3 months 2 weeks ago
இந்தியா மகளிரின் பந்து வீச்சு நம்பிக்கை தரும் படி இல்லை......................... ரன் அவுட் மூலம் தான் முதலவாது விக்கேட்😁........................................
3 months 2 weeks ago
சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம் 02 Nov, 2025 | 05:10 PM திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சனிக்கிழமை (01) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது. சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சிரமதானத்தில் கலந்து கொண்டோருக்கு கூழ் காய்ச்சி பரிமாறப்பட்டிருந்தது. மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/229308
3 months 2 weeks ago
தென் ஆபிரிக்கா மகளிரும் பவர் பிலே ஓவருக்கை அடிச்சுத் தான் ஆடுகினம்.............................
3 months 2 weeks ago
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா! Nov 2, 2025 - 06:28 PM அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. Hobartயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக Tim David 74 ஓட்டங்களையும், Marcus Stoinis 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Arshdeep Singh 03 விக்கெட்டுக்களையும், Varun Chakravarthy 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். பின்னர் 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Washington Sundar ஆட்டமிக்காமல் அதிகபட்சமாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதன்படி 05 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் இந்திய அணியும் அவுஸ்திரேலிய அணியும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன. https://adaderanatamil.lk/news/cmhhpw39u01cwqplpcv76i4ty
3 months 2 weeks ago
சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு 02 Nov, 2025 | 05:10 PM சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற அமைப்பான குரலற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சனிக்கிழமை (01) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அந்தவகையில் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் அமைந்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் குறித்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல்கைதிகளின் உறவினர்கள் ஆகியோரால் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் நேரடியாகச் சென்று பார்வையிடுமாறும், அவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அத்தோடு தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்திருந்தனர். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தம்மால் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுமெனவும், உரிய இடங்களுக்கு கொண்டுசென்று அவர்களின் விடுவிப்புத் தொடர்பில் தம்மால் வலியுறுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். மேலும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களால் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229307
3 months 2 weeks ago
ரிஸ்ஹா வந்த கையோட ஒரு சிக்ஸ் அடிச்சு இருக்கிறா............320ரன்ஸ் மழை காரனமாய் போதும் என நினைக்கிறேன் ஆனால் இந்தியா தொடக்கம் மிக அருமை சிமிர்த்தி பந்தை வீன் அடிச்சதால் அவவாள் பெரிய ஸ்கோர் அடிக்காம அவுட் ஆகி விட்டா.....................
3 months 2 weeks ago
250 தாண்டியாச்சு. இன்னும் 6 பரிமாற்றங்கள் இருக்கிறது.
3 months 2 weeks ago
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
3 months 2 weeks ago
கொழும்பிலிருந்து மும்பைக்கு போதைப்பொருள் – ஐவர் கைது – பலகோடி சிக்கியது! adminNovember 2, 2025 இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் இந்திய மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஒரு பெண் பயணியின் உடமைகளை பரிசோதித்தனர். இதன்போது 09 தேயிலை தூள் பக்கெற்றுகளில் மறைத்து வைத்திருந்த கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். சுமார் 4.7 கிலோ நிறையுடன் அதன் மதிப்பு 47 கோடி ரூபா ஆகும். கொகைன் கடத்தி சென்ற பெண், அதை வாங்கிச் செல்ல சென்ற ஒருவர் உட்பட 5 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சர்வதேச போதை கடத்தல் கும்பல், அண்மை காலமாக போதைப்பொருளை கடத்த இந்திய பெண்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இதனைக் கண்டறிவதைத் தடுக்க உணவுப் பொருட்களுக்குள் வைத்து கடத்துகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222212/
3 months 2 weeks ago
யாழ் . பொது நூலகத்தை பார்வையிட்ட தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்! adminNovember 2, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்றிருந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (02.11.25) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர். 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண பயணம் மேற்கொண்டனர். இவ் விஜயத்தின் போது குறித்த குழுவினர் நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/222219/
3 months 2 weeks ago
இந்தியா மகளிர் இந்த உலக கோப்பையில் இதே மைதானத்தில் தூக்கி அடிச்சவை இன்று ரன்ஸ் ஆமை வேகத்தில் முன்னனி விக்கேட் அவுட் , 320ரன்ஸ் அடிப்பினமோ தெரியாது...............................
3 months 2 weeks ago
சொல்லி வாய் மூடமுதல் தலைவி ஆட்டமிழந்தா.
3 months 2 weeks ago
கண்ணுபட்டு போச்சு.
3 months 2 weeks ago
மழையுடன் விளையாட்டு. இனி வராமல்விட்டாச் சரி. இந்தியா நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது. 300 தாண்ட வேண்டும். தலைவி நின்று ஆடிக்கொண்டிருக்கிறா. நம்பிக்கை இருக்கு.
3 months 2 weeks ago
ஏய் ஜக்கம்மா கண்ண திற😁..................
3 months 2 weeks ago
5ஓவருக்கை 2விக்கேட் அவுட் அடிச்சு ஆடக் கூடிய மூன்று மகளிரும் அவுட்☹️.................
Checked
Sun, 02/22/2026 - 13:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed