3 months 1 week ago
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmh66cbsr017cqplp06gyyxes
3 months 1 week ago
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி 25 Oct, 2025 | 06:42 PM ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி. அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ஓட்டத்தைப்பெற்று கையை காட்டினார். ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 100 ஓட்டங்களைக் கடந்தது. இதன் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி 54 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைப்பெற்றவரகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த குமார் சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார். சங்கக்கரா 14,234 ஓட்டங்களை எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் 18426 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். https://www.virakesari.lk/article/228668
3 months 1 week ago
அததெரண கருத்துப் படம்.
3 months 1 week ago
அண்ணை, எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தபோது லைற்றா தூங்கிவிட்டேன்!(அதனுடைய ரீங்காரத்தையும் தாண்டி) இடுப்பையும் கால்களையும் ஸ்கான் செய்தார்கள்.
3 months 1 week ago
வினா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடத்தை அவுஸ்திரேலியா அணி பிடிக்கும் என 9 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 59 புள்ளிகள் 2) ஏராளன் - 54 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 54 புள்ளிகள் 4) ரசோதரன் - 54 புள்ளிகள் 5) புலவர் - 52 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 52 புள்ளிகள் 7) சுவி - 50 புள்ளிகள் 8) கிருபன் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) கறுப்பி - 48 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 12) வாதவூரான் - 46 புள்ளிகள் 13) வசி - 44 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 15) வாத்தியார் - 42 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 63).
3 months 1 week ago
27 ஆம் கேள்விக்கு கறுப்பி அவர்கள் அவுஸ்திரேலியாவைத்தான் தெரிவு செய்து இருக்கிறார் வினா 27) அவுஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 57 புள்ளிகள் 2) ஏராளன் - 52 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 52 புள்ளிகள் 4) ரசோதரன் - 52 புள்ளிகள் 5) சுவி - 50 புள்ளிகள் 6) கிருபன் - 50 புள்ளிகள் 7) புலவர் - 50 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 11) வாதவூரான் - 46 புள்ளிகள் 12) கறுப்பி - 46 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 14) வசி - 42 புள்ளிகள் 15) வாத்தியார் - 40 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 61).
3 months 1 week ago
கனடா, மொரிஸியஸ் போன்று இதுவும் ஒரு மைல்கல்லின் தொடக்க புள்ளி.
3 months 1 week ago
கந்தப்பு புள்ளிகள் போடும் போது தான் அனேகமாக எந்த அணியை தெரிவு செய்தேன் என்று கண்டு கொள்வேன்.
3 months 1 week ago
இறுதி அணிக்கு எதை தெரிவு செய்தேன் என்று எனக்கே குழப்பம்
3 months 1 week ago
பொத்தாம் பொதுவாக கரீபியன் என்று கூறினாலும் வெனிசூலா தான் கண். அங்கு ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.
3 months 1 week ago
அப்ப இந்தக் கொலை அரசாங்கமே செய்ததாக ஐயா முடிவு எடுத்துவிட்டாரோ?
3 months 1 week ago
இந்த சபைகள் இருந்ததாலேயே சரணடைந்து புலிகளை போட்டுத் தள்ள உங்களுக்கு சுலபமாக இருந்தது.
3 months 1 week ago
ஐஸ் வேண்டாம் என்றதால் கவிதை எழுத முடிந்தது.
3 months 1 week ago
போட்டிக்கு நாமும் தொடங்கணுமில்ல. இது தான் பொருளாதார படிப்பு. படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
3 months 1 week ago
மிக்க நன்றிகள். நன்றிகள்.
3 months 1 week ago
அப்படி என்றால் கடைசி இலக்கம் எனக்காக காத்திருக்கிறதா டோன் வொறி கறுப்ஸ். நானும் தென்னாபிரிகாவையே தெரிவு செய்துள்ளேன். பையன் கவனிக்கவில்லை என்று எண்ணுகிறேன். எப்படியும் தலைவர் கந்தப்பு பிடித்துவிடுவார்.
3 months 1 week ago
அண்மையில் மறதி காரணமாக தலையை ஸ்கான் செய்தார்கள். எல்லா விளக்கங்களும் சொல்லி கையில் ஒரு கருவியும் தந்து ஏதாவது அவசரம் என்றால் அழுத்தச் சொன்னார்கள். சரி என்று உள்ளே தள்ளிவிட்டதும் ஒரு நிமிடத்தால் எனக்கு ஏதோ மூச்சுவிட முடியாத மாதிரி அந்தரமாக இருந்தது. மொத்தமாக 15 நிமிடம் ஆகும் என்று முன்னரே சொல்லியிருந்படியால் இது வேலைக்கு ஆகாது என்று தந்த கருவியை அழுத்தினேன். உடனேயே வெளியே இழுத்து என்னாச்சு என்று 2-3 பேர் ஓடிவந்தார்கள். மூச்சு விடமுடியாமல் அந்தரமாக உள்ளது என்றேன். சரி உனக்கு முடியாவிட்டால் இன்னும் ஒருநாளுக்கு வா என்றார்கள். இது முன்னரே செய்த அனுபவம் இருந்தபடியால் எங்கே தவறு செய்துவிட்டேன் என்பதை உடனேயே புரிந்து கொண்டேன். வேண்டாம் திரும்ப அனுப்பு நான் தயார் என்றேன். சந்தேகத்தில் உண்மையாவா என்று திரும்ப திரும்ப கேட்டார்கள். இந்த தடவை வாசலில் போகும்போதே கண்களை இறுக மூடிவிட்டேன்.முடியும்வரை கண்ணைத் திறக்கவே இல்லை. எதுவித பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததும் ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள்.
3 months 1 week ago
Puthiyamaadhavi Sankaran · மூதாட்டி கற்றுக் கொடுத்த வியாபார தர்மம். மகாராஷ்டிரா நாக்பூர் அருகே அந்த மூதாட்டி விற்கும் காரி -டோஸ்ட் ரொம்ப நல்லாயிருக்கும் என்று தோழர் காம்ப்ளே எங்களை மாலை நேரத்தில் அழைத்துச் சென்றார். டோஸ்ட் வாங்கியாச்சு. இப்போ அதை முக்கி சாப்பிட சூடான சாய் வேணும். நான் என் பொருளாதரப் புத்தியை அவளிடம் காட்டினேன். " மெளசி, ஆஃப் சாயா பி தேனேக்கா" நீங்க எங்களுக்கு தேநீரும் கொடுக்கணும். டீயும் சேர்த்து விற்பனை செய்தால் நல்லா விற்பனை ஆகுமே" இது நம்ம படிச்ச பொருளாதர தொழில் அபிவிருத்தி. அந்த மூதாட்டி கண்கள் புன்னகைக்க சொன்னாள்.... " பேட்டி.. பக்கத்தில ஒருத்தர் சாய் விக்கிறார் பாரு. அவரு குடும்பமும் பிழைக்கணும்" நான் திரும்பிப் பார்த்தேன். எதிரே அந்த மனிதர் சாய் விற்றுக் கொண்டிருந்தார். அவரு யாரு என்று கேட்டேன். தெரியாது, என்னமாதிரி ஒருத்தர் அவ்வளவுதான்" என்று சொல்லி விட்டு தன் அடுத்த கஸ்டமருக்கு பொட்டலம் போட ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சாய் விற்கமுடியும். ஆனால் அதை அவள் செய்யவில்லை. வியாபார அபிவிருத்தி திட்டங்களை பக்கம் பக்கமாக எக்னாமிக்ஸ் பத்திரிகைகளில் வாசித்திருந்த எனக்கு அந்த ஆதித்தாயின் பொருளாதர வியாபாரக் கொள்கை பிடித்திருந்தது. வியாபாரம், முன்னேற்றம் என்பதெல்லாம் " தான் மட்டும் வாழ்வதல்ல" மற்றவர்களையும் வாழ வைப்பதுதான்." வாழு. வாழ விடு. என் குடியிருப்புக்கு கீழே இருந்த கடையில் ( provision store) எல்லாம் கிடைக்கும். காய்கறி தவிர. காய்கறி வாங்கி விற்க முடியாது என்பதல்ல. ஆனால் அந்தக் கடைக்காரர் அதைச் செய்யவில்லை. காரணம் அக்கடைக்கு வெளியே தள்ளுவண்டியில் காலையிலும் மாலையிலும் காய்கறி வியாபாரம் உண்டு. கடைக்காரருக்கு எவ்வளவு பெரிய மனசு. வாழு வாழ விடு. Voir la traduction
3 months 1 week ago
அப்படி என்றால் கடைசி இலக்கம் எனக்காக காத்திருக்கிறதா...!
3 months 1 week ago
தென் ஆபிரிக்கா அணி ஜரோப்பா வெதர் மாதிரி😁👍.............................
Checked
Fri, 02/06/2026 - 16:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed