புதிய பதிவுகள்2

கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்

3 weeks 5 days ago
கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீது வரியை அறிவித்தார் டிரம்ப் பட மூலாதாரம்,Getty Images 17 ஜனவரி 2026 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரிகள் நடைமுறையில் இருக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதியுள்ள டிரம்ப், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பும் 'அனைத்து' பொருட்களுக்கும் '10% வரி விதிக்கப்படும்' என்று கூறியுள்ளார். ஜூன் 1 அன்று இது 25% ஆக அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது'- டிரம்ப் டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவின்படி,பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் வரிகளை வசூலிக்காமல் அமெரிக்கா மானியம் வழங்கி வருவதாக அவர் கூறுகிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 'டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது' என்று டிரம்ப் மேலும் கூறுகிறார். "உலக அமைதி ஆபத்தில் உள்ளது! சீனா கிரீன்லாந்தை விரும்புகிறது, அதைப்பற்றி டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது," என்று கூறும் டிரம்ப், கிரீன்லாந்து இரண்டு நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிகளால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது என்று விமர்சிக்கிறார். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் "அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன" என்றும், அவை "மிகவும் ஆபத்தான விளையாட்டை" விளையாடுகின்றன என்றும் அவர் கூறுகிறார். இந்த "சாத்தியமான அபாயகரமான சூழ்நிலை விரைவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் முடிவுக்கு வர" "கடுமையான நடவடிக்கைகள்" எடுக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் மேலும் கூறுகிறார். கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு ஏன் தேவை? காணொளிக் குறிப்பு,காணொளி: கிரீன்லாந்து விரைந்த ஐரோப்பிய படைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தனது நாடு கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்றும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை என்றும் கூறுகிறார். சாத்தியமான கொள்முதல் குறித்தும் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், தீவை "எளிதான வழியில்" அல்லது "கடினமான வழியில்" கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார். அவரது கோரிக்கைகளை கிரீன்லாந்தின் தலைவர்களும், நேட்டோ உறுப்பினர் டென்மார்க்கும் நிராகரித்துள்ளனர், அந்தத் தீவு ஒரு பாதியளவு தன்னாட்சி பிரதேசமாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் கிரீன்லாந்தின் இருப்பிடம் ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் ஏற்றதாக அமைகிறது. "நாம் கிரீன்லாந்தை கைப்பற்றவில்லை என்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும்" என்று டிரம்ப் வாதிட்டு வருகிறார். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு பிரெஞ்சு ராணுவத்தின் ஒரு சிறிய குழு சென்று சேர்ந்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் 'ஆய்வு மற்றும் கண்காணிப்பு' பணிக்காக தங்கள் நாட்டு வீரர்களை அங்கு அனுப்பி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். வரிகள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன? வரிகள் என்பவை இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகள். பொதுவாக, இந்த வரி ஒரு பொருளின் மதிப்பிலான சதவீதமாக இருக்கும். உதாரணமாக, ரூ.10 மதிப்புள்ள ஒரு பொருளுக்கு 10% வரி என்பது கூடுதலாக ரூ.1 வரி என்பதைக் குறிக்கும் - இதனால் மொத்த விலை ரூ.11 ஆகிறது. இந்த வரி வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகிறது. இந்த நிறுவனங்கள் கூடுதல் செலவில் சில அல்லது அனைத்தையும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் திணிக்கலாம், அதாவது இந்த விஷயத்தில் சாதாரண அமெரிக்கர்கள் மற்றும் பிற அமெரிக்க வணிகங்கள் இந்தச் சுமையை ஏற்க நேரிடும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c801g1p55kpo

தமிழர்களின் நிலங்களும் வளங்களும் பறிபோகாமல் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம் - வாகரையில் பொதுமக்கள் வலியுறுத்தல்

3 weeks 5 days ago
தமிழர்களின் நிலங்களும் வளங்களும் பறிபோகாமல் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம் - வாகரையில் பொதுமக்கள் வலியுறுத்தல் Published By: Vishnu 18 Jan, 2026 | 03:41 AM பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது. உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா 17ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேணி 4ம் கட்டை பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் மாகாண தலைவர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் திட்ட வரைபு ஒன்றியத்தின் உத்தியோகத்தர் ரேணுக, பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், திட்ட வரைபு ஒன்றியத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அரவிந்தன், ஊவா மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் இணைப்பாளர், கிழக்கு திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று வரவேற்பு நடனம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தொடர்பான சிறப்பு உரைகள் இடம்பெற்று அதிதிகள் உரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக இயற்கு விவசாயத்தினை முன்னிறுத்தும் முகமாக விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு அலங்கரிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வாகரை பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டது.வனஇலாகா,தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு பகுதிகளினாலும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன. அந்தவேளைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கமுடிந்தது.இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் முன்னோக்கும் சூழ்நிலைகள் காணப்படுகின்றன.அவற்றினை நாங்கள் எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகும்.அவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமே எமது எதிர்காலத்தில் எமது நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்கமுடியும் என இதன்போது கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்துகொண்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளினாலும் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/236296

"குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

3 weeks 5 days ago
"குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்! Jan 18, 2026 - 10:21 AM "நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (17) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தி. அனுஷ்வரன் (36) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பிரகலாதேவி (31) என்பவரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை 8.30 மணியளவில் கணவன் - மனைவிக்கு இடையே பண விவகாரம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று, "நீ குற்றமற்றவள் என்பதை நிரூபித்துக் காட்டு" என வற்புறுத்தியுள்ளார். அதன்பின்னர் மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரே தீ வைக்கத் தூண்டியுள்ளார். இதனால் தீப்பற்றி எரிந்த மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியைத் தீக்குளிக்க வைத்த பின்னர், கணவன் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்ய முயன்றமை மற்றும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கொக்கட்டிச்சோலை பொலிஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கொக்கட்டிச்சோலை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmkj9dnx3042lo29n7tsbsirv

இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா? எதிர்ப்பும் அரசு விளக்கமும்

3 weeks 5 days ago
இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா? எதிர்ப்பும் அரசு விளக்கமும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக 18 ஜனவரி 2026, 05:47 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முழுவதும் ஏற்பட்ட பரவலான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாக்கவும் அனர்த்தங்களை கையாளவும் திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) கீழ், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனர்த்தம் ஏற்பட்ட வேளையில், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அழுத்தம் எதிர்க்கட்சிகளால் கொடுக்கப்பட்டதை அடுத்து, கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியில், ராணுவத்தினரை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தவும், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றிப் பேணவும் இத்தகைய அசாதாரண நடவடிக்கைகள் அவசியமானவை என்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. எனினும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. சூறாவளி நாட்டைவிட்டு நகர்ந்து சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது நிவாரண முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் தொடர்புகள் பெருமளவு சீரமைக்கப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து அமல்ப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது அனர்த்த கால அவசரத் தேவைகளையும் தாண்டி, அரசாங்கம் தனது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியோ என்ற அச்சத்தையும் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கரிசனை தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத மிகமோசமான கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன என உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆசியப்பிராந்திய ஆய்வாளர் ரொபேர்டா மொய்ஸக் கரிசனை வெளியிட்டுள்ளார். இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலையின் கீழான விதிகள் இதற்கு முன்னைய சில சந்தர்ப்பங்களில் முன்னைய அரசாங்கங்களினால் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சில விதிகள் நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சரத்துக்கும், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கும் முரணானவையாகக் காணப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன விதிகள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் விடுவிக்கப்பட்ட பொது அறிவிப்புகள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அத்தோடு அரச அதிகாரிகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது என்பது அரசியலமைப்பின் 14(1)(ஏ) பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஓரங்கமாகும் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கிறது - ஐங்கரன் குகதாசன் தற்போது மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஐங்கரன் குகதாசன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான அவசியமே இருக்கவில்லை என்றும், அப்பிரகடனத்தில் மனித உரிமைக் கோட்பாடுகளை மீறுகின்ற, மிதமிஞ்சிய அதிகாரத்தினை வழங்குகின்ற ஏற்பாடுகள் உள்ளன என்றும் கூறப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அப்பிரகடனம் நீடிக்கப்பட்டிருப்பது மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். "எதிர்க்கட்சியாக இருந்தபோது, இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வந்த அநுரகுமார திசாநாயக்க, இன்று அதனையே செய்வது 'மாற்றம்' தொடர்பில் இருந்த சொற்ப அளவு நம்பிக்கையையும் தவிடுபொடியாக்குகின்றது. அதேபோல் அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கின்றது" எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளனர். குறிப்பாக இந்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, "அரசாங்கம் தற்போது செயற்படுத்தியுள்ள அவசரகால சட்டமானது, அனர்த்தத்தை கையாள நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. மாறாக அரசாங்கம் தமக்கு எதிரான விமர்சனங்களை தடுக்க பயன்படுத்தும் கருவியாக இது கையாளப்படுகின்றது" என குற்றம் சுமத்தியிருந்தார். அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கூறுகையில், "கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தின் கீழ் பல ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்கவும் இல்லை. இந்த நாட்டில் நீதி என்பது தகுதி தராதரம் பார்த்தே கையாளப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இன்றும் இராணுவ அடக்குமுறை நிலைமையே காணப்படுகின்றன. இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகள் எப்போதும் அவசரகால சட்டத்தின்கீழ் தான் உள்ளன. இந்த நிலைமைகளை மாற்றும்வரை தமிழர்களுக்கு விடிவுகாலம் இருக்காது" என்று தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூறுகையில், "அனர்த்தத்தை கையாள நடைமுறைக்கு வந்துள்ள அவசரகால சட்டத்தில் தேடுதல் மற்றும் கைதுகள் என்பன எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளன? தடுப்புக்காவல் என்ற விடயம் எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. அனர்த்த முகாமைத்துவத்திற்காக அவசரகால சட்டம் என்றால் அது பொதுமக்களை பாதுகாக்க மட்டுமே கையாள வேண்டும். மாறாக அதனை கையாண்டு யாரையும் கைதுசெய்யவோ அல்லது தண்டிக்கவோ முடியாது. ஆனால் அதனையே அரசாங்கம் செய்ய நினைக்கின்றது" எனக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் விளக்கம் இந்த குற்றச்சட்டுக்களை முழுமையாக நிராகரிக்கும் அரசாங்க தரப்பினர், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர இது குறித்து தெரிவிக்கையில், "இதற்கு முன்னர் நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அவற்றைவிட மிக மோசமான அழிவொன்றை இம்முறை நாம் சந்தித்துள்ளோம். நாட்டில் 22 மாவட்டங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று வரை முகாம்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே இந்த நிலைமைகளை கருத்தில்கொண்டே அனர்த்த நிலைமைகளை கையாள ஜனாதிபதியினால் நடைமுறைக்கு கொண்டுவந்த அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதுகுறித்த நாடாளுமன்ற அனுமதியையும் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்" என்றார். "இந்த அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளை கையாளவோ அல்லது யாரையும் தண்டிக்கவோ அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது. மாறாக பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய அரசு இயந்திரத்தை விரைவாக பயன்படுத்தி துரிதமாக சேவையாற்றவே கையாளப்படுகின்றது" எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை-பிரதமர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய அதேபோல் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகையில், 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முகங்கொடுத்த அழிவில் இருந்து இன்னமும் மீளவில்லை. மத்திய மலைநாட்டின் பொதுமக்கள் வாழும் பல பகுதிகளில் இன்னமும் அனர்த்த அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்களை பாதுகாப்பான பகுதிகளில் மீள் குடியேற்ற வேண்டும். இவற்றை கையாளும் விதமாக அரச அதிகாரிகள் விரைவாக செயற்படவும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்தார். பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை முறையாக வழங்கவே அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது எனக் கூறிய அவர் இந்த சட்டத்தை தவறாக ஒருபோதும் கையாள மாட்டோம் என்றார். மேலும், நீண்ட காலத்திற்கு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை. நாட்டில் சகல பகுதிகளிலும் பொதுமக்கள் வழமையான சாதாரண வாழ்கையை வாழ வேண்டும் என்பதே எமதும் எதிர்பார்ப்பாகும். அதுவரையில் மிகக்குறுகிய காலத்திற்கு இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvg17pzrpeo

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !

3 weeks 5 days ago
"மக்களின் காணிகளை மக்களிடமே கொடுங்கள்" - ஜனாதிபதியிடம் கோரிக்கை Jan 18, 2026 - 07:06 AM தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: "வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தேன். குறிப்பாக, அங்குள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. விகாரைக்கு அருகிலுள்ள மக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, இது குறித்து விரைவாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அது நயினாதீவு நாக விகாரை விகாராதிபதியுடனேயே தொடர்புடையது. எனினும், பொதுமக்கள் சார்பாகவே இந்தக் கருத்தை நான் முன்வைத்தேன். மேலும், இப்பகுதியில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, வடக்கு மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன்" என்றார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkj2fv6x042fo29naid25pme

7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி

3 weeks 5 days ago
7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி Jan 17, 2026 - 11:37 PM உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவர், இந்தத் தேர்தலில் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான பாபி வைன் எனப்படும் கியகுலானி சென்டாமு 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. National Unity Platform தலைவரான பாபி வைன், இராணுவம் மற்றும் பொலிஸார் தனது வீட்டை முற்றுகையிட்ட போதிலும், தான் அங்கிருந்து தப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தத் தேர்தல் முடிவுகள் போலியானவை எனத் தெரிவித்து அவற்றை நிராகரித்துள்ள அவர், அவற்றை அலட்சியப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmkimddk9042bo29n71nz2g4r

இலங்கையின் ‘Rebuilding Sri Lanka’ மற்றும் ‘Healing Sri Lanka’ செயற்திட்டங்களுக்கு Global Caregiver Forum 2026 இல் உலகப் பாராட்டு

3 weeks 5 days ago
இலங்கையின் ‘Rebuilding Sri Lanka’ மற்றும் ‘Healing Sri Lanka’ செயற்திட்டங்களுக்கு Global Caregiver Forum 2026 இல் உலகப் பாராட்டு Published By: Vishnu 17 Jan, 2026 | 10:06 PM “அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குத் திரும்புவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) மற்றும் ‘இலங்கையைக் குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) ஆகிய செயற்திட்டங்கள், “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026” இல் (Global Caregiver Forum 2026) உலக நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்பட்டன.” “இலங்கை தனது அண்மைக்கால வரலாற்றில் மிகப்பாரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கம் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) எனும் செயற்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் வேளையில், அதற்கு இணையாகப் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் ‘இலங்கையை குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) எனும் மற்றுமொரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது, அனைத்துத் தரப்பினரினதும் செயற்திறன்மிக்க ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உளசமூக நலனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலமும், அவர்களது தனிப்பட்ட உள வடுக்களைக் குணப்படுத்துவதற்கு உதவுவதன் மூலமும், நாட்டின் தேசிய முன்னுரிமையாகச் சிறுவர்களுக்குத் தேவையான தரமான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் போஷாக்கு கிடைப்பதை இச்செயற்திட்டம் உறுதி செய்கிறது.” - சரோஜா சாவித்திரி போல்ராஜ், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் – நேற்று (16), கௌரவ அமைச்சர் ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலாவது “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026”இல் (Global Caregiver Forum 2026) கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ஸ்பெயினின் ராணி லெட்டிசியா (Her majesty Queen Letizia) அவர்களின் அனுசரணையில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான இந்த இரண்டு நாள் மாநாடு, யுனிசெஃப் (UNICEF), உலக சுகாதார நிறுவனம் (WHO), மற்றும் லெகோ (LEGO) அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்பிள்ளைப் பருவ மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான சர்வதேச வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நிபுணர் கலந்துரையாடல்கள் மற்றும் பல செயற்பாடுகள் இம்மாநாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தன. “எதிர்கால நோக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள்” (Looking Forward and Next Steps) எனும் தலைப்பிலான மாநாட்டின் இறுதி அமர்வில் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒரு குழு உறுப்பினராகப் பங்கேற்றார். இக்குழுவில் கசகஸ்தான் சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ அலியா ருஸ்டெமோவா, ட்ரிபிள் பி பாசிட்டிவ் பேரன்டிங் புரோகிராம் (Triple P Positive Parenting Programme) தலைமை நிர்வாக அதிகாரி திரு. மெட் பட்டர்ரி, போவிஸ்டா (Boavista) பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திருமதி. கதரினா மாகல்ஹேஸ் மற்றும் அயர்லாந்து குடும்ப வள மைய தேசிய மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பெர்கல் லேண்டி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த அமர்வின் போது, முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மேலதிக தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அவை பின்வருமாறு: • முன்பிள்ளைப் பருவத்தை இலக்காகக் கொண்டு சிறுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் "ஸ்டெப்-அப்" (Step-Up) தொடர்பாடல் திட்டம். • 2027 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் 19,000 ஆசிரியர்களுக்கான முறையான பயிற்சி. • முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய பல்துறை மூலோபாய செயற்திட்டம் 2025-2029. • ஒட்டிசம் உள்ளிட்ட நரம்பு மண்டல வளர்ச்சி குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலான ஐந்து ஆண்டு கால திட்டம். அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழலில் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த “இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்” மற்றும் “இலங்கையை குணமாக்குதல்” ஆகிய திட்டங்கள் இம்மாநாட்டில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், உலகத் தலைவர்களின் பாராட்டையும் பெற்றன. இம்மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழுவில் பின்வருவோர் அடங்குவர்: • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாட்டிற்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் செல்வி நிலுஷிகா தனசேகர • யுனிசெஃப் இலங்கையின் கல்வி அதிகாரி செல்வி சசிகலா சுமுது குமாரி ரத்நாயக்க https://www.virakesari.lk/article/236294

டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!

3 weeks 5 days ago
அந்தம்மா விசுவாசத்தை வெளிப்படுத்தவில்லை. பிரதிபலனையே எதிர்பார்த்தா. ரம் எதுவுமே பேசவில்லை. எதிர்காலத்தில் ஆதரவு கொடுக்கலாம். வரும் தேர்தல் நேரம் தான் தெரியும்.

“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!

3 weeks 5 days ago
இப்படியும் சில மனிதர்கள்

Different types of boats used by Tamils during british era

3 weeks 6 days ago
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala, which formed an integral part of ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document: shirini

20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது!

3 weeks 6 days ago
ஆண்கள்.... நான்கு போத்தல்களும், பெண்கள்... இரண்டு போத்தல்களும் தவறாமல் வாங்குவார்கள். 😂 அதனால்... நமது வியாபாரம் நட்டம் இல்லாமல், ஓஹோ... என்று ஓடுது. 🤣

டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!

3 weeks 6 days ago
அல்பிரேட் நோபல் தனது சொந்த விருப்படி எழுதிவைத்த மரண சாசனத்தில் சொல்லப்பட்ட பரிசுகள் 5 (Physics, Chemistry, Physiology or Medicine, Literature, Peace) ஆனால் பின்நாளில் வந்தது அல்பிரேட் நோபல் நினைவுப்பரிசு எனப்படும் பொருளாதார(Economic Sciences) பரிசு. இதையும் நோபல் கமிட்டியே பொறுப்பேற்று வழங்குகிறது ஆனால் அதற்கான செலவை சுவீடன் நாட்டின் மத்திய வங்கி ஏற்றுக் கொள்கிறது. ஏனைய 5 பரிசுகளுக்கான செலவுகளுக்கு மறைந்த நோபலின் சொத்துக்களால் கிடைக்கும் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்துக்கான பரிசை நோபலின் நினைவுப்பரிசாக அவரின் உண்மையான 5 மரண சாசன பரிசுகளுடன் இணைத்துக்கொண்டதற்கு நோபலின் சந்ததியினர் கடும் விசனம் தெரிவித்து அதை மத்திய வங்கியின் ஒரு விளம்பர உத்தி என தமது அதிருப்தியை வெளியிட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு செய்திகள் 2026

3 weeks 6 days ago
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு- 19 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு பட மூலாதாரம்,@mkstalin 17 ஜனவரி 2026, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 555 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் உடல் தகுதியின்மை, மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக 60 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 495 பேர் போட்டியில் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர், பார்வையாளர்கள் உட்பட 63 பேர் காயமடைந்தனர். இதில் 21 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்களுக்கு மற்றும் காளைகளுக்கு பரிசு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த பரிசு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 2ஆம் இடம் பிடித்தார். அவருக்கு மோட்டார் பைக் பரிசாக பரிசாக அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் 11 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார். அவருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி. பாலா என்பவரின் காளை முதலிடம் பெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மாடு இரண்டாம் இடம் பெற்றது. இவருக்கு மோட்டார் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கென்னடி என்பவரின் காளை மூன்றாவது பரிசினை வென்றது. அவருக்கு எலக்ட்ரிக் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. 63 பேர் காயம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், காவலர்கள் 4 பேர், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 5 பேர் மற்றும் பார்வையாளர்கள் 21 பேர் என மொத்தம் 63 பேர் காயமடைந்தனர் இதில் பலத்த காயமடைந்த 22 வயது இளைஞர் உட்பட 21 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,@mkstalin 'அதிக காளைகளை அடக்கினால் அரசு வேலை' அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜல்லிக்கட்டைப் பார்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர்" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20xjkl1y7o
Checked
Fri, 02/13/2026 - 21:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed