1 month 2 weeks ago
வீர வணக்கங்கள்.!!🙏🙏
1 month 2 weeks ago
வங்காளதேச அணி இந்தியாவுக்குள் விளையாடமாட்டோம் என்று அறிவித்துள்ளது. தங்களது போட்டிகளை இலங்கைக்குள் மாற்றும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அண்மையில் இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே அரசியலில் முறுகள் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, BCCIன் கோரிக்கையின் அடிப்படையில், KKR அணி, முஸ்தபிசுர் ரகுமானை, அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இது இப்பொழுது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உலகக் கிண்ணப் போட்டிகளை இது எப்படி பாதிக்கப் போகிறது
1 month 2 weeks ago
அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். Index இல் 1700 சொச்சம் வரை பக்கங்கள் என்று குறித்துள்ளார்கள். எனவே வெளிவந்து எங்கேனும் பதுக்கப்பட்டிருக்கலாம். 2010இல் சென்னை தீவுத்திடலில் இந்த நூல் கொழுத்தப்பட்டதாக நினைவு உண்டு, Q-Branchல்.
1 month 2 weeks ago
சில வேளை வால்யூம் 2 வெளி வரவே இல்லையோ? இந்திய அளுத்தம், நளினியை மனம் மாற்ற இந்த புத்தகத்தின் வால்யூம் 1 பயன்பட்டது போன்ற விடயங்களால் வால்யூம் 2 வரவில்லை என மிக தெளிவில்லாத நியாபகம் ஒன்று உள்ளது.
1 month 2 weeks ago
இதெல்லாம் Volume-1 தான் ஐயனே... மற்ற 1000 பக்கங்கள் இல்லை. அழிந்துவிட்டது.
1 month 2 weeks ago
https://x.com/studentofte/status/1873119587954512065?s=46 மன்னிக்கவும் லிங் விடுபட்டுவிட்டது. இதன் கொமெண்ட்ஸ்சில் கூகிள் டிரைவ் pdf இணைப்புள்ளது
1 month 2 weeks ago
Sri Lanka’s Ambassador to Cuba, Sarath Dissanayake who is concurrently accredited to the Bolivarian Republic of Venezuela, presented his Letter of Credence to President of Venezuela, Nicolas Maduro Moros at a simple but elegant ceremony at the President’s Office in Caracas on 2nd October 2013. Earlier in the day, Ambassador handed over a copy of Credentials to Vice Foreign Minister of Venezuela, David Velasquez Caraballo at the Foreign Ministry following a luncheon hosted by the latter for the newly accredited envoys to Venezuela. During a brief exchange of views and pleasantries with President Maduro, Ambassador Dissanayake conveyed President Mahinda Rajapaksa’s sincere greetings and warm wishes to President Maduro and the people of Venezuela. Recalling the deep rooted friendship and understanding nurtured between the late President Hugo Chavez and President Rajapaksa, Ambassador Dissanayake emphasized the commitment of Sri Lanka to build up even closer relations with Venezuela based on mutual trust, respect and shared values. President Maduro, on his part commended President’s Rajapaksa’s steadfast and visionary leadership and also Sri Lanka’s post-conflict progress and developments that ushered in a new era for all Sri Lankans. He also noted Venezuela’s firm resolve to further strengthen multifaceted ties and cooperation in all areas of interest with Sri Lanka for mutual benefit. http://www.mfa.gov.lk/images/stories/cuba200ara.jpg The Venezuelan President extended his best wishes to President Rajapakse and the people of Sri Lanka for continued happiness, wellbeing and progress. Ambassador Dissanayake conveyed his sincere gratitude to President Maduro for the warm welcome and opportunity to meet him and present Credentials. During his short stay in Caracas, Sri Lanka’s Ambassador took the opportunity to meet with few other Venezuelan officials and discussed Sri Lanka - Venezuela relations and issues of interest and concern to both countries. During discussions he also emphasized the significance of the upcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM) scheduled to be held in Sri Lanka from 12th-17th November 2013 and sought Venezuela’s participation at the Commonwealth Business Forum (CBF) which would bring together Heads of Government, Ministers and top business leaders from around the world including over a thousand delegates. Embassy of Sri Lanka Havana, Cuba 06th October 2013
1 month 2 weeks ago
விளங்கவில்லை ஐயனே
1 month 2 weeks ago
இது?
1 month 2 weeks ago
ஒரு சண்டைப்பிரியனை அதிகாரத்தில் இருத்தியபோதே இவை எதிர்பார்க்கப்பட்டவை தான். இன்னும் வரும்...... எனக்கு வெனிசுவேலாவும் இரக்கமற்ற அரக்க நாடு தான்.
1 month 2 weeks ago
குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடித்தால் மாரடைப்பு ஏற்படுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குளிர் காலத்தில் நாம் வழக்கமாக குறைந்த அளவு தண்ணீரையே குடிக்கிறோம் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் சுப் ராணா பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோடை வெப்பத்தில் வியர்க்கும்போது, எப்போதும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்போம். வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், திரும்பி வரும் வழியிலும், வீட்டிற்கு வந்த பிறகும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்போம். ஆனால் குளிர்காலம் வந்தவுடன் அனைத்தும் மாறிவிடுகிறது. தண்ணீர் பாட்டிலுக்கும் நமக்குமான தூரம் சற்றே அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் ஏன் தாகம் எடுப்பதில்லை என்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? குளிர்காலத்தில் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள். ஆனால் குளிர்காலத்தில் தாகம் குறைவாகவே எடுக்கிறது ஏன்?? தண்ணீரை குறைந்த அளவில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளா அல்லது முதியவர்களா? குளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்? டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவத் துறை இயக்குநர் மருத்துவர் புலின் குமார் குப்தா கூறுகையில், "குளிர் காலத்தில் நமது தாகம் கணிசமாகக் குறைகிறது. நமக்கு குறைவாகவே வியர்க்கும், அதனால் உடலுக்குக் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படுவதைப் போல நாம் உணர்கிறோம்," என்று விளக்கினார். "பலர், குறிப்பாக முதியவர்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள், அதிக தண்ணீர் குடித்தால் அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்து, வேண்டுமென்றே தண்ணீரை குறைவாகக் குடிக்கிறார்கள்" என்றார். மேலும், "கோடைக் காலத்தைப் போலவே குளிர் காலத்திலும் உடலுக்கு அதே அளவிலான தண்ணீர் தேவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள ஹீட்டர்கள், டிரையர்கள் மற்றும் உட்புற வெப்பமூட்டும் அமைப்புகள் காற்றை மிகவும் வறண்டதாக மாற்றுகின்றன. இது நீர் இழப்பை மேலும் அதிகரிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். நாம் குறைந்த அளவு தண்ணீரைக் குடிப்பதால், உடலில் தொடர்ந்து நீர் இழப்பு ஏற்பட்டு, அது நாள்பட்ட நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்றார் அவர் பட மூலாதாரம்,Getty Images அமெரிக்க இதய சங்கத்தின் 2019ஆம் ஆண்டு ஆய்வின்படி, நீண்ட காலம் குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. "குளிர் அதிகரிக்கும்போது, வெப்பத்தைப் பாதுகாக்க புற ரத்த நாளங்களை உடல் சுருக்குகிறது" என்று மெட்டாமார்போசிஸ் (ஒரு ஆரோக்கியம் சார்ந்த தளம்) அமைப்பின் தலைமை செயல் அதிகாரியும், ஆரோக்கியம் தொடர்பான ஆலோசகர் மற்றும் உணவு நிபுணருமான திவ்யா பிரகாஷ் கூறுகிறார். "இதனால் உடலின் மையப் பகுதிகளில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் உடல் எல்லாம் சரியாக இருப்பதாகவும், தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றும் உணர்கிறது. இதன் காரணமாக, தாகம் எடுக்கும் உணர்வு 40% வரை குறையலாம். ஆனால் உடலின் அடிப்படைத் தண்ணீர் தேவையில் வானிலை சூழல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, அந்தத் தேவை எப்போதுமே சுமார் 2.5 முதல் 3.5 லிட்டர் வரை இருக்கும்." என்றார் அவர் பட மூலாதாரம்,Getty Images குறைவாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் நமது உடலில் சுமார் 60% நீர் உள்ளது. இதுகுறித்துப் பேசிய மருத்துவர் புலின் குமார் குப்தா, "இந்த நீர் ரத்தத்தில் உள்ளது. ரத்தத்தின் மூலமாகத்தான் ஆக்சிஜன், ஊட்டச்சத்துகள் மற்றும் பிற முக்கியமான பொருட்கள் முழு உடலின் செல்களுக்கும் சென்றடைகின்றன," என்கிறார். "நீரின் அளவு குறையும்போது, ரத்தம் அடர்த்தியாகிறது. இது மூளை செயலிழப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த அபாயம் குறிப்பாக குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும். அடர்த்தியான ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவதற்கு இதயம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது." உடலில் நீரின் அளவு குறைவாக இருப்பது ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, மூளை ரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். இது சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து, சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பைக் கணிசமாக அதிகரிக்கிறது என்றார் அவர். மருத்துவர்களின் கூற்றுப்படி, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தைப் பாதித்து, மலச் சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகளை உண்டாக்குகிறது. மேலும், நீண்ட காலம் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், தோல் வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் உணவு நிபுணரும், 'ஒன் டயட் டுடே' அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் இது தொடர்பாகப் பேசும்போது, "அதிகப்படியான மந்தநிலை, பலவீனம், சோர்வு, அதிகரித்த மன அழுத்தம், பதற்றம் (நீர்ச்சத்துக் குறைபாடு கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது), தலைச்சுற்றல், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற உணர்வுகள் என நீர்ச்சத்துக் குறைபாட்டை உணர்த்தும் சில சமிக்ஞைகளை நம் உடல் வெளியிடுகிறது. இந்த சமிக்ஞைகள் அனைத்தும் உடல் செல்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதைக் குறிக்கின்றன," என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெருப்பால் உடலை சூடுபடுத்துவது உடலிலுள்ள நீரின் அளவை குறைக்கிறது. யாருக்கு அதிக ஆபத்து உள்ளது? முதியவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் அனு அகர்வால். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதன் விளைவுகள் வெவ்வேறு வயதுப் பெண்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும் என்றும் மருத்துவர் அனு அகர்வால் விளக்குகிறார். ''இளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடைய (40 வயது வரை) பெண்களுக்கு ஏற்கெனவே உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பு உடலில் நீர்ச்சத்து குறைய வழிவகுக்கிறது. இதனால் மாதவிடாய் வலி அதிகரிக்கிறது, மேலும் வாயு மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்னைகள் பொதுவாகக் காணப்படுகின்றன.'' தொடர்ந்து பேசிய அவர், "குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது, நச்சுகள் உடலில் தங்கி கட்டிகள் உருவாக வழிவகுக்கிறது" என்றார். பட மூலாதாரம்,Getty Images தண்ணீர் குடிக்க சரியான வழி என்ன? தண்ணீர் குடிக்க உகந்த வழி குறித்தும் மருத்துவர் அனு அகர்வால் விவரித்தார் குளிர்காலத்தில், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த 2-3 மணிநேரத்திற்குள் 2-4 கிளாஸ் தண்ணீரை மெதுவாகக் குடிக்கவும். உங்கள் தூக்கச் சுழற்சி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, மாலை 5 மணிக்குள் உங்கள் தினசரி தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மாலைக்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் தூக்கம் கலைவதற்கும் வழிவகுக்கும். மேலும், "குளிர் காலத்தில் மக்கள் தண்ணீருக்குப் பதிலாகத் தேநீர், காபி, சூப் அல்லது மிக அதிக சூடான தண்ணீரைக் குடிக்கிறார்கள். ஆனால் மிக அதிக சூடான தண்ணீரைக் (50-60 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல்) குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் நமது உடலின் இயல்பான வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸ். இத்தகைய சூழ்நிலையில், வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதே சரியான வழியாகும். இது உடலுக்குச் சிறந்தது மற்றும் எளிதில் உறிஞ்சப்படும் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy1xn7j2jyo
1 month 2 weeks ago
பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட 600 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு Published By: Vishnu 04 Jan, 2026 | 07:18 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்க எல்லைகளுக்குள் கடந்த காலங்களில பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றபட்ட கஞ்சா போதைப் பொருட்கள் வழக்கின் சான்று பொருட்களாக நீதிமன்றில் பதிவாளரின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. அந்நிலையில் அவற்றில் வழக்குகள் முடிவுற்று, நீதவானினால் அழிக்க உத்தரவிட்டப்பட்ட சுமார் 600 கிலோ கேரளா கஞ்சா நீதாவனின் நேரடி கண்காணிப்பில் பொலிகண்டி குப்பைத்திடலில் அவை தீயிட்டு அழிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/235214
1 month 2 weeks ago
"வகுப்புவாத அழுத்தம்" - டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) முடிவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்த வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் 17 இயக்குநர்கள் அடங்கிய வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்ப உள்ளது. மேலும், வங்கதேச அணி பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் வகையில், போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் பின்னர் விரிவான அறிக்கை வெளியிடும் என வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் நஜ்முல் அபதீன் ஃபஹீம் கூறினார். 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. வங்கதேசத்தின் முதல் போட்டி கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images முஸ்தஃபிசுர் ரஹ்மான் விவகாரத்தில் தொடங்கிய சர்ச்சை முன்னதாக, ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. "வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படும் அவமானத்தை எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கூறியிருந்தார். 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர்ரஹ்மான் நீக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்த அவர், "வங்கதேச கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வங்கதேசத்திற்கு ஏற்படும் எந்த அவமானத்தையும் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன," என்றார். ஆசிஃப் நஸ்ருல் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "வகுப்புவாதக் குழுக்களின் அழுத்தத்தின் கீழ் பிசிசிஐ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டது," என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த முழு விவகாரத்தையும் ஐசிசி-க்கு விளக்கி கடிதம் எழுதுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை அவர் கேட்டுக்கொண்டார். ஆசிஃப் நஸ்ருல் அவரது பதிவில், "ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒப்பந்தம் இருந்தபோதிலும் இந்தியாவில் விளையாட முடியாதபோது, முழு வங்கதேச கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பையில் விளையாட இந்தியா செல்வது பாதுகாப்பானது என்று உணர முடியாது என்பதை வாரியம் தெளிவுபடுத்த வேண்டும்," என்று எழுதினார். இத்துடன், வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images முஸ்தஃபிசுர் ரஹ்மானின் கருத்து என்ன? டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் கேகேஆர் அணி வங்கதேச வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசுர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு வாங்கியிருந்தது. இருப்பினும், பிசிசிஐ உத்தரவின் காரணமாக கேகேஆர் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டியிருந்தது. இந்த விவகாரம் குறித்து முஸ்தஃபிசுர் ரஹ்மான், "அவர்கள் என்னை விடுவித்தால் நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறியிருந்தார். வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைத் தவிர, வங்கதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் தபிஷ் அவலும் ஐபிஎல்-லிருந்து முஸ்தஃபிசுர் நீக்கப்பட்டதற்கு ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை அவரது கிரிக்கெட் திறமையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தது, ஆனால் "அரசியல் தலையீடு காரணமாக அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் கூறினார். 'மக்களை ஒன்றிணைக்கவும், பிளவுகளைக் குறைக்கவும் விளையாட்டுக்கு ஒரு அசாதாரண சக்தி உள்ளது' என்று அவர் கூறினார். 'பிளவுகளை உருவாக்க அல்லாமல், பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் வளர்க்க விளையாட்டு பயன்படுத்தப்பட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23r8xle38ro
1 month 2 weeks ago
வெனிசுலா ஜனாதிபதி மற்றும் மனைவியை விடுவிக்குமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது Published By: Vishnu 04 Jan, 2026 | 06:48 PM வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்து உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு சீனா அமெரிக்காவை வலியுறுத்துகிறது. குறித்த சம்பவத்தை சீனா கடுமையாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இராணுவ இலக்குகள் உட்பட பல இடங்களில் அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் 3ஆம் திகதி சனிக்கிழமை அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்கள் இப்போது நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235212
1 month 2 weeks ago
உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு Jan 4, 2026 - 06:21 PM எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா செல்வதை பங்களாதேஷ் அணி மறுத்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் ரீதியான பதற்றமான சூழ்நிலையில், பங்களாதேஷ் வீரர்களின் "பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை" கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்தொடரில் பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடவிருந்த போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாரு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரில், பங்களாதேஷ் அணி கொல்கத்தாவில் 3 போட்டிகளில் விளையாடவிருந்தது. எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடவிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் திடீரென அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பதற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பங்களாதேஷில் வாழும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே முஸ்தபிசுர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjzqczd403i3o29ngw2om12w
1 month 2 weeks ago
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல் 04 Jan, 2026 | 02:21 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள், அதற்குப் பதிலீடாகப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இப்புதியவரைவை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். அதற்கமைய நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கிய சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு எனும் அமைப்பு இப்புதிய வரைவு தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது, தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் அடையப்பட்டிருக்கும் மனித உரிமைகள் சார்ந்த பெருவெற்றி போல் காண்பிக்கப்படுகின்றது. அந்த பிம்பத்தின் விளைவாக நிர்வாக ரீதியான தடுத்துவைப்பு, இராணுவ அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் சார்ந்த குற்றங்கள் என்பன உள்ளடங்கலாக அவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள மிகமோசமான அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற தன்மை நிலவுகின்றது. பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள் இவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதக்குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்துடன் அவசியமேற்படும் பட்சத்தில் அவசரகால வழிகாட்டல்களை இணைந்துப் பிரயோகிப்பதை விடுத்து, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் பிரயோகிக்கப்படுமாயின், அது சம்பந்தப்பட்ட நபருக்கான பாதுகாப்பு தளர்த்தப்பட்ட குற்றவியல் அடிப்படையுடன், பரந்துபட்ட நிறைவேற்றதிகாரப் பிரயோகத்துக்கும் இடமளிக்கும். பரந்துபட்ட அதிகார வழங்கலுக்கு வாய்ப்பளிக்கும் இச்சட்ட வரைவின் அடிப்படை நோக்கம், அதன் பெயரில் உள்ளவாறு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதே தவிர, வன்முறைகளிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாப்பது அல்ல. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இவ்வரைவை உடன் வாபஸ் பெறுமாறும், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து சகல தரப்பினருடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235179
1 month 2 weeks ago
வெனிசுலாவில் அமெரிக்கா செய்வது பச்சை காடைத்தனம். இதை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஐரோப்பா, யூகே, கனடா, அவுஸ், நியூசிலாந்த் வெளியிட்டுள்ள அறிக்கைகள் சுத்த பயந்தாங்கொள்ளி தனம். இரெட்டை நிலைப்பாட்டின் உச்சம். அமேரிக்கா போதை பொருள் கடத்தல் என சொல்வது பொய் சாட்டு. அது உண்மை எனிலும் கூட… ஒரு நாட்டின் தலைவரை இன்னொரு நாட்டின் உள்நாட்டு சட்டத்துக்கு அமைய, மற்றைய நாட்டில் புகுந்து தூக்கி வந்து வழக்கு போடுவது…. ஐநா சாசனத்தை மீறும் செயல்… சர்வதேச சட்டத்துக்கு முரணானது…. நிச்சயமாக இது ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் அல்ல அகண்ட் பாரத் கனவில் இருக்கும் சங்கிகளுக்கு கூட எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் அடாவடி செய்ய ஒரு ப்ளூ பிரிண்ட்தான்.
1 month 2 weeks ago
செயற்கை நுண்ணறிவை பாவித்து ஒரு சேனல் இனித்தான் செய்யலாமா என்று யோசிக்கிறேன். திறந்ததும் அறிவிக்கிறேன். சப்ஸ்கிரைப் பொத்தான் பெல் பொத்தானை சொடுக்கி எல்லாரும் இணைப்பு எடுத்திடுங்கோ.
1 month 2 weeks ago
ஆனால் இதே அமெரிக்கா ரஸ்ய ஆக்கிரமிப்பு எதிராக பெருமளவு ஆயுதங்களையும் பொருளாதார உதவிகளையும் செய்தது ரஸ்யா உக்கிரேனை ஆக்கிரமிப்பது தவறானது என்று அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத கபாருளாதார உதவிகளை வழங்கியதோடு ஐநாவை உடனடியாக கூட்டி பெரும்குற்றஞ்சாட்டுகளை ரஜயாவுக்கு எதிராக முன்வைத்தன. ஆனால் இப்போது எல்லோரும்நழுவல் போக்கில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஐநாவும் ஒப்புக்கு அறிக்கையை விட்டுவிட்டு நித்திரைக்குப் போய்விட்டது. அமெரிக்கா வெனிசுலாலவை ஆதரித்ததற்கு கூறும் காரணம் முன்னுக்குப்பின் முரணானதும் ஏற்றுக்கொள்ள முடியாதததும் ஆகும். அமெரிக்கா தனது நாட்டுக்குள் போதை வஸ: கடத்தப்படுவதை அதன் எல்லைகளில் ஒழுங்கான பாதுகாப்பை வழங்காததே அதற்குக்காரணம். ஆகவே எந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வந்தாலும் அதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புக் குறைபாடே காரணம். வெனிசுலாலவை அமெரிக்கா அதன்அதிபரைக் கைது செய்தபின் அல்லது முற்றாக வெனிசுலாவை ஆக்கிரமித்தபின்னும் போதைப்பொருள் அமெpரிக்காவுக்குள் கடத்தப்படவில்லை என்று அமெரிக்காவால் உறுதியளிக்க முடியுமா? வேலியை சரியாகப் போடாமல் விட்டு விட்டு அடுத்தவன் தோட்டத்து மாடு எனது பயிரை மேய்ந்து விட்டது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும.?அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எந்த ஒரு நாடும் எந்த ஒரு நாடடையும் ஒரு பலவீனமான குற்றச்சாட்டை வைத்து ஆக்கிரமிப்பதற்கு போதுமானதாகும்.ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் ரூட்கிளியர்.
1 month 2 weeks ago
இதைத்தான் உக்ரேன் போர் ஆரம்பித்த நாளில் இருந்து எழுதுகிறேன். வல்(லூறு) அரசுகள் எப்போதும் வல்லூறுகளே. இதில் நாம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களை ஆதரிப்பது மட்டுமே எடுக்க கூடிய ஒரே ஒரு நியாயமான நிலைப்பாடு. இதை சொன்னால், புட்டின் மீதுள்ள அதீத காதலில், அல்லது மேற்கு வெறுப்பில் ஒரு பகுதியை மேற்கின் ஆதரவாளர் என பெயிண்ட் அடித்து, ரணகளம் பண்ணி விட்டார்கள்😂.
Checked
Mon, 02/23/2026 - 19:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed