புதிய பதிவுகள்2

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகி : மதுஸ்ரீ இசையமைப்பாளா் : சி.சத்யா பெண் : உன் பேரே தொியாது உன்னை கூப்பிட முடியாது நான் உனக்கோா் போ் வைத்தேன் உனக்கே தொியாது அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது அதை ஒருமுறை சொன்னாலே தூக்கம் வாராது அட தினம்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன் நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன் பெண் : ஹோ சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும் சூாியனை நீயும் நினைத்தால் அது இல்லையே பெண் : ஹோ ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும் நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே பெண் : சிலிா்க்கவைக்கும் தெய்வமில்லை மிரளவைக்கும் மிருகம் இல்லை ஒளிவட்டம் தொிந்தாலும் அது பட்டப்போில்லை என் போின் பின்னால் வரும் போ் நான் சொல்லவா பெண் : பொிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும் எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே பெண் : சிறிதான பேரும் அதுதான் சட்டென்று முடிந்தே போகும் எப்படி சொல்வேன் நானும் மொழி இல்லையே பெண் : சொல்லிவிட்டால் உதடு ஒட்டும் எழுதிவிட்டால் தேனும் சொட்டும் அது சுத்த தமிழ் போ் தான் அயல் வாா்த்தை அதில் இல்லை என் போின் பின்னால் வரும் போ் நான் சொல்லவா........! --- உன் பேரே தொியாது ---

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

2 months 2 weeks ago
சி.வெற்றிவேல் · ஜெர்மன் ராணுவத்தைக் கலங்கடித்த The NIGHT WITCHES இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். 1941-ல் ஜெர்மனியின் நாஜிப் படைகள், சோவியத் யூனியனுக்குள் (ரஷ்யா) சூறாவளி போலப் புகுந்தன. கண்ணில் எதிர்ப்பட்ட அனைத்தையும் அழித்தொழித்துவிட்டு முன்னேறினார்கள். ரஷ்ய ராணுவம் திணறியது. அவர்களுக்குப் போதுமான விமானங்கள் இல்லை, விமானிகளும் இல்லை. இந்த இக்கட்டான சூழலில், சோவியத் தலைவர் ஸ்டாலின் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண்கள் மட்டுமே கொண்ட விமானப் படைப் பிரிவுகளை உருவாக்க உத்தரவிட்டார். அதில் மிக முக்கியமானது, 588-வது இரவு நேரக் குண்டுவீச்சுப் படைப்பிரிவு (588th Night Bomber Regiment). இதில் விமானிகள், மெக்கானிக்குகள், கமாண்டர்கள் என அனைவரும் 17 முதல் 26 வயதுடைய இளம் பெண்கள் தான்! இந்தப் பெண்கள் படைக்குக் கொடுக்கப்பட்ட விமானங்கள் என்ன தெரியுமா? நவீன போர் விமானங்கள் அல்ல. Polikarpov Po-2 என்ற பழைய மாடல் விமானங்கள். * இது முழுக்க முழுக்க ’மரக்கட்டைகளாலும் (Plywood), துணிகளாலும்’ செய்யப்பட்டது. * இதன் வேகம் மிகக் குறைவு. ஒரு சாதாரணக் காரை விடச் சற்று வேகமாகப் பறக்கும், அவ்வளவுதான். * இதில் பாதுகாப்புக்காக ஒரு கவசமும் (Armor) கிடையாது. எதிரி ஒரு தோட்டா சுட்டால் கூட விமானத்தில் ஓட்டை விழுந்து தீப்பிடித்துவிடும். * மிக முக்கியமாக, இதில் ’ரேடியோவும் கிடையாது, ராடாரும் கிடையாது, ஏன்... அவசரத்துக்குக் குதிக்க பாராசூட் கூடக் கிடையாது! சுருக்கமாகச் சொன்னால், இவை ’பறக்கும் சவப்பெட்டிகள்’. இவற்றைக் கொண்டுதான் உலகின் மிக நவீனமான ஜெர்மன் விமானப் படையை (Luftwaffe) எதிர்க்க வேண்டும். இந்தப் பழைய விமானங்களை வைத்துக்கொண்டு பகலில் பறந்தால், ஜெர்மன் விமானங்கள் இவர்களைக் குருவி சுடுவது போலச் சுட்டுத் தள்ளிவிடும். எனவே, இவர்களின் களம் ’இரவு’ மட்டும்தான். இவர்கள் கையாண்ட போர்முறை சிலிர்க்க வைப்பது: 1. நிசப்தமான வருகை: இரவு நேரத்தில், ஜெர்மன் முகாம்களுக்கு அருகே மிகத் தாழ்வாகப் பறந்து வருவார்கள். 2. இன்ஜின் ஆஃப்: இலக்கை நெருங்கியதும், விமானத்தின் இன்ஜினை 'ஆஃப்' (Idle Mode) செய்துவிடுவார்கள்! 3. மிதக்கும் மரணம்: இன்ஜின் சத்தம் இல்லாமல், காற்றின் வேகத்தில் மட்டுமே அந்த மரக்கட்டை விமானம் சத்தமின்றி மிதந்து வரும். கீழே இருக்கும் ஜெர்மன் வீரர்களுக்குத் தலைக்கு மேலே ஒரு விமானம் வருவது தெரியவே தெரியாது. 4. தாக்குதல்: சரியான இடத்திற்கு வந்ததும், கைகளால் குண்டுகளை எடுத்துக் கீழே வீசுவார்கள். குண்டு வெடித்த பிறகு, மீண்டும் இன்ஜினை ஆன் செய்துவிட்டுப் பறந்துவிடுவார்கள். அந்தக் காரிருளில், இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு, காற்றைக் கிழித்துக்கொண்டு அந்த விமானங்கள் வரும்போது ஒரு விசித்திரமான சத்தம் (Whooshing sound) கேட்கும். கீழே இருந்த ஜெர்மன் வீரர்களுக்கு இந்தச் சத்தம், சூனியக்காரிகள் தங்கள் துடைப்பத்தில் பறந்து வரும்போது ஏற்படும் சத்தம் போல கேட்டது. பயத்தில் உறைந்த ஜெர்மன் வீரர்கள், இந்தப் பெண்களை ’Nachthexen’ அதாவது ’இரவு நேர சூனியக்காரிகள்’ (Night Witches) என்று அழைத்தார்கள். இந்தப் பெயர் அவர்களுக்கு ஒரு கௌரவப் பெயராகவே மாறிப்போனது. இந்த ’சூனியக்காரிகள்’ ஜெர்மன் ராணுவத்திற்கு ஒரு சிம்மசொப்பனமாக விளங்கினார்கள். * ஒரு இரவில் ஒருவர் குறைந்தது 8 முதல் 18 முறை பறந்து சென்று தாக்குதல் நடத்துவார்கள். * மொத்தமாகப் போரின் முடிவில், இந்தப் பெண்கள் படை 30,000-க்கும் அதிகமான முறை பறந்து, ’23,000 டன்’ குண்டுகளை நாஜிக்கள் மீது வீசியது! * இந்தப் படையிலிருந்த 23 பெண்களுக்கு, சோவியத் யூனியனின் மிக உயரிய விருதான ’சோவியத் யூனியனின் ஹீரோ’ (Hero of the Soviet Union) விருது வழங்கப்பட்டது. போர் என்பது நவீன ஆயுதங்களில் மட்டும் இல்லை; அதை எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியில்தான் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள் The Night Witches. கையில் ரேடியோ இல்லை, பாராசூட் இல்லை, ஓட்டுவது ஒரு மரக்கட்டை விமானம்... ஆனாலும், எதிரிகளின் இதயத்தில் மரண பயத்தை விதைத்த அந்த 'இரவு நேர சூனியக்காரிகள்' வரலாற்றின் மிகச்சிறந்த வீராங்கனைகள்! 'துணிச்சல் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயத்தையும் மீறிச் செயல்படுவதுதான்!' 🔥" #NightWitches #WWII #History #BraveWomen #SovietUnion #AviationHistory #TamilPost #Facts #UntoldWarStories #WomenInWar Voir la traduction

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்   — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 months 2 weeks ago
திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும் November 24, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.. இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் அரசியலில் மீண்டெழுவதற்கு எதிரணி கட்சிகள் பெரும்பான்மை இனவாத அணிதிரட்லை செய்வதற்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தத் தவறப்போவதில்லை என்பதையும் திருகோணமலை சம்பவம் எமக்கு உணர்த்தியது. திருகோணமலை கடற்கரையோரமாக அமைந்திருக்கும் ஸ்ரீ சம்புத்த போதி ரஜமகா விகாரை வளாகத்தில் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர்சிலையை பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிசார் அகற்றினர் என்ற போதிலும், மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் அந்த சிலை அதே இடத்தில் பொலிசாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பௌத்த மத நிகழ்வுகள் இடம்பெற்றன. இரவில் புத்தர் சிலைக்கு எவராவது சேதம் விளைவித்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே பாதுகாப்பு கருதி அதை அகற்றியதாகவும் மீண்டும் அதே இடத்தில் அந்த சிலை வைக்கப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அன்றைய தினம் முன்கூட்டியே அறிவித்திருந்தார். புத்தர் சிலை அகற்றப்பட்ட வேளையில் விகாரை வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலையை பயன்படுத்தி இலங்கையில் பௌத்த மதத்துக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதைப் போன்று எதிரணி கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆவேசமாகக் குரலெழுப்பின. இந்து அல்லது கிறிஸ்துவ சிலை ஒன்று அது வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பொலிசாரினால் அகற்றப்பட்டிருந்தால் இத்தகைய அமர்க்களம் ஏற்பட்டிருக்குமா என்ற கேள்விக்கான பதிலை நாம் சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. பாராளுமன்றத்தில் நவம்பர் 18 ஆம் திகதி திருகோணமலை சம்பவங்கள் குறித்து பேசிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தொடர்பிலானதாக இந்த சர்ச்சை தோன்றுகின்ற போதிலும், வேறு கதையும் அதற்குள் இருப்பதாக கூறினார். சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு வேறு எந்த விவகாரமும் கிடைக்கவில்லை என்பதால் எதிரணியினர் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு புத்தர் சிலை சர்ச்சையை பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்திருக்கும் நிலையில், அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று தாங்கள் கருதுகின்ற இடங்களில் மாத்திரமல்ல, பெளத்தர்கள் வசிக்காத இடங்களிலும் கூட பிக்குமாரில் ஒரு பிரிவினர் புத்தர் சிலைகளை இரவோடிரவாக கொண்டுவந்து வைப்பதும் பிறகு படிப்படியாக அரசாங்கங்களின் அனுசரணையுடன் விகாரைகளை கட்டியெழுப்புவதும் புதிய ஒரு விடயம் அல்ல. சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்ற வேளைகளில் அரச இயந்திரம் சட்டவிரோதமானது என்று அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்ற நடவடிக்கைகளுக்கு துணைபோவதே நடைமுறையாக இருந்துவருகிறது. திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் பொலிசாரின் உதவியுடன் அது கொண்டு வந்து வைக்கப்பட்ட சம்பவத்தையும் அதற்கு அரசாங்கத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தையும் மேற்கூறிய வழமையான நடைமுறையே தொடருகின்றது என்பதற்கான சான்றாக ஏன் கருதமுடியாது என்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் மாத்திரமே பதில் கூற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட எதிரணி அரசியல்வாதிகள் புத்தர் சிலை சர்ச்சை தொடர்பாக கருத்து வெளியிட்டபோது இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை அடிக்கடி சுட்டிக்காட்டியதை காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அந்த முன்னுரிமையை பிக்குமாரில் ஒரு பிரிவினர் அல்லது மதவாத அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் தங்களின் சட்டவிரோதமான அல்லது பௌத்த தர்மத்துக்கு மாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த தவறான முறையில் கேடயமாகப் பயன்படுத்துவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? தாங்கள் எதைச் செய்தாலும் அரசாங்கம் தட்டிக்கேட்க முடியாது என்ற எண்ணத்தை மகாசங்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெளத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுப்பதில் பிக்குமாருக்கு இருக்கும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று கூறும் பிரேமதாச பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான அடாத்தான நடவடிக்கைகளில் பிக்குமாரில் சில பிரிவினர் ஈடுபட்ட எத்தனை சம்பவங்களை பகிரங்கமாக கண்டனம் செய்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும் முன்னுரிமையை சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளுக்கு பிக்குமாரில் ஒரு பிரிவினர் பயன்படுத்துகிறார்கள் என்பது வெளிப்படையானது. கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்கியவர் என்று அறியப்பட்ட பிரச்சினைக்குரிய பிக்கு ஒருவர் புத்தர் சிலை சர்ச்சைக்கு பிறகு கடந்த வாரம் திருகோணமலைக்கு சென்று சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டும் வகையில் பேசியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு சாவாலும் விடுத்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தை நிந்தனை செய்யும் விதத்தில் பேசியதாக நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர் திருகோணமலை சர்ச்சையில் தன்னை ஈடுபடுத்துவதில் வலிந்து நாட்டம் காட்டுகிறார். பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இத்தகைய பிக்குமாரின் முறைகேடான செயற்பாடுகளை ஆதரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றை அவர்கள் எதிர்ப்பதுமில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கெடுதி செய்பவர்களினால் அல்ல, அந்த கெடுதியை தடுக்க எதையும் செய்யாமல் இருப்பவர்களினாலேயே உலகம் ஆபத்தானதாக இருக்கிறது என்ற அறிவியல் மேதை அல்பேர்ட் அயன்ஸ்டீனின் கூற்று நினைவுக்கு வருகிறது. கெட்டவர்களின் வெறுப்பு பேச்சுக்களுக்கும் செயல்களுக்காகவும் மாத்திரமல்ல, நல்லவர்களின் மௌனத்துக்காகவும் இந்த தலைமுறையில் நாம் பச்சாதபப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று அமெரிக்க கறுப்பின தலைவர் மார்டின் லூதர் கிங் கூறினார். சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல. அது இலங்கையின் பெரும்பான்மை இனவாத அரசியலுடன் சமாந்தரமாக வளர்ச்சி கண்ட அருவருக்கத்தக்க ஒரு போக்காகும். ஆனால், சகல சமூகங்களுக்கும் அழிவை ஏற்படுத்திய மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு பின்னரும் கூட, தென்னிலங்கை அரசியல் சமுதாயம் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளத் தவறுவதே பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது. அரசியலில் பெரும் செல்வாக்கைச் செலுத்துவதற்கு பௌத்த மதகுருமார் நாட்டம் காட்டுவதே இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அவர்களின் செயல்கள் புத்தபெருமானின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானதாக இருந்தாலும் கூட, நேரடி அரசியலில் ஈடுபடுவதில் இருந்து அவர்களை தடுக்க மகாநாயக்கர்களினால் கூட முடியாமல் இருக்கிறது. இலங்கையில் பௌத்தம் நடைமுறையில் ஒரு அரசியல் மதமாக மாற்றப்பட்டுவிட்டது. தென்னிலங்கை அரசியல் வரலாற்றில் பெளத்த மதகுருமாரின் செல்வாக்கு பெருமளவுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. இன்று தமிழர்களின் அரசியலிலும் முன்னென்றும் இல்லாத வகையில் மதவாதம் ஊடுருவுகின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் ‘ இந்துத்வா’ அரசியலின் செல்வாக்கே இதற்கு காரணம் எனலாம். சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன இலங்கைச் சமூகம் அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை. ஜனாதிபதி திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வெறுமனே சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாகுபாடான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகளின் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவிக்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகளை போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டினால் மாத்திரமே சமத்துவமான குடிமக்கள் என்ற உணர்வை அந்த மக்கள் மத்தியில் படிப்படியாக ஏற்படுத்த முடியும். சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று. அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துவதில் எதிரணி கட்சிகள் கொண்டிருக்கும் நாட்டத்தை திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை வெளிக்காட்டியிருக்கிறது. தங்களது தவறான ஆட்சிமுறையையும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் மறைப்பதற்காக பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலை தீவிரமாக முன்னெடுத்த முன்னைய ஆட்சியாளர்கள் பொருளாதார ரீதியில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது. மீண்டும் அத்தகைய அணிதிரட்டலை அனுமதித்தால் தொடர்ந்தும் அதே பிரச்சினைகளுடனேயே இலங்கையர்கள் வாழவேண்டியிருக்கும். https://arangamnews.com/?p=12455

வவுனியாவில் பாரிய தீ விபத்து - கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை

2 months 2 weeks ago
வவுனியாவில் பாரிய தீ விபத்து - கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை செவ்வாய், 25 நவம்பர் 2025 06:18 AM வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா - ஹொரவபொத்தானை வீதியில் அமைத்துள்ள சிங்கர் காட்சியறையிலையே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பெருமளவானோரின் பெரும் போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் காட்சியறையில் காணப்பட்ட பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள் என கோடிக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://jaffnazone.com/news/52609

லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி

2 months 2 weeks ago
லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்லான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் சவுத்ஹாலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டன் சவுத்ஹால் பகுதியில் வீதியில் நின்ற இளைஞரை குறிவைத்து சிலர் தாக்கியுள்ளார்கள். அடித்துக் காயப்படுத்திய நபர்கள் அவர் அணைந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரைச் சரமாரியாகத் தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த பாரா மெடிக்ஸ் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சவுத்ஹால் பிரதேசத்தில் ஆப்பிரிக்கர்கள் மற்றும் ருமேனிய நாட்டவர்களும் அதிகம் வசித்து வருகிறார்கள். குறிப்பாக ருமேனிய சமூக இளைஞர்கள் இது போன்ற பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. அவர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் குறிவைத்து செயல்பட்டு வருவதானால் அங்குள்ள இலங்கையர்களும் , இந்தியர்களும் அச்சத்தில் உள்ளலதாக கூறப்படுகின்றது. https://akkinikkunchu.com/?p=350056

பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?

2 months 2 weeks ago
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா? ஜப்பானிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி 2026இல் இடம்பெறுமென கணித்துள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகயில், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகளாவிய சக்தியாக உயரும் ஒரு புதிய தலைவர் உருவாகுவார் என பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த கணிப்பின் படி, அந்த நபர், உலகையே ஆளும் சக்தி கொண்டவராகவும் “உலகின் இறைவன்” அல்லது உலக விவகாரங்களின் மாஸ்டர் என்று கூறக்கூடிய அளவு சக்தி வாய்ந்தவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பல நிபுணர்கள், அது ரஷ்யா விளாடிமிர் புடினாக இருக்க கூடும் என தெரிவித்து வருகின்றனர். அவரது கணிப்புகளின் சில விளக்கங்கள், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து அல்லது ரஷ்யா செல்வாக்கு செலுத்தும் இடத்திலிருந்து ஒரு சக்திவாய்ந்த தலைவர் வெளிப்படுவார் என்று கூறுகின்றன. சர்வதேச பரப்பில் உக்ரைன் – ரஷ்ய போர் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது அமெரிக்காவின் தலையீட்டால் விரைவில் அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீவிர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாபா வங்காவின் இந்த கணிப்பு, முன்னதாக அவரின் கணிப்புக்களில் சில விடயங்கள் நிகழ்ந்துள்ளன என்பதால் நிபுணர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. https://akkinikkunchu.com/?p=350062

12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்தது எரிமலை ; இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவும் சாம்பல்

2 months 2 weeks ago
12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்தது எரிமலை ; இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவும் சாம்பல் 25 Nov, 2025 | 11:22 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பா நாட்டின் அபார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) ஹேலி குப்பி என்ற எரிமலை 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை எரித்திரியா நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது. ஹேலி குப்பி எரிமலை கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித வெடிப்பும் இன்றி அமைதியான இருந்துள்ளது. இந்நிலையில், திடீரென வெடித்து சிதறி எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் நாடுகளில் பரவி, தற்போது வடக்கு அரேபிய கடல் பகுதிக்கு வந்துள்ளது. அதையும் தாண்டி, இந்த சாம்பல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சாம்பல் மேகங்கள் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கம் என்பதால் பாதிப்பிற்கான வாய்ப்பு சற்று குறைவே. இந்த சாம்பல்கள் இந்தியாவை பாதிக்கலாம் என்பதால் ஆகாசா ஏர் இண்டிகோ, கே.எல். எம் ஆகிய விமானங்கள் தங்களது சில விமானங்களை இரத்து செய்துள்ளன. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விமான நிறுவனங்களை சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும், அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றவும், எரிப்பொருள் நிரப்புவதற்கான இடங்களை தேவைப்பட்டால் மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது. ஒருவேளை விமானங்களில் ஏதேனும் சாம்பல் பாதிப்பு இருந்தாலோ, இருப்பதாகவோ நினைத்தாலோ உடனே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231366

யாழ் பல்கலையின் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்

2 months 2 weeks ago
யாழ் பல்கலையின் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் என்பவரே உடன் அமுலாகும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களில் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் பங்கேற்காமை காரணமாக அவரது உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த உறுப்பினரின் எஞ்சிய காலப்பகுதிக்காக 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்து, ஜனாதிபதிக்குப் பரிந்துரைப்பதற்கான தெரிவுக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பேரவையில் வெற்றிடமாக இருந்த இடத்தை நிரப்புவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmie3y3tn01yto29nvwzsozcy

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் ஆற்றுப்படுத்தல் என்ன? - துரைராசா ரவிகரன் எம்.பி. கேள்வி

2 months 2 weeks ago
10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை! ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்றின் உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இதனை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் தாம் பரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர் தினம் தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த ஆனந்தசுதாகருடைய மனைவி ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய இரண்டு பிள்ளைகளையும் பராமரித்து வந்த பாட்டியும் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், அந்த பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியிடம் தாம் எடுத்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விடயத்தில் மனிதாபிமானத்துடன் அணுகி, எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதி செய்து நல்லிணக்கத்தினை வெளிப்படுத்துமாறு தாம் வலியுறுத்தியதாகவும் ரவிகரன் கூறியுள்ளார். https://newuthayan.com/article/10_தமிழ்_அரசியல்_கைதிகளை_விடுவிக்க_கோரிக்கை!

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

2 months 2 weeks ago
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் கள்ளுத் தவறணையில் வைத்து இருவரால் தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர்மீது தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், ஒருவர் நேற்றய தினம் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://newuthayan.com/article/கொலையுடன்__தொடர்புடைய_சந்தேகநபர்__கைது!

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

2 months 2 weeks ago
இந்த பேச்சு வார்த்தைகள் இனவாத சிங்களம் தானாக திருந்தி நடைபெற்றதா ? இதற்குரிய பதில் உங்களிடம் இருந்து நேர்மையாக வரும் என்று நான் நம்பவில்லை .

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

2 months 2 weeks ago
புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட பிரிவினைவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள் – கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல், பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு விரோதமானவையாக இருப்பதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றிருக்கும் இஸபெல் கத்ரின் மார்டின் திங்கட்கிழமை (24) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் விஜித்த ஹேரத், புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல், பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவித்தல், இலங்கையில் இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இடமளித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியதாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி கனடாவில் வாழும் தரப்பினரின் இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு விரோதமானவையாக இருப்பதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர் இஸபெல் கத்ரின் மார்டின், ‘தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்டதொரு அமைப்பாகவே இருக்கின்றது. அதேபோன்று விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சின்னங்களையோ அல்லது பிரிவினைவாத சிந்தனைகளையோ கனேடிய மத்திய அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது. அத்தோடு இலங்கையின் இறையாண்மை மற்றும் கௌவரம் என்பவற்றுக்கு மதிப்பளிப்பதற்கு கனடா உறுதிபூண்டிருக்கின்றது’ எனத் தெரிவித்ததாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் அவரது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://www.samakalam.com/புலிகளின்-சின்னத்தை-அங்க/

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு!

2 months 2 weeks ago
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு! adminNovember 25, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் நேற்றையதினம் திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டது. 13 ஆசனங்களை கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபையில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 4 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா 03 ஆசனங்களையும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2 ஆசனங்களையும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. அந்நிலையில், தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்றைய தினம் நடைபெற்ற சபை அமர்வில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தபோது அது தோற்கடிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் இருவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஒருவருமாக மூவர் வாக்களித்தனர். வரவு செலவு திட்டத்துக்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நால்வரும் தேசிய மக்கள் சக்தியின் மூவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலா ஒருவர் என 10 பேர் வாக்களித்தனர். கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது திருவுளச்சீட்டு மூலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா தவிசாளராகவும் உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செபஸ்தியான் பிள்ளை லெனின் ரஞ்சித்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/223021/

உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை; பிறப்புறுப்பு சிதைப்பினால் 230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு

2 months 2 weeks ago
உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை ; பிறப்புறுப்பு சிதைப்பினால் 230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு - பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் அதிர்ச்சித் தகவல் 25 Nov, 2025 | 11:23 AM உலகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் அர்த்தபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தொடர்பில் மேலும் கூறுகையில், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளினால் பொதுவாக மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாதிப்படைகின்றனர். பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும், பேரழிவு தரும் மற்றும் நீண்ட கால பாதகமான விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த விளைவுகள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். மேலும், கடுமையான சந்தர்ப்பங்களில் மரணத்துக்கும் வழிவகுக்கும். பொதுவாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள், அதிகார கட்டமைப்பாட்டுக்கள், சமய சம்பிரதாய நம்பிக்கைகள் மற்றும் பாரபட்சங்கள் இவ்வாறானவை வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. சமூகத்தில் பாதிப்புறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகளவில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான சில முக்கிய தரவுகள் குறிப்பிடவேண்டும். உலகளவில் அண்ணளவாக மூன்று பெண்களில் ஒருவர், அல்லது உலகளவில் 736 மில்லியன் பேர் நெருங்கிய துணைவர், துணைவர் அல்லாத நபரால் அல்லது இருவராலும் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர். இந்த புள்ளிவிபரம் இரண்டு தசாப்தங்களாக பெரும்பாலும் மாறாமல் உள்ளது. பெண் கொலை : 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். இது சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 5க்கும் மேற்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரால் கொல்லப்படுவதற்கு சமமான தரவாகிறது. குழந்தை திருமணம்: ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்கு முன்பே 12 மில்லியன் பெண்கள் அல்லது நிமிடத்துக்கு சுமார் 23 பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். மேலும், இந்த பெண்கள் வீட்டு வன்முறைக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) : இன்று உயிருடன் இருக்கும் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர். இது 31 நாடுகளில் அதிகமாக செய்யப்படுகிறது. வன்முறையை அனுபவிக்கும் பெண்களில் 40% க்கும் குறைவானவர்களே ஏதாவது சில வகையான உதவிகளை நாடுகிறார்கள். மிகக் குறைவானவர்களே காவல்துறை அல்லது சுகாதார சேவைகள் போன்ற முறையான நிறுவனங்களை அணுகுகிறார்கள். பெரும்பாலும் பயம் மற்றும் களங்கம் காரணமாக இவர்கள் இதனை யாரிடமும் கூறுவதில்லை. மோதல், மனிதாபிமான நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் அபாயத்தையும் பரவலையும் அதிகப்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலைகளில் பெண்கள் அதிக விகிதாசாரத்தில் பாதிக்கப்படுகின்றனர். பால்நிலை அடிப்படையிலான வன்முறை தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க செலவுகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஆண்டு செலவு EUR 366 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய பெண்கள், பழங்குடி பெண்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள் அதிகமாக இத்தகைய வன்முறைக்கு முகங்கொடுக்கின்றனர். 60%க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்னும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் பலாத்கார சட்டங்கள் இல்லை. மேலும், உலகின் பெண் சனத்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள் சைபர் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள். சமூகத்தின் எல்லா பிரிவினரும் இந்த பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிர்வினை ஆற்றவேண்டியது கட்டாயமாக உள்ளது. விசேடமாக ஆண்களும் சிறுவர்களும் தீங்கு விளைவிக்கும் ஆணாதிக்க விதிமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கு சவால்விடுவதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதிலும் முடிவுக்குக் கொண்டுவருவதிலும் சுறுசுறுப்பான மற்றும் பொறுப்புணர்வுள்ள பங்காளிகளாக மாற வேண்டும் என்று நான் எல்லா அன்னைகளுக்கும் சிறுவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். வன்முறை என்பது மனித உரிமைகளை மீறுவதாகும்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது ஒரு பரவலான மனித உரிமைகள் பிரச்சினை என்றும் அது வாழ்க்கையின் இயற்கையான, இயல்பான அல்லது தவிர்க்க முடியாத பகுதி அல்ல என்றும்; அதை நிறுத்த முடியும், நிறுத்தவேண்டும் என்றும் நாம் நமது நண்பர்கள், சமூக வட்டங்களில், நமது முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நாம் பிரச்சாரம் செய்வோம் என அழைப்பு விடுக்கின்றேன். ஆண்கள் ஒரு அடி முன்வைக்க வேண்டும் : "எல்லா ஆண்களும்" வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இயல்பாக்கப்பட்ட நிலையிலேயே உலகில் அனைத்து ஆண்களும் வாழ்கிறார்கள் என்றும், இதனால் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க நம் அனைத்து ஆண்களுக்கும் பொறுப்பு உள்ளது. நாம் நமக்கும் சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் ஆண்மைத்துவ சிந்தனைகள், எண்ணக்கருக்கள், நம்பிக்கைகளுக்கு சவால் செய்வோம் : ஆண்மைத்துவம் என்பதே வன்முறை, ஆதிக்கம் செலுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் வரையறைகளை கொண்டிருப்பதுதான் என்ற விடயங்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிராகரித்து, அதற்கு பதிலாக கவனிப்பு, இரக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற மதிப்புகளைத் தழுவ (உள்வாங்க)வேண்டியதன் அவசியம் நமது செய்தியின் மையக்கூறு ஆகும். பெண்ணிய இயக்கங்களை, சிந்தனைகளை ஆதரிப்போம் : ஆண்களும் சிறுவர்களும் பாலியல் அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை வழிநடத்தும் பெண்ணிய அமைப்புகள் மற்றும் பெண்ணிய இயக்கங்களின் பொறுப்புள்ள பங்காளியாக இருக்க நாம் நமது ஆண் நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடனான உரையாடலை ஊக்குவிப்போம். அனைத்து மட்டங்களிலும் செயற்படுவோம் : நாம் எம்முடன் தொடர்புபட்ட தனிநபர், சமூகம் மற்றும் அமைப்பு ரீதியான எல்லா மட்டங்களிலும் நடவடிக்கை எடுக்க முன்வருவோம். இதில் பாலியல் ரீதியிலான வன்முறைகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் மற்றும் வன்முறையின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் வலுவான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை ஆதரித்து வாதாடலும் அடங்கும். பார்த்தும் பாராதிருக்கும், கேட்டும் கேளாதிருக்கும் மௌனத்தைக் கலைப்போம் : துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேசவும், துஷ்பிரயோகம் செய்பவர்களை நிராகரிக்கவும், புகாரளிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவோ அல்லது சாக்குப்போக்கு சொல்லவோ கூடாது என்று நாம் நமது ஆண் சகாக்கள் மற்றும் நண்பர்களை ஊக்குவிப்போம். இதனூடாக நாம் ஒரு அடி எடுத்து வைத்து பால்நிலை அடிப்படையிலான வன்முறையை முடிவுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231371

'அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு' - எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?

2 months 2 weeks ago
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை? பட மூலாதாரம், Getty Images 25 நவம்பர் 2025, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இன்று (25/11/25) அதிகாலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்றோடொன்று செயல்படும் மூன்று சுழற்சிகள் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா நேற்று (நவம்பர் 24) செய்தியாளர்களை சந்தித்து வானிலை குறித்த தகவல்களை அளித்தார். அப்போது, மூன்று வெவ்வேறு சுழற்சிகள் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். அந்தமான் கடல் பகுதி: நவம்பர் 23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 24ம் தேதி (நேற்று) நிலவரப்படி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். வங்கக்கடல் பகுதி: நவம்பர் 23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது. அரபிக்கடல் பகுதி: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றைய (நவம்பர் 24-ஆம் தேதி) நிலவரப்படி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதுகுறித்துப் பேசிய அமுதா, "இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றார். பட மூலாதாரம், Getty Images அடுத்த சில நாள்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யக்கூடும்? நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 27: தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது நவம்பர் 30: திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை "ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்" என்று கூறிய அமுதா, தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நவம்பர் 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்" என்றும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgl6403wz6ko

நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது!

2 months 2 weeks ago
25 Nov, 2025 | 10:51 AM திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ஹப்புத்தளை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 41 மற்றும் 44 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு திருகோணமலை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/231365

காதல் முறிவு; பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

2 months 2 weeks ago
25 Nov, 2025 | 09:56 AM யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பாடசாலை மாணவி அதே பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனுடன் 2 வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், திடீரென ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/231358
Checked
Fri, 02/13/2026 - 08:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed