புதிய பதிவுகள்2

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 வீத வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

3 months 2 weeks ago
21 Oct, 2025 | 12:53 PM அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார். மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் முதலாம் திகதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று திட்டவட்டமாக எச்சரித்தார். அத்துடன், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு புதிய ஏற்றுமதித் தடைகளையும் விதிக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார். மலேசியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்தச் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் சாதகமாகப் பயன்படுத்த முடியாது," என்றும் டிரம்ப் கூறினார். முக்கியமான கனிமங்களை வாங்குவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், சீனாவுக்கு இந்த கடுமையான எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார். அண்மையில், அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ்களை சீனா வாங்கவில்லை என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cj3zm6gm46eo

கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!

3 months 2 weeks ago
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்! Published By: Vishnu 21 Oct, 2025 | 07:28 PM யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களது கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். போர் சூழலில் இவர் யாழிலிருந்து, துணிவுள்ள ஊடகவியலாளராக பணியாற்றி இருந்தார். இதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டனர். இதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228327

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
சுவரசியமாக உள்ளது கடஞ்சா நிறைய jargons கொண்டு வந்து கொட்டியுள்ளீர்கள். பலருக்கு இது விளங்க கஸ்டமாக இருக்கும் என நினைக்கின்றேன். உங்களுக்கும் இதன் அர்த்தம் புரியாமல் பாவித்துள்ளீர்கள் Letter of credit Credit rating risk profile, risk apatite Hedging / forwarding risk analysis, modelling, technical and fundamental analysis window dressing balance sheet position dividend payable differed tax - time difference tax depreciation பிரயோகிகக்கபடும் உள்ளது மேலே உள்ள ஒவ்வொன்றுக்கும் ரிப்போர்டிங் ஸ்டன்டர்ட் உள்ளது PLC என்கிறீர்கள் related party எவரும் உள்ளார்களா ? subsidiary, associate, ஏதும் உள்ளதா? intangible asset, factious assets ஏதும் உள்ளதா? அல்லது mere window dressing ! யூகே இல் வேலை ஒரு ஒடிடராகவும், அதேவேளை பெட்ரோல் செட்டில் ஒரு விற்பனையாளராகவும் வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன். தமிழர்கள் பலர் சுத்து மாத்து செய்யக்குடியர்வகளே அதில் சந்தேகமில்ல்லை. அமெரிக்கவிலும் என்ரோன் எனும் ஒரு எண்ணை கம்பனி இப்படி வீழ்ந்து போனது. ஒரு case study க்காக‌ கள உறவு நாதமுனி வந்து விபரமாக எழுத நயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
வெளியேற்றப் பட்ட முஸ்லிம் குடும்பங்கள் "ஒரு தொகைப் பணம் எடுத்துச் செல்லலாம். வீட்டுச் சாமான்களை எடுத்துச் செல்ல முடியாது" என்ற நிபந்தனை இருந்ததாக அறிந்திருக்கிறேன். மீறி தங்க நகைகளை எடுத்துச் செல்ல முயன்றவர்களிடம் அவை பலவந்தமாகப் பறிக்கப் பட்டதாக செவிவழிச் செய்திகள் கேள்விப் பட்டேன். எவ்வளவு பரவலாக இது நடந்தது என அறியேன் (இவையெல்லாம் செய்திகளாக அந்த நாட்களில் உதயனில், ஈழநாட்டில் வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும், எனவே பதிவுகள் இல்லை). யாழ் நகர நவீன சந்தையில் பான்சி (Fancy) கடைகள் என நாம் அழைக்கும் வீட்டு அலங்கரிப்புப் பிளாஸ்ரிக் பொருட்கள் விற்கும் கடைகள் பல முஸ்லிகளுக்குச் சொந்தமாக இருந்தன. அவற்றின் திறப்புகள் பலவற்றை "நாம் பத்திரமாக பாதுகாக்கிறோம்" என்று கூட்டம் வைத்து உறுதி கொடுத்து புலிகளின் அரசியல் துறையினர் வாங்கிக் கொண்டனர். சில உரிமையாளர்கள், தங்கள் கடைத் திறப்புகளைப் புலிகளிடம் கொடுக்காமல் அயல் கடைகளின் உரிமையாளர்களான தமிழர்களிடம் கொடுத்திருக்கின்றனர். அடுத்த சில வாரங்களுக்குள் இந்தத் திறப்புகளையும் புலிகள் தமிழ்க் கடைக் காரர்களிடமிருந்து வாங்கிக் கொண்டனர். திறப்புகள் இல்லாத கடைகளை உடைத்துத் திறந்தனர். அந்தப் பொருட்களுக்கு என்ன ஆனது? யாழ் அரச ஆஸ்பத்திருக்குப் பின் வீதியில், நியூ மாஸ்ரர் ரியூசன் கொட்டிலுக்கு அருகில் "எழிலகம்" என்ற பெரிய கடையொன்றைத் திறந்தனர். அங்கே வைத்து முஸ்லிம் வர்த்தகர்களிடமிருந்து எடுக்கப் பட்ட வீட்டு அழகு சாதனப் பொருட்கள் விற்கப் பட்டன. விற்ற பணத்தை யார் எடுத்துக் கொண்டார்கள் என்பதை ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். தனிப்பட நான் அறிந்த சில கதைகள் கொடுமையானவை. அந்தக் காலங்களில் ஊரில் துணி லெங்த் எடுத்து ரெய்லரிடம் போய்த் தான் உடைகள் தைப்போம் - கடையில் புத்தாடை வாங்குவதை விட அது தான் மலிவானது. எனக்கும் என் அண்ணருக்கும் உடைகள் தைக்கும் ரெய்லர்கள் இரட்டையர்களான முஸ்லிம் இளைஞர்கள். நவீன சந்தைக்கு வெளியே இருந்த, ஒரு கடை என்று சொல்ல முடியாத ஒரு hole in the wall இல் இரண்டு காலால் இயக்கும் தையல் இயந்திரங்களை வைத்துத் தான் தங்கள் தொழிலைச் செய்து வந்தனர். அவர்கள் தங்கள் தையல் இயந்திரங்களை தம்மோடு எடுத்துச் செல்ல புலிகள் அனுமதிக்கவில்லை என அண்ணர் சொன்னார். எப்படி இருந்திருக்கும் அவர்களுக்கு என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

மூளை ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சிக்கும் என்ன தொடர்பு? ஆய்வில் புதிய தகவல்

3 months 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 21 அக்டோபர் 2025, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் சீராக்குவதில் கூட முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நினைவாற்றல், கூர்ந்து கவனித்தல் மற்றும் சிந்தனை திறன் போன்ற மூளையின் செயல்கள் மேம்படும் என்கின்றன அந்த ஆய்வுகள். உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி? மூளை ஆரோக்கியம் என்றால் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. மூளை ஆரோக்கியம் என்பது அறிவாற்றல், யோசிக்கும் திறன், உணர்ச்சி, நடத்தை, அசைவு போன்றவற்றில் உங்களின் மூளை எந்தளவிற்கு நன்றாக செயல்படுகிறது என்பதை குறிப்பதாகும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், "மூளை ஆரோக்கியம் என்பது உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் உங்கள் முழு திறனையும் பயன்படுத்த இது உதவுகிறது." என தெரிவிக்கிறது. "நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழல், வாழ்நாள் முழுவதும் கற்றல், சமூக உறவுகள் போன்றவற்றை உள்ளடக்கியது" எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார மையம், "இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்" எனவும் தெரிவித்துள்ளது. உடற்பயிற்சிக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி, புதிய மூளை செல்கள் வளர உதவுகிறது. உடற்பயிற்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவாற்றல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கு உதவுவதாக ஹார்வர்ட் ஆய்வு தெரிவிக்கிறது. அதில், "உடற்பயிற்சி மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ரசாயனங்களை வெளியிடுவதன் மூலமாகவும், புதிய மூளை செல்கள் வளர உதவுவதன் மூலமாகவும், மூளையில் புதிய ரத்த நாளங்களை உருவாக்குவதன் மூலமாகவும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிந்தனை மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் மூளைப் பகுதிகள் பெரிதாக இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என நரம்பியல் சிகிச்சை நிபுணர் பிரபாஷ் பிரபாகரன் கூறுகிறார். இதுபற்றி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை நிபுணராக பணிபுரியும் பிரபாஷ் பிரபாகரனிடம் கேட்டபோது, "பொதுவாக உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஆரோக்கியமானது" என்றார். "நமது நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கும், அறிவாற்றலை அதிகரிப்பதற்கும் உடற்பயிற்சி உதவும்." என்றார். இதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "நமது மூளையில் ஃப்ரென்டல் லோப் (Frontal lobe), பரியேட்டல் லோப் (Parietal lobe), டெம்போரல் லோப் (Temporal lobe), ஆக்ஸிபிடல் லோப் (Occipital lobe) என 4 பிரிவுகள் உள்ளன. இதில் இந்த Frontal lobeதான் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் நமது பாணி, நாம் சிந்திக்கும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும். அதனால் இந்த இடத்தை பயிற்சிகளால் மேம்படுத்துவதன் மூலம் பலன் கிடைக்கும்" என்றார். மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகளை பரிந்துரைப்பதாக மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் கூறினார். ஒன்று மனம் சார்ந்த பயிற்சி, மற்றொன்று ஏரோபிக்ஸ் பயிற்சி ஆகும். மனம் சார்ந்த பயிற்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகள் உதவுகின்றன. இந்த பயிற்சிகள் நினைவாற்றல், ஒரு விஷயத்தில் கூர்மையாக கவனம் செலுத்துதல், ஒரு பிரச்னையை தீர்க்கும் திறன் போன்ற அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இதுபற்றி பேசிய மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன், "Fund of information அதாவது பொதுஅறிவு, தகவல்கள் என எந்தளவிற்கு அதிகமான தகவல்களை மூளைக்குள் செலுத்துகிறோமோ அந்தளவிற்கு அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும்" என்றார். இதுபற்றி அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒரு அங்கமான தேசிய சுகாதார நிறுவனத்திலும் (NIH) ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், "அதிகமாக தகவல்களை மூளைக்கு செலுத்துவதன் மூலம் வயதாவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும், டிமென்ஷியா போன்ற நோய்களை தடுக்க முடியும். வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெறுவதும், பல உணர்வுப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதும் மூளையை பலப்படுத்துகிறது. இதனால் மூளையால் பிரச்னைகளை சிறப்பாக கையாள முடியும். மூளையின் செயல்பாடும் நீண்ட காலத்திற்கு சிறப்பாக இருக்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சுடோகு, வார்த்தை விளையாட்டு போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மனம் சார்ந்த பயிற்சிகளை மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் பட்டியலிடுகிறார். வாசித்தல் - என்ன வாசிக்கிறோம் என்பதை விட தொடர்ந்து வாசிப்பதுதான் முக்கியம் திறன் மேம்பாடு - இசை, நடனம் என புதிதாக ஏதாவது ஒரு திறனை கற்றுக்கொள்ளுதல், புதிய மொழிகளை கற்பதும் இதில் அடங்கும் புதிர்கள் - சுடோகு, வார்த்தை விளையாட்டு, கணக்கிடுதல். இவை அனைத்தும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் என்று அறிவுறுத்துகிறார். ஏரோபிக்ஸ் பயிற்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி. உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் எந்தவொரு உடல் அசைவு அல்லது செயல்பாடும் ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். அதன்படி, தீவிர நடைபயிற்சி ஓட்டம் சைக்கிள் ஓட்டுவது நீச்சல் என இவை அனைத்தும் ஏரோபிக் உடற்பயிற்சியின் கீழ் வரும். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி விரிவடைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹிப்போகேம்பஸ் என்பது டெம்போரல் லோப்-ல் உள்ளது. இது மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு உதவும் பகுதியாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஏரோபிக் உடற்பயிற்சி மூளை வளர்ச்சிக்கும் உதவும் என மருத்துவர் பிரபாஷ். இதுபற்றி பேசுகையில், "BDNF அதாவது Brain-derived neurotrophic factor என்ற புரதம் உள்ளது. இது வெளியாவதால் நியூரல் இணைப்பு (மூளையின் நரம்பு செல்களான நியூரான்களுக்கு இடையேயான இணைப்புகள், இவை சமிக்ஞைகளை கடத்துவதற்கான பாதைகளை உருவாக்குகின்றன) மேம்படும். நியூரானின் வளர்ச்சியை இது அதிகரிக்கும். இதுவும் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்த உதவும்" என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். "நியூரோகெமிக்கல் (Neurochemical) சமநிலையால்தான் மூளையில் தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நியூரோ கெமிக்கல்களை ஊக்கப்படுத்துவதற்கும் இது உதவும்" என்றார். 'வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி அவசியம்' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்ய வேண்டும். "மூளை ஆரோக்கியத்திற்கு பெரும்பாலான ஆய்வுகள் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்தைதான் பரிந்துரைக்கின்றன. நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் என எதை செய்தாலும் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் என்ற கணக்கில் செய்ய வேண்டும். அதாவது இந்த 150 நிமிடங்களை தினசரி பிரித்து மேற்கொள்ள வேண்டும். தினமும் உடலுக்கு அசைவுகளை கொடுப்பது அவசியம்" என்றார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். ஹார்வர்ட் ஆய்வில் வாரத்திற்கு 120 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அரை மணி நேரம் அல்லது வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடலில் செயல்பாடுகள் அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறது. மூளையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம். உடற்பயிற்சிகள் மூளைக்கு ஆரோக்கியத்தை அளித்து, அதன் செயல்பாடுகளை தூண்டுகிறது என்பது பல ஆய்வுகள் மூலமாகவும் நிரூபணமாகி உள்ளது. லாங்கிடூடினல் ஏஜிங் ஸ்டடி இன் இந்தியா (LASI) 2024ஆம் ஆண்டு 31,464 முதியவர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அதிக உடல் அசைவுகளால் ஆண்கள் 0.98 புள்ளிகள் அதிக அறிவாற்றலும், பெண்கள் 1.32 புள்ளிகள் அதிக அறிவாற்றலும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்துவதற்கும், பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம் என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். "அறிவாற்றல் தொடர்பான பிரச்னை (cognitive dissonance) இருப்பவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன் குறைவாக இருக்கும். உதாரணமாக சாதாரணமானவர்களிடம் வீடு பற்றி எரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் எனக் கேட்டால், அவர்கள் நான் அங்கிருந்து ஓடுவேன், மற்றவர்களை காப்பாற்றுவேன் என பதில் சொல்லுவார்கள். ஆனால், இந்த பிரச்னை இருப்பவர்களால் இந்த பதிலை சொல்ல முடியாது. அதனால் இந்த உடல் பயிற்சிகள் அல்லது அசைவுகள் இவர்களின் இந்த பிரச்னையை குணப்படுத்த உதவும்" என்கிறார். அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சிகள் கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோனை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjw9lnzz8n1o

தவிக்கும் தன்னறிவு

3 months 2 weeks ago
தொடருங்கள் நன்றாகப்போகின்றது .......! பிரம்மம்: ம்ம்………. குறையாக நினைக்க வேண்டாம்……. ஆனால் உங்களின் நண்பர்களில் அவ்வளவு விசயம் தெரிந்தவர்கள் என்று எவருமில்லை. என்னது பிரியனையுமா உப்பிடிச் சொல்லிப்போட்டுது .......! 😃

பாடசாலைப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிற்கவில்லை! ; புதிய கல்வி சீர்திருத்தங்களால் சில தரங்களில் மாற்றம் - கல்வி அமைச்சு

3 months 2 weeks ago
Published By: Digital Desk 1 21 Oct, 2025 | 04:01 PM பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் வராததால், அவை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார். இருப்பினும், கல்வி சீர்திருத்தங்களின்படி, 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக, அவை எளிமைப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் கையேடுகளை அச்சிடும் பணிகளும் நிறுத்தப்படவில்லை எனவும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் தேவைகளுக்கு ஏற்ப, அவை அச்சிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களையும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான தொகுதிப் பொருட்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 நவம்பர் 15ஆம் திகதிக்குள் பணிகள் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு, அவற்றை விநியோகிக்கும் பணிகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/228283

தவிக்கும் தன்னறிவு

3 months 2 weeks ago
🤣.............. சில விசயங்களை/வசனங்களை ஒரு சிரிப்பிற்காக எப்போதும் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கின்றது, சுவி ஐயா...................... 🤣............. புது ஐடி நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெறுபவர்களின் கதைகள் மட்டுமே வெளியே தெரிகின்றது, அண்ணா. இங்கு 99 வீதத்திற்கும் மேலான புது ஐடி நிறுவனங்கள் திவாலாகிப் போகின்றன...........

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 210 உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்!

3 months 2 weeks ago
‘சரணடைந்தவர்கள் துரோகிகள்.. ஆயுதங்கள் மவுனிப்பு இல்லை..’ மாவோயிஸ்டுகள் திடீர் அறிவிப்பு பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்தவர்கள் துரோகிகள் என்றும் தங்களது ஆயுதங்கள் எப்போதும் மவுனிக்கப்படமாட்டாது என்றும் மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். நாட்டின் 150-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் ஆயுதப் போராட்டம் நடத்துவதன் மூலம் கம்யூனிச அரசாங்கத்தை அமைப்பதுதான் மாவோயிஸ்டுகளின் இலக்கு. கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. மாவோயிஸ்டுகள் இயக்கம் தொடர்ந்து செயல்பட முடியாத அளவு, பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக சுமார் 2,000க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர். அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் மாவோயிஸ்டுகளின் தளபதி உட்பட 60க்கும் மேற்பட்டோர் சரணடைந்தனர்; சத்தீஸ்கரிலும் ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என அறிவித்துவிட்டு மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர். இந்த பின்னணியில் மாவோயிஸ்டுகள் இயக்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “எங்களது ஆயுதங்கள் மவுனிக்கப்படவில்லை; தற்காலிகமாக பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைந்த துரோகிகளுக்கு மக்கள் நிச்சயம் தண்டனை வழங்குவர்; அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (படம்: A1 மூலம் உருவாக்கப்பட்டது) https://minnambalam.com/surrendered-are-traitors-no-weapon-surrender-happened-maoists-issue-sudden-statement/

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
என‌க்கு இங்லாந் உள்ளூர் கில‌ப் விளையாட்டு என்றால் கானுன் கூட‌ விரும்பி பாப்பேன் , இங்லாந்தில் 3மாத‌ க‌ட‌சியில் இருந்து 9மாச‌ க‌ட‌சி வ‌ரை இடை விடாது ப‌ல‌ போட்டிக‌ள் ந‌ட‌க்கும் கிரிக்கேட்டில் அவ‌ர்க‌ள் தான் 100ப‌ந்து விளையாட்டை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் அறிமுக‌ம் செய்து வைச்ச‌வை , அதிலும் விதிமுறைக‌ள் சில‌ மாற்ற‌ம் இருக்கு பெரிய‌ மாற்ற‌ம் என்று சொல்ல‌ முடியாது ஜ‌பிஎல்ல‌ விட‌ இங்லாந் உள்ளூர் கில‌ப் விளையாட்டு பார்க்க‌ ந‌ல்லா இருக்கும் ஒரே நேர‌த்தில் 6 அணிக‌ள் விளையாடுவின‌ம் , விரும்பின‌ அணியின் விளையாட்டை நேர‌டியாக‌ யூடுப்பில் பார்க்க‌லாம்............................

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது - தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

3 months 2 weeks ago
ரெட் அலர்ட் : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளைக்கு வானிலை எப்படி? அதே போன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் நாளை அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிக்கான விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. https://minnambalam.com/puducherry-school-college-leave-due-to-red-alert/

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
ஒரு லட்சம் முஸ்லீம்களை வடக்கில் கொண்டு வந்து குடியேற்ற பிளான் போடுகிறார் போலுள்ளது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இதிலே குழம்புவதற்கு ஒன்றுமில்லை. ஒவ்வொரு போட்டித் தொடரிலும், சிறு சிறு மாற்றங்களுடன் விதிகள் அமல்படுத்தப் படும். அதை நாம்தான் கவனிக்க வேண்டும். தொடர் தொடங்க முதலே தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். நாம் பார்ப்பதில்லை. அதுவும், இந்த ஒருநாள், இப்போ T20 போட்டிகள் வந்தகாலம் தொட்டே, ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு விதி. அடிப்படை விதிகளில் மாற்றமில்லை. மற்றம்படி, போட்டியை மேம்படுத்த, காலநிலையை கருத்தில் கொண்டு, இருக்கின்ற வசதிகளைப் பார்த்து, சில பல சிறிய மாற்றங்களைச் செய்வார்கள். இது காலாகாலமாக கிரிக்கட்டில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எப்போதும் நமக்குப் பிடித்தபடிதான் நடக்க வேண்டும் என்று நினைக்க முடியாதுதானே. அத்தோட, கிரிக்கட் மட்டும்தான், பல வேறுபாடுகள் உள்ள ஒரே ஒரு விளையாட்டு. டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள், T20 போட்டிகள், இப்போ 100 பந்துகள் போட்டிகள். ஒரே விதியை எல்லாப் போட்டிகளிலும் பின்பற்ற முடியாது. சுவாரசியம் கெட்டுவிடும். போட்டிகளை முடிக்க முடியாது.

யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!

3 months 2 weeks ago
Published By: Vishnu 21 Oct, 2025 | 07:48 PM யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228328

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
2007 இறுதி போட்டி மழை காரணமாக 38 ஓவராக குறைக்கப்பட்டது. அவுஸ்திரேலியா அணி 38 ஓவரில் 281/4 ( கில்கிறிஸ்ட் 149 ஓட்டங்கள் 104 பந்துகளில் எடுத்தார்) எடுத்தது பிறகு மழை வர இலங்கை 36 ஓவரில் 269 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் 8 விக்கெட்டுகள் இழப்பில் 215 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்தியா தீவுகளில் இப்போட்டி நடைபெற்றபோது இலங்கையில் வான் புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொலன்னவை எண்ணெய் குதங்களை குண்டு வீசி தாக்கின. 2007 இல் நடைபெற்ற யாழ்கள உலககோப்பை போட்டியை பார்வையிட https://yarl.com/forum3/topic/10740-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/15/#findComment-239742

தவிக்கும் தன்னறிவு

3 months 2 weeks ago
🤣......................... மிக்க நன்றி அல்வாயன். ஆறு காட்சிகளையும் இங்கு பதிந்த பின், முடிந்தால் யூடியூப் இணைப்பை இங்கு பதிந்துவிடுகின்றேன். மிக்க நன்றி அக்கா.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற்றால் யூன், யூலை (7 ம் மாதம்) மாதங்களில் நடைபெறும். அப்பொழுதுதான் அங்கு கோடை காலம். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை நல்ல வெயில், குளிர் இல்லை. அக்காலங்களில் போட்டிகள் நடைபெறும். இந்தியாவில் யூன் , யூலை மாதங்களில் பயங்கர வெயில் 50 ஓவர் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற மாட்டாது. ஆக்டோபர் முதல் மார்ச் வரையான காலங்கள்தான் வெயில் குறைவான காலங்கள். இந்தியாவில் முன்பு 1997, 2013 இல் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது.( 1978 - ஜனவரி மாதம். 1997 - டிசம்பர், 2013 - ஜனவரி, பெப்ரவரி மாதம் ). இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் 1987 இல் ஒக்டோபர் மாதத்திலேயே நடைபெற்றது. ( இந்தியா இராணுவம் ஈழத்தில் இருந்த காலம். 1987 ஆக்டோபர் இல்தான் யாழ் வைத்தியசாலை, உரும்பிராய், கொக்குவில், இணுவில் உட்பட பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினால் கொல்லப்பட்டார்கள்) 2026 இல் ஆண்கள் T20 போட்டிகள் பெப்ரவரி , மார்ச் மாதங்களில் இலங்கை, இந்தியா நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை மகளிர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் ஒக்டோபர் மாதம் வைத்தது சரி. ஆனால் கொழும்பில் வைக்காமல் வங்காளதேசம், துபாயில் வைத்திருக்கலாம்.

தவிக்கும் தன்னறிவு

3 months 2 weeks ago
மீண்டும் ரசோதரனுக்கும் கூட ஒத்துழைத்தவர்களுக்கும் யாழ்களம் சார்பாக கரகோஷம் நிறைந்த பாராட்டுக்கள். நல்லகற்பனைவளம் உண்டு. தொடருங்கள்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
முதலில் எதை எதனோடு ஒப்பிடுவது என்று ஒரு தீர்மானமான முடிவுக்கு நீங்கள் வர வேண்டும். ஐக்கிய இராச்சியத்தை அமெரிக்காவோடு ஒப்பிட முடியாது, இரு வியாபாரங்களை ஒப்பிட முடியாது, இப்ப "வீட்டுக் கடனை வியாபாரக் கடனோடு ஒப்பிட முடியாது" என்றும் சொல்லியாகி விட்டது😂! என் கேள்வி: இந்தக் கள்ள எண்ணை வியாபாரியை சாதாரண வீட்டுக் கடன் பெறுபவர்களோடு முதலில் ஒப்பீடு செய்த "ஒப்பிலா மணி" இப்ப எங்க போய் விட்டார்😎?
Checked
Thu, 02/05/2026 - 10:42
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed