புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
ம‌ழை வ‌ராம‌ விட்டு இருக்க‌னும் 350 ர‌ன்ஸ் இந்திய‌ ம‌க‌ளிர் அடிச்சு இருப்பின‌ம்👍....................... மீண்டும் அதிக‌ ம‌ழை பெய்யிது போட்டி இன்று ந‌ட‌ப்ப‌து ச‌ந்தேக‌ம்☹️.................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
49ஓவ‌ர் இரு அணிக‌ளுக்கும் கொடுத்து இருக்கு இன்னும் 42நிமிட‌த்தில் போட்டி மீண்டும் தொட‌ங்கும்................... ம‌ழை கார‌ண‌மாக‌ ஒரு ஓவ‌ர் குறைக்க‌ப் ப‌ட்டு இருக்கு என‌ நினைக்கிறேன்.................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
ம‌ழை நின்று விட்ட‌து மைதான‌த்தில் இருக்கும் மெதுவான‌ த‌ண்ணீர‌ மிசின் மூல‌ம் வெளியில் எடுக்க‌னும்...........இந்தியா 50 ஓவ‌ர் விளையாடுவின‌ம் என‌ ந‌ம்புகிறேன் , இன்னும் 2இர‌ண்டு ஓவ‌ர் தான் இருக்கு.....................

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!

3 months 2 weeks ago
அமெரிக்கா இதைச் செய்யவில்லையா? ஐரோப்பா இதைச் செய்யவில்லையா? அவுஸ் இதையும் செய்யுது தானே? ஐ நா இவற்றைப் பார்த்தும் கண்ணை மூடிக் கொண்டு தானே இருக்கின்றது. ஆகவே ஆனந்தன் செய்தது எல்லாம் குற்றமா என்ன?

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
என் வீட்டுக்கு அருகில் இரண்டு பெண் பிள்ளைகள், மகன் ஆகியோருடன் (பிள்ளைகள் மூவமும் 10 வயதுக்குட்பட்டவர்கள்) ஒரு பெண்மை வாழ்ந்து வந்தார். அவரது கணவர் குடியால் இறந்து போன அரச சேவையில் கடைநிலை ஊழியராக வேலை செய்தவர். அவரது சொற்ப வருமானத்தில் தான் சீவியம் போய்க் கொண்டு இருந்தது. அவர்களிடம் தங்கம் வாங்க வந்த ஆண் போராளிகள், மூத்த மகளின் காதில் ஒட்டிக் கொண்டு இருந்த மிகச் சிறு தோட்டை கட்டாயப்படுத்தி புடுங்கிக் கொண்டு போனார்கள். இது என் கண் முன்னால் நிகழ்ந்தது. புலிகள் மரபுவழி இராணுவமாக மாற முன் நிகழ்ந்த விடயங்கள் இவை.

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!

3 months 2 weeks ago
யாழ்கள ஆர்வலர்கள் சிலர்: கடல்கடந்து வர்த்தகம் செய்யும் போது இப்படியான சிக்கல் வருவது வழமைதான். ஆனந்தனை குற்றம் சொல்பவர்கள் பிழைக்கத்தெரியாத திண்ணை பேச்சுகாரர்😂.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இந்தியாவிலும் ம‌ழை..............கூடுத‌ல் 3ர‌ன்ஸ் அடிச்சு இருந்தால் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ போட்டியில் இது தான் பெரிய‌ ஸ்கோரா இருந்து இருக்கும்.................இன்னும் இர‌ண்டு ஓவ‌ர் இருக்க‌ த‌க்க‌ ம‌ழை வ‌ந்து விட்ட‌து............................

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!

3 months 2 weeks ago
என்னைப் பொறுத்தவரைக்கும் போதைப் பொருள் விற்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய அதி குறைந்த பட்ச தண்டனை தான் மரண தண்டனை. மரண தண்டனை கண்டிப்பாக அவசியமான ஒன்று. சிறுவர் மீது பாலியல் வல்லுறவு புரிகின்றவர்களுக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும், மரண தண்டனை மிக அவசியம்.

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!

3 months 2 weeks ago
பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மற்றும், அவருக்கு உதவிய நபர்களிடம் இருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திடுக்கிடும் சம்பவமொன்று வெளியாகியுள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற விடயம் குறித்து அண்மைய நாட்களில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர் தங்கியிருந்த இடங்களை அடையாளம் காட்டியிருந்தார். இந்த பின்னணியில் அவரை இந்தியாவுக்கு கடத்த ஆனந்தன் என்ற நபர் உதவியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்நிலையில் ஆனந்தன் என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கடல் வழியாக தப்பிச் செல்ல உதவியதாக தெரியவந்துள்ளது. இது தொடடர்பில் தெரிய வருகையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் மேலும் பல தகவல் வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் கடல் வழியாக தப்பிச் செல்ல ஆனந்தன் என்பவரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபருக்கு கிளிநொச்சியில் உள்ள சொந்தமான வீட்டில் இருந்து மைக்ரோ வகை துப்பாக்கியையும் கொழும்பு குற்றப்பிரிவு மீட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் திஹாரிய, ஒகொடபொலவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பு பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பின் பின்னணியில் உள்ள மூளையாக ஆனந்தன் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனந்தன் தனது தம்பிகள் இருவருடன் இணைந்து இந்த மோசடியை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. கேரள கஞ்சா மோசடி தொடர்பாக அவரது தம்பிகள் இருவரும் தற்போது காவல்துறையின் தடுப்பு காவலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிகள் வழியாக மேற்கொள்ளப்படும் கேரள கஞ்சா வியாபாரத்திலும் இந்த சகோதரக் குழு ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் குழுவின் தலையீட்டால் சமீப காலங்களில் பிரதான குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கடல் வழிகள் வழியாகத் தப்பிச் செல்ல இந்த நபர் உதவி செய்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர் உதவி செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் யார் என்பதை மேலும் உறுதிப்படுத்தி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://ibctamil.com/article/jaffna-man-who-helped-easter-killers-escape-1761202503

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

3 months 2 weeks ago
நன்றி. ஜேவிபி மிக மெதுவாக, ஆனால் தெளிவாக, கிட்டதட்ட ரகசியமாக …. ஒற்றை கட்சி ஆட்சியை நோக்கி இலங்கையை நகர்த்தி வருவதாக எனக்கு படுகிறது. போதை மாபியா பற்றிய மக்களின் பயம் அவர்களுக்கு நன்றாக கைக்கொடுக்கிறது. இதுதான் கடைசி ஜனாதிபதி தேர்தல் என்றார் டில்வின். ஆனால் அது சம்பந்தமாக எதுவும் இல்லை. மிக விரைவாக, அரச இயந்திரம், முப்படைகள், பொலிசில் அதிகாரம் உள்ள பதிவிகளை தம் கொள்கை சார்ந்தோரால் நிரப்புகினறாம். யூ என் பி, சு க வின் தொழில்சங்கங்கள் கூட நெருக்குதலுக்கு ஆளாகிறனவாம். இத்தனை வருட தியாகத்தின் பின் கிடைத்த அதிகாரத்தை அவர்கள் அவ்வளவு லேசில் விடப்போவதில்லை. இது போக..போகத்தான் புலப்படும்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 months 2 weeks ago
யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல் இஷாரா செவ்வந்தி இந்தியா செல்ல உதவிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இன்று அல்லது நாளை கைது செய்ய்ப்படுவார் என கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் ஒரு வலையமைப்பை அடையாளம் கண்டுள்ளது. இந்த குழுவின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. குழுவின் மூளையாகச் செயல் இந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சகோதரர்களில் மூத்தவரான ஆனந்தன், இந்தக் குழுவின் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் பிடிக்கப்பட்டு இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 6 பேரில் இஷாரா செவ்வந்தியும் ஆனந்தனால் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. கொழும்பு குற்றப்பிரிவால் கைது யாழ்ப்பாணத்தின் அரியாலையில் இருந்து இஷாரா செவ்வந்தி ஒரு மீன்பிடிப் படகில் ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதுடன் அங்கு அழைத்துச் செல்ல அவரிடம் ரூ. 5 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பணத்தை ஜே.கே. பாய் கொடுத்தது தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆனந்தன் என்ற கடத்தல்காரரின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்துள்ளார். இஷாரா செவ்வந்திக்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு வெளியேற உதவிய நான்கு பேரும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தங்குமிடம் இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற படகையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் படகையும் ஆதாரமாக காவல்துறையினரின் காவலில் எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு, ஆனந்தன் சகோதரர்களின் பாதுகாப்புடன் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாய் ஆகியோர் இந்தியாவில் தங்குமிடம் மற்றும் வசதிகளை வழங்குகிறார்கள். விசாரணையில், ஆனந்தனும் அவரது சகோதரர்களும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறையினரால் தேடப்படுபவர்களை இந்த வழியில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவும் வகையில் 500,000 முதல் 1000,000 ரூபாய் வரை வசூலிப்பது தெரியவந்துள்ளது. https://ibctamil.com/article/ishara-stayed-in-ariyalai-jaffna-anandan-will-soon-1761124302

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இந்தியா ம‌க‌ளிர் அடிக்கிர‌ அடிய‌ பார்த்தால் , அவுஸ்ரேலியா ம‌க‌ளிரின் பெரிய‌ ஸ்கோர‌ தான்டுவின‌ம் போல் இருக்கு பாப்போம் போட்டி முடிவில்...........................

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

3 months 2 weeks ago
வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர் வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை அரசாங்க அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்ற சந்தேகம் இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சி தலைமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பியின் முயற்சி இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள துமிந்த, “வெலிகம பிரதேச சபையில் ஜே.வி.பி தலைமையிலான திசைகாட்டி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்தது. அது நம் அனைவருக்கும் தெரியும். தேர்தலின் போது உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர். ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வெலிகம பிரதேச சபையில் அதிகாரத்தைப் பெற ஜே.வி.பி பெரும் முயற்சி எடுத்தது. ஆனால், அதை ஐக்கிய மக்கள் சக்தி வென்றது. படுகொலை அவர்கள் தேர்தல் மூலம் அதைக் கைப்பற்ற முயன்றனர், பின்னர் அவர்கள் வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தினர். ஆனால் அதிகாரம் எதிர்க்கட்சிக்குச் சென்றது. இந்த நிலையில் அதன் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அரசாங்கத்தின் அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது.” என தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/weligama-chairman-murder-govt-crackdown-duminda-1761136664

மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா?

3 months 2 weeks ago
மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா? பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனிதர்களான நாம் நீண்ட காலமாகப் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம். பூமியின் 4.5 பில்லியன் ஆண்டுகால வரலாற்றின் நினைவுச் சின்னங்களாக இருக்கும் எண்ணற்ற தொல்லுயிர் எச்சங்களை நாம் மண்ணிலிருந்து தோண்டியெடுத்துள்ளோம். நாம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பண்டைய இனங்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பதற்கான குறிப்புகளை இவை நமக்கு வழங்குகின்றன. ஆனால், நாம் அழிந்துபோய், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புத்திசாலித்தனமான இனம் தோன்றினால் – நாம் இருந்தோம் என்பதை எப்போதாவது அவர்கள் அறிந்துகொள்வார்களா? அல்லது நமது நாகரிகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வார்களா? எச்சங்களாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு எதிர்கால தொல்லுயிர் ஆய்வாளர்கள் நமது எச்சங்களைளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாம் நம்ப முடியாது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் ஆடம் ஃபிராங்க். "புவியியல் ரீதியாக ஒரு நாகரிகம் குறுகிய காலம் மட்டுமே நீடித்தால், பூமியின் உயிர்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே எச்சங்களாக மாறும்," என்று அவர் விளக்குகிறார். பட மூலாதாரம், Courtney Hale/E+ via Getty Images படக்குறிப்பு, ஆடம் ஃபிராங்க் மற்றும் கேவின் ஷ்மிட் ஆகியோரின் 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையின்படி, டைனோசர்களின் இருப்பு இருந்த ஒவ்வொரு 100,000 ஆண்டுகளுக்கும், ஒரு சில முழுமையான டைனோசர் எச்சங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஃபிராங்க் இணைந்து எழுதிய 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை ஒன்று, 165 மில்லியன் ஆண்டுகளாக டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்த போதிலும், இதுவரை ஒப்பீட்டளவில் சில முழுமையான எச்சங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது. எனவே, நமது மனித இனம் சுமார் 300,000 ஆண்டுகளாகத்தான் (இதுவரை) இருந்து வருவதால், தொல்லுயிர் எச்ச பதிவில் நாம் பெரிய அளவில் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாமல் போகலாம் என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இருப்பினும், நாம் வேறு தடயங்களை விட்டுச் செல்லக்கூடும். பூமியின் வேதியியலை மாற்றுதல் பூமியின் இயற்கையான புவியியலின் ஒரு பகுதியாக, பாறைகள் தொடர்ந்து அடுக்குகளாக அல்லது மண் படிவங்களாக மண்ணில் படிய வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிவத்தின் வேதியியல் கலவையும் அந்தக் காலக்கட்டத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப இருக்கும். பேராசிரியர் ஃபிராங்க் கூற்றுப்படி, மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு மற்றும் கடல் மட்ட மாற்றங்கள் ஆகியவை பாறையில் படியும் விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது "இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு கூட கண்டறியப்படலாம்" என்கிறார். "மனிதச் செயல்பாட்டால் பூமியின் காலநிலை அமைப்பு மாறியதால், ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள், கார்பன் ஐசோடோப்புகளில் ஒரு வித்தியாசம் இருப்பதை அவர்கள் காண்பார்கள்," என்கிறார் ஃபிராங்க். பரிணாமத்தை மறுவடிவமைத்தல் நமது எலும்புகள் தொல்லுயிர் எச்சங்களில் அதிகமாகக் காணப்படாவிட்டாலும், நாம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற அல்லது பல்லுயிர்த் தன்மையை மாற்றியமைத்த மற்ற இனங்களின் எச்சங்களை நாம் மாற்றியிருக்கலாம். படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு ஆய்வின்படி, வாழும் பாலூட்டிகளின் உயிர் எடையை (biomass) ஒப்பிட்டதில், அதில் 4% மட்டுமே காட்டுப் பாலூட்டிகளைக் கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகில் உள்ள அனைத்து பாலூட்டிகளிலும் 96% நாம் அல்லது நம்முடைய கால்நடைகள் என்று உயிர் எடையின் (biomass - அனைத்து உயிரினங்களின் மொத்த எடை) அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள பறவைகளின் உயிர் எடையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக நம்முடைய கோழிப் பண்ணைகளிலிருந்து வருகிறது. அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data) என்ற லாப நோக்கற்ற இதழின்படி, நாம் ஒவ்வொரு ஆண்டும் 75 பில்லியனுக்கும் அதிகமான கோழிகளைக் கொல்கிறோம். எனவே, அதிக எண்ணிக்கையில் இறக்கும் இந்த பறவைகளின் எச்சங்கள் எதிர்காலத்தில் கவனத்தை ஈர்க்கலாம். "நாம் உயிரியல் பரிணாமத்தின் பாதையை மாற்றியுள்ளோம்," என்கிறார் பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர், தொல்லுயிரியியலர் மற்றும் கெளரவ பேராசிரியர் ஜான் ஸலாசியேவிச். "நமது தொலைதூர எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், 'என்ன நடந்தது? ஏன் இது நடந்தது?' என்று ஆச்சரியப்படுவார்கள்," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் இவையெல்லாம் தொடங்கிய அடுக்குகளைத் தேடுவார்கள், அது நமது அடுக்குதான்." நமது 'இறுதி மரபுச் சின்னம்' பேராசிரியர் ஸலாசியேவிச் மற்றும் அவரது லீசெஸ்டர் பல்கலைக்கழக சக பேராசிரியர் சாரா கேபோட் இணைந்து எழுதிய "Discarded: How Technofossils Will Be Our Ultimate Legacy" என்ற புத்தகத்தில், நமது அன்றாடப் பொருட்கள் பூமியின் புவியியல் பதிவில் நீடித்து நிற்கும் என்று வாதிடுகின்றனர். ஒரு அலுமினிய பாட்டில், பாலியஸ்டர் ஸ்வெட்டர் அல்லது நிலத்தடி கார் பார்க்கிங் என இவற்றை அவர்கள் தொழில்நுட்பப் எச்சங்கள் என்று அழைக்கிறார்கள். பட மூலாதாரம், Sarah Gabbott படக்குறிப்பு, பூமியின் மண் படிவங்களில் (sediment) தடயத்தை விட்டுச்செல்லும் அன்றாடப் பொருட்கள், நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது குறித்த குறிப்புகளை எதிர்கால நாகரிகங்களுக்கு வழங்கக்கூடும். 2020-ஆம் ஆண்டு ஆய்வின்படி, நாம் ஆண்டுதோறும் 30 ஜிகா டன் பொருட்களை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாரந்தோறும் தங்கள் உடல் எடையை விட அதிகமாக உற்பத்தி செய்வதற்குச் சமம். பூமியில் இப்போது உயிருடன் உள்ள பொருள்களைவிட, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் அளவு (அவற்றின் உலர்ந்த எடை) அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனித உற்பத்தியில் மிகப்பெரிய விகிதம் கான்கிரீட்டிலிருந்து வருகிறது. இது எதிர்காலத்தில் கண்டுபிடிப்பவர்களுக்கு மிகவும் இயற்கைக்கு மாறானதாகத் தோன்றலாம். ''கான்கிரீட் கட்டடங்களின் விளிம்புகள், நடைபாதை கற்கள் என தொல்லுயிர் எச்சங்களில் வடிவங்களை அவர்கள் கண்டால்... அது இயற்கையான படிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிவார்கள்." என்கிறார் ஜான் ஸலாசியேவிச். படக்குறிப்பு, நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2020-ஆம் ஆண்டில், உலகில் உள்ள வாழும் விலங்குகளை விட மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு இரு மடங்கு அதிகமாக இருந்தது. நமது பல பொருட்கள் மிக நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் "ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மட்டுமல்ல, மில்லியன் கணக்கான ஆண்டுகள் கூட நீடிக்கலாம்" என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார். 2050-ஆம் ஆண்டுக்குள் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அளவு நாம் அவ்வளவு அதிகமான பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறோம். ஆனால் இது பிளாஸ்டிக் மட்டும் அல்ல. "நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கிராஃபைட் உள்ளது," என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார். "எனவே, பென்சில் வடிவில் உள்ள கிராஃபைட் நான்கு பில்லியன் ஆண்டுகள் நீடிக்கும்." நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவ இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இந்தப் தொல்லுயிரியியலர் கூறுகிறார். "காகிதம் செல்லுலோஸால் ஆனது, அது இலைகளின் பொருளே ஆகும். எனவே... சரியான சூழலில் காகிதம் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் நீடிக்கலாம்," என்று அவர் ஊகிக்கிறார். கிரக அளவில் ஏற்படும் மாற்றங்கள் மனிதர்கள் பூமியின் புவியியலில் ஒரு பெரிய தடத்தை ஏற்கனவே பதித்திருக்கலாம். நம் மறைவுக்குப் பிறகு, வேறொரு புத்திசாலித்தனமான இனம் ஒரு நாள் அதைப் பார்க்குமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நமது மரபுச் சின்னத்தை கற்பனை செய்ய இவை பயனுள்ளதாக இருக்குமா? என்று கேட்டால் பேராசிரியர் ஃபிராங்க் ''ஆம்'' என்கிறார். "பூமியில் ஏற்படும் இந்த பெரிய மாற்றங்கள் - பல நூற்றாண்டுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார். பிபிசி உலக சேவையின் கிரவுட் சயின்ஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் தகவல்கள்: எல்லென் சேங் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmxj8n4n2lo

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

3 months 2 weeks ago
ஒரே பாடத்திட்டம் என்றால் அதன் அடிப்படை என்ன? அரசை நம்ப முடியுமா?? பாடத்திட்டம் இப்படி வந்தால்??? பல இனங்கள் இருந்த போதும் பாடம் ஒன்றுதான் பாடம் ஒன்றுதான் பல மொழிகள் இருந்த போதும் ஒரு மொழிதான் சிங்களம் ஒரு மொழிதான் சிங்களம் வழிபடவும் வரம் தரவும் ஒரு தெய்வம் புத்தர் தான் ஒரு தெய்வம் புத்தர் தான்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
நான் 2013க்கு முத‌லே ம‌க‌ளிர் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கிட்டேன் த‌லைவ‌ரே நான் ம‌க‌ளிர் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் தென் ஆபொரிக்கா ம‌க‌ளிர் அணி சின்ன‌ அணியாக‌ இருந்த‌து , இடையில் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் விஸ்ப‌ரூப‌ம் எடுத்த‌வை...............2016க்கு பிற‌க்கு தென் ஆபிரிக்கா அணி மெது மெதுவாய் வ‌ள‌ர‌ தொட‌ங்கி விட்ட‌து இல‌ங்கை ம‌க‌ளிர் த‌ங்க‌ளின் நாட்டில் விளையாடும் போது ந‌ல்லா விளையாடுவின‌ம் , இந்த‌ உல‌க‌ கோப்பை இல‌ங்கைக்கு ந‌ல்ல‌ ப‌டியா அமைய‌ வில்லை , ம‌ழையால் ப‌ல‌ விளையாட்டு கைவிட‌ப் ப‌ட்ட‌து............... ம‌ழை வ‌ராட்டி இல‌ங்கை ம‌க‌ளிர் நியுசிலாந் ம‌க‌ளிர‌ வென்று விருப்பின‌ம்..........................
Checked
Thu, 02/12/2026 - 11:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed