புதிய பதிவுகள்2

கிழக்கு முனைய மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

2 weeks 2 days ago
கிழக்கு முனைய மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் ஆரம்பம் Jan 23, 2026 - 02:46 PM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் நிறுவனங்களைச் சேர்ந்த 3 கப்பல்கள் கப்பல் தளத்திற்கு வருகை தந்தன. 12 கென்ட்ரி கிரேன்கள் மற்றும் 40 தானியங்கி முற்ற கிரேன்களைக் கொண்ட இந்தக் கப்பல் தளத்தின் ஊடாக, ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் மேலும் வலுவடையும். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் முதன்முறையாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. 75 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் கிழக்கு முனையத்தின் மொத்த நீளம் 1320 மீற்றர்களாகும். அதில் 1090 மீற்றர் பகுதியும் ஏனைய நிர்மாணப் பணிகளில் 82% ஆனவையும் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் கிழக்கு முனையத்தின் ஊடாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளதுடன், முழுமையான நிர்மாணப் பணிகள் முடிவடைந்த பின்னர் 1.5 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும். கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில் துறைமுக அதிகார சபையின் கண்காணிப்பு மற்றும் முதலீட்டின் கீழ் இந்த கிழக்கு முனையம் நிர்மாணிக்கப்படுகிறது. கிழக்கு முனையம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நிலைமையின் அடிப்படையில் உருவான எதிர்ப்புகளுக்குப் பின்னரே இது இடம்பெறுகின்றமை ஒரு விசேட அம்சமாகும். https://adaderanatamil.lk/news/cmkqo1tdn04b7o29n7ve7zaf3

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

2 weeks 2 days ago
முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் கீழ் 70000க்கும் மேற்பட்டோர் கைது Jan 23, 2026 - 02:37 PM 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்று (23) பொலிஸாரால் 819 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல், தேடுதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தல், போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், அதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் ஆகிய பன்முக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட 304 சோதனைகளில், 367 கிராம் ஹெரோயின், 2 கிலோ 97 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 32 கிலோ 804 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொகுதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று (22) வரை ''முழு நாடுமே ஒன்றாக' நாளாந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 77,105 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பாக 68 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,582 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 77,824 என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 320 கிலோ 741 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், 1,280 கிலோ 956 கிராம் ஐஸ், 6 கிலோ 816 கிராம் கொக்கெய்ன், 2,341 கிலோ 723 கிராம் கஞ்சா, 5,568,583 கஞ்சா செடிகள், 155 கிலோ 487 கிராம் குஷ், 44 கிலோ 47 கிராம் ஹாஷிஷ் மற்றும் 132,561 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmkqnqkmv04b6o29n0z5owr3u

மின்சார சபையின் தன்னிச்சையான தீர்மானங்களால் சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை

2 weeks 2 days ago
மின்சார சபையின் தன்னிச்சையான தீர்மானங்களால் சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை Published By: Digital Desk 3 23 Jan, 2026 | 04:15 PM இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக, அதாவது 2025 பெப்ரவரி மாதம் முதல், வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் எந்தவித முன்னறிவிப்புமின்றி பெரிய அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களின் மின் விநியோகத்தை மின்சார சபை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனை ஒரு அவசர நிலை என்று மின்சார சபை கூறினாலும், நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறை மின் கொள்வனவு ஒப்பந்தங்களை (PPA) மீறும் செயல் எனவும், இதனால் உற்பத்தியாளர்களின் மாத வருமானம் 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி குறைக்கப்படும் நேரங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவு நேர உச்ச மின் தேவையின் போது பயன்படுத்துவதற்கான மின்கல சேமிப்பு முறைமைக்கு (BESS) அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சு ஆகியன அனுமதி வழங்கியுள்ள போதிலும், மின்சார சபை அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே தாமதம் செய்வதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான செயலாக்க வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் காட்டப்படும் இழுத்தடிப்பு காரணமாக, உள்நாட்டு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாரியளவிலான டாலர்களைச் செலவழித்து டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய மின்சாரக் கொள்கையானது சிறு மற்றும் நடுத்தர அளவிலான உள்ளூர் முதலீட்டாளர்களை இத்துறையிலிருந்து முற்றாக வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளதாகச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள உள்ளீட்டு கட்டண (FIT) முறையை ஒழித்து போட்டி ஏல முறையைக் கொண்டு வருவது மற்றும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் போது அதற்கான நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நிபந்தனைகள் முதலீட்டாளர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கை பிரகடனங்களுக்கு முரணாக மின்சார சபை எடுத்து வரும் இத்தகைய முடிவுகளால், இத்துறையில் முதலீடு செய்துள்ள பல தொழில்முனைவோர் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். இது எதிர்காலத்தில் நாட்டின் வங்கி முறைமையில் செயலிழந்த கடன் நெருக்கடியை (NPL) உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மின்கல சேமிப்பு முறைமைக்கான ஒப்பந்தத் திருத்தங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், ஒப்பந்தங்களை மீறி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான உற்பத்தித் தடையை நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 2030 புதுப்பிக்கத்தக்க மின்சக்தி இலக்கை அடைவதற்குத் தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என்பதால், அரசாங்கமும் மின்சக்தி அமைச்சும் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236817

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

2 weeks 2 days ago
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்துள்ள நன்கொடை விபரம் Jan 23, 2026 - 01:34 PM அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார். அதன்படி, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்காக இலங்கையின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளினால் இதுவரை வழங்கப்பட்டுள்ள நன்கொடைத் தொகை 8.5 பில்லியன் ரூபாவையும் கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியும் தற்போது அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அவ்வாறு கிடைத்த வெளிநாட்டு நிதியின் அளவு தற்போது 9.49 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடந்துள்ளதாகத் தெரிவித்தார். நிதி உதவி வழங்கிய நாடுகளுள் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான நிதி கிடைத்துள்ளதாகவும், அந்தத் தொகை ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தவிர, முறையே அவுஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பூட்டான், இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகள் அதிக நிதி உதவி வழங்கிய முதல் 10 நாடுகளாக உள்ளதாக ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். மேலும், இந்நாடுகளைத் தவிர பல வெளிநாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளதாகவும், அதன்படி அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மொத்தம் 47 வெளிநாடுகள் உதவி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பணமாகப் பெறப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமாக, இலங்கைச் சுங்கத்திற்குப் பெருமளவிலான பொருட்களும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை சுங்கத்திற்கு கிடைத்துள்ள பொருட்களின் மொத்த மதிப்பு 2.3 பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkqlgyt404b1o29ngyj4bx1o

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

2 weeks 2 days ago
நான் அறிந்த வரை இவர் ஒன்றும் தான் தமிழர் என்பதற்காக ஒதுக்கபட்டதாக குறை சொல்லவில்லை. மதத்தை முன்நிறுத்தி தான் ஒரு முஸ்லிம் ஹிந்தி பட உலகம் இந்து மத சார்பாக மாறிவிட்டது என்று குற்றம் சொல்லி இருந்தார்.அது உண்மை இல்லை முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் பலர் அங்கே உச்சத்தில் உள்ளனர் என்று பலர் விளக்கம் அளித்தனர். இந்தியாவில் ஆக கூடிய பணம் வாங்கும் இசையமைப்பாளர் இவர் தானாம்.

வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி

2 weeks 2 days ago
யாழ்கள அனுர காவடிகளை இந்த பக்கம் காணோம்?

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 2 days ago
அதற்கு காரணம் அமெரிக்க பொருளாதாரம், பிரித்தானியாவின் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான நிகழ்வுடன் அமெரிக்க பொருளாதாரம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிட்டு விவாதங்கள் நடைபெற்ற நினைவுள்ளது.

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 2 days ago
இது அந்த போரினால் ஏற்பட்ட மாற்றம் என்படில் இப்போதும் உடன்பாடில்லை. இது டிரம்ப் வருகையால் ஏற்பட்ட மாற்றம். டிரம்ப் மீள வன்டால் இது நடக்கும் என்படும் அப்போதே எதிர்வு கூறப்பட்டது.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

2 weeks 2 days ago
Keeravani has earned several national and international accolades, including an Academy Award, a Golden Globe Award, a Critics' Choice Movie Award, two National Film Awards, eleven Nandi Awards, eight Filmfare Awards, and a LAFCA Award. In 2023, the Government of India honoured him with the Padma Shri for his contributions towards Indian cinema. ஒஸ்கார் இல்லை என நினைக்கிறேன்.

ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

2 weeks 2 days ago
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ன அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த நகர்வை உலக நாடுகள் அச்சத்துடன் உற்று நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் நாட்டின் நிதி நிலைமை மோசமாகி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ‛முல்லா கண்டிப்பாக போ’ என்ற கோஷத்துடன் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரமஎதிரிகளாக உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது. நேற்று ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருந்தார் இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் நாட்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல், பல ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுமெனவும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பில் பரசீலிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2026/1461114

உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திப்பு

2 weeks 2 days ago
உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திப்பு உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருப்பினும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், நேற்று சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சிறப்பு நேரடி சந்திப்பு ஒன்றை நடத்தினர். முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா இடையே முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்க இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க அதிகாரிகள் இருவர் மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். முன்னதாக பொருளாதார மாநாட்டில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஒரு சுழற்சியில் சிக்கி இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறதே தவிர வேறு எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். https://news.lankasri.com/article/trilateral-talks-for-ukraine-war-in-saudi-1769139699

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

2 weeks 2 days ago
அஸ்வத்தாமனின் கோபம் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மத்ஸ்ய தேசத்தை கௌரவர்கள் தாக்கிய சமயத்தில் அவர்களை எதிர்கொள்ள மத்ஸய தேசத்துப் படைகளோ தளபதிகளோ அங்கே இல்லை. தேசத்தின் மற்றொரு எல்லையில் பகைவனை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். எனவே அனுபவமற்ற இளவசரன் உத்திரகுமாரனே போர்க்களத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஒரு அலியாக உருமாறி அரசவை பெண்டிருக்கு நாட்டியம் கற்பித்துக் கொண்டிருந்த அர்ஜுனன் அவனுக்கு ரதமோட்டினான். உத்திரகுமாரனுக்கு தைரியம் ஊட்ட தான் யார் என்பதை அவனுக்கு கூறினான் அர்ஜுனன். அதன்பின், தான் மறைத்து வைத்திருந்த தேவதத்தம் என்ற தன் சங்கை எடுத்து சங்கநாதம் முழங்கி, தன் வில்லான காண்டீபத்தை நாணை சுண்டினான். இரு சப்தங்களையும் கேட்ட துரோணர் உடனடியாக அவற்றை கண்டுகொண்டார். துரியனை நோக்கி “துரியோதனா! நாம் கைப்பற்றிய கால்நடைகளை பாதுகாப்பாக ஒட்டிக்கொண்டு நாடு திரும்புவது நல்லது. இல்லையனில் அர்ஜுனன் நம்மை தோற்கடித்து இவற்றை மீண்டும் கைப்பற்றி சென்றுவிடுவான்” என்றார். “ஆச்சார்யரே! படையினரை மனம் தளர வைக்குமாறு ஏன் இப்படி பேசுகிறீர்கள்? கால்நடைகளைக் கைப்பற்றுவது நம் நோக்கமில்லை என்பது உங்களுக்கு தெரியும். முடிவதற்குள் நாம் அம்பலப்படுத்தினாலும் அவர்களை மீண்டும் பன்னிரெண்டு வருடம் வனவாசம் அனுப்பிவிடுவேன் . எனவே எதிர்காலத்தை உத்தேசித்து இப்பொழுது அர்ஜுனனை அவர்களை தாக்குவோம்” என துரியோதனன் வேண்டினான். அவர்களை இடைமறித்த கர்ணன் “வேண்டுமானாலும் ஆச்சார்யரின் வார்த்தைகளை கேட்டு மனம் தளரலாம். ஆனால், நான் பயப்படவில்லை. எதிரே இருப்பது இந்திரனாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன். இந்த தருணத்திற்காக கடந்த பதிமூன்று வருடங்களாகக் காத்திருக்கிறேன். என் வில்லில் இருந்து அலையென கிளம்பும் அம்புகள் அவர்களை துளைக்கப் போவதை பார்க்கக் காத்திருங்கள்” என கர்வத்துடன் கூறினான். “போர் இன்றி நல்லது நடக்க வாய்ப்பிருக்கும் பொழுது, சண்டையிட நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்? தனி ஒருவனாக அர்ஜுனன் எதிரிகளை பலரை தோற்கடிக்க இயலும் என்பதும் உன்னால் அது இயலாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. கந்தர்வர்கள் துரியோதனனை பிடித்து சென்றபொழுது யார் விட்டுவிட்டு ஓடினார்கள் என்பதும் யார் அவனை காப்பாற்றினார்கள் என்பதும் உள்ளதா? நாம் அனைவரும் சேர்ந்து அவனை எதிர்ப்பதே வெற்றியை தரும்” என க்ருபாச்சாரியார் கூறினார். இது கர்ணனை கோபத்திற்குள்ளாகியது. “துரியோதனா! அர்ஜுனனை கண்டு க்ருபாச்சார்யார் பயந்து விட்டார் போல. சடங்குகளை செய்யும் பொழுதும், தானங்கள் கொடுக்கும் பொழுதும் மட்டுமே ப்ராமணர்களிடம் ஆலோசனை கேக்க வேண்டும். போரின் பொழுது ஆலோசனை கேக்கக் கூடாது !” என துரியனிடம் கர்ணன் கூறினான். இதை கொண்டிருந்த அஸ்வத்தாமன் மிகுந்த கோபத்திற்கு உள்ளானான். “துரியோதனா! பசுக்களை காக்க நீ எதுவும் செய்யவில்லை. கர்ணா! வெட்டி பேச்சு பேசாதே! ப்ரமாணர்கள் நல்லறிவும், அடக்கமும் கொண்டவர்கள். எனவே அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. நீ இதுவரை என்ன செய்துவிட்டாய் என இப்படி பேசுகிறாய்?” “துரியோதனன் ராஜ்யத்தை என்ன போரிலா வென்றான்? தர்மரை பகடையில் சூழ்ச்சி செய்து வென்றான். அதுவும் அவன் ஆடவில்லை . அவனுக்கு பதில் சகுனி ஆடினார். அது சத்ரியனுக்கு அழகா? இப்பொழுது “அவன் ராஜ்ஜியம்” என பேசுகிறான்.” “எதிரிகளின் வலிமையை அங்கீகரிக்கக் கற்றுக் கொள். பாண்டவர்கள் உண்மையில் வலிமையானவர்கள்தான். மற்ற எவரின் துணையும் இன்றி, இந்திரனின் சேனையைக் கூட எதிர்கொள்ளக் கூடியவர்கள். அர்ஜுனனைப் பற்றி சொல்ல புதிதாய் ஒன்றுமில்லை. உனக்கே தெரியும் அவனை உன்னால் தோற்கடிக்க இயலாதென. வெறும் வாய்ச்சவடால் விடுவதை நிறுத்து!” “என் தந்தையும், மாமாவும் சொன்னது பயத்தினால் அல்ல. அவர்களின் வலிமையை அறிந்ததால். ஒருவரை புகழ வேண்டிய சமயத்தில் புகழ்வது தவறல்ல. கர்ணா! அவன் மேல் உனக்கு இருக்கும் பொறாமை அவனை சிறியவனாக்காது” என கோபத்துடன் கூறிய அஸ்வத்தாமன் வில்லைக் கீழே எறிந்து விட்டு ரதத்தில் அமர்ந்து கொண்டான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மர் தலையிட்டு “துரியோதனா! துரோணரும், க்ருபாச்சார்யரும் கூறியதெல்லாம் உண்மைதான்.அர்ஜுனனை தோற்கடிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். அஸ்வத்தாமனின் கோபமும் சரியான ஒன்றாகும். ஆனால், அஸ்வத்தாமா! படையினரை உற்சாகமூட்டவே கர்ணனும், துரியனும் அவ்வாறு பேசினார்கள். அதனால் கோபம் கொள்ளாதே! நாம் அனைவரும் இணைந்து போரிடுவோம்” என அனைவரையும் சமாதானப்படுத்தினார். இதனால் ஓரளவு சமாதானம் அடைந்த அஸ்வத்தாமன் “துரியோதனுனும், கர்ணனும் தன் தந்தையிடமும், மாமாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறித்தினான். சூழ்நிலையின் அவசியத்தை உணர்ந்த துரியோதனனும், கர்ணனும் ஆச்சார்யர்கள் இருவரின் மன்னிப்பை வேண்டினார்கள். “பீஷ்மர் பேசியபொழுதே என் கோபம் போய்விட்டது. நாம் இப்பொழுது செய்யவேண்டியது அனைவரும் இணைந்து அர்ஜுனன் துரியோதனனை தாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால், தற்பொழுது அவன் மேல் அர்ஜுனனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்கக் கூடும். அதேபோல் , அவர்கள் தலைமறைவாய் இருக்கவேண்டிய காலம் முடிந்துவிட்டது. எனவே , அவர்களை வெளிப்படுத்தினாலும் நாம் ஒன்றும் செய்ய இயலாது” என துரோணர் கூறினார். இதைக் கேட்டு குழப்பம் அடைந்த துரியன் பீஷ்மரை பார்த்தான். அவரும் துரோணர் கூறியதை ஆமோதித்தார். அத்துடன் துரியனின் படையெடுப்பின் நோக்கம் ஒன்றுமில்லாமல் ஆனது. கண் திறந்த தருணம் . .. பிறப்பிலேயே குருடனாக பிறந்த திருதராஷ்டிரனுக்கு மனைவியாக காந்தாரா நாட்டு இளவரசி காந்தரியை கேட்டு தூது அனுப்பினார் பீஷ்மர். காந்தார அரசனுக்கு தன் மகள் ஒரு குருடனுக்கு இல்லை. ஆனால், காந்தாரியோ குரு வம்ச இளவரசனான திருதராஷ்டிரனனை மனப்பூர்வமாக சம்மதித்தாள். திருமணம் முடிந்தவுடன் தன் கணவனின் கஷ்டத்தில் தானும் பங்கு கொள்ளவேண்டி தன் கண்களையும் துணியால் கட்டிக்கொண்டாள். அதன் பின், ஒரே ஒரு முறை மட்டுமே தன் கண் கட்டை அவிழ்த்தாள் . அவளுடைய இந்த தவத்தினால் அவளுடைய கண்களுக்கு விசேஷ சக்தி கூடியது. குருஷேத்திர போரின் பொழுது, துரியன் பீமனால் கொல்லப்பட்டுவிவிடுவானோ என்ற பயத்தில் அவனைக் காப்பாற்ற தன் சக்தியை உபயோகிக்க முடிவு செய்தாள். அவனை சந்திக்க முடிவு செய்து, கங்கையில் குளித்து ஈர உடலுடன் பிறந்தமேனியாக தன்னை சந்திக்க அனுப்பினாள். அந்த கோலத்தில் துரியனை காந்தாரி சந்தித்தால், துரியன் வீழ்த்தப்பட முடியாத அளவிற்கு பலம் பெற்றுவிடுவான் என ஊகித்த கிருஷ்ணன், கங்கையில் குளித்து அன்னையை சந்திக்க சென்றுக் கொண்டிருந்த துரியனை வழிமறித்தான். “துரியோதனா! உன் ஆடை எங்கே? ஆடைகளுடன் உன் வெட்கத்தையும் கழற்றி எறிந்து விட்டாயா? பிறந்தமேனியாக எங்கே சென்றுக் கொண்டிருக்கிறாய்?” “கிருஷ்ணா! என் அன்னையை காண அவர் இட்ட கட்டளைப்படி நிர்வாணமாக செல்கிறேன். அன்னை முன் நான் நாண வேண்டும்?” “துரியோதனா! நீ இப்பொழுது வளர்ந்த மனிதன். அன்னையே என்றாலும், அவள் முன் நிர்வாணமாக இருக்க முடியும்?” இதைக் கேட்ட துரியோதனனுக்கு வெட்கம் தோன்றியது. அருகே இருந்த வாழை மரத்தில் இருந்து வாழை இலையை வெட்டி, தன் இடுப்பை சுற்றிக் கட்டிக்கொண்டான். அவன் தொடைகளையும் அது மறைத்தது. தன் முன் துரியோதனன் வந்து நின்றவுடன் தன் கண் கட்டை அவிழ்த்து அவனைப் பார்த்த காந்தாரி, இடையில் அவன் வாழை இலை அணிந்து வந்ததால் அதிர்ச்சி அடைந்தாள். மேலும் , பீமன் துரியனின் தொடை பிளந்து கொல்வேன் என சபதம் எடுத்ததையும் அவள் அறிவாள். துரியனின் இந்த செய்கை, அவளது சக்தியை முறியடித்தது. இனி, தன் சக்தியால் அவனை காப்பாற்ற என்பதை புரிந்து கொண்டாள். https://solvanam.com/2025/09/15/அஸ்வத்தாமனின்-கோபம்/
Checked
Mon, 02/09/2026 - 02:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed