புதிய பதிவுகள்2

நிந்தவூரில் சிறுமி மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் - தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது

2 weeks ago
நிந்தவூரில் சிறுமி மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் - தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது 24 Jan, 2026 | 01:23 PM அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்னர் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.இந்த கைது நடவடிக்கையானது கடந்த புதன்கிழமை (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 2025.12.11 அன்று 12 வயது மதிக்கத்தக்க தனது சொந்த மகளை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தலைமைறைவாகிய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த சம்பவத்துடனான வழக்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கடந்த தவணை நடைபெற்ற போது விளக்கமறியலில் வைக்கப்பட்ட தந்தை தவிர ஏனைய 4 சந்தேக நபர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் அடையாள அணி வகுப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி 4 சந்தேக நபர்களையும் அடையாள அணிவகுப்பில் சரியாக இனங்காட்டினார். பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி பாதுகாப்பு கருதி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் இறுதியாக வொலிவேரியன் கிராமத்தில் வைத்து கைதான சந்தேக நபர் கல்முனை குடி பகுதியை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இன்று உரு மறைக்கப்பட்ட நிலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆந் திகதி அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்த பணிப்புரை விடுத்த நீதிவான் வழக்கினை மறு தவனைக்கு ஒத்திவைத்தார். அத்துடன் முறைப்பாட்டுக்காரரான 12 வயது மதிக்கத்தக்க சிறுமியினால் கூறப்பட்ட பெயர்கள் யாவும் சந்தேக நபர்களின் பட்டப் பெயர்கள் ஊர்களில் அழைக்கப்படுகின்ற பெயர்கள் ஆகையினால் தான் எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இருந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் எஞ்சிய சந்தேக நபர்களை பல்வேறு தரவுகளை பெற்று கைது செய்வதில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார். இக்கைது நடவடிக்கையின் போது அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண ஆலோசனைக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழு பல்வேறு தரவுகளை சேகரித்து வைத்து எஞ்சிய 2 சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நடந்தது என்ன? அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சுமார் 5 மாத காலமாக விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் நடந்த அனைத்தையும் குறித்த சிறுமி கூறியுள்ளார். இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக 12 வயது மதிக்கத்தக்க தனது மகளை முதலில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை பின்னர் சம காலத்தில் ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்து வந்தமையும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2025.12.11 அன்று தந்தை உட்பட 5 பேரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் அச்சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி முதலில் தந்தை கைது செய்யப்பட்டார். பின்னர் சாய்ந்தமருது மாளிகைக்காடு சம்மாந்துறைப் பகுதியில் அச்சிறுமியை பணத்திற்கு வாங்கி வன்புணர்ந்த 04 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் 52 , 41, 24, 40 , வயதிற்குட்பட்ட சந்தேக நபர்கள் உள்ளடங்குகின்றனர். மேலும் தந்தை தனது மகளை சுமார் 05 மாத காலமாக பல்வேறு நபர்களுக்கு விற்று வந்ததாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார். இது தவிர இச்சம்பவத்தில் தலைமறைவான ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலில் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி தந்த நாணயக்காரவின் மேற்பார்வையின் கீழ் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழு மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது. அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு பகுதியில் வசித்து வந்த ஐவர் கொண்ட இக்குடும்பம் பொருளாதார நிலைமை காரணமாக அவ்விடத்தில் இருந்து குடிபெயர்ந்து அருகில் உள்ள மற்றுமொரு ஊரான நிந்தவூர் பகுதியில் உள்ள புறநகரில் வாடகை அடிபபடையில் வீடொன்றை பெற்று வாழ்ந்து வந்தனர்.இக்குடும்பத்தில் 18 வயது ஆண் 12 வயது பெண் பிள்ளை உட்பட 5 வயது ஆண் பிள்ளையும் உள்ளடங்குகின்றனர். இதில் 18 வயது ஆண் பிள்ளை உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஊடாக கல்வி கற்று வருகின்றார். இச்சம்பவத்தில் 12 வயதான பெண் பிள்ளையே பாதிக்கப்பட்டவராவார்.சிறுமியின் தந்தை கடற்தொழில் செய்பவர் ஆவார்.தந்தைக்கு 40 வயது என்பதுடன் தாய்க்கு 36 வயதாகும்.ஆரம்ப காலத்தில் தந்தையுடன் தொழில் உறவில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் முறைகேடான தொடர்புகளை தந்தையின் சம்மதத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ளனர். இத்தொடர்புகள் தங்களது வசதியின்மையை காரணம் காட்டி பொருளாதார நன்மைக்காகவே மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்த போதிலும் மாளிகைக்காட்டில் இருந்து ஆரம்பமாகி பின்னர் வாடகை வீடு அமைந்துள்ள நிந்தவூர் வீட்டிலும் குறித்த விபச்சாரம் தொடர்ந்தமை விசாரணையில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. பின்னர் தான் குறித்த குடும்பத்தில் இருந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமியும் ஆபாசப்படம் காண்பிக்கப்பட்டு தனது தந்தை மூலம் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.பின்னர் ஏனைய சந்தேக நபர்களுக்கும் சிறுமி பணத்திற்காக விற்கப்பட்டிருந்தார். இச்செயற்பாடுகள் தாயின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றமை விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.இதன் போது வாடிக்கையாளர் ஒவ்வொருவரிடம் இருந்தும் 20 ஆயிரம், 10 ஆயிரம், 2 ஆயிரம் என பணம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் உடனடியாக கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். பின்னர் குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த தவணையின் போது சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் இரு தடவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில் தந்தை உட்பட 5 சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்களான தந்தை தாய் தவிர ஏனைய 4 சந்தேக நபர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி அந்த 4 சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/236893

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு

2 weeks ago
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளைப் பேணத் தவறிய 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராகப் பொது சுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது, மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவைக் கையாண்டமை, திண்மக்கழிவுகளைத் திறந்த வெளியில் வீசியமை, அனுமதிக்கப்பட்ட உணவுத்தரக் கொள்கலன்களைப் பயன்படுத்தாது பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்தியமை, முகச்சவரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவைக் கையாண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில் ஐஸ்கிரீம் வாகனங்கள், பஞ்சு மிட்டாய் உற்பத்தியாளர்கள், காரச் சுண்டல் வண்டிகள் மற்றும் பானி பூரி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 24 உணவு நிலையங்களுக்கு எதிராக, வல்வெட்டித்துறை நகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் பா. தினேஷ், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்தார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 24 உரிமையாளர்களில் 19 பேர் மன்றில் முன்னிலையாகி, தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, குறித்த 19 உரிமையாளர்களையும் கடுமையாக எச்சரித்த மன்று, அவர்களுக்கு மொத்தமாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது. அதேவேளை, மன்றில் இன்று முன்னிலையாகாத ஏனைய 05 உரிமையாளர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkr6x3ny04byo29nxw86k2co

யாழ். சுழிபுரத்தில் வெளியேறிய இராணுவம்

2 weeks ago
யாழ். சுழிபுரத்தில் வெளியேறிய இராணுவம் யாழ். - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்து, கடிதமொன்றை 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தார். அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் நீண்டகாலமாக முகாமிட்டு குடியிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு, காலம் தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (M) https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-சுழிபுரத்தில்-வெளியேறிய-இராணுவம்/175-371486

பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!

2 weeks ago
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்! adminJanuary 23, 2026 குருநாகலில் உள்ள பிரபல விகாரை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் அதி சொகுசு அறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அங்கிருந்த பௌத்த தேரர் ஒருவர் வெளியிட்டுள்ளார். குளிரூட்டப்பட்ட வசதி, விலை உயர்ந்த மெத்தைகள் மற்றும் சொகுசுத் தளபாடங்களுடன் இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அறைக்குள் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியேறுவதற்கு எனத் தனியாக ஒரு சிறிய கதவு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை மூடிவிட்டால், உள்ளே வாகனம் இருப்பதோ அல்லது ஆட்கள் இருப்பதோ வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. மகிந்த ராஜபக்ச இரவு நேரங்களில் தங்குவதில்லை. ஆனால், அவசரமாக வந்து பல மணிநேரம் தங்கியிருந்து தனது இரகசிய விடயங்களில் ஈடுபடுவார். ‘ஹசினி’ என்ற பெண்ணும் அங்கு வந்து தங்குவதாகக் குறிப்பிட்ட தேரர், அந்த கிராமத்து மக்களுக்கே இப்படியொரு அறை இருப்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த விகாரையில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் மகிந்த ராஜபக்சவே திறந்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227331/

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

2 weeks ago
படித்தவர்கள் பேச்சில் "நான்" எனும் அகம்பாவம் கண்டேன். அவர்கள் படித்த படிப்பிற்கும் பேசும் பேச்சுக்கும் சம்பந்தமேயில்லை என உணர்ந்தேன்.

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

2 weeks ago
சிவஞானத்தின் ஆதங்கத்திலும் ஒரு நிஞாயம் இருக்கிறது. முன்பொருதடவை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு மக்கள் பேரணி நடத்தப்பட்டது. அப்போ ஊடகவியலாளர் ஒருவர் அதுபற்றி சுமந்திரனிடம் வினவியபோது; தாங்கள் அதில் பங்கு பற்றப்போவதில்லையென்றும் மக்களை பங்குபற்றும்படி கேட்டுக்கொள்வதில்லை என்றும் பதில் வழங்கினார். ஆனால் மக்கள் அலையலையாய் திரண்டிருந்தனர். பின்னாளில் பொதுமக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையில் பேரணியில் புகுந்து தன்னை முதன்மைப்படுத்தினார், அதன்பின் கடற்தொழிலாளர் எதிர்ப்பு போராட்டத்திலும் அதனோடு தொடர்பு படாத தொப்பியணிந்து ஷோ காட்டினார். அவர் நினைத்தது பேரணி, கடையடைப்பு என்று அறிவித்தால்; அது யார் அறிவித்தாலும் மக்கள் திரள்வர் என்று நினைத்து கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தார். அது பிசுபிசுத்து போனதுடன் எதிர்ப்பும் வெளிப்பட்டது. மக்கள் கோமாளிகளல்ல. அவர்களுக்குரிய காலம், காரணம், அழைப்பு விடுபவரின் நேர்மை, நோக்கம் தெரிந்தே பங்குபற்றுவதா வேண்டாமா என முடிவு செய்வர். இப்போ, தென்னிலங்கையில் இருந்து ஒரு ஜனாதிபதி பொங்கல் கொண்டாட வரும்போது, மக்கள் எதிர்ப்பு ஏதும் செய்யாமல் கூடிக்கொண்டாடியது அவர்களுக்கு வெறுப்பேற்றத்தான் செய்யும். என்ன செய்வது? காற்றுள்ளபோதே தூற்றியிருக்கலாம், இப்படி வாயால் புலம்பிக்கொண்டு திரிய வேண்டியிருந்திருக்காது.

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

2 weeks 1 day ago
ஆசை, தோசை, அப்பளம், வடை…. 😁 😂 🤣 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன்…. நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி.” இது… சுத்துமாத்து சுமந்திரனுக்காகவே எழுதிய பாடல். 😂 பைத்தியக்காரன் கதைப்பதை எல்லாம், சீரியசாக எடுக்கக் கூடாது. 🤣 இவர், அனுர அரசில், பிரதம மந்திரி பதவிக்கும் ஆசைப் பட்ட ஆள். 😁 அதுதான்…. சென்ற தேர்தலில், கோவணத்தையும் உருவி விட்டு… வீட்டில் குந்த வைத்திருக்கிறார்கள். 😁 😂 🤣

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

2 weeks 1 day ago
அநுர அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராகும் எம்.ஏ.சுமந்திரன் அநுர தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (31.10.2024) நடத்திய ஊடக சந்திப்பின் போது அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின. கட்சியினுடைய கொள்கை ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது. ஆகவே, அப்படியான ஒரு சூழ்நிலை வருகின்ற போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். எனினும் என்னுடைய சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது. அமைச்சுப் பதவி ஆனால், முருகேசு திருச்செல்வம் போல் கட்சி சார்பாக – கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால், அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனத் தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை அவர் பதவிவிலகல் செய்து வெளியே வந்தார். அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ, மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதென்பதும் நாங்கள் கண்கொண்டும் பார்க்க மாட்டோம். அப்படியான தெரிவு எங்களுக்குக் கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது என எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran ) தெரிவித்துள்ளார். https://www.athirady.com/tamil-news/news/1740963.html

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

2 weeks 1 day ago
என்னா ...சாரே ...நம்ம யாழ் சுமந்திரன் விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுதே...பார்த்து..பார்த்து

என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்

2 weeks 1 day ago
பார் சிறி, நீங்கள் அரசாங்கம் காட்டும் இடத்தில் எல்லாம் கையோப்பம் இட்டால் ஏன் அரச கட்டுபாட்டில் உள்ள திணைக்களம் உங்களை விசாரிக்க போகிறது. பார் சிறி, இதை இப்போதும் விலக்காமல் மேற்பார்வை செய்வது அனுர அரசல்லவா? இது மட்டும் போதுமே - பிரதமருக்கு எதிராக வாக்களிக்க? இராணுவ அதிகாரிக்கு ஆதரவு கொடுத்தீர்களா இல்லையா? நீங்கள் உங்களுக்கும், குடும்பத்துக்கும் மட்டுமே உரியவர். நசுவல் கள்ளன், அமசடக்கி.
Checked
Sun, 02/08/2026 - 05:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed