புதிய பதிவுகள்2

தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி !

3 months 2 weeks ago
தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி ! 01 Nov, 2025 | 01:49 PM தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema) கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 பேரும், மவான்ஸா (Mwanza) நகரில் 200-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டதாகவும், பிற பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்து, மொத்த பலி எண்ணிக்கை சுமார் 700 ஆக இருக்கலாம் என்றும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அவர்கள் இந்த உயிரிழப்பு விவரங்களை வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் மூலமாகக் கட்சி உறுப்பினர்களின் வலையமைப்பு மூலம் சேகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும், மொத்த எண்ணிக்கை 700 முதல் 800 வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகமும் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து கவலை தெரிவித்ததுடன், பாதுகாப்புப் படைகள் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கிடைத்த தகவல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னரே பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டனர். இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையைக் கட்டுப்படுத்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை குறித்த தகவல்களைச் சரிபார்க்க முடியாத அளவிற்கு நாடு முழுவதும் இணையத்தள சேவை துண்டிக்கப்பட்டிருப்பதும் தகவல் சரிபார்ப்பை கடினமாக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/229225

வெற்றிலை துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு

3 months 2 weeks ago
வெற்றிலை துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு adminNovember 1, 2025 யாழ்ப்பாணத்தில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அச்செழு பகுதியை சேர்ந்த மேசன் தொழிலாளியான சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை வெளியில் மழை பெய்து கொண்டிருந்தமையால் , மேல் மாடியில் இருந்து கீழே வெற்றிலையை துப்ப முயன்ற வேளை கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். https://globaltamilnews.net/2025/222148/

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......! பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பிஜாய் ஆண் : அம்மா என் அம்மா நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா ஓ அம்மா என் அம்மா என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே பேசிட கூடுமோ தெய்வம் இங்கே ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா ஆண் : விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே உனை தாண்டி உலகம் ஏதிங்கே ஆண் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன் தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்.. ஆண் : {விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே} (3) தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா.........! --- ஒருமுறை என்னை பாரம்மா ---

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

3 months 2 weeks ago
மாவீரர் வாரம் வருகிறதாம் இந்தக்கதையை நம்பட்டாம். யார் திட்டமிட்டு செய்கிறார்களோ, அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்!

3 months 2 weeks ago
இங்கிலாந்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் ஆண்ட்ரூவின் வெளியிடப்பட்ட மின்னஞ்சல்! இங்கிலாந்து மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தி உயிரிழந்த வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஆண்ட்ரூ மீது “விசாரணை” நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து வரும் நிலையில் இது குறித்த கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. குழந்தை பாலியல் குற்றவாளி நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் “நேரில் சந்திப்பது நல்லது” என்று கூறி ஆண்ட்ரு அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த குற்றத்துடன் தொடர்புடைய குற்றவாளியான சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீன், கடந்த 2009 ஆண்டு ஜூலை விடுவிக்கப்பட்டார். அந்த மாத இறுதியில் இங்கிலாந்தின் அமெரிக்க வங்கியாளர் ஜெஸ் ஸ்டாலியைச் சந்திக்க வேண்டும் என்று பரிந்துரைத்து 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று அப்போதைய இளவரசருக்கு அவர் மின்னஞ்சல் அனுப்பினார். இதேவேளை, அந்த திகதியில் தான் இங்கிலாந்தை விட்டு வெளியேறுவதாகவும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நியூயார்க்கிற்கு “வர” முயற்சிப்பதாகவும் ஆண்ட்ரூ பதிலளித்திருந்தார். இதில் கோடைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரை நேரில் சந்திப்பது நல்லது என்றும் அவர் ஆண்ட்ரு அந்த மின்னஞ்சலில் கூறியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அவர் குறித்த குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவித்து அவரை மாளிகையை விட்டு வெளியேற்றியதுடன் அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஆண்ட்ருவை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1451719
Checked
Sat, 02/21/2026 - 07:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed