புதிய பதிவுகள்2

நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

1 month 4 weeks ago
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு! நாட்டின் மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 130 மாணவர்களை நைஜீரிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். நைஜீரியாவின் மிக மோசமான கூட்டுக் கடத்தல்களில் ஒன்றிற்குப் பின்னர், அண்மைய மீட்பு நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி என்று நாட்டின் கூட்டாட்சி அரசாங்கம் விவரித்துள்ளது. நவம்பர் 21 அன்று பெப்ரவரியில் உள்ள செயிண்ட் மேரி கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஊழியர்களும் கடத்தப்பட்டனர். இந்த மாத தொடக்கத்தில் சுமார் 100 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். அண்மைய விடுவிப்புடன், ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 230 ஆக உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் பயோ ஒனனுகா ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தினார். எனினும், கடத்தப்பட்டதிலிருந்து, எத்தனை பேர் அழைத்துச் செல்லப்பட்டனர், எத்தனை பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன், அரசாங்கம் அண்மைய மீட்பினை எவ்வாறு மேற்கொண்டது- அல்லது ஏதேனும் மீட்புக்கு ஏதெனும் பணம் கொடுக்கப்பட்டதா என்பது முறையாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. https://athavannews.com/2025/1456945

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

1 month 4 weeks ago
வழிபாட்டின் காரணம் ,எங்கே புத்த சிலை வைக்க முடியும் என ஆராச்சி செய்யத்தான்....பிற்கு தொல்லியல் தினைக்களத்திற்கு கடித்ம் எழுதுவினம் அது பெளத்த விகாரை இருந்த இடம் ஆராச்சி செய்ய சொல்லி..

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

1 month 4 weeks ago
இல்லை! நான் நினைக்கிறேன், இலங்கை அரசு செய்த சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகள், இன்னொரு 3 ஆம் நாடு தலையிடும் பட்சத்தில் இலங்கை நிலமை மோசமாகும், பர்மாவிற்கெதிரான கம்பியாவின் சட்ட நடவடிக்கை போன்றது. அவர்கள் ஆப்பிழுத்த குரங்குகள். தமிழர் பிரச்சினை இப்படி ஒரு 3ஆம் நாட்டின் உதவியுடன் இது வரை நகரவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் அதிகம் (ஒரு சிறிய நாட்டின் உதவி கிடைத்தாலே போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன்).

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

1 month 4 weeks ago
தமிழீழத்தில் பாய் வத்தல் 1958- 03- 14 வத்தல்/ பாய் வத்தல் என்பது வத்தையை விடப் பெரியது ஆகும். நிறை அதிகமாகக் கொள்ளக்கூடியது

வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.

1 month 4 weeks ago
நான் இவரது ரசிகன். எனது மனைவி மூலம் இவர் பாடல்கள் பற்றி அறிந்தேன். இவரை மூன்று சொச்சம் வருடங்கள் முன்பே பாடல்கள் மூலம் பார்த்து அறிந்துள்ளேன். இவருக்கு இலங்கையில் பெண் ரசிகைகள் அதிகம். எனது மனைவியும் இவரது ஒரு ரசிகைதான். இவர் இந்திய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு முன்பு போலவே இலங்கை நின்று படைப்புக்கள் வழங்க வேண்டும். இந்திய அடிமைத்தனம் எங்கு கொண்டுபோய் மாட்டுமோ தெரியாது.

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

1 month 4 weeks ago
இதை வாசித்த போது… போக்கிரி படத்தில் பீச்சியடிக்கும் பவுசர் தண்ணியை வடிவேலு அண்டகுடுத்து முட்டு கொடுத்த காட்சி கண் முன் வந்து போனது. இன்றைய அகதிகளை பார்த்து 20 வருடம் முந்திய அகதிகள் நகைக்க கூடாது. புலிகள் நிழல் அரசு இருந்த போது, புலிகள் பகுதியிலும் எம்மால் பாதுகாப்பாக வாழ முடியாது, புலிகள் கட்டாய ஆட் சேர்ப்புக்கு ஆளானேன், தப்பினேன் என பொய் கேஸ் கொடுத்த பச்சோந்திகால், அகதிகளை பற்றி கதைக்கவே இலாயக்கற்றவர்கள். ஆனால் யூகேயில் ஏல்ஸ்பெரி போன்ற நகர்களில் தமிழரை விட சிங்களவர் எண்ணிக்கை பல மடங்கு கூடியுள்ளது உண்மைதான். போற போக்கில் யூகேயிலும் மோட்டு சிங்களவன் உங்களை 9 வாயில்களிலும் பிதுக்கினாலும் ஆச்சரியமில்லை.

வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.

1 month 4 weeks ago
உங்களுக்கு எல்லாமுமே தப்பு தப்பாக தெரிவது இன்று நேற்று நடப்பதல்ல. 2009 வரை புலிகள்/தலைவர் மற்றும் சமயம் இந்த இரெண்டும் ஒன்றாக கலக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்த நிலையில்…. 2009 ற்கு பின் எவன் ஒருவன் ஒருகையில் தலைவரையும், மறுகையில் ஏதோ ஒரு சமயத்தையும் ஏந்தி வந்தால் - அவர்களை சந்தேகத்துடன் அணுகுவதே அறிவுடமை. குறிப்பாக சங்கியாந்தம், வேலன், உமாகரன் என ஏலவே பலரை இப்படி எமக்கு வடக்கே உள்ளவர்கள் இறக்கி விட்டுள்ள நிலையில். அதுவும் இவர் உமாகரனின் தம்பி… அவரின் வேடம் கலைந்த பின் இவர் களம் இறங்கினார்…அல்லது இறக்கப்பட்டார்…. இவருக்கு இந்தியாவில் கிடைக்கும் அளவுக்கு அதிகமான வரவேற்பும் சந்தேகத்தை வலுக்க வைக்கிறது. இலண்டன் வந்த போது இலவச டிக்கெட் வேணுமா என கேட்டார்கள் - மறுத்து விட்டேன்.
Checked
Sat, 02/21/2026 - 19:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed