மக்கள் போராட்ட முன்னணியின் கருத்து நியாயமானது...

------ -----

அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது.

இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார்.

அதேபோன்று --

மக்கள் போராட்ட முன்னணியும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது.

அதாவது --

இலங்கைத்தீவை ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுக்கு உள்ளாக்கிய முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பது அவர்களின் வாதமாக உள்ளது.

மக்கள் போராட்ட முன்னணியின் மறுப்பில் நியாயம் உள்ளது.

ஏனெனில் --

ரணில், சஜித், ராஜபக்ச என்ற அரசியல் தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள் முன்னர் ஆளும் கட்சியாக இருந்தபோது ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அரசியல் - பொருளாதாரம் ஆகியவற்றுக்கு கேடுவிளைவித்தனர்.

பொருளாதார நெருக்கடி எழுவதற்கும் இவர்களது கட்சிகளின் 76 வருட ஆட்சிதான் காரணம். இன முரண்பாட்டுக்கு உரிய தீர்வு ஏற்படாமல் வெறுமனெ இனவாதம் பரவுவதற்கும் இவர்கள் தான் காரணம்...

இப் பின்னணியில் ---

மக்கள் போராட்ட முன்னணி அவர்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்பது நியாயமானது. அவர்களுடைய அரசு எதிர்ப்பு போராட்டமும் தனித்துவமானது.

ஆனால் --

சஜித், ரணில், ராஜபக்ச என்ற தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள், தமக்குள் முரண்பட்டுக் கொண்டு அநுர அரசாங்கத்தை எதிர்க்க முடியாது. மக்களுக்கும் இக் கட்சிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சிகள் - ஊழல்கள் தெரியும்.

இப் பின்னணிகளை தமக்குச் சாதகமாக்கி, 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' என்ற புதிய அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதா இல்லையா என்ற இரு வகையான அணுகுமுறைகளுடன் அநுர அரசாங்கம் புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருகின்றது.

இந்த நிலையில் --

பிரதான எதிர்க்கட்சிகள் தமது பலவீனத்தை மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றன.

ஆனாலும், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விடயத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக சஜித், ரணில், மகிந்த ஆகியோர் ஏறத்தாள அநுர அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகும் தன்மை உண்டு.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் கடந்த வாரம் முதல் கோர ஆரம்பித்துள்ளன.

ஆனாலும் ---

இந்தக் கோரிக்கை பலமானதாக இல்லை.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளை தம் பக்கம் எடுக்கக் கூடிய முறையில் சும்மா ஒப்பாசாரத்துக்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையாகவே இதனை அவதானிக்க முடியும்.

இப்பின்னணியில் --

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான மையமாக விளங்கும் ஜேவிபி கொழும்பில் தொடராக நடத்தி வரும் உரையாடலில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுத்திருப்பதாக தெளிவாக தெரிகிறது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலமான மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரினாலும், கொழும்பை மையமாக் கொண்ட, எதிர்தரப்பு சிங்கள அரசியல் கட்சிகள் அதற்கு பெரிய அளவில் ஆதரவு வழங்கும் சாத்தியம் இல்லை என்பது, ஜேவிபிக்கும் தெரியாமல் இல்லை.

புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண முடியும் என ஜேபிவி பலமாக நம்புகிறது.

அநுர அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வரும் அதேநேரம், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி பெரிய அளவில் அவர்கள் அச்சம் கொண்டதாக கூற முடியாது.

ஆனால் --

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் மேலும் ஒத்திவைப்பது குறித்தே அதிகளவில் அவர்கள் சிந்திக்கின்றனர்.

இந்த விவகாரங்கள் உள்ளிட்ட ஒரு வருட ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் மிகத் தீவிரமாக உரையாடுகின்றனர்.

அதேநேரம் --

தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வகுக்கும் தமிழர் தரப்பு நிலைப்பாடுகள் பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர்.

குறிப்பாக -

தமிழ்த் தேசியக் கட்சிகள் தவிர்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசும் திட்டம் ஒன்று ஜேவிபியிடம் இருப்பதாக தெரிகிறது.

அதேநேரம் --

கடந்த செப்ரெம்பரில் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற உரையாடலின் தொடர்ச்சியாக மற்றொரு உரையாடலை நடத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் பிரதிநிதிகள் என்ற ஒரு கட்டமைப்பை தமக்கு ஏற்ற மாத்திரி உருவாக்கும் திட்டமும் இருப்பதாக அறிய முடிகிறது.

ஆனாலும் --

சுவிஸ்லாந்தில் நடந்த உரையாடலில் பங்குபற்றிய தமிழ்த்தரப்பின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது என ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் தெளிவாக கூறுகின்றனர்.

இதன் காரணமாக சுவிஸ்லாந்திலோ அல்லது வேறொரு நாட்டிலோ மற்றொரு சந்திப்புக்கு அதாவது விரிவான உரையாடலுக்கு அநுர அரசாங்கம் இணங்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூற முடியாது.

ஆனாலும் --

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், புதிய யாப்பு எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் ஏற்பாடும் அடுத்த ஆண்டு சூடு பிடிக்கும் என ஜேபிவி தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியளிக்காமல் பிசுபிசுக்குமானால், அநுர அரசாங்கத்தின் மேற்படி இரண்டு அணுகு முறைகளும் 2026 ஆம் ஆண்டு வெற்றியளிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன.

குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் புதிய யாப்பு அதாவது 'ஏக்கிய இராச்சிய' என்ற அந்தக் கதை நீடித்துச் செல்லக் கூடிய சூழலும், அதன் மூலம் தமிழரசுக் கட்சி தமது செல்வாக்கை நிலை நிறுத்தக் கூடிய வாய்ப்பும் உண்டு.

புதிய யாப்பு விவகாரம் குறித்து தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அத்துடன் --

வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர் தரப்பு பேசி வருவதை தடுக்கும் திட்டங்களும் வடக்கு கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் மூலம் காய் நகர்த்தப்பட்டு வருகிறது.

ஜெனிவா மனித உரிமை சபையின் தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றி வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்தில் உள்ள தூதுவரை சந்தித்து உரையாடியுள்ளார்.

தமது கட்சி சார்பில் வடக்கு கிழக்கில் எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் செல்வாக்கு இழந்து வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறது.

சர்வதேச மட்டத்தில் இப் பிரச்சாரம் மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது. வத்திக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் பவுல் றிச்சார்ட் கல்லேகர் (Paul Richard Gallagher) எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தரவுள்ள இரகசியத்தின் பின்னணியும் இதுதான்.

அதாவது --

இலங்கைத்தீவு மக்கள் ஒற்றுமையாக ஓர் அணியில் நிற்கிறார்கள், போருக்குப் பின்னரான சூழலில் மீள் நல்லிணக்கம் உறுதியாகிவிட்டது என்ற இறுதிச் செய்தி உலகத்துக்குப் போய் சேரும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு

2 months ago

உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு

October 31, 2025

உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு

— ராஜ் சிவநாதன் —

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரில் வெளியான ஒரு பதிவு பலரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துகள் உண்மையை பிரதிபலித்தன. அவர் வடக்கில் மீண்டும் ஒரு போர் தேவையில்லை என்றும், மாகாண சபை (PC) அமைப்பு தமிழர்கள் தாமே விரும்பிய ஒன்றாகும் என்றும் கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த அமைப்பில் குறைகள் இருந்தால் அவை திருத்தப்பட வேண்டும் என்றும், தேவையான முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, அநுரகுமார திசநாயக்க தெளிவாகவே 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவேன் என்று உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை மறுபடியும் வலியுறுத்தினார். வெளிநாடுகளில் உரையாற்றும் போதும், “மாகாண சபை அமைப்பு தமிழர்களின் இரத்தத்தால் பெற்றது” என்றும் தெரிவித்தார்.

ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் வெற்று ஒலிகளாக மாறிவிட்டன. 

1987ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அரசும் போல, மாற்றத்தின் பெயரில் மறைமுகமான அரசியல் மந்தநிலை மீண்டும் தோன்றியுள்ளது. அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான வாக்குறுதிகளை வழங்கியபோதிலும், NPP நிர்வாகம் அவற்றை அமைதியாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தவிர்ப்பின் முறைமை:

ஜனாதிபதி மற்றும் அவரது அரசு உண்மையில் தமிழ் பிரச்சினையைத் தீர்க்க விரும்பியிருந்தால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். சட்ட வடிவம் உள்ளது, முன்னுதாரணங்கள் உள்ளன, தேவையும் மிகுந்தது. ஆனால் பதவியேற்று பதினைந்து மாதங்கள் ஆன பிறகும், அரசு காரணங்களையே கூறுகிறது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குறைந்தபட்சம் இரண்டு மாகாண சபைகளை மீண்டும் செயல்படுத்தும் வாய்ப்பு இருந்தபோதும், “வரையறைச் சிக்கல்கள்” மற்றும் “அமைவுச் சட்ட திருத்தம்” போன்ற காரணங்களின் பெயரில் தப்பித்துக் கொண்டது.

இதன்மூலம் மைய அரசு, புறநிலப் பகுதிகளுடன் நம்பிக்கையை மீண்டும் உருவாக்கும் அரிய வாய்ப்பை இழந்துவிட்டது. மாகாண மட்டத்தில் அதிகாரத்தை வழங்கியிருந்தால், அது ஜனநாயகப் பங்குபற்றலை உண்மையில் ஊக்குவித்திருக்கும். ஆனால் தாமதம், NPPயின் அரசியல் நடைமுறை முன்னோடிகளிடமிருந்து வேறுபடவில்லை என்பதையே நிரூபித்துள்ளது.

மறைந்திருக்கும் அமைவுச் சட்ட நோக்கம்:

அரசின் தயக்கத்திற்குப் பின்னால் இன்னொரு காரணம் மறைந்திருக்கலாம். NPP மற்றும் JVP வட்டாரங்களில் புதிய அமைவுச் சட்டம் உருவாக்கப்படுவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த அமைவுச் சட்டம் 13ஆம் திருத்தத்தை நீக்கவோ அல்லது அதன் அதிகாரங்களை குறைக்கவோ வாய்ப்புள்ளது.

அதன் அரசியல் தர்க்கம் எளிமையானது, ஆனால் சூழ்ச்சியானது: தற்போதைய 13A சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், அந்த அமைப்பு சட்டபூர்வமாக வலுப்பெறும்; பின்னர் அதை ரத்து செய்வது கடினமாகிவிடும்.

ஆகையால் தேர்தல்களை தவிர்ப்பது அரசின் திட்டமிட்ட அரசியல் உத்தி. 13A அமைப்பை செயலிழந்த நிலையிலேயே வைத்திருந்து, புதிய அமைவுச் சட்டத்தின் கீழ் அதிகாரத்தை கொழும்பில் மையப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறது. இதன்மூலம் NPP, “பகுத்தறிவான நிர்வாக முறைமை” என்ற பெயரில் அதிகாரப் பகிர்வை குறைக்கும் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது. 

JVPயின் நெறி சுமை:

இந்த முரண்பாடு JVPயின் அரசியல் வளர்ச்சியின் மையத்தையே வெளிப்படுத்துகிறது. ஒருகாலத்தில் மாகாண சபை அமைப்பை “வெளிநாட்டு தலையீடு” என்று குற்றம்சாட்டிய அதே இயக்கம், காலப்போக்கில் அதிலிருந்தே அரசியல் பலன் பெற்றது. அதன் பல தலைவர்கள் 13A மூலம் உருவாக்கப்பட்ட மாகாண அரசியல் அமைப்புகளின் வழியே உயர்ந்தனர்.

இப்போது அதே அமைப்பை தகர்ப்பது, அவர்கள் சொந்த வரலாற்றையும், சமாதானத்திற்காக போராடியவர்களின் தியாகத்தையும் மறுப்பதாகும்.

தெற்கு மாகாணங்கள் மாகாண சபை அமைப்பை நிராகரிக்க விரும்பினாலும், வடக்கு மற்றும் கிழக்கில் அந்த அமைப்பு செயல்படுவதற்கான அரசியல் மற்றும் நெறி பொறுப்பு JVPக்கு உண்டு. உண்மையான சமரசம் சமநிலையற்ற முடிவுகளை வேண்டுகிறது — அரசியல் சுகமான இடங்களில் அல்ல, மிகத் தேவையான இடங்களில் சுயாட்சியை வழங்கும் தைரியம் தேவை.

ஒருமைப்பாட்டுக்கான தவறவிட்ட வாய்ப்பு:

அதிகாரப் பகிர்வு என்ற கருத்து இலங்கைக்கே புதிதல்ல. உலகின் பல ஜனநாயக நாடுகளில், ஐரோப்பாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் தொடங்கி, உள்ளூராட்சி நிர்வாகமே திறம்பட செயல்படும் ஆட்சியின் முதுகெலும்பாக உள்ளது. ஆனால் இலங்கை, ஒவ்வொரு முடிவையும் மையத்திலிருந்து கட்டுப்படுத்த முயல்வதன் மூலம் செயற்திறனையும் நம்பிக்கையையும் இழந்துவிட்டது.

NPPக்கு அந்த கதைநடையை மாற்றும் வாய்ப்பு இருந்தது, இடதுசாரி அரசு கூட பொறுப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, சட்டப் பூர்வ வாக்குறுதிகளை மதிக்கும் ஆட்சியை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க. ஆனால் அது சீர்திருத்தத்தின் சவாலை விட கட்டுப்பாட்டின் வசதியையே தேர்ந்தெடுத்தது.

முடிவுரை:

தமிழ் சமூகமும் அரசும் இடையிலான நம்பிக்கையின் சிதைவு ஒரே இரவில் நிகழவில்லை. அது பல தசாப்தங்களாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மீறலாலும் அரசியல் சூழ்ச்சிகளாலும் உருவானது. இப்போது NPP அதே பட்டியலில் தன்னைச் சேர்த்துக் கொள்வதற்கான அபாயத்தில் உள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைத்து, 13ஆம் திருத்தத்தை குறைக்கும் புதிய அமைவுச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம், அரசு ஆட்சியை நவீனப்படுத்துவது அல்ல, நம்பிக்கையின்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

உண்மையான தலைமையேனும் கடந்த வாக்குறுதிகளை மதித்து, நிலவும் சட்டத்தின் கீழ் தேர்தல்களை நடத்தி, உரையாடலின் வழியே ஒருங்கிணைந்த நிர்வாகத்தை உருவாக்குவதாக இருக்கும். அது நிகழும்வரை, “புதிய அரசியல் பண்பாடு” என்ற வாக்குறுதி இலங்கையின் நிறைவேறாத சீர்திருத்த வரலாற்றில் இன்னொரு வெற்று கோஷமாகவே இருக்கும்.

https://arangamnews.com/?p=12407

மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…

2 months ago

மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…

1.jpg?resize=1200%2C550&ssl=1

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒன்றிணைந்து தயாரித்துள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினால் மன்னார் தீவின் மக்களும் அதன் உயிரியல் சமூகமும் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அனைத்து காற்றாலை திட்டங்களும்  மின்வலு உற்பத்தியை இலக்காகக் கொண்ட ஆய்வுகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன. மன்னார் தீவில் வாழும் மக்களின் எதிர்கால இருப்பு அல்லது உயிரியல் சமூகத்தின் இருப்பு, போன்று மன்னார் தீவிலுள்ள  நிலப்பரப்பின் இயற்கையான தன்மை அல்லது அதன் தற்போதைய தேசிய திட்டங்களின் தன்மை குறித்து எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை.

கடன் உதவி வழங்குவதை முன்னுரிமையாகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மன்னார் தீவை பசுமை எரிசக்தியின் மையமாக மாற்றுவதற்குத் தேவையான ஆராய்ச்சி அறிக்கைகளை தயாரித்தது. மேலும், மன்னார் தீவின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை திறந்து விடுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இங்கே நிலையான எரிசக்தியைப் பொறுத்தவரை ஆசிய அபிவிருத்தி வங்கி நீதியான நிலைமாற்றம் என்ற கொள்கையில் (Just transition) எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்பது ஒரு பெரிய குறையாகும். எனவே, மன்னார் தீவானது காற்றாலை மின்சக்தி மூலம் நிலைபெறுதகு வலு மையமாக மாற்றப்படும்போது, அங்கு வசிக்கும் மீனவ சமூகங்களுக்கு, மீன்பிடி வளங்களுக்கு,விவசாய சமூகத்திற்கு, விவசாய நிலங்களுக்கு மற்றும் அதன் இயற்கை தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. அதுமட்டுமன்றி, மன்னார் தீவின் உயிரியல் சமூகம் குறித்த சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தாமல், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி பல திட்டங்களை தயாரித்துள்ளது.

நிலைபெறுதகு வலுவுடன் தொடர்புடைய நீதியான நிலைமாற்றுக்கொள்கையை மீறுதல்

நிலைபெறுதகு வலு மற்றும் அதோடு இணைந்த நியாயமான மாற்றம் என்பது நிலைபெறுதகு வலுவிற்காக மாற்றம் பெறும்போது, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும், இடம்பெயர்விற்கு உட்படும் மற்றும் உரிமைகள் மீறப்படும் சமூகங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், நியாயம் மற்றும் நீதியை உறுதி செய்வதும், வழமைக்கு மாறான மற்றும் பாதகமான தாக்கங்களைத் தவிர்ப்பதுமாகும். மேலும், முடிவெடுக்கும் பொறிமுறையின் மையத்தில் பாதிக்கப்படும் அனைத்து தரப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படல் வேண்டும்.

இது பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு எண்ணக்கருவாகும். 2015 டிசம்பர் 12ஆம் திகதி பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் 21ஆவது மாநாட்டில் 196 உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை 2016 செப்டம்பர் 21ஆம் திகதி அங்கீகரித்த ஒரு நாடு என்ற வகையில், அதில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த நீதியான நிலைமாற்றத்திற்கான கருத்தியல் கொள்கைக்கு இலங்கை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைக்கப்பட்ட மாநாட்டின் 26ஆவது மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இணங்க, நீதியான நிலைமாற்றத்திற்கான பொதுவான கொள்கைகளின் தொகுப்பு  வெளியிடப்பட்டது. அதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல தரப்பு அபிவிருத்தி வங்கிகள், காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் நீதியான நிலைமாற்றத்திற்கான கொள்கைகளை நிலைநிறுத்துவதாக உறுதியளித்துள்ளன.

ஆனால், இலங்கை நிலைபெறுதகு வலுவை நோக்கி நகரும் போது, நிலைபெறுதகு வலு அதிகார சபையோ அல்லது மின்சார சபையோ இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மேலும், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்றுவதற்கு கடன் உதவி வழங்கும் போது ஆசிய அபிவிருத்தி வங்கி இதில் கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவாக, மன்னார் தீவு மக்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

மன்னார் தீவின் வாழ்வியல் மற்றும் இயற்கை வளங்களை அழிக்கும் நிலைபெறுதகு வலு அதிகார சபையின் திட்டம்

நிலைபெறுதகு வலு அதிகார சபை மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவித்தன் பின்னர், இந்த மக்களைப் பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் முதலீட்டாளர்களின் கவனம் ஈரக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு 35ஆம் இலக்கத்துடைய இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை சட்டத்தின் துணைப் பிரிவு 12(1) இன் படி வெளியிடப்பட்ட 2014 ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதியிட்ட இலக்கம் 1858/2 வர்த்தமானி அறிவிப்பின் மூலம், மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மன்னார் தீவின் 76.11 சதுர கிலோமீட்டர்கள் சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் தீவின் மொத்த நிலப்பரப்பு சுமார் 143.21 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அதன்படி, தீவின் மொத்த நிலப்பரப்பில் 53 சதவீதம் சக்தி மேம்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிப்பதில், நிலைபெறுதகு வலு அதிகார சபை இந்தத் தீவைப் பற்றிய பல உண்மைகளைத் தவிர்த்துவிட்டது. மன்னார் தீவின் மக்கள் தொகை சுமார் 66,087 ஆகும். இங்கு 1,7835 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதுடன், சுமார் 12,840 வீடுகள் உள்ளன. பெரும்பாலான தீவுவாசிகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏராளமான மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் இரண்டிலும் ஈடுபட்டுள்ளனர். மன்னார் தீவு வட மாகாணத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடிப் பிரதேசமாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு சராசரி மீன் அறுவடை சுமார் 17,500 மெட்ரிக் டொன் ஆகும்.

மன்னார் தீவின் மக்களைத் தவிர சதுப்புநில காடுகள், உப்பு சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த காடுகள், கடலோர தாவர சமூகங்கள் மற்றும் மணல் திட்டுக்கள் போன்ற பல இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இந்த இயற்கை சுற்றுச்சூழல் தொகுதிகள் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மன்னார் தீவுடன் தொடர்புடைய ஆழமற்ற கடல் பகுதியில் உள்ள கடல் புற் தரைகள், சேற்றுப் படுகைகள், பவளப்பாறைகள், மணல் கரைகள் மற்றும் பாறை சுற்றுச்சூழல் தொகுதிகள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மன்னார் தீவின் தென்கிழக்கு விளிம்பில் உள்ள உப்புச் சதுப்பு நிலம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் தொகுதிகள் வங்காலை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 4839 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த சரணாலயம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(2) இன் படி, 2008 செப்டம்பர் 8ஆம், திகதியிட்ட 1566/2008 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈரநில சரணாலயத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் தொகுதிகளின் பெறுமதி காரணமாக,1971 பிப்ரவரி 2ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட, 1990 ஜூன் 15ஆம் திகதி அன்று பங்குதாரரான இலங்கை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகள் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ரம்சார் மாநாட்டின்படி, 2010 ஜூலை 10ஆம் திகதி அன்று 4839 ஹெக்டேயர் கொண்ட வங்காலை சரணாலயம் நாட்டின் 4ஆவது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ரம்சார் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

9.jpg?resize=665%2C481&ssl=1

மஞ்சல் நிறத்தில் – புலம்பெயர்ந்த பறவைகள் மன்னாருக்குள் உள்நுழைந்து பறக்கும் பாதை (பறவைகளின் வலசை).

இந்த சரணாலயத்துடன் தொடர்புடைய மன்னார் தீவின் களப்பு மற்றும் பாரிய ஆழமற்ற கடல் பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(1) துணைப்பிரிவிற்கமைய 2016 மார்ச் 1ஆம்,  திகதியிடப்பட்ட 1956/13 என்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 29180 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட விடத்தல்தீவு இயற்கை வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் தீவின் வடமேற்கு முனையில் கண்டல் தாவரம், சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த புதர்க்காடுகள், மணல் திட்டுகள் மற்றும் ஆழமற்ற கடல் கடற்கரை ஆகியவற்றின் ஒரு பெரிய பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2(2) துணைப்பிரிவுக்கு அமைய 2015  ஜூன் 22ஆம், திகதியிட்ட1920/03 என்ற வர்த்தமானி அறிவிப்பின்படி 18,990 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட ஆதாமின் பாலம், கடல்சார் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்த கடல்சார் தேசிய பூங்கா மற்றும் இயற்கை வனமானது 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் வேலைத்திட்டங்களின் நிதி உதவியுடன் கீழ் வட மாகாணத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் (Integrated Strategic Environmental Assessment the Northern Province of Sri Lanka) அறிவிக்கப்பட்டுள்ளது.

நில பயன்பாட்டுக் கொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் 2019 அறிக்கையின்படி, மன்னார் தீவில் 914 ஹெக்டேயர் உப்பு சதுப்பு நிலங்களும், 25 ஹெக்டேயர் சதுப்பு நிலக் காடுகளும் உள்ளன. மேலதிகமாக, சுமார் 1050 ஹெக்டேயர் முற் காடுகள் உள்ளன. இவற்றுடன், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் ஆழமற்ற கடலில் வாழும் மீன், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகும். மீன்பிடி சமூகம் மற்றும் மீன்பிடித் தொழிலின் வாழ்வாதாரம் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்துள்ளது.

மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையில் சுமார் 20 கரவலை மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்தத் துறைமுகங்கள் அனைத்தும் மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின் கீழ் எரிசக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கும்போது இது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.

மீன்பிடி தொழிலுடன் மேலதிகமாக, விவசாயமும் இந்தத் தீவில் நடைமுறையில் உள்ளது. காய்கறிகள், வேர்க்கடலை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட குறுகிய கால பயிர் சாகுபடி இந்தத் தீவில் பரவலாக உள்ளது. அதனைத் தவிர தீவுவாசிகள் பனை தொழில் தொடர்பான பல வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வகையில், மக்களின் வாழ்வியல் கட்டியெழுப்பியுள்ள மன்னார் தீவு மக்களுக்கு, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை வழங்குவதற்காக பல நீண்டகால திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, 1978ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட நகர்ப்புற அபிவிருத்திச் சட்டத்தின் இலக்கம் 41 இன் படி, 1993 மார்ச் 22ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 759/1 இல், முழு மன்னார் தீவையே நகர்ப்புற மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 8(அ)இன் படி, மன்னார் மேம்பாட்டுத் திட்டம் 2021 – 2030 தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 2021 ஜூலை 13ஆம்  திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 2236/24  ஊடாக இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவு வலயப்படுத்தப்பட்டு, தெற்கு கடற்கரை நிலைபேறுதகு வலு திட்டங்களுக்காகவும், வடக்கு கடற்கரை மீன்பிடித் தொழிலின் மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வகையிலான பயன்பாடுகளைக் கொண்ட மக்களின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுடன் கூடிய ஒரு தீவில், பெரிய நிலப்பரப்பை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம், அதன் இயற்கை தொகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைவதுடன், மக்களின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் சரிவதால் வறுமை அதிகரிக்கும் என்பதையும் நிலைபெறுதகு வலு அதிகாரசபை உணரவில்லை என்பது வருந்தத்தக்கது. காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் சரியான முறை என்பதை முழு சமூகமும் அறிந்த உண்மையாக இருப்பினும், அதை நடைமுறைப்படுத்தும் போது ஒட்டுமொத்த தொகுதியும் சேதமடைந்து பாதிக்கப்பட்டால், அந்த நிலைபெறுதகு எரிசக்தியை உருவாக்குவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை நிலைபெறுதகு வலு அதிகார சபை உணரவில்லை. எனவே, அதிகார சபை இந்தத் தீங்கு விளைவிக்கும் நிலையான எரிசக்தி உற்பத்தித் திட்டங்கள் காரணமாக, மன்னார் தீவு மக்களும் அதன் உயிரியல் சமூகமும் பாதகமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.

சர்வதேச உடன்படிக்கைகளை மீறி மன்னார் தீவின் மக்களின் வாழ்வியலையும், வாழ்வாதாரத்தையும்  அழித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பசுமை எரிசக்தி மேம்பாடு மற்றும் எரிசக்தி திறன் முதலீட்டு திட்டத்தின் (Green Power Development and Energy Efficiency Improvement Investment Program)கீழ் 2012ஆம் ஆண்டு தயாரித்து முன்மொழியப்பட்ட மன்னார் தீவு காற்றாலைப் பூங்கா (Proposed Wind Park in Mannar Area) அறிக்கை ஊடாக மன்னார் தீவு முழுவதும் காற்றாலைப் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு 375 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 100 மெகாவாட்டை கொண்ட ‘தம்பபவனி’ காற்றாலை திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 157 மில்லியன் டொலர் பணத்தை கடனாக வழங்குவதற்காக 2017ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, மன்னார் தீவில் 375 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் வலியுறுத்தியது.

இந்த அறிக்கைகளைத் தயாரிப்பதில், ஆசிய அபிவிருத்தி வங்கி பல சர்வதேச உடன்படிக்கைகளை மீறியுள்ளது. 1971 பெப்ரவரி 2ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ராம்சார் உடன்படிக்கை, 1979 ஜூன் 23ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான ‘பொன்’ மாநாடு மற்றும் 2015 டிசம்பர் 12ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச சட்டக் கொள்கையான முன்னெச்சரிக்கை கொள்கையை (Precautionary Principle) கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆசிய அபிவிருத்தி வங்கியின் முதற்கட்ட ஆய்வுகள், சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் கடன் உதவி ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட ‘தம்பபவனி’ காற்றாலைப் மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான உயர் மின்னழுத்த மின் பரிமாற்றக் கம்பி அமைப்பு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒப்பந்தங்களின்படி வங்காலை சர்வதேச ரம்சார் ஈரநிலம் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.

1983 முதல் இதுவரை இலங்கை பறவைகள் சங்கம் நடத்திய ஆய்வுகளின்படி, மன்னார் தீவின் தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள வங்காலை சரணாலயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் மன்னார் தீவின் முழு ஈரநில அமைப்பிலும் சுமார் 2 மில்லியன் கடலோர புலம்பெயர்வு ஈரநில பறவைகள் (Shorebirds) உள்ளன.

சர்வதேச ஈரநில அமைப்பு (Wetland iInternational) ஊடாக 2009ஆம் ஆண்டில் வெளியிட்ட “Status of Waterbirds in Asia, Results of the Asian Waterbirds Census, 1987-2007” அறிக்கையின்படி,  நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஈரநிலப் பறவைகளைக் கொண்ட முக்கிய பிரதேசங்களில் ஒன்றாக மன்னார் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு சைபீரியாவிலிருந்து மில்லியன் கணக்கான குளிர்கால புலம்பெயர்வு பறவைகள் மத்திய ஆசிய கண்டத்தை நோக்கி பறக்கும் பாதையான (Central Asian Flyway) வழியாக இலங்கைக்கு வருகின்றன, மேலும் அவற்றில் ஏராளமானவை மன்னார் தீவு வழியாக நாட்டிற்குள் நுழைகின்றன, இது இந்த புலம்பெயர்ந்த பறவைகள் தொடர்ச்சியாக பறக்கும் போது முதல்  நிறுத்தமாகும். இத்தகைய தனித்துவமான தீவில் ஒரு காற்றாலை மின் நிலைய அமைப்பின் கட்டுமானம் இந்த புலம்பெயர்ந்த பறவைகளின் பாதைகளை முற்றிலுமாகத் தடுத்து, அவற்றின் உணவுத் தளங்களைச் சீரழித்துள்ளது. குளிர்காலத்தைத் தவிர்க்க மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஆர்க்டிக்கிலிருந்து அண்டார்டிக்கிற்கு இடம்பெயர்ந்த இந்தப் பறவைகள், காற்றாலைகள் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் தங்கள் தாயகத்தை இழந்துவிட்டன. இவ்வளவு பாரிய அழிவுகரமான திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ரம்சார் உடன்படிக்கைகளை மீறுவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி பொறுப்பிலிருந்து விடுபட முடியாது.

3.png?resize=490%2C333&ssl=1

வடக்கு சைபீரியாவிலிருந்து மத்திய ஆசிய பறவைகள், புலம்பெயர் பாதை வழியாக குளிர்கால புலம்பெயர்வுப் பறவைகள் இலங்கைக்கு வரும் விதம்

4.jpg?resize=665%2C404&ssl=1

இலங்கைக்கு மேற்கு பாதை வழியாக பறந்து வரும் புலம்பெயர்ந்த பறவைகள் மன்னார் தீவு வழியாக நாட்டிற்குள் நுழைகின்ற விதம்.

அதனைத்தவிர உலகின் எட்டு வகையான கடல் ஆமைகளில் மூன்று வகைகள், மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலோர பிரதேசத்தில் முட்டையிடும். அதாவது, தோணி ஆமை அல்லது பச்சைக் கடல் ஆமை (Chelonia Mydas), அழுங்கு ஆமை (Eretmochelys Imbricata) மற்றும் ஒலிவநிறச்  சிற்றாமை (Lepidochelys Olivacea) ஆகும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்தத் தீவின் தெற்கு கடற்கரையில் 12.5 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ‘தம்பபவனி’ மின் உற்பத்தி நிலையத் திட்டம், இந்த கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமைகளின் எண்ணிக்கையில் விரைவான சரிவுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு பல காரணங்கள் பங்களித்துள்ளதாக எங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவு முழுவதும் காற்றாலைகளின் தொடர்ச்சியான இரைச்சல் மற்றும் இந்தப் பிரதேசத்தின் வெளிச்சம் போன்றவையுடன், காற்றாலைகளை அணுக கடற்கரையோரத்தில் உள்ள 14 கி.மீ நீளமான வீதிகளின் காரணத்தால் ஆமைகள் முட்டையிடும் பிரதேசங்களைக் தடுத்து துண்டு துண்டாகப் பிரிக்கின்றன. இந்த நிலைமைகள் காரணமாக, ஆமைகள் முட்டையிட இந்தக் கடற்கரையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குளிர்காலத்தைத் தவிர்க்க புலம்பெயர்ந்து செல்லும் பறவைகள் மற்றும் முட்டையிட வரும் ஆமைகளின் வாழ்விடத்தை இழக்க காரணமாக அமையும் காற்றாலைப் மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான கடன் உதவியைத் தயாரித்து வழங்குவதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, புலம்பெயர்ந்த காட்டு விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ‘பொன்’ உடன்படிக்கையை மீறியுள்ளது.

‘தம்பபவனி’ காற்றாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில், காற்றாலை டர்பைன்கள் மற்றும் அவற்றை இணைக்கும் பாதை அமைப்பை உருவாக்க உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் கழிமுகங்களைக் கொண்ட தடாகங்கள், அத்துடன் அவற்றை கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் ஆகியவை நிரப்பப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வட கிழக்கு பருவமழைக் காற்று டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மன்னார் தீவு அதிக மழையைப் பெறும் போது கால்வாய்கள் மற்றும் களப்புகள் வழியாக மழைநீரின் இயற்கையான ஓட்டம் தடைப்படுவதால், சுற்றியுள்ள கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கும். கடந்த சில ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தீவுவாசிகள் குடிநீர் உள்ளிட்ட அன்றாட நீர் தேவைகளுக்கு கிணறுகளையே நம்பியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பிறகு இந்தக் கிணறுகளை மீட்டெடுப்பதற்கான செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தங்களுக்கு மேலதிகமாக, காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து மீனவ சமூகத்தினரை தடுக்கின்றன என்பதையும் எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அதற்கமைய, ‘தம்பபவனி’ காற்றாலை திட்டம் மன்னார் தீவு மக்கள் தங்கள் விருப்பமான இடத்தில்  வாழ்வதற்கும், எந்த பாதிப்பும் இல்லாமல் ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கும் உள்ள சுதந்திரத்தை பறித்துள்ளது. இது பாரிஸ் காலநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி, நிலைமாற்றுக் கொள்கையை மீறுவதாகும். ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இந்தப் பொறுப்பிலிருந்தும் விலக முடியாது.

புலம்பெயர்ந்த பறவைகளின் புலம்பெயர்வுப் பாதைகளில் காற்றாலைகள் ஏற்படுத்தும் சாத்தியமான தாக்கங்கள், கடலோர ஈரநிலப் பறவைகளின் உணவுப் பரப்பில் ஏற்படும் தாக்கம் மற்றும் தீவு மக்களின் வாழ்வியலில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி தயாரித்த சாத்தியக்கூறு ஆய்வுகளில் இருந்து ‘தம்பபவனி’ திட்டம் விடுபட்டுள்ளது. சுற்றுச்சூழலின் தொடர்ச்சியான இருப்பைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி செயல்முறையின் பாதகமான தாக்கங்களையும் கணிப்பதிலும், அவற்றுக்கான மாற்று அல்லது தணிப்பு முறைகள் அல்லது இழப்பீட்டு முறைகளைத் தயாரிப்பதிலும் முன்னெச்சரிக்கை கொள்கை முக்கியமானது. இந்தக் கொள்கையை 1992ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ரியோ மாநாட்டில் ரியோ பிரகடனத்தின் கொள்கை 15 என ஐக்கிய நாடுகள் சபை விளக்கியுள்ளது.

கடுமையான அல்லது மீளமுடியாத தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதைத் தாமதித்தல், மூலதனப் பற்றாக்குறை, முழு அறிவியல் தீர்ப்பு இல்லாமை அல்லது தகவல் இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையில் எந்தத் தணிப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்கக்கூடாது என்று அது கூறுகிறது, ஏனெனில், அவை 1998ஆம் ஆண்டு முன்னெச்சரிக்கை கொள்கை குறித்த விங்ஸ்ப்ரெட் மாநாட்டில் இந்தக் கொள்கைக்கு ஒரு பரந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த விளக்கத்தின்படி, ஒரு செயல்பாடு மனித ஆரோக்கியத்திற்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்போது, காரண-விளைவு உறவு அறிவியல் ரீதியாக முழுமையாக நிறுவப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த சூழலில், ஒரு செயல்பாட்டின் ஆதரவாளர் பொதுமக்களை விட ஆதாரத்தின் சுமையைச் சுமக்க வேண்டும். முன்னெச்சரிக்கை கொள்கையை செயல்படுத்தும் செயல்முறையில் திறந்த தகவல் அமைப்புடன்  ஜனநாயகமாக இருக்க வேண்டும், மேலும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரின் பங்கேற்பையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு முழு அளவிலான மாற்று வழிகளையும் ஆராய்வதும் இதில் அடங்கும். இதைத் தவிர்ப்பதன் மூலம், ஆசிய அபிவிருத்தி வங்கி இயற்கை அமைப்புகளின் உயிர்வாழ்வையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது.

1966 ஆம் ஆண்டு முதல் இந்நாட்டிற்கு கடன்களை வழங்கி வரும் ஆசிய அபிவிருத்தி வங்கி, அதன் தொடக்கத்திலிருந்து 2024ஆம் ஆண்டு இறுதி வரை 522 திட்டங்களுக்கு சுமார் 12.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளது, மேலும், எரிசக்தி துறையில் 57 திட்டங்களுக்கு கடன்களை வழங்கிய ஒரு அபிவிருத்தி வங்கியாக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் எதிர்கால இருப்புக்கு சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளது. நாட்டின், மக்களின் எதிர்கால இருப்பையும் இயற்கை வளங்களையும் அழிக்க இதுபோன்ற தவறுகளைச் செய்ய அவர்களால் முடியாது. காரணம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலையான இருப்பு இந்த நாட்டு மக்களின் உழைப்பு, வரிகள் மற்றும் இயற்கை வளங்களின் இருப்பைப் பொறுத்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின்படி மன்னார் தீவு மக்களின் வாழ்வியலை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு பணயம்வைத்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், மன்னார் தீவில் முதல் காற்றாலை மின் நிலைய திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2017ஆம் ஆண்டில் பொதுமக்களின் கருத்துகளுக்காக திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 56 காற்று டர்பைன் நிறுவப்பட உள்ளன.  இருப்பினும், இலங்கை பறவைகள் சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் அழுத்த செயன்முறைகளும், தொழில்நுட்ப கருத்துகளின் அடிப்படையில், தோட்டவெளி முதல் பாலாவி வரையிலான 12.5 கி.மீ நீள கடற்கரையில், கடற்கரையிலிருந்து 150 முதல் 160 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தலா 3.45 மெகாவாட் திறன் கொண்ட 30 காற்றாலை டர்பைன்கள் மூலம் 103.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மன்னார் தீவில் தோட்டவெளி, துள்ளுக்குடியிருப்பு மற்றும் கட்டுகாரன்குடியிருப்பு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 2017 நவம்பர் 22ஆம் திகதியன்று கையெழுத்தானது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு டொலர் மில்லியன் 256.7 ஆகும். இது ஆரம்ப திட்டத்தை விட அதிகம். எனவே, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனும், மீதமுள்ள 56.7 டொலர் மில்லியன் இலங்கை மின்சார சபையிலிருந்தும் வழங்கப்பட்டு இந்தத் திட்டத்தின் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ‘தம்பபவனி’ என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதியன்று திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்கள் டென்மார்க் காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸால் வழங்கப்பட்டது.

1.jpg?resize=665%2C354&ssl=1

மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் கட்டப்பட்ட ‘தம்பபவனி’ காற்றாலை திட்டத்தின் டர்பைன்கள்

ஆரம்பத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ சுமார் 1.5 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நேரத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தக் காற்றாலை டர்பைன்கள் அணுக 14 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான வீதியை அமைப்பதற்காக தீவின் தெற்கு கடற்கரையில் ஒரு பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், கட்டுமானத்தின் போது களப்பை (சிறு கடல்)  கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் தடுக்கப்பட்டுள்ளன. இது மழைநீர் வடிகால் பொறிமுறையை முழுமையாக அடைத்து வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், ஆழமற்ற கடலில் இருந்து முட்டையிடுவதற்காக களப்புக்கு வரும் மீன் இனங்கள், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்க செயல்முறையையும் மோசமாகப் பாதித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் ஆழமற்ற நீரில் மீன் அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக தீவில் உள்ள சிறு மீன்பிடி சமூகத்தினர் குறிப்பிட்டனர்.

காற்றாலை டர்பைன்களை உருவாக்குதல், பாதை அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய கட்டமைப்புடன் மின்சாரத்தை இணைக்கும் உயர் மின்னழுத்த மின் இணைப்பு அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக மன்னார் தீவின் மக்கள் தெற்கு கடற்கரையின் பெறுமளவு நிலத்தை  இழந்துள்ளனர். இதன் காரணமாக, மக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின் அடிப்படையில் வேறு பல திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

“மன்னார் காற்றாலை மின் திட்டம் – கட்டம் 1 – தொடர்ச்சி”க்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, பொதுமக்களின் கருத்துகளுக்காக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, 21 காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக ஒவ்வொரு காற்றாலை டர்பைனுக்கும் 6.63 ஏக்கர் என்ற வகையில் 139 ஏக்கர்  நிலமும், காற்றாலை டர்பைன்களை இணைக்க 11.5 கிலோ மீற்றரும், வீதிகளை நிர்மாணிப்பதற்காக 43 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 182 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தீர்மானானது.  இந்தத் திட்டத்திற்காக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையின் தென்கிழக்கு கடற்கரையையும், கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் உள்நாட்டுப் பகுதியையும் பயன்படுத்த உள்ளது.

அதைனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் காற்றாலை எரிசக்தி திட்டம் மன்னார் – கட்டம் 111” என்ற பெயரில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்களின் கருத்துகளுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, அதானி பசுமை எரிசக்தி இலங்கை லிமிடெட் எனும் நிறுவனத்தால் 420 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டமாக செயல்படுத்த திட்டமிட்டது.

தலா 5.2 மெகாவாட் திறன் கொண்ட 52 காற்றாலை டர்பைன்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், இந்தத் திட்டத்தின் காற்றாலை டர்பைன்கள் மன்னார் தீவின் மையத்திலும் வடக்கு கடற்கரையிலும் நிறுவப்பட  திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு டர்பைனை நிறுவ தோராயமாக 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது.  அதன்படி, இந்த முழு திட்டத்திற்கும் 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதலீட்டு நிறுவனம் கடந்த காலங்களில் கடுமையான சர்ச்சைக்கு உள்ளானது. ஆனாலும், அந்த வேலைத்திட்டத்தை இன்னும் பட்டியலில் இருக்கிறது.

இதற்கிடையில், மன்னார் தீவில் 4 காற்றாலை டர்பைன்கள் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மன்னார் தீவில் இந்தக் காற்றாலைகள் ஏற்படுத்தும் பாரிய தாக்கம் காரணமாக, சமீபத்திய நாட்களில் இதற்கெதிராக பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது.

இந்தத் திட்டம், ராஜகிரிய, நாவல, கல்பொத்த பாதை, எண் 66 இல் அமைந்துள்ள லீஜ் கேபிடல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் (Liege Capital Holding Pvt Ltd) முதலீட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இது Ceylex Renewables Pvt Ltd என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் தொடர்புகளுடன் Windscape Mannar எனும் துணை நிறுவனத்தால் செயல்படுத்துகிறது. இதற்காக, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கியிடமிருந்தும் 6.5 பில்லியன் ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவை ஒப்புதல்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, மேலும், அரச நிறுவனங்களால் இது குறித்த தகவல்களையும் பெற முடியவில்லை. எனினும் தொடர்புடைய வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

துரிதப்படுத்தப்படும் ஹேலிஸ் நிறுவனத்தின் சட்டவிரோத காற்றாலை திட்டம்

இதற்கிடையில், ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் (Hayleys Fentons Limited) மன்னார் தீவில் 50 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இது 50 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் என்றும், மின்சார சபைக்கு ஒரு யூனிட் மின்சாரம் 4.65 சதம் டொலருக்கு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியன்று எரிசக்தி அமைச்சகத்தில் கையெழுத்தானது என்றும், 2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு தயாராகி வருகிறது. இதற்காக, ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனத்தின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனமான ஹேவிண்ட் வன் கம்பெனி லிமிடெட் (HayWind One Limited) திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகி  வருகிறது. இது ஹேலிஸ் (Hayleys PLC) நிறுவனத்திற்கு முழு உரித்துமுள்ள துணை நிறுவனமாகும். இந்தத் திட்டம் 10 காற்றாலை டர்பைன்களைக் கொண்டுள்ளதுடன், கட்டுமானம் தொடங்கிய 18 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக மன்னார் தீவில் சுமார் 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியேற்படும். மேலும், நுழைவாயில் வீதிகளை தயார் செய்வதற்காக  30 ஏக்கருக்கும் அதிகமான நிலமும் கையகப்படுத்தப்பட நேரிடும்.

6.jpeg?resize=665%2C263&ssl=1

காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட மின்சாரத்தை வாங்குவதற்கு ஹேலிஸ் நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால், இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையோ அல்லது சுற்றுச்சூழல் ஒப்புதலோ வெளியிடப்படவில்லை. அமைச்சரவை முடிவுகள் தொடர்பான அறிக்கைகளை ஆராயும்போது அத்தகைய ஒப்புதல் வழங்கப்பட்டதற்கான எவ்வகையான ஆதாரமும் இல்லை. இவ்வாறு இருக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த அடிப்படையில் மின்சார சபையுடன் மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம், மன்னார் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் காற்றாலை மின் உற்பத்தி நிலையப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை ஒரு மாத காலம் தாமதப்படுத்தியதுடன், பிரச்சினைகளைத் தீர்க்கவும் முயற்சி செய்யப்பட்டது. இந்நடவடிக்கையானது இந்தத் திட்டம் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. அது மட்டுமல்லாது, அவர்கள் சரியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அல்லது ஒப்புதல் இல்லாமல் அதை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கான அமைச்சரவை ஒப்புதலை பொதுமக்களிடமிருந்து மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிகிறது. இந்த உண்மைகள் அனைத்திலும் இந்தத் திட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே குறிக்கிறது.

2.jpg?resize=665%2C469&ssl=1

மன்னார் தீவை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைப் மின் நிலையங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையங்கள் (தீவின் தெற்கு கடற்கரையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.)

மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்பான சட்ட கட்டமைப்பு

மன்னார் தீவைச் சுற்றி பெரிய கடலோரப் பிரதேசத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தால், காற்றாலைப் மின் நிலைய கட்டுமானத்தை மேற்கொள்ளும்போது 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்கச் சட்டத்தின்  இறுதி திருத்தமான, 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டமும் ஒரு முக்கிய காரணியாகும். இந்தச் சட்டத்தின்படி, கடலோர பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் துறையின் ஒப்புதல் அவசியம். இந்தச் சட்டத்தின்படி, கடலோரப் பிரதேசம் என்பது நிலத்தை நோக்கிய சராசரி உயர் அலைக் கோட்டிலிருந்து 300 மீட்டர் வரம்பிற்கும், கடல் நோக்கிய சராசரி குறைந்த அலைக் கோட்டிலிருந்து 2 கிலோமீட்டர் வரம்பிற்கும் உள்ள பிரதேசத்தைக் குறிக்கிறது. ஒரு நதி, வாய்க்கால், களப்பு அல்லது கடலுடன் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலையின் விடயத்திலும் நிலத்தை நோக்கிய வரம்பு அவற்றின் இயற்கையான நுழைவுப் புள்ளிக்கும் அத்தகைய நதி வாய்க்கால் மற்றும் குளம் அல்லது கடலுடன் இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலைக்கும் இடையில் வரையப்பட்ட நேரான அடித்தளத்திற்கு செங்குத்தாக அளவிடப்படும் 2 கிலோமீட்டர் வரம்பிற்கும், மேலும் எல்லை பூஜ்ஜிய சராசரி கடல் மட்டத்திலிருந்து எல்லையில் நிலத்தை நோக்கி நூறு மீட்டர் நீடித்து மேலதிகமான வரம்பு உள்வாங்கப்படும்.

இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 14(1)க்கு அமைவாக, இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டதை தவிர, கடலோர பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படக்கூடாது.  துணைப்பிரிவு 16(1)க்கு அமைவாக  துணைப்பிரிவு 14(1)க்கு கீழ் அனுமதிகளை வழங்குவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையைப் பார்ப்பதற்கு வலியுறுத்தும் அதிகாரம் உள்ளது.

26 அ உறுப்புரைக்கு அமைய, கடலோரப் பிரதேசம் அல்லது அதன் வளங்களுக்கு சேதம் விளைவிக்கும் அல்லது சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் நிறுத்த அதிகாரம் உள்ளது. மேலும், அது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், ஒரு நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் விண்ணப்பத்தின் பேரில் தொடர்புடைய செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரமும் அதற்கு உள்ளது. அந்த உத்தரவை பின்பற்றத் தவறினால், ஒரு நாளைக்கு ரூ. 10,000 அபராதம் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படலாம்.

மேலும், மன்னார் தீவின் கடலோர பிரதேசத்திற்கு வெளியே உள்ள நிலப்பரப்பில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிக்கும்போது,  2000ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். இந்தச் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்ட 1993 ஜூன் 24 திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 772/22 இன் படி, ஒரு ஹெக்டேயருக்கு மேல் பரப்பளவிலான வன நிலத்தை வனம் அல்லாத நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு முன்பு அல்லது 50 மெகாவாட்டுக்கு மேல் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். மேலும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வங்காலை சரணாலயம், மன்னார் தீவின் தென்கிழக்கு எல்லையில் அமைந்திருப்பதால், தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின்படி வெளியிடப்பட்ட 1995ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 859/14 இற்கு அமைவாக, ஒரு சரணாலயத்தின் எல்லைக்குள் அல்லது அதற்குள் உள்ள எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் முதலில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதலைப் பெற வேண்டும்.

தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் துணைப்பிரிவு 23அஅ இன் கீழ் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு, ஒரு நபர், சட்டத்தின் பிரிவு உறுப்புரை 31 இன் கீழ் ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ரூ. 15000 க்கு குறையாத அபராதம் அல்லது 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இரண்டு தேசிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் ஆதாம் பாலம் கடல்சார் தேசிய பூங்கா ஆகியவை மன்னார் தீவின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளதால், காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதில் இந்தச் சட்டத்தின் சட்ட விதிகளும் கவனத்தில் கொள்வது முக்கியமானவை. 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்ட, 1937ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவுகள் 9அ (1) மற்றும் (2) இன் படி, தேசிய வனத்தின் எல்லையிலிருந்து ஒரு மைலுக்குள் எந்தவொரு மேம்பாட்டு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன் வனவிலங்கு பணிப்பாளரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்படல் வேண்டும். அவ் ஒப்புதலானது  தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறை மூலம் பெறப்படல் வேண்டும்.

5.png?resize=665%2C854&ssl=1

அதிக எண்ணிக்கையிலான கரையோரப் பறவைகளைக் கொண்ட பிரதேசங்கள்

இந்தக் கட்டளைகளுக்கு மேலதிகமாக, திருத்தப்பட்ட 1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 43அ மற்றும் 47 இன் உறுப்புரைகளுக்கு அமைய, 2000ஆம் ஆண்டு அக்டோபர் 04ஆம் திகதியிட்ட 1152/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட 2000ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க திட்ட நடைமுறைகளின் ஆணைக்கு இணங்கவும், ஒரு ஹெக்டேயருக்கு மேல் உள்ள பிரதேசங்களின் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் தொல்பொருள் சேத மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் தொல்பொருள் ஒப்புதலும் பெறப்படல் வேண்டும்.

இந்தச் சட்டத்திட்டங்களையும் கட்டளைகளையும் மீறி காற்றாலைகள் அமைப்பது பல சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது. மேலும், சட்டத்தின் ஆட்சியையும் மன்னார் தீவு மக்களின் அடிப்படை உரிமைகள் பலவற்றையும் மீறியுள்ளது.

காற்றாலைகள் மன்னார் மக்களின் உரிமைகளைப் பறிக்கின்றன

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் VI ஆம் அத்தியாயத்தில் உள்ள கொள்கைகள் மற்றும் அடிப்படைக் கடமைகளை நிர்வகிக்கும் அரசின் கொள்கையின் துணைப் பிரிவின் உறுப்புரை 27(14) இன் படி, “அரசாங்கம் மக்களின் நலனுக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், அதனை மேம்படுத்த வேண்டும்.” அதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்தவும், சுற்றுச்சூழலின் உயிர்வாழ்வைப் பாதிக்காத முடிவுகளை எடுக்கவும் கடமைப்பட்டுள்ளன. மேலும், இந்த அத்தியாயத்தின் கீழ் துணைப்பிரிவு 28(ஈ) இன் படி, இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது ஒவ்வொரு இலங்கையரினதும் கடமையாகும். அதன்படி, ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தலையிடவும், அந்த நோக்கத்திற்காக சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த அரசு நிறுவனங்களை வழிநடத்தவும், பாதுகாப்பிற்கான சட்டங்களை அமுல்படுத்தவும், சேதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது.

இருப்பினும், மன்னார் தீவில் காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்தும்போது நிலையான எரிசக்தி அதிகார சபையோ  அல்லது மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையோ அல்லது கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களமோ அரசியலமைப்பில் உள்ள இந்த விடயங்களில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அப்படி இருந்திருந்தால், இந்தக் காற்றாலை மின் நிலையங்களால் ஈரநில அமைப்புகளும் மன்னார் தீவின் மக்களும் இவ்வளவு துயரமான விதியை சந்தித்திருக்க மாட்டார்கள்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 12ஆவது பிரிவுக்கு அமைய, அத்தியாயம் மூன்றின் கீழ் அடிப்படை உரிமைகளைக் கையாள்கிறது, சட்டத்தின் பிரகடனம் மற்றும் செயல்படுத்தல் மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். 14ஆவது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம், சட்டபூர்வமான வேலை வாய்ப்பில் ஈடுபடும் சுதந்திரம், தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடும் சுதந்திரம் மற்றும் ஒருவர் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகள் காற்றாலைத் திட்டங்களால் மன்னார் தீவின் மீனவ சமூகத்தினரிடமிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றாலைகள் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதில், பொதுமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன, உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன, இந்தத் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, கடற்கரை நுழைவாயில்கள் தடைபட்டதால் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, காற்றாலைகள் சுழற்சியால் உருவாக்கப்பட்ட சத்தம், அதிர்வு மற்றும் தொடர்ச்சியான நிழல்கள் காரணமாக அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலத்தில் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளால் தீவு வெள்ள அபாயத்தை எதிர்கொள்கிறது, இது அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரத்தையும் இழக்க வழிவகுத்துள்ளது.

1955ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை உள்ள ஒரு நாடாக, நமது நாடு 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பொறுப்புடமை கொண்டுள்ளது. அந்தப் பிரகடனத்தின் 3ஆவது உறுப்புரைக்கு அமைய அனைவருக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 7ஆவது உறுப்புரைக்கு அமைய சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், எந்த பாகுபாடும் இல்லாமல் சட்டத்தின் பாதுகாப்பிற்கு உரிமை உண்டு என்றும் கூறுகிறது. 13ஆவது உறுப்புரைக்கு அமைய ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டின் எல்லைக்குள் வசிப்பதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 17ஆவது உறுப்புரைக்கு அமைய, ஒவ்வொருவருக்கும் தனியாகவும் மற்றவர்களுடன் கூட்டாகவும் சொத்துக்களை வைத்திருக்கவும் உரிமை உண்டு. மேலும், யாருடைய சொத்தையும் வலுக்கட்டாயமாகப் பறிக்க முடியாது. 19ஆவது உறுப்புரைக்கு அமைய, அனைவருக்கும் குறுக்கீடு இல்லாமல் கருத்துக்களை வைத்திருக்கவும் வெளிப்படுத்தவும், தகவல்களைப் பெறவும் வழங்கவும் உரிமை உண்டு. இருப்பினும், காற்றாலை மின் நிலையத் திட்டங்களால் தீவுவாசிகளின் வாழ்வாதாரம், மீன்பிடித் தொழில் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, வெள்ள அச்சுறுத்தல் மற்றும் காற்றாலை மின் நிலையத் தாக்கங்கள் காரணமாக, தீவுவாசிகள் தங்கள் வாழ்வதற்கான உரிமையையும், வசிக்கும் உரிமையையும் இழந்துள்ளனர். இதன் விளைவாக, தீவுவாசிகள் தங்கள் சொத்துரிமைகளையும் இழந்துள்ளர். ஒப்புதல், செயல்படுத்தல், நில பரிமாற்றம், இந்தத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகள், அமைச்சரவை ஒப்புதல்களைப் பெறுதல் போன்ற எந்தவொரு தகவலையும் பொதுமக்கள் அணுகுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் குறித்து எந்தவொரு அரசு நிறுவனமும் துல்லியமான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கவில்லை.மேலும் இந்த நிபந்தனைகளை எதிர்த்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவையெல்லாம் காற்றாலைகள் காரணமாக மக்கள் சந்திக்க வேண்டிய அவலங்கள். இதனால், காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவு மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் இரண்டையும் இழந்துள்ளனர்.

உலகத்தின் நிலையான எரிசக்தி, உலக வங்கி மற்றும் இலங்கையின் எதிர்கால விதி

எரிசக்தி அமைச்சின் 2024ஆம் ஆண்டின் தேர்ச்சி அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி திறன் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5841 மெகாவாட்டாகும். இதனூடாக நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி, மர எரிபொருள், உயிரியல் எரிபொருள்கள் மற்றும் நகராட்சி கழிவுகள் போன்ற நிலையான எரிசக்தி மூலங்களால் உருவாக்கப்படும் மின்சார திறன் 3658 மெகாவாட் ஆகும். இது மொத்த மின்சார உற்பத்தியில் 63 சதவீதத்தை எட்டுகிறது. இலங்கை மின்சார சபையின் 2018-2037 வரையான நீண்டகால மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கமைய (Long Term Generation Expansion Plan 2018-2037) காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய மின் உற்பத்தி ஆகியவை 2037ஆம் ஆண்டு வரை நிலையான எரிசக்தித் துறையில் முக்கிய அபிவிருத்தி இயக்கிகளாக கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதுதான், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, எரிசக்தித் துறையில் கார்பனீரொக்சைட் வெளியேற்றத்தை 20 சதவீதம் குறைக்கும் இலக்கை எளிதாக அடைய முடியும்.

1990ஆம் ஆண்டில் 29 சதவீதமாக இருந்த தேசிய மின்சார விநியோகம், 2018ஆம் ஆண்டளவில் 99.58 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மின் உற்பத்திக்காக ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் கார்பனீரொக்சைட்டின் அளவு சுமார் 7 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். நாட்டில் எரிபொருள் பாவனையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் 16.7 மில்லியன் மெட்ரிக் டொன் கார்பனீரொக்சைட்டில், 44 சதவீதம் மின்சார உற்பத்தி காரணமாகவே வெளியிடப்படுகிறது.  இது உலகின் அனைத்து நாடுகளாலும் வெளியிடும் கார்பனீரொக்சைட்டின் அளவோடு ஒப்பிடும்போது 0.05 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவாகும். சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒருவருடத்திற்கு கார்பனீரொக்சைடு வெளியேற்றம் முறையே சுமார் 9135, 5176 மற்றும் 1187 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும்.

உலகில் இன்று நிலையான எரிசக்தியானது சூரிய சக்தி, உயிரியல் எரிபொருள்கள், புவிவெப்ப ஆற்றல், கடல் அலைகள், காற்றாலை மின்சாரம் மற்றும் நீர் மின்சாரம் போன்ற ஆறு மூலங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் 2025 புள்ளிவிவரங்களின்படி, உலகின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 4.45 மில்லியன் மெகாவோட்டாகும். இதில், 1.13 மில்லியன் மெகாவோட் காற்றாலை மின் நிலையங்கள் மூலமும், 1.87 மில்லியன் மெகாவோட் சூரிய மின் நிலையங்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது 2030ஆம் ஆண்டாகும்போது காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 2.2 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும், சூரிய மின் நிலையங்கள் மூலம் 7 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இந்த எரிசக்தி மூலங்கள் விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாகத் தெரிகிறது. இதனூடாக புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பிலிருந்து வளிமண்டலத்தில் பசுமையற்ற வாயுக்களை வெளியிடுவதைக் குறைப்பதுடன், இதன் ஊடாக காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

இது உண்மையாக இருப்பினும், இந்த நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களானது காடுகள், ஈரநிலங்கள் மற்றும் ஆழமற்ற கடல்களில் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் இழப்பில் இருந்தே  நிறுவப்படுகிறது. இதனூடாக எதிர்பார்த்த பலன்களை அடைய முடியுமா என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது காலநிலை மாற்றத்திற்கான களத்தை அமைப்பது மட்டுமல்லாமல், இயற்கை அமைப்புகளின் அழிவு காரணமாக விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல உணவு உற்பத்தித் துறைகளைப் பாதிப்பதன் மூலம் நாட்டின் உணவு இறையாண்மை வீழ்ச்சி நிலைக்கு உட்படுத்துகிறது. அதற்கு ஒரு தீர்வாக, உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், பயிர் நிலத்தை அதிகரிப்பதற்காகவும், உணவு இறக்குமதியை அதிகரிப்பது அல்லது காடுகள் மற்றும் ஈரநிலங்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது ஒரு சுழற்சியாகத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, நாடு கடுமையான பேரழிவைச் சந்திக்க வழிவகுக்கிறது.

உலக வங்கியின் கடல் கடந்த காற்றாலை மின் அபிவிருத்தி திட்டத்தின் (Offshore Wind Development Program – World Bank Group) கீழ் இலங்கைக்கான கடல் கடந்த காற்றாலை மின் நிலையத்தின் பாதை வரைபடம் என்ற (Offshore Wind Roadmap for Sri Lanka) தலைப்பிலான அறிக்கை 2023 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, இலங்கையின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் ஆழமற்ற கடல்களில் சுமார் 14,195 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காற்றாலை மின் நிலையங்களை நிறுவி 56 கிகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இந்த ஆழமற்ற கடற்பரப்பு கடல் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு பிரதேசமாகும். பவளப்பாறைகள், மணல் திட்டுக்கள், கடல்புற் படுகைகள் மற்றும் சேற்றுப் படுகைகள் போன்ற ஏராளமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட பிரதேசங்களாகும். இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் கடல் மீன் இனங்கள், ஆமைகள் மற்றும் இறால் மற்றும் நண்டுகள் போன்ற கடல் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் போன்ற கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் உணவளிக்கும் இடங்களாகச் செயல்படுகின்றன. மீன்பிடித் தொழில் மற்றும் அதைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் அத்துடன், நாட்டின் உணவு இறையாண்மை ஆகியவை இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் தொடர்ச்சியான இருப்பைப் பொறுத்தது. இவையனைத்தும் இந்தத் திட்டங்களால் சரிந்துவிடும் அபாயத்தில் உள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கி மட்டுமல்ல, உலக வங்கியும் கூட நமது நாட்டை காற்றாலை மின்சார சந்தையின் பிடிக்குள் வேகமாகக் கொண்டு வருகின்றது. நீர் மின்சார உற்பத்திக்கான தற்போதைய நிலையான எரிசக்தி மூலத்தைப் பாதுகாக்க, தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் வண்டல் படிவதைத் தடுப்பதும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துவது போன்ற செலவு குறைந்த முறைகளைப் பின்பற்றுவதும் அவசியம். இதன் மூலம் மின்சாரம் மட்டுமல்ல, விவசாயத்திற்கும் மக்களுக்கும் நீர் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன், அதனூடாக காலநிலை மாற்றத்தைத் தணித்தல், மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலம் உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். ஆனால், ஆசிய அபிவிருத்தி வங்கியும், உலக வங்கியும் நம்மை எரிசக்தி சந்தையில் அடைத்து வைப்பதன் மூலம் இதையெல்லாம் நம்மிடமிருந்து பறிப்பதற்கான வேலையை செய்கின்றன. அதிகாரிகள் மட்டுமல்ல, இந்த அனைத்து தரப்பினரும் தற்போதைய அரசாங்கத்தையும் தன் பிடியில் வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அதை உணரவில்லை. காரணம் நிலையான எரிசக்தி சந்தையை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் நிலையான எரிசக்தி நிறுவனங்கள் மிகக் கவனமாக நிர்வகிக்கின்றன. இதனூடாக நாட்டின் எரிசக்தி இறையாண்மையைப் பறித்து, அனைத்து முடிவுகளையும் சந்தை நிறுவனங்களிடம் விட்டுவிடும் ஒரு பொறிமுறையை உருவாக்கும் முயற்சியாகும். ஒரு நாடாக நாம் இதை உடனடியாகக் கடக்க முயற்சிக்க வேண்டும்.

இதற்காக, பழைய மற்றும் காலாவதியான தொழில்நுட்பங்களில் இயங்கும் நாட்டின் தற்போதைய நீர் மின் நிலைய அமைப்பை மிகவும் திறமையாக புதுப்பிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, காற்றாலை மின் நிலையங்கள் குறைந்த தாக்கத்துடன் பொருத்தமான இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும், மேலும், மண் மற்றும் பாறை குவாரி பகுதிகளிலும், வீடுகள் மற்றும் கட்டடங்களிலும் சூரிய மின் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்.  காடுகளில் உள்ள ஈரநிலங்கள், குளங்கள் அல்லது நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், பொருத்தமான இடங்களில் இத்தகைய திட்டங்களை நிறுவுவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகளை, வளர்ந்த அமைப்புகளில் நிலையான எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், அந்தத் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்குவதன் மூலமும் இழக்கக்கூடாது.

Sajeewa-Chamikara-e1761567449104.jpg?resசஜீவ சாமிக்கர
காணி மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம்

https://maatram.org/articles/12376

முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல் - லக்ஸ்மன்

2 months ago

முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல் - லக்ஸ்மன்

முளையிலேயே கிள்ளப்படாத விடயங்களான இனத்துவேசம், பேரினவாதம்,  பாரபட்சம், அடக்குமுறைகள், ஆதிக்கத்தன்மை போன்றவற்றினை நன்றாக வளர்ந்துவிட்ட பின்னர் சரிசெய்து விடலாம் என்று எண்ணங்கொள்வது சாத்தியத்துக்குட்படுத்த முடியாதது என்பதே யதார்த்தம்.

இந்த யதார்த்தத்தைக் கடந்து செல்ல நினைப்பது குதிரைக் கொம்பானது. இதனையே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான  தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்ய நினைக்கிறது. 

காலம் கடந்த பின்னர் அதனையும் பூசி மெழுக நினைப்பதல்ல, முனைவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்வது எந்த அடிப்படையில் நாட்டில் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதுதான் இந்த இடத்திலுள்ள கேள்வி. 

மக்கள்  விடுதலை முன்னணியினர் இவ்வாறான கொள்கையை தேர்தல் காலத்திலோ அதற்கு முன்னரோ வெளிப்படையாக முன்வைத்திருக்கவில்லை. கொள்கையை வெளிப்படுத்தாமல், முன்வைக்காமல் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின்னர் வெளிப்படுத்துவது இவர்களுடைய இதய சுத்தியை அல்லது உள் மனச்செயற்பாட்டை சந்தேகத்துக்கே உட்படுத்துகிறது எனலாம். 

பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை தொடர்பான வெளிப்புற முயற்சிகள் தற்போதைய தேசிய செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாக அமையும் என்பதுடன், சமூகங்களை தேவையில்லாமல் துருவப்படுத்தும் தலையீடு தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் உள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் அரசாங்கம் உடன்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். 

இது ஒரு வெறும் கருத்து என்ற கணக்கில் விட்டுவிடக்கூடிய கருத்தல்ல. அதே நேரத்தில் வெறுமனே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மாத்திரமே நடைபெற்றிருக்கின்றன. அவற்றினை விசாரித்துவிட்டால் நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் போன்றதான கருத்துநிலையில் பிரதமருடைய உரை அமைந்திருந்தது. 

திட்டமிட்டவகையிலான குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் செயற்றிட்டங்கள், கல்வியில் தரப்படுத்தல், விகிதாசார முறைப்படுத்தல் என கட்டமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் இலங்கையில் நடைபெற்றன. இப்போதும் இச் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுவிட்டன என்று உறுதியாக கூறமுடியாத நிலைமையே தொடர்கிறது. 

ஆயுத யுத்தம் தொடங்கப்பட்டது முதல் வெவ்வேறு வழிமுறைகள் மூலம் இவ்வாறான செயற்றிட்டங்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. யுத்த ஓய்வுக்குப் பின்னரும் வேறு பல வடிவங்களாக நடைபெற்றன. அந்த வகையில்தான் இப்போதும் இலங்கையின் அரசாங்கத்தில் நம்பிக்கையற்ற தமிழர்கள் சர்வதேச பிரசன்னம், சர்வதேச போர்க்குற்ற விசாரணை, சர்வதேச நீதி வழங்கலைக் கோருகின்றனர்.

இதனை தவறென்றோ, பிழையென்றோ யாரும் கூறுவார்களானால் அவர்கள் கடந்தகால அனுபவத்தில் இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கே வரமுடியும்.  அதனால்தான், பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் பௌத்த மயமாக்கல் எதிர்ப்பைத் தமிழ்த் தரப்பு கையில் வைத்திருக்கிறது.

அதே போன்றுதான் இலங்கையின் பேரினவாதத் தரப்பில் நம்பிக்கையற்றுப் போனமையினாலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேசத்தின் பிரசன்னத்தையும் சர்வதேச நடைமுறைகளைகளையும் கோருகின்றனர். இதனைக் கைவிடுமாறு கோருவது எந்தவிதத்திலும் நியாயமாகாது என்பதும் நிலைப்பாடு.

அத்துடன் அதற்கான உரிமையும் யாருக்குமில்லை என்பது தமிழர்களின் நிலைப்பாடு. காலம் கடத்தல்களையே ஒவ்வோர் அரசாங்கமும் கைக்கொள்வதற்குக் காரணம் எதிர்கால சந்ததியினை இலக்காகக் கொண்டது என்பது வெளிப்படையானதாக இருக்கின்ற நிலையில், யதார்த்தத்தை மறந்து தமிழர்கள் தங்களது நிலைப்பாடுகளைக் கைவிட்டு யதார்த்த அரசியலைப் பேச வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ஜே.வி.பி. இருப்பது கவலைக்குரியது.

அதற்காக அவர்கள் முன்வைப்பது புதிய அரசியல் யாப்பாக இருக்கிறது. இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு சமத்துவமான நடைமுறையை ஏற்படுத்துவது எந்த அடிப்படையைக் கொண்டிருக்காது என்பது வெளியே வராத ஒன்றாக இருந்து வருகிறது. 

புதிய அரசியல் யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காணமுடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற ஜே.வி.பி.யினர் இது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்தக் கலந்துரையாடல்களின் தீர்மானமானது எந்தவகையிலும் தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களைத் தொட்டுவிடவில்லை என்பதே உண்மை.
கடந்த ஒரு வருட கால ஆட்சியில் இதுவரையில் எட்டிவிட்ட விடயங்கள் என்று முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை அகற்றியது, போதைப்பொருள் மீட்புகள், அது தொடர்பான கைதுகளை மாத்திரமே பட்டியலிட முடியும்.

ஆனால், நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றே நாட்டின் முன்னேற்றத்துக்குரியதாக அமையும் என்பது மறக்கப்பட்டதாக இருந்து வருகிறது. 

நாட்டின் எதிர்காலத்துக்காக கொண்டுவரப்பட வேண்டிய முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் நகர்த்தப்படவுள்ள அரசியல் வியூகங்களில் தங்கிருக்கிறது என்பதனை இதுவரையில் உணர்ந்து கொள்ளாத ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான தேசிய சபை புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் மாத்திரம் நின்றுகொண்டிருக்கிறது.

அதில், தீர்வின்றி நீண்டுகொண்டிருக்கின்ற வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன, மத மக்களையும் பொதுமைப்படுத்தும் வகையிலேயே நகர்வுகள் காணப்படுகின்றன.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதும் அடங்கியிருக்கிறது. இருந்தாலும் இப்போதிருக்கின்ற ஜனாதிபதி அதிகாரத்தை மாற்றுவதற்கு ஜே.வி.பி. விரும்புமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், 2029 ஆம்ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுமா? என்பது புரியா புதிரே. 

இலங்கை சுதந்திரமடைந்தது முதலே தொடர்ந்து கொண்டிருக்கின்ற இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதில் அக்கறையற்றிருந்த இலங்கையின் அரசாங்கங்கள் தங்களது ஆட்சிகளை நகர்த்துவதிலேயே அக்கறை கொண்டிருந்தனர். சிறுபான்மையினரான தமிழ் மக்களின் உரிமைக்கான கோரிக்கையை மலினப்படுத்தும் செயற்திட்டங்களே திட்டமிடப்பட்டவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதனை மறுப்பவர்களும் மறந்தவர்களும் இலங்கையர்கள் என்று மக்களை ஒருநிலைப்படுத்துவதைப்பற்றி சிந்திப்பது வேடிக்கையானது. 
இலங்கையில், 1833இல் கோல்புறுக் - கமரன், 1929இல் மனிங், 1924இல் மனிங் - டெவன்சியர், 1931இல் டொனமுர், 1947இல் சோல்பரி என அரசியலமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

1948இல் பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னரும் டொமினியன் அந்தஸ்திலேயே நாடு இருந்துவந்தது. பின்னர் 1972இல் குடியரசாக மாறியது. 1978இல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. 22 திருத்தங்களைக் கண்ட இலங்கையின் அரசியலமைப்பு கண்டிருக்கின்ற திருத்தங்கள் யாவும் அரசாங்கங்களின் தேவைகளுக்கும், நோக்கங்களுக்குமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டபோது புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அது இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. அதற்கு பேரினவாதத் தரப்பினருடைய செயற்பாடே காரணமாக இருந்தது. 

ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதனை விடுத்து புதிய அரசியலமைப்பையே உருவாக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பானது மக்களது நலனைக் கருத்தில் கொண்டா? அரசியல் நலனை நோக்காகக் கொண்டா? மேற்கொள்ளப்படப்போகிறது என்பது முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். 

குடியரசு அரசியல் யாப்பானது நாட்டில் ஆட்சி நடத்துபவர்களுக்கும் நாட்டு மக்களுக்குமான வழிகாட்டியாகும். ஆனால், அந்த வழிகாட்டியை தாங்கள் நினைத்த வேளைகளிலெல்லாம் ஆட்சியாளர்கள் தமக்கேற்றால் போன்று, தமது அரசியல் தேவைகளுக்காக மாற்றியமைப்புதுதான் இலங்கையில் நடைபெற்று வந்திருக்கிறது.

அரசியலமைப்பையே தமக்Nகுற்றாற்போல மாற்றியமைக்கின்ற, நடைமுறைப்படுத்துகின்ற அரசாங்கங்களையுடைய நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கும், யுத்தத்தில் நடைபெற்ற குற்றங்களுக்கும், நியாயமான நடைமுறைகள் கைக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமானதே. 

அந்தவகையில்தான் முளையிலேயே கிள்ளப்படாததற்காக  மரத்தை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைப்பாட்டைக் கைக் கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்ற முடிவு கிடைக்கும்.

உள்ளகப் பொறிமுறையை கொண்டுவருதல் என்கிற நிலைமை அரசியலமைப்புக்கு வெளியே பயங்கரவாதத் தடைச்சட்டம் இருப்பது போன்று இல்லாத நிலைமையை, ஏம்மாற்றங்களை தமிழர்களுக்குத் தராது என்று நம்புவோம்.

ஏமாற்றங்களையே கடந்து வந்திரக்கின்ற தமிழர்களிடம் கொண்ட கொள்கையை கைவிடும்படி கூறும் ஜே.வி.பி. நாட்டின் கடந்தகால அனுபவங்களுக்குள் சென்றுவருதலே கட்டாயமாகும்.  

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முளையில்-கிள்ளாததை-வெட்டிவிடுதல்/91-366933

செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? - நிலாந்தன்

2 months ago

செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? - நிலாந்தன்

Sew.jpeg

செவ்வந்தியோ சூரியகாந்தியோ  அவர் பாதாள உலகங்களோடு சம்பந்தப்பட்டதற்காகத் தேடப்பட்டவர். குற்றம் நிகழ்ந்த பின் நாட்டை விட்டுச் தப்பிச் சென்ற அவரைக் கைது செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நேபாளத்தில் அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்ததும் கைது செய்ததும்  சாகச்செயல்களோ வீரச்செயல்களோ அல்ல. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்தோடு தொடர்புகொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது. இதில் என்ன சாகசம் இருக்கிறது? குற்றம் நடந்த பின் நாட்டை விட்டுத்  தப்பிச் சென்ற ஒருவரைக் கைது செய்வதுதானே போலீசாரின் கடமை? அதைச் செய்த போலீஸ் அதிகாரியை ஏன் ஒரு சாகச வீரனாகப் போற்றி,உயர்த்த வேண்டும்? அவர்  தன்னுடைய தொழிலைத்தானே செய்தார்?

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதன் டிஜிட்டல் புரோமோஷன் அணியும் அதனை வீர தீரமான,ஆபத்துக்கள் மிகுந்த ஒரு சாகச நடவடிக்கையாகச் சித்தரிக்கின்றன. அதற்குத் தலைமை தாங்கிய போலீஸ் அதிகாரியை ஒரு கதாநாயகன் அளவுக்கு உயர்த்துகின்றன. இங்கே எந்த வீரமும் கிடையாது சாகசமும் கிடையாது. அரசியல் குற்ற மயப்பட்டிருக்கும் ஒரு நாட்டில், அரசியல்வாதிகள் பாதாள உலகங்களோடும் போதைப் பொருள் வலைப் பின்னலோடும் தொடர்புடையவர்களாகக் காணப்படும் ஒரு நாட்டில், பாதாள உலகக் குற்றவாளிகளால் விலைக்கு வாங்கப்பட முடியாத சில போலீஸ் அதிகாரிகள் வீரர்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் இங்குள்ள ஒப்பீடு.

நாட்டின் பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இழந்த,ஊழல் மிகுந்தபத்து நிறுவனங்களில் முதலாவதாக போலீஸ் நிறுவனம் காணப்படுகிறது. இந்த தகவலை சொன்னது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட லஞ்சம் ஊழல் என்பவற்றை விசாரிப்பதற்கான ஆணைக் குழுவின் தலைவர் நீல் இடாவெல ஆகும். நாட்டின் காவல்துறை இவ்வாறு நாட்டில் மக்கள் மத்தியில் மதிப்பிழந்த பத்து நிறுவனங்களில் முதலாவதாக காணப்படும் ஒரு நாட்டில் அப்படி சில போலீஸ் அதிகாரிகள் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை ஒரு சாகசச் செயலாகக் காட்ட வேண்டிய ஒரு நிலைமை.

ஆனால் நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமையப்பட்டது அந்த கேள்விக்கு விடை தேடிப் போனால் அதற்கு ஜேவிபியும் ஒருவிதத்தில் பொறுப்பு. இன முரண்பாடுகள்தான் அதற்குக் காரணம். சிங்கள அரசியல்வாதிகள் எல்லாக் குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்துக்குள் பதுங்கிக் கொள்வார்கள். செவ்வந்தி கைது செய்யப்பட்ட நடவடிக்கையை விமர்சித்த விமல் வீரவன்ச கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்த நடவடிக்கையோடு ஒப்பிட்டுத்தான் அரசாங்கத்தை அண்மையில் விமர்சித்திருந்தார். எனவே இலங்கைத்தீவில் எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தின் பின் பதுங்க முடியும் என்ற நிலைமை கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஒரு தீய அரசியல் கலாச்சாரமாக இருந்து வருகிறது.

இவ்வாறு அரசியல் குற்றமயப்பட்ட ஒரு நாட்டில் அரசியல்வாதிகள் பாதாள உலகத் தலைவர்களோடு உறவுகளை வைத்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் மீதும், அவ்வாறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இப்பொழுது அரசாங்கம் பாதாள உலகக் குற்றவாளிகளையும் போதைப்பொருள் வலை பின்னலையும் முடக்க முயற்சிக்கின்றது. இதில் போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் என்பது ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தொடங்கியது. ”யுக்திய” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதில் சில என்கவுண்டர்கள் நடந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. அந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அந்த நடவடிக்கைகளின் கனிகளை இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்கிறது என்பதே உண்மை. ஆனால் ஒப்பீட்டளவில் உயிர்ச் சேதம் குறைவு.

இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு மக்கள் முன் காட்சி மயப்படுத்துகின்றது. அரசாங்கத்தின் டிஜிட்டல் புரமோஷன் அணியானது கைது நடவடிக்கைகளை, போதைப்பொருள் கிடங்குகளை முற்றுகையிடும் நடவடிக்கைகளை, விலைக்கு வாங்கப்பட முடியாத போலீஸ் அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கைகளை பிரச்சார நோக்கத்தோடு உருப்பெருக்கி காட்டி வருகிறது.

ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக அனுர அரசாங்கம் கைது செய்தவர்களில் யார் மீதும் போர் குற்றச் சாட்டுக்களோ அல்லது இன அழிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ முன்வைக்கப்படவில்லை.

அரசாங்கம் இப்பொழுது கட்டுப்படுத்த முயற்சிக்கும் குற்றங்களுக்கெல்லாம் தாய்க் குற்றம் எது? பேரினவாதம்தான். தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்றுவரை நீதிக்குமுன் நிறுத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டிருக்கும் சில படை அதிகாரிகள் இனமுரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களோடும் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகம் உண்டு. ஆனால் அவர்களுக்கு எதிராக இனமுரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை.

எனவே இலங்கைத்தீவில் குற்றங்களுக்கெல்லாம் தாய்க் குற்றமாகக் காணப்படும் குற்றத்தில் கை வைக்காமல் குற்றமில்லாத இலங்கையை உருவாக்கப் போகின்றோம்; பாதாள உலகங்களை ஒடுக்கப் போகிறோம் என்று அரசாங்கக் கூறிவருகின்றது. உண்மையில் அரசாங்கம் செய்வது என்னவென்றால் எதன் மீது கவனத்தை குவிக்க வேண்டுமோ,எது தாய்க் காயமோ அதைச் சுகப்படுத்தாமல் அதன்  விளைவுகளுக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்டிருக்கிறது.

நாட்டின் அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியினர் குற்றப்பின்னணியைக் கொண்டவர்கள்,பாதாள உலகக் குழுக்களோடு தொடர்புடையவர்கள் என்பது பரவலான சந்தேகம். இவ்வாறு சந்தேகப்படும் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் பாதாள உலகங்களில் தங்களுக்கென்று  அடியாட்களை வைத்திருக்கிறார். இந்த நிழல்களை இப்பொழுது அரசாங்கம் நசுக்கத் தொடங்கிவிட்டது. அதனால் நிஜங்கள் பதட்டமடைகின்றன. நாமல் ராஜபக்ச…… “எந்தவித குற்றங்களோடும் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே எமது பொதுஜன பெரமுனவில் எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனு வழங்கப்படும்”என்று கூறியிருப்பது அதைத்தான் காட்டுகின்றது. ராஜபக்சக்கள் அவ்வாறு கூறவேண்டிய அளவுக்கு தென்னிலங்கையில் நெருக்கடி வந்திருக்கிறது என்பது நல்ல முன்னேற்றம்.

ஆனால் அது ஒரு பாதியளவு முன்னேற்றம்தான். இந்த நடவடிக்கைகளின் மூலம் தேசிய மக்கள் சக்தி தெற்கில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்கலாம். அடுத்த தேர்தலிலும் தனது வெற்றியை உறுதிப்படுத்தலாம். ஆனால் இந்த குற்றங்களுக்கு எல்லாம் தாய் குற்றமான இனவாதத்தை வெற்றிகொள்ளாத வரை இப்பொழுது கிடைக்கும் வெற்றிகள் யாவும் தற்காலிகமானவைதான்.

2009 ஆம் ஆண்டு இலங்கை தீவில் தோற்கடிக்கப்பட்டது தமிழ் மக்களின் ஆயுத போராட்டம்தான். இனவாதம் அல்ல. ஆயுதப் போராட்டம் ஒரு விளைவு. அது மூலகாரணம் அல்ல. மூல காரணம் இனவாதம்தான். ஆயுதப் போராட்டத்தில் வெற்றி பெற்ற இனவாதம் ராஜபக்சக்களின் தலைமையில் யுத்த வெற்றிவாதமாக தன்னை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துக் கொண்டது. ஆனால் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக யுத்த வெற்றி வாதம் தற்காலிகமாக பதுங்கியிருக்கிறது.

அவ்வாறு இனவாதம் அப்படியே இருக்கத்தக்கதாக அந்த இனவாதத்தின் விளைவாக உருவாக்கிய ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்ததை ஒரு நிலை மாற்றமாக கருதி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலைமாறு கால நீதியை ஐநா இலங்கைக்கு முன்மொழிந்தது. நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலை மாறு கால நீதியை ஸ்தாபிக்க முடியாது என்பதை தான் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்த யாப்புச் சதி முயற்சி நிரூபித்தது. மைத்திரி யார்?நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவர். ஆனால் அவரே தன் குழந்தையைத் தோற்கடித்தார்.

இப்பொழுது சுமந்திரன் அவரை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோள் யாப்புருவாக்க முயற்சியின்போது மைத்திரி சொன்னது. தமிழ் மக்களையும் பயமுறுத்தாத சிங்கள மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று மைத்திரி சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு வார்த்தைதான் “ஏக்கிய ராஜ்ய” என்று சுமந்திரன் இப்பொழுது விளக்கம் தருகிறார். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பயப்படும் ஒரு நிலைமை என்பது எதைக் காட்டுகிறது? நாட்டில் இனமுரண்பாட்டு அரசியலில் நிலை மாற்றம் ஏற்படவில்லை என்பதைத்தானே? சமாதானத்துக்கான கூட்டு உளவியல் சூழல் உருவாகவில்லை என்பதைத்தானே? தமிழ் மக்களைத்  தோற்கடித்ததால் இனப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நம்புவதே இனவாதம்தான். தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக சமஸ்டி என்று கூறி ஒரு தீர்வைக் கொடுக்க முடியாத ஒரு நிலை நாட்டில் இப்பொழுதும் உண்டு என்றால் அது இனவாதம் தான். வெளிப்படைத் தன்மையற்ற ஒரு சமஸ்டியைத்தான் தீர்வாக வைக்க முடியும் என்றால் அதுவும் இனவாதம்தான். எனவே எக்கிய ராஜ்ய என்ற அந்த வார்த்தையே நாட்டில் நிலைமாற்றம் ஏற்படாததன் விளைவாக உபயோகிக்கப்பட்ட ஒன்றுதான்.

அதே நிலைமைதான் இப்பொழுதும் உண்டு. கடந்த ஓராண்டுக்கு மேலான தேசிய மக்கள் சக்தியின் கைது நடவடிக்கைகள் எவையும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் கைவைப்பவைகளாக இல்லை என்பதைச் சுமந்திரனும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிக்க முற்பட்டதால்தான் அது தோற்கடிக்கப்பட்டது. அதைத் தோற்கடித்தது சிங்களத் தரப்புத்தான். தமிழ்த்தரப்பு அல்ல. இப்பொழுது தோல்வியுற்ற நிலைமாறு கால நீதியின் குழந்தையாகிய எக்கிய ராஜ்யவை மீண்டும் மேசையில் வைக்கிறார்களா?.

கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்து ஒழுங்குபடுத்திய சந்திப்பில் கலந்து கொண்ட அரச தரப்பு பிரதிநிதி  எக்கிய ராஜ்யவை ஒரு தீர்வாக மேசையில் முன்வைத்ததாக  கஜேந்திரக்குமார் குற்றம் சாட்டுகிறார். அதாவது நிலைமாற்றம் ஏற்படாத ஓர் அரசியல்,ராணுவச் சூழலில் தயாரிக்கப்பட்ட புதிய யாப்புக்கான இடைக்கால வரைபை அரசாங்கம் மேசையில் வைத்திருக்கிறது என்று கஜேந்திரக்குமார் எச்சரிக்கின்றார்.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக்  கொண்டு வருமா? அல்லது மாகாண சபைத் தேர்தல்களை முதலில் வைக்குமா?என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை இப்பொழுது அரசாங்கத்திடம் உண்டு. மேலும் எக்கிய ராஜ்ஜியவுக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று அரசாங்கம் கூறுகிறது. ஏனென்றால் யாப்புருவாக்க முயற்சியில் 2015 இலிருந்து 2018 வரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தோடு சேர்ந்து உழைத்தது. ஜேவிபியும் சேர்ந்து உழைத்தது. எனவே அந்த இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று அரசாங்கம் இப்பொழுது கூறமுடியும். அதுமட்டுமல்ல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கும் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறுவதால் அவர்கள் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்க முடியும் என்று கஜேந்திரகுமார் எச்சரிக்கிறார்.

ஆனால் கடந்த வாரம் வரையிலும் அவருடன் உறவாக இருந்த டிரிஎன்ஏ நம்புகின்றது, முதலில் மாகாண சபைத் தேர்தல்தான் நடக்கும் என்று. மாகாண சபைத் தேர்தல்களை நோக்கி டிரிஎன்ஏ உழைத்துவருகிறது. மாகாண சபைத்தேர்தலை நோக்கிக் கருத்தரங்குகளை ஒழுங்கமைத்து வருகிறது. அது காரணமாக டிரிஎன்ஏக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான நெருக்கம் பெருமளவுக்குக் குறைந்து வருகிறது. அதாவது தமிழ்த்தேசியப் பேரவை ஈடாடத் தொடங்கிவிட்டது.

டிரிஎன்னே நம்புவதுபோல மாகாண சபைத் தேர்தல் முதலில் நடந்தால் அதில் முன்னணியைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு புதிய சேர்க்கைகள் உருவாக வாய்ப்புகள் உண்டு. டிரிஎன்ஏ மாகாண சபைத் தேர்தலில் யாரோடு நின்றால் வெல்லலாம் என்று சிந்திக்கும். அந்த அடிப்படையில் அவர்கள் வீட்டை நோக்கி நகரக்கூடும். மணிவண்ணன் அணியும் சுமந்திரனை நோக்கிச் சாயும் ஏதுநிலைகள் தெரிகின்றன. அதாவது அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை முதலில் வைக்குமாக இருந்தால் அது தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு வாக்கெடுப்பாக அமையும். தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மேலும் விகாரமடையக்கூடும். அது  வட,கிழக்கு மாகாண சபைகளில் அரசாங்கம் பலமாகக் காலூன்றுவதற்குத் தேவையான வழிகளை இலகுவாக்கிக் கொடுக்கும்.

மாறாக,அரசாங்கம் புதிய யாப்புருவாக்க முயற்சியை முதலில் தொடங்கினால், அங்கேயும் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்படும் வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன. ஏனென்றால் ஏற்கனவே கஜன் யாப்புருவாக்க நோக்கி முன்னெடுத்த ஐக்கிய முயற்சிகளை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி தோற்கடித்து விட்டது. சுமந்திரன் எக்கிய ராஜ்யவை தன்னுடைய உழைப்பின் விளைவு என்று கருதுவதாகத் தெரிகிறது. எனவே யாப்புருவாக்க முயற்சிகளிலும் தமிழ்த்தரப்பு ஒருமுகமாக ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்?

புதிய யாப்பின் முழுமைப்படுத்தப்பட்ட வரைவு முதலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். அதன்பின் ஒரு வெகுசன வாக்கெடுப்புக்கு அது விடப்பட வேண்டும். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல  வெளிப்படைத் தன்மைமிக்க ஒரு கூட்டாட்சிக்கு ஆதரவாக சிங்கள மக்கள் வாக்களிப்பார்களா? சிங்கள மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் வெளிப்படைத் தன்மை குறைந்த ஒரு புதிய யாப்பைத்தான் மேசையில் வைக்கும். எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால்  இப்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், மாகாண சபைத் தேர்தலோ அல்லது  புதிய யாப்புருவாக்க முயற்சியோ எது முதலில்  நடந்தாலும் இறுதியிலும் இறுதியாகத் தோற்கப்போவது தமிழ் மக்களா?

https://www.nillanthan.com/7865/

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

2 months ago

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

October 26, 2025 1:00 am

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க…

*மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை…

*கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை தவிர்க்க வேண்டும்…

அ.நிக்ஸன்-

புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் பிரதான சபையான தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தின் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

கடந்த ஒரு வருட கால ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் இந்த உரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன மத மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையின் தேசிய விவகாரமாக எடுத்து கையாள வேண்டும் என்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது உள்ளிட்ட பல விடங்களை தேசிய சபை உறுப்பனர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில்தான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்பதற்கான தயார்படுத்தல்களை தேசிய சபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த செப்ரெம்பர் மாதம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தமிழ்த்தரப்புடன் போசப்பட்ட விடயங்கள் குறிப்பாக பௌத்த மயமாக்கல் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு கடும் தொனியில் கூறிய கருத்துக்கள் தொடர்பாகவும் ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க பங்குபற்றியிருக்கின்றனர்.

இக் கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய முறைமைகள் பற்றிக் கூறிய கருத்துக்கள், சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் வெளியிட்ட கருத்துக்கள் பற்றியெல்லாம், நிஹால் அபேசிங்க, ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களுக்கு எடுத்து விளக்கியிருக்கிறார்.

இது பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கொழும்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஈபிஆர்எல்எஃப், ரெலோ, புளொட் ஆகிய முன்னாள் விடுதலை இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை பற்றியும், புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் சில சரத்துகளை உட்புகுத்தி இனப்பிரச்சினைக்குரிய தீர்வை காண்பது பற்றியும் தேசிய சபை உறுப்பினர்கள் உரையாடியுள்ளனர்.

இந்த உரையாடலின் போது, மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், புதிய அரசியல் யாப்புக்காக வரைபைத் தயாரித்து அதனை நிறைவேற்றுவது மாத்திரமே அநுர அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவிப்பார் எனவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சில தமிழ் நாளிதழ்களில் மாத்திரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜேபிவியின் தேசிய சபை முடிவெடுத்துள்ளதாக, அதாவது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என சில உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

அதேநேரம், தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளமை, சிங்கள பௌத்த மயமாக்கல்கள் என்று பேசியிருந்ததை ஏற்க முடியாது என கூறிய நிஹால் அபேசிங்க, கஜேந்திரகுமார் அந்த சந்திப்பில் யதார்த்தமாக பேசவில்லை எனக் குற்றம் சுமத்தியிருந்தமை பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர்.

கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செய்த தவறுகளையும் இழைத்த அநீதிகளையும் தமது அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது எனவும், குறிப்பாக யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் முடிவெடுக்க முடியாது என்றும், நிஹால் அபேசிங்க சுவிஸ்லாந்து சந்திப்பில் கஜேந்திரகுமாருக்கு எடுத்துச் கூறிய விடயங்களைப் பகிரங்கப்படுத்தி, அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜேவிபியின் தேசிய சபை  தீர்மானித்துள்ளது.

குறிப்பாக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கட்சிகளிடம் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக புரியவைத்து, ‘இலங்கை இறைமை’ ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற அடிப்படை நிலைப்பாட்டை ஏற்று அனைத்து இனங்களும் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் வாழும் சூழலை உருவாக்கக்கூடிய புதிய அரசியல் யாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற சிந்தனையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என ஜேவிபியின் தேசிய சபை வற்புறுத்தியுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர்தரப்பு பேச முடியாது எனவும், அதனை அநுர அரசாங்கம் ஏற்காது என்பதையும் தமிழர்தரப்புக்கு இறுதி முடிவாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் பற்றியும் தேசிய சபை தீர்மானித்திருப்பதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினாலும், ஜேவிபியின் தேசிய சபை, அதற்கு உடன்பட மறுப்பதாகவும், குறிப்பாக செயலாளர் ரில்வின் சில்வா முற்றாக மறுப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ரில்வின் சில்வா பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆகவே, மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

அதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள ஜேவிபி அல்லாத உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் இரண்டு நிலைப்பாடு உள்ளமை தெரிகிறது.

ஆனாலும், ஜேவிபியின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேவிபியின் தமிழர் நிலைப்பாடு தொடர்பான விடயங்களை ஏற்று செயற்படுத்துக் கூடிய முறையில் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச பயங்கரவாத தடுப்பு பற்றிய இலங்கைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன வலியுறுத்தி எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் பற்றியும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட 13 பற்றிக் கூறிய விடயங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த ஆராய்வுகளின் பிரகாரம், சோஷலிசம் – சமத்துவம் என்ற ஜேவிபியின் பிரதான கொள்கைகளின் பிரகாரம் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கு ஏற்ப அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற வலுவான செய்தி ஒன்றை ஜேவிபி வெளியிடும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13 ஐ தவிர்த்து, 2015 இல் உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய இராஜ்ஜிய’என்ற அரசியல் யாப்பு வரைபில் உள்ள  சில பரிந்துரைகளை மாத்திரம் மீள் பரிசீலனைக்கு எடுப்பது என அநுர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன.

https://oruvan.com/restrictions-and-conditions-imposed-by-jvp/

இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்- பா.உதயன்

2 months ago


இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்-
பா.உதயன்


இலங்கையில் போதைப்பொருள் பிரச்சனை இன்று பெரும் பேசுபொருளாக நாட்டின் தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தின் அனைத்திலும் ஒரு பெரும் புற்று நோய் போலவே இது ஆழமாகவே எங்கும் பரவியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த நோய் பரவியுள்ளது. போதைப்பொருள் என்கிற இந்த நஞ்சு விதை வட பகுதி தமிழர் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இதன் விளைவாக குடும்பங்கள் சிதைந்து, வன்முறைகள் அதிகரித்து கல்வி பாதிக்கப்பட்டு, வருகின்றது. ஆனால் இதன் வேரைத் தேடினால் இது எங்கே தொடர்புடையது என்றும் அரசியலோடு தொடர்பு பெற்ற ஒரு குற்ற வலையமைப்பாக வெளிப்படுகிறது. நீதித்துறை நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று பிரிந்த சக்திகளாக இல்லாமல் அரசியல் வாதிகளில் கைகளில் அகப்பட்டு ஊழலோடு சிக்ககி பலவீனமடைந் திருக்கிறது.

போதைப்பொருள் பயன்பாடு குறித்த சமூகவியல் பார்வையில் நாம் இதை பார்க்கும் போது அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியிலால பின்னணியைக் கொண்டதாகவே இது இருக்கும் இனங்களுக்கு இடையிலான அரசியல் ஏற்றத் தாழ்வுகள, சமூக அநீதி, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார பின்னடைவுகள், சட்டம் சமத்துவமாக இல்லாமல் அது தனித்துவமாக இயங்காமல் சட்டத்தின் கைகள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதும், தேசிய இனங்களுக்கு இடையிலான அரசியல் தீர்வுகளை சரியான முறையில் நடை முறைப் படுத்தாமல் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தல், போதை பொருட்களின் பயன் பாட்டை ஊக்குவிற்பதன் மூலம் சமூக சீரழிவுகளை ஏறபடுத்தி இளைய சமுதாயத்தை கல்வி அறிவு மூலம் சிந்திக்க விடாமல் சிதைத்து ஒரு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தல், ஆட்சி அதிகார சக்திகள் தமது நலன் கருதி போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடப்புகளை பேணுதல் இப்படி பல காரணிகளை சமூகவியல் ரீதியில் பார்க்க முடியும். இதை முழுமையாக நோக்கும் போது இலங்கையின் போதைப்பொருள் பிரச்சனை என்பது சமூக மற்றும் அரசியல் பொருளாதார கலாச்சார அமைப்பின் குறைபாடுகள் என்பதை விளக்கிக் கொள்ள முடியும். எனவே இந்த சிக்லானான பெரும் சமூக அழிவை ஏற்படுத்தும் இந்த நச்சு விதைகளை சரியாக விளங்கி இதனை சமூகவியல் தத்துவார்த்த கோட்பாடுகள் வழியாகப் புரிந்து தீர்வு வழிகளை ஏற்படுதினால் மட்டுமே சரியானதோர் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பாதையாகும் என்பதை எல்லா அமைப்புகளும் ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகவியலாளர் எமில் டர்க்கெய்ம் (Emile Drrkheim ) பல சமூகவியல் கோட்ப்பாடுகளை நிறுவியவர். கையில் அதிகாரம் என்ற படகை வைத்துக் கொண்டு ஆட்டுகிறார்கள் இதனால் மக்கள் சமூகத்தில் தங்களுக்குரிய இடத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் பொருளாதார பிரச்சினை வேலை இன்மை இப்படி பல பிரச்சினைகளால் சமூகம் நிலையாக இல்லாமல் அநீதி நிறைந்த குழப்பமான நிலையாக மாறிவிடும் இதனால் இங்கு சமூக சீர்கேடுகளும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன என சமூகவியலாளர் எமில் டர்க்கைம் (Émile Durkheim) விளக்குகிறார் இந்த நிலையை “அனோமி” (Anomie) என்று அழைத்தார். இதன் பொருள் சமூகம் பின்பற்ற வேண்டிய விதிகள், நெறிமுறைகள் குழப்பமாகவோ இல்லாமலோ இருப்பது. அனோமி கோட்பாட்டை மேலும் ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். அனோமி என்ற இந்தக் கோட்பாட்டை எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு நன்றாக ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார்.

இலங்கை தேசம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இனமுரண்பாடுகளையும் இனவாதத்தையும் ஊக்குவித்ததே தவிர எவருமே சரியானதோர் அரசியல் பாதையில் செல்லவில்லை இதன் பயனை இன்று தொடக்கம் இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டை நேசிக்கிறோம் என்று ஊழல் அரசியல் வாதிகளாலும் பொய்மையோடு கலந்த இன வாதிகளாலும் போலி இடது சாரிகளாலும் இந்த நாட்டின் அனைத்து நீதி நிர்வாகங்களும் இவர்களை கையில் சிக்கி ஒரு நாடே நாசமாக போகும் அளவுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். இது மாத்திரம் இன்றி பாதுகாப்பு படைகள் கூட இந்த அழிவுக்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு ஒரு காலம் படிப்போடு இருந்தது இப்போ ஐசோடு இருக்கு அப்போதெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று ஒரு தலைமை இருந்தது. ஒரு பெண் இரவு சாமத்தில் கூடவே தனியே போகும் காலம் ஒன்றிருந்தது. ஆனால் அந்தத் தமிழர் தலைமை அரசுகளாலும் நம்மோடு இருந்தவர்களாலுமே அளிக்கப்பட்டது. ஆதலால் அரசு படையில் மட்டுமின்றி நாமும் நம் இனத்தின் அழிவுக்கும் துணை நின்றிருக்கின்றோம். போதையை கொடுத்து ஒரு சமூகம் புடுங்கி எறியப்படுகிறது யாரால் என்பது எல்லாம் தெரியும்.

இந்தத் தலைமையை அழித்து இன்று இந்தத் தமிழ் மக்களை சமூகச் சீரழிவுக்குள் சிக்க வைத்த பெரும் பெறுப்பு இலங்கை இராணுவப் படைகளுக்கு மாத்திரம் இன்றி எம்மவர் கூட இந்த அழிவுக்கு துணை நின்றிக்கிறார்கள். பாலியல் கொடுமைகள், களவு கொள்ளை, கொலை போதைப் பொருள் பாவனை, வன்முறைகள் என்று இன்று பெரும் சமூக சீரழிவுகளுக்கு உள்ளாகி இருக்கிறது தமிழ் சமூகம். அன்று இருந்த தமிழ் தலைமையினால் இந்த வகையிலான சமூகச் சீரழிவுகள் வன்முறைகள் எதுவும் தமிழ் சமூகத்தில் அவர்கள் பிரதேசத்தில் இல்லாமல் இருந்தது. எனவே இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு அரச படைகளும் அன்று இருந்த தலைமையை எதிர்த்தவர்களாலும் காட்டிக் கொடுப்பு துரோகம் இப்படி பல வழிகளால் இந்த தமிழர் தலைமை இல்லாமல் போவதற்கு துணை நின்றவர்களாலும் இன்று இந்த சமூக சீரழிவுக்கு பெரும் காரணமாக இருக்கிறார்கள். சர்வதேசம் கூடவே பெரும் யுத்தத்திற்கு துணை நின்றது பெரும் துன்பத்தை இனப் படுகொலையை எதிர் கொண்ட தமிழ் சமூகத்துக்கு யுத்தம் முடிவடைந்த பின்பும் ஒரு நீதியான தீர்வை தமிழர்க்கு பெற்றுத் தர உதவவில்லை.

தமிழர் தங்களை தாங்களே பாதுகாக்க கூடிய ஒரு தீர்வை இன்று வரை எந்த அரசும் வழங்கவில்லை. இந்தியா கூடவே தனது அதிகாரத்தை பயன் படுத்தி ஈழத் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுத் தரவில்லை. இன்று இறுதியில் ஒரு சமூகச் சீரழிவுடனும் இராணுவ ஆக்கிரமிப்புடனும் எந்த வித தீர்வும் இன்றி இருப்பது பெரும் அவலமே. இலங்கை தேசமானது இன்னும் மாற்றமடைய போக வேண்டிய பாதை இன்னும் தூரமே. சரியான பாதையில் போக சிந்திக்காத வரையிலும் இலங்கை இன்னும் எதிர் காலாத்தில் பெரும் அரசியல் பொருளாதாரப் பிரசினைகளை தான் எதிர் கொள்ள வேண்டி வரலாம்

உண்மையான இந்த பெரும் தொற்று நோயான போதைத் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமானால் மாற்றங்களோடு கூடிய அரசியல் சீர்திருத்தத்தாலும், நேர்மையான உண்மையான சமத்துவ ரீதியில் சிந்திக்கக் கூடிய ஆட்சியாளர்களாலும், சமூகவியல் சரியான பார்வையிலும், இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை நடை முறைப் படுத்தி மற்றும் இளைய தலைமுறைக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்கப்படுவது அவசியம். இந்தப் போதை காலாச்சாரத்தை ஒழிக்க எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். பாடசாலைகள், சமூக ஊடகங்கள், மத நிறுவனங்கள், மற்றும் சமூக இயக்கங்கள் அனைவரும் இணைந்து இதற் காக உழைக்க வேண்டும் பேச வேண்டும் எழுத வேண்டும் ஒரு சமூக விழிப்புணர்வை இளையர் மத்தியில் உருவாக்க வேண்டும். இந்த நச்சு விதையை ஒழிக்க வேண்டும். அழகான ஒரு வாழ்வை எல்லா இனங்களும் தமது உரிமையோடும் கடமையோடும் வாழும் வழியை ஏற்படுத்த வேண்டும்.

பா.உதயன் ✍️


தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தது ஸ்கொட்லாந்து நாடாளுமன்று

2 months 1 week ago

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்த முதல் நாடாளுமன்றானது ஸ்கொட்லாந்து. மேலும் வடகிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவையும் நல்கியது. இந்த தீர்மானம் ஒக். 9, 2025 அன்று நிறைவேறியது.

http://www.nanechozhan.com/

Recognition of the Tamil Genocide and Support for Self-determination

  • Submitted by: Bill Kidd, Glasgow Anniesland, Scottish National Party.

  • Date lodged: Thursday, 09 October 2025

  • Motion type: Standard Motion

  • Motion reference: S6M-19300

That the Parliament recognises the reported mass atrocities committed against the Tamil people in Sri Lanka, particularly during the final stages of the armed conflict in May 2009, which resulted in the deaths of an estimated 70,000 to 146,000 Tamil civilians, as documented by the UN and international human rights organisations; acknowledges the findings of the UN panel of experts' report on accountability in Sri Lanka in 2011, the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) Investigation on Sri Lanka (OISL) in 2015, and successive UN Human Rights Council resolutions highlighting credible allegations of war crimes, crimes against humanity and systemic persecution against Tamils; notes the continuing calls from the Tamil diaspora and civil society for an international investigation into the genocide and for recognition of the Tamil people’s right to determine their political future through a referendum, and calls on the UK Government to advocate at the UN for a UN-monitored referendum on Tamil self-determination in the north-east of Sri Lanka, in line with international legal standards and past UN resolutions recognising peoples’ rights to self-determination in post-conflict contexts.

Supported by: Karen Adam, Clare Adamson, Stephanie Callaghan, Bob Doris, Gordon MacDonald, Fulton MacGregor, Stuart McMillan, Carol Mochan, Kevin Stewart, Mercedes Villalba

https://www.parliament.scot/chamber-and-committees/votes-and-motions/S6M-19300

கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு

2 months 1 week ago

கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு

லக்ஸ்மன்

ஒன்றை மறைப்பதற்காக இன்னொன்றைக் கொண்டுவருதல் அல்லது உருவாக்குதல் என்பது எல்லா விடயங்களிலும் நடக்கின்ற ஒன்றே. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் அட்சியை ஏற்பதற்கு முன்னர் சொன்னவற்றைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிவருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றே கொள்ளலாம்.

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திடீர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு காரணமாக இருந்தது. அதேபோன்று, இப்போதிருக்கின்ற அரசாங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. ஆனால், மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தொடர்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது கட்டாயம் என்கிற தோரணையில் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை அரசுக்கு மிரட்டல்களை விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் இப்போது சத்தமின்றி இருக்கிறார்.

சூத்திரதாரியைக் கைது செய்வோம். தண்டனை வழங்குவோம் என்று கூறிய ஜனாதிபதியும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்குட்படுத்தியது.

பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி ரவீந்திரநாத்தின் கொலையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.இருந்தாலும், அவரது கைதின் பின்னர் அவ்விடயம் எதுவுமற்றதாக அமைதியடைந்து விட்டதாகவே தெரிகிறது.

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உட்பட 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்‌ஷக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலம் முதலே வெளிவந்திருந்தன.

பிரித்தானியாவின் செனல் 4 கூட இராஜாங்க அமைச்சராக
இருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் சம்பந்தம் குறித்து அவருடைய செயலாளராக இருந்த அசாத் மௌலானாவின் தகவல்களை உள்ளடக்கியதாக ஆவணப்படம் வெளியிட்டிருந்தது.

சூத்திரதாரி, சம்பந்தப்பட்டவர்கள், ஒத்தாசையாக இருந்தவர்கள், குற்றவாளிகள், தகவல் வழங்கியவர்கள் என இக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், இதுவரையில் உண்மையானவர்கள் என்று யாரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. ராஜபக்‌ஷக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக, இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடைய குண்டுதாரிகள் இத்தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பதுதான் இப்போது வரையில் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.

இருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்‌ஷக்களின் திட்டமே. இலங்கை என்ன சொல்கிறது? என்ற செனல் 4 இன் கேள்வியுடனேயே 
இருக்கும் விடயமாக உயிர்த்த ஞாயிறு விவகாரம் முடிவின்றி இருக்கிறது.
உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பு சேர்ந்து பலரும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்த அமைப்பினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சஹ்ரானின் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருந்தும், தடுப்பதற்குரிய கால அவகாசம் இருந்தும் ஏன் முன்கூட்டியே தடுக்கப்படவில்லை? என்று குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன. ஆனால், பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது.

கடந்த வாரத்தில், பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகத் தெரிவித்ததாக ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் பாராளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து முடிந்திருந்தன. பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய 
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும், இந்தியாவே பிரதான சூத்திரதாரி என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்ன எவ்விடத்திலும் கூறவில்லை.

போலியான விடயங்களை சமூக மயப்படுத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், எதற்காக இந்தியாவின் பெயர் இதற்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றியோ, இத் தகவல் எவ்வாறு வெளியே வந்தது என்பது பற்றியோ அவர் கருத்து வெளியிடவில்லை.

இது ஆராயப்பட வேண்டியதே. ஆனால், இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன அத் தகவலை மறுத்து பொலிஸ் தலைமையகத்தினால் ஊடகங்களுக்குச் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன.

அத்துடன், அது காணாமல்போனது. அதே நேரத்தில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருந்தபோதிலும்,  பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரும் ரீட் மனு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சுராச் நிலங்க ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை கடந்த 14ஆம் திகதி பரிசீலித்த மேன் முறையீட்டு நீதிமன்றின்மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த ரிட் மனுவை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று இதுவரையில் ஆறு வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், அதற்குள் மூன்று ஜனாதிபதிகள் பதவிக்கு வந்திருக்கின்றனர்.

ஒருவர் தாக்குதல் நடத்தப்பட்டமையைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்தவர். அடுத்தவர் மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஆட்சிக்கு வந்தவர். தற்போதிருப்பவர் தாக்குதலை நடத்துவதற்குக் காரணமானவர்களைப் பாதுகாத்தார் எனப் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கித் தான் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்.

எவ்வாறானாலும், வாய் வார்த்தைகளை மாத்திரமே எல்லோராலும் அடுக்கி விட முடியும். செயலில் நடத்திமுடிப்பதென்பது சாதாரணமானதல்ல என்பதுதான் இப்போது நிரூபிக்கப்பட்டுவருகிறது. போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் நேபாளம் சென்று குற்றவாளிகளைக் கைது செய்து வந்துள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது.

ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க, அறிவிக்க முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது.
விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றாலும், 
கர்தினால் மல்கம்ரஞ்சித் ஆண்டகை ஆணைக்குழுவின் விசாரணையில் திருப்தியில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்.

சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்றுகோரிவந்தார். அன்றைய அரசாங்கத்தின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லாமலேயே அவர் இந்த நிலைப்பாட்டுடன் இருந்து வந்தார். புதிய அரசாங்கத்தினை உருவாக்குவதில் பலரும் பங்கு அவருக்கும் இருக்கிறது என்றே கொள்ளலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த பின்னர் தேசிய மக்கள் சக்தி முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பெருந்தொகையானவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்கள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது.

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் நீர்கொழும்பு சென்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தார். இருந்தாலும், எதுவுமே நடைபெறாது நீண்டுகொண்டே செல்வதானது 
ஏன், எதனால் என்பது வெளியாகவில்லை.

ஆரம்பத்திலிருந்து பல்வேறு வினாக்களுடனேயே இருக்கும் விடயம் இப்போதும் 
தொடர்கிறது என்றால், அரசின் இயலாமையா, பாதுகாப்பு,  விசாரணைத் தரப்பின் குறைபாடா? என்றும் கேள்வியை எழுப்புகிறது. அந்தவகையில், வினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதும் கேள்விதான்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கேள்விகளுடன்-உயிர்த்த-ஞாயிறு/91-366740

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை  காரணிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 months 1 week ago

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை  காரணிகள்

October 22, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2 ஆம் திகதி  விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ்  மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில்  லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது இறுதிமூச்சு வரை போராடிய அவரையும் இதுவரையில் நீதி மறுக்கப்பட்ட சகலரையும் நினைவுகூருவதற்கு ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பு அக்டோபர் 6 ஆம் திகதி   ‘கானல் நீதி’ என்ற தொனிப் பொருளில் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில்  நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

அந்த நிகழ்வில்  உரையாற்றியவர்களில்   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  நிகழ்த்திய உரைக்கு தமிழ் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன.  உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள்,  சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும்  போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடி தமிழர்கள் இதுகாலவரையில் முன்னெடுத்த முயற்சிகளின் இன்றைய நிலை குறித்து அவர் விளக்கிக் கூறியதே  பிரதான காரணமாக இருந்தது எனலாம். 

பொன்னம்பலம் தனது  உரையில்  தமிழர்களின் நீதி தேடலின் இன்றைய இக்கட்டான  நிலையை தெளிவுபடுத்தியதுடன் நீதியைப் பெறுவதற்கு தமிழர்கள் பயணிக்க வேண்டிய பாதை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பிலான தனது நிலைப்பாட்டையும் விளக்கிக்கூறினார். 

பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு வெளிநாட்டு அரசுமே இலங்கையை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்பாகவும்  நிறுத்துவதற்கு தயாராயில்லை என்றும் கூறிய பொன்னம்பலம்,   மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கும் தீர்மானங்கள் சகலதுமே சர்வதேச வல்லரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை அடைவதை நோக்கமாகக் கொண்ட கருவிகளாக  இருந்தனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யக்கூடியவையாக  இருக்கவில்லை என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறினாார். 

ஜெனீவா செயன்முறைகள் தமிழர்களுக்கு நடந்ததை வெறுமனே போர்க் குற்றங்கள் மற்றும்  மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாக  குறுக்குவதாக  அமைந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய பொன்னம்பலம் இலங்கையில் இடம்பெற்றது தமிழின அழிப்பு (Genocide)  என்று  உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.  மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இன அழிப்புக்கு இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைப்பது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. 

அவரின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 கூட்டத் தொடரின்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அக்டோபர் 6  ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்புலத்தில் நோக்க வேண்டியிருக்கிறது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்  ஆணையை மேலும் இரு வருடங்களுக்கு புதிய  தீர்மானம்  நீடித்திருக்கிறது.  அதன்  மூலமாக  மனித உரிமைகள் அலுவலகத்தில் ஏற்கெனவே  நிறுவப்பட்டிருக்கும் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் (Sri Lanka Accountability Project) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்படுகிறது.  இதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. 

மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும்  வேறு சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக  அமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய பேரவையும் இலங்கை தமிழரசு கட்சியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்பியிருந்தன. அந்தக்கடிதங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவிருந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட  வேண்டியவை என்று அவர்கள் கருதும்  விடயங்களை இரு தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர். 

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஆணை நீடிக்கப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த தமிழ் தேசிய பேரவை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதன் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court ) பாரப்படுத்த வேண்டும் என்று  ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்,  பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச்சபையை வலியுறுத்தும் முன்மொழிவு புதிய தீர்மானத்தில் இடம் பெறவேண்டும்  என்றும் தமிழ் தேசிய பேரவை வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதேவேளை, தமிழரசு கட்சி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில்  தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் செயன்முறை  ஊடாக இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வது  பெரும்பாலும் நடைமுறைச் சாத்தியற்றது என்ற போதிலும், அந்த நீதிமன்றத்தை தாபித்த றோம் சாசனத்தை (Rome Statute )  ஏற்றுக்கொள்வதற்கு  இலங்கையை இணங்க வைப்பதற்கான முன்மொழிவை தீர்மானம் முன்வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. றோம் சாசனத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஐக்கிய நாடுகள் மனித  உரிமைகள் உயர்ஸ்தானிகரும் யோசனை கூறியிருந்ததையும் தமிழரசு கட்சி கடிதத்தில் சுட்டிக்காட்டியது.

அந்த வேண்டுகோள்களை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்த பிரிட்டன், கனடா உட்பட மையநாடுகள் கவனத்தில் எடுத்ததற்கான தடயம் எதையும் தீர்மானத்தில் காணவில்லை.  முன்னைய தீர்மானங்களை விடவும் புதிய தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தமிழ்த் தரப்புகளுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய் விட்டது. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு  மேலும்  இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டதை தமிழரசு கட்சி வரவேற்றது. 

“இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், 16 வருடங்களாக முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து அதிருப்தியடைந்திருந்தாலும், இலங்கை மீதான  சர்வதேச கண்காணிப்பு இன்னொரு இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம்”  என்று தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் செய்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

புதிய தீர்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்த போதிலும்,  வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து  அதை  சவாலுக்கு உட்படுத்தவில்லை. சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதே அடிப்படைப் பிரச்சினை என்று அரசாங்கம் கூறியது. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் , ” போர் முடிவுக்கு வந்த உடனடியாகவே நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தேசியப் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தால், 16 வருடங்களாக ஜெனீவாவில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பிரச்சினை நீடித்திருக்காது.  பிரச்சினை  சர்வதேச மயப்படுத்தப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களும்  தொலை  நோக்கின்மையுமே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல்,  நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் நிலைவரத்தின் முன்னேற்றம் குறித்து முதலில் ஒரு எழுத்துமுல  அறிக்கையை மனித உரிமைகள் பேரவையின் 63 வது கூட்டத் தொடரிலும் விரிவான அறிக்கையை 66 வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை கேட்டிருக்கும் நிலையில், இரு வருடங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற கேள்வி எழுகிறது. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள் தொடங்குவதற்கு  முன்னதாக மாத்திரமே அரசாங்கங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் சில அறிவிப்புக்களைச் செய்வதே  வழமையாக இருந்து வந்தது. 

அந்த போக்கில் இருந்து மாறுபட்டு செயற்படுவதற்கு தேவையான அரசியல் துணிவாற்றலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிக்காட்டும் என்று நம்பக்கூடியதாக இனப்பிரச்சினையில் அதன் அணுகுமுறைகள் அமையவில்லை. பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேசமயப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களே காரணம் என்று கூறும் வெளியுறவு அமைச்சரினால்  காலங்கடந்த நிலையிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஓரளவுக்கேனும் நம்பிக்கையைத் தரக்கூடிய  உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு தனது அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியுமா?

இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சிந்தனையில்  இலங்கை அரசாங்கம் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதற்கு  தமிழர்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கங்கள் குறித்து யாழ்நகர் உரையில் தெரிவித்த கருத்துக்களை நோக்குவோம்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தை கையாளுவதற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையை ஆதரிக்கும் அவர் அத்தகைய கட்டமைப்பு தொடர்பில் தீர்மானத்தை எடுக்கின்றபோது சில உண்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். 

தற்போதைய சர்வதேச கட்டமைப்புக்களில் இலங்கை தமிழர்கள் பொறுப்புக்கூறலுக்காக அணுகக்கூடியதாக இருப்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மாத்திரமே என்று கூறும் பொன்னம்பலம் அந்த நீதிமன்றத்தினால் ஒரு அரசை அல்ல, தனிநபர்களையே விசாரணை செய்ய முடியும் என்பதை ஒத்துக் கொள்கின்ற  அதேவேளை, ஒரு அரசை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய கட்டமைப்பாக விளக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of  Justice )  ஒரு அரசினால் மாத்திரமே வழக்குத் தொடரமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். 

றோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாவிட்டாலும் கூட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதற்கு மியன்மார் விவகாரத்தை உதாரணமாக அவர் காட்டுகிறார்.  சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒரு அரசினால் இயலாமல் இருக்குமானால் அல்லது அந்த அரசுக்கு விருப்பமில்லாமல் இருக்குமானால் மாத்திரமே சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தினால் தலையீடுசெய்ய முடியும்.

மியன்மார் அரசு றொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குத்தொடுநர் அலுவலகமே முறைப்பாட்டைச் செய்து விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. மியன்மாரும்  றோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. ஆனால், மியன்மார் அரசின் கொடுமைகளில் இருந்து தப்பியோடி இலட்சக்கணக்கான றொஹிங்கியா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பங்களாதேஷ் அந்த சாசனத்தில் கைச்சாத்திட்ட காரணத்தினால் அந்த மக்களுக்கு எதிரான வன்முறைகள் பங்களாதேஷிலும் இடம்பெற்றது என்ற  அடிப்படையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் நியாயதிக்கத்தைப் பயன்படுத்துகிறது. 

றொஹிங்கியா மக்களுக்கு எதிராக மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக மியன்மார் இராணுவத் தலைவரைக்  கைதுசெய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநர் நீதிமன்றத்தை கேட்டிருக்கிறார். இது அந்த விசாரணையின் தற்போதைய நிலைவரம்.

இது இவ்வாறிருக்க, றொஹங்கியா மக்கள்  இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்கவில்லை என்றும் இன அழிப்புக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவில்லை என்றும்  மியன்மார் அரசுக்கு எதிராக குற்றஞ்சாட்டி  சிறியதொரு ஆபிரிக்க நாடான காம்பியா 2019 ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கை சர்வதேச நீதிமன்றமும் தற்போது விசாரணை செய்து வருகிறது.  இன அழிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க  மியன்மாரை நிர்ப்பந்திக்கும் உத்தரவை அந்த நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டில் பிறப்பித்தது. 

தனது  தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கான முறைப்படியான பொறிமுறை எதுவும் சர்வதேச நீதிமன்றத்திடம் கிடையாது.  இறுதியில் அவற்றின்  நடைமுறைப்படுத்தலும் கூட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் விவகாரமாகவே மாறிவிடுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை றோம் சாசனத்தில் கைச்சாத்திட்ட அரசுகளே நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரையில் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எத்தனை அரசுகளினால் உருப்படியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது இன்னொரு கேள்வி.

இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு கடந்த 16 வருடங்களாக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதற்கு தமிழர் தரப்பு முன்னெடுத்த முயற்சிகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே அடுத்த நகர்வைப் பற்றி சிந்திக்க முடியும்.  பொறுப்புக்கூறல் விடயத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதில் சர்வதேச நாடுகளுக்கு பெரிய அக்கறை இல்லை என்பதையே அக்டோபர்   6  ஜெனீவா தீர்மானம் தெளிவாக வெளிக்காட்டியிருக்கினது. 

இத்தகைய சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பிலும் போரின் இறுதிக் கட்டங்களின் குற்றங்களுக்கு பொறப்புக்கூறலை கோருவது தொடர்பிலும் இதுவரையில் கடைப்பிடித்த அணுகுமுறைகளை தமிழர்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. 

https://arangamnews.com/?p=12393

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும் — கருணாகரன் —

2 months 1 week ago

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்

October 18, 2025

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்

— கருணாகரன் —

ஆட்சிக் காலத்திற்கும் அப்பால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு NPP, பல விதமாக வியூகங்களை வகுத்துச் செயற்படுகிறது. பிரதேச ரீதியாக அபிவிருத்திக் குழுக்களை உருவாக்குதல், கிராம மட்டத்தில் அபிப்பிராயக் குழுக்களை அமைத்தல், மாவட்ட ரீதியாக துறைசார்ந்தோரைக் கொண்ட கட்டமைப்புகளை நிறுவுதல், தேசிய மட்டத்தில் வல்லுனர்களின் பங்கேற்புகளை அதிகரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குதல் எனப் பல வகையில் இந்த வியூகங்கள் அமைகின்றன. 

எதிர்த்தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது, முறியடிப்பது ஒருவகையான வியூகம். எதிர்த்தரப்பினர் மக்களின் செல்வாக்கைப் பெறக்கூடாது, மக்களைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பது என்ற அடிப்படையில் செயற்படுவது இன்னொரு வகையான வியூகம். இரண்டையும் மிகக் கச்சிதமாகச் செய்கிறது NPP. 

“இதில் என்ன புதுமை உண்டு?எந்த அரசியற் கட்சிகளுக்கும் உள்ள பொதுவான இயல்புதானே இது? முன்பு ஆட்சியிலிருந்தவர்களும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டினார்கள். ‘நிலையான அபிவிருத்தி‘, ‘அரசியற் தீர்வுக்கான முயற்சி‘, ‘புதிய அரசமைப்பு உருவாக்கம்‘ என்றெல்லாம் எத்தனையோ படங்கள் காட்டப்பட்டது. இப்பொழுது NPP தன்னுடைய வேலையைச் செய்கிறது. அது அப்படிச் செய்யும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். சனங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் தீர்மானித்துக் கொள்வர்“ என்று சிலர் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வதில் உண்மை உண்டு. ஆனால், அதற்காக ஏனைய தரப்புகளோடு NPP யை சமப்படுத்திப் பார்க்க முடியாது. NPP வேறான ஒன்று. அதனுடைய அடித்தளமும் செயற்பாட்டு முறையும் அதற்கான நுட்பங்களும் வேறு. ஏனைய கட்சிகளிலிருந்தும் முந்திய ஆட்சித் தரப்புகளிடமிருந்தும் அவற்றின் உபாயங்களிலிருந்தும் NPP வேறுபட்டது. மட்டுமல்ல, NPP யைப் பற்றிய பொது மக்களின் அபிப்பிராயம் ஏனைய ஆட்சித் தரப்பினரைப் பற்றியதைப்போல அல்ல. அது வேறானது. ‘ஏனையவற்றை விடப் பரவாயில்லாத தரப்பு‘. ‘நம்பிக்கைக்குரிய சக்தி‘. ‘முற்போக்கானது‘. ‘ மாற்றங்களைச் செய்யக் கூடியவர்கள்‘. ‘நேர்மையானவர்கள்‘, ‘குற்றங்களோடும் ஆட்சித் தவறுகளோடும் சம்மந்தப்படாதவர்கள்‘, ‘முந்திய ஜே.வி.பியும் இன்றைய NPP யும் ஒன்றல்ல‘ என்ற அபிப்பிராயம் அல்லது அவ்வாறானதொரு பார்வை பொதுமக்களிடத்தில் NPP யைப் பற்றி உண்டு. 

இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதல், அரசியலமைப்பு உருவாக்கம், பன்மைத்துவம் குறித்த அணுகுமுறை, பல்லினத் தேசியத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம் போன்றவற்றில் ஏனைய சக்திகளோடு பெரிய வேறுபாடுகளில்லை என்றாலும் அந்த வேறுபாட்டை உணர முடியாதவாறு NPP நடந்து கொள்கிறது. 

இதனை யாரும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அவர்கள் NPP யைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும். என்பதால்தான் தமிழ்பேசும் மக்களிடம் NPP க்கும் அநுரகுமார திசநாயக்கவுக்குமான ஆதரவுத் தளம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் NPP க்குச் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று யாரும் சமாதானம் சொல்லி ஆறுதலடையக் கூடும். ஆனால், தற்போதைய நிலவரம் அப்படியில்லை. அந்த இறக்கத்தை ஏறுமுகமாக்குவதற்கு NPP தீவிரமாகச் செயற்படுகிறது. அதற்கே ஏற்கனவே சொல்லப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதும் தொடர்பாடல்களை விரிவாக்குவதுமாகும். அதாவது NPP மிகச் சுறுசுறுப்பாகவும் மிகத் தீவிரமாகவும் வேலை செய்கிறது. இதனை எதிர்த்தரப்புகள் புரிந்து கொள்வது அவசியம். குறிப்பாகத் தமிழ்பேசும் சமூகத்தினர் இந்த விடயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகும். 

ஏனென்றால், NPP யின் அடிச்சட்டம் JVP யே. JVP அடிமட்டத்தில், மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதிலும் மக்களைப் பங்கேற்பாளர்களாக்குவதிலும் திறன்வாய்ந்தது. எத்தகைய தோல்விகளுக்குள்ளும் திறன் குன்றாமல் வேலை செய்யக் கூடியது. ஆயுதப் போராட்ட காலத்தில் JVP யின் முதுகெலும்பு ஒன்றுக்கு இரண்டு தடவை முறிக்கப்பட்டது. அரசியற் கட்சியாகச் செயற்பட்ட காலத்தில்,  அரசியல் ரீதியாக பல துண்டுகளாக உடைந்தது அல்லது ஆட்சியாளர்களால் அவ்வாறு உடைக்கப்பட்டது. ஆனாலும் அதனுடைய அடித்தளம் சிதையவில்லை. 

இரண்டாவது, இடதுசாரி முகத்தைக் கொண்டதாக இருந்தாலும் அதற்கு மாறாக தீவிர இனவாதத்தை வரலாறாகப் பெற்றது. மலையக மக்களை வேற்றாளர்களாகப் பார்ப்பது தொடக்கம், தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் உளத்தைக் கொண்டது. தற்போது கூட அதில் பெரிய அளவில் மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை.

இதையெல்லாம் மறைப்பதற்கே ‘அனைவரும் இலங்கையர்கள். அனைவரும் இலங்கையர்களாகவே கொள்ளப்படுவார்கள்‘ என்ற பெருங்கதையாடல்கள் NPP யினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற அடிப்படையில் அனைத்துச் சமூகத்தினரையும் சமனிலையில் NPP நோக்கினால் அது மகிழ்ச்சியே. ஆனால், அது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அதாவது நடைமுறையாக இருக்க வேண்டும். 

அப்படியென்றால், அதற்கான நடவடிக்கைகளை NPP படிப்படியாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறான நடவடிக்கை எதுவும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், இந்தக் கட்டுரையாளர் உட்பட பெரும்பாலான தமிழ்பேசும் மக்கள் அவ்வாறான எதிர்பார்ப்போடும் தேடல்களோடும்தான் உள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி ஜெயசூரிய போன்ற சற்றுப் பன்முகத் தன்மையோடு  விடயங்களை நோக்கக் கூடியவர்களின் மீதான நம்பிக்கையோடு  உள்ளனர். அதை அவர்கள் பாதுகாக்க வேண்டும். அப்படியே அடுத்த கட்டமாக உருவாக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் அரசியலமைப்பை பல்லின சமூகங்களின் தேசம் என்ற வகையில் உருவாக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.

அரசியமைப்பில் எந்தக் காரணம் கொண்டும் சிங்களத்துக்கும் பௌத்தத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடாது. பௌத்தத்துக்கு முன்னுரிமை அளித்தால், அது சிங்களத்துக்கு முன்னுரிமை அளித்தலாகவே அமையும்.

“பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டால், சிங்களத்தரப்பின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கே முயற்சிகள் நடக்கும்“ என்ற கதைவிடல்கள் இங்கே அவசியமற்றவை. அப்படியென்றால், அது இதற்குமுன் ஆட்சியிலிருந்த தரப்புகள் சொன்னதையே தேசிய மக்கள் சக்தியும் வெட்கமில்லாமல் சொல்கிறது என்று அர்த்தமாகும். 

குறிப்பாக1970 களில் இனவன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன சொன்னதைப்போல, ‘சிங்கள மக்கள் விரும்புவதையே தன்னால் செய்ய முடியும். அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் செய்வது அவர்களுடைய நம்பிக்கைக்கு இழைக்கப்படும் செயலாகும் என்பதைப்போலாகும். 

ஆக, கட்சிக்குள்ளே அடிப்படையான மாற்றங்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காமல், வெளியே பெருங்கதையாடல்களைச் செய்யும் ஒரு ஆட்சித்தரப்பாகவே தேசிய மக்கள் சக்தியும் செயற்பட விளைகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளைத் திருத்தம் செய்வதாகச் சொல்லப்பட்டாலும் அதில் இனப்பிரச்சினையைக் கையாண்ட தவறான அணுகுமுறை போன்ற பெரிய விடயங்கள் திட்டமிட்டு விலக்கப்படுகின்றன. அதாவது,தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்களே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டு அவசியமானவை புறக்கணிக்கப்படுகின்றன (Only selected agendas are implemented. Selected and necessary ones are ignored).     

ஆட்சியிலிருக்கும் தரப்பு, தொடர்ந்தும் அதிகாரத்தைப் பெறுவதற்கே விரும்பும்; முயற்சிக்கும் என்பதால் இந்த மாதிரியான விளையாட்டுகளை, தந்திரோபாயங்களாகச் செய்யும் என்று இதற்கும் யாரும் நியாயப்படுத்தல்களைச் செய்யக் கூடும். அப்படியெல்லாம் நியாயப்படுத்தி, NPP யைப் பிணையெடுக்க முற்பட்டால், அவர்கள் இந்த நாட்டையே புதைகுழிக்குள் தள்ளி விடுகிறார்கள் என்றே அர்த்தமாகும். 

இங்கே NPP யை வழமையான தமிழ் நோக்குநிலையில் வைத்து இந்தச் சொற்களைக் கூறவில்லை. தேசிய மக்கள் சக்தியை ஆதரவுக் கண்ணோட்டத்தில் அணுகுவதனால், அதனுடைய முக்கியத்துவத்தையும் வரலாற்றுப் பொறுப்பையும் உணர்த்துவதற்கே இவை அழுத்தமாகக் கூறப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொன்னால், மாற்றங்களுக்கான ஒரு சக்தி(தரப்பு) என்ற அடிப்படையில் நம்பிக்கையோடு நோக்கப்படுவதால் தேசிய மக்கள் சக்தியின் பொறுப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்பதையே வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்திருக்கிறது. ”இல்லை, நாங்கள் அதைப் புதிய முறையில் செய்துவெற்றியடைவோம்“         என்று NPP சொல்ல முற்பட்டால், எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏறி விழப்போகிறது. மறுபடியும் காதில் துளையிட்டு ஒரு பூச்சூடல்.  

இனவாத அடிப்படையில் விடயங்களை அரசாங்கம் நோக்க முற்பட்டால் நாடு பிளவுண்டதாகவே இருக்கும். ஒருபோதும் ஒற்றுமைப்படாது. பிளவுண்ட நிலையில் இருக்கும் நாட்டில் முன்னேற்றத்தை எட்டவே முடியாது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் முதலீடுகளுக்கான வாய்ப்பும் சீரான அபிவிருத்தியும் நடக்காது. மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அபிவிருத்தியில் பங்களிக்கவும் பங்குபெறவும் முடியாமல் போய் விடும். இதெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டவாறு தேர்வு செய்யப்படும் அடிப்படையில் ஏற்பும் புறக்கணிப்புமான ஒரு அரசியல் வேலைத்திட்டமாகவே மாறும். அப்படி மாறினால் அது சமூகக் கொந்தளிப்புகளையே உருவாக்கும். அதன்பிறகு எப்படி அனைவரும் இலங்கையர்களாக முடியும்?

முந்திய ஆட்சியாளர்கள் மீளவும் அதிகாரத்தைப் பெற முடியாதவாறு தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் NPP யினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படியேதான் ஊழல்வாதிகளின் மீதான நடவடிக்கைகள் தொடக்கம் அனைத்து அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் அமைகின்றன. இதையே தம்மீதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ஆனால், அப்படி அவை சொல்வதற்குரிய தகுதி அவற்றுக்கு இல்லை. அப்படிச் சொல்லித் தங்களுடைய தவறுகளை மறைத்து விடவும் முடியாது. 

இத்தகைய பின்னணியில் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் சமூகங்கள் எப்படித் தங்களுடைய பிரச்சினைக்கான தீர்வை  எதிர்கொள்ளப்போகின்றன? அந்தச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன. அரச எதிர்ப்பு, NPP யும் இனவாதக் கட்சிதான் என்று வழமையான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்வதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. அத்தகைய அணுகுமுறை நிச்சயமாக அவற்றுக்குக் கைகொடுக்கப்போவதில்லை. மக்களுக்கும்தான். ஆகவே NPP யும் புதிதாகச் சிந்திக்க வேண்டும். ஏனைய தரப்புகளும் புதியனவாகச் செயற்பட வேண்டும்.  நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் தீர்வுகளைக் காண்பதிலிருந்தே ஆரம்பிக்கப்படுவதாகும். 

https://arangamnews.com/?p=12391

தமிழ் மக்களுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற தவறியுள்ளது - கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவிப்பு

2 months 1 week ago

Published By: Digital Desk 3 19 Oct, 2025 | 12:40 PM

image

ஆர்.ராம்

40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர் ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் முடக்கப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும் என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வரும் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அதன் முகப்புரையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் குறித்த தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளது. அது நல்லிணக்கம் மற்றும் மக்கள் அனைவரும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உட்பட, உள்ளூர் நிர்வாகத்தை மதிக்குமாறு அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

மாகாண சபைத்தேர்தல்களை நடத்தவும் அத்தேர்தல் தடைப்பட்டிருப்பதற்கு காரணமாக இருக்கும் சட்ட விடயத்தினை தீர்க்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகம் உறுதியளித்துள்ளது. 

தற்போதுகூட, தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தனிநபர் தீர்மானத்தின் மூலம் சட்டச் சிக்கலுக்கான தீர்வினைக் காணமுடியும். 

அதுமட்டுமன்றி, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காணப்படலாம். ஆனால் அரசியல் ரீதியாக மிகவும் விலையுயர்ந்ததாகவும், சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுத்தக்;கூடிய போர்க்காலப் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் காணப்படுகின்ற நெருக்கடிகளை குறைப்பதற்கு அதுவழிவகுக்கும். உதாரணமாக கூறுவதாக இருந்தால் அயர்லாந்தின் வெற்றிகரமான தேர்தல் முன்னெடுப்புக்களால் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் பொறுப்புக்கூறல் அம்சம் எதுவும் இருக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதேவேளை, சிங்கள மொழி ஊடகவியலாளர் சம்பத் தேசப்பிரிய, பெலவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜே.வி.பி. தலைவர்கள் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை ஒழிப்பதற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான யோசனையைப் முன்னெடுப்பதாகவும் அதற்காகவே  மாகாணங்களுக்கான தேர்தலைத் தவிர்ப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட பெரிய பொருளாதார வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, இந்தியாவின் எதிர்ப்புகளை, தவிர்க்கலாம் என்றும் அதன் ஊடாக மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புகளையும் நடுநிலையாக்க முடியும் என்றும் ஜே.வி.பி. நம்பலாம்.

ஆனால் உண்மையில் ஆட்சியாளர்களுக்கு உடனடியாக மாகாண தேர்தல் நடத்துவவதானது, தாமதமாக நடப்பதை விடச்சிறந்ததாக இருந்தாலும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அக்கட்டமைப்பை ஒழிப்பதானது, தேசிய மக்கள் சக்திக்கு கணிமான செல்வாக்கு இழப்பையே ஏற்படுத்தும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காக திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளி இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவராக இருந்த ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் மூடப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும். 

ஒருவேளை தமிழ் மக்களுக்கான அரை-சுயாட்சி அரசியல் வெளியான மாகாண சபை முறைமையானது, இந்தியா, மற்றும் அநுரகுமார அரசாங்கத்தின் கூட்டு இலாபங்களை அடைவதற்காகவும் மூலோபாயத் தடயத்திற்காகவும் பண்டமாற்று செய்யப்பட்டிருக்கலாம். 

ஆனால் சீனா எப்போதும் இலங்கைக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றியே உள்ளது. ஆனால் இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் குறித்த அளித்த உறுதிப்பாட்டை நட்புரீதியான, நன்றியுள்ள அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதிலும், அதனை நிறைவேற்றுவதற்கு தவறவிட்டதாகத் தெரிகிறது.

ஆகவே, தமிழர்களின் நகர்வு டெல்லி மற்றும் கொழும்பை விடுத்து துணைப்பிராந்திய அல்லது அதற்கும் அப்பாலாகச் செல்லும் போது, அநுரகுமாரவால் உருவாக்கப்பட்ட இந்திய இராஜதந்திரத்தால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் வெற்றிடத்தின் அபாயங்கள் வெளிப்படையாகத் தெரியும், அச்சமயத்தில் அதனை மாற்றியமைப்பதற்கான நிலைமை மிகவும் தாமதமாகியதாகவே இருக்கும்.

மேலும், தற்போதைய நிலையில் மாகாண சபைகள் அரச நிலங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தாவிட்டாலும், மாகாண சபைகளின் முடக்கம், திருகோணமலையில் இனக்குழுக்களை இடம்பெயரச்செய்வது, பொருளாதார வாழ்வாதாரங்கள் பாதிப்படைச்செய்வது, மன்னாரில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு உள்ளிட்ட விடயங்;கள் குறித்து இன, மத போராட்டங்கள் மாகாண சபைகளில் விவாதத்திற்கு வரவில்லை என்பதைக் குறிக்கிறது. 

மாகாண சபைகள் தொடர்ந்து 'காணாமல் போனதால்' ஏற்பட்ட வெற்றிடம், தீவு முழுவதும் சமூகங்களின் மீது வெளிநாட்டு மற்றும் உள்ளுர் கூட்டு நிறுவனங்கள் நடத்தும் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான இயலாமையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/228132

ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன்

2 months 1 week ago

ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன்

535635095_1334892528194429_5733989210523

“சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம்  நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும். ஈழப் போராட்டத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பே ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பாகும். கடந்த 13ஆம் திகதி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதி கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது.

“இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களில் இருந்து ( 30/1 (2015),  46/1 (2021) 51/1 (2022), 57/1 (2024)  )   ஒருபடி கீழே இறங்கிவிட்டது.  இந்த தீர்மானத்தில் முதல் முறையாக “பன்னாட்டு” என்ற சொல் அடியோடு நீக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு உதவியுடனான பொறுப்புக்கூறல் பொறிமுறை என்ற பேரவையின் முந்தைய உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கியதைக் குறிப்பதாகும். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீரமானம் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு பொறிமுறை ஒன்றை முன்வைத்தது. ஆனால், பத்தாண்டுகள் கழித்து அதே பேரவையில் முந்தைய நிலைப்பாட்டை மறுத்து உள்நாட்டுப் புலனாய்வு என்று பேசுகிறது”

கடந்த 16 ஆண்டு கால ஜெனிவா மைய அல்லது மேற்கு நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய நிலை குறித்து தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு செயற்பாட்டாளர்களின் கருத்து அது.

தமிழகத்திலிருந்து வரும் கருத்துக்களுக்கு ஒரே சமயத்தில் இனப்பரிமாணமும் பிராந்தியப் பரிமாணமும் ராஜதந்திரப் பரிமாணமும் உண்டு. ஏனென்றால் இந்தியப் பேரரசின் அரசியல் தீர்மானங்களின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய ஒரே சாத்திய வெளி தமிழகம்தான். ஈழத்தமிழர்கள் நொதிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தைத்தான். தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது.

ஈழத் தமிழர்களுக்காக இதுவரை தமிழகத்தில் 19பேர் தீக்குளித்திருக்கிறார்கள். ஈழத்தில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு எதிராக முதலாவது தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழகந்தான். உலகில் உள்ள ஆகப்பெரிய தமிழ் சட்ட மன்றம் அது. எட்டுக் கோடி மக்களைப் பிரதிநித்துவப்படுத்துவது. அங்கே நிறைவேற்றப்படட இனஅழிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர முக்கியத்துவம் உண்டு. அதுபோல  முதலாவதாக இனஅழிப்பு நினைவுத் திடலை தஞ்சாவூரில் கட்டியெழுப்பியதும் தமிழகந்தான்.

ஆனால் கடந்த 16ஆண்டுகளாக தமிழகத்தின் பரந்தளவிலான கவனக் குவிப்புக்குள் ஈழத்தமிழர்கள் இல்லை. ஈழத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் நொதிப்பை,கொந்தளிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இல்லை.

செம்மணிப் புதைகுழி  திறக்கப்பட்டிருந்த பின்னணிக்குள், கடந்த யூலை மாதம் 26 ஆம்திகதி  நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. கடந்த ஒகஸ்ற் 19ஆம் திகதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை,சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி  நடைபெற்றது. இப்பேரணியில்,”ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சாட்சியாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை நடத்தக் கோரி ஐநா மன்றத்தை வலியுறுத்தியும்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பி ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரியும்” கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இப்பேரணிகள் பற்றியும் அவற்றில் பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் ஈழத் தமிழர்களுடைய பிரதான ஊடகங்களில் பெரிய அளவுக்குக்குப் பேசப்படவில்லை.

திபெத்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தில் இதுவரையிலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள்  திபெத்துக்காக தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே திபெத்தவர்கள்தான். பிற இனத்தவர்களோ பிற நாட்டவர்களோ கிடையாது. ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்காக இதுவரை தமிழகத்தில் 19 தியாகிகள் தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழகத்தவர்கள். இவர்களில் யாருமே இந்தியப் பேரரசின் ராஜதந்திர இலக்குகளை முன்வைத்துத் தீக்குளிக்கவில்லை. திருகோணமலையில் உள்ள எண்ணைக் குதங்களைக் கேட்டோ,அல்லது பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று கேட்டோ, அல்லது காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிகள் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கேட்டோ,அல்லது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டோ அவர்கள் தீக்குளிக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்;நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுத்தான் தீக்குளித்தார்கள்.

உலகிலேயே கடலால் பிரிக்கப்படும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் கடலின் மறுபுறத்தில் இருக்கும் மக்களுக்காகத் தீக்குளித்தமை என்பது நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெற்றிராத ஓர் அரசியல் தோற்றப்பாடு. அந்த  19 தியாகிகளுக்காக ஈழத் தமிழர்கள் என்றென்றும் தமிழகத்துக்குத் தலை வணங்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சி அரசியலைத்தான் செய்வார்கள். ஆனால் அந்த 19பேரும் அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சிமைய அரசியலுக்காகத் தீக்குளிக்கவில்லை.

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின் பிரச்சாரக் கூட்டங்களை படிப்படியாக ஒழுங்குப்படுத்தி வந்த ஒரு பின்னணிக்குள், ஈழத்தமிழர்களைப் பற்றியும் பேச வேண்டி வந்தது. ஈழத் தமிழ் அரசியலை அங்கே பேச வேண்டிய ஒர் அரசியல் தேவை இருப்பதைத்தான் அது காட்டுகின்றது. தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது.

535385942_1336136231403392_6534551534092

நீதிக்கான போராட்டத்தில் இம்முறை ஜெனிவா தீர்மானமானது தமிழ் மக்களின் நோக்கு நிலையில் பின்னடைவுதான். ஆனால் அந்தப் பின்னடைவு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தொடங்கிவிட்டது. அந்தத் தேர்தலில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். அரசாங்கத்திற்கு ஏழு ஆசனங்கள். தமிழ்த் தேசிய கட்சிகளில் பெரியது ஆகிய தமிழரசுக் கட்சிக்கும் ஏழு ஆசனங்கள். இதனால் அரசாங்கம் தமிழ் மக்கள் தனக்கு ஆணை வழங்கியிருப்பதாக உலகம் முழுவதும் கூறித் திரிகின்றது. எனவே ஐநாவில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுவிட்டது.

வாழ்வுரிமை இயக்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுபோல ஐநாவின் முன்னய தீர்மானங்களில் இருந்தும் புதிய தீர்மானம் வழுக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான அலுவலகம் ஒன்று மனித உரிமைகள் பேரவையில் உருவாக்கப்பட்டது. இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானமானது அந்த அலுவலகத்தின் பணியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கின்றது. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது. அது ஒரு பன்னாட்டு அலுவலகம். அதாவது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் ஏற்பாடு ஏற்கனவே சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. அந்த அலுவலகத்தைச்  சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா இல்லை. அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் விசா இல்லை. மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்து போன பின்னரும் விசா இல்லை.

இவ்வாறு ஏற்கனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும்  விடயம் சர்வதேச மயப்பட்ட பின்னரும்,புதிய தீர்மானமானது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைத்துலக உதவிகளோடு பலப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பலப்படுத்துவதென்றால் பிறகு எதற்கு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பன்னாட்டுக்  கட்டமைப்பு? சில சமயம் ஐநா கூறக்கூடும் அது ஒர் அழுத்தப் பிரயோக உத்தி என்று.அப்படிச் சொன்னாலும் ஒரு கேள்வி உண்டு.அது எதற்கான அழுத்தம்? இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான அழுத்தமா? அல்லது இலங்கை சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதில் அதற்குள்ள வரையறைகளை உணர்த்துவதற்கான ஓர் அழுத்தமா?

எனவே ஐநா தீர்மானத்தில் இருந்து தமிழ்மக்கள் படிக்க வேண்டியது என்னவென்றால்,மேற்கத்திய நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது அதாவது குறிப்பாகச் சொன்னால் ஐநாவை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது புதிய மாற்றங்களையும் புதிய வியூகங்களையும் வேண்டி நிற்கிறது என்பதுதான்.

முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ருசி கண்ட அரசாங்கம் இனி வரக்கூடிய  தேர்தல்களிலும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற முயற்சிக்கும். எனவே முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ளவேண்டும். அதன்பின் உலகத்தில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக் கொள்ள வேண்டும். தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொண்டால்தான் ஓர் அரசைப்போல சிந்திக்கலாம்;செயற்படலாம். இந்தக் கட்டுரை எந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கையில் தொடங்கியதோ அதே அறிக்கையின் இறுதிப் பகுதியை இங்கு கூறி முடிக்கலாம்…

“தமிழ்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தத்தமது அரசுகளை  ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருப்புவதில் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியல் வலுப்பெற்றால்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும். இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாமல் மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை.

https://www.nillanthan.com/7847/

சுவிற்சலாந்தின் நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.

2 months 1 week ago

Harmony.png?resize=650%2C375&ssl=1

சுவிற்சலாந்தின்  நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக உரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சுவிற்சலாந்து ஏற்படுத்திக் கொடுத்தது. சுவிற்சலாந்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது துறைசார் நிபுணர்களும் அங்குள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக கடந்த வாரம் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதுவரின் இடத்தில் காலை உணவோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இதில் அழைக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை.

சுவிற்சலாந்து ஏன் இந்த விடயத்தில் ஆர்வமாக காணப்படுகிறது? ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சில இலங்கையில் உள்ள பௌத்த மகா சங்கங்களில் உள்ள ஒரு பிரிவினரோடு இணைந்து “இமாலய பிரகடனம்”என்ற ஒரு பிரகடனத்தை வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இந்த பிரகடனத்தின் பின்னணியில் சுவிற்சலாந்தே இருந்ததாக அவதானிப்புகள் உண்டு. கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தில் முன்பு பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜதந்திரி ஒருவர் இமாலய பிரகடனத்தை உருவாக்கும் முயற்சிகளில் பின் இருந்து உழைத்ததாக கருதப்படுகிறது.அதற்கு வேண்டிய நிதி அனுசரணையையும் சுவிற்சலாந்தே வழங்கியதாக ஊகிக்கப்பட்டது.

ஆனால் ஹிமாலிய பிரகடனம் தோற்றுவிட்டது. அதைத் தயாரித்த புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் அங்குள்ள தமிழர்களின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டன. குறிப்பாக கனடாவில் அந்த பிரகடனத்துக்காக உழைத்த கனேடிய தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்புக்கு எதிராக அங்குள்ள ஏனைய எல்லாத் தமிழ் அமைப்புகளும் ஒன்று திரண்டன. இமாலய பிரகடனம் சொதப்பிய பின் சுவிற்சலாந்து மறுபடியும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மற்றொரு நகர்வை முன்னெடுக்கின்றது.

சுவிற்சலாந்துக்கும இலங்கைக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் தொடங்கியதில் இருந்து வரும் ஆண்டுடன் எழுபதாவது ஆண்டு முடிவடைகிறது.அதையொட்டி இலங்கைத் தீவில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சுவிற்சலாந்து ஆர்வமாக இருப்பதாக உத்தியோகபூர்வமாக கூறப்படுகிறது.

ஆனால் அதுவல்லாத ராஜதந்திர இலக்குகள் அங்கே இருக்கலாம் என்று ஊகிக்க முடியும். சக்திமிக்க மேற்கு நாடுகளின் ஆலோசனைகள் இன்றி சுவிற்சலாந்து தன்னிச்சையாக இதுபோன்ற சமாதான முயற்சிகளில் இறங்காது. ஏனென்றால் இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தைக் கருதிக் கூறின் இங்கு சமாதானத்தை ஏற்படுத்துவது என்பது நன்னோக்கத்தின் அடிப்படையில் மட்டும் இருக்க முடியாது.அதைவிட ஆழமான பொருளில் அங்கே சக்திமிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார,ராணுவ,ராஜதந்திர இலக்குகள் இருக்க முடியும்.

போரைப் போலவே சமாதானமும் ஓர் அரசியல் நடவடிக்கைதான்.போரைப் போலவே சமாதானத்திலும் ராஜதந்திர இலக்குகள் இருக்கும். சமாதானத்திலும் நிலையான நலன்கள் இருக்கும். சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் தேவ தூதர்கள் அல்ல. அவர்கள் ராஜதந்திரிகள்தான்.அவர்கள் தந்திரமாகத்தான் நடப்பார்கள்.வெளிப்படையாக கதைக்க மாட்டார்கள். உள்நோக்கங்களை வெளிப்படுத்த மாட்டார்கள்.

கடந்த 16 ஆண்டுகளாக ஈழத் தமிழ் அரசியலானது பெரும் போக்காக ஐநா மைய அரசியலாகக் காணப்படுகிறது. ஆனால் அதிலும் இப்பொழுது ஈழத் தமிழர்களுக்கு சலிப்பும் வெறுப்பும் சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது.சில கிழமைகளுக்கு முன்பு செம்மணி வளைவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரூடைய அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களால் எரிக்கப்பட்டது. எந்த மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு வரக் கேட்டு ஒரு விளக்கை ஏற்றி மூன்று நாட்கள் அணியாமல் வைத்திருந்தார்களோ, அதே மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அதே செம்மணி வளைவில் வைத்து எரிக்கும் ஒரு நிலைமை. அதாவது ஈழத் தமிழர்கள் ஐநா மைய அரசியலில் ஏமாற்றம் அடைய தொடங்கி விட்டார்கள் என்பதனை அது காட்டுகிறது.

இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், சுவிற்சலாந்தின் புதிய நகர்வுகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கின. ஏற்கனவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இமாலய பிரகடனத்தின் பின்னால் இருந்த அதே நாடு இப்பொழுது மீண்டும் இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

சுவிற்சலாந்து  உலகின் சமஸ்டி முன்னுதாரணங்களில் பிரதானமான ஒரு நாடாக கருதப்படுகிறது.எனவே அப்படிப்பட்ட ஒரு நாடு நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அது மிக உயர்வான ஒரு சமஸ்டி தீர்வை ஆதரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளின்படி குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் நடந்த சந்திப்பின்போது அரச பிரதி கூறியவற்றின் அடிப்படையில் சிந்தித்தால்,”எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற யாப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால வரைபுதான் பேச்சுவார்த்தை மேசையில் இருப்பதாகத் தெரிகிறது.

சுவிற்சலாந்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்ட அரச பிரதிநிதி ஒரு விடயத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார். இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணையும் உண்டு என்பதேஅது.ஏனென்றால், நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் உருவாக்கப்பட்டதே புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு ஆகும்.

நிலைமாறு கால நீதி என்பது ரணில்-மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து ஐநா முன்வைத்த ஒரு தீர்வு. நிலை மாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழுவும் ஏனைய உபகுழுக்களும் உருவாக்கப்பட்டன.இக்குழுக்களில் அப்பொழுது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகித்தார்கள்.ஜேவிபியும் அங்கம் வகித்தது.

அக்காலகட்டத்தில் சம்பந்தர் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைக் கூறி வந்தார். அதற்கு முன் தயாரிக்கப்பட்ட எல்லா யாப்புக்களும் தமிழ் மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை. ஆனால் தமிழ் மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படுவது அதுதான் முதல் தடவை என்றும் அவர் சொன்னார். ஆனால் அந்த யாப்புருவாக்க முயற்சியைக் குழப்பியது சிங்களத் தரப்புதான்.குறிப்பாக நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனை 2018ஆம் ஆண்டு ஒரு யாப்புச்சதி முயற்சியின் மூலம் தோற்கடித்தார்.

மைத்திரிபால சிறிசேன அந்த யாப்பு உருவாக்க முயற்சிகளின்போது தெரிவித்த ஒரு கருத்தை இப்பொழுது சுமந்திரன், கஜேந்திரக்குமாருக்கு பதில் அளிப்பதற்காகப் பயன்படுத்துகின்றார். அது என்னவென்றால், தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைகளை பயன்படுத்துவது என்ற முடிவின் அடிப்படையில்தான் எக்கிய ராஜ்ய என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்று. ஆனால் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பயமுறுத்தாத சொற்களைக் கொண்ட யாப்பை உருவாக்க வேண்டும் என்று கூறிய மைத்திரிபால சிறிசேனதான் அந்த யாப்பின் இடைக்கால வரைபை தோற்கடித்தார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும் .

அதுமட்டுமல்ல, யாப்புருவாக்க முயற்சிகள் தேங்கி நின்றபின் 2021 ஆம் ஆண்டு ஐநாவுக்கு ஒரு கூட்டு கடிதத்தை எழுதுவதற்காக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் கூடியபொழுது, அதில் கலந்து கொண்ட சுமந்திரன் சொன்னார், 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம். அதில் தோற்று விட்டோம்… என்று. அங்கே அவர் குறிப்பிட்ட தோல்வியுற்ற பரிசோதனை எனப்படுவது நிலைமாறு கால நீதிதான். நிலைமாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளி அவர். யாப்புருவாக்க முயற்சியின் முன்னணித் தமிழ்ப் பங்காளியும் அவர். அப்படிப் பார்த்தால் ஓர் அடிப்படைக் கேள்வி இங்கே எழுகிறது. தோல்வியுற்ற பரிசோதனையின் விளைவாகக் கிடைத்த இடைக்கால வரைவு எப்படி வெற்றி பெற்ற ஒன்றாக இருக்க முடியும்?

நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் தோல்வியுற்றதற்கு அடிப்படைக் காரணம் மைத்திரியோ ரனிலோ அல்ல. அதைவிட ஆழமான ஒரு காரணம் உண்டு. என்னவென்றால், நாட்டில் நிலை மாற்றம் ஏற்படாமலேயே நிலை மாறு கால நீதியை ஸ்தாபிக்க முயன்றமைதான்.அதற்கு ஜநாவும் பொறுப்பு.நிலைமாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் மைத்திரி மகிந்தவிடம் அப்பம் சாப்பிட்டுவிட்டு நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார்.நிலைமாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் ஈஸ்டர் குண்டுகள் வெடித்தன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக,நிலை மாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் எக்கிய ராஜ்ஜிய என்ற அந்த வார்த்தையையே பயன்படுத்த வேண்டி வந்தது. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மயக்கம் தரும் விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? வெளிப்படைத் தன்மை மிக்க ஒரு சமஸ்ரியை ஏன் தமிழ் மக்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது? அதை நோக்கி ஏன் சிங்கள மக்களை, சிங்கள மக்களுடைய கூட்டு உளவியலைத் தயார்படுத்த முடியாமல் போனது? ஏனென்றால் அங்கே நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என்பதால்தான்.

அதே இடைக்கல வரைவுதான் இப்பொழுது பேச்சுவார்த்தை மேசையில் வைக்கப்பட்டிருப்பதாக கஜேந்திரகுமார் குற்றம் சாட்டுகிறார்.அது ஒற்றை ஆட்சிப்  பண்புமிக்கது என்றும் அவர் கூறுகிறார்.இந்த விடயத்தில் சுமந்திரன் சமூக வலைத்தளங்களில் கஜேந்திரக்குமாருக்கு பதில் கூறிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அதுதொடர்பான பகிரங்க விவாதம் ஒன்றுக்குப்  போக வேண்டும். தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியும் இந்த விடயத்தை மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக விவாதித்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அது வெளிப்படைத்  தன்மையுள்ள சமஸ்டி என்றால் ஏன் வெளிப்படையாக விவாதிக்க முடியாது? இல்லையென்றால் அதற்குள்  ஏதோ கள்ளம் இருக்கிறது என்றுதானே பொருள்?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது. எனவே ஒரு தீர்வு முயற்சியை அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தேவையான அடிப்படைப்  பலத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் தமிழ்த் தரப்பு ஒன்றாக நின்று அதை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டு கஜேந்திரக்குமார் நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட உறுப்பினர்களை ஒன்றாகத் திரட்டும் ஒரு வேலையில் ஈடுபட்டார். ஆனால் அதற்குத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு தரவில்லை. அவர்கள் அதற்குத் தெரிவித்த அடிப்படைக் காரணம் என்னவென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவப் போட்டியைக்  கையாண்டு கட்சியை உடைக்க முயற்சிக்கிறது,அதன்மூலம் கட்சியைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது என்பதுதான்.ஐநாவுக்குக் கடிதம் எழுதும் விடயத்திலும் அப்படிதான் தமிழரசுக்கட்சி கருதியது.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பை கொண்டுவரக்கூடிய பலத்தோடு காணப்படுவதாக  ஐநாவும் மேற்கு நாடுகளும் நம்புகின்றன.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அரசாங்கம் ஐநாவிலும் உலகின் எல்லாத் தலை நகரங்களிலும் பெருமையாக கூறிக்கொள்கிறது. அதுபோலவே யாப்புருவாக்கத்துக்கான இடைக்கால வரைபிலும் தமிழ் மக்களின் ஆணை ஏற்கனவே பெறப்பட்டு விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் 2015ல் தொடங்கி 18 வரையிலுமான காலப்பகுதிக்குள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன என்றும் அரசாங்கம் கூறுகிறது.அதாவது இதை மேலும் கூர்மையாகச் சொன்னால், புதிய யாப்புக்கான இடைக்கால வரைவுக்கு ஏற்கனவே தமிழ் மக்களின் ஆணை உண்டு இது முதலாவது. இரண்டாவது, அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தத் தேவையான மக்கள் ஆணை இப்பொழுது தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலும் அவர்கள் இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தப் போகிறார்கள் என்று கஜேந்திரக்குமார் எச்சரிக்கின்றார்.

ஆனால் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை.எக்கிய ராஜ்ஜிய சுமந்திரனின் உழைப்புத்தான்.எனவே சுமந்திரன் அணி அதை எதிர்க்குமா?

அது மட்டுமல்ல கஜேந்திரகுமாருடன் ஒர் ஆவணத்தை எழுதி அதில் கையெழுத்திட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த விடயத்தில் வேறு விதமாகச் சிந்திப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வைக்கக் கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மாறாக ஒரு புதிய யாப்பை உருவாக்கும் அமில பரிசோதனையில் அவர்கள் இப்போதைக்கு இறங்க மாட்டார்கள் என்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுவதாகத் தெரிகிறது. எனவே ஒரு மாகாண சபைத் தேர்தலை நோக்கி அவர்கள் உழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.அதன் ஒரு கட்டமாக 13ஆவது திருத்தம் தொடர்பான கருத்தரங்குகளை ஈபிஆர்எல்எஃப் தொடர்ச்சியாக ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இக்கருத்தரங்குகளின் பின்னணியில் வரதராஜப்  பெருமாள் இருக்கிறார் என்ற ஊகம் ஒன்று இருந்தது.அண்மை நாட்களில் வரதராஜப்பெருமாள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பகிரங்கமாக, வெளிப்படையாகக்  காணப்படுகிறார். எனவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியா மேற்படி கருத்தரங்குகள்?என்ற சந்தேகம் அதிகரிக்கின்றது.அண்மையில் ஐநா கூட்டத் தொடரில் இந்தியா 13ஆ வது திருத்தத்தைக் குறித்தும் மாகாண சபைத் தேர்தல்களைக் குறித்தும் குறிப்பிட்டிருந்தது. ஐ நா தீர்மானத்திலும் அவை உண்டு.

இப்படிப்பட்டதோர் பின்னணியில் மாகாண சபைத் தேர்தல்  முதலில் வருமா? அல்லது யாப்புருவாக்க முயற்சிகள் முதலில் வருமா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

மாகாண சபைத் தேர்தல்கள் முதலில் நடக்குமாக இருந்தால், இப்போது இருக்கும் தமிழ்த் தேசியப்  பேரவை என்ற கூட்டு பெரும்பாலும் உடைந்து விடும். சுமந்திரன் அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை எப்படித் தனிமைப்படுத்துவது என்று சிந்தித்து புதிய கூட்டுக்களை உருவாக்கும்.ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வீட்டின் பக்கம் போனாலா அல்லது சைக்கிளின் பக்கம் போனாலா தமக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்றுதான் சிந்திக்கும்.தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டைப்  பயன்படுத்தி தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வழங்கிய ஆணையை எப்படிப் புதுப்பிப்பது என்று என்பிபி சிந்திக்கும். அவ்வாறு அவர்கள் தமிழ் மக்களின் ஆணையைப்  புதுப்பித்துக் கொள்வார்களாக இருந்தால் யாப்புருவாக்க முயற்சிகளில் அரசாங்கத்தின் கை ஓங்கும். கஜேந்திரக்குமார் எச்சரிப்பது போல நடக்கும்.

மாறாக,யாப்புருவாக்க முயற்சிகள் முதலில் தொடங்கப்பட்டால், அங்கேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் அதுவும் அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  எதிர்ப்பை அரசாங்கம் பொருட்படுத்துமா இல்லையா என்பது தமிழ்மக்கள்  அப்புதிய யாப்பருவாக்க முயற்சிகளுக்குக் காட்டப்போகும் எதிர்ப்பில்தான் தங்கியிருக்கும்.

https://athavannews.com/2025/1450711

போர்நிறுத்த ஒப்பந்தம் 2025

2 months 2 weeks ago

போர்நிறுத்த ஒப்பந்தம் 2025

sudumanal

ceasefire.webp-layout.png?w=770

image: Aljazeera

காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போது தேடுதல் என்பதற்கு ஏதும் அர்த்தம் இருக்குமா என்ன.

அதேபோல் இஸ்ரேலிய சிறையில் கொல்லப்பட்ட பலஸ்தீன கைதிகளின் உடலங்களும் வந்திருக்கின்றன. அவர்கள் மோசமான சித்திரவதைக்கு உட்பட்ட தடயங்கள் உடலில் இருப்பதாக ஐநா செயலாளர் நாயகம் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய சிறையிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தாம் பறிகொடுத்த காலங்களின் மீதேறி மீண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டார்கள் என நம்பி இருந்த சில குடும்பங்களின் முன் மறுபிறவி எடுத்து வந்ததுபோல் சில கைதிகள் மீண்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 வருடங்களாக, 20 வருடங்களாக கைதிகளாக இருந்தவர்களும் வந்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் கமாஸின் பிடியிலிருந்த பணயக் கைதிகள் இஸ்ரேல் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.

இருதரப்பிலும் இவர்களோடு தொடர்புடைய குடும்பங்கள் நட்புகள் என நெருக்கமானவர்கள் தமது கட்டியணைப்புக்குள்ளும் கண்ணீருக்குள்ளும் மகிழ்ச்சியை தெரிவித்து தீர்த்துவிட முடியாதபடி திணறிப் போய் நிற்கும் காட்சிகளை (இருதரப்பிலும்) பார்க்கிறபோது போரின் கொடுமையை சபிக்காமல் இருக்க முடியவில்லை. இன்னும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாக சொல்கிறார்கள். எல்லோரையுமே விடுதலை செய்வது என்பது -ட்றம்ப் இன் ஆலோசகர்கள் வடிவமைத்து, நெத்தன்யாகுவுடன் மூடிய அறைக்குள் இருந்து வெட்டித் திருத்தப்பட்டு வெளிவந்த- போர்நிறுத்த உடன்படிக்கையின் விதிகளில் ஒன்று. அந்தக் கைதிகளும் முழுமையாக வந்து சேர்வார்கள் என நேரம்சமாகவே நம்புவோம்.

இஸ்ரேல் இதுவரை விடுவித்தவர்களில் பலரும் மேற்குக் கரை பலஸ்தீன கைதிகள். 250 அரசியல் கைதிகளும் இதற்குள் அடங்குவர். அவர்களில் 157 பேர் யசீர் அரபாத் வழிநடத்திய பி.எல்.ஓ (பலஸ்தீன விடுதலை அமைப்பு) இன் இராணுப் பிரிவான Fatah உறுப்பினர்கள் ஆவர். 65 பேர் கமாஸ் உறுப்பினர்கள். 1718 பேர் எந்த குற்றமுமில்லாமல் ஆயிரக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர். இதில் இரண்டு பெண்களும் 18 வயதுக்கு உட்பட்ட 5 சிறுவர்களும் அடங்குவர்.

இது இவ்வாறிருக்க இஸ்ரேலிய ஊடகங்கள் “கமாஸ் விடுவித்த 20 பேர்களிலும் ஒரேயொரு பெண் மட்டும்தான் உள்ளடங்குகிறார். இறந்தவர்கள் எல்லோரும் பெண்களாக இருக்கின்றனர்” என்ற அவதூறை முன்வைத்திருக்கின்றன. அப்பட்டான பிரச்சார உத்தி இது. ஒக்ரோபர் 7 இல் 251 பேர் கமாஸ் இனால் பணயக் கைதிகாக பிடிக்கப்பட்டு காஸாவுக்குக் கொண்டவரப்பட்டனர். அதில் 41 பேர் பெண்கள். நவம்பர் 2024 இல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் 31 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த அமளிக்குள் அதை வசதியாக சியோனிச ஊடகங்கள் மறைத்துவிடுகின்றன.

அதேநேரம் இந்த ஒப்பந்தம் ட்றம் எழுதிய போர்நிறுத்த தீர்ப்பேயொழிய, பலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வல்ல. பணயக்கைதிகளைத் தேடி நெத்தன்யாகு ஆடிய வேட்டை 76’000 பலஸ்தீனர்களின் உயிரைக் காவுகொண்டும், காஸாவின் பௌதீகக் கட்டமைப்புகள் எல்லாவற்றையும் நாசமாக்கியும் தோல்வியில் முடிந்தது. கடைசியில், எஞ்சிய பணயக் கைதிகளை மீட்க ட்றம்ப் இனூடாக நெத்தன்யாகு கண்டுபிடித்திருக்கிற (அல்லது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கண்டுபிடித்திருக்கிற) வழிதான் இந்த ஒப்பந்தம்.

கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்ட ஒரு தேசத்தினை பாதுகாப்பு அரணாக கமாஸ் நின்று எதைச் சாதிக்க முடியும் என்ற இயலாமை, இரண்டு வருடங்களாக போர் துரத்தித் திரிந்த மண், உயிர்களை சப்பித்துப்பிய போர் அரக்கன், ஒவ்வொருநாளும் அங்குமிங்குமாக ஓடிய மக்களின் அவலம், கைதுசெய்யப்பட்ட அல்லது காணாமலாக்கப் பட்ட மனிதர்கள் குறித்த துயர், பட்டினி மரணம், குழந்தைகளின் தளிர் உடல்கள் சிதறிக் கிடக்கும் காட்சி, அதன் வலி, மருத்துவமனை தகர்ந்த நிலம். மருந்துகள் இல்லா உயிரறுநிலை, இந்த நிலைமைக்குள் நின்று கமாஸ் சிந்திக்க வேண்டிய தருணம் என எல்லாமுமாக ஒரு தற்காலிகமாகவேனும் அமைதிதேவைப்பட்டது.

gaza-life.webp?w=1024

image: Aljazeera

சம்பந்தப்பட்ட இருதரப்பும் ஓர் உருப்படியான மூன்றாவது தரப்பின் துணையுடன் அமர்ந்திருந்து உரையாடி பேரம் பேசி புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என்றெல்லாம் எட்டப்பட்ட ஒப்பந்தம் அல்ல இது. அது சியோனிச இஸ்ரேலின் தோற்றமும், அது ஏற்படுத்திய அழிவும் தொடர் சண்டித்தனமும், அகண்ட இஸ்ரேலுக்கான அயல்நாட்டு எல்லை ஆக்கிரமிப்பும், அத்தோடு அந்த நாடுகளின் இறைமையை தூசாக மதித்தல், குண்டுவீசுதல் என்ற தொடர் பயங்கரவாதச் செயற்பாட்டு வரலாறு கொண்ட நிலையில் இந்த சமாதான உருவாக்க வழிமுறையெல்லாம் சாத்தியமுமில்லை.

பணயக் கைதிகளை விடுவித்தலும், கமாஸை ஆயுதநீக்கம் செய்தலுமே இந்த ஒப்பந்தத்தின் கள்ள இலக்கு. இரண்டும் இஸ்ரேலின் காட்டுக் கத்தலாலும் காட்டுமிராண்டித்தனத்தாலும் இயலவில்லை. சர்வதேச அமைதிப்படை என்ற பெயரில் அமெரிக்கா தலைமையில் அதன் அடிவருடி அரபு நாடுகளின் படைகளும் கஸாவுக்குள் புகுந்து காலவோட்டத்தில் கமாஸ் ஒழிப்பில் இறங்கும் சாத்தியம்தான் மிக அதிகமாக உள்ளது. “கமாஸ் ஆயுதங்களை களைய வேண்டும். இல்லையேல் அந்த வேலையை நாம் செய்வோம்” என ட்றம்ப் மிரட்டுகிறார். இன்னொரு இடத்தில் தனது விமானத்தினுள் நின்று பத்திரிகையாளருக்கு சொல்கிறபோது, “அவர்கள் தாம் ஆயுதங்களைக் களைய கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்” என்கிறார். ஒப்பந்தத்தில் என்னதான் எழுதப்பட்டிருக்கிறது. உடனடி ஆயுதக் களைவா அல்லது கால அவகாசத்தடனான களைவா என தெரியவில்லை.

இரு-அரசுத் (two-state) தீர்வின் மூலம் பலஸ்தீன அரசை அங்கீகரித்து, பகைநிலைமையை கணக்கில் எடுத்து எல்லைகளை கறாராக வகுத்து, அதன் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் எந்த அம்சமும் இந்த ஒப்பந்தத்தில் கிடையாது. அப்படியான நோக்கத்தில் ட்றம்ப் பேசியதும் கிடையாது. மாறாக சர்ச்சைக்குரிய ஜெரூசலமை ஏற்கனவே இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த ட்றம்ப் வரைந்த ஒரு சமாதான ஒப்பந்தம் என்னவிதமான அரசியல் சாணக்கியத்தைக் கொண்டதாக இருக்கும் என சொல்ல வேண்டியதில்லை.

தொடர்ச்சியாக இரு-அரசு தீர்வை எதிர்க்கும் நிகழ்ச்சிநிரலைக் கொண்ட சியோனிஸ்டுகளின் அண்மைக் கால சாட்சியாக நெத்தன்யாகு ஐநாவில் -வெறும் இருக்கைகளைப் பார்த்தபடி- பேசிய கடைசி உரை அமைந்திருந்தது. “பலஸ்தீன அரசை உருவாக்குவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்றார் நெத்தன்யாகு. இதுதான் வரலாறு. கமாஸ் உம் ஆரம்பத்தில் இரு-அரசுத் தீர்வை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அதாவது கமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை, இஸ்ரேல் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. என்றபோதும் இரு-அரசுத் தீர்வை முன்வைத்து எல்லைகளை வரையறுத்த (யசீர் அரபாத் பங்குகொண்ட) ஒஸ்லோ ஒப்பந்தத்தை (1993) சிதைப்பதற்கு கமாஸின் ஓர்-அரசுத் (one-state) திடசங்கற்பம் தமக்கு உதவி செய்யும் என சியோனிஸ்டுகள் கணித்திருந்தனர்.அதனால்தான் கமாஸ் இன் தோற்றத்தை இஸ்ரேல் ஆதரித்து ஊக்குவித்தது. உதவிசெய்தது. Fatah க்கு எதிரான கமாஸின் சகோதர இயக்கப் படுகொலைக்கு எண்ணெய் ஊற்றியது. இப்போ கமாஸ் ஓர்-அரசுத் (one state) தீர்வு பற்றி பேசுவதில்லை.

gaza-npr.webp?w=1024

image: npr .org

பலஸ்தீன மக்களின் இறைமையை மதிக்க வேண்டும். அவர்கள் தம்மைத் தாமே ஆள உரிமை கொண்டவர்கள். ஆள்பவர்கள் யார் என்பதை அவர்களேதான் தீர்மானிக்க வேண்டும். கமாஸ் தாம் அதில் தலையிடப் போவதில்லை என்று திட்டவட்டமாச் சொல்லியிருக்கிறது. ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்த, உறுதிப்படுத்த ஐநாவால் முடியாதா என்ன. எப்போதும் நாகரிகத்தையும் ஜனநாயகத்தையும் கற்றுத்தர வகுப்பெடுக்கும் மேற்கின் காலனிய மனோபாவம் பலஸ்தீன அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க வருகிறது. ஈராக்கைச் சிதைத்த போர்வெறியன் ரொனி பிளேயர் மேயராக (ட்றம் உடன்) இருப்பாராம். பிரிட்டிஸ் சாம்ராச்சியம் 1948 இல் உருவாக்கிய இந்தப் பிரச்சினை வளர்ந்து இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு குற்றவுணர்வுகூடக் கிடையாதா இந்த முன்னாள் காலனியவாதிகளுக்கு. பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காத இந்த ஒப்பந்தம் நவகாலனிய கட்டமைப்புடன் முன்வைத்திருக்கிற செற் அப் இது. இந்த சூதாட்டம் பலஸ்தீனப் பிரச்சினையை இன்னும் சேறாட வைக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது.

சமாதான காலம் என வர்ணிக்கப்படும் இந்தக் காலத்தின் ஆயுள் எவளவு குறுகியதாய் அமையும் என தெரியாது. அது பலஸ்தீன மக்கள் மூச்சுவிடவும், தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், நிம்மதியாய் இருந்து பசியாற உண்ணும் கனவை ஓரளவேனும் நிறைவேற்றும் காலமாகவும், குடும்பங்கள் ஒன்றுசேரும் காலமாகவும், இஸரேலினால் பிடித்துச் செல்லப்பட்ட கைதிகளின் வரவும் மகிழ்ச்சியும் கண்ணீரும் புத்துணர்வும் வாழ்தலின் மீதான உந்துதலும் என ஒரு மனிதஜீவியாய் அவர்களை தூக்கி நிறுத்தும் காலம். இது நீண்டு வளர வேண்டும். ஒரு தெளிவான அரசியல் தீர்வின் எல்லைவரை இது நீள வேண்டும் என அவாவுதல் ஒரு மனித வேட்கை. ஒரு கனவு. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். பலஸ்தீனம் என்ற அரசை உறுதிசெய்வதுவரை போகாத எந்த ஒப்பந்தமும் நிரந்தரமான அரசியல் தீர்வை தரப்போவதில்லை, மீண்டும் நிம்மதியாக சனம் இருக்க வழிசமைக்கப் போவதுமில்லை என்பதை மட்டும் வேதனையோடு சொல்ல வேண்டியுள்ளது!

https://sudumanal.com/2025/10/17/போர்நிறுத்த-ஒப்பந்தம்-2025/

உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று

2 months 2 weeks ago

17 Oct, 2025 | 05:09 PM

image

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று உலகளாவிய அளவில்  வறுமை ஒழிப்பு முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. இந்த தினம் வறுமையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு விழிப்புணர்வையும், சமூக ஒற்றுமையையும், மனிதநேயம் மற்றும் நீதித்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. வறுமை  பொருளாதார குறைவு மட்டுமல்ல; அது கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, மனநலம், சமூக பங்களிப்பு போன்ற அனைத்து பரிமாணங்களையும் பாதிக்கும் ஒரு சமூகவியல் மற்றும் உளவியல் பிரச்சினையாகும்.

வறுமை சூழலில் வாழும் நபர்கள் அடிக்கடி சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக மாறி, அவர்களது மனநலமும், சமூக பங்குபற்றலும் பாதிக்கப்படும்என உலகளாவிய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன, வறுமை காரணமாக மனஅழுத்தம், தனிமை, மனச்சோர்வு, எதிர்பாராத பிரச்சினைகள் அதிகரிக்கின்றன, இது அவர்களின் செயல்திறனை, குடும்ப உறவுகளை, சமூக தொடர்புகளை நேரடியாக பாதிக்கிறது. சமூக உளவியல் ஆய்வுகள், வறுமை மற்றும் குற்றச்செயல்கள், வன்முறை சம்பவங்கள், மற்றும் மனநலம் குறைவான வாழ்க்கை முறைகளுக்கு இடையிலான தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன, எனவே வறுமை பொருளாதார பிரச்சினை அல்ல, அது மனித உரிமைகள், சமுதாய நலன் மற்றும் மனநல மேம்பாட்டிற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலக வறுமை ஒழிப்பு தினத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தில் ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் நீதித்தன்மையை ஊக்குவிப்பதாகும். சமூக விழிப்புணர்வு செயற்பாடுகள், பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு வறுமையை எதிர்கொள்ளும் நுட்பங்களை அறிவிப்பதற்கும், வறுமையால் பாதிக்கப்பட்டோரின் குரலை உலகிற்கு கொண்டு வருவதற்கும் உதவுகின்றன. சமூக உளவியலின் ரீதியில், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் தனிநபர் மனநலத்தை மேம்படுத்துவதோடு, சமூகத்தில் பொது நலன், அன்பு மற்றும் ஒற்றுமையை வளர்க்கும். உதாரணமாக, சிறிய கடன் திட்டங்கள், தொழில்நுட்ப பயிற்சிகள், சமூக ஆதரவு குழுக்கள், மனநலம் மேம்படுத்தும் உளவியல் கலந்த பயிற்சிகள் ஆகியவை வறுமை சூழலில் உள்ள நபர்களை சுயாதாரமாகவும், மனநலக்கூடியவர்களாகவும் உருவாக்குகின்றன. இது அவர்களை மட்டும் அல்ல, அவர்களது குடும்பங்களை, சமூகத்தை வளமாகவும் சக்திவாய்ந்தவையாகவும் மாற்றும். 

WhatsApp_Image_2025-10-17_at_11.22.55_AM

ஆராய்ச்சிகள் காட்டும் விதமாக, வறுமை மற்றும் மனஅழுத்தம் இடையிலான தொடர்பு அதிகம் உள்ளது. வறுமை காரணமாக சமூக தனிமை, கல்வி குறைவு, தொழில் வாய்ப்பு இழப்பு போன்ற காரணிகள் தனிப்பட்ட வாழ்க்கையின் மட்டத்திலும், சமூகத்திற்கும் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சில ஆய்வுகள் காட்டுகின்றன, வறுமைச் சூழலில் வளர்ந்த குழந்தைகள் பள்ளியில் குறைவான சிகிச்சை மற்றும் கல்வி ஆதரவு காரணமாக நுண்ணறிவு, சமூக கலை மற்றும் மனநல மேம்பாட்டில் பின்தங்குகின்றனர். இதேபோல், பெரும்பாலான சமூகங்கள் வறுமை காரணமாக குற்றச்செயல்கள், குடும்ப வன்முறை மற்றும் சமூக குழப்பங்களை எதிர்கொள்கின்றன. இதனால், வறுமை ஒழிப்பில் அரசாங்கம், சமூக அமைப்புகள், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்படுதல் அவசியம்.

உலகளாவிய அளவில், வறுமை குறைபாடு மற்றும் மனநலம் இடையிலான தொடர்பு மிகவும் வலுவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கி தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 9.2% மக்கள் ஆட்கள் தினசரி $2.15 ( டாலருக்கும்) க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்தனர், இது வறுமையின் அடிப்படை அளவாகக் கருதப்படுகிறது. இலங்கையில், வறுமை விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் மாறுபட்டுள்ளது; குறிப்பாக வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் வறுமை விகிதம் 15-20% வரை உள்ளது, இது குறிப்பிட்ட இடங்களில் கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக ஆதரவின் குறைவு காரணமாக அதிகரித்துள்ளது. இதனால், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள்  பொருளாதார உதவிகளால் மட்டுமல்ல, கல்வி, உளவியல் ஆதரவு, தொழிற்பயிற்சி மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவற்றை இணைத்து வடிவமைக்கப்பட வேண்டும்.

வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மனிதநேயம், சமுதாய நலன், மனநல மேம்பாடு ஆகியவற்றையும் முன்னிறுத்த வேண்டும். மனஅழுத்தம் குறைக்கப்படும் விதமாக, சமூக ஆதரவு, உளவியல் ஆலோசனை, சமூக-உளவியல் பயிற்சிகள் மற்றும் தொழிற்பயிற்சி வழங்கப்பட வேண்டும். சில சமூக உதாரணங்களை எடுத்துக்கொண்டால், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள சில பெண்கள் கூட்டமைப்புகள், வறுமை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சி, நுண்ணறிவு வளர்ப்பு பயிற்சி மற்றும் குறைந்த வட்டி கடன் வழங்குவதன் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழும் திறனைக் கண்டுள்ளார்கள். இதுபோல, உலகின் பல்வேறு இடங்களில் நடந்த சமூக முன்னேற்றங்கள் காட்டுகின்றன, சமூக ஆதரவு மற்றும் சுயமுன்னேற்ற திட்டங்கள் வறுமையை குறைக்கும் மட்டுமல்ல, மனநலத்தை மேம்படுத்தி சமூக ஒற்றுமையை உறுதி செய்கின்றன.

உலக வறுமை ஒழிப்பு தினம்  நினைவுநாள் அல்ல; அது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கடமையான நாளாகும். உலக வங்கி, ஐ.நா., ஐ.டி.ஓ. போன்ற அமைப்புகள் வறுமை குறைப்பில் நிதியுதவி, கல்வி, மருத்துவ சேவை மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன. அதேபோல், தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வறுமை பாதிக்கப்பட்ட சமூகங்களில் தொழிற்சாலை, தொழில்நுட்ப பயிற்சி, கல்வி வாய்ப்புகளை உருவாக்குகின்றன. வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் உளவியல் ஆதரவு மிக முக்கியமானது; மனஅழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையையும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்க உதவுகிறது. இதன்மூலம் நபர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகமும் வளமாகும்.

மேலும், புதுமையான முறைகள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் சமூக சுயவிவரங்களை இணைத்துப் பயன்படுத்துதல் அவசியம். சமூக வலைத்தளங்கள், மின்னணு கல்வி, ஆன்லைன் தொழிற்பயிற்சி வாய்ப்புகள், சமூக ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் வறுமை பாதிக்கப்பட்ட நபர்களின் குரல் உலகிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. இவை அவர்களுக்கு கல்வி, உளவியல் ஆதரவு மற்றும் சமூக பங்களிப்பு வாய்ப்புகளை வழங்கும். இதனால், வறுமை குறையும் மட்டுமல்ல, சமூகத்தில் நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் ஒற்றுமை வளர்ந்து சமூகத்தை முழுமையாக வளப்படுத்தும்.

ஆகையால், உலக வறுமை ஒழிப்பு தினத்தில் நாம்  விழிப்புணர்வு காட்டுவதில் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடமையை ஏற்க வேண்டும். சமூக ஒற்றுமை, மனிதநேயம், நம்பிக்கை, கல்வி, உளவியல் ஆதரவு மற்றும் தொழிற்திறன் வளர்ச்சி ஆகியவற்றின் இணைப்பு மூலம் மட்டுமே வறுமை முழுமையாக குறைக்கப்படலாம், மனநலம் மேம்படும், மற்றும் சமூக ஒற்றுமை உறுதியாகும். எனவே, வறுமை ஒழிப்பு  பொருளாதார நடவடிக்கை அல்ல, அது மனிதநேயம், சமூக நலன், கல்வி, மனநலம் மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த செயல்முறையாக இருக்க வேண்டும்.

உலக வறுமை ஒழிப்பு தினம்  ஐப்பசி- 17) - கவிதை

வறுமை எங்கு படலமாய் பயணிக்கும்,

மனங்களில் அசைவு, கண்களில் நீர் விட்டு வரும்.

பசிக்கிடந்த குழந்தைகள், கைகோர்த்த முதியோர்,

உதவி வேண்டிய ஒரு உலகம் நமதே!

ஒரு கையேடுப்போம், சின்ன உதவி செய்தோம்,

மனங்கள் நிம்மதியால் பரிமாறும் மகிழ்ச்சி.

உளவியல் சிந்தனை, நம் மனதை மாற்றும்,

பொதுமனித நேயம் காற்றில் பரப்பும் ஒளி.

சமூக ஒற்றுமை – வறுமையை எதிர்க்கும் கருவி,

கல்வி, வேலை வாய்ப்பு, வாய்ப்பு சமநிலை.

நாம் செய்யும் சிறிய முயற்சிகள்,

ஒரு பெரிய உலக மாற்றத்தை ஆரம்பிக்கும்.

மனநலம் உயர்ந்து, மன அழுத்தம் குறையும்,

உதவி பெற்றவன் கூட மன உறுதி பெறும்.

பகிர்வோம் உணவு, அறிவு, வாடிகையற்ற அன்பு,

அதை நம்முள் வாழும் சமூகத்தோடு இணைக்கும்.

நிகழ்காலம் மட்டும் அல்ல, எதிர்காலம் நினைத்து,

நாம் செய்யும் முயற்சி, மற்றவருக்கு வாழ்க்கை தரும்.

பொதுமக்கள் சேர்ந்து, சிறு முயற்சிகளை தொடங்கினால்,

வறுமை என்ற அலைகள் நின்று விடும் உலகம்.

அன்பும் பகிர்வும், உண்மை மனித நேயம்,

உளவியல் அறிவு சேர்ந்து ஒரு சூரியன் போல வீசும்.

முடிவில் நம் சமூகமும் நம் மனமும்,

சாந்தி, சுகம், வளம் பெற்ற உலகத்தை நோக்கும்.

வறுமை ஒழிப்பு தினம் – ஒரு நினைவூட்டல்,

ஒவ்வொருவரும் சமூக மாற்றத்தின் அங்கமாகிடு!

நடராசா கோபிராம் 
உளவியல் சிறப்புக்கலை மாணவன் 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

https://www.virakesari.lk/article/227978

சமாதானத்துக்கான நோபல் பரிசு

2 months 2 weeks ago

சமாதானத்துக்கான நோபல் பரிசு

sudumanal

maria.webp?w=628

2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார்.

இதை தன்னிடம் அவர் சொன்னதாக ட்றம்ப் சொல்லிவிட்டு, அத்தோடு சேர்த்து ஒன்றை நகைச்சுவையின் நிழலினுள் நின்று சொன்னார். “அவர் இப்படி என்னிடம் சொன்னபோது, அப்படியாயின் அந்தப் பரிசை என்னிடம் தந்துவிடு என நான் சொல்லவில்லை” என்றார். இந்த நிழலினுள் அவர் வெளிச்சமிடுவது மரியா கொரீனா தன்னைவிட தகுதியில்லாதவர் என்பதையே என சந்தேகப்பட இடமிருக்கிறது.

யார் இந்த மரியா கொரீனா. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர். தீவிர வலதுசாரி. ஆட்சியதிகாரக் கனவில் இருப்பவர். இவர் வெனிசுவேலாவின் பெரும் முதலாளியொருவரின் மகள். பொறியியல்துறை பயின்றாலும் தந்தையைப் போலவே பெரு முதலாளியாக இருக்கிறார்.

பெரும் எண்ணைவளம் கொண்ட நாடு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் நாயகனாகத் திகழ்ந்த சாவேஸ் ஏகாதிபத்தியங்களின் -குறிப்பாக அமெரிக்காவின்- சுரண்டலிலிருந்து தனது நாட்டின் எண்ணை வளத்தை தடாலடியாக மீட்டு எடுத்தவர். அமெரிக்கக் கம்பனிகள் வெனிசுவேலா எண்ணைவள நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கிடைத்த -நாட்டுக்கு சொந்தமான- இலாபத்தை மக்கள் நல அரசுக் கட்டமைப்புக்குள் திசைதிருப்பியவர்.

அதேநேரம் மரியா கொரீனா அமெரிக்காவால் இரண்டு தசாப்தங்களாக நிதியளிக்கப்பட்டு வெனிசுவேலா அரசினை கவிழ்க்க ஊக்குவிக்கப்பட்டவர். வெனிசுவேலா அரசை சர்வதேச ரீதியான கடுமையான அச்சுறுத்தலாலேயே அகற்ற முடியும் எனவும் அதற்கான சக்திகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தனது நாட்டின்மீது தாக்குதல் தொடுக்க அழைத்தவர். அதேபோல வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்ததின் மூலம் பலரது பட்டினி மரணத்துக்கு ஆதரவாக இருந்தவர்.

சாவேஸ் க்கு எதிராக இருந்து விமர்சித்தவர் மரியா கொரீனா. 2013 இல் சாவேஸ் இறந்தபின், இப்போதைய தலைவர் மடுரோ தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு சாவேஸ் வழியில் ஆட்சியைத் தொடங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக மரியா கொரீனாவும் அவரது கட்சியான “வென்ரே வெனிசுவேலா” உம் செயற்பட்டனர். நெத்தன்யாகுவின் “லிக்குவிட்” கட்சியோடு அவர்கள் கூட்டு ஒப்பந்தமொன்றும் செய்துகொண்டார்கள். “அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் தமது கூட்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, பூகோள அரசியல் ரீதியிலும் பாதுகாப்பு அடிப்படையிலும் அது அமைந்துள்ளது” என்றனர் அவர்கள்!. அதை அவர்கள் “கூட்டு நடவடிக்கை” என வேறு அறிவித்தனர்

maria-2.jpg?w=1024

இதனடிப்படையிலேயே வெனிசுவேலாவில் ‘சுதந்திரத்தை மீட்க’ இஸ்ரேல் உதவ வேண்டும் என நெத்தன்யாகுவுக்கு அழைப்பு விடுத்தனர். காஸா இனப்படுகொலையைக்கூட அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக நெத்தன்யாகுவின் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர், மரியா கொரீனாவும் அவரது கட்சியும்!. தான் வெனிசுவேலாவின் தலைவராக வந்தால் இஸ்ரேலின் ரெல் அவீவ் இலுள்ள வெனிசுவேலா தூதரகத்தை ஜெரூசலேமுக்கு மாற்றுவேன் என்று வேறு சூளுரைத்தார் அவர்.

அமைதிக்கான நோபல் பரிசின் சூட்சுமம் இங்குதான் புதைந்திருக்கிறது. வெனிசுவேலாவில் சுதந்திரத்தை மீட்க, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளிகளையும் உள்ளே அழைத்து, மீண்டும் சுரண்டவிட்டு, தானும் சுரண்டி, தமது செல்வத்தைப் பெருக்க விளையும் அவரது குரலிற்கு அங்கீகாரம் கொடுத்து, வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சூழ்ச்சி நிறைந்தது, இந்தப் பரிசு அறிவிப்பு!. கம்யூனிசமே நிலவாத இந்த உலகில் வெனிசுவேலாவில் கம்யூனிசத்தை அகற்றி ஜனநாயகத்தை மலர்விக்க வேண்டும் என்ற மேற்குலகின் கதையாடலானது தமது சுரண்டலை தொடர பாவிக்கும் லைசன்ஸ். அதற்கான கதவைத் திறக்க போராடுபவர் மரியா கொரீனா.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, “நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கடவுளே, என்னால் நம்பவே முடியவில்லை” என்றார் மரியா கொரீனா. அவரே தான் அதற்குத் தகுதியில்லாதவர் என்பதை இந்த வார்த்தைகளில் உளறியிருக்கிறார். ட்றம்புக்கு தான் அதை சமர்ப்பிப்பதாக வேறு சொன்னார். பூகோள அரசியல் புகுந்து வீசும் இடைவெளி சமாதானத்துக்கான நோபல் பரிசையும் விட்டுவைக்கவில்லை என்பது தொடர் வரலாறு.

கடந்த காலங்களில் சமாதானத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட பலரின் மீதும் இந்த நச்சுக் காற்று புகுந்துவிளையாடவே செய்தது. தனது பதவிக் காலத்தில் ஒரேநேரத்தில் ஆறு போர்களைச் செய்த ஒபாமாவுக்கு 2009 இல் நோபல் பரிசு கிடைத்தது. தலிபான் ஏகாதபத்தியங்களின் எதிரியாக மாறியபோது, தலிபான்களால் சுடப்பட்ட பதினேழே வயதான மலாலா யூசாப்சை (Malala Yousafzai ) கல்விப் புரட்சி செய்ததாக ஒரு கதையாடலை உருவாக்கி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேகாலத்தில் கல்விக்காக அதிகமும் தலைமறைவாக இருந்து உழைத்த மலாலா ஜோயா ( Malala Joya) இருட்டடிப்புச் செய்யப்பட்டார். ஏனெனில் அவர் சோவியத் யூனியன் மற்றும் தலிபான்களுக்கு மட்டுமல்ல, மேற்குலகுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தார். (article Malala Joya)

நோபல் பரிசை வென்ற இளம் மலாலா இப்போதைய காஸா இனப்படுகொலை குறித்து மனிதாபிமான பெறுமதிக்கு அப்பால் சென்று பேசவில்லை. மேற்குலகின் தயாரிப்பான அவர் அரசியல் ரீதியில் மேற்குலகை செல்லமாகத்தன்னும் தீண்டாத வார்த்தைகளை உதிர்க்கிறார். நெத்தன்யாகுவையும் இஸ்ரேலையும் மட்டும் விமர்சித்து நழுவிவிடுகிறார்.

மியன்மாரின் ஜனநாயகப் புரட்சியாளர் என கதையாடப்பட்டு 1991 இல் நோபல் பரிசைப் பெற்றவர் Aung San Suu Kyi அவர்கள்!. அவரது நிழல் ஆட்சியில், மியன்மார் இராணுவத்தால் றொகிங்கா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனவழிப்பாக ஐநாவால் கூட சுட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை அவர் விமர்சிக்கவோ, அதற்கெதிராக குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை.

எரித்திரியாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என 2019 இல் எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2020 இல் அவர் எத்தியோப்பியாவின் வட பகுியிலுள்ள Tigray மக்கள் மீது போர் தொடுத்து இனச்சுத்திகரிப்பு செய்து இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தார்.

வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என கென்றி கிஸிங்கருக்கு 1973 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிக்சனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கிஸிங்கர் 500’000 தொன் குண்டுகளை லாவோஸ் மற்றும் கம்போடியா மீது விசியவர். ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்களை கொன்றவர். வியட்நாம் புரட்சிப் படைகளின் தடவழியாக அவை இருந்ததாலும், ‘கம்யூனிசத்தின்’ பரவலாக்கலை தடுப்பதற்காகவும் அப்போது மேற்குலகின் சார்புநிலை கொண்ட கம்போடிய ஆட்சியை தக்கவைக்கவுமாக இந்த ‘காப்பெற்’ குண்டுவீச்சு நடத்தப்பட்டது. அதன் சூத்திரதாரியான கிஸிங்கர் நோபல் பரிசை வென்றார்.

இதுதான் சமாதானத்துக்கான நோபல் பரிசு -பெரும்பாலான சந்தர்ப்பங்களில்- நடந்து சென்று கொண்டிருக்கிற வழித்தடம். இதை ட்றம்ப் அறியாமலில்லை. மிக இலகுவான ஒரு கேள்வியால் அவர் கேட்கிறார். “அப்படி ஒபாமா என்னத்தைக் கிழிச்சார் நோபல் பரிசைப் பெற” என. உண்மைதான். நாம் ட்றம்ப் இன் கோரிக்கையை இந்த வழித்தடத்துக்கு வெளியே வைத்து நோக்கி, சமாதானத்துக்கான நோபல் பரிசினை புனிதப்படுத்தும் மனநிலையோடுதான் ட்றம்ப் அவர்களை (நான் உட்பட) கேலிசெய்கிறோமா என்று யோசிக்க வைக்கிறது. இந்த சமாதானத்துக்கான நோபல் பரிசின் வரலாற்றைப் பார்த்தால் ட்றம்புக்கு ஏன் அந்த ஆசை வரக் கூடாது!

விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது?

2 months 2 weeks ago

விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது?

12 Oct 2025, 7:00 AM

Who is Vijays politics for ?

பாஸ்கர் செல்வராஜ்

கரூரில் நடைபெற்ற விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  மக்கள் உயிரிழந்தது எதிர்பாராத விபத்தா?  அந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்களின் பொறுப்பற்ற அரசியல் நோக்கம் செய்த கொலையா? என்றுதான் அந்த விவாதம் சென்று இருக்க வேண்டும். அப்படியான விவாதம் கூட்டத்தை நடத்திய விஜய்யைக் குற்றவாளி ஆக்கி அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கும்.

அதனைத் தவிர்க்க அரசியல் சமூக ஊடக வலிமையைக் கொண்டு  அரசின் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாடுகளால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பதாக விவாதத்தைத் திசைதிருப்பி திமுக அரசைப் பொறுப்பாக்கி முதன்மைக் குற்றவாளி ஆக்கி விஜய்யை இதிலிருந்து விடுவித்தார்கள். 

விஜய் அரசியலின் குழப்பம்

பாதிக்கப்பட்ட மக்களுடன் பொறுப்புடன் நின்று அரசு வேகமாக செயலாற்றியதற்கு உள்நோக்கம் கற்பித்து பொய்யான கூட்ட நெருக்கடி சதிக் கோட்பாட்டைக் கட்டமைத்து அங்கே நடந்தது சதியா? இல்லையா? என்பதாக சொல்லாடலைக் கட்டமைத்தார்கள். இது மரணம் நடந்தவுடன் தொடங்கி விட்டது. இவ்வளவு வேகமாக இதனைக் கட்டமைக்கும் அளவுக்கு அரசியல் அறிவும் ஊடக பலமும் விஜய்யிடம் இல்லை. 

இம்மாதிரியான குயுக்தியும் அரசியல் ஊடக பலமும் பாஜகவிடம்தான் இருக்கிறது. ஆனால் இதுவரையிலும் பாஜகவை எதிர்ப்பதாக விஜய் பேசிவந்த நிலையில் அவர்கள் ஏன் இந்த அளவுக்கு தனது மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. அது விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையிலான உண்மையான உறவைப் பற்றிய ஐயத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் நுழைவு அதிமுக வாக்கு வங்கியில் உடைப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருதும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி விஜய்யின் பக்கம் ஒற்றுமையாக நின்று திமுகவைக் குறிவைத்துத் தாக்கினார்கள்.

திமுக கூட்டணியில் இடதுசாரிகள் திமுகவுடன் நின்றார்கள். சற்று காலதாமதத்துடன் விசிக தலைவர் விஜய்யைப் பாஜகவின் ஆள் என்று தாக்கியதோடு அரசையும் விமர்சனம் செய்தார். காங்கிரசின் ராகுல்காந்தி விஜய்க்கு தொலைபேசியில் மறைமுக ஆதரவு காட்டினார். இந்த அரசியல் நகர்வுகள் விஜய்யின் அரசியல், அதிமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு எதிராக இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளின் முரண்பட்ட செயல்பாடுகள் காண்பவர்களைக் குழப்புவதாக இருக்கிறது. 

வெற்றி எண்ணிக்கையும் செயற்கை நுண்ணறிவும்  

Who is Vijays politics for ?

இந்தக் குழப்பத்தைத் தேர்தல் அரசியலின் நோக்கத்தில் இருந்து பார்ப்பதன் மூலம்தான் தீர்க்க முடியும். தேர்தலின் நோக்கம் வெற்றிக்கான வாக்கு எண்ணிக்கையை அடைந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து “உரிய பலனைப்” பெற்றுக் கொள்வது. தேர்தலில் வெற்றிபெற தேவையான வாக்கு எண்ணிக்கையை அடைய ஒவ்வொரு ஊரிலும் உள்ள வாக்காளர், அவரது சாதி, பொருளாதார அரசியல் பின்புலம் அனைத்தும் கட்சிகளிடம் தரவுகளாகத் திரட்டப்பட்டு விட்டது.

தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு அந்தத் தரவுகளைப் பகுத்துப் பார்த்து எவ்வளவு வாக்குகள் தன்னிடம் இருக்கிறது; வெற்றியடைய எவ்வளவு வாக்குகள் வேண்டும் என்பதைக் களஆய்வு, மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்புகள் கொண்டு துல்லியமாகக் கணக்கிடும் சூழல் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் தேர்தல் அரசியலின் பரிமாணத்தையே மாற்றி இருக்கிறது எனலாம். அரசியல், பண, ஊடக பலமும் இந்த நுட்பத்தையும் கைக்கொண்டவர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையை தேர்தல் சனநாயகம் அடைந்து இருக்கிறது. 

திமுக-அதிமுக ஆகிய இருகட்சிகளும் முப்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று சமபலத்தில் இருந்து வருகின்றன. பகுதிவாரியாக இதில் வேறுபாடு நிலவினாலும் சமீபத்திய தேர்தல் வரை இதில் பெரிய மாற்றம் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வலுவாக இருக்கும் மற்ற கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வெற்றிக்கான எண்ணிக்கையை அடைய இருதரப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தார்கள். ஜெயலிலிதா இறப்புக்குப்பின்  பாஜக அதிமுகவைத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. அடிமைப்பட்டு அதிமுகவால் ஒன்றியத்திடம் அடகு வைக்கப்பட்ட தமிழ்நாட்டில் அப்போது பார்ப்பனியம் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது. 

கொள்கை அரசியலாக மாறிய தேர்தல் அரசியல்

பாஜகவின் அந்த நுழைவு தமிழ்நாட்டு அரசியலில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு தரப்பாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர் தரப்பாகவும் மாற்றியது. அது பிற்போக்கு பார்ப்பனிய ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அதற்கு எதிரான சமூகநீதி முற்போக்கு திராவிட இடதுசாரிகள் இன்னொரு பக்கம் என்பதாகத் தெளிவாகக் கோடிட்டு பிரித்தது. வெறும் எண்ணிக்கை சார்ந்த வாக்கு அரசியல் என்பதைத் தாண்டி பார்ப்பனிய எதிர்ப்பு- மாநில தன்னாட்சி கொள்கை சார்ந்த அரசியலாக தமிழ்நாட்டு அரசியலை மாற்றி அமைத்தது. 

Who is Vijays politics for ?

அப்படிக் கொள்கை சார்ந்து பிரிந்தும் அதன்பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் திமுக அணி வெற்றி பெற்று இருப்பதை வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது வாக்காளர்களிடமும் தமிழக முதலாளிகளிடமும் நிலவும் இருவேறு பண்புகளின் வெளிப்பாடுகள். வாக்காளர்கள்  பெரும்பாலும் பிற்போக்கு  குழுவாத சாதிய எண்ணம் கொண்டவர்கள் என்றாலும் அந்தச் சாதியவாத குழுக்களுக்குள் ஏற்றத் தாழ்வு வளர்ந்து சாதியக் குழுக்கள் உடைப்பைக் கண்டிருக்கின்றன. அதனால் முன்பு வாக்காளர்களிடம் மேலோங்கி இருந்த சாதியக் குழுவாத எண்ணத்தைப் பின்தள்ளி சொந்த நலன் சார்ந்த வர்க்க எண்ணம் தற்போது ஆக்கிரமித்து வருவதை இது உணர்த்துகிறது. இது தற்காலிகமான அளவு மாற்றம்தான். முழுமையான வர்க்க பண்பு மாற்றமல்ல என்றாலும் இது கணக்கில் கொள்ளப்பட வேண்டிய மாற்றம். 

இது சமூகத்தில் நிலவும் பழைய சாதிய பார்ப்பனிய அரசியல் பண்பாடு மற்றும் புதிய வளர்ந்து வரும் சாதியச் சமத்துவ சமூகநீதி அரசியல் பண்பாடு ஆகிய இருவேறு கூறுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படி மேலே இருவேறு அரசியல் பண்பாட்டுக் கூறுகள் நிலவுகிறது என்றால் அதனைத் தாங்கி நிற்கும் பொருளாதார அடித்தளத்தில் பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள், சமூகநீதி ஆதரவு முதலாளிகள் என்ற இருபிரிவுகள் இருக்கிறது என்றுதானே பொருள். ஆனால் எல்லோரும் முதலாளிகள்தான்; திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் திராவிடக் கட்சிகள்தான் என்பதாக நமது கண்கள் இரண்டையும் ஒன்றாக இதுவரை கண்டு வந்திருக்கிறது. ஆனால் அதனுள் முரண்பட்ட இருகூறுகள் இயங்கி வந்திருக்கிறது. (உலகில் ஏகாதிபத்தியத்தோடு சோசலிசமும் வளர்ந்த காலத்தில் பொதுவுடைக் கூறுகள் நம்மிடம் தோன்றி சோசலிச வீழ்ச்சியுடன் அந்தக் கூறும் வீழ்ச்சி கண்டிருக்கிறது)

இந்த வேறுபாடு பாஜகவின் நுழைவிற்குப் பிறகு கூர்மையடைந்து அது தேர்தல் அரசியலில் இருந்து கொள்கை அரசியல் மாற்றமாக வெளிப்பட்டு இருக்கிறது. வாக்காளர்களையும் முதலாளிகளையும் அவரவர் பண்புக்கு ஏற்ப இருபக்கமாகப் பிரித்து இருக்கிறது. அப்படிப் பிரிந்த பிறகு விஜய் ஏன் இருதரப்பையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பது தெரியாததால் அரசியலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அது தேர்தல் வெற்றிக்கான எண்ணை அடைய செய்யப்பட்ட ஏற்பாடு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கும்.  

பாஜகவின் உத்தியால் குழம்பும் அரசியலாளர்கள்

நமது சமூகத்தில் நிலைப்பெற்று இருக்கும் சாதியக் குழுவாத வேரினைப் பற்றி தேர்தலில் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி எண்ணை எட்ட பல உத்திகளை வகுத்து வருகிறது. 

1. எதிர்த்தரப்பின் ஒற்றுமையை உடைத்து தன்பக்கம் ஈர்ப்பது 

2. எந்தப்பக்கமும் சாராத வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பது 

3. சார்புநிலையற்ற வாக்காளர்களை எதிர்ப்பக்கம் சாராமல் பிரித்து எடுப்பது 

ஆகிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. 

வாக்காளரிடம் பிற்போக்கான பழைய சாதிய மதிப்பீட்டை இந்துத்துவ அரசியலின் மூலம் தூண்டி தன்பக்கம் ஈர்த்து தனது எண்ணிக்கை பலத்தைக் கூட்ட பாஜக-அதிமுக பாமக தரப்பு செய்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம், நடுத்தர வயது வாக்காளர்கள் இருதரப்பில் ஒருவராகத் தம்மை வலுவாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியில் இருப்பவர்கள் மத்தியில் இந்துத்துவ அரசியல் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அந்த வாக்குகள் இவர்களுக்கு கிடைக்காது என்றால் எதிரணிக்கு போகாமல் தடுப்பதுதான் சரியான உத்தி. 

Who is Vijays politics for ?

சீமான் மூலமாக ஈழ திமுக எதிர்ப்பு அரசியல் மூலம் இளைஞர்களைத் திரட்டி தனியாக நிற்கவைத்து வாக்குகளைப் பிரிக்கும் முயற்சி முதலில் கொஞ்சம் பலன் கொடுத்தது. ஆனால் காலப்போக்கில் அவரின் பிழைப்புவாதம் அம்பலப்பட்டு அங்கே கூட்டம் குறைந்து ஆடு, மாடு, மலை, காடுகளுடன் பேசும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். நடிகர் கமல் தனது திரைப்படக் கவர்ச்சியை மூலதனமாக்கி இந்துத்துவ-திமுக மையவாத நிலை எடுத்து மிதமான சாதிய எண்ணம் கொண்ட வாக்காளர்களைப் பிரிக்கும் உத்தியும் தோல்வி. 

அடுத்து ஆதவ் அர்ஜுனா மூலமாக விசிகவைப் பிரித்து அதிமுகவுடன் சேர்த்து வெற்றி எண்ணிக்கையை அடையும் முயற்சியும் தோல்வி அடைந்தது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோது விஜய்யை விசிகவுடன் இணைக்கும் முயற்சிக்கு திருமா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ஒத்துழைத்து இருந்தால் அது திமுகவின் கொள்கை அரசியலைக் குப்பையில் வீசி எம்ஜிஆர் என்ற நடிகரின் கவர்ச்சியில் கரைந்ததைப் போலவே அவரது கொள்கை அரசியலும் கரைந்து இருக்கும். அங்கிருந்து விரட்டப்பட்ட ஆதவ் நேராக விஜய்யுடன் இணைந்தார். 

Who is Vijays politics for ?

இம்முறை கமலின் மையமான அரசியலுக்கு பதிலாகத் தீவிர திமுக எதிர்ப்பு கொஞ்சம் பாஜக எதிர்ப்பு உத்தி. உறங்கிக் கிடந்த விஜய்யின் கட்சி வெளியில் வந்து அரசியல்மயப்படாத இளம் வாக்களர்களைக் குறிவைத்து இயங்கியது. இதனால் தனது இடத்தைப் பறிகொடுக்கும் சீமான், விஜய் எதிர்ப்பு நிலையெடுத்து அவரின் மீது பாய்ந்தது இங்கே புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் விஜய் பிரித்தெடுக்கும் இளம் வாக்காளர்கள் யாருடைய வாக்குவங்கியை உடைக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு குழப்பம்.

விஜய் அரசியலின் சாதியக் கோணம் 

காரணம் இந்த நகரவாசிகளுக்குப் பெரும்பாலான கிராமத்து ஆதிக்கசாதி இளவட்டங்கள் அஜித் ரசிகராகவும் ஒடுக்கப்பட்ட சாதி இளவட்டங்கள் விஜய் ரசிகராகவும் இருக்கும் சாதியக் கோணம் தெரியாது. எனது தலைமுறையிடம் இந்த எண்ணம் வலுவாக இருந்ததை நேரில் கண்டதுண்டு. இந்தத் தலைமுறையிடம் சற்று அது குறைந்திருக்கலாம். மாறியிருக்க முடியாது. இந்தக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்க அளவு கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் ஒடுக்கப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருப்பதும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. 

Who is Vijays politics for ?

மேலும் விசிக கட்சியினர், விஜய் ரசிகர்கள் ஆகிய இருவரின் தரவுகளையும் பார்த்த ஆதவ் அர்ஜுனாவிற்கு இந்த இரண்டும் ஒன்றுபடும் இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அது தெரிந்தேகூட இருவரின் இணைவுக்கு முயன்று இருக்கலாம். கரூர் மரணத்தின் நேர்காணலில் மென்மை காட்டிய திருமா, பாஜக-வின் விஜய் அரசியலைக் காக்க கம்பு சுற்றியதைப் பார்த்து விஜய், ஆதவ் ஆகியோர் மீது கடுமை காட்டுவது அவருக்கே இப்போதுதான் இது தெரிகிறது போலிருக்கிறது.

எனவே விஜய் தனித்துப் போட்டியிட முடிவுசெய்து திமுகவை முழுமூச்சாகத் தாக்கி அவ்வப்போது பாஜகவை ஊறுகாய்போல தொட்டுக் கொண்டு அரசியல்மயப்படாத மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள இளவட்டங்களின் வாக்குகளைப் பிரிக்கும் அரசியல் திமுக அணியின் வாக்கு எண்ணிக்கையை மாற்றும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. முந்தைய மக்கள்நல கூட்டணி அனுபவமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிவது திமுக வெற்றியையே பாதிக்கும் என்றுதான் சொல்கிறது. இந்த உடைப்போடு பீகாரில் கர்நாடகாவில் செய்த “சிறப்பு வாக்காளர் திருத்தமும்” தமிழ்நாட்டுக்கு வந்தால் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி இலக்கைத் தொடும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. 

அம்பலப்பட்ட கவர்ச்சி அரசியல்

இந்தக் கணக்கு எல்லாம் வேலை செய்வதற்கு முன்பாகவே கரூர் மரணம் நடந்து எல்லாவற்றையும் கலைத்து இருக்கிறது. அந்த இக்கட்டான சூழலில் பாஜக, விஜய்யைக் காப்பாற்ற வந்தால் இருவருக்கும் இடையிலான உறவு பற்றிய ஐயத்தை எழுப்பும். கைவிட்டால் அவரை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றி வெற்றி இலக்கை எட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலையில் களத்தில் இறங்கி கைகொடுத்து தூக்கி இருக்கிறார்கள். அம்பலப்பட்ட பின்பு தனித்து விடுவார்களா? இணைத்துக் கொள்வார்களா? என்று தெரியவில்லை. எல்லாம் சரி! ராகுல்காந்தி இதற்குள் ஏன் நுழையவேண்டும்? என்ற கேள்வி இங்கே தொக்கி நிற்கிறது. 

Who is Vijays politics for ?

திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசின் வாக்குகள் கைகொடுத்து தூக்கிவிடும் அளவு குறைவு. பாதி இந்துத்துவம் பேசிய காங்கிரசின் வாக்குகளைத் தீவிர இந்துத்துவம் பேசிய பாஜகவிடம் இழந்துவிட்டது. எனவே திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசு தேவையில்லாத சுமை. ஆனால் ஒன்றிய பார்ப்பனியத்துடன் முட்டிமோத அவசியமான துணை. இந்தக் கூட்டைத் தக்கவைத்துக் கொண்டு வரப்போகும் தேர்தலில் குறைவான தொகுதிகளைக் கொடுத்து சுமையைக் குறைத்துக் கொள்ள நினைக்கிறது திமுக. தமிழ்நாட்டில் தமது பேரவலிமையைக் கூட்ட காங்கிரசிடம் எந்த அரசியல் பொருளாதார அடித்தளமும் இல்லை. அதனைப் பாஜக வளர்த்துவிடும் கவர்ச்சி நடிகர்களுடன் கைகோர்த்து சரிசெய்ய நினைக்கிறது. 

பாஜகவின் அழுத்தத்தைக் குறைத்து தனது அரசியல் தற்சார்பையும் பேரவலிமையையும் கூட்டிக் கொள்ள அரசியல் நடிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நகர்வுகள் திமுக கூட்டணியின் வலுவைக் குறைப்பது என்ற நோக்கத்திற்கு மேலும் வலுசேர்ப்பதால் பாஜக தாராளமாக அனுமதிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் அது  முரணாகவும் குழப்பமாகவும் இருப்பதால் அவரவர் போக்கில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த நகர்வுகள் திமுக தரப்பு வாக்குகளை உடைப்பது என்ற ஒற்றை நோக்கத்தில் இணைவதைக் காணத்தவறுகிறார்கள்.

முற்போக்கு அரசியல் ஒற்றுமையை உடைக்கும் உத்தி 

இப்போதைக்கு இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் இரண்டு அணிகளில் ஒன்றின் வெற்றிக்காகப் பயன்படும் வாய்ப்பு மட்டுமே உள்ளதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இவர்களின் கவர்ச்சி அரசியல் பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, மாநில தன்னாட்சி கொள்கை அரசியல் எதிர்ப்பை நீர்க்கச் செய்து முற்போக்கு பெரியாரிய அம்பேத்கரிய இடசாரிகளின் ஒற்றுமையை உடைத்து தோற்கடிக்க முன்னெடுக்கப்படும் அரசியல் உத்தி என்றுதான் முடிவுக்கு வரவேண்டி உள்ளது. 

Who is Vijays politics for ?

இது புதிதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏன் அப்படியான தேவை மீண்டும் எழுந்திருக்கிறது என்றுதான் தெரியவேண்டும். உள்ளத்தில் பார்ப்பனியத்தை வைத்துக்கொண்டு வெளியில் சோசலிச சனநாயகம் பேசிய காங்கிரசு படிப்படியாக மாறி பாதி இந்துத்துவம் பேசி இப்போது சமூகநீதி அரசியல் பேசும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனை வெறும் அரசியல் மாற்றமாகப் பார்ப்பவர்கள் துணைக்கண்ட, தமிழக வரலாறு அறியாதவர்கள். முரணான இந்த இருகூறுகளும் திடீரென தோன்றி வளர்ந்ததல்ல; அப்படி வளரவும் முடியாது. இவை பார்ப்பனிய மற்றும் தேசியஇன முதலாளித்துவ தேவையில் இருந்து வரலாற்றின் வளர்ச்சிநிலை போக்கில் உருவாகி வளர்ந்தது. 

ஒன்றிய பார்ப்பனியம் மட்டும் இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்களின் அரசியலைப் பின்னிருந்து நடத்துவதில்லை. தமிழ்நாட்டுக்குள் இருக்கும் ஒரு முதலாளித்துவ பிரிவும் இதில் இணைந்து இயங்குகிறது. எனவே இது பார்ப்பனிய-தேசியஇன முதலாளித்துவ முரண் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்குள் இருக்கும் இருவேறு முதலாளித்துவ முரணின் வெளிப்பாடும்கூட. இந்தத் தமிழக இருவேறு முதலாளித்துவ முரணின் வாரலாற்று வளர்ச்சியை அறிந்து சரியான முறையைக் கைக்கொண்டு தீர்ப்பது எப்படி என்று அடுத்த கட்டுரையில் காணலாம்.

https://minnambalam.com/who-is-vijays-politics-for-and-whose-votes-is-targeting/

மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்  — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 months 2 weeks ago

மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்

October 14, 2025

 — வீரகத்தி தனபாலசிங்கம் — 

மாகாணசபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்க தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும்  அறிவிப்புக்கள்  தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே  அமைந்திருக்கின்றன. 

 நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை  அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்றும் தற்போதைய எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வியாழக்கிழமை (9/10)  பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  “மாகாணசபை தேர்தல்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துவதா அல்லது கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா என்பதை  நாம் பிறகு  தீர்மானிப்போம். இதை பாராளுமன்றமே தீர்மானிக்க முடியும். தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்” என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கமும் ஜீவன் தொண்டமானும் கிளப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர்  கூறினார்.

அண்மையில் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய வேளையிலும் அதற்கு முன்னதாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளித்த வேளையிலும் விஜித ஹேரத் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான அரசாங்கத்தின் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. 

ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பலம் பொருந்திய பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான சபை முதல்வரும்  அமைச்சருமான  பிமால் இரத்நாயக்க மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நாளிந்த ஜயதிஸ்ஸ போன்றவர்களும்  எல்லைநிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் அடுத்த வருடம்  மாகாணசபை தேர்தல்களை நடத்தப்படும் என்று கூறினார்கள். 

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும்  பழைய தொகுதி அடிப்படையிலான முறையையும் உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் மாத்திரமே எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

மாகாணசபை தேர்தல்களுக்கான புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்றும் அந்த செயன்முறை எப்போது முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்று இல்லாத நிலையில் மாகாணசபை தேர்தல்களுக்கான காத்திருப்பு தொடருகிறது என்றும் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.  

முன்னைய குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் வழிகாட்டல்களை வழங்குவதற்கும்  புதியதொரு எல்லை நிர்ணயக்குழுவை நியமிப்பதற்கு ஆகஸ்ட் மாத முற்பகுதியில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஆனால், எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று முன்னதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த செயன்முறைகளின் முன்னேற்றம் குறித்து பிந்திய தகவல் எதுவும் எந்த தகவலும்  அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. 

உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு முறையின் கீழ் நடத்துவதற்காக ‘நல்லாட்சி ‘ அரசாங்க காலத்தில் 2017 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் மாகாணங்களில் 2022 தேர்தல் வட்டாரங்களையும் 222 பட்டியல் அடிப்படையிலான ஆசனங்களையும்  நிர்ணயம் செய்வதற்காக கலாநிதி கே. தவலிங்கம் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த குழு அதற்கான காலஅவகாசம் கடந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையை அன்றைய அமைச்சரவை நிராகரித்தது.

அவ்வாறு எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அதை மீள்பரிசீலனை செய்து இரு மாதங்களுக்குள்  புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடு இருக்கிறது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இரு மாதங்களில் எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை முழுமையாக மீள்பரிசீலனை செய்வது சாத்தியமில்லை என்று ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது  என்று கூறப்படுகிறது.  அதற்கு பிறகு புதிய மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் 11 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் இறுதியாக 2014 ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று கடந்த வருட தேசிய தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியது. அந்த ஒரு வருடம் நிறைவு பெறுவதற்கு இன்னமும் இரு மாதமே இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து  மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அடுத்த வருட முதல் அரைப்பகுதியில் அந்த தேர்தல்கள் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் சில தலைவர்கள் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில்,  தற்போது வெளியுறவு அமைச்சர் அடுத்த வருடத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறியிருப்பது இயல்பாகவே சந்தேகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. 

அமைச்சரவை ஆகஸ்டில் வழங்கிய அங்கீகாரத்தின் பிரகாரம்  புதியதொரு எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்படுமாக இருந்தால், அது புதிதாக அதன் செயன்முறைகளை தொடங்கும் பட்சத்தில் அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது  எந்தவிதத்திலும்  சாத்தியமில்லை. அதனால் மீண்டும் தேர்தல்கள் ஓரிரு வருடங்கள் தாமதிக்கப்படுவதற்கான வாய்ப்பே இருக்கிறது.  ஆனால், ஏற்கெனவே ஏழு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றம் நிராகரித்த எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை தற்போதைய பிரதமரின் தலைமையில் குழுவொன்றை அமைத்து மீள்பரிசீலனை  செய்யும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இருக்கிறது என்று சில  அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. 

மாகாணசபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் விரைவாக நடத்த வேண்டுமானால், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் அதை நடத்துவதே நடைமுறைச் சாத்தியமான ஒரேயொரு வழிமுறையாகும். அதற்கு வழிசெய்யும் வகையில் முன்னைய அரசாங்க காலத்தில் இலங்கை தமிழரசு  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணை என்ற வடிவில் கொண்டு வந்ததைப் போன்ற சட்டமூலத்தை தற்போது தமிழரசு கட்சியின் மடடக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கொண்டு வந்திருக்கிறார். 

உண்மையிலேயே மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்ற அக்கறை அரசாங்கத்துக்கு  இருந்தால்,  சாணக்கியனின் தனிநபர் பிரேரணையை  சபையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், அதற்கான விருப்பத்தை அரசாங்கம் வெளிக்காட்டுவதாக இல்லை என்பது மாத்திரமல்ல தானாகவே அத்தகைய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கமும் அதற்கு இல்லை. பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்களுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தை பயன்படுத்தி அதை இலகுவாகச் செய்யமுடியும்.

மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு குறுக்கே நிற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டியது முற்று முழுதாக  அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். தாமதத்துக்கு இடமளிக்காமல் உகந்த முறையில்  தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை பின்போடுவதை எந்த காரணத்தின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. பாராளுமன்ற தேர்தலைப் போன்று  உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு பிரமிக்கத்தக்க வெற்றி கிடைத்திருந்தால் அதைத் தொடர்ந்து  உடனடியாகவே அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை  நிச்சயமாக நடத்தியிருக்கும்.

தேர்தல்களை பின்போடுவதன் மூலமாக  மேற்கொண்டும் வாக்கு வீழ்ச்சியை  எந்த  அரசாங்கத்தினாலும் தவிர்க்க முடியாது. தேர்தல்களை தாமதிப்பதனால் மேலும் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படுமே தவிர, மக்களின் ஆதரவை எந்த வகையிலும் அதிகரிக்க முடியாது. தோல்விப் பயத்தில் தேர்தல்களை ஒத்திவைத்த சகல அரசாங்கங்களுமே படுதோல்வியையே சந்தித்தன என்பதை இன்றையா அரசாங்கத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

இது இவ்வாறிருக்க, தென்னிலங்கை  அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஒரு விசித்திரமான திருப்பத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

கடந்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலமாக மாகாணசபை தேர்தல்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் அந்த தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அண்மைக் காலமாக அரசாங்கத்தை வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றன. மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் மீதான அக்கறை அதற்கு காரணமில்லை என்பதை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. 

உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவினால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சிகள், தேசிய தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமல் இருப்பதன் காரணத்தினால் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் அதற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றன. 

மறுபுறத்தில், மத்தியில் தற்போதைக்கு அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதால்,  இந்த எதிர்க்கட்சிகள் ஆட்சிமுறையின் இரண்டாம் அடுக்கான மாகாணசபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நாட்டம் காட்டுகின்றன. ஏற்கெனவே படுமோசமாக பலவீனமடைந்திருக்கும் இந்த கட்சிகள் ஏதாவது ஒரு மட்டத்தில் அதிகாரப் பதவிகளுக்கு நீண்ட காலத்துக்கு வரமுடியாவிட்டால் அவற்றின் கட்டமைப்புக்கள் மேலும் சீர்குலையாமல் தடுப்பது கஷ்டமான காரியமாக இருக்கும். மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்த கட்சிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதற்கு துணிச்சல் கொண்டதற்கு இதுவே காரணமாகும். 

முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான  சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட மகாநாடு ஒன்றில் எதிர்க் கட்சிகளும் சில சிவில் சமூக அமைப்புக்களும் தாமதமின்றி விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தன. அடுத்த வருடம் வரை காத்திராமல் இந்த வருடத்திற்குள்ளாகவே தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்தன.

தென்னிலங்கையில் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இவ்வாறாக அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துவரும் நிலையில், வடக்கு,  கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் இது விடயத்தில்  அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் பெரிதாக அக்கறை காட்டாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.  

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், இனப் பிரச்சினைக்கு  அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் அக்கறை காட்டாததையும் மாகாணசபை தேர்தல்கள் தாமதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய தமிழரசு கட்சி ஜனாதிபதி அநுர  குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் கோரி அவருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தது. ஜனாதிபதி விரைவில் தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் போன்றவர்கள் செய்தியாளர்கள் மாகாநாட்டில் கூறினார்களே தவிர, ஜனாதிபதியிடமிருந்து எந்தவிதமான பதிலும் தமிழரசு கட்சிக்கு கிடைத்ததாக அறிய வரவில்லை. 

https://arangamnews.com/?p=12377

மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல்

2 months 2 weeks ago

மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல்

லக்ஸ்மன்

பாலஸ்தீனத்தில் பரவும் ‘நமது காலத்தில் அமைதி’ என்ற வாசகம் இலங்கையிலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு யுத்தத்தை நடத்தி முள்ளிவாய்க்காலில் அமைதியைப் புதைத்தது. ஆனால், இலங்கையின் அமைதி பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமானது என்றளவிலேயே இருந்து வருகிறது.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களுடைய கோரிக்கையாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்திருந்தனர். இப்போதும் அதனுடனேயே இருக்கின்றனர். 
ஆனால், இப்போது யுத்தத்தில் தோற்ற சமூகம் தங்கள் கோரிக்கையையும் கைவிட்டாக வேண்டும் என்ற நிலைமையே நீடித்துவருகிறது.

இது கவலையானதாகும். இந்த வரிசையில் தான் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறிப்பிடப்பட வேண்டும்.

ஆனால், பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருக்கிறது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அக்கறையிருந்தாலும் நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது.

இருந்தாலும், அது நடத்தப்படுமா அல்லது இது ஒரு பொய்யான கால தாமதிப்புக்கான மற்றொரு கருத்தா என்ற சந்தேகங்களும் வெளிவருகின்றன. இதற்கு பல்வேறு கரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் இருப்பதாகத் தெரிகிறது. 

நாணய நிதியத்தின் அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்கு மாகாணசபைத் தேர்தல்கள் பின்னணியில், இருக்கிறது என்றால், இந்தத் தேர்தல்களை விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், அரசாங்கத்துக்கு இருக்கின்ற நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் எண்ணப்பாடுகள் இந்தத் தேர்தலில் தாக்கம் செலுத்தும். அதனால் தான் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தலை மிக வேகமாக நடத்தியது போன்று நடத்துவதற்கு முடியாமலிருக்கிறது.

அவசர அவசரமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போன்று மாகாண சபைக்கு முதன்நிலை கொடுக்க முடியாமலிருக்கிறது என்பதும் இந்த இடத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டும். 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் போரவையினால் கொண்டுவரப்பட்டுள்ள
தீர்மானமானது தமிழர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லையானாலும், இலங்கை அரசாங்கத்திற்கு சற்று நெருக்கடியானதே.

அந்தவகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வுகளுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவது, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளால் அகற்றும்படி கேட்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வது போன்றவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த நிறைவேற்றல் வரிசையில் உள்ள மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர். இந்த நேரத்தில்தான், அரசாங்கம் எதிர்வரும் வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று உறுதியான அறிவிப்பையல்ல சாதாரணமான அறிவிப்பொன்றை விடுத்திருக்கிறது.

ஆனால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாண சபைத் தேர்தலையும்ந டத்துவதாக அறிவித்திருந்தாலும், பாராளுமன்றத் தேர்தலைப் போல் இல்லாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சியானது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கும் நிலையை உருவாக்கியிருந்தமை இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டும்.

நாட்டிற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டு வருகின்ற நற்பெயரைத் தொடர்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எண்ணங்கொண்டாலும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் இருக்கின்ற சிக்கல்கள் நடவடிக்கைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியானது எதிர்க்கட்சியாக இருக்கும்வேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் கைவிடப்படும் என்று தெரிவித்திருந்தாலும் இப்போது அதன் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கவேண்டும் என்கிற செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி, பல நெருக்கடியான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியிருக்கிறது. 

சர்வதேச பொருளாதார அழுத்தங்கள், மக்களுக்கான ஜனநாயகக் கடமைகள் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய காரணியாக இருக்கிறது. 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன.

2014ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை. தற்போது ஆளுநர்களின் ஆளுகைக்குள் இச் சபைகள் இயங்குகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றவுடன் அனைத்து மாகாண சபைகளுக்குமான ஆளுநர்களை நியமித்தார்.

அதற்கு எடுத்துக் கொண்ட அவசரம் அத்தேர்தல்களில் காணப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சட்டம் இலவ்லாமையாகும். 

தேர்தல் முறைமையைக் காரணம் காட்டி மாகாண சபை தேர்தல்கள் கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்போது எல்லை நிர்ணயம் நிறைவடைந்தபின்னரே தேர்தலை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் 
பொருட்டு 1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை  இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக  13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது. இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும்  உருவாக்கப்பட்டது.

வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக்கப்பட்டு 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 
1990இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

2006இல் ஜே.வி.பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்கம் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது.

பழைய முறையிலா, புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே மக்கள் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். புதிய கலப்பு
முறையானது விகிதாசார முறையையும் வட்டார முறைமைமையையும் சேர்த்தாக எல்லைகளை மறுசீரமைப்பதாக எல்லை நிர்யணம் அமையவிருக்கிறது.

இதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஓய்வுபெற்ற தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவரான மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு 2017இல் உருவாக்கப்பட்டிருந்தது. இவர்கள் 2018 மார்சில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தால் இந்த அறிக்கை சட்டமூலமானபோது, அது  நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னரான திருத்தங்கள் மேற்கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால் அது இழுபறியாகிப்போனது. இன்றுவரை ஸ்தம்பித்துள்ள மாகாண சபைத் தேர்தலைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய முறைமையா? புதிய முறைமையா? என்ற முடிவுக்கு வராமல் தேர்தலை நடத்த முடியாது என்று தெரிந்திருந்தாலும் அறிவிப்புகள் மாத்திரம் வந்த வண்ணமிருக்கின்றன. 

இந்த இடத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறிரத்நாயக்க தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பாராளுமன்றம் தீர்வைச் சொல்லாத வரையில் தேர்தலை நடத்தமுடியாது என்பது பொருளாகின்றது. மாகாண சபை தேர்தலைத் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமாக இருந்தால் பாராளுமன்றம் முடிவுக்கு வந்தாக வேண்டும்.

இந்த முடிவுக்கு வருதலில் முழுமனதான முடிவு எட்டுதலே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரே வழியாகும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். நாட்டுக்கு. அதுவே தேவை என்று கூறும் அரசாங்கம் அந்த வழியைக் கைக்கொள்ளுமா என்பதற்காகக் காத்திருப்போம்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபை-தேர்தலுக்கான-வழி-தேடல்/91-366203

Checked
Thu, 01/01/2026 - 16:22
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed