புதிய பதிவுகள்2

சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!

1 month 2 weeks ago
4 மீன்பிடி கப்பலுக்கு குண்டுபோட்டு கொஞ்ச போதைப் பொருளை எடுத்துவிட்டு நாட்டைப் பிடிக்க வேண்டியது தான். பழையபடி எல்லோரும் அரசர்கள் தான்.

சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!

1 month 2 weeks ago
நீ நடத்து தல. உக்ரேனை புட்டின் ஆக்கிரமிக்கமுடியும்…. வெனிசுலாவுக்குள் பூந்து அதிபரையே தம்பர் அபேஸ் பண்ண முடியும் எண்டால்… நீ மட்டும் என்ன தக்காளி தொக்கா தல? தைய்வான் மட்டும் இல்ல தல, இந்த அவுஸ்ரேலியா, நியூசிலாந்த கூட நீ சீனாவோட இணைச்சுகலாம்…தப்பே இல்லை. பிகு இதெல்லாத்தையும் பார்த்துட்டு நம்ம ஜி அகண்ட பாரத் ந்னு இன்னொரு வாட்டி கிளம்பி, மூணு ரபேலை காவு கொடுக்காத வரை ஓக்கேதான்😂

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
ஆனால் அவர் பேசிய பேச்சில் அமெரிக்காவை ஏசியுள்ளார். நடிப்போ தெரியாது. ஹெலியை கட்டி இழுத்து வந்தாச்சாம்.

டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?

1 month 2 weeks ago
இன்னொரு புஸ்வாண வழக்கை போட்டிருக்கிறது அனுர அரசு. அனுர ஆட்சி அல்லவா…அடுத்த்தது அதுதான் நீங்கள் களைக்காமல் ஆடுங்கள் காவடியை😂.

கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!

1 month 2 weeks ago
பல் டாக்குத்தர் பிள்ளையின் வாயுக்குள் வேறு ஏதோ ஆயுதத்தை விட்டுப்போட்டாராம் என்று ஒரு இடத்தில் வாசித்தேன். கண்காணிப்பு கமெரா பூட்டினால் பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
உலக வெளியில் நாங்கள் புறக்கணிக்கத்தக்க துணிக்கைகள். எங்களுக்கு ஏற்கனவே 2009 தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வெனிசுவெலா என்ன ஈரான் என்ன எது நடந்தாலும் எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை யாராவது மாற்றி எழுதப்போறாங்களா என்ன. அது சரி உந்த வெனிசுவலா அதிபரை பார்க்க சதான் குசைனின் முகசாயல் அடிக்கிது. எனக்கு கண்ணில் கோளாறோ அல்லது யாராவது உங்களுக்கும் அப்படி தோன்றுகின்றதோ? துருத் சோசல் பாவிக்கிற ஆட்க்கள் யாராவது முடியுமானால் டிரம்ப் பார்க்கக்கூடியமாதிரி இலங்கையில் மன்னார் எனும் இடத்தில் வெனிசுவெலாவை விட அதிக எண்ணை உள்ளதாய் எழுதிவிடுங்கோ. என்ன நடக்கிது என்று பார்ப்பம்.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
பொருளாதாரத்திலும் ஆயுத வலிமையிலும் மிகவும் பின் தங்கிய ஒரு நாட்டை பெரும் போர் செய்து கைப்பற்றியமாதிரி இவர்கள் பண்ணும் அலப்பறையை என்ன சொல்ல? வெனிசுலாவை ஆக்கிரமிக்க ட்ரம்ப் சொன்ன பிரதான காரணம் போதைபொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல்தான், ஆனால் தென்னமெரிக்காவிலேயே போதைபொருள் வர்த்தகத்திலும், அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தலை மேற்கொள்வதிலும் முன்னணியில் நிற்பது மெக்சிக்கோதான். போதைபொருள் வர்த்தகத்தில் ஈவிரக்கமற்ற மாபியாக்களையும் கொண்டிருப்பது அமெரிக்க எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிக்கோதான், அதற்கடுத்தது பிரேசில். அங்குபோய் ஆக்கிரமித்து அந்நாட்டு தலைவரை அமெரிக்கா கொண்டுவர அமெரிக்க அதிபர் நினைக்கவில்லை காரணம் இரண்டேதான், வெனிசுலா அளவிற்கு அங்கு எண்ணெய் வளமில்லை, ஒருகாலம் மெக்சிக்கோவில் எண்ணெய் வளம் இருந்தது அதையே பின்னாட்களில் அபகரித்து அமெரிக்கா லாஸ் ஏஞ்சல் எனும் பெயரில் தன்னோடு இணைத்துக்கொண்டது. இரண்டாவது மெக்சிகோ அமெரிக்காவை எதிர்த்து சுய கெளரவ ஆட்சி நடத்தவில்லை. அமெரிக்காவை எதிர்த்து ஆயுத அரசியல் பொருளாதார போர் செய்தால் உலகின் எந்த நாட்டையும் போர் செய்து முடக்க பார்க்கிறது முடியாவிட்டால் பொருளாதார தடை விதித்து ஏழ்மைக்கு தள்ளுகிறது. ஈராக்,கியூபா ஆப்கான் வடகொரியா,லிபியா ஈரானுக்கு அதுதான் நடந்தது அடுத்து வரும் காலங்களில் அதுதான் எதிர்கால வரலாறாக இருக்கும். இந்த பரிதாபமான நிலைகளுக்கு பின்னால் ஒரு ஒற்றுமையிருக்கிறது இந்த பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளின் பின்னாலும் உதவுகிறோம் என்று சொல்லி நிற்பது ரஷ்யாவும் சீனாவும்தான், அமெரிக்க எதிர் வீரவிளையாட்டுக்கு இவர்களை உசுப்பேத்திவிட்டு மேற்குலகின் கை ஓங்கிவிட்டால் சத்தமில்லாமல் தங்களை நம்பியவர்களை அம்போ என்று கைவிட்டு கழண்டுவிடும், அதுதான் ஈராக், சிரியாவில் நடந்தது. இவர்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொடூர சிந்தனைகளைஅவிட கேவலமானவர்கள். பொருளாதாரத்திலும் ஆயுதவலிமையிலும் உலகின்மீது தனது பலத்தை பிரயோகிக்கும் அமெரிக்காவை ஓரளவேனும் வழிக்குகொண்டுவரவேண்டுமென்றால், ஏதாவது ஒரு முனையில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து அமெரிக்காவிற்கு ஆயுத ரீதியில் ஒரு பெரும் தோல்வியை வழங்கியாகவேண்டும், அதற்கு அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை, முடிந்தவரை தம்மை நம்பியவர்களை பயன்படுத்திவிட்டு அமெரிக்கா வாளோடு வந்தால் சத்தமில்லாமல் நழுவி செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். நவீன உலகம் தமது பொருளாதாரம் பாதிக்கப்படாமலே எதையும் செய்ய நினைக்கிறது. வெனிசுலாவைவிட அமெரிக்காவை நேரடியாகவே அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் ஈரானுக்குள்ளும், வடகொரியாவுக்குள்ளும் நுழைந்து அந்தநாட்டு தலைவர்களை தூக்கிக்கொண்டு அமெரிக்காவுக்கு செல்லும் தைரியம் அமெரிக்காவுக்கு இல்லை அவர்களின் ஆயுத வலிமை அமெரிக்காவுக்கு அந்த தைரியத்தை கொடுக்கவில்லை, அதனால் பொருளாதார ரீதியாக முடக்குகிறது. எம் கை கால்கள் உறுதியாக இருந்தால் எம் எதிரிகூட எம்முடன் சிரித்துக்கொண்டுதான் பேசுவான், பலவீனமானவன் என்று தெரிந்துவிட்டால் பயந்தாங்கொள்ளிகூட நம்மை அடிக்க பார்ப்பான். உலக வளங்களை சுரண்டும் அமெரிக்காவின் காலம் காலமான தலைமுறையின் புது வாரிசு ட்ரம்ப், வந்த வரத்தில் கிரீன்லாந்தை அபகரிக்க பார்த்தார், முடியவில்லை, கனடாவை அமுக்க பார்த்தார் அதுவும் கைகூடவில்லை, தலீபான்களிடம்கூட தாம் விட்டு சென்ற ஆயுதங்களுக்கு காசு கேட்டார் காமெடியா போச்சு, பின்பு உலக வரிகளில் கை வைத்தார் அடுத்ததாய் இப்போ வெனிசுலா.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
இவர் மூலமாகவே சகல இரகசிய நகர்வுகள் நடந்தாக சொல்கிறார்கள். இத்துடன் சிறிய சண்டை நடந்ததாகவும் அமெரிக்க கெலி ஒன்று சுட்டு வீழ்த்ப்பட்டதாகவும் ஊர்ஜிதமில்லாத தகவல்கள் சொல்கின்றன.

சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!

1 month 2 weeks ago
ஒரு காலத்தில் வெவ்வேறு இனங்களை கொண்ட நாடுகளை தம் நலனுக்காக ஆயுத வலிமையுடன் ஒருங்கிணைத்து சொத்து சுகங்களை திருடிய மேற்குலகிற்கு நல்ல பாடம்.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

1 month 2 weeks ago
அதிரடி 1. சிங்கள கட்சியை எதிர்த்து பொது வேட்பாளராக களமிறங்கிய அரிய நேந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து அதிரடி பதவி நீக்கம். அதிரடி 2. அரசுக்கு சார்பாக வாக்களித்ததால் சிறிதரன் கட்சியிலிருந்து பதவி நீக்கம். ஆனால் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக, கட்சியின் ஒப்புதலின்றி, அரசுடன், வெளிநாட்டு தூதுவர்களுடன் இரகசிய பேச்சுக்கள், நகர்வுகள், முடிவுகள் மேற்கொண்ட, தமிழ்தேசியத்துக்கெதிரான கருத்துக்கள் சொன்ன, தனக்கென பதவிகளை உருவாக்கிக்கொண்ட ,பதவியை இறுக பிடித்துக்கொண்டுள்ள சுமந்திரன் கட்சியின் பொது செயலாளர். தமிழரசுக்கட்சி தன் முடிவை நோக்கி பயணிக்கிறது. சுமந்திரன் அடிக்கடி சொல்லுவார், தமிழ்த்தேசியம், தமிழரசு என்று கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதால் சிங்களவர் கோபம் அடைகின்றனராம், பயப்படுகின்றனராம். அவற்றை இல்லாமல் செய்வதற்காகவே கட்சிக்குள் இறக்கப்பட்டார். வந்த காரியம் ஓரளவு நிறைவேறிவிட்டது. தன் இனம் சார்ந்த பெயரை தமிழ் மக்கள் வைப்பதற்கு சிங்களம் ஏன் வெறுக்க வேண்டும்? அதனால் சிங்களத்திற்கு என்ன பாதிப்பு? அதாவது தமிழர் இந்த மண்ணின் குடிகள் இல்லை என்று நிறுவுவதற்கு இவைகள் தடையாக உள்ளனவோ? தமிழ் என்று சொல்லக்கூடாது என்று கூறு அரசுக்கு துணை போகிற சுமந்திரன், எப்படி தமிழ் மக்களின் பிரதி நிதியாகவோ அல்லது அவர்கள் சார்பாக முடிவெடுக்கும் ஒருவராகவோ இருக்க, செயற்பட முடியும்? இருந்தாலும் சுமந்திரனின் அரசியல் அஸ்தமனமாகிறது.

விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!

1 month 2 weeks ago
"சல்லியர்கள்" ஈழத்தமிழர் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.ஈழத்தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டிய படைப்பு.

🏥  பாரதிராஜா  அவசர சிகிச்சைப் பிரிவில்  ) அனுமதிக்கப்பட்டுள்ளார்

1 month 2 weeks ago
எனக்கு பிடித்த திரை இயக்குனர் பாரதிராஜா. முதுமையாகி வாழ்க்கையின் இறுதி படிக்கட்டுகளுக்கு வந்து விட்டவர். இருந்தாலும் தன் மகனினது அவல மரணத்தின் உச்ச சோகம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே தள்ளிவிட்டது.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

1 month 2 weeks ago
உக்கிரேன் வளங்களை குறிப்பிடவில்லை, இரஸ்சியாவினுடனான அமெரிக்க மேற்கு எதிர்நிலைப்பாட்டிற்கு காரணம் வளங்களை தேசிய மயப்படுத்துவது இக்கால கட்ட உலகில் ஒரு ஆபத்தான சிகப்புக்கோடு. நான் நிலவில் கால் பதித்தது பற்றி எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை, அது ஒரு விடயமாக எனக்கு தெரியவும் இல்லை, பலர் இவ்வாறு எதிர்மறையாக சிந்த்திப்பதற்கான வரலாறு பற்றி குறிப்பிட்டேன். எல்லோருக்கும் நம்பிக்கைகள் இருக்கிறது, அதுவே எமது ஒவ்வொருவரின் Perception ஆகிறது, ஆனால் யதார்த்தத்திற்கும் எமது எதிர்பார்ப்புகளுக்கும் இடைவெளி வரும் போது அதனை ஏற்று கொள்வது ஒன்றும் கடினமாக எனக்கு தெரியவில்லை.

கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!

1 month 2 weeks ago
உலகில் இல்லாத பொல்லாத காப்புறுதிகளை வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் கும்பல்களை நம்பி நீதி நேர்மை நியாய கருத்துக்கள் எழுதவே கூடாது. ஊடகங்களில் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கிடைக்காமல் நியாவாதிகளுக்கு தண்டனை கொடுப்பதுதான் இன்றைய உலக நியதி.
Checked
Mon, 02/23/2026 - 19:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed