3 months 2 weeks ago
வணக்கம் ரதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். கன பேர் அக்பராலை வெளிக்கிட்டு கடைசியா யாழில் தான் சந்திக்கிறம் போல.
3 months 2 weeks ago
இதன் அடுத்த கட்டமாக இலங்கை போக்குவரத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர்பானம், சிற்றுண்டி எல்லாம் வழங்கப்படுமோ?
3 months 2 weeks ago
நான் நீண்ட கால (10 தொடக்கம் 15) ஆண்டுகால இலக்கினை கொண்டு பின்வரும் பங்குகளை வாங்கி வருகிறேன், பங்குகள் தொடர்பான உங்களின் மதிப்பீட்டினை கூறுங்கள். 1)AAPL 2)GOOG 3)NVDA 4)AMZN 5)CMG 6)ISRG 7)BRK B 8)NVO 9)PANW 10)V ETF SPY VIG VOO SCHD SHORT TERM HOLDING STOCKS OSCR FI XYZ நீண்ட கால பங்குகளில் முடியுமான வரை மாதா மாதம் குறித்த தொகையை முதலிடுகிறேன் (SIP) தான் நான் தொடங்கியது ஆனால் அப்பிடி SYSTERMETRIC கொண்டு செல்ல முடிவதில்லை உங்களின் மதிப்பீட்டினை கூறுங்கள்
3 months 2 weeks ago
நன்றி கோசான்
3 months 2 weeks ago
இதில் எனக்கு உடன் பாடில்லை. ஈழதமிழரிடம் திரள்நிதி எடுத்து, தலைவர் மாவீரரை வைத்து கல்லா கட்டும் சீமானின் அரசியலும்… தனது நிலை, இடம், பொருள், காலம், ஏவல் அறிந்து, ஈழ தமிழ் உறவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என விஜை சொல்வதும் ஒன்றல்ல. வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், நெடுமாறன், வீரமணி போல (பல விமர்சனங்கள் இருந்தாலும்) ஈழதமிழர் பற்றி உண்மையான கரிசனை கொண்ட பல அரசியல்வாதிகள் முன்பே சொன்னவைதான் இவை. ஒரு தமிழக அரசியல்வாதி ஈழதமிழருக்கு தார்மீக ஆதரவு கொடுப்பது வரவேற்க பட வேண்டியது, அனைவரையும் ஒரே சட்டியில் போட்டு நாமே வறுக்க கூடாது. 200 INR கிடைக்கும். ஆர்வம் இருந்தால் சொல்லவும்😂
3 months 2 weeks ago
பிரயோசனம் இருந்தா நானும் கழுவி ஊற்றலாம். இலங்கை அரசியலிலேயே நாங்க செல்லாக் காசு. ஆரியகுளத்து பொன்ராசா மாதிரி நிற்கிறார். பதவி முடிவடைவதற்குள் வடகொரிய தலைவரை மிஞ்சுவார். நல்லது சந்தோசமாக இருங்கள்.
3 months 2 weeks ago
விசில், மெல் கிப்சன் நடித்த பொண்ணுங்களுக்கு என்ன தான் வேணும் (What Women Want) என்ற படத்தின் உல்டா என்று நினைக்கிறேன். மனிதர்களுக்கு கிடைக்கவே கூடாத சக்தி இது தான். எப்படியோ பெண்களுக்குக் கல்யாணம் ஆன கொஞ்சக் காலத்தில் கிடைத்து விடுகிறது (என்று தாங்களே நம்பத் துவங்கி விடுகிறார்கள்) 😁.
3 months 2 weeks ago
ஒருடமும். போகவில்லை அண்ணை வீட்டில் தான் இருக்கிறேன்,....வேலை தேடினேன் முதலாளி சொன்னார் உன்னோட வேலை சுப்பர் முழு நேரம் செய்கிறாயா. என்று சரி ஒம் என்றேன்,....அப்படியே பொழுது போகுது இரண்டு வருடங்களுக்கு வரமாட்டேன் இடையிடை வந்து பார்க்கிறேன் சீமான் திரியை பார்க்க வேணும் போல இருந்தது எல்லோரும் கோஷசானுடன். இணைந்து சீமானை கழுவி ஊத்துகிறார்கள் .....உங்கள் ஐனதிபதி எப்படி ?????? 😂
3 months 2 weeks ago
வணக்கம் ரதன். உங்களை மிக்க மகிழ்வுடன் வரவேற்கின்றேன். தொடர்ந்து உங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் எழுதுங்கள்.............❤️.
3 months 2 weeks ago
வணக்கம் சகோதரம். மிக நீண்ட நாட்களின் பின் களத்தில் கண்டது சந்தோசம். எங்காவது போகும்போது ஒரு சொல்லு சொன்னா என்ன குறைந்தா விடுவீர்கள்.? இணைந்திருங்கள்.
3 months 2 weeks ago
நீங்கள் நினைப்பது போல் தவறான சிந்தனையுடன் அந்த கருத்தை நான் எழுதவில்லை. இருந்தாலும் உங்கள் இந்த கருத்திற்கு பதில் எழுதுகின்றேன். தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். அது யாரிடம் என்பதுதான் என் கேள்வி? வசதி இருந்தால் தான் என்பதும் ஒரு வழியில் சரிதான். ஆனால் அந்த வசதிக்கு முதலீடு செய்பவர் யார்? கழிவறையை சுத்தமாக வைத்திருப்பது உண்மையில் செலவு கூடிய செயல்பாடுதான். இதை மேற்கத்திய நாடுகளில் கண் குளிர பார்க்கின்றேன். பொது இடத்தில் மலசலம் கழிக்கவருபவர்கள் எல்லோரும் சமூக சிந்தனையாளர்கள் கிடையாது. மனித சீர்திருத்தம் என்பது அரசியலில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக யாழ் களத்தில் சொல்லி வருகின்றேன்.அதற்க்காக எனக்கு கிடைத்த பரிசுகள் எக்கச்சக்கம்.
3 months 2 weeks ago
கருணாநிதி,எம்ஜிஆர் தொடக்கம் இதர சிறு அரசியல்வாதிகள் அனைவரும் ஈழத்தமிழர் அரசியல் செய்தவர்கள் தான். சினிமாக்காரர்கள் ,தொலைக்காட்சிகள் கூட ஒரு சில லாபங்களுக்காக ஈழத்தமிழர் பிரச்சனைகளை கையில் எடுக்கின்றார்கள். எடுக்கிறார்கள். அது பற்றி யாருமே கொதிப்பதில்லை. அது ஈழத்தமிழர் பிரச்சனை உலகிற்கு தெரியப்படுத்துகின்றோம் என வாதிட ஒரு குழு இருக்கின்றது. இருப்பினும் சீமான் அரசியலில் மட்டும் மூன்று முடிச்சு போட்டு குத்தி முறியும் ஒரு சில புலம்பெயர் ரமிலர்கள் ஏன் எப்படி எதற்கு என புரியவில்லை?
3 months 2 weeks ago
நீங்கள் அப்படி எழுதியதை நான் வாசிக்க தவற விட்டுவிட்டேன் என நினைக்கின்றேன். மற்றும் படி தமிழக கட்சிகள்,இந்திய கட்சிகளை பொறுத்தவரை உங்கள் கருத்துத்தான் எனது எண்ண நிலைப்பாடுகளும்....
3 months 2 weeks ago
வடை தேத்தண்ணி பிரியர் ஆகாஷி அவர்களை சந்தித்து தமிழர்களை எப்படி அழிக்கலாம் என ஆலோசனை கேட்டால் இன்னும் நல்லாய் இருக்கும்.😂.
3 months 2 weeks ago
வேலையில்லாத கூட்டம் அரசியல் செய்ய விளையுது!
3 months 2 weeks ago
நானும் தான்,...
3 months 2 weeks ago
தமிழ்நாட்டில் அரசியல் செய்யு எந்த அரசியல் கட்சியும், அரசியல் தலைவரும் பின்வருபவனவற்றை மேடையில் சொல்லியே ஆகவேண்டும் (பாஜகவும், அதன் தமிழ்நாட்டு பிரதிநிதிகளும் இந்த சட்டகத்துக்குள் வரமாட்டார்கள்): இந்தி எதிர்ப்பு நீட் தேர்வு எதிர்ப்பு ஊழலை அடியோடு அழித்தல் சமூகநீதியை ஏற்படுத்தல் இலங்கை கடற்படையிடம் இருந்து அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாத்தல் கச்சதீவை மீட்டல் இலங்கை தமிழ் மக்களின் அகதிமுகாம்களை மேம்படுத்தல் ........ ஒரு துரும்பைக் கூட இந்த தலைவர்களால் அதன் இடத்திலிருந்து அசைக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் காலத்தின் மாற்றங்களால் சமூகநீதி அதன் பாதையில், ஒப்பீட்டளவில், சில முனைகளில் முன்னே சென்று கொண்டிருக்கின்றது. பாஜகவினர் மேடையில் சொல்ல வேண்டிய ஒரே விடயம்: பாரத மாதாக்கு ஜே..............
3 months 2 weeks ago
இலங்கை தமிழர் பிரச்ச்சனைக்கு தமிழநாட்டு அரசியல்வாதிகள் எவராலும் ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது என்பதே ஜதார்ததம். சீமான் போன்றவர்கள் இதை வைத்து தமிழ் நாட்டு தற்குறிகளை ஏமாற்றி ஏதும் தரகு அரசியலை செய்து பிழைத்து வருகின்றனர். அதை பார்தத விஜையும் அதே சீமான் வகையறாகளின் அரசியலை பின்பற்றி இந்த விடயத்தை வைத்து ஏதும் இலாமடையலாமோ என்று எண்ணுவதே இந்த விஜயின் பேச்சு.
3 months 2 weeks ago
இது சம்பந்தமான திரியில் அலசி, அண்ணனை கிழித்து காயப்போட்டிருக்கு…நேரம் கிடைக்கும் போது வாசிக்கவும். சீமான் விஜையை முன்பே விமர்சிக்க தொடங்கி விட்டார் என்பது உண்மை. ஆனால் ஸ்டாலின், சீமான் சந்திப்புக்கு பிந்தான் மிக கீழ்தரமாக விமர்சிக்கிறார். #வாங்கின காசுக்கு அதிகமாவே கூவிறாண்டா கொய்யால மொமெண்ட் சீமாம் சபரீசனை சந்தித்தார் என செய்தி போட்டது யுடியூப் ஊடகம் அல்ல. தமிழகத்தின் முண்ணனி நிறுவனமான விகடன். இது பொய்யானால் - சபரீசன், சீமான் இருவருக்கும் அது பெரிய அவதூறு. ஆனால் இரு கள்ளரும், திருடனுக்கு தேள் கொட்டியது போல் கள்ள மெளனம் காப்பது - விடயம் உண்மை என்பதையே காட்டுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் இருக்கு. அண்ணி விடயத்தில் பாஜக வக்கீலை பிடித்து உச்ச நீதிமன்றை வளைத்த சீமான் - விகடன் மீது வழக்கு போட முடியாது என்பது நொண்டிசாட்டு.
3 months 2 weeks ago
மேற்குலகு தங்களுக்குள் ஏதோ ஒரு நாடகம் அல்லது தொடர் நாடகம் நடத்துகின்றார்கள் போல் எனக்கு தென்படுகின்றது.
Checked
Sat, 01/10/2026 - 21:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed