புதிய பதிவுகள்2

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

3 months 1 week ago
தமிழீழத்தை வேட்டையாடிய இரண்டுமே ஓநாய்கள். ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. அமெரிக்காவும் இணைந்தே எம்மை அழிந்தன. எமது தாயகனின் நிருவாகத்தை அழத்துவிட்டு சிங்களத்தை காத்தவாறு தமிழித்துக்கு உதவுவதாக நாடகம் போடுவதன் நோக்கம் தமிழர்கள் மீதான அக்கறையல்ல. சீனாவால் உள்வாங்கப்பட்ட சிறிலங்காவைவிட தமிழர்கள் எதற்கும் இசைவாக்கம் அடையும் இயல்புடையோரான தமிழரைக் கையாள்வது இலகுவானதென்பதை அமெரிக்கா அறியாதிருக்குமா? ஆனாலென்ன தமிழரால் துரத்தப்பட்டோர் போய் இருப்பதையும் விற்காமிலிருந்தால் சிறப்பு.

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

3 months 1 week ago
சிறிய விமானங்களைத் தவிர வேறு விமானங்கள் பலாலியில் இறங்க முடியாது என்று இந்தியா இதுவரை சொன்னதெல்லாம் பொய்யா கோப்பாலு.

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

3 months 1 week ago
அன்றிரவு முழுதும் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் யாழ்நகர், குருநகர், பாசையூர், சின்னக்கடை, கொழும்புத்துறை, சுண்டுக்குளி ஆகிய பகுதிகளில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதில் வேதனை என்னவென்றால் அப்பகுதியெங்கிலும் புலிகளையோ அல்லது அவர்களது முகாம்களையோ நாம் காணவில்லை என்பதுதான். பழைய பூங்கா பகுதியில் அமைந்திருந்தத் புலிகளின் பயிற்சிமுகாமும் அன்றைய நாட்களில் இயங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தபோதிலும், சனநெரிசல் மிகவும் அதிகமான அப்பகுதி மீது மிகவும் கண்மூடித்தனமான முறையில் செல்த்தாக்குதலை இந்தியாவின் சாத்தான்படை சகட்டுமேனிக்கு நடத்திக்கொண்டிருந்தது. நாம் பாசையூரில் அடைக்கலமாயிருந்த சில நாட்களில் யாழ்நகரினை இந்தியப் படை ஆக்கிரமித்துக்கொண்டது. வீதிகளில் ரோந்துவரும் இந்திய ராணுவத்தினை தூரத்திலேயே ஊர் நாய்கள் காட்டிக் கொடுத்துவிட சனமெல்லாம் வீடுகளுக்குள் அடைந்துவிடும். இந்திய ராணுவத்தின் பிரசன்னம் வீதியில் இருப்பது தெரியாது வீடுகளுக்கு வெளியே வந்தவர்கள் சிலர் வீதிகளிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல மணிநேரமாக வீதிகளில் கிடந்த உடல்களை இந்திய ராணுவம் சென்றபின்னர் ஊரில் இருப்பவர்கள் எடுத்துவந்து அடக்கம் செய்தார்கள். சில சடலங்களின் மேலால் இந்திய ராணுவ வாகனங்கள் ஏறிச்சென்ற‌ அடையாளங்களும் காணப்பட்டன. சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாத காலம் பாசையூரில் இருந்திருப்போம், கோண்டாவில், இருபாலை ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வீடுகளுக்குச் சென்று தேவையான பொருட்களை எடுத்து வர இந்திய ராணுவம் அனுமதியளித்திருக்கிறது என்று யாரோ சொன்னார்கள். ஆகவே பாசையூரில் நாம் தங்கியிருந்த வீட்டில் ஒரு சைக்கிளை கேட்டு எடுத்துக்கொண்டு கோண்டாவிலுக்குச் செல்லலாம் என்று தந்தையார் சொல்லவே, நானும் ஆம் என்றேன். பலாலி வீதியால் செல்லாதீர்கள். தின்னைவேலியில் இன்னும் சண்டை நடக்கிறதாம். பிரதான வீதிகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஆளாளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவர்கள் கூறியவாறே குச்சொழுங்கைகளுக்கூடாக‌ எமது பயணத்தை ஆரம்பித்தோம். பின்னர் ஆலய வீதி வழியே சென்று தின்னைவேலியில் ஆடியபாதம் வீதி, பாற்பண்ணை, மாதிரிக்கிராமம் என்று முழுவதுமாக உள் வீதிகளுக்கூடாக‌ நுழைந்து கோண்டாவில்ச் சந்திக்கும், பாமர்ஸ் ஸ்கூல் (கமல நல சேவைகள் நிலையம்) அமைந்திருந்த பகுதிக்கும் இடைப்ப்ட்ட பகுதியில், பலாலி வீதி கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் நாம் வந்தபோது, கோண்டாவில்ச் சந்தியில் இருந்து தின்னைவேலி நோக்கி இந்திய ராணுவத்தின் வாகனத் தொடரணி போய்க்கொண்டிருந்தது. வீதியின் இடதுபுறத்தில், சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் நின்றிருந்த எம்மைக் கண்டதும் வாகனத் தொடரணியை நிறுத்திவிட்டு துப்பாக்கிகளை நீட்டியவாறு பாய்ந்து வந்தது இந்திய ராணுவம். எனது கையில் ஒரு ஷொப்பிங் பை நிறைய தேசிக்காய்கள், வழியில் வரும்போது யாரோ ஒருவருடைய மரத்தில் பிடுங்கி எடுத்துக்கொண்டது. அப்பகுதியெங்கும் பற்றைக்காடுகளாய் மூடி வளர்ந்திருக்க, எம்மைக் கொன்றாலும் எவருக்குமே தெரியப்போவதில்லை என்று உணர்ந்துகொண்ட நாம், இந்திய ராணுவம் கட்டளையிட்டவாறே நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டோம். எம்மைச் சுற்றிவளைத்த அவர்கள், "நீங்கள் புலிகளா, இங்கு ஏன் வந்தீர்கள், எங்கே போகிறீர்கள்?" என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனார்கள். "நாம் புலிகள் இல்லை, பொதுமக்கள், எமது வீடுகளைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்று தந்தையார் கூறவும், எனது பக்கம் திரும்பி, "பையில் என்ன வைத்திருக்கிறாய்?" என்று ஒருவன் ஆங்கிலத்தில் கேட்டான். தேசிக்காய் என்று நான் கூறவும், அதனை நம்பாது பையைப் பறித்து நோட்ட‌மிட்டான். பின்னர் எங்கள் இருவரையும் இழுத்துக்கொண்ம்டு பலாலி வீதிக்கு வந்தார்கள். வீதியின் நீளத்திற்குக் காப்பரண்களும், இந்திய ராணுவ வாகனங்களும் தென்பட்டன. கோண்டாவில்ச் சந்திப்பகுதியில், வீதியினை மறித்து பாரிய ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. எம்மை அங்கு கொண்டு சென்றார்கள். நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட எம்மை அவர்களின் அதிகாரியொருவன் வந்து பார்த்தான். ஆங்கிலத்தில் தந்தையாருடன் பேச்சுக்கொடுக்கவே, தன்னை மீளவும் தபால் அதிபர் என்று அவர் கூறியபோது, "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று அவர் கேட்டான். எமது வீட்டிற்கு வந்து, எம்மை வெளியே இழுத்துவந்து தாக்கிய அதே அதிகாரிதான் அவன். "உங்களின் புலிகள் எங்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள், நாம் அவர்களை விடப்போவதில்லை, அழித்தே தீருவோம்' என்று கர்வத்துடன் கூறிவிட்டு, "ஏன் இங்கே வந்தீர்கள்? இன்னமும் உங்களது வீட்டுப்பகுதியில் சண்டை நடக்கிறது, நீங்கள் அங்கு போகமுடியாது" என்று அவன் கூறினான். "வீட்டில் சமைப்பதற்குக் கூடப் பாத்திரங்கள் இல்லை, எமது சைக்கிள்களும் எமக்குத் தேவை. வீட்டிலிருந்து சில தேங்காய்களையும், மரக்கறிகளையும் எடுத்துவரத்தான் வந்திருக்கிறோம். ஒரு 30 நிமிடத்திற்குள் முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம்" என்று தந்தையார் மன்றாட்டமாகக் கேட்கவும், "நாம் உங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, சண்டையில் அகப்பட்டு வீணாகச் சாகப்போகிறீர்கள், உங்கள் விருப்பம்" என்று கூறிவிட்டு, எமது வீடு அமைந்திருந்த ஒழுங்கை வரை எம்மை அழைத்துச் செல்லுமாறு ஒரு ராணுவ வீரனைப் பணித்தான். அவன் எங்களை அங்கு அழைத்துச் செல்லும்போது அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்த ஏனைய இந்திய ராணுவத்தினர் ஏதோ ஜந்துக்களைப் பார்ப்பது போன்று பார்த்துக்கொண்டார்கள்.

அம்மனும் அமிர்தமும் (நாடகம்)

3 months 1 week ago
காட்சி 5 (தட்சணாமூர்த்தியும் பார்வதியும் கதைத்துக்கொண்டிடுக்கிறார்கள்.) தட்சணாமூர்த்தி: அமிர்தத்தின்ரை போக்கே வரவர சரியில்லை. பார்வதியோட எல்லோரும் நல்லா பழகிறது பிடிக்கவில்லை போல தெரியுது. அதிலயும் தப்பு இல்லை............. அமிர்தத்திற்கு இந்த வீடுதான் உலகம். அவளை விட வேற ஒருவரை எல்லோருக்கும் பிடிக்கும் என்றால் தாங்க முடியாதுதான்........................ பார்வதி: ஓம் அப்பா, நானும் அதைக் கவனிச்சனான். அம்மா முந்தி மாதிரி இல்லை, கொஞ்சம் குழம்பின மாதிரி இருக்கிறா. தட்சணாமூர்த்தி: (சிரிக்கிறார்) என்ன பிள்ளை, அம்மாவிற்கு மெதுவா தட்டி விட்டுதென்று சொல்லிறாய்............... எங்க ஆளைக் காணவில்லை? பார்வதி: அம்மாவும் பெரியம்மாவும் கோயிலுக்கு போட்டினம். கோயில்ல இன்றைக்கு அம்மனுக்கு ஏதோ விசேசமாம், அம்மாதான் விடாப்பிடியா பெரியம்மாவை கூட்டிக்கொண்டு போனவா. அம்மாவிற்கு பெரியம்மாவில சரியான விருப்பம், ஆனால் நாங்கள் பெரியம்மாவோட அடுகிடைபடுகிடையாக இருக்கிறதுதான் பிடிக்கவில்லை. தட்சணாமூர்த்தி: அதுதான் பிள்ளை. அந்த பாரதத்தின்ட முகத்தைப் சில நேரத்தில பார்த்தால், சாட்சாத் அம்மனே குடி வந்த மாதிரி இருக்குது. பாரதத்தை முந்தி பார்த்த மாதிரி ஞாபகம் ஒன்றும் இல்லை................... பார்வதி: நீங்கள் மறந்துவிட்டியள், அப்பா. பெரியம்மா உங்கட கல்யாண வீட்டில நடந்த எல்லா விசயங்களையும் அப்படியே சொல்லுகிறா. பழைய கதை எல்லாவற்றையும் இப்ப நடந்தது மாதிரி சொல்லுகிறா................. தட்சணாமூர்த்தி: ஓமடி பிள்ளை, வயசும் போகுதுதானே, ஆனால் நான் எதையும் மறக்கிற ஆளில்லை. இப்ப இதுவா முக்கியம், எப்படி அமிர்தத்தை சமாதானப்படுத்திறதென்று பார்ப்பம்................. (அமிர்தமும் பாரதமும் கோயிலிலிருந்து வருகிறார்கள்.) அமிர்தம்: அப்பப்பா, என்ன வெயில், சித்திரை பிறந்தாலே சுட்டெரிக்குது காண்டாவனம்........... பாரதம்: அதுக்கும் கடவுளுக்குத் தான் பேச்சு.......... என்ன மனிதர், இயற்கையாக நடக்கிற விசயங்கள் நடக்கத்தானே வேண்டும். ஆயிரம் ஆயிரம் கோடி உயிரினத்தில ஒரு உயிரினம் தான் மானிடர். எல்லா நிகழ்வும் மனிதருக்கு மட்டுமே வசதியாக இருக்கவேணுமா..................... தட்சணாமூர்த்தி: என்ன பிள்ளை........... என்றைக்கும் இல்லாம இன்றைக்கு கோயிலுக்கு போயிட்டு சலிச்சு போய் வந்திருக்கிறா............ அமிர்தம்: கோயிலுக்கு போய்விட்டு வாற வழியில, சனங்களின்ர பேச்சைக் கேட்டு பார்வதம் மனம் நொந்து போய்விட்டாள். ஒரே வெயில், மழையே இல்லை நிறைய நாளா, அம்மை வருத்தம், அது இது என்று சனத்தின்da பிரச்சனைக்கு பாரதம் தான் காரணம் என்று சனம் ஒரே திட்டு.............. பார்வதி: யார் திட்டினது பெரியம்மாவை? பெரியம்மா என்ன கடவுளோ இவையினர கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கிறதுக்கு............. யார் திட்டினது என்று சொல்லுங்கோ, நான் போய் நல்லா நாலு கேட்டிட்டு வாறன்................. அமிர்தம்: வாய் தடுமாறிட்டுது. பாரதத்தை சனம் ஏன் திட்டுது, கோயிலுக்குள்ள இருக்கிற கடவுளைத் தான் காரணம் என்று சொல்லுது. அதுதான் பாரதத்திற்கு ஒரே கவலையா போயிட்டுது. தட்சணாமூர்த்தி: இதுக்குப் போய் நீ ஏன் பிள்ளை கவலைப்படுகிறாய்? சனம் அப்படித்தானே, படைக்கிறதும் அவனே, காக்குறதும் அவனே, அழிக்கிறதும் அவனே, எல்லாமே அவன் தான். நல்லது நடந்தால் போற்றிவினம், பிடிக்காதது நடந்தால் மாறிவிடுவினம். இதுகளையெல்லாம் காதில வாங்கிக் கொள்ளாதே பிள்ளை............. பாரதம்: அப்படி என்னவென்று விட்டிட்டு இருக்கிறது? எவ்வளவு ஜீவராசிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. எதுவுமே யாரையும் எதற்கும் குற்றம் சொல்வதில்லை, மனிதர் மட்டும் சகமனிதரையோ, இயற்கையையோ இல்லாவிட்டால் கடவுளையோ தேடி பழிசுமத்துகிறார்கள். தீதோ நன்றோ, இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து விட்டுப் போறதுதானே? பார்வதி: இல்லை பெரியம்மா, ஒரே ஒரு வாழ்க்கை தான், அதை எப்படி அப்படி சாதரணமா சொல்லிறியள்........... எல்லோரும் ஏதோ முடிஞ்சளவு நல்லா, வசதியா வாழத்தான் விரும்பிவினம். மனிதர் மட்டும்தான் சிந்திக்கினம், மற்ற உயிர்கள் சிந்திக்கிறது இல்லை தானே.................. அமிர்தம்: ஏய் பார்வதி, பெரியவர்களுடன் அப்படி கதைக்ககூடாது.................. பார்வதி: நான் என்ரை பெரியம்மாவோட தானே கதைக்கிறன், நீங்கள் ஏதோ மூன்றாம் ஆளிடம் நான் கதைக்கிற மாதிரி சொல்லிறியள். பாரதம்: அமிர்தம், நீ சும்மா இரு. பிள்ளை என்னோட தானே கதைக்கிறாள். அவள் தனக்கு சரியென்று பட்டதை சொல்லுகிறாள். பார்வதி, மனிதருக்கு மட்டும் சிந்திக்கின்ற இயல்பை கொடுத்ததிற்கு ஒரு காரணம் இருக்கும், ஆனால் அது நிச்சயமாக மற்ற உயிர்களை அழித்து வாழவோ அல்லது பழித்தும், பழி சுமத்தியும் வாழவோ இருக்காது. தட்சணாமூர்த்தி: சரி, சரி இதை விடுங்கோ. மற்றவர்களுக்காக நாங்கள் ஏன் சண்டை போடவேணும்.............. பார்வதி, அந்த புத்தகத்தை எடுத்து தா ஒருக்கால், நான் கொண்டு போய் அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன். (தட்சணாமூர்த்தியும் பார்வதியும் செல்கிறார்கள். அவர்கள் சென்ற பின்) அமிர்தம்: (பாரதத்தை நோக்கி) தாயே, நான் ஆரம்பத்திலயே சொன்னனான் தானே. மனிதருக்குள் எல்லாம் இருக்குது, சந்தர்ப்பம் கிடைத்தால் அது அது வெளியில வரும். இந்த அற்ப மனிதரை பார்த்து நீங்கள் பதறலாமோ................. இது எல்லாம் உண்டு, உருண்டு, உறங்கி அழிந்து போகிற ஒரு சாதாரண பிறவிதான்......... பாரதம்: நீ சொல்வது முற்றிலும் சரியே அமிர்தம். அவரவர் அனுபவிப்பது அவை அவை செய்தவையே, மழை இல்லாமல் போனது ஏன் என்றால் மனிதன் மழையை அழித்து விட்டான். இது தெரியாமல் கழுதைக்கு கல்யாணம் முடித்து வைத்தால், மழை வருமா........... அமிர்தம், நான் திரும்பிப் போகிற நேரம் வந்துவிட்டது. அமிர்தம்: தாயே, நான் ஒரு மிகச்சாதாரண மனிதப் பிறவி. நான் எதும் தவறு செய்திருந்தால்…. பாரதம்: உன்னை அறிந்துதான் நான் விரும்பி வந்தேன். நீ என்றும் என் விருப்பத்துக்குரியவள். என்றும் என்னுடனேயே இருப்பாய்................ (முற்றிலும் இருட்டாகின்றது.) (அமிர்தம் மட்டும் தனித்து நிற்கிறார்.) (தட்சணாமூர்த்தியும் வருகின்றார்.) தட்சணாமூர்த்தி: என்ன, கோயிலுக்கு போய் வந்தனி, இன்னும் சீலைகூட மாத்தாமல் அப்படியே நிற்கிறாய்? பாரதம் எங்கே? (அமிர்தம் ஒன்றும் பேசாமல் நிற்கிறார்.) தட்சணாமூர்த்தி: ஏனப்பா, பாரதம் எங்கே.......... அமிர்தம்: அவ போயிட்டா.............. தட்சணாமூர்த்தி: எங்க போயிட்டா? அமிர்தம்: எங்கேயிருந்து வந்தாவோ அங்கேயே போயிட்டா.............. தட்சணாமூர்த்தி: இப்ப எப்படி போனா…..ஒன்றுமே விளங்கவில்லை. அமிர்தம், பாரதம் உண்மையில யார்? அமிர்தம்: பாரதம் என்னுடை பெரியம்மா மகள் தான். தட்சணாமூர்த்தி: உனக்கு உண்மையில ஒரு பெரியம்மா இல்லை என்ற எனக்கு தெரியும் அமிர்தம். அமிர்தம்: ஆ............. தலைய சுத்துதே............ யாராவது ஓடி வாங்கோவன்.............. (எல்லோரும் ஒடி வருகிறார்கள்.) (முற்றும்.)

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

3 months 1 week ago
சுமார் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் கிறீஸ்த்து ராசா கோயிலில் தங்கியிருந்தோம். செல்த்தாக்குதல் மெது மெதுவாக குறையத் தொடங்கியது. அதிகாலை 4 மணியளவில் மீளவும் கொய்யத்தோட்டத்தில் அமைந்திருந்த வீட்டிற்கு வந்தோம். ஆனால் வழமைபோல மறு நாள் மாலையும் செல்த்தாக்குதல்கள் ஆரம்பித்தன. அதே கொடூரமான, இடைவிடாத தாக்குதல்கள். பாசையூர் அந்தோணியார் ஆலயத்தை அகதிகள் முகாமாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அப்பகுதி மீது தாம் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று உறுதியளித்திருக்கிறது. ஆகவே அங்கே போகலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆகவே இரவு 8 மணியளவில் சில உடுதுணிகளை எடுத்துக்கொண்டு பாசையூர் நோக்கிச் சென்றோம். எதிர்பார்த்ததுபோலவே அப்பகுதியெங்கும் சனக்கூட்டம். கோயிலின் உட்பகுதிக்குச் செல்ல முடியவில்லை, முற்றாக மக்களால் நிரம்பி வழிந்தது. ஆகவே ஆலய முன்றலில், கொடிக்கம்பத்தைச் சுற்றியிருந்த மணற்றரையில் அமர்ந்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுடன் நாமும் அமர்ந்துகொண்டோம். பாய்கள், படுக்கை விரிப்புக்கள் என்று கைகளில் அகப்பட்டதை மணலில் விரித்து குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்திருந்தார்கள். யாழ்நகர் நோக்கி முன்னேறிவரும் இந்திய ராணுவம் அப்பகுதி நோக்கிக் கடுமையான செல்த்தாக்குதலைனை நடத்திக்கொண்ன்டிருந்தவேளை, கடலில் இருந்து கரையோரப் பகுதிகள் மீது கடுமையான பீரங்கித் தாக்குதலினை இலங்கை கடற்படை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த குடியிருப்புக்களை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாசையூர் அந்தோணியார் ஆலயத்தில் அகதிகள் தஞ்சமடைந்திருப்பது இலங்கைக் கடற்படைக்குத் தெரியுமாதலால், அப்பகுதி இலக்குவைக்கப்படலாம் என்று பலர் கருதினர். ஆகவே சில குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிநோக்கி கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருந்த மழை, ஆலயமும் இலக்குவைக்கப்படலாம் என்கிற அச்சம் ஆகியவை எம்மை ஆட்கொள்ள நாமும் ஆலயத்திலிருந்துந்து புறப்பட்டு கொழும்புத்துறை நோக்கிச் செல்லும் வீதியில் ஒரு வீட்டில் அடைக்கலமானோம். அவ்வீட்டில் வசிப்பவர்கள், அன்றிரவு அங்கு வந்து அடைக்கலமானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 வரையான மக்கள் அன்றிரவு அங்கு அச்சத்துடன் அமர்ந்திருந்தோம். செல்த்தாக்குதல் மீளவும் ஆரம்பமானது. ஒவ்வொரு இரவும் நடத்தப்படும் இத்தாக்குதல்களில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள். அன்றிரவும் அப்படித்தான். அப்பகுதியெங்கும் பல வீடுகள் செல்பட்டு உடைந்து நொறுங்குவது எமக்குக் கேட்டது. பாசையூர் அந்தோணியார் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே நாம் அடைக்கலமாகியிருந்த வீடு அமைந்திருந்தது. இரவு 10 அல்லது 11 மணியிருக்கலாம், ஆலயப்பகுதியினை இலக்கு வைத்து கடுமையான தாக்குதலினை இந்திய ராணுவமும், இலங்கைக் கடற்படையும் நடத்தின. ஆலய முன்றலில் வீழ்ந்து வெடித்த செல்களினால் அங்கிருந்த பலர் துடிதுடித்து இறந்து போனார்கள். குறைந்தது 30 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம், பலர் காயப்பட்டார்கள் என்று அங்கிருந்து வெளியே ஓடிவந்தவர்கள் கூறியபோது, சில மணிநேரத்திற்கு முன்னர் நாம் அமர்ந்திருந்த இடமே தாக்குதலுக்கு உள்ளானது என்று அறிந்தபோது நாம் அச்சத்தில் உறைந்துபோனோம்.

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

3 months 1 week ago
கோண்டாவில்ச் சந்தியில் இருந்து வலதுபுறம் திரும்பி, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் சனநடமாட்டம் பெரிதாக இருக்கவில்லை. அப்பகுதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடித்த அடையாளங்கள் தெரிந்தன. ஆனாலும் சில வீடுகளில் மக்கள் இருந்தார்கள். எம்மைக் கண்டதும் தங்கள் வீடுகளுக்குள் அழைத்துச் சென்று உண்ண உணவும் நீரும் கொடுத்தார்கள். எமக்கு என்ன நடந்தது என்பதுபற்றி அறிந்துகொள்ளும் ஆவல் அவர்களிடம் இருந்தது. முடிந்தவரையில் அவர்களிடம் கூறிவிட்டு எம் வழியே நடக்கத் தொடங்கினோம். செல்லும் வழியில் எம்மைப்போன்றே வெளியேற்றப்பட்ட‌ இன்னும் பலர். எல்லோரது பயணமும் நல்லூர்க் கோயிலை நோக்கியெ அமைந்திருந்தது. நல்லூர்க் கோயிலை அண்மித்தபோது அங்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருப்பது தெரிந்தது. மேலும் பலருக்கு அடைக்கலம் கொடுப்பதென்பது அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கடிணமானதாகப் பட்டதனால், உறவினர்கள் வீடுகள் இருந்தால் அங்கே செல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்கள். தகப்பனாரின் சகோதரர் ஒருவர் கொய்யாத்தோட்டத்தில் வசித்து வந்தார். ஆகவே அங்கே போகலாம் என்று எண்ணி தொடர்ந்து நடந்தோம். நாம் கொய்யத்தோட்டத்தை அடைந்தபோது கோண்டாவில், உரும்பிராய் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றி அவர்கள் ஓரளவிற்கு ஏற்கனவே அறிந்து இருந்தமையினால் எம்மை உயிருடன் கண்டது அவர்களுக்கு ஆறுதலைத் தந்திருக்க வேண்டும். சில நாட்கள் அங்கு தங்கலாம், பின்னர் நிலைமையினை அவதானித்து முடிவெடுக்கலாம் என்று தங்கினோம். ஒருவாரம் தங்கியிருப்போம் என்று நினைக்கிறேன். அங்கும் செல்த்தாக்குதல்கள் கடுமையாக நடத்தப்படத் தொடங்கின. இடைவிடாது பெய்த மழையினால் கொய்யத்தோட்டம், குருநகர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் போட்டுவிட, மக்கள் தஞ்சம் அடைவதற்குத் தன்னும் இடமின்றி அங்கலாய்த்தபடி இருந்தார்கள். இடைவிடாத மழையினூடே செல்த்தாக்குதல்கள் உச்சம் பெறத் தொடங்கின. யாழ்நகர் நோக்கி மிகக் கடுமையான செல்த்தாக்குதலை இந்திய இராணுவம் மேற்கொள்ளத் தொடங்கியது. கொய்யத்தோட்டம், சுண்டுக்குளி, ஈச்சமொட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக செல்கள் வந்து விழத் தொடங்கின. பல மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்படும் இத்தாக்குதல்கள் மதியமளவில் சற்று ஓய்வுக்கு வரும். அந்த ஓய்வு வேளையினைப் பாவித்து வீதிகளில் இறந்தும் காயப்பட்டும் கிடந்தவர்களை ஊர்மக்கள் எடுத்து வந்தார்கள். கொய்யத்தோட்டத்திலிருந்து ஈச்சமொட்டை செல்லும் வழியில் கொல்லப்பட்ட சுமார் 8 பொதுமக்களின் உடல்களை மாட்டு வண்டியில் கிடத்தி தென்னை ஓலைகளால் போர்த்திக்கொண்டு வந்தார்கள். மழை நீரில் முற்றாக நனைந்திருந்த உடல்களில் இருந்து இரத்தம் சொட்டச் சொட்ட மட்டு வண்டிகளில் உடல்கள் நாம் தங்கியிருந்த வீட்டின் முன்னால் எடுத்துச் செல்வதை அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். பழைய பூங்கா வீதியிலிருந்து பாசையூர் நோக்கிச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் ஓரத்தில் சரிந்துகிடக்க அதில் பயணம் செய்தவர் உடல் கடுமையாகச் சேதமாக்கப்பட்டு மழிநீரில் நனைந்தபடி இருந்தது. இப்படியே அப்பகுதியெங்கும் பலர் கொல்லப்பட்டார்கள். சில நாட்களின் பின்னர் நாமிருந்த வீட்டுப் பகுதியின் சுற்றத்திலும் செல்கள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கவே கொய்யாத்தோட்டத்தில் அமைந்திருக்கும் கிறிஸ்த்து ராசா ஆலயத்தில் அகதிமுகாம் ஒன்றினை அமைத்திருக்கிறார்கள், அங்கு சென்றால் தப்பித்துக்கொள்ளலாம் என்று யாரோ சொல்லவே, இருள் சூழ்ந்திருந்த பொழுதொன்றில் அங்கு சென்று அடைக்கலமானோம். ஆனால் அங்கு நாமிருந்த சில மணிநேரத்திலேயே மிகக் கொடூரமான செல்த்தாக்குதலை இந்திய ராணுவம் அப்பகுதி மீது நடத்தியது. பல நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று கூடியிருந்த கூட்டம் ஒப்பாரி வைக்குமாற்போல் கூக்குரலிட்டு அழத் தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் கொல்லப்படப்போகிறோம் என்கிற எம்மை ஆட்கொண்டது. இனி இங்கே இருந்தால் நிச்சயம் கொல்லப்படுவோம், வேறு எங்காவது சென்றாக வேண்டும் என்று பலர் பேசத் தொடங்கினர். புதிதாக அப்பகுதிக்கு அடைக்கலம் தேடி வந்தவர்கள் கூறத்தொடங்கிய கதைகளைக் கேட்டபோது இந்திய ராணுவம் மிகப்பெரும் படுகொலை ஒன்றினை நடத்தவே யாழ்நகர் நோக்கி முன்னேறி வருவது என்று பலர் பேசத் தொடங்கினர்.

பூரணநாயகி

3 months 1 week ago
எம் மக்களின் இப்படியான சொல்லொணா துன்பங்களையும், இழப்புகளையும் உறவினர்களும், நண்பர்களும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். வாழ்வா சாவா என்றே புலம் பெயர்தல், நிலத்திலும் நீரிலும், எப்போதும் இருக்கின்றது. சில வருடங்களின் முன் கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த ஒரு குஜராத்தி இந்தியக் குடும்பம், தாய் - தந்தை - இரண்டு சிறு பிள்ளைகள், ஒரு பனிப்புயலில் சிக்கி இறந்து போனார்கள். 'கடவுளே.............' என்று அரற்றுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை..............

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிப்பு; 6 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு

3 months 1 week ago
பணம் அரசியல் செல்வாக்கு திலீப் என்ற கயவனை விடுவித்து விட்டது. ஆனால் ஒருநாள் அம்பிடுவான். இப்படியான கயவர்கள் தமிழகத்திலும் இருக்கின்றார்கள்!

அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!

3 months 1 week ago
அனர்த்தத்தால் இருதய நோய்கள் 40 சதவீதமாக அதிகரிக்கும் அபாயம் Published By: Vishnu 08 Dec, 2025 | 08:51 PM (செ.சுபதர்ஷனி) அனர்த்த நிலமைகளின் பின்னர் தனிநபரிடம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 40 சதவீதமாக அதிகரிக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இருதய நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வைத்திய நிபுணர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை தித்வா புயலின் தாக்கத்தால் வெள்ளம், மண்சரிவு என பேரிடரை சந்தித்துள்ளது. இவ்வாறன அனர்த்த நிலமைகளின் பின்னர் தனிநபரிடம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 40 சதவீதம் அதிகரிக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பேரிடரின் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், வீடுகளை இழத்தல் மற்றும் அன்பானவர்களை இழத்தல் போன்ற உளவியல் தாக்கங்கள் ஒரு சிலருக்கு நாளடைவில் இருதய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். இந்த உளவியல் அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத் துடிப்பை வேகப்படுத்துகிறது. அத்தோடு குருதியழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட நோய் நிலமைகளால் அவதிப்படும் நாட்பட்ட நோயாளர்கள், சில நாட்களுக்கு மருந்துகளை உரியவாறு பெறவில்லை எனின் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். மோசமான தூக்கம் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருத்தல் மற்றும் பதற்றம் காரணமாக தூக்கமின்மை ஏற்படுவது, இருதயச் செயல்பாட்டைச் சீர்குலைக்கிறது. சீரற்ற உணவு மற்றும் பழக்கம், அவசர கால உணவுகள் மற்றும் அழுத்தத்தைச் சமாளிக்கப் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்குத் திரும்புவதும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது படபடப்பு போன்ற மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவமனையை நாடுவது அவசியம். குறிப்பாக இருதய நோயாளிகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்நாட்களில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/232822

நாடு முழுவதும் தடைப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

3 months 1 week ago
தொலைத்தொடர்பு சேவையை மீட்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை 08 Dec, 2025 | 07:35 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் நிலத்தடியிலிருந்து வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விலகியிருப்பதோடு, தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் வெள்ளம், நிலச்சரிவு என முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளது. அனர்த்த நிலமையால், பல பகுதிகளுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில பகுதிகளில் நிலத்தடியிலிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் வெளிப்பட்டுள்ளன.அவ்வாறு நிலத்திலிருந்து வெளியே தெரிந்த தொலைத்தொடர்பு கேபிள்களை சேதப்படுத்தல், அறுத்து எடுத்துச் செல்லுதல் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இத்தகைய சம்பவங்களைத் தவிர்ப்பதற்கும், அவற்றுக்கு எதிராக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், பொதுமக்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துமாறு டயலொக் ஆசியாடா நிறுவனம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அனர்த்தங்களுக்குப் பின்னர் சேதமடைந்த வீதிகள் புனரமைக்கும் போது, நிலத்தடியிலிருந்த தொலைதொடர்பு கேபிள்களும் சேதமடைந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தகவல் தொடர்பு சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் விளைவித்தல், அவற்றை அறுத்து எடுத்துச் செல்லுதல், அல்லது உடைமையாக வைத்திருத்தல் ஆகியன தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயற்பாடுகள் குறித்து ஏதேனும் தகவல் அறிந்திருப்பின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிப்பது அவசியம். மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை மீண்டும் புனரமைக்கும் போது நிலத்தடியிலிருந்து தொலைதொடர்பு கேபிள்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அதை சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். இது பாதிக்கப்பட்ட தொடர்பு சேவைகளை விரைவாகவும் மீட்டெடுக்க உதவும். https://www.virakesari.lk/article/232808

வெள்ளத்தில் மூழ்கிய Sri Lanka; தமிழர்களின் நிலை என்ன? | Ditwah Cyclone

3 months 1 week ago
Srilanka Flood-ல் பசியால் வாடியவர்களுக்கு உணவளிக்கும் பெண் - பேரிடருக்கு நடுவே ஒரு நெகிழ்ச்சி கதை இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை

3 months 1 week ago
ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை Published By: Vishnu 08 Dec, 2025 | 08:27 PM ஜப்பானில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பூகம்பம் 7.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. கடற்கரையில் வசிக்கும் மக்களை உடனடியாக உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232820

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

3 months 1 week ago
யாழ் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அமெரிக்க – இலங்கை விமானப்படை கூட்டு மனிதாபிமான நடவடிக்கை Published By: Vishnu 08 Dec, 2025 | 07:41 PM (இணைளத்தள செய்திப் பிரிவு) அமெரிக்க விமானப்படை (US Air Force) மற்றும் இலங்கை விமானப்படை (Sri Lanka Air Force) ஆகியன இணைந்து இன்றையதினம் முன்னெடுத்து அதிரடி மனிதாபிமான நடவடிக்கை மூலம், அம்பாறை, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்கள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடுகையில், இரண்டு Super Hercules விமானங்கள் மூலம் பெருமளவிலான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலங்கை விமானப்படை தளங்களுக்கு கொண்டுசென்றதாக தெரிவித்துள்ளார். “இன்று இரண்டு சூப்பர் ஹெர்குலீஸ் விமானங்கள், 3 மாவட்டங்களுக்கு ஒரே பணி. விரைவான ஒத்துழைப்பின் மூலம் கொண்டு செல்லப்பட்ட பெரும் நிவாரணப் பொருட்களை இலங்கை விமானப்படை தரையணி உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டது. உடனடி உதவி தேவைப்படும் மக்களிடம் இப்பொருட்கள் சென்றடைகின்றன” என தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, நாட்டின் பல பகுதிகளில் நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பின் வலிமையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232817

கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர்

3 months 1 week ago
கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் Published By: Vishnu 08 Dec, 2025 | 07:46 PM டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது. இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்து காணப்பட்டது. கடமைகளுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் பொது மக்கள் வரை இந்த பாதை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதனால் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகினர். எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை புனரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவுக்கு பாலத்தை புனரமைக்கும் பொறுப்பை இலங்கை அரசு வழங்கியிருந்தது. அதற்கமைவாக கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் குறித்த பாலத்தை புனரமைக்கும் பணியினை ஞாயிற்றுக்கிழமை (07) முதல் தொடங்கியிருக்கின்றனர். https://www.virakesari.lk/article/232816

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

3 months 1 week ago
பேரிடரால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் தேசிய மனநல வைத்திய பீடத்தினை நாடுங்கள்! 08 Dec, 2025 | 05:32 PM ( செ.சுபதர்ஷனி) நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் எவரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் உடனடியாக தேசிய மனநல வைத்திய பீடத்தை (1926) தொடர்புக் கொள்ளுமாறு களணி பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியரும் சிறுவர், யௌவன பருவ மனநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முழு நாடும் இயற்கை அனர்த்தத்தால் பாரிய அழிவை சந்தித்துள்ளது. பலர் உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர். இவ்வாறான பேரிடர்கள் எமது மன நலத்தை கடுமையாக பாதிக்கும். பொதுமக்களிடையே மன உளைச்சல் அதிகரித்துள்ளதை எம்மால் காணக் கூடியதாக உள்ளது. மன உளைச்சல் நாளடைவில் தீவிர மன நல நோய்களுக்கு வழிவகுக்கக் கூடும். ஆகையால் ஆரம்பத்திலேயே மன உளைச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்றவாறு தீர்வினை கண்டு மனதை ஆற்றுப்படுத்துவது அவசியம். தற்போது எவரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்திருப்பின் உடனடியாக அருகில் உள்ள தகுதிவாய்ந்த மனநல மருத்துவர் ஒருவரை அணுகி உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நல்லது. அத்தோடு மன நல வைத்திய பீடத்தைத் (1926) தொடர்புக்கொண்டு வைத்தியரை சந்திப்பதற்கு தேவையான வசதிகளை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும். சிறுவர்களின் மன நலம் பாதிப்புக்குள்ளாகியிருப்பின் முடிந்தவரை அவர்களை இயல்பு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவது அவசியம். அதற்கேற்ப சிறுவர்களை விளையாடுவதற்கு வாய்ப்பளிப்பதுடன், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட மனதிற்கு நெருக்கமானவர்களை சந்திப்பதற்கும் மனம்விட்டு உரையாடுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் கோபம், விரக்தி, தூக்கமின்மை, பசியின்மை மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். எமது நாடு பல சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்களுக்கும் கசப்பான சம்பவங்களுக்கும் முகங்கொடுத்துள்ள போதும், மக்களின் ஒற்றுமை, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் எவ்வாறான சூழ்நிலையிலும் மீள நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்தது. இம்முறை வெள்ள நிலைமை மற்றும் தித்வா புயல் காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டது. இதுபோன்ற பேரிடருக்குப் பின்னர், எமக்கு மிகப் பெரிய துன்பம் நேர்ந்துவிட்டதாக ஆழ்ந்த கவலையடைவோம். இதனால் வெறுமை, நம்பமுடியாத அதிர்ச்சி மற்றும் எதையும் செய்ய விருப்பம் இல்லாத நிலை ஏற்படலாம். இந்த அனர்த்த நிலைமை காரணமாக நீங்கள் கஷ்டங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகியிருந்தால், உங்களுக்காக இலங்கையில் உள்ள அனைவரும் உதவ முன்வருகிறார்கள். ஆகையால் உங்கள் முயற்சி எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளை கைவிட்டு விடாதீர்கள். வீட்டினை இழந்தாலும், குடும்ப உறுப்பினர் இழந்தாலும் உங்கள் மனதில் உள்ள நம்பிக்கைகளை கைவிட வேண்டாம் என்றார். https://www.virakesari.lk/article/232806 1926 National Mental Health Helpline, 1926 Chatline & 075 555 1926 WhatsApp line Providing the much needed psychological support to the Sri Lankan Public. A National Line under the Ministry of Health, Sri Lanka

'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள்

3 months 1 week ago
'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள் பட மூலாதாரம்,x 3 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் கங்கை அமரன் இன்று (டிச. 08) தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாவலர் சகோதரர்களில் கடைக்குட்டி கங்கை அமரன். தனது அண்ணன்களுடன் பல மேடைக்கச்சேரிகளில் பங்கேற்று இசையை கற்றவர். அண்ணன்களை குருநாதர்களாக நினைத்து, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். அவர் எழுதிய 10 பிரபல பாடல்கள் இங்கே. 1. செந்துாரப்பூவே... '16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற செந்துாரப்பூவே என தொடங்கும் பாடலை முதலில் எழுதினார் கங்கை அமரன். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்த படம் 1977ல் ரிலீஸ் ஆனது. முதன்முதலில் எழுதிய பாடலே நல்ல ஹிட் ஆனது. எஸ். ஜானகி குரலில், 'செந்தூர பூவே செந்தூர பூவே…ஜில்லென்ற காற்றே…' என தொடங்கும் அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. இளையராஜாவின் இசை, ஸ்ரீதேவியின் நடிப்பு, ஒளிப்பதிவாளர் நிவாஸ், இயக்குனர் பாரதிராஜா என பல விஷயங்களும் அந்த பாடலில் சிறப்பாக அமைந்திருக்கும். செந்துாரப்பூவே பாடலை பாடிய எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிய, ஸ்ரீதேவி பிற்காலத்தில் இந்திய சினிமாவில் புகழ்மிக்க நடிகையானார். 16வயதினிலே படம் பாரதிராஜா, ரஜினிகாந்த் போன்றவர்களை அடையாளம் காண்பித்தது. "உண்மையில் செந்துாரப்பூ என ஒன்று உலகில் கிடையாது. கற்பனைக்காக நான் எழுதினேன்" என்று பிற்காலத்தில் பேட்டிகளில் கங்கை அமரன் கூறியிருந்தார். அந்த செந்துாரப்பூ சினிமாவிலும் பின்னர் புகழ் அடைந்தது. இந்த பெயரில் ஒரு படமே வந்தது. அந்த பூ பெயரில் பல பாடல்கள் வந்தன. 'செந்தூரப்பூவே' எனும் பெயரில் தொலைக்காட்சி தொடரும் எடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,gangaiamaren 2. பூவரசம் பூ பூத்தாச்சு கங்கை அமரனின் அடுத்த பாடலும் ஒரு பூவை பற்றி அமைந்தது ஆச்சர்யம். மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் கிழக்கே போகும் ரயில் படத்துக்காக 'பூவரசம் பூ பூத்தாச்சு' பாடல். ரயிலையும், பூவையும் இணைத்து ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை சொல்லும் துள்ளல் பாடலாக எழுதினார் கங்கை அமரன். அந்த பாடலையும் எஸ்.ஜானகி பாடினார். ராதிகாவின் குறும்புத்தனமான நடிப்பு பாடலுக்கு சிறப்பை சேர்த்தது. 1978ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. அக்காலகட்டத்தில், இந்த பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது. 3. புத்தம் புது காலை அடுத்ததாக, இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் , எஸ்.ஜானகி கூட்டணியில் வெற்றி பெற்ற இன்னொரு பாடல் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம் பெற்ற புத்தம் புது காலை. அந்த பாடல் சூப்பர் ஹிட். ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. ஆடியோவில் மட்டுமே இருந்தது. ஆனாலும் அந்த பாடலுக்கு பல ஆண்டுகள் கழித்து விஷூவலாக இடம் பெறுகிற வாய்ப்பு கிடைத்தது. மேகா என்ற படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினார் இளையராஜா. திருமண வீடு பின்னணியில் ஒலிப்பதாக வரும் அந்த பாடலில் நடிகை சிருஷ்டி டாங்கே நடித்திருந்தார். பட மூலாதாரம்,gangaiamaren/Instagram படக்குறிப்பு,இளையராஜாவுடன் கங்கை அமரன் 4. ஆசையை காத்துல துாதுவிட்டு கங்கை அமரன் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற பாடல் ஜானி படத்தில் இடம்பெறும் 'ஆசையை காத்துல துாதுவிட்டு' . 1980ல் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்துக்கும் இளையராஜாதான் இசை. அண்ணன் கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் பாடலை கொடுத்தார் கங்கை அமரன். எஸ்.பி. ஷைலஜா பாடிய அந்த பாடல் இன்றும் ஒலிக்கிறது. 5. சின்ன மணி குயிலே அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அந்த பாடல்களுக்காகவே படம் ஓடியது. இளையராஜாவின் பாடல் மெட்டுக்களுக்காகவே அந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் எடுத்ததாக சொல்வார்கள். அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அதில் இடம் பெற்ற சின்ன மணி குயிலே, நம்ம கடை வீதி, பூவ எடுத்து, உன் பார்வையில், ஒரு மூணு முடிச்சாலே, காலை நேர பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. பட மூலாதாரம்,Youtube 6. நித்தம் நித்தம் நெல்லு சோறு மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் பாடலை அண்ணன் இசையில் எழுதினார் கங்கை அமரன். ரஜினிக்கு பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. இதே படத்தில் இடம்பெற்ற நித்தம் நித்தம் நெல்லு சோறு இன்றைக்கும் பிரபலமாக உள்ளது. அந்த பாடலையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அந்த பாடலுக்கு ஷோபா - ரஜினியின் பாவனைகள் கூடுதல் பலமாக அமைந்தது. இந்த பாடலை மறைந்த வாணி ஜெயராம் பாடினார். 7. பூங்கதவே தாள் திறவாய் நிழல்கள் படத்தில் வரும் பாடல் 'பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய்' இந்த பாடலை எழுதியதும் கங்கை அமரன்தான். இந்த பாடலை தீபன் சக்ரவர்த்தியும், உமா ரமணனும் பாடியிருப்பார்கள். 8. என் இனிய பொன் நிலாவே மூடு பனி படத்தில் வரும் 'என் இனிய பொன் நிலாவே' பாடலுக்கு தமிழ் சினிமாவில் மெலோடிகளில் தனியிடம் உண்டு. 1980ம் ஆண்டில் பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். பின்னாளில் தன்னுடைய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சூர்யா ரயிலில் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை பாடுவதாக அமைத்திருப்பார். 9. என் ஜோடி மஞ்சக்குருவி விக்ரம் படத்தில் இடம்பிடித்த என் ஜோடி மஞ்ச குருவி பாடலையும் கங்கை அமரன் தான் எழுதினார். அந்த பாடல் தமிழகத்தின் பல்வேறு சந்தோஷ நிகழ்வுகளில் இன்றும் பாடப்படுகிறது. இப்போது கூட பைட்கிளப் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி இருந்தார்கள். அப்போதே அர்த்தம் தெரியாத பல வார்த்தைகளை அழகாக பயன்படுத்தியிருந்தார் கங்கை அமரன். 10. விளையாடு மங்காத்தா மங்காத்தா படத்தில் தனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில், இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் விளையாடு மங்காத்தா பாடலை கங்கை அமரன் எழுதினார். அந்த பாடலில் கங்கை அமரனின் மற்றொரு மகனான பிரேம்ஜியும் பாடி இருந்தார். அஜித் ரசிகர்களுக்கு அது விருப்பமான ஹிட் பாடலாக இன்றும் இருக்கிறது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25nk4yg50o
Checked
Sat, 03/21/2026 - 07:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed