புதிய பதிவுகள்2

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

1 month 4 weeks ago
பொலிஸார் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் கடுமையாக சித்திரவதை எம் மீது செய்துள்ளனர் என்று சொல்லி போலிக்கு நடித்து வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்ற நிரோஷ்சனும் இவர் போன்றவர்களும் எதிர்காலத்தில் தமிழ் அரசியல்வாதியாக வர கூடாது .

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

1 month 4 weeks ago
கடலூரில் பாவிக்கப்பட்ட கடற்கலம் இதற்கு தூம்புக்கட்டை (outrigger) ஒன்று உள்ளது. சோழமண்டல கடற்கரையில் தூம்புக்கட்டை பாவிக்கப்படுவதில்லை என்ற கருத்தை இப்படிமம் இல்லாமல் செய்கிறது.

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

1 month 4 weeks ago
போருக்கு பிந்திய கால(post - war) முன்னெடுப்புக்களை இலங்கை ஆட்சியாளர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை, மறுவளமாக நிலமையினை மோசமாக்கும் செயல்களையே முன்னெடுக்கிறார்கள். புலம் பெயர் உறவுகளும் போர்க்கால மனநிலையிலேயே தேங்கிவிட்டார்கள் (தனி நாடு), அரசுகள் தவறவிட்ட விடயங்களில் ஒன்றான பொருளாதார மீழ்கட்டமைப்பிற்கு புலம் பெயர் உறவுகள் உதவியிருக்கலாம். அங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கவில்லை, இது ஒரு இனப்பிரச்சினையாக மட்டும் பார்க்கின்ற நிலை நிலவுகிறது, இது சிறுபான்மையினரது பிரச்சினை, அது பல வடிவங்களில் உருவாகிறது, அனைவரும் சமம் எனும் எண்ணும் நிலையினை சமூகத்தில் உருவாக்க முடியாத ஒரு தோல்வி நிலை உள்ளது. தற்போது இலங்கை ஒரு கலைத்து போட்ட சீட்டு கட்டு போல உள்ளது சுயநலமிகள் தமக்குத்தேவையானவற்றை அதிலிருந்து உருவுகிறார்கள். இது இவ்வாறு தொடர்ந்தால் மீண்டும் ஒரு உள்நாட்டு போர் உருவாகலாம் (40% உள்நாட்டு போர்கள் ஒரு தசாபத்தில் மீண்டும் ஆரம்பித்ததாக கூறுகிறார்கள்), அது மீண்டும் தேவையற்ற அழிவுகளையே கொண்டுவரும், மக்கள் வாழ்கை நிலை மேலும் மோசமாகும். தற்போதய உலக ஒழுங்கு மாற்றம் ஒரு அமைதியற்ற சூழலை இலங்கையில் தோற்றுவிக்க ஏதுவான நிலைகளை உருவாக்கிவிடும், இலங்கைக்கு தேவையான ஒரு தேசிய அரசாங்கம் இந்த காலத்தின் அவசியம் (அதிகார பரவலாக்கத்தினை பெரும்பான்மை எப்போதும் ஒரு சந்தேக கண்ணுடன் பார்க்கின்றது) இறுக்கமான சட்டத்திற்கான அதிகாரம், சமூக சமத்துவம், சமூக பொருளாதார அபிவிருத்தி என்பன அவசியமாகிறது. இலங்கை, இந்த நூற்றாண்டின் ஒரு தோற்று போன தேசம், அதற்கு அனைவரும் காரணம்.

இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!

1 month 4 weeks ago
ஆம், இது எனக்கு நினைவில் கொண்டுவருவது அந்த தொடரூந்து நிலையங்களின் அறிவுப்பும், அதன் தொனியும். அந்த அறிவுப்பு எல்லோரையும் அறிவுப்பு முடியும் வரை கட்டி வைத்து இருக்கும். இப்போதும் அப்படியா அறிவுப்பு? முன்பு மகோவில் புகையிரத சந்தியில் இருந்தே மட்டக்கிளப்புக்கு, இப்பொது புதிய பாதை?

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

1 month 4 weeks ago
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ கீழ்க்கரையில் உருவோட்டிய ஒரு வகையான கடற்கலம். இவற்றிற்கு தூம்புக்கட்டை (outrigger) இருந்தது. ஒற்றை நெடுங்கட்டை (boom) இரட்டை நெடுங்கட்டை

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

1 month 4 weeks ago
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ திருப்பலக்குடியில் உருவோடிய நீளம் குறைந்த ஒற்றைப்பாய் கொண்ட கடற்கலம். இதற்கு கடிசும் (balance board) சுக்கானும் உண்டு.

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

1 month 4 weeks ago
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ ஆதிரம்பாக்கத்தில் ஓடிய பாய்மரம்கொண்ட கடற்கலம். இதற்கு Washtakes உண்டு. (தென் தமிழீழத்திலிருந்த வள்ளங்கள் போன்று தோற்றமளிக்கிறது)

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month 4 weeks ago
உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லதிலிருந்த ஒரு வகையான சிலை இரு படையணிக் கொடிகள் பறப்பதைக் காண்க இது குடும்பிமலை வடிவத்திலுள்ளது

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

1 month 4 weeks ago
நக்கல், நையாண்டிகள் எல்லாம் ஒரு புறம் போக தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நம்மவர்களே கல்லெறிவது இலங்கை அரசின் நீண்டகால அடக்குமுறை கொள்கைகளுக்கும், திட்டமிட்ட சிங்கள மயப்படுத்தலுக்கும் கிடைக்கும் பெரு வெற்றி! இனி அடுத்தகட்டம் நம்மவர்களே விகாரை கட்ட லொக்கேசன் எடுத்து கொடுப்பதோடு, காணி, காசு, பொருள் நன்கொடைகள் தொடக்கம், இலவசமாக கட்டுமான பணிகளும் செய்து கொடுப்பார்கள்.
Checked
Sun, 02/22/2026 - 13:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed