புதிய பதிவுகள்2

நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

2 months 2 weeks ago
நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலின் பிடியில் சிக்கியுள்ள மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள் 24 Nov, 2025 | 01:56 PM நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை இலக்குவைத்து, ஆயுததாரிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில், 300க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலையொன்றினுள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பலொன்று நுழைந்துள்ளது. அந்த கும்பல் துப்பாக்கிமுனையில் 100க்கு மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர், தொடர்ந்த விசாரணையில் 303 சிறுவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் என 315 பேர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த திருப்பலி ஆராதனையின் நிறைவுவேளையில், புனித பாப்பரசர் லியோ, ஆயுததாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகளை விடுவிக்குமாறு சபை முன்னிலையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40 பேரை இந்த பயங்கரவாத கும்பல் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றதாகவும் அவர்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பின்னர், எஞ்சிய 38 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) வடகிழக்கு நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் 5 பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கடத்தப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உயிருடன் மீட்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து, கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் துப்பாக்கிதாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்நாட்டு கிறிஸ்தவ சங்கம் நேற்று (23) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (21) மற்றும் சனிக்கிழமை (22) ஆகிய இரு தினங்களிலும் 10 - 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஆயுததாரிகளின் பிடியிலிருந்து தனித்தனியாக தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தமது பெற்றோர்களை சென்றடைந்துள்ளதாகவும் நைஜீரிய கிறிஸ்தவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இன்னும் 253 பாடசாலை மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231278

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய இராணுவ தளபதி பலி

2 months 2 weeks ago
24 Nov, 2025 | 02:39 PM லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு முக்கிய இராணுவ தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெய்ரூட்டின் தெற்கு புறநகரான ஹாரெட் ஹ்ரெய்க் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ஐந்து பேரில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட ஹெய்தம் அலி தபதாபாயும் ஒருவராவார். மேலும் குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2024 நவம்பர் மாதம் இடைநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இஸ்ரேல் கொன்ற மிகப்பெரிய ஹிஸ்புல்லா தளபதி எனக் குறிப்பிடப்படுகிறது. தெற்கு லெபனானிலும், பாலஸ்தீன அகதி முகாம்களிலும் இஸ்ரேல் தினசரி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. https://www.virakesari.lk/article/231262

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 months 2 weeks ago
ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு கடினமான குழு, இந்தியாவுக்கு இலகுவான குழு; ஒரே குழுவில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 04:44 PM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் கூட்டாக நடத்தப்படவுள்ள 10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணை வரவேற்பு நாடுகளான இலங்கை கடினமான குழுவிலும் இந்தியா இலகுவான குழுவிலும் இடம்பெறுவதனை உத்தியோகப்பற்ற தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை, பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரே குழுவில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். உலகம் முழுவதும் கிரிக்கெட்டை வியாபிக்கச் செய்யும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குறிக்கோளுக்கு அமைய 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது. 2022இல் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்ட முறைப்படியே இந்த வருட உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படும். இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும். அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசையில் 8ஆம் இடத்தில் உள்ள இணை வரவேற்பு நாடும் முன்னாள் சம்பியனுமான இலங்கை, ஐசிசியில் பூரண அந்தஸ்துபெற்ற அவுஸ்திரேலியா (2), ஸிம்பாப்வே (11), அயர்லாந்து (12) ஆகிய அணிகளுடன் சற்று கடினமான குழுவில் இடம்பெறுகின்றது. இந்தக் குழுவில் ஓமான் (20) அணியும் இடம்பெறுகின்றது. பிரதான வரவேற்பு நாடும் நடப்பு ரி20 உலக சம்பியனுமான இந்தியாவுடன் பூரண அந்தஸ்துபெற்ற பாகிஸ்தான் (7) ஒரே குழுவில் இடம்பெறுகின்றது. இந்த இரண்டு அணிகளுடன் நெதர்லாந்து (13), நமிபியா (15), ஐக்கிய அமெரிக்கா (18) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எவ்வித சிரமும் இன்றி சுப்பர் 8 சுற்றில் கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு குழுவில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இங்கிலாந்து (3), மேற்கிந்தியத் தீவுகள் (6) ஆகியவற்றுடன் பங்களாதேஷ் (9), நேபாளம் (17), இத்தாலி (28) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 2024இல் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியனான தென் ஆபிரிக்காவுடன் நியூஸிலாந்து (4), ஆப்கானிஸ்தான் (10), ஐக்கிய அரபு இராச்சியம் (16), கனடா (18) ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. ஐசிசிக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான லீக் போட்டி கொழும்பில் நடைபெறும். கிரிக்பஸ் இணையத்தளத்திற்கு அமைய மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அஹமதாபாத் ஆகிய இந்திய மைதானங்களிலும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கு, கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய இலங்கை மைதானங்களிலும் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படும். ஒருவேளை பாகிஸ்தான் இறுதிவரை முன்னேறினால் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அரை இறுதியும் இறுதி ஆட்டமும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினால் அரை இறுதிகள் மும்பையிலும் கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலும் நடைபெறும். இதில் மாற்றங்கள் ஏற்படாது என நம்பப்படுகிறது. ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நாளை 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231307

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

2 months 2 weeks ago
கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர் Nov 24, 2025 - 04:51 PM இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல் மற்றும் இலங்கையில் உள்ள இன சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தை கனடிய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். கனடாவில் உள்ள சில உள்ளூர் குழுக்களின் இத்தகைய செயற்பாடுகள், தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக எமது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர், கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே இருப்பதாக தெரிவித்தார். அந்த அமைப்புடனோ அல்லது பிரிவினைவாத கொள்கைகளுடனோ தொடர்புடைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இலங்கையின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் கனடா தொடர்ந்தும் மதிப்பளித்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmid23hsu01yao29nv7ewnbc5

'அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு' - எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?

2 months 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images 24 நவம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா இன்று (நவ. 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறிய தகவல்கள்: அந்தமான் கடல் பகுதி நவ.23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று, 24ம் தேதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். வங்கக்கடல் பகுதிகள் நவ.23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது. அரபிக்கடல் பகுதிகள் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? கனடா சென்ற பிறகு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஏன் 'காணாமல் போகிறார்கள்'? 'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள் உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா? End of அதிகம் படிக்கப்பட்டது "இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்." என்றார் அமுதா. மேலும், அவர் "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழையும், 15 இடங்களில் கனமழையும் 76 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது." என்றார். மேலும் அடுத்துவரும் நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கையையும் அவர் வெளியிட்டார். அதன்படி, நாளை 8 மணி வரை: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 27 : தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது நவ. 30 திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், "ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும். தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றிலிருந்து நவ. 29ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்." என்றார் அமுதா. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. ''இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும். இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும்'' என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழை எச்சரிக்கை இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை? கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். மேலும், மழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதற்கிடையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25ம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லையில் கனமழை நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் நெல்லை வந்தடைந்தனர். குற்றாலம் அருவி தென்காசி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் பேருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrj39j49wlo

தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை!

2 months 2 weeks ago
தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை! கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று சபையில் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. எனினும் பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த 21ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன், மன்முணை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ், போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் கிராமத்து பொதுமக்கள் என பலர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததுடன் எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர். குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மக்களின் எதிர்ப்பினையும் மீறி பெயர்ப்பலகையை நடுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது போரதீவுப்பற்று பிரதேசசபையினர் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் இரு பகுதியினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனை மீறி தொல்லியல்திணைக்களம் பெயர்பலகையினை நாட்டிச் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி மாலை பெயர்ப் பலகை பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட உறுப்பினர்களும் பொதுமக்களும் இணைந்து அகற்றியுள்ளனர். போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து அதனை அகற்றியிருந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த தொல்பொருள் திணைக்களத்தினர் நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இதன்போது திகிலிவெட்டை. சாராவெளி, பெண்டுகள் சேனை, முருங்கன் தீவு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளும் அகற்றப்பட்டன. 22ஆம் திகதி இந்த செயற்பாடு மேற்கொள்ளும் போது இரவு நேரம் ஆனதை தொடர்ந்து பெயர்பலகைகள், அதற்றும்பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்றையதினம் அதாவது 23ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பிரதேச சபையின் அனுமதியின்றி இவை அமைக்கப்பட்டதாகவும் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மொழியை முன்னுரிமைப்படுத்தாமல் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் என்றும் தொல்லியல் என்று இடங்களை அடையாளப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் குறித்த பிரதேசங்களை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தவிசாளர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்நிலையிலேயே இந்த சம்பவம் இன்றைய நாடாளுமன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் பேர்து பேசுபொருளாக விவாதிக்கப்பட்டிருந்தது. கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் அறிவித்தார். https://athavannews.com/2025/1453759

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை - பௌத்த விகாரையை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?

2 months 2 weeks ago
தாங்கள் வைத்த நெருப்பு மூண்டு எரியவில்லையே என்கிற ஏமாற்றம் சஜித்துக்கு. அதனால் அதை மீண்டும் மீண்டும் ஊதுகிறார். இனவாதத்தை தூண்ட பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாம். யார் அவசரமாக சிலையை நிறுவியது? யாருமே இனவாதம் பேசவுமில்லை, தூண்டவுமில்லை. தாங்களே இனவாதத்தை தூண்ட செய்துவிட்டு, அது தூண்டவில்லை என்பதற்காக சஜித் பேசிப்பேசி தூண்டுகிறார். புத்தரை அந்த இடத்திலிருந்து எடுத்தது பிழையென்கிறார், வைத்தபின்னும் பிழையென்கிறார். இல்லாத ஒன்றுக்கு மன்னிப்பு கேட்க்கிறார். நினைத்தது நடக்கவில்லையேயென்கிற பொருமல். இன்னொன்றும் சொல்கிறார், பௌத்தத்துக்கு முன்னுரிமையாம், அவ்வாறே ஏனைய மதங்களுக்கும் சம உரிமையாம். அப்படியெனில் பௌத்தத்துக்கு எப்படி முன்னுரிமை? இவர்களெல்லாம் ஜனாதிபதியானால் நாடு எங்கே போகும்? தமது திறமை தெரியாமல் ஜனாதிபதிகனவு. எல்லோரின் கனவிலும் மண்ணள்ளி வைக்கப்போகிறார் அனுரா, ஜனாதிபதி முறை ஒழிப்பு!

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

2 months 2 weeks ago
ஐயப்பன் கடவுள் திருமணம் ஆகாதவர் என்றபடியால் இந்திய பெரியவர்கள் தீர்க்க தரிசனத்துடன் கடவுளுக்கு செய்த பாதுகாப்பு ஏற்பாடு தான் பெண்கள் உள் நுழைய முடியாது மற்றது பெண்களுக்கு மாதவிடாய் வரும். அந்த முடிவை நீதிமன்றம் அவமதித்ததால் தான் இப்படி 😭

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ..........! தமிழ் பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : சோனு நிகம் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும் ஆண் : கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும் ஆண் : விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே பெண் : வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன் பெண் : உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஓ… தோள் சாய்கிறேன் ஆண் : இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை பெண் : முதல்முறை இந்த இளமையின் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை ஆண் : குடையோடு நான் போனேன் வழியினில் ஏனோ நனைகின்றேன் பெண் : கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன் ஆண் : என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய் ஆண் : சிரிப்பிலே உன் சிரிப்பிலே சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை பெண் : உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை ஆண் : உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே பெண் : உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே ஆண் : என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய் ........! --- விழியில் உன் விழியில் ---

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 2 weeks ago
இந்த நிகள்வின் ஆரம்ப நாளன்று இளங்குமரன் எம் பியின் பேட்டி ஒன்று ஒரு தமிழ் யுரியுப்பில் இருந்தது.யாராவது எந்த யுரியுப் என்று சொல்ல முடியுமா.

இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!

2 months 2 weeks ago
இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்! இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், மீதமுள்ள பணம் திரும்ப வராதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைச்சும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்தும். மேலும், முதல் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453670

பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்!

2 months 2 weeks ago
பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்! பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம், பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலின் விளைவாக மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துணை இராணுவக் கட்டிடத்தின் பிரதான வாயிலில் இரண்டு குண்டுவெடிப்புகளுடன் தாக்குதல் தொடங்கியது. ஆயுதமேந்திய நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. துணை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகள் பதிலடி கொடுத்து, வளாகத்திற்குள் இருந்த மூன்று தாக்குதல்காரர்களை சுட்டுக் கொன்றனர். இதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைக்காக பெஷாவரில் உள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453698

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 2 weeks ago
உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம்; அமெரிக்கா பாராட்டு! ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான அமெரிக்க முன்மொழிவைப் பற்றி விவாதித்த பின்னர் மிகக் குறைந்த விவரங்களை மட்டுமே அவர்கள் வழங்கினர். இந்த திட்டம் மொஸ்கோவிற்கு மிகவும் இணக்கமானதாக இருப்பதாக வொஷிங்டனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் பலரிடையே கவலையைத் தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ஜெனீவாவில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார். ஆனால் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து மிகக் குறைந்த தகவல்களையே அவர் வழங்கினார். இந்தத் திட்டத்திற்கு உக்ரேன் பதிலளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை நிர்ணயித்த காலக்கெடுவையும் அவர் குறைத்து மதிப்பிட்டார். அதிகாரிகள் விரைவில் மோலை நிறுத்தப்படுவதைக் காண விரும்புகிறார்கள் என்றும், அதிகாரிகள் திங்கள்கிழமை (24) மற்றும் அதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் என்றும் கூறினார். உயர் மட்ட அதிகாரிகள் இறுதியில் இதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். இந்த நிலையில், சுமார் நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவால் வரையப்பட்ட 28-புள்ளி திட்டம் உக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, தனது நாடு தனது இறையாண்மை உரிமைகளுக்காக எழுந்து நிற்பதற்கும் அதற்குத் தேவையான அமெரிக்க ஆதரவைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு கடுமையான தேர்வை எதிர்கொள்ளக்கூடும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் அவர், தனது மக்கள் தங்கள் வீட்டை (நாட்டை) எப்போதும் பாதுகாப்பார்கள் என்றும் சபதம் செய்தார். ஜெலென்ஸ்கி பல சந்தர்ப்பங்களில் திட்டவட்டமாக நிராகரித்த பல ரஷ்ய கோரிக்கைகளை இந்த திட்டம் ஏற்றுக்கொள்கிறது, இதில் பெரிய பகுதிகளை விட்டுக்கொடுப்பதும் அடங்கும். அதேநேரம், முன்னதாக, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு வியாழக்கிழமை காலக்கெடுவை ட்ரம்ப் நிர்ணயித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை ரூபியோ அந்த காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்று கூறினார். இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி விவாதிக்க ஜெலென்ஸ்கி இந்த வாரம் விரைவில் அமெரிக்காவுக்கு பயணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1453677

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!

2 months 2 weeks ago
தொண்டைமானுக்கு.... யாருடன் ஜாலியாக இருப்பது, யாரை திருமணம் செய்வது என்பதில்... கொஞ்சம் கவனமாகவே இருந்திருப்பார். ஏனென்றால்... அவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். வரும் வாரிசையும் சிந்தித்து இருப்பார். 😂

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 2 weeks ago
செலென்ஸ்கி மைண்ட் வாய்ஸ்: "எப்பிடி இருந்த நான், இப்பிடியாயிட்டேன்". 🤣

இலங்கையின் தேசிய முயற்சிகள் சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் ஒத்துப்போகின்றன - இலங்கைக்கான சீனத்தூதுவர் தெரிவிப்பு

2 months 2 weeks ago
24 Nov, 2025 | 10:02 AM (நமது நிருபர்) சீனா புதிய நீண்டகால வளர்ச்சிக்கான பாதை வரைபடத்தை முன்வைத்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் 15ஆவது சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் இலங்கையின் தேசிய முயற்சிகள் ஒத்துப்போகின்றன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவினுடைய நான்காவது முழு அமரவு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்றிருந்தது. அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்பு' எனும் தலைப்பிலான முடிவுகள் குறித்த விளக்கக்காட்சிகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வ கொழும்பு ஷங்கிரில்லா ஹொட்டலில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் குழுவின் நான்காவது முழுமையான அமர்வு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த அமர்வில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சீனா, 1953ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டு திட்டத்தைத் ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து செயற்படுத்துகிறது. குறிப்பாக சோசலிசத்தின் முக்கிய அரசியல் பலமாக விளங்குவதை நோக்கமாக கொண்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த ஐந்தாண்டு திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். இதனால் சீனா ஏழ்மை நிலையிலிருந்து அனைத்து வகையிலும் மிதமான செழிப்பு கொண்ட சமூகமாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கைவிட்ட நிலையில், சீனா மட்டும் தனது கட்டமைப்பைச் செம்மைப்படுத்தி, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியை அடைந்து முன்மாதிரியாகத் திகழ்கிறது. 14ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், சீனா சராசரியாக 5.5சதவீதமான ஆண்டு வளர்ச்சியைத் தக்கவைத்ததுடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025க்குள் 19 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனா தனது உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை முக்கிய உந்து சக்தியாக கருதுவதோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் சீனா உலகிலேயே இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது. நாட்டின் வனப்பரப்பு 25சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறன் சுமார் 60சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில், தனிநபர் வருமானம் 2024இல் 41,000 யுவானாக உயர்ந்துள்ளதுடன், வறுமை ஒழிப்பும் , வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியன முன்னேற்றத்தை கண்டுள்ளன. எதிர்வரும் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம் ஏழு முக்கிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு இலக்குகளைக் கொண்டுள்ளது. உயர்தர வளர்ச்சி, விஞ்ஞான, தொழில்நுட்பத் தற்சார்பு, புதிய திருப்புமுனை சீர்திருத்தங்கள், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், 'அழகிய சீனாவை' உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த இலக்குகளின் மூலம், 2035ஆம் ஆண்டுக்குள் சீனாவின் தனிநபர் மொத்த உற்பத்தியானது ஒரு நடுத்தர-நிலை நாட்டினுடைய சூழலை எட்ட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா தனது புதிய வளர்ச்சியைப் அனைத்து நாடுகளுக்கும் புதிய வாய்ப்பாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. அந்தவகையில் பரஸ்பர இருதரப்பு முதலீட்டிற்கு அதிக வாய்ப்புக்களை உருவாக்குவதும், ஒN பாதை மற்றும் மண்டலம் ஒத்துழைப்பை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது. இலங்கையின் கிளீன் சிறிலங்கா, டிஜிட்டல் மாற்றம், கிராமப்புற மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துடன் இணைந்து செல்கின்றன.. துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், இரு நாடுகளின் மக்களுக்கும் அதிக நன்மைகளைக் கொண்டுவரவும், ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்பவும் சீனா தயாராக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/231259

நவம்பர் 2025 - இன்றைய வானிலை

2 months 2 weeks ago
இன்றும் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை! Nov 24, 2025 - 06:15 AM நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmicfe86c01x2o29n0b9urn8c
Checked
Fri, 02/13/2026 - 05:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed