புதிய பதிவுகள்2

தன்னறம்

3 months 2 weeks ago
இதில் புதுமை ஒன்றும் இல்லை , முன்பே இருந்தது தான் . முன்பு முதுமக்கள் தாழி என்று சொல்லிக் கொண்டார்கள் . இப்போது சொல்வதை இன்னமும் ஐம்பது, நூறு வருடம் கழித்து வேறு மாதிரி தான் சொல்லுவார்கள் . அழியா மை இருந்தால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

தன்னறம்

3 months 2 weeks ago
இந்த உலகமே தன்னறம் இல்லாமல்தான் ஆகிக்கொண்டிருக்கின்றது. சுயநலம் கூடிக்கொண்டே போகின்றது. உங்கள் கதையில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லியே வாழ்க்கையும் முடிஞ்சுடுமோ என்றும் யோசினையாக் கிடக்கு.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 months 2 weeks ago
காணாமல் ஆக்கப்பட்ட தமிழரின், சொந்த விபரங்களை பயன்படுத்தி பல சிங்களவர்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் சிலர் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பதாக கடந்த அரசாங்கங்கள் கூறிவந்தன. அன்றைய அமைச்சர் ஒருவர் ஐ. நாவிலும் இந்த கருத்தை வைத்திருந்தார். இந்த சம்பவத்தை வைத்துப்பார்க்கும் போது அதுவும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இந்திய அடையாள அட்டையை தயாரிக்க இவர்களால் முடிந்திருக்கிறதென்றால், உள்நாட்டில் தயாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லையே இவர்களுக்கு. பல வருடங்களுக்கு முன் போர் முடிந்த கையோடு ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது. அதாவது நாமல் வாட பகுதியில் உள்ள தமிழரின் காணிகளை குறைந்த விலையில் பெற்றுக்கொண்டு அவர்கள் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல தூண்டப்படுவதாக. அந்தசெய்தியில் சில உண்மைகளும் இருக்கத்தான் செய்யும். ஒரு நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தவர்களில், இலங்கை சட்ட விரோத கடற் பயணங்களை தடுக்க அமைக்கப்பட்ட கடலோரக்காவல் பணியில் இருந்த ஒரு கடற்படை சிப்பாய், தன் நாயோடு தஞ்சம் அடைந்திருந்ததாக செய்திகள் வந்தன. அவர் மட்டுமல்ல, பல சிங்களவர்கள் இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். நாட்டில் எல்லாத்துறைகளிலும் ஊழல், மோசடி, விசேடமாக போலீஸ், பாதுகாப்பு படைகளில் முழுவதும் இது பரவியிருக்கிறது. அரச துறைகள் முழுவதும் மாற்றியமைக்கப்படவேண்டும். தமிழருக்கெதிரானது என உருவாக்கப்பட்டது, நாட்டையே விழுங்கி விட்டிருக்கிறது. சுட்டுப்படுகொலைசெய்யப்பட கணேசமுல்ல சஞ்சீவ காரணமில்லாமல் அன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது எப்படி? உடனடியாக மத்துகமவுக்கு இஷாரா தப்பிச்செல்ல முடிந்தது எப்படி? போலீசார் மத்துக்கமவுக்கு தேடுதலுக்காக சென்றபோது மித்தெனியாவுக்கு தப்பிச்சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று, கென்னடி பஸ்ரியனிடம் இஷாராவை கையளித்தது யார்? சாதாரண பொதுமகனால் முடியுமா இதனை செய்ய? போலீஸ் புலனாய்வாளர்கள் நேபாளத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது வரை, ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படாதது வரை வெளியில் கசிந்தது எப்படி? அப்படியென்றால்; குற்றவாளிகள் புலனாய்வுப்படைக்குள் இவர்களுடன் பயணிக்கின்றனர். மகிந்த காலத்தில் போலீஸ், இராணுவப்படைகளுக்கு அதிகளவு அதிகாரம், செல்வாக்கு, தண்டனைகளிலிருந்து விலக்கு இத்தியாதி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் நாட்டை காப்பாற்றியவர்கள் என்கிற விளக்கம் கொடுக்கப்பட்டது. அது போதைப்பொருள் கடத்தலாக இருந்தாலென்ன, கொலை கொள்ளையாக இருந்தாலென்ன. நாட்டை காப்பாற்ற வேண்டியவர்கள் நாட்டை அழிப்பதற்கு பயன்படுத்தபட்டார்கள். அனுராவுக்கு உயிர் அச்சுறுத்தல் இங்கே தான் உண்டு. அனுரவைத்தவிர வேறொருவர் ஆட்சி ஏற்றிருந்தால் இவையெல்லாம் நிறைவேறியிருக்காது. இப்போ நாமல் சொல்கிறார், இந்த குற்றவாளிகளின் பின்னால் செயற்படுபவர் யார், இந்த கள்ள அடையாள அட்டைகளை விநியோகித்தவர்கள் யார், புலனாய்வுத்தகவல்களை அளிப்பவர்கள் யாரென அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாம். ஏன் இவ்வளவு அவசரம் இவருக்கு? தன் பெயரை தெரிந்து கொண்டுவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள ஆவலா? அல்லது தகவல் கொடுப்போரை அழிப்பதற்காகவா? இவரை சுற்றி ஏலவே கண்காணிப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இவர் அறிய வில்லையா? அதைவிட இஷாரா இவரின் முன்னாள் காதலியென்கிற பேச்சும் அடிபடுகிறது. இவர்களின் ஊதுகுழல்கள் அடங்கிவிட்டனவே, இனிமேல் எது பேசினாலும் அது தமக்கு எதிராகவே திரும்புமென உணர்ந்து கொண்டனரோ? அவர்கள் தம் பாட்டில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் என சொந்த நாட்டிலேயே கொடிகட்டிப்பறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அனுரா ஆட்சியேறியவுடன் நாட்டை விட்டு வெளியேறி, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து, கைதாகவும் வேண்டி வந்தது, ராஜபக்ச குடும்பத்துக்கு வந்த சோதனை. அவர்களின் கோர முகத்தையும், இருண்ட ஆட்சியையும் உலகிற்கும் சொந்த மக்களுக்கும் வெளிக்காட்டியுள்ளது. ஆனால் எல்லா துறைகளையும் மாற்றியமைக்க வேண்டியது, அனுராவுக்கு இன்னும் நாட்டை முன்னேற்றகரமாக கொண்டுசெல்ல உதவும். தமிழ் மக்களை மட்டுமல்ல சொந்த மக்களையும், உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களையும், இவர்களுக்காக, இவர்களை காக்க, தம் சொந்த உயிரையும் பணயம் வைத்து ஏவல் வேலை செய்து இவர்களை செழிப்பாக்கி அழகு பார்த்தவர்களையும் கொலை செய்த இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும். ஹி.... ஹி..... நீங்கள் அவர் செய்தவற்றை கண்டதால் போற்றுகிறீர்கள். நாங்கள் அவர் சாதிப்பார் என நம்பினோம், கேலி செய்தீர்கள் அன்று, என் போன்றவர்களை.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
தெரிந்தால் ஏன் யாழில் வந்து எழுதி, நேரத்தை பாழாக்கும் வீண் பேச்சுகாரர் என்ற பழிக்கு ஆளாகி இருக்க மாட்டேனே வசி 🤣. அண்மையில் இந்தியாவில் உழைத்த கறுப்பை, எப்படி மொரொசியஸ் வழியாக மீண்டும் இந்திய பங்கு வர்தகத்தில் இறக்கி, கறுப்பை வெள்ளை ஆக்குவதோடு, இலாபமும் பார்கிறார்கள் என ஒரு வீடியோ பார்த்தேன். அப்படி பல வழிகள் இருக்கலாம். அச்சொட்டாக தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் செய்கிறார்கள். மொமட் அல்பாயிட், டயனாவின் காதலர் டோடியின் தகப்பன். ஆரம்பத்தில் கோலமாவு, மற்றும் லெதர் வியாபாரம் அதில் வந்ததை வெள்ளையாக்கி பெரும் செல்வந்தரானார். ஆனால் ஹை கோர்ட் வரை போயும் பாஸ்போர்ட் கொடுக்கவில்லை. எந்த குற்றவியல் வழக்கிலும் குற்றம் தீர்க்கவில்லை - அதாவது அரசால் நிறுவ முடியவில்லை ஆனால் செய்கிறார் என தெரிந்திருந்தது.

தன்னறம்

3 months 2 weeks ago
எனக்கு நல்ல நினைவுள்ளது, முதல் முதலாக நான் கண்ணாடி அணிந்து வேலைக்கு போன போது சக பணியாளர் உதட்டில் புன்முறுவலை மறைத்தபடி "எப்படி இருக்கிறது புதிய கண்ணாடி" என கேட்டார், நான் இவருக்கு என்மேல் என்ன நகைசுவை தெரிகிறது என சிந்தித்தபடியே "யன்னலினூடாக உலகை பார்ப்பது போல இருக்கிறது" என கூறினேன். உங்கள் கதைகளினூடாக நீங்கள் உலகை பார்க்கும் விதத்தில் உங்களை நாங்களும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.🤣

எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.

3 months 2 weeks ago
அதில் ஒட்டுண்ணிகள், பாக்டீரியா, வைரஸ்கள், கன உலோகங்கள் மற்றும் காற்று மற்றும் சேகரிப்பு மேற்பரப்புகளிலிருந்து வரும் ரசாயனங்கள் போன்ற அசுத்தங்கள் இருக்கலாம் என்கிறார்கள் .

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
சட்ட விரோதமான வருவாயினை எவ்வாறு தொழில் தொடங்கும் போது பயன்படுத்துகிறார்கள்? வருமான வரித்துறை சாதாரணமானவர்களை துளைத்தெடுபார்களே? அல்லது விவேக் நகைசுவை போல வீரப்பனை விட்டுவிடுவீர்கள் எம்மை மட்டும் பிடிப்பீர்கள் என்பது போல பெரிய மீனை விட்டு விடுவார்களா?

தன்னறம்

3 months 2 weeks ago
எமக்கு இன்னமும் இந்த நிலை வராவிட்டாலும் அடுத்து எங்கே போய் இருப்பது?யாருடன் இருப்பது? எது சாத்தியம்? இப்படி பலவற்றைப் பற்றி பேசத் தூண்டுகிறது. எமது வயதுக்காரர் காலமானாலே இப்படியான எண்ணங்கள் கூடுதலாகவே வந்து போகின்றன. சிறுகதை சிந்திக்க வைக்கிறது.

"ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்

3 months 2 weeks ago
முன்னால் அவுஸ்ரேலிய பிரதமர் ஊடக பிரச்சாரங்களையும், உலக அரச தலைவர்களின் முட்டாள்தனத்தினையும் கோடிட்டு காட்டுகிறார். 2023 இல் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார், இப்படி பல தலைவர்கள் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளில் மக்கள் தமது வாழ்க்கையினை தொலைக்காமல் இருப்பார்கள், உலகம் நிம்மதியாக இருக்கும்.

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

3 months 2 weeks ago
ஒரு இனப்படுகொலை இன்று சாதாரண பேசுபொருளாகியுள்ளது. அதற்காக இலங்கை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்து, பல ராஜதந்திர வேலைகளை செய்துள்ளது. ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள் எதை சாதித்தார்கள்? அவர்கள் கூற்றை ஆமோதித்துக்கொண்டிருந்துள்ளார்கள். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள்? இவர்கள் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாம், தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள், அதைத்தான் சொன்னேன். உண்மை என்றும் மறைந்து போகாது. என்னை கிண்டலடிப்பதுபோல் உண்மையை ஏற்று, ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 months 2 weeks ago
இலங்கையில் விடுதலைப்போர் போர் முடிந்த கையோடேயே, தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, விடாமுயற்சியை, கல்வியை குறிவைத்து அடுத்த போர் தமிழருக்கெதிராக தொடங்கப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில், நடைபெறும் எல்லா சமூக விரோத செயல்களிலும் ஜவ்னாவையும் இழுத்து விட்டு, அவர்களே இவற்றிற்கு காரணம் என்று தாம் தப்பித்துக்கொள்வது என முடிவு செய்து செயற்பட்டுள்ளார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

3 months 2 weeks ago
அப்படியெண்டா; செவ்வந்தியில் ஒரு மயக்கமுங்கோ உங்களுக்கு. ஒரு அமைச்சரே அவரின் திறமையை மெச்சியிருக்கிறார் என்றா பாத்துக்கொள்ளுங்களேன் செவ்வந்தி எப்படிப்பட்டவர் என்று. அதிலும் இருபத்தாறு வயதுதான் அவவுக்கு. எங்கள் பெண் போராளிகளை விமர்சிக்கிறார்கள், இவவையோ நினைத்து, கனவு கண்டு பாட்டுபாடுகிறார்கள். இருவேறு உலகமிது.

தன்னறம்

3 months 2 weeks ago
தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது. இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார். மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை. சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும். நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை. நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே. நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.

மகன் வாங்கிய காரில்... மருமகள் சென்றதால், காரை எரித்த மாமியார்.

3 months 2 weeks ago
இதுவே, தன் மகள் மாப்பிள்ளையின் காரில் அருகில் இருந்து பயணம் செய்திருந்தால், எப்படி மகிழ்ந்திருந்திருப்பார் இந்த மாமியார்!
Checked
Thu, 02/05/2026 - 01:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed