புதிய பதிவுகள்2

வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம்

1 month 4 weeks ago
வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம் Dec 22, 2025 - 06:44 PM 2025 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2,203 பில்லியன் ரூபாய் வருடாந்த வருமான இலக்கை அடைவதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றியடைந்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் பதிவான அதிகூடிய வரி வருமானம் இதுவாகும். அத்துடன் எதிர்வரும் சில நாட்களில் இதனை மேலும் அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் வழங்கிய பங்களிப்பிற்கு, அரசாங்கம் மற்றும் திணைக்களத்தின் சார்பில் குறித்த அறிவிப்பின் ஊடாக நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh6h979030bo29ndqhq9c91

நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

1 month 4 weeks ago
நாட்டை வந்தடைந்தார் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் Dec 22, 2025 - 06:19 PM இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாகவே ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தமது விஜயத்தின் போது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்துவதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் பிரதான நோக்காகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjh5kbcm030ao29ne1271jm9

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

1 month 4 weeks ago
கருத்தோவியம் ஓவியரின் சிந்தனை. அது வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட முடியும். காவியுடையுடன் நியாயம் கேட்ட நிராயுதபாணியான வேலவன் சுவாமி எங்களுக்கு கோமாளியாக தெரிகின்றார். முன்பு ஆயுதம் ஏந்தி நியாயம் கேட்ட பிரபாகரன் பயங்கரவாதியாக தெரிந்தார். விகாராதிபதிக்கு புரோமோசன் கிடைத்துள்ளது. எனவே இங்கு விகாராதிபதியே போராளி என இனம் காண்போம். அரசாங்கம் செய்வது சட்டவிரோதமான செயல். இலங்கை நீதிமன்றம் கட்டாயம் சரியான நீதியை கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலையை பார்க்கும் என எதிர்பார்ப்போம்.

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

1 month 4 weeks ago
அனர்த்த நிவாரணம் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வௌியீடு Dec 22, 2025 - 05:18 PM அனர்த்த நிவாரணங்களுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. 'டித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்மொழியப்பட்ட நிவாரணங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய புதிய சுற்றுநிருபம் ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. 2025-12-05 ஆம் திகதியிட்ட வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இனால் முன்மொழியப்பட்ட நிவாரணத் திட்டத்தை, மேலும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக புதிய உட்சேர்ப்புகள், தெளிவுபடுத்தல்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கி இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இல் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் 3, 5, 6, 7, 9, 11, 12 மற்றும் 14 ஆகிய விடயங்கள் திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட சுற்றுநிருபம் கீழே தரப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh3dvrg0308o29n94wqktfg

உக்ரைன் மீது 1300 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா; போர், தொடங்கிய இடத்துக்கே திரும்பும்! - உக்ரைன் ஜனாதிபதி

1 month 4 weeks ago
உக்ரைன் மீது 1300 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா; போர், தொடங்கிய இடத்துக்கே திரும்பும்! - உக்ரைன் ஜனாதிபதி 22 Dec, 2025 | 11:39 AM கடந்த வாரம் உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 1300 ட்ரோன் தாக்குதல்கள், 1200 வான்வழிக் குண்டுத் தாக்குதல்கள், 9 ஏவுகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் உக்ரைனின் ஒடேசா பகுதியும் நாட்டின் தெற்குப் பிராந்தியங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல்வேறு துறைகளில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை பல்வேறு மட்டங்களில் உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் நிதிப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பல நாடுகளும் நிதி உதவி அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. 2026 - 2027 ஆண்டு காலப்பகுதிக்கு ஐரோப்பிய கவுன்சில் (European Council) 90 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நோர்வே, ஜப்பான் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. போர்ச்சுக்கல் நாட்டுடனான கடல்சார் ட்ரோன் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக நாமும் தேவைக்கேற்ப செயற்பட்டு வருகிறோம். போர் எந்த லாபத்தையும் தந்துவிடாது. எங்கிருந்து போர் தொடங்கியதோ, அங்கேயே அது திரும்பப் போய் நிற்கும் என்பதை போரைத் தொடங்கியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/234076

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

1 month 4 weeks ago
2016 இல் அச்சில் வந்த ஒரு புத்தகம், அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்குக் குடி பெயர்ந்த எழுத்தாளர் பில் பிறைசனுடையது (Bill Bryson) வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர் தரும் தகவலின் படி பிரிட்டனில் 1800 களில் இருந்தே ஒரு சட்டம் நகர அமைப்புத் தொடர்பாக இருக்கிறதாம். எந்த வகையான நகர அபிவிருத்தியின் போதும் ஒரு பசுமை வலயம் (Green Belt) நகரைச் சூழப் பேணப் பட வேண்டும் என்ற சட்டம் அது. இதனால் தான் லண்டனில் இருந்து 20 - 30 கிமீ தூரத்திலும் பசுமையான வனங்களையும், வெளிகளையும் காண முடிகிறது என்கிறார். ஐரோப்பாவின் ஏனைய சில நகரங்களும் அப்படியாகத் தான் இருக்கின்றன போலும். மத்திய பேர்லினில் பரபரப்பான வீதியில் இருந்து விலகி அடர் மரங்கள் கொண்ட பிரதேசங்களுக்குள் இறங்கி நடந்து மீண்டும் இன்னொரு பர பரப்பான நகர மத்தியை அடையலாம். போலந்தின் வட கிழக்கில் பாதுகாக்கப் பட்ட ஒரு பிரதேசத்தில் இருக்கும் வனப் பகுதியை நாசிகள் தங்கள் பரிசோதனைகளுக்காக ஆரம்பித்தார்கள். போலந்து அரசு இன்னும் அந்த அடர் காட்டை (Black forest) வாகனங்கள் நுழைய முடியாத பிரதேசமாகப் பேணி வருகிறது. பழைய பூங்கா காக்கப் பட வேண்டிய நகர வனமாக (Urban forest) உருவாக வேண்டும். சுமந்திரன் காக்க முனைந்தார் என்பதற்காக இனி அனுர காவடிகள் வந்து மற்றப் பக்கம் சார்ந்து "ஆடுவார்கள்" என நினைக்கிறேன்😎.

யாழ்தேவியின் பயணம் மீண்டும் ஆரம்பம்

1 month 4 weeks ago
யாழ்தேவியின் பயணம் மீண்டும் ஆரம்பம் Dec 22, 2025 - 04:42 PM வடக்கு ரயில் மார்க்கம், ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை மறுதினம் (24) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயிலை பின்வருமாறு சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்தேவி ரயிலில் முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட) மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmjh24gth0306o29n37enym1p

‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை

1 month 4 weeks ago
‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை Published By: Vishnu 22 Dec, 2025 | 08:13 PM கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டிடங்கள், சொத்துக்கள், விவசாயம், உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (USD) என உலக வங்கி குழுமத்தின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சுமார் 4 சதவீதத்திற்கு சமமானதாகும். இலங்கையின் சமீப வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘டித்வா’ சூறாவளியால், நாட்டின் 25 மாவட்டங்களிலும் 5 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் தேசிய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பொருட்கள் இந்த GRADE அறிக்கை, அவசர நிவாரண நடவடிக்கைகள், மீட்பு திட்டமிடல் மற்றும் நீண்டகால பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் முக்கிய தகவல்களை வழங்குகிறது. இது உலக வங்கியின் விரைவான, தொலைநிலை மற்றும் மாதிரி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை பயன்படுத்தி, கட்டடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார சேதங்களை கணக்கிட்டுள்ளது. எனினும், வருமான இழப்புகள், உற்பத்தி இழப்புகள் அல்லது முழுமையான மீள் கட்டுமான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. மத்திய மாகாணம் கடுமையாக பாதிப்பு மத்திய மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் 689 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெள்ளப்பெருக்குகளும், ஓரளவு மண்சரிவுகளுமாகும். உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் பாதைகள், பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் நீர்வழங்கல் வலையமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.735 பில்லியன் அமெரிக்க டொலர், இது மொத்த சேதத்தின் 42 சதவீதம் ஆகும். இதனால் போக்குவரத்து, சந்தை அணுகல் மற்றும் அடிப்படை சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், விவசாயம், கல்வி – கடுமையான தாக்கம் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புக்கள் : சுமார் 985 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் விவசாயம்: நெல், காய்கறி பயிர்கள், கால்நடை, உள்நாட்டு மீன்பிடி உள்ளிட்ட துறைகளில் சுமார் 814 மில்லியன் டொலர் சேதம் பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் போன்ற குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு சுமார் 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. இவை கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளன. பாதுகாப்பற்ற சமூகங்களுக்கு அதிக அபாயம் வறுமை, அடிப்படை சேவைகளின் குறைவு மற்றும் காலநிலை அபாயங்களுக்கு உட்பட்ட நிலை போன்ற முன்கூட்டிய சமூக-பொருளாதார பலவீனங்கள், இந்த சூறாவளியினால் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான நிர்வாகி கேவோர்க் சர்க்ஸ்யான் இதுகுறித்து கூறுகையில், “பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீண்டகால சமூகப் பலவீனங்கள் மக்கள் அதிக ஆபத்தில் தள்ளப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல குடும்பங்கள் பெண்கள் அல்லது முதியவர்கள் தலைமையிலானவையாக உள்ளன. இதனால் சமூக மையமான மீட்பு நடவடிக்கைகள் அவசியமாகின்றன” என தெரிவித்துள்ளார். உலக வங்கியின் அவசர உதவி சூறாவளிக்குப் பின்னர் உடனடியாக உலக வங்கி குழுமம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரை நிதியை திரட்டி, சுகாதாரம், குடிநீர், கல்வி, விவசாயம் மற்றும் போக்குவரத்து சேவைகளை மீட்டெடுக்க உதவி வழங்கியுள்ளது. மீட்பு செலவுகள் மேலும் அதிகமாகும் இந்த 4.1 பில்லியன் டொலர் மதிப்பீட்டை விட, முழுமையான மீட்பு மற்றும் மீள் கட்டுமான தேவைகள் இன்னும் அதிகமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. மனிதாபிமான தேவைகள், வாழ்வாதார மீட்பு, காலநிலைத் தாங்கும் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான மீட்பு திட்டங்கள் அவசியம் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது. இந்த மதிப்பீட்டினை மேற்கொள்ள உலக வங்கி, இலங்கை அரசின் வெளிநாட்டு வளத் துறை, நிதியமைச்சகம், தேசிய திட்டமிடல் துறை மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் ஆகியவற்றுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234142

கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா

1 month 4 weeks ago
இது காட்டுவது சீனாவின் ஆழ்கடல் , சமுத்திரம் போன்றவற்றில் தேடி துப்பறியும், கண்டறியும் தொழிநுட்பம் மேற்கு ஈடாக வளர்ந்து உள்ளதை. சில குறித்த நிலைக்குத்து பிரிவான உபதுறைகளில் (vertical sectors) மேற்கை விஞ்சுகாகத்வம் இருக்க கூடும். இதன் தாக்கம், ஆழ்கடலில் (இராணுவ பல) ஆயுதங்கள், தளபாடங்களை கண்டறிவயதில், இதுவரை மென்டர்கிடம் இருந்த வெருட்டும் ஆயுதம் மிக கபட நீர்மூழ்கிகள் . அண்மையில் ஓர் செய்தி வந்து இருந்தது, சீன புதிய உணரும் தொழில்நுட்பத்தை ஆர்டிக் சமுத்திரத்தில் சோதனை செய்து, அந்த தொழில்நுட்பம் 95% அமெரிக்கா நீர்மூழ்கிகளை கண்டறிந்ததாக. அமெரிக்கா / மேற்கு இப்பொது உணர தொடங்கி இருக்கிறது சீனாவின் விஞ்ஞான / தொழில் ழில்நுட்ப விருத்தியை தடுக்க முடியாது, குறிப்பாக மேற்றுகின் தங்கி இருத்தலில் இருந்து பிரித்து க்கொண்டு இருக்கிறது என்று உ.ம். ஆக, இதை முன்பே செவி , பார்வை வழியாக அரோந்து இருந்தேன், chip தயாரிக்கும் euv தொழில்நுட்ப இயந்திரம் / தளம் ஒன்றை சீன ஆகி வருவதாக. இப்போது பகிரங்க செய்திகள் வருகிறது, சீன அதை சோதனை செய்ய தொடக்கி இருப்பதாக. பொதுவாக வரலாற்ற்று போக்கில் ,புறக்கணிக்கப்பட்ட, எள்ளிநகையாடப்பட்ட குழுமமே, பின்பு எள்ளிநகையாடிய குழுமத்தை மேலாண்மை செய்ததாக இருக்கிறது பொறுத்து இருந்து பார்ப்போம்

தேசிய மக்கள் சக்தி வசம் சென்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபை! தமிழரசை சாடும் பலர்..

1 month 4 weeks ago
தேர்தல் வந்தால் தமிழரசு மண் கவ்வும் பின்னால் கதவால் வந்த கபட வேட தாரி சுமத்திரன் பின் கதவால் போயிடுவார் .

பௌத்த தேரரை இப்படி இழுத்துச் செல்வீர்களா..? வேலன் சுவாமிக்காக களமிறங்கும் தமிழ் அரசியல்வாதிகள்

1 month 4 weeks ago
சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமையினை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(22/12/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தையிட்டியில் ஏற்பட்ட பதற்ற நிலை மேலும், நேற்றைய தினம் தையிட்டியில் நடைபெற்ற சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெளத்த பிக்கு ஒருவர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் செல்லப்படுவாரா என கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இந்த பதற்ற நிலை காரணமாக, தற்போது வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தற்போது தமிழ்க்குடிமகன் அனைவரும் ஒன்றிணைய தயார் என்ற செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால் குறித்த விடயம் தொடர்பாக எமக்கு எவ்வித அழைப்பும் விடுவிக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக ஒரு தடவைக்கு நூறு தடவை சிந்திக்கப்பட வேண்டும் என்றும் மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கஜேந்திரகுமார் மற்றும் ஏனைய தமிழ்க் கட்சிகள் தொடர்பாகவும் கடுமையாக விமர்சித்தும் மணிவண்ணன் பேசியுள்ளார். https://tamilwin.com/

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

1 month 4 weeks ago
நிதானமான, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பதில்👍. உங்கள் கடமையைச் செய்திருக்கிறீர்கள், ஆனால் பலனை எதிர்பார்த்து ஏமாறாதீகள் என்று எச்சரிக்க வேண்டியது என் கடமை😂! பொய்ச் செய்திகளிலும், சில சமயங்களில் "எந்த செய்தியும்" இல்லாமலே ஏனைய தமிழ் அரசியல் வாதிகளை - அவர்களை தாயக மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்த வேளையில்- கேவலமாகத் திட்டியபடி இருந்த இருவர் தான் உங்களுக்கு நாகரீகம் கற்பிக்க முயல்கிறார்கள் என்பதைக் கவனித்தால் பலனை எதிர்பார்க்க மாட்டீர்கள்.

தேசிய மக்கள் சக்தி வசம் சென்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபை! தமிழரசை சாடும் பலர்..

1 month 4 weeks ago
முல்லைத்தீவு- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இன்று(22/12/2025) இடம்பெற்றுள்ளது. இரகசிய வாக்கெடுப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் சின்னராசா லோகேஸ்வரன் கடந்த ஜீன் மாதம் வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் தவிசாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வெற்றிடமாக காணப்பட்ட தவிசாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று(22) நடைபெற்றுள்ளது. அதில், 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். தவிசாளர் தெரிவில், 13 உறுப்பினர்கள் இரகசியமான முறையில் வாக்கெடுப்பினை நடத்த ஆதரவு தெரிவித்த நிலையில், தவிசாளர் தெரிவிற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது. தவிசாளர் தெரிவு இதன்படி, தமிழரசுக் கட்சி சார்பில் மிக்கேஸ் பிள்ளை ஜோன்சன் மோகனராஜா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ், தேசிய மக்கள் சக்தி சார்பில் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகியோர் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், இமக்குலேற்றா புஸ்பானந்தன் 10 வாக்குகளையும்,ஜோன்சன் மோகனராஜா 5 வாக்குகளையும் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 6 வாக்குகளையும் பெற்ற நிலையில் பெரும்பான்மை வாக்குகள் பெறாத நிலையில் குறைந்த வாக்கினை பெற்ற தமிழரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து, இரண்டாம் தடவையாக இமக்குலேற்றா புஸ்பானந்தன், தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் ஆகியோருக்கு இடையிலான போட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டுள்ளது. அதில், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளையும் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 7 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த வாக்கெடுப்பு அடிப்படையில், உள்ளூராட்சி ஆணையாளராக புதிய தவிசாளர் தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கரைத்துறைப்பற்று பிரதேச சபை அனைத்து மக்களின் முன்மொழிவுகளையும் ஏற்று சபையினை நடத்துவோம், மத்திய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புக்களையும் ஏற்று கரைத்துறைப்பற்று பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதில் பாராபட்சம் இன்றி செயற்படுவோம், ஜனாதிபதியின் கொள்கையின்படி பாமர மக்களை முன்னேற்றுவோம் என புதிய தவிசாளர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் உறுதி எடுத்துக் கொண்டுள்ளார். இதேவேளை, முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபை தமிழரசுக் கட்சியினாலேயே பறிபோனது என சமூக செயற்பாட்டாளர் மற்றும் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சமூக செயற்பாட்டாளரின் ஆதங்கம் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தை தமிழரசுக் கட்சியானது புறக்கணித்து செல்கின்றது. இன்று அரச கட்சியினருக்கு வாக்களித்து தமிழரசுக் கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவோடு தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருப்பது மிக வேதனையான விடயம். இரத்த வடுக்கள் தெரியாதவர்களும், வெடியோசை கேட்காதவர்களும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இங்கே இருக்கின்ற சில நன்னடத்தை கெட்டவர்களின் வாக்குறுதிகளை நம்பி எமது கரைத்துறைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்திக்கு தாரைவார்த்து கொடுத்திருக்கின்றார்கள். இது தாயக மண்ணிற்கு கிடைத்த பெரும் தோல்வியாகவே நான் கருதுகின்றேன். தாயக விடுதலை போராட்டத்திற்கு தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் கனவுகள் சற்றேனும் மதிக்காத தமிழரசுக்கட்சி ஈழத்தின் இதய பூமியில் வேறுகட்சிக்கு ஆட்சியமைத்து கொடுத்ததற்கு தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும், கட்சியினை சேர்ந்தவர்களுக்கும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்பில்லாத தலைமைகள் அதேப்போன்று கரைத்துறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா கூறுகையில், அதிக வாக்குகளை பெற்று ஆளும் கட்சி தவிசாளர் பதவியினை கைப்பற்றியது தமிழரசுக் கட்சியின் சுயநலத்தை காட்டுகிறது. இன்று இந்த தமிழ் மண்ணை இழந்ததற்கு காரணம் தமிழரசுக் கட்சி தான். இவர்கள் வீட்டுக்குள் இருந்து அரசியல் நடத்திக்கொண்டு, உல்லாச படகுகளை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் தவராசா அமலன் கருத்து தெரிவிக்கையில், கரைத்துறைப்பற்று தவிசாளர் தெரிவில் தமிழரசுக் கட்சி இந்த சபையை இழந்திருக்கின்றது. ஏனெனின் தமிழரசுக் கட்சியின் தலைமைகள் முல்லைத்தீவில் இருக்கும் ஒரு நபரின் கதையினை கேட்டு செயற்பட்டுள்ளனர். இதனால் தான் இன்று இந்த சபை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சென்றிருக்கிறது. தேசியம் கதைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியில் குளிர்காய்ந்து கொண்டு இருக்கும் ஒரு சிலர் தான் தலைமைகள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/a

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

1 month 4 weeks ago
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் எம்பிலிப்பிட்டிய பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்க உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளின் இரத்த மாதிரியை அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். டிசம்பர் 20 ஆம் திகதி கலுகல விகாரைக்கு அருகே நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் வந்த ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாகவும், தனது மோட்டார் சைக்கிள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கான்ஸ்டபிள் முன்னதாக முறைப்பாடு அளித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டி குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1456994

புதிய கல்வி திட்டம் சமூகத்தை சீரழிக்கும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு

1 month 4 weeks ago
பாலியல் குற்றச்செயல்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக பாலியல் கல்வி மிகவும் அவசியமானது

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

1 month 4 weeks ago
2009 போர் முற்றுபெற்ற பின் நல்லிணக்கம், சமாதானம் என்று சொன்னாங்கள். அடாத்தாக பிடித்து எடுத்த சனங்களின் காணிகளில் புத்தர் விகாரை கட்டியெழுப்பி கும்பாவிசேகம் செய்ததுதான் உந்த நல்லிணக்கம் என்று இப்பத்தான் விளங்குது.
Checked
Sat, 02/21/2026 - 19:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed