புதிய பதிவுகள்2

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

3 months 2 weeks ago
12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படை கப்பல் Published By: Digital Desk 3 01 Dec, 2025 | 03:09 PM இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது. இந்த நிவாரணப் பொருட்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்கப்படவுள்ளது. இக்கப்பலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி,கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர,கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரவீந்திர திசேரா,மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் இறங்கு துறையில் வைத்து வரவேற்றனர். இதனை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கப்டன் முகுந்,இலங்கையின் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நிவாரண பொருட்களை இறங்கு துறையில் வைத்து ஒப்படைத்தார். "சமுத்திரத்தில் தோழமை" (சாஹர் பந்து) என்ற உதவித்திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், குடிநீர், படுக்கை விரிப்புக்கள், சுகாதார சுத்திகரிப்பு பொருட்கள், உடைகள், துவாய்கள், பெண்களுக்கான சுகாதார துவாய்கள் கொண்ட இவ் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232145

மன்னாரில் குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு, மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு

3 months 2 weeks ago
01 Dec, 2025 | 04:03 PM மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (01) காலை ஒரு தொகுதி உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முயற்சியினால் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் திங்கட்கிழமை (01) காலை 10.30 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. குஞ்சுக்குளம் மற்றும் மாதா கிராம பகுதியில் சுமார் 304 குடும்பங்களைச் சேர்ந்த 133 நபர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை, ஆலயம், பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த உலர் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ,உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப் மற்றும் பணியாளர்கள் இணைந்து குறித்த பொருட்களை வானூர்தி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/232147

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

3 months 2 weeks ago
புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் மூலமாக அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான 50 லக்ரோஜன் மாப்பெட்டிகள், 50 சமபோச பொதிகள் யாழ்ப்பாணம் சிற்றி மெடிக்கல் நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்பட்டு உலகத் தமிழ் மாணவர் ஒன்றிய தனுசன் தலைமையிலான மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு 84250 ரூபா. நன்கொடையாளர்கள் விபரம் 1) செல்வி மதுரா சிவகுமார் [டென்மார்க் (சுழிபுரம் கிழக்கு)] அவர்களின் 9 ஆம் ஆண்டு (01/12/2025) நினைவாக 30000 ரூபா தந்தையார் இராசையா சிவகுமார் வழங்கியுள்ளார். 2) சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளை (அமரர் திருமதி பூலோகதேவி ஆண்டியப்பன் ஞாபகார்த்தமாக) ஊடாக 30000 ரூபா நன்கொடை கிடைக்கப்பெற்றது. 3) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம் (சுழிபுரம் கிழக்கு, ஏழாலை) ஞாபகார்த்தமாக மகள் திருமதி லக்ஸ்மா றுக்மன்(UK) 20000 ரூபா நன்கொடை அளித்துள்ளார். இந்த பணிகளுக்கு உதவிய நன்கொடையாளர்களுக்கும் சகோதரர் கொலின், உலகத் தமிழ் மாணவர் ஒன்றிய மாணவர்கள் தனுசன் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். இந்த நிவாரணப் பொருட்கள் மன்னார் மாவட்டத்திற்கு எடுத்து சென்று வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை

3 months 2 weeks ago
சுனாமியின் போதும் தமிழர்களின் அழிவின் பின்னும் இலங்கை வங்கு ரோத்து நிலையின் பின்பும் சிங்களத்தின் தமிழர் எதிர்ப்பு இனவாதம் எள்ளளவும் குறையவில்லை இனியும் குறையும் என்று நம்புவது அடி முட்டாள் தனத்தையே குறிக்கும் . இங்கு அனுரா அரசு என்ன எந்த அரசை நம்பி பணம் அனுப்பினாலும் பணத்தை வாங்கி தின்று விட்டு கொழுப்பெடுத்து இன்னும் நாலு புத்தர் சிலையை தமிழர் பகுதிகளில் வைத்து இனவாத விசர் ஆடுவினம்.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

3 months 2 weeks ago
Mantras and Miracles · Suivre ersotnSopd2brh951 n1924e7fl2m02l9cuh 1gm6e5vft08t6i,of9c:262 · அஹோபிலம் மடத்தில் அழுத முஸ்லீம் மூதாட்டி! நேரம் மாலை மணி 5 இருக்கலாம். தஞ்சை ஜில்லா மாயவரம் பக்கத்தில் உள்ள தேரழுந்தூர் அக்ரஹாரம் , அஹோபில மடத்தின் வாசல் திண்ணையில் நடந்தது இந்த சம்பாஷணை. ஊரில் இருந்த ஒரே அக்ரஹாரத்தில் மிச்சம் மீதி இருந்த நான்கைந்து பிராமண குடும்பத்தில் ஒன்று அஹோபில மடத்தின் இந்தக் கிளை. 600 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தில் அஹோபில மலையில் துவங்கிய இந்த மடம், ஒரு காலத்தில் விண்ணைப்பிளக்கும் வேத பாராயணம் விழாக்கள் மற்றும் நான்கு வீதி முழுதும் நிறைந்திருக்கும் பெரிய பெரிய பிராமண அய்யங்கார் வீடுகள் என்று கல கலப்பாக இருந்தது . இன்று அக்ரஹாரங்கள் முஸ்லிம் மயமாகி மசூதிகளில் பாங்கு சொல்லும் சத்தங்கள் மற்றும் அக்ரஹார திண்ணைகளில் முஸ்லிம் சிறுவர்கள் குரான் ஓதும் சத்தமும் கேட்கிறது ! சில ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தேரழுந்தூரில் ஒரு கிளை கொண்டுள்ளது இந்த அஹோபில மடம் .கருங்கல் மண்டபங்கள் கொண்ட இந்த மடத்தில் ஊரில் உற்சவம் என்றால் மட்டும் மடத்தை சேர்ந்த வைஷ்ணவ அய்யங்கார் வகுப்பை சேர்ந்த மக்கள் கூடுவர். வெளி ஊர்களில் இருந்து அந்த ஊரிலிருந்து சென்று விட்டவர்கள் , அங்கு தங்கி ஊர் வேலை செய்வர். ஆமருவிப் பெருமாள் கோவில் உற்சவம் தான் என்றாலும் உற்சவங்கள் அஹோபில மடத்தின் திண்ணையில் இருந்தே பெரியவர் களால் தீர்மானிக்கப்படும், கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்படும். இது சில நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. பல நூறு ஆண்டு காலக் கோவிலுக்கும், மடத்துக்கும் வருமானம் இல்லையா ? என்று பல முறை பலர் கேட்டதுண்டு. நாற்பது வேலி நிலம் உள்ளது பெருமாளுக்கு. சொந்தமாக நிலங்கள் ஆனாலும் அவர் பக்தர்களை நம்பியே உள்ளார் என்றால் நம்பவா முடிகிறது ? ஆனால் அதுதான் தமிழகக் கோவில்களில் பலவற்றின் நிதர்ஸனம். மடம் கோவில் சார்ந்தது அல்ல. இதற்கும் சில நில புலன்கள் உண்டு. ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை. வெளியூர் வாசிகள் போவதோ ஒரு வாரம். கோவில் வேலைகள் செய்து விட்டு பிழைப்பு வேண்டி வெளியூர் செல்ல வேண்டும். ஒரு வாரத்தில் நில அளவைகள் செய்ய முடியாது.அவை எங்குள்ளது என்று தேட அவகாசம் இல்லை! ஒரு நாள் கணக வழக்கு சரிபார்க்க சில மட ஊழியர்கள் ரஸீதுகளைத் துழாவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது. ‘சாமி, இங்கெ கொஞ்சம் வரீங்களா ?’, என்றது அந்தக் குரல். தூரத்தில் இருந்து பார்த்த போது வெள்ளை துப்பட்டி முக்காடு போட்ட வயதான் பெண் போல் தெரிந்தது. வாசலில் ,வந்திருந்தது 75 வயது மதிக்கத் தக்க முஸ்லீம் பெண்மணி. மடத்தில் இந்த அம்மாளுக்கு என்ன வேலை என்று யோசித்தபடியே மற்றவர்கள் நிமிர்ந்து பார்த்தால் அந்த பெண்மணி, ‘சாமி, பெரியவங்க யாராது இருக்காகளா ?’, என்றார் அவர். மடத்தில் ஒரு பெரியவர் யாரென்று கேட்டபடியே வந்தார். ‘யாரும்மா நீ?’, என்று கேட்டார். ‘மடத்து ஐயா நீங்க தானே, கொஞ்சம் பேசணும்’, என்றார். வாசல் திண்னையில் அமர்ந்தார். மடத்தின் உள்ளே இருந்து சில வயதான பிராமணர்கள் எட்டிப் பார்த்தனர். அவர்கள் அனைவரும் ஸேவார்த்திகள். உற்சவத்திற்காக வந்திருந்தனர். ‘சாமீ, முடியலெ சாமீ’, என்று அழ ஆரம்பித்தார் அந்த அம்மாள். மடத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னன்னு சொல்லும்மா. யாராவது ஏதாவுது சொன்னங்களா ?’, என்று கவலையுடன் கேட்டார் மடத்து பெரியவர் ! ‘அதில்லீங்க. கொஞ்ச நாளா தூக்கமே இல்லீங்க. சொப்பனம் ஒண்ணு வருது. தினம் அதுவே வருது. சிங்கம் ஒண்ணு வந்து மூஞ்சீலெ அறையுது. என்னுது, எங்கிட்டே குடுத்துடுன்னுது. ஒண்ணும் புரியலீங்க’, என்றார் அந்த அம்மாள். மட சிப்பந்திகளுக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்த அம்மாள் காணும் கனவுகளுக்கும், மடத்துக்கும் என்ன சம்பந்தம் ? ‘சரிம்மா, தூக்க மாத்திரை ஏதாவது போட்டுக்குங்க. நான் என்ன செய்ய முடியும் ?’ என்றார் மடப்பெரியவர் . ‘அப்பிடி சொல்லப் பிடாது சாமி. நம்ம வீட்டுக்கு ஒரு தரம் வரணும் சாமி. இங்கெ பலரு இருக்காங்க, சில விஷயங்கள் இங்கெ சொல்ல தோதுப்படாதுங்க ஐயா’, என்றார் அந்த அம்மாள். யோசிச்சுச் சொல்வதாக பெரியவர் சொன்னார். கோவில் தேர் ஓடி, அதன் பின் புஷ்பப் பல்லாக்கு நடந்து முடிந்தது. உற்சவங்கள் முடிந்தன அன்று கொடி இறக்கப்பட்டது. அன்று இரவு சென்னை செல்ல ரயில் டிக்கெட் எடுத்த வெளியூர் வாசிகளுக்கு 11 மணிக்கு ரயில். 9 மணி அளவில் கிளம்பி வாசலில் வந்து கோபுரம் நோக்கிக் கை கூப்பி னார் மடப் பெரியவர் திரும்பிப்பார்த்தால் எதிரே அந்த முஸ்லிம் அம்மாள். ‘சாமி, வரேன்னு சொன்னீங்களே’, என்றார். அப்போதுதான் அவர்களுக்கும் நினைவு வந்தது. ‘ஊருக்குக் கிளம்பிட்டீங்க போல. பயணம் தொடருங்க. சித்தே அஞ்சு நிமிஷம் திண்ணைலெ அமருங்க’, என்று சொல்லித் தன் கையில் கொண்டுவந்திருந்த ஒரு காகிதச் சுருளை எடுத்துத் திண்ணையில் பரப்பினார். ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பெரியவர் .அப்போது அவரே பேசினார். ‘சாமீ, நான் சின்ன புள்ளையா ஒரு 7–8 வயசு இருந்தப்ப எங்க வாப்பா வருஷம் தோறும் ‘மடத்துக் கிரையம்’ன்னு சொல்லி பத்து மூட்ட நெல்லு எடுத்து வெப்பாரு. அவுங்க வாப்பா காலத்துலே ஐயமாருங்க சில பேரு மடத்தும் பேர்ல இருந்த நஞ்சை நாலு ஏக்கரா நிலத்த எங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்தாங்க. அப்பொலேர்ந்து வருஷம் தவறாம எங்க தாத்தாவும், வாப்பாவும் விளைச்சல்ல நாலுல ஒரு பங்கு மடத்துக்குக் கொடுப்பாங்க. எங்க புருஷங்ககாலத்துல அது மாறிப்போச்சு. இப்போ எனக்கு வயசானப்புறம் இது நினைப்பு வந்துது. ஆனாலும் அப்பிடியே உட்டுட்டேன். ரெண்டு மாசமா தூக்கத்துல சிங்கம் வந்து அறையுது. தூக்கமும் வரல்லே. ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். மடத்து வாசல்லெ சிங்கம் முகம் இருக்கற சாமி சிலை தெரிஞ்சுது. பொட்டுல அறஞ்ச மாதிரி இருந்தது. ‘என்னுது என்னுது’ன்னு சிங்கம் சொன்னது இது தான் போலன்னு உங்ககிட்டே அன்னிக்கி வந்தேன். ஆனாலும் பல பேர் இருந்தாங்க. அப்பிடியே போயிட்டேன். தேடிப் பார்த்ததுல, எங்க வாப்பாவோட பெட்டில இந்த பத்திரங்கள் கெடைச்சுது. இது என்னான்னு வக்கீல் ஐயர் கி்ட்டே கேட்டேன். அவுருதான் சொன்னாரு 100 வருஷம் முன்னாடி நடந்த கிரையம் பத்தி. அப்பவே உங்க கிட்டே குடுத்துடணும்னு நெனைச்சேன். பாருங்க, அப்பலேர்ந்து சொப்பனம் நின்னு போச்சு’, என்று கதறிக் கதறி அழுதார் அந்த அம்மாள். பத்திரங்கள் யாவையும் வெள்ளைக்கார அரசாங்கப் பத்திரக் காகிதங்கள். துரைசாமி ஐயங்கார் என்பவர் 1908-ம் வருஷம் ஜனாப் அப்துல் வஹாபுக்குக் குத்தகை கொடுத்த விபரம் இருந்தது. அவர் இந்தப் பாட்டியின் தாத்தா. சுமார் 40 வருடம் குத்தகை நெல் வந்துள்ளது. பின்னர் நின்றுவிட்டது. அஹோபில மடத்தின் வழிபடு தெய்வம் நரசிம்மப் பெருமாள் தன் சொத்தை கனவில் அந்த முஸ்லீம் மூதாட்டிக்கு உணர்த்தி மீட்டுள்ளார் என்று அங்குள்ள மடத்து சிப்பந்திகளுக்கு புரிந்து விட்டது ! இந்த முறை மடத்திலிருந்து ஒருவர் தேரழுந்தூர் சென்றபோது அந்த அம்மாளின் வீட்டைத்தேடிச் சென்றார். அவரது பேரனும் மனைவியும் இருந்தனர். அந்த அம்மாள் பத்திரங்களை ஒப்படைத் தவுடன் மிக நிம்மதியாக இருந்ததாகவும் பின்னர் ஆறு மாதங்கள் கழித்துக் காலமா னதாகவும் சொன்னார்கள். சுவற்றில் தெரிந்த படத்தில் அவரது முகம் சாந்தமாகத் தெரிந்தது. பெருமாள் சொத்து பொல்லாதது ........!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை

3 months 2 weeks ago
எமது பாடசாலை குழுமத்தில் அரசாங்கம் வழங்கிய வங்கி விபரம் பற்றிய தகவலை இணைத்தார்கள். நானும் இதைத்தான் கூறினேன். பாதிக்கப்பட்ட எமது உறவுகள், சொந்தங்களிற்கு நேரடியாகவே நாம் உதவி செய்யலாம். அரசாங்கம் ஊடாக செய்யும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு செல்லும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அபாய அறிவிப்புக்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மாத்திரமே வழங்கப்பட்டதாக ஒரு செய்தி சில தினங்கள் முன் பார்த்தேன்.

யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி

3 months 2 weeks ago
இந்த இளைஞன் இறுதி வரை மற்றவர்களை பாதுகாப்பாக வெளியேற உதவி செய்து விட்டு கடைசியில் ஆபத்தில் சிக்கிக் கொண்டவர் என சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர்.

யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி

3 months 2 weeks ago
கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனின் சடலம் மீட்பு 01 Dec, 2025 | 02:21 PM யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் பஸ் வண்டியில் சிக்கி பின்னர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பத்மநிகேதனின் உடல் திங்கட்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்தவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது. அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு , பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த அனுதாபங்கள். கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனின் சடலம் மீட்பு | Virakesari.lk

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு

3 months 2 weeks ago
01 Dec, 2025 | 04:50 PM (எம்.மனோசித்ரா) தித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர மோசமான நிலைமை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள பிளவர் வீதி அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (03) கூடவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஒரு கடுமையான இயற்கை அனர்த்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். 2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளிக்கவுள்ளார். இந்தக் கடுமையான பேரழிவிற்குப் பிறகு, பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே இடத்தில் அழைப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்றாகும். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு | Virakesari.lk

பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம்

3 months 2 weeks ago
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு 01 Dec, 2025 | 03:53 PM நுவரெலியா மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (01) வரை 75 பேர் உயிரிழந்துள்ளதோடு, 62 பேர் காணாமல் போயுள்ளனர். 2,691 குடும்பங்கரளச் சேர்ந்த 12,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 1,914 குடும்பங்களைச் சேர்ந்த 8,654 பேர் 61 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தங்கள் முகாம்கள் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, தலவாக்கலை, நோர்வுட், நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான மூன்று நாட்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படும். ஏனைய நாட்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு முகாம்களில் சமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அதேநேரம் நுவரெலியா - கண்டி வீதி, நுவரெலியா - இராகலை வீதி, நுவரெலியா - வெலிமடை வீதி, தலவாக்கலை - பூண்டுலோயா வீதி, லிந்துலை - அக்கரபத்தனை வீதி ஆகிய வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இதற்கு பதிலாக மாற்று பாதைகளையே பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மாற்று பாதைகளும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே உள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்று வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நிலங்களும் முற்றாக பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு | Virakesari.lk

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன?

3 months 2 weeks ago
01 Dec, 2025 | 04:44 PM மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். 01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி வரையான நிலைவரப்படி, டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு பகுதிகள் குறிப்பாக மன்னார் தீவு, மாந்தை மேற்கின் சில பகுதிகள், நானாட்டானின் சில பகுதிகள், கிளிநொச்சியின் மேற்கு பகுதிகள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இன்று மாலைக்கு பின்னர் படிப்படியாக மழை குறைந்துவிடும். ஆகவே இது தொடர்பாக பதட்டமடைய தேவையில்லை. மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. ஆனாலும் எதிர்வரும் ஜனவரி இறுதிப்பகுதி வரை வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அது வரைக்கும் இடையிடையே மிதமான, கனமான மற்றும் மிகக்கனமழைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதனை நினைவில் கொள்க. இடைப்பட்ட காலத்தில் ஏதாவது தீவிர வானிலை நிகழ்வுகள் இடம்பெறும் வாய்ப்பிருந்தால் உரிய காலத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது வரை தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளுங்கள். டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து சென்னைக்கு கிழக்காக 60 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கு அண்மையாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிட்வா புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை என்பதனால் வடக்கு மாகாணக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார். மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன? | Virakesari.lk

சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

3 months 2 weeks ago
அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கணனி புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். அனர்த்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான சேவைகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்நேரத்தில், சில நபர்கள் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்பும் போக்கு இருப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார். பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புதல் மற்றும் வெளியிடுதல் மிகவும் தவறான செயல் என்றும், பொய்யான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த அனர்த்த காலத்தில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த நேரத்தில், சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இலங்கை பொலிஸ் சார்பாக தான், பொதுமக்களை கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அனர்த்த நிவாரண முகாம்களிலும், பாதித்த பகுதிகளிலும் சில குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் பாலியல் வல்லுறவு, அத்துமீறல், திருட்டு மற்றும் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், அனர்த்தத்தினால் பாதித்த மக்களின் நலனுக்காக அரசாங்கம் செயற்படுத்தும் கூட்டு நடவடிக்கைக்கு அனைவரின் கௌரவமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக பல்வேறு முக்கியமான மற்றும் துரித நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் எடுத்துள்ளது என்றும், அதன்போது சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், சுற்றுலா பொலிஸ் பிரிவு பணிப்பாளரின் 0718591894, 0112421070 அல்லது 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது விமான நிலையத்தின் (சுற்றுலா) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718596057 என்ற இலக்கத்திற்கோ,விமான நிலையத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591640 என்ற இலக்கத்திற்கோ தெரிவிக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட நடவடிக்கை பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் 0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880 இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அல்லது ஏதேனும் பிரச்சினைகள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும். சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

3 months 2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 54 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 54 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'எதிர்காலத்தில் நடக்கும், தனிப்படட ஒருவரின் சம்பவங்களை முன்னறியும் திறன் உண்மையா?' இந்த நூல்களில், எதிர்காலத்தில் நடக்கும் ஒன்றை நேரத்துடன் முன்னமே பார்க்கும் திறன், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை வாய்மொழியாகக் முன்னறிவிக்கும் திறன், மற்றும் அறிவு, பகுப்பாய்வு அல்லது அவதானிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்கால நிகழ்வைப் பற்றி கணிக்கும் திறன் [Foreseeing, foretelling and predicting] ஆகியவை அடிக்கடி நிகழ்கின்றன. குறிப்பாக புத்தரின் வாயிலிருந்து, 12-30. இல், "மரியாதைக்குரிய ஐயா, புத்தர் உங்களைப் பற்றி முன்னறிவித்துள்ளார்: எதிர்காலத்தில், துறவி மகிந்த தீவுக்கு புத்த மதத்தைக் கொண்டு வருவார். புத்தரின் போதனைகளைப் பரப்புவார், சன்மார்க்கத்தை நிலைநாட்டுவார், துன்பங்களிலிருந்து விடுபட உதவுவார். வலிமையான மற்றும் நிலையான பாதையில் அவர்களை வழிநடத்துவார். அவருடைய பணி பலருக்கும் நன்மை பயக்கும்." என்கிறது. பௌத்தர்கள் இவற்றை நம்பலாம், ஆனால் இவை நிதானமான, உண்மையான வரலாறு அல்ல. இராமாயணம், மகாபாரதம் போல ஒரு புராணக் கதையே! அது மட்டும் அல்ல அங்கிருந்தும் பல நகல்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புத்தர் இன்னும் ஒரு முன்னறிவித்தலில், 15-73, “அந்த நேரத்தில் தீவு, தம்பபாணி [Tambapaṇṇi] என்ற பெயரில் அறியப்படும்; அந்த மிகச்சிறந்த தீவில் அவர்கள் என் உடலின் ஒரு நினைவுச்சின்னத்தை [தாதுவை] அங்கு வைப்பார்கள்." இந்த குறிப்புகளில் உள்ள நினைவுச்சின்னம் புத்தரின் வலது காறை எலும்பு [right-collar bone] ஆகும், இது இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடமான, தூபாராமயவில் (Thuparamaya) கௌதம புத்தரின் எலும்பு எச்சம் வைத்துக் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நூல் எழுதிய பக்திமான்களுக்கு, சர்வ ஞானியான புத்தர் தனது உடலில் இரண்டு நினைவுச்சின்னங்களை இலங்கையில் வைத்திருப்பார் என்று அன்று அவர்கள் உணரவில்லை போலும்! தீபவம்சத்தில் உள்ளிணைக்கப்பட்ட வலது காறை எலும்பும் மற்றும் அசாதாரண அளவிலான பல்லும் இந்த இரண்டும் ஆகும்! தீபவம்சத்திற்கு எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Cūḷavaṃsa) பல்லின் வருகை கண்டு பிடிக்கப்பட்டது; அது புத்தர் இறந்து சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகும். சூலவம்சத்தின் [Culavamsa] வருங்கால ஆசிரியர் ஒருவர், புத்தரின் பல் என்ற மற்றொரு நினைவுச்சின்னத்தின் வருகையை கண்டுபிடிப்பார் என்று தீபவம்சத்தின் ஆசிரியர் அன்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை அல்லது முன்னறியவில்லை அல்லது அவரால், இதையும் புத்தரின் வாயிலிருந்து பெற முடியவில்லை? 'Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998' என்ற புத்தகத்தின் பக்கம் 411 இல், பல்லின் அளவை 2 அங்குல நீளம் மற்றும் ஒரு அங்குல விட்டம் எனக் கூறுகிறது. 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' இல், பக்கம் 176 இல், சிவனொளிபாத மலையின் [ஆடம்ஸ் சிகரம் / Adam’s Peak] மீது ஐந்தடி ஏழு அங்குல நீளமும், இரண்டடி ஏழு அங்குல அகலமும் கொண்ட தடயத்தை கூறுகிறது. இரண்டும் மனித இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. புத்த துறவிகள் தங்கள் கற்பனைகளில் இவற்றைக் கண்டுபிடித்தனர். மேலும், 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' என்ற குறிப்பின் பக்கங்கள் 31 மற்றும் 32 இல், பல் நினைவுச் சின்னம் போர்த்துக்கேயர்களால் [Portuguese] கைப்பற்றப்பட்டு, அதைத் தூளாக்கி, பொடியை எரித்து சாம்பலாக்கி, பின்னர் கடலில் கரைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலே மேற்கோள் காட்டப்பட்ட அளவீடு, 1815 இல் கண்டியைக் கைப்பற்றிய பின்னர், அதாவது, போர்த்துக்கேயர்களால் அசல் அழிக்கப்பட்ட இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அளவீடு செய்யப்பட்டது ஆகும். என்றாலும் பல்லை பாதுகாக்கும் துறவிகள், புத்திசாலித்தனமாக இரண்டு கதைகளை கண்டுபிடித்தனர். ஒரு கதையில், அழிக்கப்பட்ட பல் உண்மையில் அசல் மூலத்தின் நகல் என்கிறது. இரண்டாவது கதையில், தூளாக்கி, பொடியாகிய பல், தெய்வீக சக்தியால், ஒன்றிணைத்து அசல் பல்லாகி, முன்னைய வடிவத்திற்கு மீண்டும் வந்தது ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேடம் எலனா பெத்ரோவ்னா பிளவாத்ஸ்கி [Helena Petrovna Blavatsky, அல்லது பொதுவாக எலனா பிளவாத்ஸ்கி அல்லது பிளவாத்ஸ்கி அம்மையார் என்பவர் பிரம்மஞானத்தையும் பிரம்மஞான சபையையும் தோற்றுவித்தவர் ஆவார்.] இலங்கைக்கு விஜயம் செய்தார், மேலும் பல்லின் நினைவுச்சின்னம் அவருக்குக் காட்டப்பட்டது. அப்பொழுது, அது ஒரு முதலையின் பல்லின் அளவு பெரியது என்று உடனடியாக கூச்சலிட்டார். 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' என்ற குறிப்பின் பக்கம் 246 இன் கீழே பார்க்கவும். அத்தியாயம் 13 இல் நிறைய அற்புதங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. எட்டு நிலநடுக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தன. அத்தியாயம் 13 முக்கியமாக மத விடயங்களைப் பற்றியது, மேலும் மத விடயத்தின் உரிமைகள் மற்றும் தவறுகளை பகுப்பாய்வு செய்வது இங்கு எமது நோக்கம் இல்லை. அத்தியாயம் 14, மத விடயங்கள், பூகம்பங்கள், விகாரைகள் கட்டுதல் போன்றவற்றைப் பற்றியது, மேலும் இது பற்றி கருத்து தெரிவிப்பது எமக்கு அவசியம் இல்லை. தமிழர்களின் நேர்மையான நலனை நேரடியாக பாதிக்காத எந்த மத விடயத்திலும் கருத்து தெரிவிக்கப்படாது. அதில் எமக்கு அக்கறையில்லை. மகிந்த தேரர் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஜம்புதீபாவிற்கு (இந்தியாவிற்கு) திரும்பிச் செல்ல விரும்பினார். காரணம், இலங்கையில் வழிபட புத்தரின் நினைவுச்சின்னம் இல்லை என்று சுட்டிக்காட்டினார், 15 - 1 முதல் 5 வரை பார்க்கவும். Part: 54 / Appendix – Dipavamsa / 'Is it true that an individual can predict future events?' Foreseeing, foretelling and predicting happen very often, and especially from the mouth of the Buddha, 12-30. The Buddhists may believe these, but these are not sober history. Buddha foretold, 15-73, “...they will deposit a relic of my body in the most excellent island”. The relic in reference is the right-collar bone of Buddha, which was allegedly interned in the Thuparama. Unfortunately for the pious, the omniscient Buddha didn’t realize that there would be two relics of his body, the right collar bone which was interned in the Dipavamsa and a tooth of abnormal size. The arrival of tooth relic was invented in the Culavamsa which was written about seven hundred years after the Dipavamsa; about one thousand two hundred years after the Buddha’s death. The author of the Dipavamsa never expected a future author of the Culavamsa would invent the arrival of another relic, the tooth of Buddha, and therefore could not get this also from the mouth of the omniscient Buddha. Page 411 of ref - 'Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998' gives the size of the tooth relic as 2inches in length and one inch in diameter. Page 176 of ref - 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' gives the footprint on the Adam’s Peak as five feet seven inches in length and two feet seven inches in breadth. Both could not belong to a human kind. Monks invented these in their flight of fancies. Furthermore, on the pages 31 and 32 of the Reference 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' , it is stated that the tooth relic was captured by the Portuguese and it was ground to powder, burnt the powder into ashes and then dissolved the ashes in the sea. The measurement quoted above was made just after the conquest of Kandy in 1815, more than two hundred years after the destruction of the original by the Portuguese. The custodian monks smartly invented two stories. One storey was that the obliterated tooth was in fact a copy of the original and the other storey was that the ground tooth reformed to its shape by the divine power. Madame Helena Petrovna Blavatsky visited Ceylon during the latter part of the nineteenth century and the tooth relic was shown to her, and she immediately exclaimed that it was as large as that of an alligator. See the bottom of the page 246 of the Reference 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' . Quite a lot of miracles are described in the chapter 13. Eight earthquakes occurred one after the other. Chapter 13 is mainly of religious matters, and it is not intended here to analyse the rights and wrongs of the religious matter. Chapter 14 is also about religious matters, earthquakes, construction of viharas etc., and it is not intended to comment on these. Any religious matter, which is not directly jeopardizing the bona fide interest of the Tamils, will not be commented upon. Mahinda Thera wanted to go back to Jambudipa (India) after about five months, indicating that there is no relic of Buddha in Lanka to worship, 15 – 1 to 5. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 55 தொடரும் / Will follow துளி/DROP: 1924 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 54] https://www.facebook.com/groups/978753388866632/posts/32626689843646241/?

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்

3 months 2 weeks ago
இது பகிடிவதை அல்ல சகோதரவதை. “அறியாதார் வாயில் மண்ணு” இதனைத் தீர்க்கப் பெற்றோரிடம் சென்றிருக்க வேண்டும். ஏன் நீதிமன்றம் சென்றார்கள்.???🤔

குட்டிக் கதைகள்.

3 months 2 weeks ago
கெட்டவன் கருப்பு · Suivre Stsdeporno641h u93t3n8826622t883vo4,082b 01e:gcrmec26acg715g · ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம். அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார். அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க. அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க. அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர். கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம். இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் , "நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ.........!
Checked
Fri, 03/20/2026 - 22:45
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed