3 months 2 weeks ago
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை; இறுதி முடிவு எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் Published By: Vishnu 22 Sep, 2025 | 01:36 AM (இராஜதுரை ஹஷான்) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. இவ்வாரம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் செயற்பாடுகள் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கும்,ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் முற்றிலும் விரோதமானது. பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தையும், எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் அவர் பாதுகாப்பதில்லை. ஆளும் கட்சிக்கு சார்பாகவே செயற்படுகிறார். சபாநாயகர் தனது பதவிக்கான அதிகாரம் மற்றும் பொறுப்பினை அறியாமல் உள்ளரா என்பது சந்தேகமாகவுள்ளது. சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்கவே சபாநாயகரை இயக்குகிறார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை முறையற்ற வகையில் சபாநாயகரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிப்பதற்கு சபாநாயகர் குறிப்பிட்ட காரணிகள் நடைமுறைக்கு பொறுத்தமற்றது. சபாநாயகரின் ஒருதலைபட்சமான செயற்பாட்டை கண்டித்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை.இவ்வாரம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.சபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/225693
3 months 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சங்கர், ஜிம்பாப்வேயிலிருந்து இராஜதந்திரப் பரிசாக 1998-ல் இந்தியாவிற்கு வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்று. கட்டுரை தகவல் அபிஷேக் டே பிபிசி நியூஸ், டெல்லி 21 செப்டெம்பர் 2025 இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள், நீண்ட நாட்களாக மறுவாழ்வு அளிக்க முயன்ற ஒரு அதிகம் நேசிக்கப்பட்ட யானையின் மரணத்திற்காகத் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றனர். டெல்லியின் மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஆப்பிரிக்க யானையான சங்கர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தனிமையில் கழித்தது. புதன்கிழமை அன்று உணவு உண்ண மறுத்து, மாலைக்குள் அது சரிந்து விழுந்தது. கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்தாலும் 29 வயதான அந்த ஆண் யானை, 40 நிமிடங்களுக்குள் இறந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 24 ஆண்டுகளாக, சங்கர் ஒரு தனிமையான வாழ்க்கையை அனுபவித்தது - இதில் குறைந்தது 13 ஆண்டுகள் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டிருந்தது. அதன் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. "மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் சஞ்சீத் குமார் பிபிசியிடம் தெரிவித்தார். ஜிம்பாப்வேயிலிருந்து இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஷங்கர் தயாள் சர்மாவுக்கு இராஜதந்திரப் பரிசாக 1998-ல் வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றுதான் சங்கர். ஆனால், சங்கரின் துணையான மற்றொரு யானை 2001-ல் இறந்துவிட்டது என்று குமார் கூறினார். பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் மிருகக்காட்சிசாலை அதிகாரி ஒருவர், அதன் துணையின் மரணத்திற்குப் பிறகு, சங்கர் தற்காலிகமாக மிருகக்காட்சிசாலையில் உள்ள ஆசிய யானைகளுடன் தங்கவைக்கப்பட்டது, ஆனால் அந்தத் திட்டம் பலனளிக்கவில்லை என்றார். "அவை ஒன்றுக்கொன்று மிகவும் ஆக்ரோஷமாக இருந்தன" என்று அவர் கூறினார். மேலும், சங்கர் விரைவில் தனிமைப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். "அதன் துணை இருந்தபோது சங்கர் மிகவும் விளையாட்டாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவை மிருகக்காட்சிசாலை பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன. உடனிருந்த ஆப்பிரிக்க யானை இறந்த பிறகு சங்கரின் நடத்தை மாறியது. சங்கர் வேறு எந்த யானையின் துணையையும் ஏற்கவில்லை, மற்ற யானைகளும் சங்கரை ஏற்கவில்லை. அது நண்பனற்றதாக விடப்பட்டது" என்று அந்த முன்னாள் அதிகாரி கூறினார். 2009-ல், ஆறு மாதங்களுக்கு மேல் யானைகளைத் தனியாக வைத்திருப்பதற்கு மத்திய அரசு விதித்த தடையை மீறி, சங்கர் 2012-ல் ஒரு புதிய அடைப்புக்கு மாற்றப்பட்டது, அது கிட்டத்தட்ட அதை தனிமையில் அடைத்தது. அது இறக்கும் வரை அங்கேயே இருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சங்கரின் துணை 2001-ல் இறந்துவிட்டது, இதனால் டெல்லி மிருகக்காட்சிசாலையில் அதுவே ஒரே ஆப்பிரிக்க யானையாக இருந்தது. பல ஆண்டுகளாக, விலங்கு ஆர்வலர்கள் சங்கரை மிருகக்காட்சிசாலையிலிருந்து அகற்றி, மற்ற ஆப்பிரிக்க யானைகள் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று கோரி வந்தனர். 2021-ல், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில் சங்கரை மற்ற ஆப்பிரிக்க யானைகள் உள்ள ஒரு சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, மிருகக்காட்சிசாலைகளிலிருந்து காட்டு விலங்குகளை மாற்றுவதைக் கையாளும் குழுவை அணுகுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது. புதன்கிழமை வரை, இந்தியாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளில் இருந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் சங்கரும் ஒன்று. வயது வந்த மற்றொரு ஆண் யானை கர்நாடகாவின் மைசூர் மிருகக்காட்சிசாலையில் வாழ்கிறது. இரண்டு ஆப்பிரிக்க ஆண் யானைகளுக்கும் துணையைத் தேடுவதில் மிருகக்காட்சிசாலைகள் நீண்ட காலமாக சிரமப்பட்டு வருகின்றன. அதிக செலவுகள், ஒழுங்குமுறை தடைகள், பல ஒப்புதல்கள் மற்றும் விலங்கு நலன் குறித்த கவலைகளால் இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி மிருகக்காட்சிசாலையில் சங்கர் வைக்கப்பட்டிருந்த நிலைமைகளையும் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். அதன் அடைப்பு இருட்டாகவும், போதுமானதாக இல்லாமலும் இருந்ததாக அவர்கள் விவரித்துள்ளனர். "அது இப்படி இறந்ததை காண்பது மனதை உடைக்கிறது," என்று 2021 நீதிமன்ற மனுவைத் தாக்கல் செய்த லாப நோக்கற்ற அமைப்பான 'யூத் ஃபார் அனிமல்ஸ்' (Youth For Animals) நிறுவனரான நிகிதா தவான் கூறினார். "இதை எளிதாகத் தடுத்திருக்கலாம். அதற்கு (சங்கருக்கு) எந்த கடுமையான உடல்நலப் பிரச்சினைகளும் இல்லை. அது மிகவும் இளமையாக இருந்தது." ஆப்பிரிக்க யானைகளின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். புதன்கிழமை காலை வரை சங்கரின் விஷயத்தில் "நோய் அல்லது அசாதாரண நடத்தை" குறித்த எந்த அறிக்கையும் இல்லை என்று டெல்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் குமார் கூறினார். விலங்கு நல ஆர்வலர் கவுரி மௌலேகி, சங்கரின் மரணம் "பல ஆண்டுகளின் நிர்வாக அலட்சியம் மற்றும் கவனக்குறைவை" பிரதிபலிப்பதாகக் கூறினார். மேலும், இது ஒரு அமைப்புத் தோல்வி என்றும், இதற்குப் பொறுப்பு கேட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "ஒரு உள் விசாரணை மட்டும் போதாது," என்று மௌலேகி பிபிசியிடம் கூறினார். "இது ஒரு அமைப்புத் தோல்வி. இதற்கு உண்மையான பொறுப்பு தேவை. மேலும், இது நமது மிருகக்காட்சிசாலைகளில் யானைகள் மற்றும் பிற ஒன்றாக கூடி வாழும் விலங்குகளைத் தனிமையில் அடைத்து வைக்கும் கொடுமையான நடைமுறைக்கு நிரந்தரமாக முடிவு கட்டுவதற்கு ஒரு முக்கிய தருணமாக அமையவேண்டும்." அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, குமார், "அனைத்து கவனிப்பு, பராமரிப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன" என்று கூறினார். ஆனால், குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். 2024 அக்டோபரில், உலக மிருகக்காட்சிசாலைகள் மற்றும் மீன் காட்சியகங்களின் சங்கம், சங்கரின் வாழ்க்கை நிலைமைகள் குறித்த கவலைகள் காரணமாக டெல்லி மிருகக்காட்சிசாலையை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது. அது சங்கிலியால் பிணைக்கப்பட்டதாக வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த உலகளாவிய அமைப்பு டெல்லி மிருகக்காட்சிசாலைக்கு சங்கரை இடமாற்றம் செய்ய அல்லது அதன் பராமரிப்பை மேம்படுத்த 2025 ஏப்ரல் வரை அவகாசம் அளித்தது. காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க தவறினால், அதன் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்றும் அது எச்சரித்தது. இந்த இடைநீக்க அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து, ஒரு மத்திய அமைச்சர் சங்கரின் அடைப்பைப் பார்வையிட்டார். அதன் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். அதற்கு ஒரு பெண் துணையை கொண்டுவரத் திட்டமிடுவதாக அக்டோபர் 15 அன்று அரசு அறிவித்தது. ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா ஆர்வம் காட்டியுள்ளன என்றும், அதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன என்றும் அது கூறியது. உலக மிருகக்காட்சிசாலைகள் மற்றும் மீன் காட்சியகங்களின் சங்கத்திடமிருந்து தங்களுக்கு வேறு எந்த அறிவிப்புகளும் வரவில்லை என்று டெல்லி மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஒரு துணை ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்பே சங்கர் இறந்துவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c930ddp1zdko
3 months 2 weeks ago
ஆங் அப்படியொரு நிலை இருக்கா? இல்லை வருமா? சர்வதேச அளவில் இந்தியாவின் இருப்பு தளர்ந்து வருகிறது, அதில இவர்கள்தான் இந்தியாவை தூக்கி நிலைநிறுத்துகிறார்கள். இத்தனை தமிழரை அழித்து தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்கியதே இந்தியாதான், அதை அனுரா வெளிப்படையாகவே கூறியுள்ளார். அவருக்கு இவை இந்தியாவை கதாநாயகனாக காட்ட வேண்டிய தேவை.
3 months 2 weeks ago
22 Sep, 2025 | 11:43 AM நாட்டு மக்கள் தொகையில் 16.6 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரவித்தார். கண்டி செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கு மாவட்ட ரீதியில் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவே இந்த கூட்டம் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டியில் நடத்தப்பட்டது. அதன்போதே அவர் தனது தலைமையுரையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில் வாழ்கின்றனர். மேலும் இந்த நிலைமையை 2030ஆம் ஆண்டுக்குள் 5% ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான செயற்றிட்டங்கள் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். கண்டி மாவட்ட மேலதிகச் செயலாளர் லலித் அட்டம்பாவல உட்பட மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/225732
3 months 2 weeks ago
சுடலை ஞானம் பேசுகிறார் அம்மணி. இவர் ஆட்சி நடத்தும்போது தமிழரை சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்காமல் நல்லாட்சி நடத்தியிருக்கலாம். அன்று விதைத்ததை இன்று அறுக்கிறார் கவலையோடு. இனி கவலைப்பட்டு என்ன பிரயோசனம். "ஏழை அழுத கண்ணீர் ஏழு தலைமுறைக்கு." "ஏழையின் கண்ணீர் கூரிய வாள் போன்றது." அறுத்தே தீரும். ம், வைத்தியசாலை, ஆலயம் என்று பாராமல் விரட்டி விரட்டி அடித்தீர்களே. இப்போ உங்களுக்கு சிகிச்சை. உங்களுக்கும் சந்தர்ப்பம் உண்டு கவலைப்படாதீர்கள். இந்த குற்றங்கள் எல்லாம் இன்று நேற்று நடந்தவையல்ல, உங்கள் ஆட்சி காலத்திலும் நடந்தவையே, நீங்களும் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்காக நீங்களும் பொறுப்புக்கூறவேண்டும். யாருமே ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப விரும்பவில்லை. ஊழலிலேயே வாழ்ந்து, ஊக்குவித்து வளர்த்து விட்டவர்கள். அதற்காக நீங்களும் தண்டிக்கப்பட வேண்டியவரே. ஊழலை ஒழிக்காமல் எப்படி நல்லாட்சி செய்வது என்றும் சொல்லலாமே. பிச்சைக்காரரெல்லாம் ஆட்சி நடத்திய நாடு இதுவாகத்தான் இருக்கும். எல்லா ஜனாதிபதிகளும் வீடு இல்லை, வாழ வழியில்லை என்கிறார்கள். ஆனால் ஆட்சியை பிடிப்போமென்றும் சூழுரைக்கிறார்கள்.
3 months 2 weeks ago
பலி அல்லது காயம் ஏதாவது போட்டு நிரப்பிக் கொள்ளலாம். இவ்வளவு தான் மனித உயிருக்கு இவ்வுலகு வைத்திருக்கும் மதிப்பு.😭
3 months 2 weeks ago
அவர்களிடம் கேட்டு பலனில்லை ஏன்னென்றால் இந்த பாரிய மீன்வள கொள்ளை சுரண்டல் இரு நாட்டு அரசுகளின் ஆதரவுடன் தான் நடை பெறுகிறது மன்னார் வளைகுடா பகுதியில் ஐ நாவால் பாதுகாக்கப்பட்ட பவள பாறை தொகுதிகளை இந்த உலகில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை வைத்து இருக்கும் ரோலர்கள் சத்தம் சந்தடி அற்று அழிக்க தொடங்கி விட்டன இதற்க்கு பல அரசியல் பின் புல காரணிகள் உள்ளன அதே வேளை இலங்கை சிங்கள அரசோ உடனடியாக நடவடிக்கைக்களை எடுக்காமல் வட கிழக்கில் தமது நீண்ட கால சிங்கள அரசியல் நலனை பேணுவதிலேயே குறியாக உள்ளது . அத்து மீறி இயற்கையான பவள பாறைகளை அழித்து நாசம் பண்ணும் கடல் கொள்ளையர் மீது மென்மையான அணுகுமுறையை கையாண்டு கொண்டு இலங்கையின் வடகிழக்கு எங்கும் விரைவான கடவு சீட்டுகளை இலகுவாக கிடைக்கும் வண்ணம் பல அலுவலங்களை திறந்து வைக்கின்றது அதனால் பல்லாயிர கணக்கான இளையோர்கள் மாற்று வழி தேடி செல்கின்றனர் .
3 months 2 weeks ago
ஓம் நீங்கள் எழுதியதை யாழ்களத்தில் கண்டுள்ளோம். இலங்கை கடல் வளங்களை கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை ஈழ தமிழர்களை பேய்காட்டுவதற்காக தொப்பிள் கொடி உறவுகள் என்று சொல்லி கொள்வோம் என்பது அனைத்து தமிழ்நாட்டு கட்சிகள் ஊடகங்களின் கொள்கையாகும்.
3 months 2 weeks ago
மேற்கு / us நினைப்பது மற்றவர்கள் பேயர்கள் என்று. ரஸ்சியாவின் (புட்டினின் அல்ல, அனல் மேற்கின் / us குழப்பம் இதுவே, புட்டினின் பிரச்சனையாக பார்ப்பது) இதுவே பொதுவான அணுகுமுறை இங்கே எதிர்வு கூறப்பட்டது தானே. புட்டினை அடிப்படையாக கொண்டே, புட்டினை இல்லாமல் ஆக்குவது பற்றி வெளிப்படையாகவே கதை க்கப்பட்டது. ருசிஷ்யவின் பார்வையில் - ஒடத்த்தொடங்கியது, எதிர்பகுதி யுத்தநிறுத்ததை கோரும் நிலைக்கு கொண்டுவந்து விட்டு இருப்பது. இரானுக்கு வேண்டும் என்றே பிரித்தானிய, பிரான்ஸ் வாலுகள், பாதுகாப்பு சபையில் snap back ஐ தாளில் மட்டும் நிறைவேற்றி இருப்பது, US ஐ உக்கிரைனில் இருந்து விலத்தாமல் வைத்து இருக்க. (ருசியா, சீன நடைமுறை படுத்துவதை தடுத்து விட்டன, விடும்)
3 months 2 weeks ago
காலி, உனவட்டுன ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலா ஹோட்டலில் விருந்தில் இருந்த 2 இலங்கையர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் குழு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியில் ஹோட்டலை விட்டு வெளியேறியது. சுற்றுலா பயணிகள் இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்கள் ஒரு காரில் சுற்றுலாப் பயணிகளைத் துரத்திச் சென்று, அவர்களின் தடுத்து, பின்னர் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட ஜெர்மன் பிரஜைகள் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். இலங்கையர்கள் கைது சந்தேக நபர்களும் அவர்கள் வந்த காரும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 26 வயதுடைய ரூமஸ்ஸல பகுதியை சேர்ந்தவர்களாகும். அவர்கள் சுற்றுலா தொழிலிலும் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேலும் தாக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். https://tamilwin.com/https://tamilwin.com/
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
சுமந்திரனின் அனுதாபி, அபிமானிகள் அப்பப்போ வந்து கருத்து வைப்பார்கள்!
3 months 2 weeks ago
இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.
3 months 2 weeks ago
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துக்கல் நாடுகள் பாலஸ்தீன நாட்டை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அல்லற்படும் மக்களுக்கு நிம்மதியான. அமைதியான வாழ்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.
3 months 2 weeks ago
இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியாவிலா தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்? ஒரு மேடையில் பேசும்போது கேள்வி கேட்க எவருமே இல்லையா?
3 months 2 weeks ago
புதிதாக கோயில் கட்டப்பட்டால் அதனை ஒரு அருங்காட்சியத்திற்கு போவது போல அந்த கோயிலுக்கு போக வேண்டும் என சொல்வார்கள், அந்த கோயில் எங்காவது ஒரு மூலையில் இருக்கும், அதற்கும் போகும் வழிகள் கற்களாக இருந்தாலும் அந்த கடவுளின் அருளால் வாகன சக்கரம் பழுதாவதில்லை, மனதில் தோன்றும் எண்ணங்களை வெளியே சொல்லும் தைரியம் இருக்காது🤣. மக்களின் நம்பிக்கைகள் மிக சக்தி வாய்ந்தவை சிலர் தம்து நம்பிக்கைக்காக பிறரின் உயிரை எடுக்கிறார்கள், சிலர் அவர்களது மூட நம்பிக்கைகளை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள், தமக்கு உவப்பான விடயங்களாக அல்லது தாம் சார்ந்த விடயங்களை கண்ணை மூடி நம்புபவர்கள் அதே நேரம் மற்ற விடயங்களில் கேள்வி கேட்டு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இங்கு படித்தவர்கள் கூட இப்படி இருப்பதுதான் வருத்தமளிக்கும் விட்யமாக இருக்கின்றது, சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய படித்தவர்கள்தான் அதிகளவில் சமூக அடக்குமுறைகளில் பலவழிகளில் பங்களிக்கிறார்கள்.
3 months 2 weeks ago
திமுக கட்சியினரிடமும் இதே கேள்வியை/ வேண்டுகோளை வைக்கலாமே நிழலியாரே?
3 months 2 weeks ago
இந்த உலகம் வேறொரு ஒருங்கிணைப்பிற்குள் ஒன்று சேரவேண்டிய காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன். இன்றைய உலக நியதிகளுக்குள்..... ஐநா சாதித்ததென்ன? அவர்களது இதர அமைப்புகள் சாதித்தது என்ன? பல மனித/ மிருக நலன்புரி இயக்கங்கள் கூட இதுவரை எதையுமே சாதித்து காட்டவில்லை.
3 months 2 weeks ago
சுப்ரா பாதம் என்ற ஜெய்கணேஷ் நடித்த பக்திப் படம் சிறு வயதில் பார்த்தேன் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் நாராயணா என்று அறிந்தேன் ஓம் நமோ நாராயணா....
3 months 2 weeks ago
டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க் கேடரினா டிஷ்செங்கோ — சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025, 22:01 32645 அலாஸ்காவில் விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான அலாஸ்கா சந்திப்பு மற்றும் கிழக்கு உக்ரைன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிராகரித்த பிறகு, ரஷ்ய ஆட்சியாளர் விளாடிமிர் புடின், உக்ரைனின் எரிசக்தி துறை மற்றும் பிற உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் உட்பட இராணுவ விரிவாக்கத்தைத் தொடர முடிவு செய்தார். மூலம்: ப்ளூம்பெர்க் , கிரெம்ளினுக்கு நெருக்கமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி. விவரங்கள்: ஆதாரங்களின்படி, "உக்ரைனை தனது நிபந்தனைகளின் பேரில் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த இராணுவ மோதல்தான் சிறந்த வழி என்றும், டொனால்ட் டிரம்ப் கியேவின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகம் செய்ய வாய்ப்பில்லை என்றும் புடின் முடிவு செய்துள்ளார்". உக்ரைனின் மின் கட்டமைப்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகளை தொடர்ந்து குறிவைக்க புடின் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தைகள், போரில் தலையிடுவதில் டிரம்ப் ஆர்வம் காட்டவில்லை என்பதை புடினை நம்ப வைத்ததாக அவர்கள் மேலும் கூறினர். ஆங்கரேஜில், கியேவ் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட்களின் மீதமுள்ள கைப்பற்றப்படாத பகுதிகளை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டால், தெற்கு உக்ரைனில் போர்களை நிறுத்தி முன்னணியை முடக்க புடின் முன்மொழிந்தார். உக்ரைன் அதன் ஆயுதப் படைகளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நேட்டோவில் சேரும் இலக்கைக் கைவிட வேண்டும் என்றும் அவர் முன்னதாகக் கோரினார். இந்த நிபந்தனைகளை உக்ரைன் நிராகரித்துள்ளது, மேலும் இது தனது தீவிரத்தை நியாயப்படுத்துகிறது என்று புடின் நம்புகிறார் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமானவர்கள் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தனர். உக்ரைனின் விமானப்படை கட்டளையிலிருந்து ப்ளூம்பெர்க் சேகரித்த தரவுகளின்படி, டிரம்ப் மற்றும் புடினின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்ய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் சுமார் 46% அதிகரித்துள்ளன. ப்ளூம்பெர்க்கின் மேற்கோள்: "புடின் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசாவில் நடக்கும் போரை கவனித்து வருகிறார் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமான இருவர் தெரிவித்தனர். காசாவில் நெதன்யாகுவின் பிரச்சாரத்தை ரஷ்யாவின் உக்ரைன் போரை விட கடுமையானதாக அவர் கருதுகிறார், மேலும் இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அரசாங்கங்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, இது மாஸ்கோ மீதான அவர்களின் விமர்சனத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறார்." விவரங்கள்: புடின் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார், ஆனால் தனக்குப் பொருத்தமாக இருக்கும் வகையில் செயல்படுவார் என்று ப்ளூம்பெர்க்கின் வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னணி: ஆகஸ்ட் 15 அன்று, டிரம்ப் மற்றும் புடின் அலாஸ்காவில் தங்கள் முதல் பேச்சுவார்த்தையை நடத்தினர் . உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்கள் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து, இராஜதந்திரம் மூலம் ரஷ்ய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, புடின் உக்ரேனிய பிராந்தியங்கள் மீது, குறிப்பாக தலைநகர் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ஒரு பெரிய அளவிலான ரஷ்ய வான்வழித் தாக்குதலின் போது, ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளியை மீறின . உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் புடின் தன்னை ஏமாற்றிவிட்டதாக டிரம்ப் கூறினார் . செப்டம்பர் தொடக்கத்தில், ரஷ்ய-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அல்லது புடினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு குறித்து டிரம்ப் பெருகிய முறையில் அவநம்பிக்கையுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.pravda.com.ua/eng/news/2025/09/20/7531757/ கிரெம்பிளினுக்கு நெருக்கமான ஆதாரம் எது என யாருக்காவது தெரியுமா? இந்த ஆதாரமற்ற செய்தியினை இங்கே பதிந்துள்ளேன் என என்மேல் குற்றம் சாட்டமாட்டீர்கள் என நம்புகிறேன்.🤣
Checked
Sat, 01/10/2026 - 21:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed