புதிய பதிவுகள்2

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

2 weeks 1 day ago
சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Jan 23, 2026 - 03:32 PM சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அதன்படி, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி ஜி. வை. பி. பெரேரா, 40,870,686 ரூபாய்க்கான காசோலையை நேற்று (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmkqpoqqb04b8o29nltt1vlqa

கிழக்கு முனைய மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

2 weeks 1 day ago
கிழக்கு முனைய மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் ஆரம்பம் Jan 23, 2026 - 02:46 PM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் நிறுவனங்களைச் சேர்ந்த 3 கப்பல்கள் கப்பல் தளத்திற்கு வருகை தந்தன. 12 கென்ட்ரி கிரேன்கள் மற்றும் 40 தானியங்கி முற்ற கிரேன்களைக் கொண்ட இந்தக் கப்பல் தளத்தின் ஊடாக, ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் மேலும் வலுவடையும். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் முதன்முறையாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. 75 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் கிழக்கு முனையத்தின் மொத்த நீளம் 1320 மீற்றர்களாகும். அதில் 1090 மீற்றர் பகுதியும் ஏனைய நிர்மாணப் பணிகளில் 82% ஆனவையும் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் கிழக்கு முனையத்தின் ஊடாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளதுடன், முழுமையான நிர்மாணப் பணிகள் முடிவடைந்த பின்னர் 1.5 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும். கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில் துறைமுக அதிகார சபையின் கண்காணிப்பு மற்றும் முதலீட்டின் கீழ் இந்த கிழக்கு முனையம் நிர்மாணிக்கப்படுகிறது. கிழக்கு முனையம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நிலைமையின் அடிப்படையில் உருவான எதிர்ப்புகளுக்குப் பின்னரே இது இடம்பெறுகின்றமை ஒரு விசேட அம்சமாகும். https://adaderanatamil.lk/news/cmkqo1tdn04b7o29n7ve7zaf3

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

2 weeks 1 day ago
முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் கீழ் 70000க்கும் மேற்பட்டோர் கைது Jan 23, 2026 - 02:37 PM 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்று (23) பொலிஸாரால் 819 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல், தேடுதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தல், போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், அதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் ஆகிய பன்முக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட 304 சோதனைகளில், 367 கிராம் ஹெரோயின், 2 கிலோ 97 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 32 கிலோ 804 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொகுதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று (22) வரை ''முழு நாடுமே ஒன்றாக' நாளாந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 77,105 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பாக 68 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,582 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 77,824 என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 320 கிலோ 741 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், 1,280 கிலோ 956 கிராம் ஐஸ், 6 கிலோ 816 கிராம் கொக்கெய்ன், 2,341 கிலோ 723 கிராம் கஞ்சா, 5,568,583 கஞ்சா செடிகள், 155 கிலோ 487 கிராம் குஷ், 44 கிலோ 47 கிராம் ஹாஷிஷ் மற்றும் 132,561 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmkqnqkmv04b6o29n0z5owr3u

மின்சார சபையின் தன்னிச்சையான தீர்மானங்களால் சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை

2 weeks 1 day ago
மின்சார சபையின் தன்னிச்சையான தீர்மானங்களால் சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை Published By: Digital Desk 3 23 Jan, 2026 | 04:15 PM இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக, அதாவது 2025 பெப்ரவரி மாதம் முதல், வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் எந்தவித முன்னறிவிப்புமின்றி பெரிய அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களின் மின் விநியோகத்தை மின்சார சபை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனை ஒரு அவசர நிலை என்று மின்சார சபை கூறினாலும், நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறை மின் கொள்வனவு ஒப்பந்தங்களை (PPA) மீறும் செயல் எனவும், இதனால் உற்பத்தியாளர்களின் மாத வருமானம் 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி குறைக்கப்படும் நேரங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவு நேர உச்ச மின் தேவையின் போது பயன்படுத்துவதற்கான மின்கல சேமிப்பு முறைமைக்கு (BESS) அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சு ஆகியன அனுமதி வழங்கியுள்ள போதிலும், மின்சார சபை அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே தாமதம் செய்வதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான செயலாக்க வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் காட்டப்படும் இழுத்தடிப்பு காரணமாக, உள்நாட்டு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாரியளவிலான டாலர்களைச் செலவழித்து டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய மின்சாரக் கொள்கையானது சிறு மற்றும் நடுத்தர அளவிலான உள்ளூர் முதலீட்டாளர்களை இத்துறையிலிருந்து முற்றாக வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளதாகச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள உள்ளீட்டு கட்டண (FIT) முறையை ஒழித்து போட்டி ஏல முறையைக் கொண்டு வருவது மற்றும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் போது அதற்கான நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நிபந்தனைகள் முதலீட்டாளர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கை பிரகடனங்களுக்கு முரணாக மின்சார சபை எடுத்து வரும் இத்தகைய முடிவுகளால், இத்துறையில் முதலீடு செய்துள்ள பல தொழில்முனைவோர் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். இது எதிர்காலத்தில் நாட்டின் வங்கி முறைமையில் செயலிழந்த கடன் நெருக்கடியை (NPL) உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மின்கல சேமிப்பு முறைமைக்கான ஒப்பந்தத் திருத்தங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், ஒப்பந்தங்களை மீறி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான உற்பத்தித் தடையை நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 2030 புதுப்பிக்கத்தக்க மின்சக்தி இலக்கை அடைவதற்குத் தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என்பதால், அரசாங்கமும் மின்சக்தி அமைச்சும் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236817

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

2 weeks 1 day ago
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்துள்ள நன்கொடை விபரம் Jan 23, 2026 - 01:34 PM அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார். அதன்படி, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்காக இலங்கையின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளினால் இதுவரை வழங்கப்பட்டுள்ள நன்கொடைத் தொகை 8.5 பில்லியன் ரூபாவையும் கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியும் தற்போது அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அவ்வாறு கிடைத்த வெளிநாட்டு நிதியின் அளவு தற்போது 9.49 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடந்துள்ளதாகத் தெரிவித்தார். நிதி உதவி வழங்கிய நாடுகளுள் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான நிதி கிடைத்துள்ளதாகவும், அந்தத் தொகை ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தவிர, முறையே அவுஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பூட்டான், இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகள் அதிக நிதி உதவி வழங்கிய முதல் 10 நாடுகளாக உள்ளதாக ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். மேலும், இந்நாடுகளைத் தவிர பல வெளிநாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளதாகவும், அதன்படி அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மொத்தம் 47 வெளிநாடுகள் உதவி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பணமாகப் பெறப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமாக, இலங்கைச் சுங்கத்திற்குப் பெருமளவிலான பொருட்களும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை சுங்கத்திற்கு கிடைத்துள்ள பொருட்களின் மொத்த மதிப்பு 2.3 பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkqlgyt404b1o29ngyj4bx1o

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

2 weeks 1 day ago
நான் அறிந்த வரை இவர் ஒன்றும் தான் தமிழர் என்பதற்காக ஒதுக்கபட்டதாக குறை சொல்லவில்லை. மதத்தை முன்நிறுத்தி தான் ஒரு முஸ்லிம் ஹிந்தி பட உலகம் இந்து மத சார்பாக மாறிவிட்டது என்று குற்றம் சொல்லி இருந்தார்.அது உண்மை இல்லை முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் பலர் அங்கே உச்சத்தில் உள்ளனர் என்று பலர் விளக்கம் அளித்தனர். இந்தியாவில் ஆக கூடிய பணம் வாங்கும் இசையமைப்பாளர் இவர் தானாம்.

வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி

2 weeks 1 day ago
யாழ்கள அனுர காவடிகளை இந்த பக்கம் காணோம்?

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 1 day ago
அதற்கு காரணம் அமெரிக்க பொருளாதாரம், பிரித்தானியாவின் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான நிகழ்வுடன் அமெரிக்க பொருளாதாரம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிட்டு விவாதங்கள் நடைபெற்ற நினைவுள்ளது.

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 1 day ago
இது அந்த போரினால் ஏற்பட்ட மாற்றம் என்படில் இப்போதும் உடன்பாடில்லை. இது டிரம்ப் வருகையால் ஏற்பட்ட மாற்றம். டிரம்ப் மீள வன்டால் இது நடக்கும் என்படும் அப்போதே எதிர்வு கூறப்பட்டது.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

2 weeks 1 day ago
Keeravani has earned several national and international accolades, including an Academy Award, a Golden Globe Award, a Critics' Choice Movie Award, two National Film Awards, eleven Nandi Awards, eight Filmfare Awards, and a LAFCA Award. In 2023, the Government of India honoured him with the Padma Shri for his contributions towards Indian cinema. ஒஸ்கார் இல்லை என நினைக்கிறேன்.

ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

2 weeks 1 day ago
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ன அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த நகர்வை உலக நாடுகள் அச்சத்துடன் உற்று நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் நாட்டின் நிதி நிலைமை மோசமாகி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ‛முல்லா கண்டிப்பாக போ’ என்ற கோஷத்துடன் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரமஎதிரிகளாக உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது. நேற்று ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருந்தார் இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் நாட்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல், பல ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுமெனவும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பில் பரசீலிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2026/1461114

உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திப்பு

2 weeks 1 day ago
உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திப்பு உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருப்பினும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், நேற்று சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சிறப்பு நேரடி சந்திப்பு ஒன்றை நடத்தினர். முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா இடையே முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்க இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க அதிகாரிகள் இருவர் மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். முன்னதாக பொருளாதார மாநாட்டில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஒரு சுழற்சியில் சிக்கி இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறதே தவிர வேறு எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். https://news.lankasri.com/article/trilateral-talks-for-ukraine-war-in-saudi-1769139699
Checked
Sun, 02/08/2026 - 05:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed