2 months ago
அன்ரிமாருக்கெல்லாம் அழகிப் போட்டி வைப்பதில்லையே சிறி
2 months ago
வணக்கம் வாங்கோ.😀
2 months ago
உள்நாட்டு யுத்தத்தால், புலம் பெயர்ந்து தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழமுடியுமென்ற நிலை இருக்கும் போது. இது முடியாதா என்ன? சுமந்திரனுக்கு ஒரு ‘சபாஸ்’👏
2 months ago
ஆக வாழைப்பூ ( வடை) நீரழிவு நோய்க்கு மருந்தாக பாவிப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. மருத்துவர் தந்த மாத்திரைகளை ஒழுங்காக எடுத்திருந்தால் ஒருவேளை உங்கள் நண்பர் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. அதுசரி விமானத்தைப் பிடிக்கும் அவசரத்த்தில் உங்கள் நண்பரின் வாகனத்துக்கான பணத்தை கொடுக்க மறக்கவில்லைத்தானே. முன்பெல்லாம் மூங்கில் கதிரைகள் பாவனையில் இருந்தன. இப்போ பிளாஸ்ரிக் காலம். இயற்கைப் பொருட்களை பாவனைப் படுத்துவதை விட்டு நாங்கள் வெகு தூரம் வந்து வட்டோம். கதையோடு பல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.👏🏽
2 months ago
👍........... இந்தச் சிக்கல் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர் கவனத்துடன் நன்றாகவே நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், ஏராளன். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற அணுகுமுறை மருத்துவத்திற்கு பொருந்தாது...................
2 months ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile (Pvt) Ltd நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:58 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Thilakawardena Textile (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை Thilakawardena Textile (Pvt) Ltd இன் தலைவர் சுனில் திலகவர்தன, வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். Thilakawardena Textile (Pvt) Ltd இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ரவிந்து திலகவர்தனவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233126
2 months ago
மின்னல் எச்சரிக்கை!! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minute டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது. பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று. இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும். உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும். சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும். தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது). மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும். மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும். இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும். இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது. அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா? உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. மேலும் தற்காலத்தில் ChatGPT இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது, இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும். மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி. முற்றும் https://tinyurl.com/5emrm568
2 months ago
வடக்கு கிழக்கின் மக்கள் தொகை அதிகரிக்க இதுவும் ஒரு வழியாகலாம்.
2 months ago
கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 3.6 மில்லியன் ரூபா நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:51 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இணைந்து தமது தனிப்பட்ட நிதியிலிருந்து 3.6 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்தோனேசியத் தூதுவர் Dewi Gustina Tobing, வியாழக்கிழமை (11) குறித்த காசோலையை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார். கொழும்பில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான கொரிய தூதுவர் Lee Miyon, சுவிட்சர்லாந்து தூதுவர் Dr. Siri Walt,, பலஸ்தீன தூதுவர் Ihab I.M. Khalil, மாலைதீவு உயர் ஸ்தானிகர் Masood Imad,, ஓமான் தூதரகத்தின் பணிக்குழாம் பிரதானி Said Al Harbi, இத்தாலிய தூதரக பிரதித் தலைவர் Alberto Arcidiacono ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233124 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:57 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு People's Leasing & Finance PLC இனால் 7.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும்,People’s Insurance PLC இனால் 2.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது. குறித்த காசோலைகளை People's Leasing & Finance PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சஞ்சீவ பண்டாரநாயக்க மற்றும் People’s Insurance PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜீவனீ காரியவசம் ஆகியோரினால் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. People's Leasing & Finance PLC இன் தலைவர் பேராசிரியர் அஜந்த குமார சமரகோனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233125
2 months ago
லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்! 11 Dec, 2025 | 05:20 PM பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதுகெலும்பு சார்ந்த சத்திரசிகிச்சைகளில் முதுகெலும்பை உறுதியாகப் பேணுவதற்கும், தொடர்புபடுத்தலை விருத்தி செய்வதற்கும், முதுகெலும்பு சார்ந்த இயலாமைகள்/ விகாரமடைந்துள்ள நிலைமைகளுடன் செயலாற்றுவதற்கும், என்பு முறிவு மற்றும் ரியூமர் இற்கான சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் யுvenierr Pharma (Pvt) Ltd. (Manufacturer : Miraclus Orthotech (Pvt) Ltd. India) இற்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/233105
2 months ago
கோவா இரவு விடுதி தீ விபத்து- உரிமையாளர்களை தாய்லாந்தில் இருந்து அழைத்து வருவது எவ்வளவு சவாலானது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரவு விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக, போலீஸார் கூறுகின்றனர். 10 டிசம்பர் 2025 கோவா இரவு விடுதியில் தீ பற்றிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லியை சேர்ந்த அஜய் குப்தா என்பவரை கோவா காவல்துறை காவலில் எடுத்துள்ளது. இந்த தகவலை கோவா காவல்துறை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. "அஜய் குப்தாவின் வீட்டை சோதனையிட்ட போது, அவர் தப்பிச் செல்ல முயன்றார்." என காவல்துறை தெரிவித்துள்ளது கடந்த சனிக்கிழமை இரவு (டிசம்பர் 06) கோவாவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' எனப்படும் இரவு விடுதியில் பெரும் தீப்பற்றிக்கொண்ட நிலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். சிலிண்டர் வெடித்ததில் தீ பற்றியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். வடக்கு கோவாவின் அர்போரா எனும் பகுதியில் உள்ள இந்த இரவு விடுதியில் தீப்பற்றியதில் சுற்றுலாப் பயணிகள் சிலரும் கொல்லப்பட்டனர். இறந்த பலரும் அந்த விடுதியின் பணியாளர்கள் என நம்பப்படுகிறது. முன்னதாக, இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் மற்றும் இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ராவுக்கு எதிராக இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸை பிறப்பித்ததாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது. "இந்த நோட்டீஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களை கண்டடைவதற்கு உதவும், மேலும் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்து இடம்பெயர்வதை தடுக்கும்," என கோவா காவல்துறை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை கோவா காவல்துறையின் டிஐஜி வர்ஷா ஷர்மா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "இரவு விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது," என்றார். "இது மிகவும் துயரமான விபத்து, இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரவு விடுதியின் உரிமையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையையும் நாங்கள் உடனடியாக தொடங்கினோம். அவர்கள் ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, சிபிஐ மற்றும் இண்டர்போல் உதவியுடன் அவர்களை அடைவதற்கு முயற்சித்து வருகிறோம்." என்றார் வர்ஷா ஷர்மா தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் தீவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் இருந்தால், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் என்ன சவால்கள் இருக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நாடு கடத்துவது தொடர்பாக தாய்லாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோவாவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' எனப்படும் இரவு விடுதியில் பெரும் தீப்பற்றிக்கொண்ட நிலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா - தாய்லாந்து இடையேயான ஒப்பந்தம் உள்துறை அமைச்சகத்தின்படி, இந்தியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே 2013ம் ஆண்டு, பாங்காக்குக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சென்றிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சட்ட தகவல்கள் மற்றும் மற்ற தேவையான உதவிகளை வழங்கும். அதன்மூலம் அந்நாடுகள் தலைமறைவான நபர்களை சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஒப்படைக்க முடியும். அந்த ஒப்பந்தத்தின்படி, பொருளாதார குற்றங்களில் குற்றம் சட்டப்பட்டவர்களையும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒப்படைக்க முடியும். வெளியுறவு துறை அமைச்சகத்தின்படி, 48 நாடுளுடன் இத்தகைய ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. அவற்றில் வங்கதேசம், பூடான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள், இஸ்ரேல், சௌதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தப்பியோடிய இந்திய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் மட்டும் போதுமா? எளிய வார்த்தைகளில் சொல்வதானால், இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எந்த நாட்டுக்கு தப்பியோடினாரோ அங்கிருந்து அவரை சம்பந்தப்பட்ட நாட்டுக்குத் திருப்பி ஒப்படைக்க முடியும். இதுதொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் இருந்தால் தான் இவ்வாறு செய்ய முடியும். இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின்படி, விசாரணையில் உள்ள அல்லது நிலுவையில் உள்ள வழக்குகளில் ஒருவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு கோர முடியும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகளிலும் இவ்வாறு கோர முடியும். விசாரணை நடைபெற்று வரும் வழக்குகளில் அதை விசாரிக்கும் விசாரணை முகமைகள், வெளிநாட்டு நீதிமன்றங்களில் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்களை வழங்குவதை உறுதி செய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராகவும் சர்வதேச சட்டங்களில் நிபுணராகவும் உள்ள முனைவர் அஜேந்திர ஸ்ரீவஸ்தவா பிபிசி செய்தியாளர் சௌரப் யாதவிடம் கூறுகையில், "இந்தியாவிலுள்ள போலீஸார் ஒருவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு கூறினால், அதை வெளிநாட்டு போலீஸார் அப்படியே செய்வார்கள் என்பது அர்த்தமில்லை. இது இரண்டு நாடுகளின் நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய சட்ட நடவடிக்கை. இரு நாடுகளுக்கிடையேயும் இதுதொடர்பாக ஒப்பந்தம் இருக்க வேண்டும், மேலும் ஒருவரை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளன." என்றார். குற்றச் சம்பவம் நடந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை முகமைகளிடம் ஆதாரங்கள் இருந்தும் ஏன் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க முடிவதில்லை, அல்லது அதற்கு ஏன் அதிக காலம் எடுக்கிறது என்ற கேள்வி எழலாம். அஜேந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஒப்படைக்கப்படுவதற்கு கோரப்படும் நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரை ஒப்படைக்கும் நாடுகளுக்கும் சட்டங்கள் உள்ளன, ஒரு நாடு கேட்கும்போது சம்பந்தப்பட்ட நபரை ஒப்படைக்க வேண்டுமா, இல்லையா என்பது அந்த சட்டத்தின்படியே தீர்மானிக்கப்படும்." என்றார். மேலும் அவர் கூறுகையில், "அந்த நாட்டின் நீதிமன்றத்தில் தொடர்புடைய நபர் மீதான வழக்கு குறித்து சமர்ப்பித்து, தங்கள் நாட்டில் அந்நபர் குற்றம் புரிந்தார் என்பதற்கான முகாந்திரம் (prima facie) இருப்பதாக கூற வேண்டும். அந்த குற்றத்தை அந்நபர் தப்பியோடிய நாட்டின் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். சட்ட நடவடிக்கைகளின்படி, அந்நபருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்படும் என உறுதி கூற வேண்டும். உண்மையிலேயே ஒரு குற்றம் நடந்ததாக அந்நாட்டின் நீதிமன்றம் திருப்தியடைந்தால் மட்டுமே, அவரை தொடர்புடைய நாட்டுக்கு ஒப்படைக்க அனுமதிக்கும்." என்றார். பட மூலாதாரம்,@NIA_India படக்குறிப்பு,2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானா இந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். முந்தைய வழக்குகள் 2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானா இந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். மும்பை மற்றும் டென்மார்க்கில் தனது நண்பர் டேவிட் கோல்மேன் ஹெட்லியுடன் இணைந்து தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவில் தஹாவூர் ரானா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அகஸ்தாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கப்பட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்ப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் 2018ம் ஆண்டு துபாயிலிருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டார். அகஸ்தாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் காங்கிரஸ் தலைமையிலான முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்டது. இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸின் மூலம் 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சோட்டா ராஜனை இந்தோனீசிய காவல்துறை கைது செய்தது. அதன்பின் அவர் அதே ஆண்டு நவம்பர் 6 அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 1993 மும்பை வெடிகுண்டு தாக்குதல்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அபு சலீம் 2005ம் ஆண்டு போர்ச்சுகல்லில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அபு சலீமை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு பாஜக தலைவரும் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான எல்கே அத்வானி, அபு சலீமை 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்க மாட்டோம் என்றும் அவருக்கு மரண தண்டனை வழங்க மாட்டோம் என்ற உறுதியை போர்ச்சுகல் அரசு மற்றும் நீதிமன்றத்திடம் எழுத்துபூர்வமாக வழங்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23e14138n4o
2 months ago
விவிலியத்தை அங்கும் இங்குமாக நுனிப்புல் மேய்ந்ததுண்டு, ஒட்டக சிவிங்கி கேள்விப்பட்டதில்லை. அது என்ன கதை?
2 months ago
எதற்காக அவர்கள் வடக்கு கிழக்கில் மட்டும் குடியேற வேண்டும்?? இதன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்??
2 months ago
அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு மில்லியன் வழங்கி வைத்தார் கலாநிதி ஜனகன் Published By: Vishnu 11 Dec, 2025 | 07:41 PM அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ டி எம் எம் சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் அவர்களினால் இரண்டு மில்லியன் ரூபாய் காசோலை கலாநிதி ஜனகன் அவர்களின் தாயார் தனியார் GIT கற்கை நிலையத்தின் பணிப்பாளர் திருமதி ரூபி விநாயகமூர்த்தி அவர்கள் கௌரவ பிரதமர் அவர்களிடம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/233122
2 months ago
மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி 11 Dec, 2025 | 05:27 PM மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2030 ஆண்டளவில் நாட்டுக்கான மின்சார வழங்கலின் 70மூ மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யும் குறிக்கோளை அடைவதற்கான அரசின் விரிவான திட்டத்துக்கமைய 20 ஆண்டு தொழிற்பாட்டு காலப்பகுதியில் நிர்மாணித்தல், உரித்தை கொண்டிருத்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்திப் பூங்கா (தலா 50 மெகாவாற்று கொண்ட 02 மின்னுற்பத்தி நிலையங்கள்) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தனியார் துறையின் ஆர்வமுள்ள அபிவிருத்தியாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்காக 2025-02-10 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறைமையை பின்பற்றி மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முன்மொழிவு கோரப்பட்டு, ஏழு பேர் (7) தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள். மேற்குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் Consortium of Vidullanka PLC & David Pieris Motor Company (Lanka) Limited kw;Wk; Wind Force PLC ஆகியவற்றுக்கு மேற்குறித்த இரண்டு (2) 50 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. https://www.virakesari.lk/article/233107
2 months ago
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம் பட மூலாதாரம்,Alex Wong/Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் கட்டுரை தகவல் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் 11 டிசம்பர் 2025, 07:05 GMT பிரிட்டன் உட்பட பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அமெரிக்காவில் நுழைவதற்கான நிபந்தனையாக அவர்களின் ஐந்து ஆண்டு சமூக ஊடக வரலாற்றை வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய திட்டம் கூறுகிறது. இந்த புதிய நிபந்தனை, விசா இல்லாமல் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குச் செல்லத் தகுதியுள்ள பல நாட்டு மக்களைப் பாதிக்கும். ஆனால் அவர்கள் பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (Electronic System for Travel Authorization - ESTA) படிவத்தை நிரப்பியிருக்க வேண்டும். ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து, டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பைக் காரணமாகக் கூறி, அமெரிக்க எல்லைப் பகுதிகளை மேலும் கடுமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தத் திட்டம், அங்கு வரக்கூடிய பயணிகளுக்கு ஒரு தடையாக அமையலாம் அல்லது அவர்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் திட்டம் அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா என்று கேட்கப்பட்டபோது, டிரம்ப் அதுகுறித்து கவலைப்படவில்லை என்று கூறினார். புதன்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசுகையில், "இல்லை. நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம்"என்றார். மேலும், "நாங்கள் மக்கள் இங்கு பாதுகாப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். நாங்கள் பாதுகாப்பை விரும்புகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரும்புகிறோம்" என்றும், "தவறான நபர்கள் எங்களது நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்," என்றும் குறிப்பிட்டார். அமெரிக்கா அடுத்த ஆண்டு கனடா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து ஆண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பையை நடத்துகிறது, மேலும் 2028-இல் லாஸ் ஏஞ்சலிஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. இதனால் அடுத்த ஆண்டு பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மற்றும் அதன் அங்கமான சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை (CBP) ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்ட இந்தத் திட்ட ஆவணம், அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரம்ப் எல்லைக் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளார் (கோப்புப் படம்) இந்த முன்மொழிவு, "ஈஎஸ்டிஏ (ESTA) விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் சமூக ஊடக விவரங்களை வழங்க வேண்டும்" என்று கூறுகிறது. இருப்பினும், எந்தெந்த குறிப்பிட்ட தகவல்கள் தேவைப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை அது வழங்கவில்லை. தற்போதுள்ள ஈஎஸ்டிஏ படிவத்தை நிரப்புவதற்கு, பயணிகள் ஒப்பீட்டளவில் குறைவான தகவல்களையும், ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணமாக 40 டாலர் (30 பவுண்டு) கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இது பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உட்பட சுமார் 40 நாடுகளின் குடிமக்களுக்குக் கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட அந்த நாடுகளின் குடிமக்கள், ஈஎஸ்டிஏ மூலம் விண்ணப்பித்து, இரண்டு வருடத்தில் பலமுறை அமெரிக்கா செல்லும் அனுமதியைப் பெற முடியும். சமூக ஊடகத் தகவல்களைச் சேகரிப்பதுடன், கடந்த ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளில் விண்ணப்பதாரர் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் சேகரிக்க இந்தப் புதிய திட்டம் முன்மொழிகிறது. "வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்," என்ற தலைப்பில் ஜனவரி மாதம் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவை இந்த திட்டம் மேற்கோள் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளுக்கான ஈஎஸ்டிஏ தரவு சேகரிப்பு தொடர்பான புதிய திட்டம், 60 நாட்களுக்கு பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கிறது. இது குறித்து சிபிபி-ன் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், "அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு இந்த விஷயத்தில் எதுவும் மாறவில்லை" என்றும், "இது ஒரு இறுதி விதி அல்ல, அமெரிக்க மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க புதிய கொள்கை வாய்ப்புகளைப் பற்றி ஒரு விவாதத்தைத் தொடங்க இது ஒரு முதல் படி மட்டுமே," என்றும் குறிப்பிட்டார். டிஜிட்டல் உரிமைகள் அமைப்பான எலெக்ட்ரானிக் ஃபிரான்டியர் பவுண்டேஷனைச் (Electronic Frontier Foundation) சேர்ந்த சோபியா கோப், இந்தத் திட்டத்தை விமர்சித்து, இது "சிவில் உரிமைகளுக்கு அதிகத் தீங்கு விளைவிக்கும்" என்று நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார். இதற்கிடையில், குடியேற்றச் சட்ட நிறுவனமான ஃப்ராகோமன் (Fragomen), விண்ணப்பதாரர்கள் ஈஎஸ்டிஏ அனுமதிக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகக்கூடும் என்பதால், நடைமுறையில் சில தாக்கங்கள் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தத் திட்டம் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கும் டிரம்ப் நிர்வாகம் இதற்கு முன்னர், மாணவர் விசாக்களுக்கும், திறன்மிகு தொழிலாளர்களுக்கான ஹெச் -1பி விசாக்களுக்கும் விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரை பரிசோதிக்கும்போது அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்யும் என்று அறிவித்தது. விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் "ஆன்லைன் இருப்பு" (online presence) குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், இந்தச் சோதனை நடைபெறுவதற்காக அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களின் தனியுரிமை அமைப்புகளும் "பொது" (public) நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை கூறியது. மெக்சிகோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறிப்பிட்ட விசா விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய அனைத்து சமூக ஊடக தளங்களின் பயனர் பெயர்கள் அல்லது 'ஹேண்டில்களையும்' (usernames or handles) பட்டியலிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகத் தகவல் ஏதாவது பட்டியலிடப்படாவிட்டால், அது தற்போதைய மற்றும் எதிர்கால விசாக்கள் மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அது எச்சரிக்கிறது. மாணவர் விசா கொள்கை குறித்து ஒரு மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி கூறுகையில்: "தங்கள் அரசாங்கம் நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அமெரிக்க குடிமக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதைத்தான் டிரம்ப் நிர்வாகம் ஒவ்வொரு நாளும் செய்து வருகிறது," என்றார். "குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான பிற அச்சுறுத்தல்களுக்கு உதவுபவர்கள் அல்லது ஆதரவளிப்பவர்கள், அல்லது சட்டவிரோதமான யூத எதிர்ப்பு துன்புறுத்தல் அல்லது வன்முறையைச் செய்பவர்களை" சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அமெரிக்க நிர்வாகத்தின் எல்லைகளைக் கடுமையாக்கும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள 19 நாடுகளைப் பாதிக்கும் தற்போதைய பயணத் தடை விரைவில் விரிவுபடுத்தப்படலாம் என்று அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை, வாஷிங்டன் டி.சி.யில் இரண்டு தேசிய காவல்படை உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு ஆப்கான் நபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். டிரம்பின் பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயணக் கொள்கை மாற்றங்கள், அமெரிக்கச் சுற்றுலா துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என நிபுணர்கள் முன்பு கூறியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் (World Travel & Tourism Council), தான் ஆய்வு செய்த 184 நாடுகளில், 2025-ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலா வருவாயில் சரிவைக் காணக்கூடிய ஒரே நாடாக அமெரிக்கா இருக்கும் என்று தெரிவித்தது. டிரம்பின் வரிகள் (tariffs) மீதான எதிர்ப்பின் ஒரு வடிவமாக, கனடாவைச் சேர்ந்த பலரும் அமெரிக்கப் பயணத்தைப் புறக்கணித்தது போன்ற நிர்வாகத்தின் பிற கொள்கைகளும், அமெரிக்காவின் சுற்றுலாவைப் பாதித்ததாகத் தெரிகிறது. அக்டோபர் மாதம், அமெரிக்காவுக்கு வரும் கனடிய பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 10-வது மாதமாக சரிவைக் கண்டதாகக் குறிப்பிடப்பட்டது. முன்னதாக, கனடாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்த சர்வதேசப் பயணிகளில் சுமார் நான்கில் ஒரு பங்கை கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ளனர் என்று அமெரிக்கப் பயணச் சங்கம் (US Travel Association) தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g6j5nv0vxo
2 months ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 07:37 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. குறித்த காசோலையை, அதன் தலைவர் Abdul Razzle Abdul Sattar வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். அந்த சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, Mohamed Abdul Hussain, Mohamed Ismail Dawood ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233121
2 months ago
என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்று தேயிலையும் கூட இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார வருவாய் சுட்டியில் முன்னிலையில் இல்லை. மலையக மக்களின் புதிய சந்ததி ஒன்றும் தேயிலை கூடையை தலையில் மாட்டி.. சாக்கு துணியை இடுப்பில் கட்டி கொழுந்த்து பறிக்கும்தொழிலுக்கு போகப் போவதும் இல்லை. இப்போதே அநேக இளையவர்கள் கொழும்பு, கண்டி என்ற பெரு நகரங்களை நோக்கியும் வெளிநாடு செல்லுவதுமாகத்தான் அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. சுமந்திரன், மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த வெண்டுகோள் தூர நோக்கில் சரியானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நடைமுறையில் நிறைய சிக்கல்கள் வரலாம். அடையாள இழப்பு, பொருளாதார சிக்கல், சமூக சிக்கல் இப்படி பல இன்னல்களை சந்தித்தாலும், ஓரிரு தலைமுறைகளின் பின்னர் இவர்களின் வாழ்வு ஓரளவுக்கு சுபிட்சமாக இருக்கும் என நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்த பல குடும்பங்கள் 1983 காலங்களிலும், அதன் பின்னரும் மலையகத்தை விட்டு வெளியேறி வடக்கில் குடியேறியவர்கள் ஆரம்பத்தில் பல சிக்கல்களை அனுபவித்தாலும், இன்று வட, கிழக்கு மக்களின் யதார்த்த வாழ்வை போல கல்வி, தொழில், வெளிநாடு, கோயில் குளம் என்று சந்தோசமாக இருக்கிறார்கள். சிங்களத்தின் கருணையில், பச்சாதாபா பிச்சையில் வாழ வில்லை என்ற கௌரவத்தோடு தமிழராக வாழ்கிறார்கள். தவிர இந்த உரையாடல், அரசுக்கு மலையக மக்களுக்கு செய்யவேண்டிய காலம் கடந்த நீதியை செய்ய ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூட நினைக்கிறன்.
2 months ago
யாழில் நிலவும் சீரற்ற கால நிலை - சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது 11 Dec, 2025 | 09:24 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது . யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை அண்மித்த நிலையில் வானில் நிலவிய கடுமையான மோக மூட்டத்தால் , சென்னைக்கு மீள திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கொழும்பில் இருந்து வடமாகாணத்திற்கான நிவாரண பொதிகளை ஏற்றி வரும் அமெரிக்க விமானம் இன்றைய தினம் வியாழக்கிழமையும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து நிவாரண பொருட்களை கையளித்து சென்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233116
2 months ago
அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் - ஜனாதிபதி அநுரகுமார இடையில் சந்திப்பு! 11 Dec, 2025 | 05:59 PM அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் அலிஸன் ஹூக்கர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இலங்கையின் அனர்த்த நிலைமையின் போது பல்வேறு உதவிகளையும் நிவாரணக் குழுக்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்த அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் உள்ளிட்ட முக்கிய வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்வதற்கும், பிரதான வீதிகள், புகையிரதப் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அனைத்து நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/233115
Checked
Tue, 02/17/2026 - 03:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed