2 months 1 week ago
09 Dec, 2025 | 03:49 PM தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது. இந்நிலையில், மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார். இதன்போது, குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் கைப்பற்றப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன. மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போனது தொடர்பில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவிக்கையில், ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் காலம் முடிவுற்ற பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. தற்போது காணாமல் போன அனகொண்டா பாம்புக் குட்டி இதற்கு முன்னர் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம் | Virakesari.lk
2 months 1 week ago
புட்டின் மற்றவர்களைப் போல் உதவி செய்து விட்டு... படம் பிடித்து காட்டுவதோ, சொல்லிக் காட்டுவதோ இல்லை. இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள். புட்டினும் அதே... கொள்கை உடையவர் என்பதில் சந்தேகம் இல்லை. @குமாரசாமி
2 months 1 week ago
வெறும் அறிக்கையுடன் நின்றுவிட்டார்களா? டாலர் எப்ப தான் வரும்?
2 months 1 week ago
டொக்டர் அர்ச்சுனா கிளிநெச்சியில் புதிய பாலம் அமைக்கும் வேலை நடைபெற்ற இடத்தில் நின்ற இலங்கை இராணுவ அதிகாரியுடன் சிங்களத்தில் கதைத்து விட்டு சொன்னார் புழுதடைந்த பாலத்தை இலங்கை இராணுவம் அகற்றும் பின்பு இந்திய இராணுவம் தாங்கள் கொண்டு வந்த பாலத்தை பொருத்துவார்கள்.
2 months 1 week ago
எம்முடன் கூட வந்த இந்திய ராணுவத்தினன் பலாலி வீதியுடன் நின்றுவிட நானும் தகப்பனாரும் மெதுவாக எமது ஒழுங்கைக்குள் நுழைந்தோம். அப்பகுதி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயிருந்தது. மதில்கள் ஒழுங்கையின் நீளத்திற்கு வீழ்ந்துகிடக்க, ஒழுங்கையின் இருபக்கமும் பற்றைகள் வளர்ந்து ஒழுங்கையினை மறைத்தபடி நின்றது. அங்கிருந்த 5 வீடுகளில் ஒன்றேனும் தப்பியிருக்கவில்லை. இந்திய இராணுவம் இப்பகுதியில் நிலைகொண்ட பின்னர் மீதமாயிருந்த வீடுகளையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். எல்லாமே அழிவுகளைச் சுமந்து காணப்பட்டன. ஆளுயரத்திற்கு மேலாய் வளர்ந்திருந்த பற்றைகளைத் தாண்டி எமது வீட்டினை அடைந்தோம். வீட்டின் பெரும்பகுதி எரியூட்டப்பட்டது போலக் காணப்பட்டது. முதலாவது அறையில் இந்திய ராணுவம் தங்கியிருக்கிறது என்பது தெரிந்தது. அவர்கள் பாவித்த சில பொருட்கள், இந்தியாவின் ப்ரூ கோப்பி என்று சில இந்தியப் பொருட்களும், அயலில் உள்ள வீடுகளில் இருந்து அவர்கள் எடுத்து வந்திருந்த தளபாடங்களும் அவ்வறையில் பரவிக் கிடந்தன. இடிந்த மதில்களின் கற்களை எடுத்துவந்து காப்பரண் கட்டியிருந்தார்கள். இவ்வீடுகளில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதோ அல்லது இவ்வீடுகளை அவர்கள் தமது வாழ்நாள் உழைப்பின் மூலமே கட்டியிருந்தார்கள் என்பதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்திருக்காது. நாம் வெகு நேரம் அங்கு நிற்க விரும்பவில்லை. 30 நிமிட நேரமே இருக்கமுடியும், அதற்குள் எடுத்துக்கொள்ள முடியுமானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடவேண்டும் என்று அந்த அதிகாரி பணித்தது எமக்கு நினைவில் இருந்தது. ஆகவே சில தேங்காய்கள், சமயலறையில் இன்னமும் மீதமாயிருந்த மாப்பியன் அரிசி, வாழைக்காய் என்று சிலவற்றையும் ஓரிரு பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு எமது சைக்கிள்களில் கட்டிக்கொண்டோம். இவற்றுக்கு மத்தியில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசுவதை நான் அவதானித்தேன். இறந்த விலங்குகளின் உடல்களாக இருக்கலாம் என்று எண்ணினேன். அவை மனிதர்களின் உடல்களாகவும் இருக்கலாம். ஆனால் பற்றைகளுக்குள் என்னவிருக்கின்றது என்று பார்க்கும் துணிவு எனக்கு இருக்கவில்லை. வீட்டிலிருந்து துரத்தப்பட்டபோது எம்முடைய மூன்று நாய்கள் பற்றி நாம் யோசிக்கவில்லை. ஆனால் மீண்டும் அங்கு சென்றபோது அவற்றுக்கு என்னவாகியிருக்கும் என்று எண்ணத்தொடங்கினேன். அப்பகுதியில் இருந்த இந்திய ராணுவத்தினரின் காதுகளுக்கு எட்டாத வகையில் அவற்றின் பெயர் சொல்லி அழைத்தேன், எவையுமே வரவில்லை. எமது வீட்டைச் சுற்றிப் படர்ந்திருந்த பற்றைகளும், துர்நாற்றமும், அயல்வீடுகளில் இருந்து வந்த உய்த்தறிய முடியாத சத்தங்களும் அச்சத்தை ஏற்படுத்தின. பேய்நகரம் போன்று காட்சியளித்த அப்பகுதியில் தொடர்ந்தும் நிற்க விரும்பாது அங்கிருந்து வெளியேறினோம். மீண்டும் பலாலி வீதி, கோண்டாவில்ச் சந்தி என்று இந்திய ராணுவ நிலைகளூடாக வெளியேறி சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டே பாசையூரை வந்தடைந்தோம்.
2 months 1 week ago
இலங்கையின் 20% நிலப்பரப்பு நீரில் மூழ்கியது - ஐ.நா. அறிக்கை Dec 9, 2025 - 01:23 PM 25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அவர்களது புதிய புவியியல் பகுப்பாய்வின்படி, புயலால் ஏற்பட்ட வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பை பாதித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதம் அல்லது ஐந்தில் ஒரு பங்கு நீரால் மூழ்கியுள்ளதுடன், வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளமையும் இதில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் 'டித்வா' சூறாவளி காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmiyaacge02jxo29nvdz25k6s
2 months 1 week ago
உயர் தரப்பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில் Dec 9, 2025 - 04:35 PM கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmiyh4l2e02k9o29ngoalfbok
2 months 1 week ago
இந்தியாவின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! 09 Dec, 2025 | 03:59 PM இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 600 கிலோ எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்திய அரசாங்கத்தினால் அனர்த்த நிவாரண சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232883
2 months 1 week ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 60 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சம் என்பது ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவு மட்டுமே, வேறு எதுவும் இல்லை!' அத்தியாயம் 22: வசபா மன்னர் [வசபன் / king Vasabha] பல புத்த கட்டிடங்களையும், நீர்ப்பாசனப் பணிகளையும் கட்டினார். அவர் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். வசபாவின் மகன் திஸ்ஸன் [வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் / Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I, also known as Gajabahuka Gamani] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவன், பிரபல சேர (இன்றைய கேரள) மன்னன் செங்குட்டுவன் அழைப்பின் பேரில் இந்திர விழாவில் பங்கேற்க தமிழகம் சென்றார். அவர் திரும்பியவுடன் பத்தினி வழிபாட்டைக் இலங்கைக்கு கொண்டுவந்து, பத்தினி கண்ணகியைப் போற்றும் வகையில் பெரஹெரா விழாவைத் [Perahera festival] தொடங்கினார். சயாமிலிருந்து [தாய்லாந்து / Thailand அல்லது முன்னர் சயாம் / Siam ] வந்த துறவிகளின் தூண்டுதலின் பேரில் 1775 கி.பி.க்குப் பிறகுதான் புத்தரின் பல் தாது [Buddha’s tooth relic] திருவிழாவுடன் தொடர்புடையது. பதினெட்டு நூற்றாண்டு பழமையான பத்தினி வழிபாடு மற்றும் பெரஹெரா திருவிழாவுடன் ஒப்பிடும் போது, இந்த பிக்குகள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அத்தியாயங்களை மிக சமீபத்தில் தான் உருவாக்கினர். தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் பெரஹெரா விழா முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிய இராச்சியத்தின் தமிழ் மன்னன் சயாமிலிருந்து (தாய்லாந்து) இந்த துறவிகளை அழைத்தார் என்றும் மற்றும் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பிரிவுகளின் துறவிகள் தான் பெரும்பாலும் அடுத்தடுத்து இலங்கை அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளில் கொடூரமான பங்கைக் கொண்டிருந்தனர் என்பது அண்மைய வரலாற்று உண்மை. கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகுவின் [Gajabahukagamani or Gajabahu I ] மாமனார் மகல்லக்க நாகன் [Mahallaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். கஜபாகுவின் மகன் பதிக திச்சன் [Bhatika Tissa] இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதன் பின், பதிக திச்சனின் இளைய சகோதரர் திஸ்ஸ (கன்னிததிஸ்ஸ / Kanittha Tissa) பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது மகன் குச்சநாகன் அல்லது சூளநாகன் [Cula Naga, or Khujjanaga, also known as Kuhun Na] தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது இளைய சகோதரர் குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் [Kuda Naga or Kunchanaga] தனது சகோதரனைக் கொன்று ஓராண்டு ஆட்சி செய்தார். முதலாம் சிறிநாகன் [Sirinaga] குஞ்சநாகாவை தோற்கடித்து பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகன் அபயா [Abhaya] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் [22 - 37. The son of Sirināga, the royal lord called Abhaya, .... 38. ... This king governed twenty-two years.] அவரது இளைய சகோதரர் திச்சன் [திஸ்ஸாக / Tissaka] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [22 - 39. His younger brother, known as king Tissaka, ... 45. This royal ruler governed twenty-two years.] . திஸ்ஸாகவின் மகன் இரண்டாம் சிறிநாகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [46. Tissa’s own son, known by the name of Sirināga, reigned full two years over the Island.]. ஆனால், மகாவம்சத்தில், முதலில் திஸ்ஸாக [Tissaka] வையும் அடுத்ததாக அபயா [Abhaya] வையும் ஆட்சி செய்ததாக கூறுகிறது? இரண்டாம் சிறிநாகனின் மகன் விசயகுமாரன் [Vijaya Kumara] தந்தை இறந்த பின் ஒரு வருடம் ஆட்சி செய்தார். முதலாம் சங்க திச்சன் [Sangha Tissa I] நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். இவன், விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன் ஆவான். அதன் பிறகு விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த மற்ற இரு அமைச்சர்களான சிறிகங்கபோதி [Siri Sangha Bodhi I, also known as Siri Sanghabodhi] இரண்டு ஆண்டுகளும், அதன் பின் மற்ற அமைச்சரான கோதாபயன் அல்லது மேகவண்ணாபயன் அல்லது அபய மேகவன்னா [Gothabhaya, also known as Meghavannabhaya, Gothakabhaya, Abhaya Meghavanna and Goluaba,] பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவருடைய மகன் ஜெத்ததிஸ்ஸ [சேட்டதிச்சன் / Jettha Tissa I also referred to as Detu Tiss, Kalakandetu Tissa, and Makalan Detu Tissa] பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். சேட்டதிச்சனின் தம்பியான மகாசேனன் [Mahasena, also known in some records as Mahasen] இருபத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது ஆட்சியில் ஒருவித மத மோதல்கள் நடந்தன. உதாரணமாக, மகாசேனன் மற்றும் முதலாம் சேட்டதிச்சன் ஆகிய சகோதரர்கள் இருவரும் சங்கமித்ரர் என்ற சோழ நாட்டு மகாயான பௌத்தம் என்ற பௌத்தப் பிரிவு மதத்தலைவரின் சீடர்களாவர். சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான முதலாம் சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் சங்கமித்ரர் முதலாம் சேட்டதிச்சனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார். ஆனால் மகாசேனனோ தன் அண்ணன் போல் அல்லாமல் சங்கமித்ரர் மகாயான பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு பேருதவிகளை செய்தான். சங்கமித்ரர் கையாலேயே இவனுக்கு முடிசூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவன் காலத்தில் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. மேலும் மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்திருக்கிறான். இன்னும் ஒன்றையும் கவனியுங்கள் இங்கு சங்கமித்ரர், தமிழ் பேசும் ஆண் புத்த பிக்கு, இவரின் பெயர் பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா வுடன் தொடர்பு படுகிறது. அந்த நேரம் தமிழர்களும் மகாயான பௌத்த தழுவியவர்கள் என்பதும் வெள்ளிடை மலை. இதை இலங்கையில், வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வு என்று இன்று ஈடுபடும் முழுக்க முழுக்க சிங்கள நபர்களைக்கொண்ட ஆய்வாளர்களுக்கு புரியாதது எனோ? அல்லது அவர்களுக்கு சரியான நேர்மையான அறிவு இல்லையா ? யாம் அறியேன் பராபரமே! ஆனால் ஒன்று மட்டும் உண்மை, மகாசேனன் மாதிரி, சைவக் கோயில்களை இடித்து அழிப்பதில் மட்டும், பச்சை, நீலம் அல்லது சிவப்பு கொடிகளை ஏந்தினாலும், கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். மொத்தம் 105 பக்கங்களில், அத்தியாயம் 18 முதல் அத்தியாயம் 22 வரை உள்ள சுமார் 16 1/2 பக்கங்களில் மட்டுமே மொத்தம் 61 மன்னர்களில் 54 மன்னர்கள் பற்றி, அதாவது சுமார் 89 சதவீத மன்னர்கள் பற்றி பேசுகிறது. மீதமுள்ள, ஆரம்ப ஆட்சியாளர்கள், நாம் முன்பே விளக்கமாக கூறியது போல, கண்டுபிடிக்கப்பட்ட மன்னர்களாக இருக்க வேண்டும்? எனவே தான் அதற்கான கதைகளை சோடிப்பதற்காக, பல பக்கங்களை எடுத்துள்ளார்கள் போலும்? மேலே காட்டப்பட்டுள்ள அரசர்களில் பெரும்பாலோர், பெயர்களின் அடிப்படையில், ஏற்கனவே விவரிக்கப்பட்ட வாறு, தமிழர்களுடன், தமிழ் பண்பாட்டுடன் தொடர்பு உடையவர்களாகவே தெரிகிறது. மேலும் தீபவம்சத்தின் பெரும்பாலான பக்கங்கள் வரலாற்றை விட, நம்பிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. அதனால்த் தான் மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க் [Hermann Oldenberg] தீபவம்சத்தை "ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவுகள்" என்று அழைக்கிறார். இது பௌத்தத்திற்கு ஆதரவானதே தவிர, என்றும் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. இருபதாம் நூற்றாண்டின் அல்லது அதற்குப் பிறகு, பெரும்பாலான மிகவும் பேராசை கொண்ட துறவிகளும் அரசியல்வாதிகளும், இந்த விசுவாசப் பதிவை, விஷமிகுந்த தமிழர் விரோதமாக மாற்றினார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கு அடியெடுத்து கொடுத்தது, இதன் பின் 150 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மகாவம்சமாக இருக்கலாம்? Part: 60 / Appendix – Dipavamsa / 'The Dipavamsa is just an ancient Buddhist historical record & nothing else!' Chapter 22: The king Vasabha constructed many Buddhist buildings, and irrigation works. He ruled forty four years. The son of Vasabha, Tissa, ruled for three years. His son, Gajabahukagamani, ruled twenty two years. He went to Tamilnadu to participate in the Indra Vill(zz)a festival on the invitation of the famous Chera (present day Kerala) king Senggutuvan. He brought the Pattini cult on his return and initiated the Perahera festival to honour the Pattini, Kannagi. Buddha’s tooth relic came to be associated with festival only after 1775 A. D. on the instigation of the monks who came from Siam. These monks formed the Malwatte and the Askiriya Chapters of very recent origin when compared with the eighteen century old procession of the Pattini worship, and the Perahera festival. Perahera festival is first recorded in the Tamil Epic Silappthikaram. Ironically, the Tamil king of Kandyan kingdom invited these monks from Siam (Thailand) and the monks of the Malwatte and the Askiriya Chapters played diabolical role in the anti Tamil pogrom perpetrated by the successive Sri Lankan Governments. Mahallakanaga, father in law of Gajabahukagamani, ruled for six years. His, Gajabahu’s, son, Bhatutissa, ruled for twenty four years. Younger brother of Bhatutissa, Tissa (Kannithatissa), ruled for eighteen years. His son Khujjanaga ruled for two years after the death of his father. His younger brother Kunjanaga put his brother to death and ruled for one year. Sirinaga defeated Kunjanaga and ruled for nineteen years. His son Abhaya ruled for twenty two years. His younger brother Tissaka ruled for twenty two years. His son Sirinaga ruled for two years. His son Vijayakumara ruled for one year after death of his father. Samghatissa reigned for four years. The king Samghabodhi reigned for two years. Abhaya Meghavanna ruled for thirteen years. His son Jetthatissa ruled ten years. Mahasena, the younger brother of Jetthatissa, ruled for twenty seven years. Some sort of religious conflict took place in his reign. About 16 pages and a half page, from the Chapter 18 to the Chapter 22, out of the 105 pages speaks about 54 kings out of 61 kings, about 89 percent of the kings. The rest, the purported initial rulers, must be invented kings. Quite a large proportion of the kings, as shown above, are Tamils. The most of the pages of the Dipavamsa are devoted to the Faith than to the history. That is why the translator, Hermann Oldenberg, calls the Dipavamsa as “An ancient Buddhist Historical Records”. It is pro Buddhism, but not anti Tamil. Avaricious and greedy monks and the politicians of the twentyieth century and afterwards without any compunction turned this record of Faith into venomous anti Tamil hatred. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 61 தொடரும் / Will follow துளி/DROP: 1934 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60] https://www.facebook.com/groups/978753388866632/posts/32744509148530976/?
2 months 1 week ago
ரம்பின் பேச்சு மாற்றி ஒலிபரப்பியதன் பின்னர் பிபிசியின் பக்கச்சார்பற்ற தன்மை கிழிந்து தொங்குகிறது
2 months 1 week ago
இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற குற்ற வரலாறு இவருக்கு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக பணியிலிருந்து நீக்கம் சுமித் குணசேகர என்ற சந்தேகநபர் 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர் என்றும், அதில் ஒரு சிறுவருடன் தொடர்புடைய பாலியல் குற்றத்தை புரிந்ததாக அவரே ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், 2004 ஆம் ஆண்டிலும் ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். குணசேகர மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருந்தபோதிலும், கனடாவில் செய்த குற்றங்களால், அமெரிக்காவில் சட்டப்படி இருக்க இவருக்கு உரிமை இல்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தத் தகவல் தெரியவந்தவுடன், ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் அவரை உடனடியாகப் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. "பாலியல் குற்றவாளி ஒருவர் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். Tamilwinஇலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது...இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால்...
2 months 1 week ago
உக்கிரேன் இரஸ்சிய போரின் பின்னர் ஒரு தரப்பு செய்திகளை மட்டும் பார்க்கின்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது, அது சமூக ஊடகங்களில் கூட அதே நிலை, நீங்கள் கூறியது உண்மைதான், அப்போது உங்களைப்போல பலரும் கூறியிருந்தார்கள், ஆனாலும் எமது Perception ஐ வலிந்து உருவாக்கப்படும் ஒரு தரப்பு செய்திகளால் கட்டமைக்கப்பட்டிருந்த நிலையில் எமது புரிதல்கள் செய்திகளினடிப்படையிலேயே இருந்தது, ஆனால் மேற்கு லிபரல் கொள்கை என கூறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதேச்சாதிகார நிலைகளை புதிய அமெரிக்க கொள்கை மறைமுகமாக எதிர்க்கின்ற நிலை உருவாகியது எதனால் என கருதுகிறீர்கள், அமெரிக்கா நேரடியாக சீனாவினையும் இரஸ்சியாவினையும் எதிர்க்கின்றது ஆனால் மறைமுகமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தினை கேள்விக்குள்ளாக்குகிறது என கருதுகிறேன். இந்த புதிய கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் முன்னிலைப்படுத்தப்படுவது(நல்ல முறையில் அல்ல) போல கருதுகிறேன்.
2 months 1 week ago
2 months 1 week ago
உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்க ஐரோப்பிய தலைவர்கள் முடிவு! உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கவும் “இப்போது ஒரு முக்கியமான தருணம்” என்று ஐரோப்பிய தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே கடந்த வாரம் வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் அண்மைய பதிப்பு குறித்து விவாதிக்க உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரை திங்களன்று (08) லண்டனில் சந்தித்தார். ரஷ்யாவுடன் விரைவான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்கா கெய்வ் மீது அழுத்தம் கொடுப்பதால், உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு மேலதிக பணிகள் தேவை என்று ஐரோப்பியத் தலைவர்கள் இதன்போது கூறினர். நேட்டோ அதிகாரிகளைச் சந்திக்க பிரஸ்ஸல்ஸுக்குச் சென்ற ஜெலென்ஸ்கி, செவ்வாயன்று (09) உக்ரேன் அமெரிக்காவுடன் திருத்தப்பட்ட திட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறினார். கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர். https://athavannews.com/2025/1455703
2 months 1 week ago
தாய்லாந்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்துவதாக கம்போடியா சபதம்! தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையே இரண்டாவது நாளாகவும் மோதல்கள் தொடரும் நிலையில், கம்போடியாவின் சக்திவாய்ந்த செனட் தலைவர் ஹுன் சென் (Hun Sen) இன்று (09) தாய்லாந்திற்கு எதிராக தனது நாடு கடுமையான போராட்டத்தை நடத்தும் என்று சபதம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு தாய் சிப்பாய் கொல்லப்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலானது மீண்டும் தொடங்கியது. இது கடந்த ஜூலை மாதம் ஐந்து நாட்கள் நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்தின் கீழான பலவீனமான போர்நிறுத்த்தையும் தடம் புரளச் செய்தது. இதன் விளைவாக இரு தரப்பிலும் பல பொது மக்களும், இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர், மேலும் 100,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புதிய மோதலின் விளைவாக ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் கம்போடியாவின் இராணுவம் இன்று அறிவித்தது. அதேநேரம், கம்போடியாவின் அண்மைய தாக்குதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் தாய் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1455724
2 months 1 week ago
ரஷ்யாவின் நிதியுதவியுடன் கூடிய போலி செய்தி வலையமைப்பு ஐரோப்பாவில் தேர்தலை சீர்குலைக்க எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளது - பிபிசி விசாரணை 21 செப்டம்பர் 2025 பகிர் சேமிக்கவும் ஓனா மரோசிகோ & சீமஸ் மிரோடன் , பிபிசி கண் விசாரணைகள் மற்றும் ரோவன் இங்ஸ் , பிபிசி குளோபல் தவறான தகவல் பிரிவு பிபிசி எங்கள் ரகசிய படப்பிடிப்பால் பிடிக்கப்பட்ட நெட்வொர்க் ஒருங்கிணைப்பாளர் அலினா ஜுக் (இடது), தவறான தகவல் பிரச்சாரம் குறித்த வழிமுறைகளைக் கேட்கிறார். கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெறவிருக்கும் ஜனநாயகத் தேர்தல்களை சீர்குலைக்க ரஷ்ய நிதியுதவியுடன் கூடிய ரகசிய வலையமைப்பு முயற்சிப்பதாக பிபிசி கண்டறிந்துள்ளது. செப்டம்பர் 28 ஆம் தேதி நாட்டின் நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, ரஷ்ய சார்பு பிரச்சாரத்தையும், மால்டோவாவின் ஐரோப்பிய ஒன்றிய சார்பு ஆளும் கட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போலி செய்திகளையும் வெளியிட்டால், பங்கேற்பாளர்களுக்கு பணம் செலுத்துவதாக நெட்வொர்க் உறுதியளித்ததை ஒரு ரகசிய நிருபரை நாங்கள் கண்டுபிடித்தோம். மால்டோவாவின் ரஷ்ய ஆதரவு எதிர்ப்பின் ஆதரவாளர்களைக் கண்டுபிடித்து ரகசியமாகப் பதிவு செய்வதற்கும் - வாக்கெடுப்பு என்று அழைக்கப்படுவதை நடத்துவதற்கும் பங்கேற்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது இல்லாத ஒரு அமைப்பின் பெயரில் செய்யப்பட்டது, இது சட்டவிரோதமானது. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரியின் முடிவுகள், தேர்தலின் முடிவை கேள்விக்குள்ளாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கக்கூடும் என்று நெட்வொர்க்கின் ஒரு அமைப்பாளர் கூறினார். ஆளும் கட்சி தோற்கும் என்று கூறும் இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில், ஜனாதிபதி மையா சாண்டுவால் நிறுவப்பட்ட ஆளும் கட்சியான அதிரடி மற்றும் ஒற்றுமை (PAS) தற்போது ரஷ்ய சார்பு தேசபக்த தேர்தல் தொகுதியை (BEP) விட முன்னிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. "கிரெம்ளினின் தீய செல்வாக்கு நடவடிக்கைகளுக்காக" அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட மால்டோவன் தன்னலக்குழு தலைவரான இலன் ஷோர் மற்றும் ரகசிய வலையமைப்பிற்கு இடையேயான தொடர்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம், மேலும் அவர் தற்போது மாஸ்கோவில் தப்பியோடி உள்ளார். ஊழல் குற்றச்சாட்டிற்காக இங்கிலாந்தும் அவருக்கு தடை விதித்துள்ளது. நெட்வொர்க்கிற்கும் எவ்ராசியா எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பிற்கும் (என்ஜிஓ) இடையேயான தொடர்புகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். எவ்ராசியாவுக்கு திரு. ஷோருடன் தொடர்புகள் உள்ளன, மேலும் கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு எதிராக வாக்களிக்க மால்டோவா குடிமக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்டதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அவர் தடை செய்யப்பட்டார். இணைவது குறித்த வாக்கெடுப்பு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது . "2024 ஆம் ஆண்டில் [இலன் ஷோரின்] பிரச்சாரத்தின் கவனம் பணமாக இருந்தது. இந்த ஆண்டு கவனம் தவறான தகவல்களாகும்" என்று மால்டோவாவின் காவல்துறைத் தலைவர் வியோரல் செர்னாட்டியானு பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார். எங்கள் விசாரணை முடிவுகளுக்கு பதிலளிக்குமாறு இலன் ஷோர் மற்றும் எவ்ராசியாவிடம் கேட்டோம் - அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. UKக்கு வெளியே YouTube இல் பாருங்கள் மால்டோவா சிறியதாக இருக்கலாம், ஆனால் உக்ரைனுக்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் ருமேனியாவிற்கும் இடையில் இணைக்கப்பட்டுள்ளது, இது ஐரோப்பாவிற்கும் கிரெம்ளினுக்கும் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு தகவல் தெரிவிப்பவர் எங்களுக்கு அனுப்பிய இணைப்பு மூலம், டெலிகிராம் என்ற செய்தியிடல் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்ட, உலக சேவை நெட்வொர்க்கிற்குள் ஊடுருவியது. இது ஒரு ஜனநாயக விரோத பிரச்சார வலையமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஒரு முக்கியமான நுண்ணறிவை எங்களுக்கு வழங்கியது. எங்கள் ரகசிய நிருபர் அனா மற்றும் 34 புதிய பணியாளர்கள், "செயல்பாட்டாளர்களை" தயார்படுத்தும் ரகசிய ஆன்லைன் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். "உங்கள் சமையலறையிலிருந்து தேசியத் தலைவருக்கு எப்படிச் செல்வது" போன்ற தலைப்புகளுடன், அவர்கள் ஒரு சரிபார்ப்பு செயல்முறையாகச் செயல்பட்டதாகத் தோன்றியது. அனாவும் மற்றவர்களும் தாங்கள் கற்றுக்கொண்டவற்றின் மீது வழக்கமான சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டியிருந்தது. பின்னர் எங்கள் நிருபரை அலினா ஜக் என்ற நெட்வொர்க் ஒருங்கிணைப்பாளர் தொடர்பு கொண்டார். திருமதி ஜக்கின் சமூக ஊடக சுயவிவரம், அவர் மாஸ்கோவிற்கு விசுவாசமான கிழக்கு மால்டோவாவின் பிரிவினைவாதப் பகுதியான டிரான்ஸ்னிஸ்ட்ரியாவைச் சேர்ந்தவர் என்று கூறுகிறது, மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கடந்த சில ஆண்டுகளாக அவர் ரஷ்யாவிற்கு பல முறை பயணம் செய்ததைக் காட்டுகிறது. தேர்தலுக்கு முன்னதாக டிக்டோக் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளை தயாரிப்பதற்கு மாதத்திற்கு 3,000 மால்டோவன் லீ ($170, £125) சம்பளம் வழங்கப்படும் என்றும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வங்கியாகவும், இலன் ஷோரின் நிறுவனங்களில் ஒன்றில் பங்குதாரராகவும் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய அரசுக்குச் சொந்தமான வங்கியான ப்ரோம்ஸ்வியாஸ்பேங்கிலிருந்து (PSB) பணம் அனுப்பப்படும் என்றும் திருமதி ஜூக் அனாவிடம் கூறினார். ஆனா மற்றும் பிற புதியவர்களுக்கு ChatGPT-ஐப் பயன்படுத்தி சமூக ஊடக இடுகைகளை உருவாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. "படத்தில் சில நையாண்டிகள் இருந்தால்... யதார்த்தத்தை விட அதிகமாக இருந்தால் உள்ளடக்கம் மக்களை ஈர்க்கும்" என்று அவர்களிடம் கூறப்பட்டது, ஆனால் இடுகைகள் "ஆர்கானிக்" என்று உணரப்படுவதை உறுதிசெய்ய அதிகப்படியான AI தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர்களிடம் கூறப்பட்டது. டெலிகிராம் குழுவிற்குள், பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட முந்தைய வழிமுறைகளை அனா மற்றும் பிபிசி அணுக முடிந்தது. ஆரம்பத்தில், மால்டோவா வரலாற்றில் வரலாற்று நபர்களைப் பற்றிய தேசபக்தி பதிவுகளை அவர்களிடம் கேட்டிருந்தனர் - ஆனால் படிப்படியாக கோரிக்கைகள் வெளிப்படையாக அரசியல் ரீதியாக மாறின. மால்டோவாவின் தற்போதைய அரசாங்கம் தேர்தல் முடிவுகளை பொய்யாக்க திட்டமிட்டுள்ளது, மால்டோவாவின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் தகுதி, அந்நாட்டின் குடிமக்கள் தங்கள் "பாலியல் நோக்குநிலையை" LGBTக்கு மாற்றுவதைப் பொறுத்தது, மற்றும் ஜனாதிபதி சாண்டு குழந்தை கடத்தலை எளிதாக்குகிறார் என்பது உள்ளிட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இடுகையிடுமாறு அனாவிடம் கேட்கப்பட்டது. தவறான தகவல்களை உருவாக்க நெட்வொர்க் வழங்கிய வழிமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு - "[ஜனாதிபதி] சாண்டுவின் ஆட்சி குழந்தைகளை ஒரு வாழ்க்கை நாணயமாகப் பயன்படுத்துகிறது" மற்றும் "சாண்டுபாஸ் [ஆளும் கட்சியைக் குறிக்கும் குறிப்பு] மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளது" போன்ற ஆதாரமற்ற சொற்றொடர்களைப் பகிருமாறு பங்கேற்பாளர்களுக்கு இது கூறுகிறது. சமூக ஊடக பிரச்சாரங்கள் இப்போது தேசிய தேர்தல்களின் மையமாக உள்ளன. மால்டோவாவின் ஆளும் கட்சியான PAS ஐ ஆதரிக்கும் சமூக ஊடக இடுகைகளை நாங்கள் கண்காணித்தோம், ஆனால் வெளிப்படையான தவறான தகவல் பிரச்சாரம் எதையும் கண்டறியவில்லை. நெட்வொர்க்குடனான எங்கள் ரகசியப் பயிற்சி முழுவதும், உண்மைக்கு ஏற்றவாறு துல்லியமான பதிவுகளை மட்டுமே நாங்கள் பகிர்ந்து கொண்டோம், மேலும் அவற்றின் எண்ணிக்கையை நாங்கள் குறைத்தோம். நாங்கள் ஊடுருவிய குழுவைப் போன்ற பல குழுக்களைக் கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்ததால், அந்த நெட்வொர்க்கில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினோம். எங்கள் டெலிகிராம் அணுகல் மூலம் கண்காணிக்கக்கூடிய பிற கணக்குகளிலும் இதேபோன்ற செயல்பாட்டின் வடிவங்களைத் தேடினோம். இந்த நெட்வொர்க்கில் குறைந்தது 90 டிக்டாக் கணக்குகள் உள்ளன - சில செய்தி ஊடகங்களாக மாறுவேடமிட்டு - ஜனவரி முதல் 23 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 860,000 விருப்பங்களையும் கொண்ட ஆயிரக்கணக்கான வீடியோக்களை இவை வெளியிட்டுள்ளன. மால்டோவாவின் மக்கள் தொகை வெறும் 2.4 மில்லியன் மட்டுமே. எங்கள் கண்டுபிடிப்புகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் (DFRLab) பகிர்ந்து கொண்டோம், மேலும் அதன் பகுப்பாய்வு நெட்வொர்க் இன்னும் பெரியதாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது என்று அது எங்களிடம் கூறியது. ஜனவரி முதல் டிக்டோக்கில் பரந்த நெட்வொர்க் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளதாக DFRLab கண்டறிந்துள்ளது. கெட்டி இமேஜஸ் தன் மீதான தாக்குதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான தாக்குதல் என்று ஜனாதிபதி மையா சாண்டு கூறுகிறார். அந்த நெட்வொர்க் தவறான தகவல்களை மட்டும் பதிவிடவில்லை. மால்டோவாவின் தலைநகரில் உள்ள மக்களிடம் தேர்தலில் அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் குறித்து நேர்காணல் செய்து, அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பை நடத்துவதற்காக, திருமதி ஜூக் அனாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 மால்டோவன் லீ ($12, £9) ரொக்கத்தையும் வழங்கினார். இந்தப் பணியை மேற்கொள்வதற்கு முன், வாக்களிக்கப்படுபவர்களை எவ்வாறு நுட்பமாக வற்புறுத்துவது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. ரஷ்ய ஆதரவு எதிர்ப்பை ஆதரிப்பதாகக் கூறிய நேர்காணல் செய்பவர்களின் பதிவுகளை ரகசியமாக பதிவு செய்யும்படியும் அவர்களிடம் கேட்கப்பட்டது. "வாக்கில் மோசடி செய்வதைத் தடுப்பதற்காக" இது செய்யப்பட்டது என்று திருமதி ஜூக் வெளிப்படுத்தினார், பாஸ் வெற்றி பெற்றால், அது நியாயமற்ற முறையில் வென்றதற்கான சான்றாகக் கருதப்படும் வகையில் கணக்கெடுப்பு முடிவுகளும் ரகசிய பதிவுகளும் பயன்படுத்தப்படும் என்று அவர் பரிந்துரைத்தார். எங்கள் நிருபர் இணைந்த நெட்வொர்க் ரஷ்யாவிலிருந்து வங்கியால் மாற்றப்படுவதாகவும் எங்கள் சான்றுகள் தெரிவிக்கின்றன. மாஸ்கோவிலிருந்து தொலைபேசியில் அலினா ஜுக் பணம் கேட்பதை அனா கேட்டு - படம் பிடித்தார். "கேளுங்கள், மாஸ்கோவிலிருந்து பணம் கொண்டு வர முடியுமா... நான் என் மக்களுக்கு அவர்களின் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும்," என்று அவள் சொல்வதை நாங்கள் படம் பிடித்தோம். அவளுக்கு யார் பணம் அனுப்புவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் எவ்ராசியா என்ற அரசு சாரா நிறுவனம் மூலம் அந்த நெட்வொர்க்குக்கும் இலன் ஷோருக்கும் இடையேயான தொடர்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கெட்டி இமேஜஸ் இந்த நெட்வொர்க் மால்டோவன் தன்னலக்குழு இலன் ஷோருடன் இணைக்கப்பட்டுள்ளது, அவர் 2019 இல் இங்கு பிரச்சாரம் செய்து இப்போது மாஸ்கோவில் தப்பியோடியவராகக் காணப்பட்டார். எங்கள் விசாரணை முடிவுகளுக்கு இலன் ஷோர் மற்றும் எவ்ராசியா பதிலளிக்கவில்லை. எவ்ராசியாவின் வலைத்தளத்தில் அனாவின் கையாளுநரான அலினா ஜூக்கின் புகைப்படங்களை பிபிசி கண்டறிந்தது - மேலும் அனா சேர்க்கப்பட்ட டெலிகிராம் குழுக்களில் ஒன்று "எவ்ராசியா தலைவர்கள்" என்று அழைக்கப்பட்டது. "மோல்டோவாவில் ஊழல் நிறைந்த தப்பியோடிய தன்னலக்குழு இலன் ஷோரின் சார்பாக... மால்டோவா ஜனநாயகத்தை சீர்குலைக்க" எவ்ராசியா செயல்படுகிறது என்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் கூறுகிறது. எங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க அலினா ஜூக்கைக் கேட்டோம் - அவர் பதிலளிக்கவில்லை. தேர்தலுக்கு முன்னதாக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளதாகவும், "ஏமாற்றும் நடத்தையை தீவிரமாக எதிர்கொள்வதாகவும்" டிக்டாக் தெரிவித்துள்ளது. எங்கள் கண்டுபிடிப்புகளுக்கு பேஸ்புக்கின் உரிமையாளர் மெட்டா பதிலளிக்கவில்லை. இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய தூதரகம், போலிச் செய்திகள் மற்றும் தேர்தல் தலையீட்டில் ஈடுபடுவதை மறுத்ததுடன், மால்டோவாவின் தேர்தலில் தலையிட்டது ஐரோப்பிய ஒன்றியம் தான் என்றும் கூறியது. கூடுதல் அறிக்கை: மால்வினா கோஜோகாரி, ஆண்ட்ரியா ஜிடாரு, ஏஞ்சலா ஸ்டான்சியு How Russian-funded fake news network aims to disrupt Euro...An undercover reporter discovers a network is offering to pay for social media posts undermining Moldova’s ruling party.
2 months 1 week ago
அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி DilukshaDecember 9, 2025 10:30 am 0 பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபா நிவாரண உதவியை வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்த நிதியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் பணிப்பாளர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிதி சீரற்ற வானிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மறுகட்டமைப்பு மற்றும் உதவிக்காக பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். https://oruvan.com/chandrika-donates-rs-250-million-to-government-relief-fund/
2 months 1 week ago
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை! 09 Dec, 2025 | 11:52 AM நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் பார்வையிட சென்றிருந்த போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சாதாரண மக்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதனால் அரசாங்க ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விசேடமாக நுவரெலியாவில் உள்ள ஆசிரியர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வீடுகள் இன்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232852
2 months 1 week ago
“டித்வா” சூறாவளியால் காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் “டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், இந்த அனர்த்தத்தினால் எவரேனும் ஒரு நபரின் உறவினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பின், அத்தகைய காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது. தேசிய அனர்த்தப் பகுதிகள், நிர்வாக மாவட்டங்கள் அடிப்படையில் இறப்பைப் பதிவு செய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அதற்கமைய, இந்த அனர்த்தத்தின் கீழ் காணாமல் போன நபர் ஒருவரின் இறப்பைப் பதிவு செய்யக் கோரும் நபர், அந்த நபர் வழக்கமாக வசித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் தகவல்களுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தையும், அத்தகவல்களை உறுதிப்படுத்தும் சத்தியக்கடதாசியையும் சமர்ப்பிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர் இந்தக் கோரிக்கையைப் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிப்பார் என்பதுடன், பிரதேச செயலகத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலும் இரண்டு வார காலத்திற்கு ஆட்சேபனைகளுக்காக இது காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சேபனைகள் இல்லையெனில், பிரதேச செயலாளரால் அனுமதிக்காகப் பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட வலயத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டால், அது குறித்து விசாரணை நடத்திப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. இதன் கீழ், நபர் ஒருவர் காணவில்லை என்பதற்கான சான்றிதழ் கோரப்பட்டிருக்கும் போது, மேற்கூறியவாறு விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, உரிய விசாரணைகளை மேற்கொண்டு, பிரதேச செயலாளரால் ‘காணவில்லை என்பதற்கான சான்றிதழை’ வெளியிடவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது. இதற்கிடையில், கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பல ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய சுவடிகூடம் (National Archives) தெரிவிக்கிறது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான சேதம் ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நதீரா ரூபசிங்க குறிப்பிட்டார். https://www.samakalam.com/காணாமல்-போனோர்-மற்றும்-உ/
2 months 1 week ago
அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு Dec 9, 2025 - 09:37 AM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்" என சுமணரத்ன தேரர் தெரிவித்திருந்தார். இவரது இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக, 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறித்த தேரரை கைது செய்யுமாறு கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை வழக்கு தொடுநர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனையடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், அவரை இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கட்டளையிட்டார். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmiy26w9e02jmo29n0ad10ot6
Checked
Mon, 02/16/2026 - 18:44
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed